<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,68,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 14 2026 03:40:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260714T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14072026-MDU-03" position.sequence="03" ex-ref="14072026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="44">விஜய் – அண்ணாமலை: பா.ஜ.க.வின் இரட்டைக் குழந்தைகள்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup765044_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நேற்று முன்தினம் அண்­ணா­மலை தனது 
‘ வீ த லீடர்ஸ்’ அமைப்­பின் முதல் கூட்­டத்தை பொள்­ளாச்­சி­யில் நடத்­தி­னார். தமிழ்­நாட்­டின் பெரும்­பாலான சேனல்­கள் அதை நேரலை செய்­தன. பல தொலை­காட்­சி­க­ளில் அவ­ரது பேச்சு குறித்த விவா­தங்­கள் நடை­பெற்­றன. மறு­நாள் பாரம்­ப­ரி­யம் மிக்க ஒரு நாளி­த­ழில் அது முகப்­புச் செய்­தி­யா­னது. இதோதமி­ழ­கத்தை மீட்க அடுத்த தேவ தூதர் வந்­து­விட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">யார் இந்த அண்­ணா­மலை? ஒரு வி.ஆர்.எஸ் கொடுத்த ஐ.பி.எஸ். அதி­காரி. தீவிர ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவக். ரஜினி காந்த் அர­சி­ய­லுக்கு வரு­வ­தாக செய்­தி­கள் அடி­பட்­ட­போது அதற்கு ஒரு பக்­க­ப­ல­மாக பா.ஜ.க.வால் அனுப்­பப்­பட்­ட­வர்  அண்­ணா­மலை. பிறகு ரஜினி காந்த் கடைசி நேரத்­தில் சுதா­ரித்­துக் கொண்டு அர­சி­ய­லுக்கு வரும் முடிவை கைவிட்ட பின் பா.ஜ.க. அதன் தமி­ழ­கத் தலை­வ­ராக 
அண்­ணா­ம­லையை முன்­னி­றுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தி.மு.க.வுக்கு எதி­ராக பச்­சைப் பொய்­களை விஜய்க்கு முன்­ன­தாக பரப்­பி­ய­வர் அண்­ணா­மலை. முக்­கி­ய­மாக செந்­தில் பாலா­ஜி­யால் ‘வாட்ச்’ விவ­கா­ரம் உட்­பட பல­வற்­றில் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­ட­வர். அவ­ரால் தேர்­த­லில் தோற்­க­டிக்­கப்­பட்­ட­வர். அதற்­காக செந்­தில் பாலா­ஜியை பழி தீர்க்க அத்­தனை ஆயு­தங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­தி­ய­வர். ஆளு­ந­ரி­டம் தி.மு.க. விற்கு எதி­ராக ஊழல் புகார் என்ற பெய­ரில் ட்ரங்க் பெட்­டி­க­ளில் வெற்­றுக் காகி­தங்­க­ளைக் கொடுத்­தது முதல் தன்­னைத் தானே சவுக்­கால் அடித்­துக்­கொண்­ட­து­வரை பல கேலிக்­கூத்­து­களை அரங்­கேற்­றி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அவரை ஒரு தலை­வ­னாக்க ஊட­கங்­கள் படா­த­பா­டு­பட்­டன. அவர் போகு­மி­டங்­க­ளுக்­கெல்­லாம் சென்று அவ­ரது பொய்­க­ளைப் பரப்­பின. எதிர்த்­துக் கேள்­வி­கேட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களை அண்­ணா­மலை அவ­மா­னப்­ப­டுத்­தி­னார். ஆனால் ஊட­கங்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்ட அன்­ணா­ம­லையை தலை­வ­னாக்­கும்;அசைண்ட்­மெண்­டி’ற்­காகப்பல ஊட­கங்­கள் ராப்­ப­கலாய் உழைத்­தன.அண்­ணா­மலை அ.தி.மு.க.எதிர்ப்­பிற்­கான ஆயு­த­மாய் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த சூழ­லில் பா.ஜ.கவிஜய்யை முன்­வைத்து தன் பாதையை மாற்­றி­யது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில் கடும் பா.ஜ.க. எதிர்ப்பு நில­வு­வ­தால் கழ­கங்­கள் இல்­லாத தமிழ்­நாடு என்ற தன் கனவை  நிறை­வேற்­ற­வேண்­டும் என்­றால் அது அண்­ணா­மலையை வைத்து நேர­டி­யா­கச் செய்ய முடி­யாது என்ற சூழ­லில் பா.ஜ.க. விஜய்­யின் அர­சி­ய­லுக்கு உத்­வே­கம் அளிக்­கத் தொடங்­கி­யது. செங்­கோட்­டை­யனை பா.ஜ.க.தான் த.வெ.கவிற்­குள் அனுப்­பி­யது. ஐ.ஆர்.எஸ். அதி­காரி அருண்­ராஜ் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்டு த.வெ.கவிற்கு வந்­த­தும் இப்­ப­டித்­தான். தி.மு.கவிற்கு எதி­ராக பா.ஜ.க.வின் சமூக வலைத்­தள கட்­ட­மைப்பு எவ்­வாறு த.வெ.க.விற்கு பயன்­பட்­டது என்று ஊடகஆய்­வா­ளர்­கள் சுட்­டிக் காட்­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதே சம­யம் பா.ஜ.க. சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அ.தி.மு.க. கூட்­ட­ணி­யில் எந்த ஆர்­வ­மும் காட்­ட­வில்லை. ஒப்­புக்கு கூட்­ட­ணி­யில் இருந்­தது. வழக்­க­மாக தேர்­த­லில் ஆவே­ச­மா­கச் செயல்­ப­டும் மோடி– அமித் ஷா இந்­தத் தேர்­த­லைக் கண்டு கொள்­ளவே இல்லை. எடப்­பாடி பழ­னிச்­சா­மியை தனித்து போராட விட்­ட­னர் என்­பதே உண்மை. அ.தி.மு.க. அழிந்து தாங்­கள் வர­வேண்­டும் என்­றால் அதற்கு முத­லில் ஒரு இடை­நிலை சக்­தி­யாக விஜய் வர­வேண்­டும் என த.வெ.க.விற்கு வழி­விட்டு நின்­றது. பா.ஜ.க. அண்­ணா­ம­லையை கொஞ்ச காலத்­திற்கு கண்­ணில் படா­மல் ஒளித்­து­வைத்­து­விட்டு,  அண்­ணா­மலை அள­வுக்கு பிர­ப­லம் இல்­லாத நயி­னார் நாகேந்­தி­ரன் பா.ஜ.க. தலை­வ­ராக்­கப்­ப­டு­கி­றார். விஜய்க்கு பா.ஜ.க , அ.தி.மு.க. கூட்­ட­ணி­யி­லி­ருந்து பெரிய தொந்­த­ரவு எது­வும் இருக்­கக்­கூ­டாது என்­ப­து­தான் அதற்­குக் கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பா.ஜ.க. விரும்­பி­யி­ருந்­தால் அ.தி.மு.க.– பா.ஜ.க.– த.வெ.க. கூட்­ட­ணியைஉரு­வாக்­கி­யி­ருக்க முடி­யும். அப்­போது அக்­கூட்­டணி வெற்றி பெற்­றால் எடப்­பா­டி­தான் முத­ல­மைச்­சர் ஆவார். அத­னால் பா.ஜ.க. விற்கு பெரிய பயன் இல்லை. மாறாக முத­லில் அர­சி­யல் தெரி­யாத, வலி­மை­யற்ற ஒரு­வர் தமிழ்­நாட்­டில் ஆட்­சிக்கு வர­வேண்­டும். பின்­னர் அவரை வீழ்த்த வேண்­டும் என்­ப­து­தான் பா.ஜ.க.வின் தொலை­நோக்­குத் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விஜய்­யின் குடுமி இன்று கரூர் விவ­கார வழக்­கில் வச­மாக பா.ஜ.க.வி­டம் சிக்­கி­யி­ருக்­கி­றது.ஒன்­றிய அரசை எதிர்க்க மாட்­டோம் என விஜய் திரும்­பத் திரும்ப ‘சரண்­டர்’ வாக்­கு­மூ­லம் கொடுக்­கி­றார். ஊரக வேலை­வாய்ப்­புத் திட்­டம், மும்­மொ­ழிக் கொள்கை, மேகதாது விவ­கா­ரம், காவி­ரி­யில் நீர் திறப்­பது, ஆளு­ந­ரின் போட்டி அர­சாங்­கம்  என எல்­லாப் பிரச்­சி­னை ­க­ளி­லும் எப்­படி பவ்­ய­மாக கண்­மூடி வாய் பொத்தி நிற்­கி­றார்­கள் என்­ப­தைப் பார்க்­கி­றோம். அவர்­கள் விரும்­பி­ய­படி பெரும்­பான்மை இல்­லாத, பல­வீ­ன­மான தங்­க­ளுக்கு அஞ்சி நடுங்­கு­கிற, எந்­தக் கொள்­கை­யு­மில்­லாத தனது ஏஜெண்­டு­களை உள்­ள­டக்­கிய ஒரு பொம்மை அரசை உரு­வாக்­கி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இதே திட்­டம்­தான் காங்­கி­ர­ஸிற்கு இருந்­தது. 
அ.தி.மு.க. அழிந்­தால்­தான் தாங்­கள் வளர்­வோம் என பா.ஜ.க நினைத்­த­து­போ­லவே தி.மு.க. பல­வீ­னப்­பட்­டால்­தான் தாங்­கள் வளர முடி­யும் என ராகுல் காந்தி நினைத்­தார். கூட்­ட­ணியை சிதைக்க எல்லா சதி­க­ளை­யும் மேற்­கொண்­டார். பா.ஜ.க. தலை­வர்­கள்­போ­லவே தமிழ்­நாட்­டில் பிரச்­சா­ரத்­திற்கு வர ராகுல்­காந்தி மறுத்­தார். பா.ஜ.க.வின் திட்­டத்­திற்கு ஒரு ‘கர­சே­வ­க’­ராக ராகுல் காந்தி செயல்­ப­டு­வ­தைக் கண்டு அமித்ஷா எப்­படி சிரித்­தி­ருப்­பார் என்­பதை கற்­பனை செய்­யவே வேடிக்­கை­யாக இருக்­கி­றது. ராகுல் காந்தி– அமித் ஷா இரு­வ­ரும்  நினைத்­தது நடந்­தது. தங்­கள் கூட்­ட­ணிக்கு துரோ­கம்  இழைத்த காங்­கி­ரஸ், பா.ஜ.க. இரு­வ­ருமே விஜய்­யின் வெற்­றி­யால் ஆதா­ய­ம­டைந்­த­னர். காங்­கி­ர­ஸிக்கு மந்­திரி சபை­யில் இடம் கிடைத்­தது.  பா.ஜக.விற்கோ தங்­க­ளுக்­கான ஒரு நிழல் அர­சாங்­கமே கிடைத்­தது. அமித்ஷா – ராகுல் காந்தி இரு­வ­ருமே திரா­விட இயக்­கங்­களை அழித்­தொ­ழிக்­கும் பணி­யில் இணைந்த கரங்­க­ளாக செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த இடத்­தில்­தான் அண்­ணா­ம­லை­யின் ‘புத்­து­யிர்ப்பு’ நடை­பெ­று­கி­றது. அமித்­ஷா­வி­டம் ஆசி­வாங்­கிக்­கொண்டு தனது புதிய இயக்­கத்தை தொடங்­கு­கிறார். அந்த இயக்­கத்­தின் பெயர்­கூட  தி.மு.க.வி­ட­ மி­ருந்து கடன் வாங்­கி­ய­து­தான்.  ‘ நான் முதல்­வன்’ என்ற பெய­ரின் ஒரு­மை­யைத்­தான் ‘we the leaders’ என்ற பன்­மை­யாய் ஆங்­கி­லத்­தில் 
மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">த.வெ.க. அரசு விரை­வில் செல்­வாக்கு இழக்­கும் என்­ப­தற்கு இந்த இரண்டு மாத ஆட்­சி­யின் அவ­லங்­களே சாட்சி. அப்­போது த.வெ.க. மாயை­யி­லி­ருந்து வில­கும் இளை­ஞர்­களை மீண்­டும் திரா­விட இயக்­கங்­கள் பக்­கம் செல்­ல­வி­டா­மல் தடுத்து திசை­தி­ருப்­ப­லாம் என்ற திட்­டத்­தோடு பா.ஜ.க.வால் தொடங்­கப்­பட்ட மாற்று  இயக்­கம்­தான் அண்­ணா­ம­லை­யின் இயக்­கம். அதா­வது தமிழ்­நாட்­டில் ஆளும் கட்­சி­யும் எங்­கள் ஏஜெண்ட்­தான். எதிர்­கட்­சி­யும் எங்­கள் ஏஜெண்ட்­தான் என்ற நிலையை பா.ஜ.க. உரு­வாக்க முயற்­சிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதற்­கா­கத்­தான்ஊடக எலி­கள் முதல் நாளி­லேயேஅண்­ணா­மலை பின்­னால் அம்­ம­ண­மாய் ஒடு­கின்­றன. விஜய்க்­கும் அண்­ணா­ம­லைக்­கும் முத­லாளி ஒரு­வர்­தான். முத­லா­ளி­யின் அசைண்­மென்ட்­தான் வேறு வேறு. அண்­ணா­ம­லைக்கு ஊழி­யம் செய்­வது என்­பது ஊட­கங்­க­ளுக்கு ஏற்­க­னவே கொடுக்­கப்­பட்ட காண்ட்­ராக்ட்­தான். இப்­போது அது புதுப்­பிக்­கப் பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சதி­யி­னால் பெற்ற வெற்றி என்­பது ஒரு விதி­வி­லக்­கான விபத்­தாக இருக்க முடி­யுமே தவிர விதி­யாக இருக்க முடி­யாது. இந்­தி­யா­வில் பா.ஜ.க.விற்கு சவால்­வி­டும் உறு­தி­யான அர­சி­யல் 
கட்­ட­மைப்­பைக் கொண்ட  கட்சி தி.மு.க. அதே­போல 
அ.தி.மு.க.வின் கட்­ட­மைப்­பும்.  இந்த இரண்டு கட்­சி­க­ளை­யும் ஊட­கங்­க­ளின் துணை­யால் விஜய்–அண்­ணா­ம­லை­யின் கோமாளி அர­சி­யலை வைத்துமுடிவு கட்­ட­லாம் என நினைப்­பது சிறு­பிள்­ளைக் கனவு. அத­னால்­தான் பா.ஜ.க.வின் திட்­டங்­க­ளுக்கு ஊழி­யம் செய்­து­கொண்­டி­ருக்­கும் சில கட்­சி­க­ளும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளும் தி.மு.க. – அ.தி.மு.க. கூட்­டணி என்ற வதந்­தி­யைக் கண்டே பத­று­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">விஜய்– அண்­ணா­மலை இரு­வ­ருமே அர­சி­ய­லில் எந்த பண்­பும் இல்­லாத கேளிக்கை அர­சி­யல்­வா­தி­கள். பொய் சொல்ல கொஞ்­சம்­கூட கூச்­சப்­ப­டா­த­ 
வர்­கள். சீர­ழிவு அர­சி­ய­லில் யார் நாய­கர்­கள் என்­ப­தில் இவர்­கள் இரு­வ­ருக்­கும் கடும் போட்டி ஏற்­ப­ட­லாமே தவிர  மக்­கள் அர­சி­ய­லில் அல்ல.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கார்ல் மார்க்ஸ்ஓரி­டத்­தில் எழு­து­கி­றார். ‘ வர­லாற்­றில் மாபெ­ரும் சம்­ப­வங்­கள் இரண்­டு­முறை நிகழ்­கின்­றன. முதல் முறை அது அவ­ல­மா­ன­தா­க­வும் இரண்­டாம் முறை கேலிக்­கூத்­தா­க­வும் முடி­கி­றது’ என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முதல் அவ­ல­மான சம்­ப­வத்தை விஜய் மூலம் பா.ஜ.க. ஏற்­க­னவேநிறை­வேற்றி விட்­டது. இரண்­டாம் கேலிக்­கூத்­தான சம்­ப­வம் அண்­ணா­ம­லை­யின் மூலம் விரை­வாக நிறை­வேற இருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>