<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,64,957,882" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 15 2026 14:37:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260716T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="16072026-CBE-03" position.sequence="03" ex-ref="16072026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="83">அற­நி­லை­யத்­து­றை­யின் அவ­சி­யம்! அயோத்தி ஊழலே சாட்­சி­யம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup766234_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘தே</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டற்­க­ரிய ஒப்­பு­யர்­வற்ற நம­த­ரு­மைத் தலை­வர்‘ எனத் தந்தை பெரி­யா­ரால் போற்­றப்­பட்­ட­வர் நீதிக்­கட்­சித் தலை­வர்­களில் ஒரு­வ­ரும் சென்னை மாகாண முதல்-­அ­மைச்­ச­ராக இருந்­த­வ­ரு­மான 
பான­கல் அர­சர் எனும் இரா­ம­ராய நிங்­கர். அவ­ரது பிறந்­த­நா­ளான ஜூலை 9 அன்று கழ­கத் தலை­வர் அவர்­கள் இந்த வரி­ க­ளைக் குறிப்­பிட்டு, பான­கல் அர­ச­ரின் ஆட்­சிக்­கால சாத­னை­களை நினை­வுப்­ப­டுத்தி அறிக்கை பதி­விட்­டி­ருந்­தார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பான­கல் அர­சர் தலை­மை­யி­லான நீதிக் கட்சி ஆட்­சி­யில் வகுப்­பு­வாரி இட­ஒ­துக்­கீடு, பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை, சட்­ட­மன்­றத்­தில் பெண்­க­ளுக்­கா­னப் பிர­தி­நி­தித்­து­வம் ஆகி­யவை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­து­டன்,இந்து சமய அற­நி­லை­யப் பாது­காப்­புச் சட்­டம்நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மன்­னர்­க­ளால் 
மக்­களின் வரிப்­ப­ணத்­தில் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கா­னத் திருக்­கோ­யில் க­ளை­யும் அதற்கு சொந்­த­மான உடை­மை­களை­யும் ஒரு சில பிரி­வி­னரே காலம் கால­மாக அனு­ப­வித்து வந்த நிலையை மாற்றி, அவற்றை உரிய முறை­யில் கணக்­கெ­டுத்­துப் பரா­ம­ரிப்­பதற்­காக நீதிக்­கட்சி அர­சால் உரு­வாக்­கப்­பட்டு, நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது அற­நி­லை­யப் பாது­காப்­புச் சட்­டம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பான­கல் அர­சர் காலத்­தில் நீதிக்­கட்சி ஆட்­சி­யில்  கொண்டு வரப்­பட்ட இந்து சமய அற­நி­லை­யப் பாது­காப்பு சட்­டம், பின்­னர் சுதந்­திர இந்­தி­யா­வில் காங்­கி­ரஸ் ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர்­கள் ஓமந்­தூர் இரா­ம­சா­மி­யார், பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் ஆட்­சிக்­கா­லங்­க­ளில் புதிய விதி­க­ளும் இணைக்­கப்­பட்டு, இந்து சமய அற­நி­லை­யத் துறை உரு­வா­னது. முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆட்­சிக்­கா­லத்­தில் கோயில் அறங்­கா­வ­லர் குழுக்­க­ளில் பட்­டி­யல் இனத்­த­வர்­க­ளும் பெண்­க­ளும் இடம்­பெ­றும் நிலை உரு­வா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பிறப்­பால் உயர்ந்த சாதி­யா­க­வும், பணத்­தால் உயர்ந்த வர்க்­க­மா­க­வும் கரு­திக் கொண்­டி­ருந்­த­வர்­க­ளின் பிடி­யில் இருந்த திருக்­கோ­யில் சொத்­து­கள், உரிய முறை­யில் அர­சாங்­கத்­தின் பதி­வே­டு­க­ளில் இடம்­பெற்று, அவற்­றின் கணக்கு வழக்­கு­கள் உள்­ளிட்ட நிர்­வா­கத்­தினை இந்து சமய அற­நி­லை­யத்­துறை கவ­னித்து வரு­கி­றது. தமிழ்­நாட்­டில் 100 ஆண்­டு­கா­ல­மாக நடை­மு­றை­யில் உள்ள அற­நி­லை­யப் பாது­காப்­பினை மத­வாத அர­சி­யல்­வா­தி­க­ளும் அவர்­க­ளின் பரி­வா­ரங்­க­ளும் விரும்­பு­வ­தில்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தங்­க­ளின் அதி­கா­ரம் பறி­போ­ன­தாக அவர்­கள் நினைப்­ப­தால், அற­நிலை­யத்­து­றை­யி­ட­மி­ருந்து கோயில்­களை எடுத்­து­விட்டு, அத­னைத் தாங்­கள் விரும்­பும் அமைப்­பு­க­ளி­டமோ தனி­யா­ரி­டமோ வழங்க வேண்­டும் என்­ப­து­தான் அவர்­களின் தொடர்ச்­சி­யான நிலைப்­பா­டா­க­வும் தேர்­தல் அறிக்­கை­யின் வாக்­கு­று­தி­யா­க­வும் உள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டைப் பொறுத்­த­வரை காங்­கி­ரஸ், தி.மு.க., அ.தி.மு.க. என ஆட்­சி­கள் மாறி­ய­போ­தும் இந்து சமய அற­நி­லை­யத்­து­றை­யின் கீழ்­தான் திருக்­கோ­யில்­க­ளின் நிர்­வா­கம் இருந்து வரு­கி­றது. கோயில் திருப்­ப­ணி­கள், குட­மு­ழுக்கு, திரு­வி­ழாக்­கள் ஆகி­ய­வற்றை அற­நி­லை­யத்­துறை மேற்­கொள்­கி­றது. அன்­ன­தா­னக் கூடம், திரு­மண மண்­ட­பம், கல்­லூ­ரி­கள், கருணை இல்­லங்­கள் ஆகி­ய­வை­யும் அற­நி­லை­யத்­து­றை­யால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை­ய­னைத்­தும் நிர்­வாக நட­வ­டிக்­கை­கள்­தான். கோயி­லின் ஆகம முறை­கள், வழி­பாட்­டுத் தன்­மை­கள், உற்­ச­வத்­திற்கு உகந்த நாட்­கள் போன்ற ஆன்­மிக நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வற்­றில் அற­நி­லை­யத்­துறை தலை­யி­டு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">2021-–26 திரா­விட மாடல் ஆட்­சி­யில் ஏறத்­தாழ 4000 திருக்­கோ­யில்­க­ளுக்கு குட­முழுக்கு நடை­பெற்­ற­து­டன், பழ­மை­யான கோயில்­க­ளின் புன­ர­மைப்­புக்­கா­னத் திருப்­ப­ணி­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்­டன.  பல வகை ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து 8,107 ஏக்­கர் கோயில் நிலங்­களை அற­நி­லை­யத்­துறை மீட்­டது. இதன் மதிப்பு ரூ.8,435 கோடி­யா­கும். கோயில் நில ஆக்­கி­ர­மிப்பு மோச­டி­யில் ஆர்.எஸ்.எஸ்–-பா.ஜ.க ஆத­ர­வா­ளர்­கள் பலர் ஈடு­பட்­டி­ருந்­த­தும் அம்­ப­ல­மா­னது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திருக்­கோ­யில்­களை அற­நி­லை­யத்­து­றை­யி­ட­மி­ருந்து எடுத்து தனிப்­பட்ட அமைப்­பு­களி­டம் வழங்­க­வேண்­டும் என்­றும், அர­சாங்­கத்­திற்­குப் பதில் இந்து மதத்­தைச் சேர்ந்தஅமைப்­பு­கள்­தான் கோயில்­களை நிர்­வ­கிக்க வேண்­டும் என்­றும் மத­வாத அர­சி­யல் அடிப்­ப­டை­யில் தொடர்ந்து குரல் எழுப்­பு­கி­ற­வர்­கள் எதற்­காக அப்­ப­டிச் சொல்­கி­றார்­கள் என்­ப­தற்­கான உண்­மை­யான கார­ணத்தை அயோத்தி இரா­மர் கோயில் நிதி வசூல் விவ­கா­ர­மும், காணிக்­கைத் திருட்­டும் அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அயோத்­தி­யில் பாபர் மசூதி இடிக்­கப்­பட்ட இடத்­தில், இரா­மர் கோயில் கட்­டு­வ­தற்கு உச்­ச­நீ­தி­மன்­றம் அனு­ம­தி­ய­ளித்த நிலை­யில், கோயில் கட்­டும் பணி­க­ளுக்­காக ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேஷ்ஸ்­தரா டிரஸ்ட் எனும் அறக்­கட்­டளை உரு­வாக்­கப்­பட்­டது. இந்த அறக்­கட்­ட­ளை­யைத் தொடங்கிவைத்­த­வர் பிர­த­மர் நரேந்­திர மோடி. இந்த அறக்­கட்­ட­ளை­யின் பொதுச் செய­லா­ள­ராக சம்­பட் ராய் என்­ப­வர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். அறக்­கட்­ட­ளை­யில் பொறுப்­பில் இருப்­ப­வர்­கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்­பு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். உத்­த­ர­பி­ர­தேச மாநில பா.ஜ.க. முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத்­தும் இரா­மர் கோயில் கட்­டும் பணி­யில் தொடர்­பு­டை­ய­வர். அயோத்­தி­யில் இரா­மர் கோயில் கட்­டும் பணி­யைத் தொடங்கி வைத்­த­வர் பிர­த­மர் மோடி. கோயில் கட்டி முடிக்­கப்­பட்­ட ­தும் அத­னைத் திறந்து வைக்­கும் விழா­விலும் அவரே முதன்­மை­யாக இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இந்து மதத்­தின் பாது­கா­வ­லர்­கள் நாங்­கள்­தான் என்று சொல்­லிக் கொண்டு, ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்போடும் அமைப்­பி­னர், அயோத்­தி­யில் கோயில் நிதியை சுரண்டி, இரா­ம­ருக்கு நாமம் போட்­டி­ருப்­பது வெட்ட வெளிச்­ச­மா­கி­யுள்­ளது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாமம் அல்ல, 200 கோடி ரூபாய் மதிப்­புள்ள மோசடி நாமத்­தைப் போட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரா­மர் கோயில் கட்­டு­வ­தற்­காக உல­கெங்­கும் உள்ள இந்­துக்­க­ளி­டம் நிதி வசூல் செய்­யப்­பட்­டது. இந்­தி­யா­வில் உள்ள பக்­தர்­க­ளும் வாரி வழங்­கி­னார்­கள். ஏழை­கள் கூட தங்­க­ளின் உண்­மை­யான பக்­தி­யின் கார­ண­மாக, அயோத்தி இரா­மர் கோயி­லுக்கு தங்­க­ளி­ட­மி­ருந்த தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றைக் காணிக்­கை­யாக வழங்­கி­னர். பணக்­கா­ரர்­கள் இலட்­சக்­கணக்­கில் பண­மும், வைரம் உள்­ளிட்ட நவ­ரத்­தி­னங்­க­ளை­யும் வழங்­கி­னர். இந்த காணிக்­கை­கள் களவு போயி­ருப்­ப­தாக புகார் எழுந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரா­மர் கோயிலை நிர்­வ­கிக்­கும் ஸ்ரீராம ஜென்­ம­பூமி தீர்த்த சேஷ்ஸ்­தரா அறக்­கட்­ட­ளை­யின் நிர்­வாக ஊழல்­கள் தொடர்­பாக விசா­ரணை நடத்த வேண்­டும் என உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் உள்ள இராம பக்­தர்­க­ளும், அர­சி­யல் கட்­சி­க­ளும் குரல் எழுப்­பின. ஒன்­றிய உள்­து­றை­யின் முன்­னாள் செய­லா­ளர் ஒரு­வர், இரா­மர் கோயி­லுக்கு காணிக்­கை­யாக அளித்த தன்­னு­டைய தங்க இரா­மா­ய­ணப் புத்­த­கம் பற்­றி­யும் புகார் தெரி­வித்­தி­ருந்­தார். இதன் கார­ண­மாக உத்­த­ர­பி­ர­ தே­சத்தை ஆளும் பா.ஜ.க.வின் முதல்­வர் ஆதித்­ய­நாத் ஒரு சிறப்பு புல­னாய்­வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எஸ்.ஐ.டி. விசா­ர­ணை­யில் காணிக்­கைத் திருட்டு நடந்­தி­ருப்­ப­தும், நில மோச­டி­க­ளும் கண்­ட­றி­யப்­பட்­டன. 180 நாட்­க­ளுக்­குப் பாது­காக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டிய சி.சி.டி.வி. கேமரா பதி­வு­க­ளில் 45 நாட்­க­ளுக்­கா­னப் 
பதி­வு­கள் மட்­டுமே இருந்­தன. மற்­றவை அழிக்­கப்­பட்­டு­விட்­டன. இந்­தப் பதி­வு­களை ஆராய்ந்­த­தில் 40 நாட்­க­ளில் 70 திருட்டுவேலை­கள் நடந்­தி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது.ஸ்ரீராம ஜென்­ம­பூமி டிரஸ்ட் நிர்­வா­கம்  போலிரசீ­து­கள் போட்­டி­ருப்­ப­தும் கண்­ட­றி­யப்­பட்­டது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காணிக்­கைத் திருட்டு தொடர்­பான எஸ்.ஐ.டி.யின் விசா­ர­ணை­யைத் தொடர்ந்து, பெய­ர­ள­வுக்கு சில­ரைக் கைது செய்­தது உத்­த­ர­பி­ர­தேச பா.ஜ.க. அரசு. அவர்­க­ளில் பலர், கோயில் காணிக்­கையை எண்­ணக்­கூ­டிய வேலை­யைப் பார்ப்­ப­வர்­கள்­தான். அவர்­க­ளி­ட­மி­ருந்து 80 இலட்ச ரூபாய் பறி­மு­தல் செய்­தி­ருப்­ப­தாக எஸ்.ஐ.டி.யின் அறிக்கை தெரி­விக்­கி­றது. 200 கோடி ஊழ­லில் 80 இலட்­சத்­தைக் கண்­ட­றிந்­து­விட்­ட­தாக கால­ரைத் தூக்கி விட்­டுக் கொள்­கி­றது உத்­த­ர­பி­ர­தேச அரசு நிர்­வா­கம். இது, உண்­மை­யான குற்­ற­வா­ளி­க­ளைத் தப்ப வைப்­ப­தற்­காக நடத்­தப்­ப­டும்நாட­கம் என்­பதை அர­சி­யல் கட்­சி­க­ளும் பொது­நல அமைப்­பு­க­ளும் ஆதா­ரங்­க­ளு­டன் முன்­வைக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இரா­ம­ஜென்­ம­பூமி அறக்­கட்­ட­ளைக்கு வந்து குவிந்த நிதி மூல­மாக விவ­சாய நிலங்­கள் வாங்­கப்­பட்­டன.  “கோயி­லுக்­காக என்று சொல்லி எங்­க­ளி­டம் மிகக் குறைந்த விலைக்கு வாங்­கிய நிலங்­களை, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட தனி­யா­ரி­டம் அதிக விலைக்கு விற்­கி­றது ராம­ஜென்­ம­பூமி டிரஸ்ட்” என்று விவ­சா­யி­கள் சங்­கத்­தி­னர் செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் வெளிப்­ப­டை­யா­கவே தெரி­வித்­துள்­ளார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பக்­தர்­கள் அளித்த காணிக்கை, விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து வாங்­கிய நிலம், கோயி­லுக்கு சொந்­த­மான சிலை­கள் எனப் பல­வும் ஸ்ரீரா­ம­ஜென்ம பூமி தீர்த்த சேஷ்ஸ்­தரா அறக்­கட்­ட­ளை­யால் மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது. இரா­மர் பெய­ரில் நடத்­தப்­பட்­டி­ருக்­கும் இந்த மாபெ­ரும் ஊழல் குறித்து பிர­த­மரோஅவ­ரது கட்சி நிர்­வா­கி­களோ ஏன் வாய் திறக்­க­வில்லை என்­றும், உச்­ச­நீ­தி­மன்ற அள­வில் இந்த ஊழல் குறித்து விசா­ரிக்க வேண்­டும் என்­றும் பக்­தர்­கள் தரப்­பில் வலி­யு­றுத்­தப்­படு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் உள்­ளது போன்ற அற­நி­லை­யத்­துறை நிர்­வா­கத்­திற்கு மாறாக,  கோயில்­களை தனி­யார் அமைப்­பி­டம் கொடுப்­ப­தும், அது­வும் மதத்­தின் பெயரை வைத்து அர­சி­யல் செய்­ப­வர்­கள் கைக­ளில் கொடுப்­ப­தும் எத்­த­கைய மோச­டிக்கு வழி­வ­குக்­கும் என்­பதை இரா­மர் கோயில் விவ­கா­ரம் நிரூ­பித்­துள்­ளது. அற­நி­லை­யத்­துறை ஏன் அவ­சி­ய­மா­னது என்­ப­தற்கு அயோத்தி ஊழலே சாட்­சி­ய­மா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் ஆட்­சி­யில் திருக்­கோ­யில் க­ளுக்கு சொந்­த­மான நிலங்­களை ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மீட்டு, கோயில் கணக்­கில் சேர்த்­த­தற்கு மாறாக, தற்­போது நடை­பெ­றும் த.வெ.க ஆட்­சி­யில் கோயில் சொத்­து­க­ளைத் தனி­யா­ருக்­குத் தாரை­வார்க்­கும் மோச­டி­கள் தொடர்­கின்­றன. பழநி அடி­வா­ரம் பூங்கா சாலை­யில் தண்­ட­பாணி சுவா­மி­கள் மடத்­திற்கு சொந்­த­மான 1.40 ஏக்­கர் நிலம் 60 ஆண்­டு­கா­ல­மா­கத் தனி­யார் ஆக்­கி­ர­மிப்­பில் இருந்த நிலை­யில் உச்­ச­நீ­தி­மன்­றம் வரை வழக்கு தொட­ரப்­பட்டு, திரா­விட மாடல் ஆட்­சி­யில் 2025ஆம் ஆண்டு செப்­டம்­பர் 12ஆம் நாள் அந்த நிலம் மீட்­கப்­பட்டு, நீதி­மன்­றங்­க­ளின்உத்­த­ர­வுப்­படி தேவஸ்­தா­னத்­து­டன் இணைக்­கப்­பட்­டது. திருக்­கோ­யில் நிலத்­தைப் போராடி மீட்டு, ஓராண்டு கூட நிறை­வ­டை­யாத நிலை­யில், த.வெ.க அரசு அதனை ஜூலை 2ஆம் நாள் தனி­ந­பர்­க­ளுக்­குப் பத்­தி­ரப்­ப­திவு செய்து கொடுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">லஞ்ச- ஊழல் இல்­லாத ஆட்சி என பஞ்ச் வச­னம் பேசு­கி­றார் விஜய். பழ­நி­யில் 100 கோடி ரூபாய் மதிப்­புள்ள 1.40 ஏக்­கர் கோயில்  சொத்து, த.வெ.க. ஆட்­சி­யில் 
பறி­போய் இருக்­கி­றது. மக்­களை மட்­டு­மல்ல, கட­வு­ளை­யும் ஏமாற்­றும் மோசடி ஆட்சி தமிழ்­நாட்­டில் நடக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>