<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="503,66,954,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 14 2026 00:24:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260714T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14072026-MDU-06" position.sequence="06" ex-ref="14072026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="5">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup765286_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup764435_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup765285_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அளவு மேக­தாது அணை­யின் சேமிப்­புத் திறனை விட முப்­பது மடங்கு அதி­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">கர்­நா­ட­கா­வின் தற்­போ­தைய 6.7 கோடி மக்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டா­மல் கட­லுக்­குச் செல்­லும் இந்த 2,000 டிஎம்சி நீர் – ஒரு­வ­ருக்கு தின­மும் 135 லிட்­டர் குடி­நீர் தேவை­யா­கக் கணக்­கிட்­டால் -– சுமார் 17 ஆண்­டு­கள் குடி­நீர்த் தேவை­யைப் பூர்த்தி செய்­யக்­கூ­டி­யது. இதே நோக்­கத்­திற்­காக மேக­தாது அணை­யைக் கட்­டு­வ­தற்­குப் பதி­லாக, இந்­நீ­ரில் ஒரு பகு­தி­யை­யா­வது மாநி­லக் குடி­நீர்ப் பயன்­பாட்­டிற்­காக, பெங்­க­ளூரு 
நக­ரத்­தை­யும் சேர்த்து, பயன்­ப­டுத்த முடி­யாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ஒரு டிஎம்சி நீரின் நெல் உற்­பத்தி மதிப்பு 50 கோடி ரூபாய் என எடுத்­துக்­கொண்­டால், 2,000 டிஎம்சி நீரின் பொரு­ளா­தார மதிப்பு 100,000 கோடி ரூபாய். இந்­தியா சுதந்­தி­ரம் பெற்­ற­தி­லி­ருந்து 78 ஆண்­டு­கள் கடந்­தும், அதிக அள­வி­லான நீர் கர்­நா­ட­கா­வில் கட­லுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றது. இந்­தியா முழு­வ­தும் ஆண்­டு­தோ­றும் 80–85 விழுக்­காடு மேற்­ப­ரப்பு நீர் கட­லுக்­குச் செல்­லும் நிலை தொடர்­கி­றது. இதே நேரத்­தில், பயிர்ப் பரு­வத்­தில் நீர் கிடைக்­கா­த­தால், இந்­திய நாட்­டில் ஒவ்­வொரு 30 முதல் 32 நிமி­டங்­க­ளுக்கு ஒரு விவ­சாயி தற்­கொலை செய்­கி­றார் என அறிக்­கை­கள் தெரி­விக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேக­தாது (Mekedatu) அணை­யைக் கட்­டு­வதை பிற மூன்று மாநி­லங்­க­ளும் கடு­மை­யாக எதிர்க்­கின்­றன!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">காவிரி ஆற்­றின் நீரை நான்கு மாநி­லங்­க­ளான தமிழ்­நாடு 404.25 டிஎம்சி (TMC), கர்­நா­ட­கம்: 284.75 டிஎம்சி, கேரளா: 30 டிஎம்சி, புதுச் சேரி: 7 டிஎம்சி என பிரித்­துக் கொள்­கின்­றன. மேற்­படி ஒதுக்­கீட்­டின்­படி, கர்­நா­டக மாநி­லம் ஆண்­டு­தோ­றும் பிலி­குண்­டுலு (Biligundlu) நீர் அள­வீட்டு மையத்­தின் வழி­யா­கத் தமிழ்­நாட்­டிற்கு 177.25 டிஎம்சி நீரைத் திறந்­து­விட வேண்­டும். இந்­நீர்ப் பகிர்வு, மற்­றும் கண்­கா­ணிப்­புப் பணி­க­ளைக் காவிரி மேலாண்மை ஆணை­யம் (CWMA) மேற்­கொண்டு வரு­கி­றது. மேக­தாது அணை­யைக் கட்­டு­வ­தற்­குத்  தமிழ்­நாடு, புதுச்­சேரி, கேர­ளம் மூன்று மாநி­லங்­க­ளும் கடு­மை­யாக எதிர்க்­கின்­றன. இச்­செய்தி, இந்­திய அர­சிற்­கும், உச்­ச­நீதி மன்­றத்­திற்­கும், காவிரி மேலாண்மை வாரி­யத்­திற்­கும் நன்­றா­கத் தெரி­யும். இதை அறிந்த இம்­மூன்று அமைப்­பு­க­ளின் இன்­றைய நிலைப்­பாடு, உச்­ச­நீதி மன்­றத் தீர்ப்­பில் கண்­டிப்­பா­கப் பிர­தி­ப­லிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">காவி­ரிப்­ப­டுகை விவ­சா­யத்­திற்­காக, மழை­நீர் மற்­றும் நிலத்­தடி நீரு­டன் மேட்­டூர் அணை­யின் நீரும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. காவி­ரித் தீர்ப்­பா­யத்­தின், முதல் விரு­தில் கர்­நா­ட­கா­வி­லி­ருந்து 205 டிஎம்சி நீர் ஒதுக்­கப்­பட்­டது; இரண்­டா­வது விரு­தில் அது 192 டிஎம்­சி­யா­கக் குறைக்­கப்­பட்­டது. பின்­னர் 2018 பிப்­ர­வரி 16 ஆம் தேதி­யிட்ட உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­பின் படி, கர்­நா­டகா 177.25 டிஎம்சி நீரையே வழங்க வேண்­டும் எனத் தெரி­வித்­தது. இத­னால் தமி­ழ­கம் இழந்த காவிரி நீர் முறையே, 13 டிஎம்சி 14.75 டிஎம்சி,  கூடு­தல் 27.75  டிஎம்சி. இவ்­வாறு தமிழ்­நாடு தொடர்ந்து ஒவ்­வொரு ஆண்­டும் 27.75 டிஎம்சி நீரை இழக்­கி­றது. இத­னால் தமி­ழ­கம் ஆண்­டு­தோ­றும், நெல் சாகு­ப­டி­யில் ரூ. 1387.5 கோடி அள­வில் வரு­மா­னத்தை இழக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">பெங்­க­ளூரு மாந­க­ரின் முழு­மை­யான குடி­நீர் மற்­றும் இல்­லத் தேவை­க­ளுக்­காக, காவிரி நதித் தீர்ப்­பா­யம் இதற்கு முன்பு தமிழ்­நாட்­டிற்கு வழங்­கிய 192 டிஎம்சி நீரி­லி­ருந்து 14.75 டிஎம்சி நீரைக் குறைத்து, 177.25 டிஎம்சி நீரையே இந்­திய உயர் நீதி­மன்­றம் 16.2.2018 அன்று வழங்­கிய உத்­த­ர­வின் படி வழங்­கு­கி­றது. எனவே பெங்­க­ளூரு மாந­க­ரின் குடி­நீ­ருக்­காக மேக­தாது அணை கட்­டப்­ப­டு­கி­றது என கர்­நா­டகா அரசு தெரி­விப்­பதை ஏற்க இய­லாது. தமி­ழ­கத்­திற்கு இது ஒரு தொடர் நீரி­ழப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">கடந்த 2023-–2024ஆம் நீர் ஆண்டு, மிகக் கடு­மை­யான வறட்சி ஆண்டை (Distress Year) தமி­ழ­கம் சந்­தித்­த­போது, கர்­நா­டகா தமி­ழ­கத்­திற்­குத் தர வேண்­டிய பங்­கில், சுமார் 50 முதல் 60 டிஎம்சி வரை தண்­ணீர்ப் பற்­றாக்­கு­றைப் பெற, தமி­ழக அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் முறை­யிட்­டது. நீர் கிடைக்­கா­த­தால் மேட்­டூர் அணை வறண்டு, டெல்­டா­வில் லட்­சக்­க­ணக்­கான ஏக்­கர் குறுவை மற்­றும் சம்பா பயிர்­கள் கரு­கின. இந்த ஆண்டு மட்­டும் 50 முதல் 60 டிஎம்சி நீரை தமி­ழ­கம் இழந்­தது. இவ்­வாறு தமி­ழ­கம் பல ஆண்­டு­க­ளில் தனக்­குக் கிடைக்க வேண்­டிய  நீரை இழக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ஒன்­றிய அர­சும் உச்­ச­நீ­தி­மன்­ற­மும் இந்த உண்­மை­களை உணர்ந்து, நேர்­மை­யாக நடக்­கும் தமி­ழக அர­சுக்கு உரிய நீரை, கர்­நா­டக மாநி­லம் இனி­யா­வது வழங்­கத் தக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். நட­வ­டிக்கை எடுப்­பி­னும், கர்­நா­டக மாநி­லம் நீரை வழங்­குமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒரு முறை­யா­வது தமி­ழ­கத்­துக்கு வழங்க வேண்­டிய நீரை கர்­நா­டக மாநி­லம் விரும்பி வழங்­கி­யதா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">காவிரி நதி­நீர்ப் பங்­கீட்­டில், கர்­நா­டக அரசு தமி­ழ­கத்­திற்கு வழங்க வேண்­டிய நீரைத் தன்­னார்­வத்­து­டனோ, முழு மன­து­டனோ இது­வரை ஒரு தடவை கூட வழங்­கி­ய­தில்லை. பெரும்­பா­லான காலங்­க­ளில், அணை­க­ளில் உபரி நீர் (Flood) வெளி­யே­றும் போது, அங்­குள்ள கே.ஆர்.எஸ், கபினி போன்ற அணை­க­ளைப் பாது­காக்­கும் நோக்­கில்,  மட்­டுமே தமி­ழ­கத்­திற்­குத் தண்­ணீர் சென்­ற­டைந்­துள்­ளது. மற்ற நேரங்­க­ளில், தமி­ழக அரசு உச்ச நீதி­மன்­றத்தை அணு­கிச் சட்­டப் போராட்­டம் நடத்­தி­யும், காவிரி மேலாண்மை ஆணை­யத்­தின் உத்­த­ர­வு­க­ளுக்­குப் பிறகு, வேண்டா வெறுப்­பாக மட்­டுமே கர்­நா­ட­கம் தண்­ணீர் திறந்­து­விட்­டுள்­ளது. கர்­நா­ட­கத்­தின் நிலை­யான நிலைப்­பாடு என்­ன­வெ­னில்: தமி­ழ­கத்­தில் மழை குறை­வாக உள்ள, வறட்சி காலங்­க­ளில், தமி­ழ­கத்­திற்­குத் தண்­ணீர் திறக்­கக் கர்­நா­ட­கத்­தில் உள்ள அர­சி­யல் கட்­சி­க­ளும் விவ­சா­யி­க­ளும் கடும் எதிர்ப்­புத் தெரி­விப்­பார்­கள். சட்­டப் போராட்­டம்: உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­வி­டும் வரை அல்­லது மேலாண்மை ஆணை­யம் கட்­டா­யப்­ப­டுத்­தும் வரை, கர்­நா­ட­கம் தனது நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருந்து தமி­ழ­கத்­திற்­கு­ரிய நீரைத் தடுத்து வரு­கி­றது. இக் கார­ணங்­க­ளால், ஒவ்­வொரு ஆண்­டும் ஜூன் அல்­லது ஜூலை மாதங்­க­ளில் வழக்­க­மான நீர்ப் பங்­கீட்­டைப் பெற, தமி­ழ­கம் மன்­றாட வேண்­டிய சூழல் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">டெல்­லி­யில் 23.6.2026 அன்று நடை­பெற்ற காவிரி மேலாண்மை ஆணை­யத்­தின் 52ஆவது கூட்­டத்­தில், ஜூன் 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்­திற்கு 31.24 டிஎம்சி மொத்­த­மாக 40 டிஎம்சி காவிரி நீர் தேவை என தமி­ழக அரசு வலி­யு­றுத்­தி­யது. கோடை காலங்­க­ளில் அனு­ம­திக்­கப்­பட்ட அளவை விட அதிக நீரை கர்­நா­டகா பயன்­ப­டுத்­தி­விட்டு, நீர்த்­தேக்­கங்­க­ளில் குறைந்த அளவே நீர் இருப்­ப­தா­கக் கூறு­வதை ஏற்க முடி­யாது என­வும் தமி­ழக உறுப்­பி­னர்­கள் மேலாண்மை வாரி­யத்­தில் தெரி­வித்­தார்­கள். மேலாண்மை வாரி­யம், அடுத்த முறை இதைப் பற்­றிப் பேசு­வோம் என கூட்­டத்தை முடித்­தது. தற்­பொ­ழுது 30.06.2026 அன்று கர்­நா­டக நீர் துறை அமைச்­சர், தமி­ழ­கத்­திற்கு தண்­ணீர் தர இய­லாது என திட்­ட­மிட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தனி மனி­தன், சட்­டத்­திற்­குப் புறம்­பாக நடப்­பின், அம் மனி­த­னைத் திருத்த இய­லும். ஆனால், ஒரு அரசே சட்­டத்­திற்­குப் புறம்­பா­கத் தொடர்ந்து தமி­ழ­கத்­திற்கு உரிய நீரை வழங்­காது இருப்­பின், இந்த மாநி­லத்தை எப்­ப­டித் திருத்­து­வது? யார் திருத்­து­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">காவிரி மேலாண்மை வாரி­யத்­திற்கு முடி­வெ­டுக்­கும் முழு அதி­கா­ர­மும் இல்லை. இந்த வாரி­யம் பல் பிடுங்­கப்­பட்ட வாரி­யம். எனவே, ஒன்­றிய அர­சும், ஒன்­றிய நீர்­வ­ளத் துறை­யும் என்ன சொல்­லு­கி­றதோ அதன்­ப­டியே இயங்­கு­கி­றது. இந்த நிலை நீடிக்­கும் வரை இத­னால் நடு­நி­லை­மை­யு­டன் இயங்­கப் பெரும்­பா­லும் வாய்ப்பு இல்லை என்­பதே உண்மை. இச்­சூ­ழ­லில், மேக­தாது அணை கர்­நா­டக மாநி­லத்­தில் அமைப்­பதை இந்த அமைப்பு தடுக்க வாய்ப்பே இல்லை..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேக­தாது அணை அமைக்­கப்­பட்­டால் கர்­நா­ட­கா­வில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தமி­ழ­கத்­திற்­குக் கிடைக்க வாய்ப்­பி­ருக்­கி­றதா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தமி­ழ­கம் பெற வேண்­டிய நீரை கர்­நா­டகா அரசு தடுத்­தால் காவி­ரிப்­ப­டுகை சந்­தித்த மேலும் சந்­திக்க இருக்­கும் இன்­னல்­கள் யாவை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தமி­ழ­கம் பெற வேண்­டிய நீரை கர்­நா­டக அரசு தொடர்ந்து தடுத்­தால், காவி­ரிப்­ப­டுகை பாலை­வ­ன­மா­கும், நெல் உற்­பத்தி முடங்­கும், தமி­ழக மக்­கள் தொடர்ந்து உண்­ணும் அரிசிஉணவை இழக்­கும் நிலை ஏற்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">மக்­கள் நீரின்றி பல கிலோ­மீட்­டர் தூரம் சென்று, தர­மற்ற நீரைத் தலை­யில் சுமந்து, அதைத் தாகத்­தைத் தவிர்ப்­ப­தற்­கா­கப் பரு­கி­ய­தால், இந்­தி­யா­வில் எந்த மாநி­லத்­தி­லும் இல்­லாத அளவு, இந்த ஆண்­டில் டெங்கு வியாதி பெரும்­பா­லான மக்­க­ளைத் தொற்றி  இறந்­த­னர். மேக­தாது அணை கட்­டப்­பட்ட பிறகு இவை போன்ற தொடர் நிகழ்­வு­கள் காவி­ரிப் படு­கை­யில் இனி வரும் ஆண்­டு­க­ளில், தொடர் நிகழ்­வா­கப் பல ஆண்­டு­கள் நிக­ழும். இத­னால் காவி­ரிப்­ப­டுகை பாலை­வ­ன­மா­கும், தமி­ழக மக்­கள் தொடர்ந்து உண்­ணும் அரிசி உணவை இழக்க நேரி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேக­தாது அணை­யைக் கட்­டிய பிறகு தமி­ழக நெல் உற்­பத்­தி­யில் தலைமை வகிக்­கும் காவி­ரிப்­ப­டுகை நிலை என்­ன­வா­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">கர்­நா­டகா மாநி­லத்­தில் மேக­தாது அணை அமைக்­கப் பட்­டால், இம் மாநி­லத்­தில் இருந்து காவி­ரிப்­ப­டு­கைக்கு இனி நீர் கிடைக்­குமா? நீர் கிடைக்­கா­விட்­டால் இங்கு நெல் உற்­பத்தி தொடர்ந்து நிக­ழுமா? இத­னால் தமி­ழக மக்­கள் விவ­சா­யம், குறிப்­பாக நெல் உற்­பத்­தி­யில் பின் தங்க வேண்­டிய நிலை ஏற்­ப­டும். தமி­ழ­கம் பிற மாநி­லங்­க­ளில் இருந்து அரி­சியை  வாங்க வேண்­டிய  நிலை ஏற்­ப­டும். இந்­நி­கழ்வு ஒன்­றிய அர­சுக்­குத் தெரி­யாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வில் இப்­பொ­ழு­துள்ள அர­சி­யல் சூழ­லில் மேக­தாது அணை கட்­டப்­ப­டு­வ­தற்கு அதிக வாய்ப்­பு­கள் இருப்­பதை தமி­ழக மக்­கள் அறி­வார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">பிஜேபி கட்­சி­யைச் சார்ந்த கர்­நா­டக மாநி­லத்­தைச் சேர்ந்த நீர்­வ­ளத்­துறை துணை அமைச்­ச­ராக V. சோமன்­னா­வும், இம்­மா­நி­லத்­தைச் சேர்ந்த குமா­ர­சாமி பாஜக அமைச்­ச­ர­வை­யில் கன­ர­கத் தொழில்­கள் அமைச்­ச­ரா­க­வும் ஒன்­றிய அர­சில் தற்­பொ­ழுது பணி­யாற்­று­கின்­ற­னர். காவிரி மேலாண்மை வாரி­யம், உச்ச நீதி மன்­றம் போல், தனித்­தி­யங்­கும் அமைப்பு அல்ல (not an independent organization), இந்­திய ஒன்­றிய அர­சின் கீழ் இயங்­கு­கி­றது. எனவே இந்த அமைப்பு, ஒன்­றிய அர­சின் கருத்­துக்­க­ளைக் கேட்­கா­மல் தானே எந்த முடி­வை­யும் எடுக்க வாய்ப்­புள்­ளதா? இதன் பொருள் என்ன? சிந்­திப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தமி­ழ­கத்­திற்­குக் கிடைத்த 192 டிஎம்சி நீர், 177.25 டிஎம்சி ஆகக் குறைந்­த­தற்­குக் கார­ணம், இந்­திய அர­சின் அர­சி­த­ழில் (Gazette) பதி­வான பின்­பும், ஒன்­றிய அர­சின் தலைமை, இத்­திட்­டத்­தைப் பாரா­ளு­மன்­றத்­தில் விவா­திக்க வேண்­டும் என்­ப­த­னால், 14.75 டிஎம்சி காவிரி நீரை தொடர்ந்து இழக்க நேர்ந்­தது என்­பதை உலக மக்­கள் அனை­வ­ரும் அறி­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இச்­செ­ய­லில் தமி­ழக அரசு வெற்றி பெற­வில்லை எனின், ஏற்­க­னவே தெரி­வித்­தது போல, மேக­தாது அணை கட்­டிய ஓரிரு ஆண்­டு­க­ளில்,  காவி­ரிப் படுகை பாலை­வ­ன­மாக உரு­மா­றும். இத­னால் தமி­ழக நெல் உற்­பத்தி குறை­யும். காவிரி நீரை நம்பி இருக்­கும் விவ­சா­யி­கள் தங்­கள் வாழ்­வா­தா­ரத்தை இழப்­பர். இந்­நி­கழ்வு இத்­து­டன் முடி­வ­தில்லை. காவி­ரிப் படுகை விவ­சா­யி­கள் 2016-–2017 ஆம் ஆண்­டில் தற்­கொலை செய்து கொண்­டது போல, இனி ஒவ்­வொரு ஆண்­டும் தொடர்ந்து நடக்க வாய்ப்­பி­ருக்­கி­றது என்­பதை நாம் யாரி­டம் சொல்­வது. தமி­ழக மக்­கள் தமக்­குத் தாமே திட்­ட­மிட்டு இச்­செ­யலை முறி­ய­டிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமி­ழ­கத்­திற்கு உரிய காவிரி நீரைப் பெறா­மல் தமி­ழ­கம் 36 ஆண்­டு­க­ளா­கத் தத்­த­ளிப்­ப­தற்­குக் யார் கார­ணம்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">நர்­மதா நதி­நீர்த் தீர்ப்­பா­யத்­தின் (NARMADA WATER DISPUTES TRIBUNAL /NWDT) 1979 ஆம் ஆண்டு இறு­தித் தீர்ப்­பின்­படி, குஜ­ராத் மாநி­லத்­திற்கு ஒவ்­வொரு ஆண்­டும் 9 மில்­லி­யன் ஏக்­கர் அடி (Million Acre Feet) நீர் ஒதுக்­கப்­பட்­டது,  அதா­வது 392 டிஎம்சி. இத் தீர்ப்பு இந்­திய அர­சாங்­கத்­தால் டிசம்­பர் 1979-ல் அதி­கா­ரப்­பூர்வ அர­சி­த­ழில் (Gazette) வெளி­யி­டப்­பட்­ட­தில் இருந்து, கடந்த 46 ஆண்­டு­க­ளாக (1979 முதல் 2026 வரை) குஜ­ராத் மாநி­லம் இந்­ந­தி­நீர்ப் பகிர்­வைப் பயன்­ப­டுத்தி வரு­கி­றது. இந்­ந­தி­நீரை, குஜ­ராத், மத்­திய பிர­தே­சம் மகா­ராஷ்­டிரா, ராஜஸ்­தான் ஆகிய நான்கு மாநி­லங்­கள் பகிர்ந்து கொள்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இந்­திய அரசு தனது அண்டை நாடு­க­ளான பாகிஸ்­தான், வங்­க­தே­சம் மற்­றும் நேபா­ளம் ஆகி­ய­வற்­று­டன் நதி­நீர் பகிர்வு ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்­டுள்­ளது. இதன்­படி, 1960 ஆம் ஆண்­டின் சிந்து நதி­நீர் ஒப்­பந்­தத்­தின் கீழ் சட்­லெஜ், பியாஸ், ரவி நதி­கள் இந்­தி­யா­வுக்­கும், சிந்து, ஜீலம், செனாப் (Chenab) நதி­கள் பாகிஸ்­தா­னுக்­கும் ஒதுக்­கப்­பட்­டன. மேலும், 1996 ஆம் ஆண்­டின் கங்கை நதி­நீர் ஒப்­பந்­தத்­தின் மூலம் ஃபராக்கா அணை­யில் (Farakka Barrage) இருந்து வங்­க­தே­சத்­து­டன் கங்கை நதி­நீர் பகிர்ந்து கொள்­ளப்­ப­டு­கி­றது. அத்­து­டன், நேபா­ளத்­து­டன் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கோசி, கண்­டக் (Gandak River) மற்­றும் மகா­காளி நதி­கள் ஒப்­பந்­தங்­கள் மூலம் பாச­னம், மின் உற்­பத்தி மற்­றும் வெள்­ளக் கட்­டுப்­பாட்­டிற்­காக இரு நாடு­க­ளும் நதி­நீ­ரைப் பகிர்ந்து கொள்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">மேலே தெரி­வித்­துள்ள நதி­கள் நீர்ப் பங்­கீட்­டை­யும், காவிரி ஆற்­றின் நீர்ப் பங்­கீட்­டை­யும் நடு­நி­லை­யு­டன் ஒப்­பி­டின், சிக்­கல் அனைத்­தும் தொடர்ந்து கர்­நா­டக அர­சாலே நிகழ்­கி­றது என்­பதை, இந்­திய மக்­கள் அறி­வர்,  இந்­திய அரசு அறி­யுமா?. கர்­நா­டக அர­சின் தவற்றை அறிந்து இனி­யா­வது தமி­ழ­கத்­திற்கு உரிய நீரைத் தொடர்ந்து ஒவ்­வொரு ஆண்­டும் வழங்­கு­வ­தற்கு ஒன்­றிய அரசு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­குமா?  நட­வ­டிக்கை எடுப்­பி­னும் கர்­நா­டக அரசு கட்­டுப்­படுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">காவிரி நீரைப் பிரித்து வழங்­கும் காவிரி மேலாண்மை வாரி­யம், இந்­திய அர­சின் கட்­டுப்­பாட்­டில் இயங்­காது, தனித்­தி­யங்­கும் நிறு­வ­ன­மாக (Independent) இயங்க வேண்­டும். காவிரி நீரைப்  பகி­ரும்  கர்­நா­டக மாநி­லத்­தின்  அணை­க­ளின் நீரின் அளவை இந்த அமைப்பே கண்­கா­ணித்து, ஒவ்­வொரு மாதத்­திற்­கும் உரிய நீரைத் திறந்து விட வேண்­டும். பிறகு அணையை இந்த நிறு­வ­னமே மூட வேண்­டும். அமெ­ரிக்க நாட்­டைப் போல ஒன்­றிய அர­சும், என்­றும் நடு­நி­லமை வகிக்க வேண்­டும். இம்­முறை என்று நடை­மு­றைக்கு வருமோ, அன்­று­தான், காவிரி நீரை ஒவ்­வொரு மாநி­ல­மும் தங்கு தடை இன்­றிப் பெற்று, இனி என்­றும் சிக்­கலே இல்­லா­மல் நான்கு மாநி­லங்­க­ளி­லும் வாழும் மக்­கள் ஒன்­று­பட்டு உற­வி­னர்­க­ளாக வாழ இய­லும். இதுவே இக்­கட்­டு­ரை­யின் தலை­யான நோக்­கம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>