<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 15 2026 03:32:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260715T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="15072026-CBE-05" position.sequence="05" ex-ref="15072026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="93">மனமறிந்து பொய்யுரைக்கும் விஜய்: தற்காதலால் சீரழியும் தார்மீக நெறி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame764694_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup764752_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M2bw_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M4bw_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.5">வ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ர­லாறு மிகப்­பெ­ரிய வாய்ப்பை நடி­கர் விஜய்க்கு வழங்­கி­யுள்­ளது. கட்சி ஆரம்­பித்த இரண்­டாண்­டு­க­ளி­லேயே அவர் முதல்­வ­ரா­கப் பத­வி­யேற்று விட்­டார். அவர் ஊர், ஊராக பட்டி தொட்­டி­க­ளுக்­கெல்­லாம் சென்று பிரச்­சா­ரம் செய்து கட்சி அமைப்பை உரு­வாக்­க­வில்லை; மக்­க­ளுக்­கான போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு சிறை செல்­ல­வில்லை. மணிக்­க­ணக்­காக பேசி, பக்­கம் பக்­க­மாக எழுதி கொள்­கை­க­ளை­யும். இலட்­சி­யங்­க­ளை­யும் பிர­சா­ரம் செய்­ய­வில்லை. தனது திரை­நா­யக பிம்­பத்தை மட்­டும் முத­லீடு செய்து அதன் மூலம் முதல்­வ­ரா­கி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. ஆட்­சி­யி­லும், கட்­சி­யி­லும் இருந்த குறை­பா­டு­கள், மக்­க­ளின் அதி­ருப்­தி­தான் ஆட்சி மாற்­றத்­திற்கு கார­ண­மென்று பல­ரும் பேசு­வ­தைக் கேட்­க­லாம். அப்­ப­டி­யா­னால் எதிர்க்­கட்­சி­யான, ஐம்­ப­தாண்­டு­கால வர­லாறு கொண்ட  அ.தி.மு.க.–தானே வெற்றி பெற்­றி­ருக்க வேண்­டும்? அந்­தக் கட்­சி­யை­விட தமி­ழக வெற்­றிக் கழ­கம் மக்­க­ளுக்கு என்ன செய்­து­விட்­டது? இந்­தக் கேள்­வியை சிந்­தித்­தால் விஜ­யின் கதா­நா­யக பிம்­ப­மும், அந்த பிம்ப வழி­பாட்டை இன்ஸ்­டா­கி­ராம் போன்ற சமூக ஊட­கங்­கள், செல்­பே­சி­கள் மூலம் பர­வ­லாக அர­சி­யல் பிரச்­சா­ர­மாக மாற்­றி­ய­தும்­தான் வெற்­றிக்கு முக்­கி­யக் கார­ணம் என்­பதை ஐயம் திரி­புற புரிந்­து­கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எப்­ப­டி­யா­னா­லும், இவ்­வ­ளவு குறு­கிய காலத்­தில் முதல்­வர் பத­விக்கு வந்­து­விட்­ட­வர் அந்த சந்­தர்ப்­பத்­தில் தன் ஆளு­மையை உயர்த்­திக் கொண்டு, பண்­பட்ட தலை­வ­ராக தக­வ­மைத்­துக் கொண்டு தமிழ்­நாட்டு அர­சி­ய­லில் தன்னை நிலை­நி­றுத்­திக்­கொள்ள நல்ல வாய்ப்பு அவ­ருக்­குக் கிடைத்­துள்­ளது. ஆனால் அவர் அதற்கு நேர்­மா­றா­கத் தன் குணக்­கோ­ளா­று­களை மீற முடி­யா­த­வ­ராக, தேவை­யற்று பொய்­யு­ரைத்து மலி­ன­மான அர­சி­யலை செய்­ப­வ­ரா­கவே வெளிப்­ப­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அவர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கரூ­ருக்­குச் சென்று, சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாதம் நிகழ்ந்த கரூர் நெரி­சல் மர­ணங்­கள் பற்றி பேசி­ய­து­தான் அவர் அர­சி­யல் எவ்­வ­ளவு மலி­ன­மா­னது என்­பதை படம் பிடித்­துக் காட்­டி­யுள்­ளது. இதனை புரிந்­து­கொள்­வ­தும், அவர் மீது பொது­மன்­றத்­தில் கடு­மை­யான விமர்­ச­னத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தும் எதிர்­கால அர­சி­யல் மேன்­மைக்கு இன்­றி­ய­மை­யா­த­தா­கும். கார­ணம் ஒரு விபத்தை சதி என்று சொல்­வ­தன் மூலம் அர­சி­ய­லில் தேவை­யற்ற ஒரு வெறுப்பை, வன்­மத்தை அவர் வளர்க்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கரூர் நெரி­சல் மர­ணங்­கள்: சட்­டம் எப்­படி பார்க்­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கரூர் நெரி­சல் மர­ணங்­கள் நேர­லை­யில் பல்­வேறு தொலைக்­காட்சி ஊட­கங்­கள் ஒளி­ப­ரப்­பிக் கொண்­டி­ருந்­த­போது நாடே பார்க்­கும்­படி பகி­ரங்­க­மா­கத்­தான் நிகழ்ந்­தன. அந்­தக் காணொ­லி­க­ளைத் தொகுத்து விநா­டிக்கு, விநாடி என்ன நடந்­தது என்­ப­தை­யெல்­லாம் தொலைக்­காட்­சி­கள் ஒளி­ப­ரப்­பி­விட்­டன. அத­னைக் கண்­ட­வர்­கள் அனை­வ­ரும் ஒன்றை உறு­தி­யா­கச் சொல்­வார்­கள். அது ஒரு விபத்து. யாரும் எதிர்­பா­ரா­மல் நிகழ்ந்த விபத்து.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­படி ஒரு விபத்து நிகழ வேண்­டும். அப்­பாவி மக்­கள் 41 பேர் மர­ண­ம­டைய வேண்­டும் என்று யாருமே எண்­ணி­யி­ருக்க வாய்ப்­பில்லை. ஏனெ­னில் அத­னால் யாருக்­கும் எந்­தப் பய­னும் இல்லை. தேர்­தல் நேரத்­தில் கட்­சிக்­கா­ரர்­கள் ஒரு­வரை ஒரு­வர் தாக்­கிக் கொள்­வது உண்டு. சில சம­யம் வன்­மு­றை­யில் மர­ணங்­க­ளும் கூட நேரும். ஆனால் எங்­குமே பொது­மக்­களை பலி­யி­டு­வ­தில் யாருக்­கும் பயன் இருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், இந்த விபத்து நிகழ யாரு­டைய கவ­ன­மின்­மையோ, அலட்­சி­யமோ கார­ணமா என்­பதை சட்­டம் ஆரா­யத்­தான் செய்­யும். அதற்­குத்­தான் விசா­ர­ணைக் கமி­ஷன், காவல்­துறை ஆய்வு, சி.பி.ஐ. விசா­ரணை எல்­லாம். முதல் பொறுப்பு நிகழ்ச்சி ஏற்­பட்­டா­ளர்­க­ளான தமி­ழக வெற்­றிக் கழக நிர்­வா­கி­க­ளுக்­குத்­தான் என்­ப­தால் அவர்­கள் குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்­கள். பிரச்­சா­ரத்­திற்கு வந்த தலை­வர் விஜய், நிகழ்ச்சி ஏற்­பாடு செய்­வ­தில் ஈடு­பட்­டி­ருக்­க­வில்லை என்­ப­தால் அவர் பெயர் சேர்க்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­படி விசா­ர­ணை­யில் கட்சி நிர்­வா­கி­கள் கவ­னக்­குறை­வாக இருந்­தார்­கள், தக்க ஏற்­பா­டு­கள் செய்­ய­வில்லை என்று அறிக்கை கொடுக்­கப்­பட்­டா­லும், அதனை சட்ட ரீதி­யான குற்­ற­மாக நீதி­மன்­றத்­தில் சுமத்தி வழக்கு நடத்தி தண்­டனை பெற்­றுக் கொடுப்­பது கடி­னம். கார­ணம், விபத்­திற்கு எந்த ஒரு தனிப்­பட்ட கார­ணத்­தை­யும் திட்­ட­வட்­ட­மா­கக் கூற முடி­யாது என்­ப­தால், வழக்கு பல ஆண்­டு­கள் நடக்­கும். இறு­தி­யில் நீர்த்­துப் போகும் என­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காவல்­துறை போதிய முன்­னேற்­பா­டு­க­ளைச் செய்­ய­வில்லை என்­றும் விசா­ர­ணை­யில் கூறப்­ப­ட­லாம். ஆனால் காவல்­துறை அவர்­க­ளுக்கு கட்சி நிர்­வா­கி­கள் தெரி­வித்த எண்­ணிக்­கையை விட கூட்­டம் அதி­கம் வந்­த­தால் எது­வும் செய்யமுடி­வி­யல்லை என்று கூறி­னால் அது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாக மாற்­றப்­ப­டு­வது கடி­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இறு­தி­யில் தங்­கள் அபி­மான நடி­கர் விஜயை பார்த்­து­விட வேண்­டும் என்ற வெறி­யில் கூட்ட த்தில் நெரி­சலை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­க­ளும் பொறுப்­பு­தான் என்­றா­லும் அவர்­கள் யாரை­யும் அடை­யா­ளப்­ப­டுத்தி குற்­ற­வா­ளி­க­ளாக பதிவு செய்து வழக்கு நடத்த முடி­யாது. எனவே விசா­ரணை என்­பது பெரும்­பா­லும் எதிர்­கா­லத்­தில் பின்­பற்ற வேண்­டிய வழி­காட்டு நெறி­மு­றை­களை வகுக்க உத­வக்­கூ­டி­ய­தா­கவே முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தொடர்ந்து கும்­ப­மேளா போன்ற மக்­கள் பெரு­ம­ளவு கூடும் நிகழ்­வு­க­ளில் நெரி­சல் மர­ணங்­கள் நிகழ்ந்­து­கொண்­டு­தான் உள்­ளன. அம்­மா­தி­ரி­யான எந்த ஒரு விபத்­திற்­கும் யாரை­யும் குற்­ற­வா­ளி­யாக்கி தண்­டனை வழங்­கப்­பட்­ட­தில்லை. வழக்­குப் பதிவு செய்­வ­தும், விசா­ரிப்­ப­தும் ஒரு பொறுப்­பு­ணர்வை தோற்­று­விக்­கும் நோக்­கில்­தான் நடக்­கும். பல்­வேறு கார­ணங்­க­ளால் நடக்­கும் இத்­த­கைய விபத்­து­க­ளில் யாரை­யும் குறிப்­பாக தண்­டிப்­பது கடி­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தார்­மீ­கப் பொறுப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆனால் கரூர் நெரி­சல் மர­ணத்­திற்­குத் தார்­மீ­கப் பொறுப்­பேற்­கும் மாண்பு தொடர்­பு­டைய அனை­வ­ருக்­</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ம் இருக்க வேண்­டும். அதில் முக்­கி­ய­மா­ன­வர் விஜய்­தான். ஏனெ­னில் அவ­ரைக்­காண வேண்­டும் என்ற வெறி­யில்­தான் அத்­தனை பேர் முண்­டி­ய­டித்­துக்­கொண்டு வந்­த­னர். மரங்­க­ளின் மீது, டிரான்ஸ்ஃ­பார்­மர் மீது, கட்­டி­டங்­கள் மீது ஏறி­னர். அவர் வாக­னத்­திற்கு அரு­கில் இரு சக்­கர வாக­னத்­தில் வந்து விபத்­தில் உயி­ரி­ழந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விஜய் எல்லா ஊர்­க­ளுக்­கும் வரு­கி­றேன் என்று தொடர்­ப­யண திட்­டத்தை அறி­வித்­தி­ருக்­க­லாம். அவ­ரைக் காண்­பது அபூர்­வ­மல்ல என்­பதை உணர்த்­தும்­படி பயண திட்­டத்தை வகுத்­தி­ருக்­க­லாம். நான் எல்லா ஊருக்­கும் வரு­வேன், உங்­கள் அனை­வ­ரை­யும் நேரில் காண்­பேன் என்று அறிக்­கை­கள், காணொ­லி­கள் மூலம் தெளி­வு­பட கூறி­யி­ருக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இரண்­டா­வ­தாக அவர் கட்சி அணி­யி­ன­ரு­டன் முகாம்­க­ளில் பங்­கு­கொண்டு அவ­ரு­டன் நீண்ட நேரம் உட­னி­ருக்­கும் வாய்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­க­லாம். அந்த அணி­யி­னர் மூலம் கூட்­டத்தை ஒழுங்­கு­ப­டுத்­தும் ஒரு தன்­னார்­வ­லர் படையை உரு­வாக்­கி­யி­ருக்­க­லாம். ஒரு தலை­வ­ரின் முதல் கடமை தனக்­கும் மக்­க­ளுக்­கும் இடை­வெளி இல்­லா­மல் பார்த்­துக் கொள்­வ­து­தான். அத­னைச் செய்ய ஆயி­ரம் வழி­கள் உண்டு. காந்­தி­யி­லி­ருந்து எண்­ணற்ற தலை­வர்­கள் அத­னைச் செய்து காட்­டி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதற்கு மாறாக விஜய் தான் ஒரு ஊருக்­குச் செல்­வதை அபூர்வ நிகழ்­வாக, ஊட­கங்­க­ளால் பர­ப­ரப்­பான நிகழ்­வாக மாற்­றப்­ப­டு­வதை ஊக்­கு­வித்­தார். தன்­னைக் காண பெரும் கூட்­டம் வரு­வதை கூட்­டக்­காட்சி அர­சி­ய­லாக மாற்ற விரும்­பி­னார். விக்­கி­ர­வாண்டி மாநாடு தொடங்கி இதுவே அந்­தக் கட்­சி­யின் நடை­மு­றை­யாக இருந்­தது. அவ­ரு­டைய திரைப்­பிம்ப கவர்ச்­சியே கட்­சி­யின் மூல­த­னம் என்று நம்­பப்­பட்­டது. இது ஏன் என்­பதை இறு­தி­யில் காண­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விஜய்க்கு அடுத்து கட்சி நிர்­வா­கி­க­ளுக்­கும் பொறுப்பு இருக்­கி­றது. கூட்­டம் கூடி­னால், மணிக்­க­ணக்­காக காத்­தி­ருந்­தால் மக்­க­ளுக்­குத் தண்­ணீர் போன்­றவை கிடைக்க வசதி செய்­ய­வேண்­டும். கூட்­டத்தை ஒழுங்­கு­ப­டுத்த வேண்­டும். காவல்­துறை பாது­காப்பு என்­பது ஏதெ­னும் கல­வ­ரம் நடக்­கா­மல் பார்த்­துக்­கொள்­ளத்­தான் பயன்­ப­டும். கூடும் மக்­கள் தங்­களை ஒழுங்­கு­ப­டுத்­திக்­கொள்­வது அவர்­கள் கடமை, கட்­சிக்­கா­ரர்­கள் கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆனால் விஜய் ரசி­கர்­கள் “அலப்­பறை” செய்­வ­தையே இலட்­சி­ய­மா­கக் கொண்­ட­வர்­கள் என்­பதை அவர்­களே காணொ­லி­க­ளில் கூறி­யுள்­ள­னர். அவர்­களை டிரான்ஸ்ஃ­பார்­ம­ரில் இருந்து கீழே இறங்­கச் சொல்லி ஆனந்த், விஜய் ஆகி­யோர் கெஞ்­சிக் கத­றும் காணொ­லி­க­ளும் உள்­ளன. இந்த ஒழுங்­கீ­ன­மான செயல்­பா­டு­களை எப்­படி சரி செய்­வது என்று கட்சி ஏதெ­னும் சிந்­தித்­துள்­ளதா, என்ன முயற்சி செய்­தது என்று தெரி­ய­வில்லை. இப்­ப­டி­யான கட்­டுப்­பா­டற்ற கூட்­டம் நெரி­சலை ஏற்­ப­டுத்­தும்­போது எப்­படி காவல்­து­றை­யால் கட்­டுப்­ப­டுத்த முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எப்­ப­டியோ பெரிய அசம்­பா­வி­தம் நிகழ்ந்­து­விட்­டது. அதனை விஜ­யும் கட்­சி­யி­ன­ரும் எப்­படி எதிர்­கொண்­டி­ருக்க வேண்­டும்? அவர்­கள் எப்­படி எதிர்­கொண்­டார்­கள்? அத­னை­யும் நாம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கரூர் விபத்­திற்­குப் பிறகு விஜய்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க. நிர்­வா­கி­ கள் என்ன செய்­த­னர்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எப்­படி சிந்­தித்­தா­லும் விளங்­காத மர்­மம் ஏன் விஜ­யும், ஆனந்த், நிர்­மல்­கு­மார், ராஜ்­மோ­கன் உள்­ளிட்ட கட்சி நிர்­வா­கி­க­ளும் விபத்­திற்­குப் பின் செயல்­பா­டு­கள் இல்­லா­மல் முடங்­கி­னார்­கள் என்­ப­து­தான். ஆதவ் அர்­ஜூனா ஏதோ விளை­யாட்­டுப் போட்­டிக்­காக டில்லி சென்­று­விட்­டார் என்­றார்­கள். ஆனால் பிறர் யாருமே பொது­வெ­ளி­யில் இல்லை; கரூ­ரில் சம்­பவ இடத்­தில் யாருமே தங்­க­வில்லை. ஏன் இப்­படி செய்­தார்­கள் என்­ப­தைப் புரிந்­து­ கொள்ள முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சம்­பவ இடத்­தில் வெளி­யேற வேண்­டும் என்று ஆதவ் அர்­ஜுனா அந்த வாக­னத்­தி­லி­ருந்து கூறு­வது பதி­வா­கி­யுள்­ளது. அது சரி­தான். ஆனால் திருச்சி சென்ற விஜய் அங்கே ஒரு ஹோட்­ட­லில் தங்­கி­யி­ருக்­க­லாம். ஆத­ர­வா­ளர்­கள் வீட்­டில் தங்­கி­யி­ருக்­க­லாம். அங்­கி­ருந்து முதல்­வ­ரை­யும், காவல்­துறை அதி­கா­ரி­க­ளை­யும் தொடர்பு கொண்டு பேசி­யி­ருக்­க­லாம். ஊட­கங்­க­ளை­யும் தொடர்பு கொண்டு அறிக்கை வெளி­யிட்­டி­ருக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சரி, விஜய் இருந்­தால் அவ­ரைக் காண பல­ரும் கூடு­வ­தால் பிரச்­சினை ஏற்­ப­டு­கி­றது என்று வைத்­துக்­கொண்­டா­லும், பொதுச்­செ­ய­லா­ளர் ஆனந்த் கரூ­ரில் தங்கி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவ வேண்­டாமா? எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர், செந்­தில் பாலாஜி ஆகி­யோ­ரு­டன் அவ­ரும் இணைந்­து­கொண்டு மருத்­து­வ­ம­னை­யில் செயல்­பட்­டி­ருக்­க­லாமே? பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க ஆகி­ய­வற்­றில் பணி­யாற்­றிய அனு­ப­வம் மிக்க நிர்­மல் குமார் சம்­பவ இடத்­தில் இருந்­தி­ருக்­க­லாமே? இப்­போது ஏதேதோ சதிக்­கோட்­பா­டு­களை பேசு­ப­வர் அன்­றைக்கு களத்­தில் நிற்­கா­மல் எங்கே போனார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கட்­சியே ஒட்­டு­மொத்­த­மாக முடங்­கிப் போகும்­படி என்ன நடந்­தது? அவர்­கள்­தானே ஒவ்­வொரு ஊரி­லும் அஞ்­ச­லிக் கூட்­டங்­கள் நடத்­தி­யி­ருக்க வேண்­டும்? இறந்­த­வர் குடும்­பங்­க­ளுக்­கான உத­வி­க­ளைச் செய்­தி­ருக்க வேண் ­டும்? கள ஆய்வு நடத்தி எப்­படி நடந்­தது என்று அறிக்கை அளித்­தி­ருக்க வேண்­டும்? த.வெ.க. கட்­சி­யைத் தவிர மற்ற அனைத்­துக் கட்­சி­க­ளும் கரூ­ருக்­கச் சென்­றன. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைப் பார்த்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விஜய் அன்றே இந்த விபத்­திற்­கான தார்­மீ­கப் பொறுப்பை ஏற்­றுக்­கொண்டு, இனி வரும் காலங்­க­ளில் எச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வோம் என்று பேசி­யி­ருந்­தால் என்ன பிரச்­சினை வந்­தி­ருக்­கப் போகி­றது? என்­னைக் காண்­ப­தற்­காக வந்து உயிரை இழக்­கா­தீர்­கள் என்று மக்­க­ளுக்கு உருக்­க­மாக ஒரு கோரிக்கை வைத்­தி­ருந்­தால் அவர் மீதான மதிப்பு பன்­ம­டங்கு அதி­க­ரித்­தி­ருக்­குமே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு­வேளை தார்­மீ­கப் பொறுப்­பேற்­றால் சட்­டப்­படி தண்­டிப்­பார்­கள் என்ற அச்­சம் இருந்­தால், அன்­றைக்கே காவல்­து­றை­தான் பொறுப்பு என்று கூறி­யி­ருக்­க­லாமே? அஸ்ரா கர்க் தலை­மை­யி­லான விசா­ர­ணைக் குழு­வி­டம் தங்­கள் சந்­தே­கங்­க­ளைக் கூறி பகி­ரங்­க­மான அறிக்­கை­யாக சமர்­பித்­தி­ருக்­க­லாமே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விஜய் போன்ற மக்­கள் செல்­வாக்­குள்ள தலை­வரை இது­போன்ற விபத்­தைக் கார­ணம் காட்டி யாரே­னும் கைது செய்ய முடி­யுமா? முடக்க முடி­யுமா? அப்­ப­டிச் செய்­தால் அவ­ருக்­கான அனு­தா­ப­மும், ஆத­ர­வும் பெருகி விடாதா? அப்­ப­டி­யும் தங்­களை குற்­றம் சாட்­டு­வார்­கள் என்ற ஒரு சந்­தே­கம் இருந்­தால் இன்­றைக்கு வைக்­கும் குற்­றச்­சாட்­டு­களை அன்­றைக்கே வைத்து பிரச்­சா­ரம் செய்­தி­ருக்­க­லாமே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விஜய் வைக்­கும் வினோத குற்­றச்­சாட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விஜய் என்ன சொல்­கி­றார் என்­றால் மெயின் ரோட்­டி­லி­ருந்து சம்­பவ இடத்­திற்கு காவல்­து­றை­தான் என்­னைக் கூட்டி வந்­தது; நானும் அதற்கு நன்றி சொன்­னேன். ஆனால் அவர்­கள் வேண்­டு­மென்­றே­தான் கூட்­டம் அதி­க­மாக இருந்­தும் என்னை கூட்டி வந்­தி­ருக்­கி­றார்­கள். அது­தான் சதிச்­செ­யல் என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அப்­படி கூட்­டம் அள­வுக்கு அதி­க­மாக இருந்­தால் அவர் கட்சி நிர்­வா­கி­கள்­தானே அவ­ரி­டம் கூற வேண்­டும்? “விஜய்ணா, இங்க ரொம்­பக் கூட்­டமா இருக்கு; நீங்க மெயின் ரோடி­லி­ருந்து உள்ள வரா­தீங்க” என்று அவர்­கள் கூறி­யி­ருக்­க­லாமே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அவர் பேசிய இடத்­திற்கு ஐம்­பது மீட்­டர் முன்­னா­லேயே பேருந்தை நிறுத்­தும்­படி காவல்­துறை கூறி­யதை பதிவு செய்­துள்­ளார்­களே? அவர்­கள் பேச்­சைக் கேட்­கா­மல் ஏன் பேருந்தை முன்­ன­கர்த்தி நெரி­சலை உரு­வாக்­கி­னார்­கள்? அப்­படி காவல்­துறை சொல்­வது பொய்­யென்­றால் இத்­தனை நாட்­க­ளில் அதனை மறுத்­தி­ருக்க வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்­குக் காவல்­துறை அவர் கட்­டுப்­பா­டில்­தானே இருக்­கி­றது? எப்­படி தன் கட்­டுப்­பாட்­டில் உள்ள துறை­மீதே குற்­றம் சாட்­டு­கி­றார்? ஏதா­வது விசா­ரணை செய்­தாரா? யாரை­யா­வது பணி இடை­நீக்­கம் செய்­துள்­ளாரா? ஒரு முத­ல­மைச்­சரே காவல்­துறை சதி செய்­தது என்று சொன்­னால் அபத்­த­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அர­சாங்­கத்­தின் தொடர்ச்சி (continuity of governance) என்­பது மிக முக்­கி­ய­மான அர­சி­யல் அடிப்­ப­டை­யா­கும். யார் ஆள்­கி­றார்­கள் என்­பது முக்­கி­ய­மல்ல, அர­சாங்­கம் தொடர்ச்­சி­யாக இயங்க வேண்­டும் என்­ப­து­தான் முக்­கி­யம். அன்­றைக்­கும் காவல்­துறை முதல்­வர் கட்­டுப்­பா­டில்­தான் இருந்­தது; இன்­றைக்­கும் இருக்­கி­றது. அப்­படி இருக்­கும்­போது இன்­றைய முதல்­வரே காவல்­து­றையை பழி­சொல்­வது அபாண்­ட­மா­னது இல்­லையா? மக்­க­ளுக்கு எப்­படி அர­சாங்­கத்­தின் மீது நம்­பிக்கை வரும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முன்­னாள் பா.ஜ.க. நிர்­வா­கி­யான இன்­றைய 
த.வெ.க. அமைச்­சர் நிர்­மல்­கு­மார் தி.மு.க. சதி­செய்த து என்று கூறு­கி­றார். அப்­போதே கேட்­கப்­பட்ட நொண்­டிக்­கேள்­வி­யான செந்­தில் பாலாஜி எப்­படி அங்கே ஐந்து நிமி­டத்­தில் வந்­தார் என்று கேட்­கி­றார். கரூர் என்­பது சிறு­ந­க­ரம். அங்கே காரில் ஏறி ஐந்­தாறு கிலோ­மீட்­டர் தூரத்­தி­லுள்ள சம்­பவ இடத்­திற்கு வர எத்­தனை நேரம் ஆகும்? இப்­படி ஒரு விபத்து நடந்­தால் சட்ட மன்ற உறுப்­பி­ன­ரான அவ­ருக்கு உடனே செய்தி போகாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதை­விட இந்­தக் கேள்­வி­யின் அபத்­தம் மற்­றொன்று இருக்­கி­றது. ஒரு­வேளை செந்­தில் பாலா­ஜியே காவல்­து­றை­யி­டம் இப்­ப­டி­யெல்­லாம் செய்­யச் சொல்லி சொன்­னார் என்றே வைத்­துக்­கொண்­டா­லும் அவர் எதற்கு அந்த ஊரில் அப்­போது இருக்க வேண்­டும்? அவர் கோவைக்கோ, சென்­னைக்கோ சென்­றி­ருக்­க­லாமே? நான் சம்­பவ தினத்­தன்று ஊரில் இல்லை; என்ன நடந்­தது என்று எனக்­குத் தெரி­யாது என்று கூறு­வ­து­தானே சுல­பம்? எதற்­காக அவரே சென்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்க, நிலை­மையை கட்­டுக்­குக் கொண்­டு­வர பணி­யாற்ற வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நிர்­மல் குமார் ஜெயின் கமி­ஷன் தி.மு.க. மீது ஐயப்­பட்­டது என்று கூறு­கி­றார். அதா­வது தி.மு.க. மீது என்ன பழி­போட்­டா­லும் மக்­கள் நம்­பி­வி­டு­வார்­கள் என்று நினைக்­கி­றார். இவ்­வ­ளவு மலி­ன­மான அர­சி­யலை இவர்­கள் ஏன் செய்ய வேண்­டும் என்­ப­து­தான் இன்­றைய கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தற்­கா­த­லால் விளை­யும் சீர­ழிவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உள­வி­ய­லில் நார்­சி­ஸம் என்று ஒரு பிரச்­சினை உண்டு. கிரேக்க புரா­ணத்­தில் நார்­சி­சஸ் என்ற தேவன் தன் மிக அழ­கான உரு­வத்தை குளத்து நீரில் பார்த்து காதல் கொண்டு அது நிறை­வேறா ஏக்­கத்­தில் இறந்­து­விட்­டான் என்று ஒரு கதை உண்டு. அத­னால் தன்­னையே காத­லித்­துக் கொள்­ளும் குணத்­திற்கு நார்­சி­ஸம் என்று பெயர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திரைக் கதா­நா­ய­கர்­கள் நார்­சி­ஸத்­தின் பூரண வடி­வங்­கள். அவர்­கள் தங்­க­ளைப் பற்­றியே பாடிக்­கொள்­வார்­கள். “நான் யார் தெரி­யுமா?” “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்­க­மாட்ட” என்­றெல்­லாம் சுய­பு­கழ்ச்­சி­யின் உச்­சத்­தில் ஆடு­வார்­கள். தன்­னைப் பற்­றியே பஞ்ச் டய­லாக் பேசிக்­கொள்­வார்­கள். “நான் சொன்னா சொன்­ன­து­தான்” என்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த தற்­கா­தல் பிம்­பம் பார்ப்­ப­வர்­கள் எல்­லோ­ருக்­கும் பிடிக்­கும். ஏனெ­னில், அவர்­க­ளும் இந்த தற்­கா­தலை தங்­க­ளுக்­கா­ன­தாக மாற்­றிக்­கொள்­வார்­கள். கதா­நா­யக நடி­கர் போலவே முடி­வெட்­டிக் கொள்­வார்­கள். சட்டை போட்­டுக்­கொள்­வார்­கள். சிலர் அவர்­கள் போலவே வேட­மிட்­டுக்­கொள்­வார்­கள். தங்­க­ளு­டைய இய­லா­மையை தற்­கா­தல் மூலம் சரி­செய்­து­வி­ட­லாம் என நினைப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உள்­ள­படி சொன்­னால் எல்லா மனி­தர்­க­ளி­ட­மும் 
தற்­கா­தல் இருக்­கும். தற்­பு­கழ்ச்சி என்­பார்­கள். சிறி­த­ள­ வே­னும் தன்னை புகழ்ந்­து­கொள்­ளும் விருப்­பம் அனை­வ­ருக்­கும் இருக்­கும். அது தவ­றில்லை. அதே 
சம­யம் தன்­னு­டைய குறை­க­ளை­யும் ஏற்­றுக்­கொள்­ளும் பக்­கு­வ­மும் இருந்­து­விட்­டால் பிரச்­சி­னை­யில்லை. 
“ஏதி­லார் குற்­றம்­போல் தன் குற்­றம் காண்­கிற்­பின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தீதுண்டோ மன்­னும் உயிர்க்கு” என்­றார் வள்­ளு­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விஜ­யின் பிரச்­சினை நடி­கர் என்ற தற்­கா­த­லில் இருந்து வெளியே வர முடி­ய­வில்லை என்­ப­து­தான். அத­னால்­தான் அவ­ரால் கரூர் விபத்­திற்கு வருந்­து­கி­றேன்; பொறுப்­பேற்­கி­றேன் என்று சொல்­லி­விட்டு கடந்து போக­மு­டி­ய­வில்லை. கரூ­ரில் அவர் தற்­கா­த­லின் உச்­சத்­தில் இருந்­தார். மக்­கள் வெள்­ளம் தன் பேருந்­தைப் பார்த்து ஆர­வா­ரம் செய்­வ­தைப் பார்த்­துத் தன் இருக்­கை­யின் மீதான விளக்கை அணைத்து, போட்டு விளை­யா­டி­னார். பேருந்­தின் மீது ஏறி பாடி­னார், பேசி­னார். அந்த நேரத்­தில் நிகழ்ந்த விபத்து அவ­ரது தற்­கா­தல் மயக்­கத்தை சிதைத்­து­விட்­டது. அவ­ரால் அத­னைத் தாங்க முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வேறு எந்­தத் தலை­வ­ரா­னா­லும் உடனே மன­மார வருத்­தம் தெரி­வித்து, தார்­மீ­கப் பொறுப்­பேற்று, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவி செய்து கடந்து போயி­ருக்­கக் கூடிய நிகழ்வை, விஜ­யின் தற்­கா­தல் தனக்­கெ­தி­ரான சதி­யா­கத்­தான் புரிந்­து­கொள்­கி­றது. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கூட தனி­யா­கத்­தான் பார்த்து மன்­னிப்­புக் கேட்­டார். பொது­வெ­ளி­யில் மன்­னிப்­புக் கேட்­பது அவ­ருக்­குச் சாத்­தி­ய­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கட்­சி­யின் மூல­த­னமே கதா­நா­யக பிம்­ப­மும், தற்­கா­த­லும்­தான் என்­ப­தால் கட்சி நிர்­வா­கி­கள் அனை­வ­ரும் அதை அனு­ச­ரித்தே பேசு­கி­றார்­கள். பா.ஜ.க.–வில் பயிற்சி பெற்ற நிர்­மல் குமா­ருக்கு தி.மு.க மீது சதிக் குற்­றம் சுமத்­து­வ­தில் உள்ள ஆர்­வம் புரிந்­து­ கொள்­ளக் கூடி­ய­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அன்­றைய முதல்­வர் ஸ்டாலின் மிக­வும் கண்­ணி­ய­மாக கரூர் விபத்­தைக் கையாண்­டார். விஜ­யையோ, த.வெ.க. கட்­சி­யையோ அவர் குற்­றம் சுமத்தி பேச­வே­யில்லை. ஏன் தேர்­தல் பிர­சா­ரம் முழு­வ­தும் அவர் விஜய், த.வெ.க. என்று குறிப்­பிட்­டுப் பேச­வே­யில்லை. அதற்­காக கூட்­டணி கட்­சித் தலை­வர்­களே அவரை விமர்­சித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அ.தி.மு.க, பா.ஜ.க. உள்­ளிட்ட எந்­தக் கட்­சி­யும் கரூர் விபத்­திற்கு விஜய் கார­ணம், த.வெ.க. கார­ணம் என்­றெல்­லாம் விமர்­சித்­துப் பேச­வில்லை. யாருமே அந்த விபத்தை அர­சி­ய­லாக்க விரும்­ப­வில்லை. விஜ­யின் பிரச்­சா­ரப் பய­ணங்­க­ளுக்கு அதீத விளம்­ப­ரம் கொடுத்த ஊட­கத் துறை சார்ந்­தும் கூட “நம் கையி­லும் ரத்­தம் படிந்­தி­ருக்­கி­றது” என்ற பொறுப்­பேற்­பு­தான் வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இப்­படி அனைத்­துத் தரப்­பும் பெருந்­தன்­மை­யாக அணு­கிய விபத்தை, இன்று முதல்­வ­ரா­கப் பதவி வகிக்­கும் விஜ­யும், அவர் கட்­சி­யி­­ன­ரும் சதி என்று கூறி, தி.மு.க.–வை குற்­றம் சாட்ட முயல்­வது தற்­கா­த­லால் சீர­ழி­யும் தார்­மீக நெறி என்­று­தான் கூற வேண்­டும். இந்­தப் போக்கு இளை­ஞர்­கள் மனதை மேலும் பாழாக்­கி­வி­டும். தமி­ழ­கத்­தின் அர­சி­ யல் முதிர்ச்­சிக்கு பின்­ன­டை­ வையே தோற்­று­விக்­கும் என்­ப­தால் அனை­வ­ரும் விஜ­யின் போக்­கினை கண்­டிப்­பது அவ­சி­யம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>