<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 14 2026 16:53:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260715T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="15072026-VLR-05" position.sequence="05" ex-ref="15072026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup766892_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup766554_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup766499_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup767625_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="22">ப</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ல்­லா­வ­ரம் பொது­நி­லைக் கழ­கப் பேரா­சி­ரி­யர் தவத்­திரு நாகை என்.எஸ். வேதா­ச­லம் பிள்ளை என்­னும் மறை­ம­லை­ய­டி­கள் பிறந்தநாள் -(15.7.1876) இன்று. பத்­தொன்­ப­தாம் நூற்­றாண்டு முடிய கால்­நூற் றாண்டு இருக்­கி­ற­போதே தோன்­றி­ய­வர் மறை­ம­லை­ய­டி­கள். அதா­வது அவ­ருக்கு இன்று 150-–ஆவது பிறந்த நாள். ஒன்­றரை நூற்­றாண்டு கடந்­தும் அவரை நாம் ஏன் நினை­வு­கூர வேண்­டும் என்­றால் அவர் மொழித் தூய்­மைக்­கும் தமி­ழர் சமய மேம்­பாட்­டிற்­கும் தமி­ழின எழுச்­சிக்­கும் மிகச் சிறப்­பான வகை­யில் பணி­யாற்­றி­ய­வர். இவ­ரைப் பற்றி நாம் 1990-–91ஆம் ஆண்­டு­க­ளில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முர­சொ­லி­யில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எழு­தி­யி­ருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிரிட்­டி­ஷார் இங்கு ஆட்சி செய்­த­தால் நாம் அடைந்த மிகப் பெரிய நன்மை என்­பது, அவர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘நாம் யார்?’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என நமக்கு உணர்த்­தி­ய­து­தான்! சமஸ்­கி­ரு­தம் மாக்ஸ் முல்­ல­ரால் தூக்கி நிறுத்­திய அதே கால­கட்­டத்­தில் தென்­னிந்­திய மொழி­க­ளின் ஆய்­வு­க­ளைப் பற்­றிய செய்­தி­கள் வெளி­வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வட­நாட்டு மொழி­கள் சமஸ்­கி­ரு­தத்­தி­லி­ருந்து தோன்­றி­யது போலத் தென்­னிந்­திய மொழி­கள் தமி­ழி­லி­ருந்து திரிந்து தோன்­றின. திரா­விட மர­பி­யல் 
உரு­வா­யிற்று. இது முத­லில் அர­சி­யல் நிலைப்­பா­டு­ க­ளைத் தோற்­று­விக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திரா­விட மொழி, சம­யம், பண்­பாடு, நாக­ரி­கம் ஆகி­ய­வை­க­ளைப் பற்­றிய சிந்­த­னை­க­ளையே அறி­ஞர்­க­ளி­டையே தோற்­று­வித்­தது. இதை­யொட்டி ‘திரா­விட 
அர­சி­யல்’  தோன்­றிற்று. 19–ஆம் நூற்­றாண்டு தொடக்­கமே தமி­ழின எழுச்­சிக்­கு­ரிய பூபா­ளத்தை இசைத்­தது. 1802-–இல் திருக்­கு­ற­ளும் நால­டி­யா­ரும் அச்­சே­ரின.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கால்­டு­வெல்­லின் திரா­விட ஒப்­பி­லக்­கண ஆய்­வு­கள் மொழி­யி­யல் அறி­ஞர்களிடையே ஒரு கிளர்ச்­சித் துடிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. கால்­டு­வெல்­லின் ஆய்­வு­கள் வெளி­வந்த சில ஆண்­டு­க­ளுக்­குள்­ளா­கவே கிழக்­கின் புனித நூல்­கள்(Sacred Books of the East)1875 முதல் 51 தொகு­தி­கள்  வெளி­வந்­தன. இவை­யெல்­லாம் மாக்ஸ் முல்­லர் (1823-–1890) தொகுத்­தவை. இதில் 48 தொகு­தி­களை அவர் காலத்­தி­லேயே வெளி­யிட்­டார். அவர் மறை­வுக்­குப் பின் 3 தொகு­தி­கள் வெளி­வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அறி­ஞர் ஜே.எம்.நல்­ல­சா­மிப்­பிள்ளை 
சித்­தாந்த தீபிகை எனும் ஆங்­கில ஏட்டை நடத்­தி­னார். அதில் எழு­தப்­பட்ட தலை­யங்­கத்­தில் 
ஜி.எம்.கப்­பன்(G.M.Cobban)எனும் கிறிஸ்­தவ பாதி­ரி­யார் பழம்­பெ­ரும் திரா­விட இலக்­கி­யத்­தைப் பற்­றிய முக்­கி­யத்­து­ வத்­தைக் குறிப்­பிட்டு தம் நண்­பர் ஒரு­வ­ருக்கு கடி­தம் எழு­தி­னார். அந்த நண்­ப­ரி­டம் திரா­விட மொழி­க­ளின் பழ­மையை மாக்ஸ் முல்­ல­ருக்கு எடுத்­துச் சொல்­லி­யி­ருக்­கி­றார். அதன் விளை­வாக ஆய்வு மாண­வர்­கள் திரா­விட இலக்­கி­யத்­தை­யும் ஆய்­வுக்கு எடுத்­துக் கொள்­ளும்­படி மாக்ஸ் முல்­லர் பரிந்­து­ரைத்து இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே போல ஜே.எம்.நல்­ல­சா­மிப் பிள்­ளை­யின் 
சித்­தாந்த தீபிகை-The Light of Truthஎனும்  ஆங்­கில ஏட்­டை­யும் மாக்ஸ் முல்­ல­ருக்கு அனுப்­பி­னார். அவ்­வி­த­ழைப் பற்­றிய குறிப்பை - ‘மதிப்­பு­மிக்­கது’ என மாக்ஸ் முல்­லர் தெரி­வித்து இருக்­கி­றார்.  இப்­படி மாக்ஸ்முல்­லர் சமஸ்­கி­ரு­தத்­தைப் போலத் திரா­விட மொழி­க­ளை­யும் ஆராய்ந்து வெளி­யிட வேண்­டும் என்­கிற கருத்­து­டைய அறி­ஞர் ஜே.எம்.நல்­ல­சா­மிப் பிள்ளை தாம் நடத்தி வந்த சித்­தாந்த தீபிகை இத­ழின் வழி ஒரு 
அறி­வார்ந்த வட்­டத்தை உரு­வாக்­கி­னார்  அல்­லது இதழ் கார­ண­மாக உரு­வா­யிற்று என்­றும் சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­படி உரு­வான வட்­டத்­தின் பெயர்­க­ளில் முதற்­­பெய­ராக நாகை வேதா­ச­லம் பிள்ளை எனும் பெயர் இடம் பெற்று இருக்­கி­றது. இவ­ருக்­குத்­தான் இன்று 150-ஆவது பிறந்த நாள். இனி,  அவ­ரைப் பற்­றிப் பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மறை­ம­லை­ய­டி­க­ளின் பெயர் தொடக்­கக் காலங்­க­ளில் (1916க்கு முன்பு) நாகை எஸ்.வேதா­ச­லம் பிள்ளை என்­றும், சுவாமி வேதா­ச­லம் என்­றுமே அறி­மு­க­மா­கி­யி­ருந்­தது. தமி­ழைத் தமது 15 ஆம் அக­வை­யில் கற்­கத் தொடங்­கிய இவர் 21 அக­வைக்­குள் அனைத்­தை­யும் கற்­றுத் தேர்ந்­தார். இவர் 15.7.1876 இல் பிறந்­தார். நாகை புத்­த­கக் கடை நாரா­ய­ண­சா­மிப் பிள்­ளை­யி­டம் தமி­ழை­யும், சூளை சோம­சுந்­தர நாய­க­ரி­டம் சைவ சித்­தாந்­தத்­தை­யும் கற்­றார். பேரா­சி­ரி­யர் மனோன் மணி­யம் சுந்­த­ரம் பிள்­ளை­யி­டம் தொடர்பு கொண்டு, அவ­ரது பரிந்­து­ரை­யின் பேரில் திரு­வ­னந்­த­ பு­ரத்­தில் தமி­ழா­சி­ரி­யத் தொழி­லில் அமர்ந்­தார். சில ஆண்­டு­கள் கழித்­துச் சென்­னைக் கிறித்­து­வக் கல்­லூ­ரி­யில் தமி­ழா­சி­ரி­ய­ரா­க­ வும்- துறைத் தலை­வ­ரா­க­வும் பணி­யாற்­றி­னார். பின்­னர், பல்­லா­வரத்­தில் பொது
­நி­லைக் கழ­கம் கண்டு தமி­ழுக்­கும், சைவத்­திற்­கும் தொண்டு செய்து வர­லா­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மறை­ம­லை­ய­டி­கள் நான்­காம் படி­வம் (9ஆம்வகுப்பு) மட்­டுமே பள்­ளி­யில் படித்­த­வர். அவர் தனி­யா­கப் பாடங்­கேட்­டும், தாமாக முயன்று கற்­றும், அவர் தமிழ், ஆங்­கி­லம், வட­மொழி ஆகி­ய­வற்­றில் பெரும்­பு­லமை பெற்­ற­வ­ராக விளங்­கி­னார். அவர் தம் நூல்­க­ளுக்கு அவரே ஆங்­கில முன்­னுரை வரைந்­தார். பா.வே. மாணிக்க நாயக்­கர் போன்ற அறி­ஞர் பெரு­மக்­க­ளின் நூல்­க­ளுக்­கும் இன்­னும் சில­ரின் நூல்­க­ளுக்­கும் அரு­மை­யான ஆங்­கில முன்­னு­ரை­களை எழு­தி­யி­ருக்­கி­றார். அந்­நா­ளில் அவ­ரது ஆங்­கி­லக் கட்­டு­ரை­கள்,‘ஜஸ்­டிஸ்’, ‘இந்து’, ‘மெட்­ராஸ் மெயில்’போன்ற புகழ்­பெற்ற நாளே­டு­க­ளில் வெளி­வந்­துள்­ளன. இவர் திற­னாய்­வுக் கடி­தங்­கள் ஆங்­கி­லத்­தில் எழு­து­கிற ஆற்­றல் பெற்ற தமிழ் அறி­ஞ­ராக விளங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­போ­லவே இவ­ரது தமிழ்க்­கட்­டு­ரை­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘திரா­வி­டன்’, ‘சுதே­ச­மித்­தி­ரன்’, ‘குடி­அ­ரசு’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போன்ற –ஏடு­க­ளி­லும் வெளி­வந்­துள்­ளன. வட­மொழி மூலத்­தி­ னின்று சாகுந்­த­லம் நாட­கத்­தினை மொழி பெயர்த்து வெளி­யிட்­டார். வேதங்­க­ளை­யும் உப­நி­ட­தங்­க­ளை­யும், ஸ்மிரு­தி­க­ளை­யும் வட­மொழி அறிந்­த­தால் கற்று, அதனை ஆய்­வுக்­குப் பயன்­ப­டுத்­தி­னார். 
பின்­னர், தமது கருத்­து­களை  அவ­ரது நூல்­க­ளில் வடித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1916–இல் நீதிக்­கட்சி அர­சி­யல் துறை­யில் பார்ப்­ப­னர் ஆதிக்­கத்தை வேரோ­டும், வேரடி மண்­ணோ­டும் சாய்க்­கத் தொடங்­கி­யது. சமு­தா­யத்­து­றை­யில் சுய­ம­ரி­யாதை இயக்­கம் ‘அவர்­க­ளின்’ மேலாண்­மையை வீழ்த்­தப் ­போ­ராட்­டத்­தைத் தொடங்­கி­யது. அதே­போல, மொழித் துறை­யில் அவர்­க­ளது ஆதிக்­கத்­தை-­­ச­மஸ்­கி­ரு­தத்­தின் ஆதிக்­கத்தை கலப்­பைப் போக்­கத் தனித்­த­மிழ் இயக்­கத்தை அடி­க­ளார் தொடங்­கி­னார். மறை­ ம­லை­ய­டி­க­ளுக்­குத் தமி­ழின் இயற்கை அமைப்­பும் -­­அ­தன் இயல்­பும் வள­மும் மர­பும் துணை நின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கால்­டு­வெல் பாதி­ரி­யா­ரின்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆய்­வு­க­ளும் வழி­காட்­டின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">20ஆம் நூற்­றாண்­டின் தொடக்­கத்­தில் சென்னை இரா­ச­தா­னி­யில் புதிய அணு­கு­மு­றை­யோடு கூடிய ஓர் அர­சி­யல் உரு­வா­யிற்று. அச்­ச­ம­யத்­தில் சங்க இலக்­கி­யங்­க­ளும் பதிப்­பிக்­கப்­பட்டு ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. மொஹஞ்­ச­தா­ரோ-­­ – ஹ­ரப்பா அகழ்­வா­ராய்ச்­சி­கள் வெளி­யி­டப்­பட்­டுத் தொன்­மை­யான ‘திரா­விட’ நாக­ரி­கத்­தின் எழுச்­சி­மிக்க அந்­நாள்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன. அய்­ரோப்­பிய மத குரு­மார்­க­ளின் ஆய்­வு­கள் தமி­ழுக்கு முக்­கிய இடம் இருந்­ததை நாம் தெரிந்­து­கொள்ள உத­வின. இத்­து­றை­யில் கால்­டு­வெல் பாதி­ரி­யா­ரின் பணி ஒப்­பற்­ற­தாக விளங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமி­ழின் தொன்மை பயன்­ப­டுத்­திக் கொள்­ளப்­பட்டு அவை சமஸ்­கி­ரு­தத்­திற்கு ஏற்­றப்­பட்­டன என அவ­ரது ஆய்­வு­கள் வெளிப்­ப­டுத்­தின. வட­மொ­ழியின் துணை­யில்­லா­மல் தமிழ் ‘தனித்து’ இயங்க முடி­யும் என்­ப­தைத் தமது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திரா­விட மொழி­க­ளின் ஒப்­பி­லக்­க­ணம் எனும் நூலில் கால்­டு­வெல் பாதி­ரி­யார் வெளி­யிட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கால்­டு­வெல் பாதி­ரி­யா­ரின் ஆய்­வுக்கு முன்பே தமிழ் அறி­ஞர்­கள் இக்­கூற்றை அறிந்­தி­ருந்­தா­லும், அவர்­கள் வெளிப்­ப­டுத்த வாய்ப்­பும் கரு­வி­யும் இன்­றித் தவித்­த­னர். இப்­படி வளர்ச்­சி­யின் போக்கு செல்­வ­தை­யும், மொழி­யின் இயற்­கைச் செழிப்­பை­யும் உணர்ந்த மறை­ம­லை­ய­டி­க­ளார் தமது ஆய்­வு­களை வெளி­யி­டத் தொடங்­கி­னார். இவை மக்­க­ளி­டம் சென்று அடை­யா­மல் படித்­த­வர்­க­ளி­டையே மட்­டும், கொண்­டும் கொள்­ளா­ம­லும் உலா வந்­தன. இவ­ரது ஆய்­வின் முடி­வு­ க­ளைச் சைவர்­களே கூட எதிர்த்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திரு.வி.க. இவ­ரது ஆய்வை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இதனை தமது வாழ்க்­கைக் குறிப்­பில் அவர் குறித்­தி­ருக்­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனி­னும், மறை­ம­லை­ய­டி­க­ளால் தமி­ழ­கத்­தில் ஏற்­பட்ட மாறு­தல்­க­ளைக் குறிக்­கும்­போது அவர் பின்­வ­ரு­மாறு எழு­து­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“தென்­னாடு பன்­னெ­டுங்­கா­லம் தன்னை மறந்து உறங்­கி­யது. அவ்­வு­றக்­கம் போக்­கிய பெருமை மறை­
ம­லை­ய­டி­க­ளுக்கு உண்டு. அவர்­தம் தமிழ்ப்­பு­ல­மை­யும், வட­மொ­ழிப்­பு­ல­மை­யும், ஆங்­கி­லப் புல­மை­யும், ஆராய்ச்­சி­யும், பேச்­சும், எழுத்­தும், தொண்­டும், தென்­னாட்டை விழிக்­கச் செய்­தன. தென்­னாடு அடி­க­ளால் விழிப்­புற்­றது என்று மண்­ணும்  முழங்­கும்; மர­மும் முழங்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அடி­கள் பேச்சு, பல பேச்­சா­ள­ரைப் படைத்­தது. எழுத்து பல எழுத்­தா­ளரை ஈன்­றது. நூல், பல நூலா­சி­ரி­யன்­மாரை அளித்­தது. அடி­களே தென்­னாடு, தென்­னாடே அடி­கள் என்று கூறு­வது மிகை­யா­காது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு.வி.க.வின் இக்­கூற்று, எத்­த­கைய 
பரி­மா­ணத்தை அடி­கள் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார் என்­பதை உணர்த்­தும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மறை­ம­லை­ய­டி­க­ளின் ஆய்­வில் தன்­னு­ரி­மை­யும், தன்­மா­ன­மும் தழைத்­தோங்­கின. நீதிக்­கட்சி கால்­கோள் கொண்ட ஆண்­டில்­தான் (1916) தம் மகள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நீலாம்­பிகை அம்­மை­யா­ரால்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உணர்த்­தப்­பட்­டுத் தனித்­த­மி­ழில் பேச­வும் எழு­த­வு­மான இயக்­கத்தை மறை­
ம­லை­ய­டி­கள் தொடங்­கி­னார். இவர் நடத்தி வந்த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘ஞான­சா­க­ரம்’ ‘அறி­வுக்­க­ட­லாக’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாறிற்று .  மறை
­ம­லை­ய­டி­கள் சிறு தெய்வ வணக்­கங்­களை ஏற்­றுக் கொள்­ளா­த­வர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முழு­முதற்­க­ட­வு­ளைப் போற்­று­ப­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ­ரி­டம் தனிப்­பா­டங்­கேட்­டுப் பெரும்­பு­ல­வர் ஆன­வர்­கள் பலர் உண்டு. இவ­ரி­டம் பாடம் கேட்டு இவ­ருக்கு எதி­ரான ஆய்­வு­களை வெளி­யிட்­ட­வர்­க­ளும் உண்டு. மறை­ம­லை­ய­டி­க­ளா­ரின் படைப்­பு­க­ளில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சாதி­வேற்­று­மை­யும் போலிச் சைவ­ரும், வேளா­ளர் நாக­ரி­கம், பட்­டி­னப்­பாலை ஆராய்ச்­சி­யுரை, முல்­லைப்­பாட்டு ஆராய்ச்­சி­யுரை, திருக்­கு­றள் ஆராய்ச்சி, கட்­டு­ரைக்­கோவை, கட்­டு­ரைக் கொத்து, சிந்­த­னைக்­கட்­டு­ரை­கள், கோகி­லாம்­பாள் கடி­தங்­கள், தமி­ழர் மதம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆகி­யவை சிந்­த­னைக்கு விருந்து படைப்­ப­வை­யா­கத் திக­ழு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மறை­ம­லை­ய­டி­க­ளின் ஆய்வு என்­பது, மிக ஆழ­மான வர­லாற்று வேர்­களை உடை­யது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கால்­டு­வெல் பாதி­ரி­யார் தமது ஒப்­பி­லக்­க­ணத்­தில் தமி­ழுக்­கும் சமஸ்­கி­ரு­தத்­திற்­கும் இரண்­டா­யி­ரம் ஆண்­டு­கள் இடை­ய­றாத போர்நடந்து வந்­துள்­ளது என்று குறிப்­பி­டு­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த இடை­ய­றாத போரின் இறுதி வடி­வம் தான் மறை­ம­லை­ய­டி­கள்! அந்த வடி­வத்­தின் தொடர்ச்­சி­யா­கத் திரா­வி­டர் இயக்­கம் திக­ழு­கி­றது. அவ­ரது சில ஆய்­வு­க­ளைப் படித்­தால் அந்த உண்மை நமக்கு விளங்­கக்­கூ­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மறை­ம­லை­ய­டி­க­ளார் தமது ஆய்­வில் ஒழுக்­கத்­தைக் கவ­னிக்க முடி­யா­த­தும், வேடத்தை மட்­டும் கொண்­ட­தும், அறி­வுக்­குப் பொருந்­தாத­து­மான மதம் எது­வா­னா­லும், அந்த மதத்­தின் மீது நமக்கு ஏற்­ப­டும் வெறுப்­பு­ணர்ச்சி போலவே அவ­ருக்­கும் ஏற்­பட்டு 
அத­னைச் ‘சாதி வேற்­று­மை­யும் போலிச் சைவ­மும்’ என்ற நூலில் வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார். இவ­ரது ‘வேளா­ளர் நாக­ரி­கம்’ எனும் நூலில் ஆய்­வு­பூர்­வ­மா­கப் பல கருத்­து­களை வெளி­யிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­நூ­லில் அவர் அன்­பும், அரு­ளும் உடை­யாரே உயர்ந்த சாதி­யார் என்­றும், தமி­ழர்­கள் உப­நி­ட­தம், சாங்­கி­யம் போன்ற நூல்­களை வகுத்­த­னர் என்­றும் ஓம் எனும் பிர­ண­வம் தமி­ழுக்கே உரிமை உடை­ய­தென்­றும் தமி­ழர்­கள் உப­நி­ட­தங்­கள் இயற்­றி­ய­மைக்­குச் சான்று காட்­டி­யும், பழைய வேதங்­கள் என்­பன தமிழ்­ம­றை­களே என்­றும் வெளிப்­ப­டுத்­தி­னார். இவ­ரது இக் கருத்­து­கள் புரட்­சி­க­வி­ஞர் பார­தி­தா­சன் இயற்­றிய பின்­வரும் பாட­லில் எதி­ரொ­லிப்­ப­தைக் காண­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கும­ரி­நாட்­டின் தமிழ்­நான் மறை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அமிழ்ந்­தன! வட­வர் மறை­கள் நிமிர்ந்­தன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அமிழ்­து­நேர் தத்­து­வம் ஆன எண்­ணூல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அமிழ்ந்­தது! வட­வ­ரின் அறி­வுக் கொவ்­வாப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பொய்ம்மை மெய்ம்மை ஆகிப் பொலிந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அகத்­தி­யன் தொல்­காப்­பி­யன் முத­லா­னோர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தகு­தி­றம் தமி­ழிற் பெறு­தி­றம் அரு­ளிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">எண்­ண­ருங் கண்­ணி­கர் தமிழ்­பா­டும் ஏடு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மறைந்­தன! வட­வர் தீயொ­ழுக்க நூல்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நிறைந்­தன! இந்த நெடும்­பு­கழ் நாட்­டில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“தீது செய் யற்க செய்­யில் வருந்தி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஏதும் இனி­யும் செய்­யற்க” வெணும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">விழு­மிய தமி­ழர் மேன்மை நெஞ்­செ­லாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கழு­வாய் எனு­மொரு வழுவே நிறைந்­தது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘நல்­கு­தல் வேள்வி’ என்­பது நலி­யக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கொல்­வது வேள்வி எனும் நிலை குவிந்­ததே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஒரு­வ­னுக்­கொ­ருத்தி எனும் ‘அகம்’ ஒழிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஐவ­ருக்­கொ­ருத்தி எனும் அயல் நாட்­டுக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">குச்­சுக் காரிக்­குக் கோயி­லும் கட்டி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மெச்­சிக் கும்­பி­டும் நிலை­யும் மேவிற்று!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மக்­கள் நிகர்­எ­னும் மாத்­த­மிழ் நாட்­டில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மக்­க­ளில் வேற்­றுமை வாய்க்­க­வும் ஆனதே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">உயர்ந்­த­வன் நான் என் றுரைத்­தான் பார்ப்­பான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அயர்ந்­த­வன் நான் என் றுரைத்­தான் தமி­ழன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இப்­படி ஒரு நிலை காணு­கின் றோமே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சிறந்த வாழ்வு கொள் செந்­த­மிழ் நாடிவ்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">விழி­நிலை நோக்கி இறங்­குந் தோறும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பழி­நீக் கிட­எ­வன் பிறந்­தான் இது­வரை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இது­வரை எந்­தத் தமி­ழன் இதற்­கெ­லாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பரிந்து போரா­டி­னான் எண்­ணிப் பார்ப்­பீர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமி­ழன் மானம் தவி­டு­பொடி ஆகை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வாழாது வாழ்ந்­த­வன் வடுச்­சு­மந்து சாகை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆ! என்று துள்ளி மார்பு தட்­டிச்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சாவொன்று வாழ்­வொன்று பார்ப்­பேன் என்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பார்ப்­ப­னக் கோட்­டையை நோக்­கிப் பாயும் இவ்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வருஞ்­செ­யல் செய்­வார் அல்­லால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பெரி­யார் எவர்? நம் பெரி­யார் வாழ்­கவே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மறை­ம­லை­ய­டி­கள் ‘கோகி­லம்­பாள் கடி­தங்­கள்’ எனும் புதி­னத்தை 12.05.1911–இல் எழு­தத் தொடங்­கி­னார். இதில் பார்ப்­பன கைம்­பெண் பார்ப்­ப­ன­ரல்­லாத சூத்­தி­ர­னைக் காத­லிப்­ப­தாக அமைந்­தி­ருக்­கும். இக்­­கதை­யில் வரு­கிற கோகி­லாம்­பாளை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பன்­மொ­ழிப்­பு­ல­வர் கா.அப்­பாத்­து­ரை­யார்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடை­பெற்ற கல்கி நினை­வுச் சொற்­பொ­ழி­வில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“பார்ப்­பன ஈவெரா”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்று குறிப்­பிட்­டார். நீதிக்­கட்­சி­யும், சுய­ம­ரி­யாதை இயக்­க­மும் தோற்­ற­ம­ளிப்­ப­தற்குமுன்பே, இக் கருத்­தைக் கொண்­ட­வர் மறை­ம­லை­
ய­டி­க­ளார் என்­பதை நம்­மால் அறிந்து கொள்ள முடி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­நூ­லின் இரண்­டாம் பதிப்­பின் முக­வு­ரை­யில்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“ஒரு குரங்கு கட­லைத் தாண்­டிற்­றென்­றா­லும் அஃது ஒரு மலை­யைப் பெயர்த்தெ டுத்­துக் கொணர்ந்­த­தென்­றா­லும், ஒரு­வன் பத்­துத் தலை­க­ளும், இரு­பது கை
க­ளும் உடை­ய­னா­யி­ருந்­தா­னென்­ற­லும், ஒருத்­தியை வேறொ­ரு­வன் சிறை­யாக எடுத்­துச் சென்­றக்­கால் அவ­ளி­ருந்த நிலத்­தைப் பெயர்த்­தெ­டுத்­துச் சென்­றா­னென்­ற­ாலும், ஒரு­வன் தன் கையி­லி­ருந்த வட்­டத்­தைச் சுழற்­றி­யெ­றிந்து பக­ல­வனை மறைத்­தான் என்­றா­லும், இன்­னும் இவை­போல்­வன பிற­வு­மெல்­லாம் உலக இயற்­கைக்கு முழு மாறான கட்­டுக் கதை­
க­ளைக் கூறும் நூல்­க­ளைப் பகுத்­த­றி­வு­டை­யார் 
கற்­பா­ரா­யின், அவர்க்கு அவை இன்­பம் பய­வா­வாய். வெறுப்­பி­னையே விளை­விக்­கும்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என எழு­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ­ரது கருத்­துக்­கள்  உடன்­பா­டா­ன­வையே ஆகும். ‘கோகி­லாம்­பாள் கடி­தங்­கள்’ புதி­னத்­தில், பார்ப்­ப­னப் பெண் சூத்­தி­ரப் பைய­னைக் காத­லிப்­ப­தாக இவர் ­ப­டைத்­தற்­குப் பிறகு, டாக்­டர் டி.எம்.நாயர் ஆற்­றிய ஸ்பர்­டாங் பேரு­ரை­யில் உள்ள கருத்­தைப் பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“...நீங்­க­ளெல்­லாம் வெகு­வா­கப் புக­ழும் திரு­வள்­ளு­வர், அவ்வை, கபி­லர் ஆகி­யோ­ரின் வம்­சா­வளி என்­ன­வென்று எழுதி வைத்திருக்­கி­றான் தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பார்ப்­பா­னொ­ரு­வ­னுக்­குப் புலைச்சி வயிற்­றில் பிறந்­த­வர் வள்­ளு­வ­ரென்று! வியா­சர் யார்? பார்ப்­ப­னப் பரா­ச­ர­னுக்­கும் சத்­தி­ய­வதி என்­னும் மீன­வ­ளுக் ­கும் கள்­ளக்­கா­தல் மூலம் பிறந்­த­தாக மகா­பா­ர­தத்­தின் ஆதி­பர்­வம் கூறு­கி­றது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டியே பலப்­பல கதை­கள், பார்ப்­பா­னுக்­கும், 
சூத்­தி­ரச்­சிக்­கும் பிறந்­த­வன்­க­ளெல்­லாம் காலா­கா­லத்­தில் பெரிய மனு­ஷன்­க­ளாகயிருப்­ப­தா­கக் கதை­யைக் கட்­டு­கி­றானே ஒழிய,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“ஒரு சூத்­தி­ர­னுக்­கும், ஒரு பாப்­பாத்­திக்­கும் பிறந்த ஒரு பெரிய மனு­ஷன் கதை மருந்­துக்­கா­வது உண்டா இந்து புரா­ணங்­க­ளில்!”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்ற டி.எம். நாயர் கேட்­ப­தற்கு முன்பே இக் கருத்தை மறை­ம­லை­ய­டி­கள் கதை­யில் எழு­திக் காட்­டி­னார். அதுவே அந்­நாள்­க­ளில் மிகப் பெரிய செய்­தி­யாக இருந்­தது. இது மட்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இக்­கட்­டு­ரை­யைப் படிக்­கின்ற நண்­பர்­கள், ‘முர­சொலி’ ஏட்­டின் முகப்­பில் நாளும் திரு­வள்­ளு­வர் ஆண்டு அச்­சி­டப்­ப­டு­வ­தைப் பார்த்­தி­ருப்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத்­தி­ரு­வள்­ளு­வர் ஆண்டு உரு­வா­கக் கார­ண­மா­ன­வர்­க­ளுள் மறை­ம­லை­ய­டி­கள் ஒரு­வர். 1921–ஆம் ஆண்டு சென்­னைப் பச்­சை­யப்­பன் கல்­லூ­ரி­யில், மறை­ம­லை­ய­டி­க­ளார் தலை­மை­யில் தமிழ்ப் பேர­றி­ஞர்­க­ளும், வர­லாற்­றுப் பேரா­சி­ரி­யர்­க­ளும் கூடித் திரு­வள்­ளு­வர் ஆண்டை முடிவு செய்­த­னர். அது முதற்­கொண்டு திரு­வள்­ளு­வர் ஆண்டு நடை­மு­றைப் படுத்­தப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­வள்­ளு­வர் ஆண்டு முடிவு செய்­யப்­பட்ட ஆவ­ணத்­தில் மறை­ம­லை­ய­டி­க­ளார், திரு.வி.க., கா.சு.பிள்ளை, நாவ­லர் சோம­சுந்­தர பார­தி­யார், நாவ­லர் ந.மு.வேங்­க­ட­சாமி நாட்­டார் போன்ற பெரு­மக்­கள் கையெ­ழுத்­திட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத்­தி­ரு­வள்­ளு­வர் ஆண்­டைத் தமிழ்­நாடு (தி.மு.கழ­கம்) அரசு 1971–ஆம் ஆண்டு நடை­மு­றைப்­ப­டுத்த முன்­வந்­தது. அது முதற்­கொண்டு அரசு நாள் குறிப்­பு­க­ளும், நாள்­காட்­டி­க­ளும், அர­சி­த­ழும் திரு­வள்­ளு­வர் ஆண்­டைத் தாங்கி வர­லா­யின. இந்­­நிலை­க­ளுக்­குப் பிற­கும், திரு­வள்­ளு­வர் ஆண்­டினை ஏற்­றுக்­கொள்­ளாத அறி­ஞர்(?) பெரு­மக்­கள் தமி­ழ­கத்­தில் இருக்­கவே செய்­கின்­ற­னர். சில மாதங்­க­ளுக்கு முன்பு, மயிலை சீனி­வாச சாஸ்­திரி ஹாலில் நடை­பெற்ற வையா­பு­ரிப் பிள்­ளை­யின் தொகுப்பு நூல் வெளி­யீட்டு விழா­வில் கலந்து கொண்ட தின­மணி ஆசி­ரி­யர் அய்­ரா­வ­தம் மகா­தே­வன் பேசி­யதை நாமும் செவி­ம­டுத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“தின­மணி ஏட்­டில் நிறைய மாறு­தல்­க­ளைச் செய்­கி­றீர்­கள். போற்­றக் கூடி­ய­தாய் இருக்­கி­றது. திரு­வள்­ளு­ வர் ஆண்­டை­யும் போட்­டால் சிறப்­பாக இருக்­கும்” என்­ப­தா­கக் கடி­தங்­கள் வரு­வ­தா­க­வும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­வள்­ளு­வர் ஆண்­டில் அவ­ருக்கு உடன்­பாடு இல்­லா­த­தால் அத­னைச் செயல்­ப­டுத்­த­வில்லை என்­றும் அக் கூட்­டத்­தில் அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இதே ஐரா­வ­தம் மகா­தே­வன் பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு திரு­வள்­ளு­வர் ஆண்டை ஏற்­றுக் கொண்­டார். அப்­போது அவர் தின­ம­ணி­யின் ஆசி­ரி­ய­ராக இருக்­க­வில்லை. சிறந்த கல்­வெட்டு ஆராய்ச்­சி­யா­ள­ராக அவர் உயர்ந்து இருந்­தார். சிந்து சம­வெளி எழுத்­து­க­ளைப் படிக்­கும் ஆய்­வில் ஈடு­பட்டு இருந்­தார். சில­வற்­றைப் படித்து அச்­சொற்­க­ளை­யும் இக்­கால எழுத்­து­க­ளில் வெளி­யிட்­டார். அது குறித்து பெரு­நூலை எழுதி ஆவ­ணப்­ப­டுத்­தி­ய­தோடு, சிந்து சம­வெளி ஆராய்ச்­சி­யில் விரல்­விட்டு எண்­ணத் தகுந்­த­வர்­க­ளில் ஒரு­வ­ராக அவர் உயர்ந்­தார் என்­பது அவ­ரைப் பற்­றிய சிறப்­புக்­கு­ரிய புள்­ளி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மறை­ம­லை­ய­டி­க­ளின் பால் நாம் பற்­றுக் கொள்­வ­தற்கு இன்­னொரு முக்­கி­ய­மான கார­ணம், 1938–இல் அவர் இந்­தியை எதிர்ப்­ப­தற்கு வெளிப்­ப­டை­யாக ஆத­ரவு தந்து அவ்­வி­யக்­கத்­தில் பங்கு கொண்­டது ஆகும். அது மட்­டும் அல்­லா­மல் ‘Why Hindi Should not be made the Common Language of India’எனும் 
ஆய்­வுக் கட்­டு­ரை­யை­யும் எழுதி வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அக்­கட்­டு­ரை­யில் இந்தி மொழி­யின் தோற்­றம், அம்­மொ­ழி­யின் ஆதி இலக்­கி­யம், அதன் வளம், அம்­மொ­ழி ­யின் இய­லா­நிலை ஆகி­ய­வற்­றைக் குறித்து அவர் விளக்­க­மாக  எழு­தி­னார். அவ­ரு­டைய ஆய்வு பெரி­ய­தொரு வர­வேற்­பைப் பெற்­றது. முதல் இந்தி எதிர்ப்­புப் போருக்கு மிகுந்த எழுச்­சியை ஊட்­டி­யது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>