<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,82,609,702" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 16 2026 05:48:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260716T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="16072026-CHN-04" position.sequence="04" ex-ref="16072026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">ரூ.120 கோடி மதிப்பு கோயில் நிலம்; ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">அமைச்சர்களின் முரண்பட்ட கருத்துகளால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூலை 16 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ரூ.120 கோடி மதிப்­புள்ள பழநி தண்­டா­யு­த­பாணி கோயில் நிலம், ரூ.2 கோடிக்கு பத்­தி­ரப்­ப­திவு நடந்­தது உண்மை தான் என பத்­தி­ரப்­ப­தி­வுத்­துறை அமைச்­சர் லோகேஷ் தமிழ்­செல்­வ­னும், நிலத்­தின் விவ­ரம் சரி­வரி தெரி­யா­மல் பத்­தி­ரப்­ப­திவு நடத்­துள்­ளது என அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் ரமே­சும் தெரி­வித்த முரண்­பட்ட கருத்­து­க­ளால் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது. பழநி தண்­டா­யு­த­ பாணி கோயி­லுக்கு சொந்­த­மான ஏறக்­கு­றைய ரூ.120 கோடி மதிப்­பு­டைய நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு விதி­களை மீறி தனி­யா­ருக்கு விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ள­தாக சர்ச்­சை­கள் எழுந்­துள்­ளன. இது­கு­றித்து நேற்று சென்னை தலைமை செய­ல­கத்­தில் அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் ரமேஷ் மற்­றும் பதி­வுத் துறை அமைச்­சர் லோகேஷ் ஆகி­யோர் கூட்­டாக நிரு­பர் ­களை சந்­தித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­போது ரமேஷ் பேசி­ய­தா­வது: பழநி நிலம் முறை­கே­டாக பதி­வா­கி­யுள்­ள­தாக செய்­தி­கள் வந்­தன. பொய், புரட்டு, வன்­மத்­து­டன் பல்­வேறு கட்­சி­யி­னர் செய்தி பரப்­பு­கின்­ற­னர். எனது உற­வி­னர் பெய­ரில் பதி­வா­கி­யுள்­ள­தாக கூறி­யுள்­ள­னர். எனக்கு அவர் உற­வி­னர் என இவர்­க­ளா­கவே கண்­டு­பி­டித்து கூறி­யுள்­ள­னர். அர­சுக்கு தெரிந்து இந்த நிலப்­ப­திவு நடந்­துள்­ள­தாக கூறி­யுள்­ள­ னர். பழநி கோயில் அடி­வா­ரத்­தில் உள்ள தண்­ட­பாணி மடத்­துக்கு சொந்­த­மான நிலத்தை யாருக்­கும் பதிவு செய்ய கூடாது என பல­முறை கோயில் இணை ஆணை­யர் மூலம் பல கடி­தங்­கள் பத்­தி­ரப்­ப­தி­வுத் துறைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. 2026 மார்ச் 27ல் அந்த நிலத்தை பதிவு செய்ய முயற்சி நடந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் அப்­போது சார்­ப­தி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில் அந்த நிலத்தை பதிவு செய்ய முடி­யாது என விளக்க கடி­தம் கொடுத்­துள்­ள­னர். நிலத்தை பதிவு செய்ய முடி­யாது என ஏப்­ரல் 1ம் தேதி பதி­வுத்­துறை சார்­பில் அந்த விளக்க கடி­தம் கொடுக்­கப்­பட்­டது. நிலத்தை பதிவு செய்ய முயன்­ற­வர்­கள் அந்த விளக்க ஆவ­ணத்தை வைத்து நீதி­மன்­றம் சென்­றுள்­ள­னர். ஆவ­ணங்­கள் சரி­வர இருந்­தால் நிலத்தை பதிவு செய்­வது குறித்து ஆலோ­சிக்­க­லாம் என நீதி­மன்­றம் கூறி­யி­ருந்­தது. அந்த தீர்ப்பை வைத்து ஜூலை 3ம் தேதி நிலத்தை பதிவு செய்ய முயற்­சிக்­கி ன்­ற­னர். அதற்கு ஒரு­நாள் முன்பு அதா­வது ஜூலை 2ம் தேதியே பழநி கோயில் இணை ஆணை­யர் அந்த நிலத்தை தனி­யா­ருக்கு கிர­யம் செய்ய கூடாது என மாவட்ட பதி­வா­ள­ருக்கு கடி­தம் எழுதி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சார்­ப­தி­வா­ளர் பணி­யில் இருந்­த­வர் விடு­மு­றை­யில் சென்­ற­தால் ஜூலை 6ம் தேதி கூடு­தல் பொறுப்­பாக ஜஸ்­டின் மணி­கண்­டன் என்­ப­வர் சார்­ப­தி­வா­ளர் பொறுப்­புக்கு வரு­கி­றார். அவ­ருக்கு அந்த நிலம் குறித்த தக­வல் சரி­வர தெரி­யா­த­தால் அந்த நிலத்தை அவர் ஜூலை 6ம் தேதி பதிவு செய்து கொடுத்து விடு­கி­றார். இந்த தக­வல் தெரிந்­த­வு­டன் நீதி­மன்­றத்­தில் அற­நி­லை­யத்­துறை, பதி­வுத்­துறை சார்­பில் இது­கு­றித்து வழக்கு பதிவு செய்­யப்­பட்­டது. அரசு மீண்­டும் அந்த இடத்தை கைப்­பற்­றும். நிலத்தை பதிவு செய்த சார்­ப­தி­வா­ளர் இடை­நீக்­கம் செய்­யப்­பட்டு ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. நிலத்தை வாங்க முயற்­சித்­த­வர், பதிவு செய்த சார்­ப­தி­வா­ளர் மீது வழக்கு பதிந்து விசா­ரணை நடந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">துறை ரீதி­யா­க­வும் விசா­ரணை நடை­பெ­று­கி­றது. நிலத்தை பதிவு செய்­தோர் எனது உற­வி­னர் என பொய் பரப்­பி­ய­வர்­கள் மீது காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளேன். என் உற­வி­னர் என நிரூ­பித்­தால் ஆதா­ரம் வழங்­கட்­டும். கோயில் நிலங்­களை ஒரு இன்ச் கூட யாருக்­கும் தர நாங்­கள் தயா­ரில்லை. இந்த பிரச்னை நடக்­கும்­போது இணை ஆணை­ய­ருக்கு, கூடு­தல் ஆணை­ய­ராக பதவி உயர்வு வழங்­கி­ய­தற்கு கார­ணம், மாரி­முத்து பதவி உயர்வு பட்­டி­ய­லில் இருந்­த­தால் பதவி உயர்வு வழங்­கப்­பட்­டது. அதில் என்ன தவறு இருக்­கி­றது. அந்த நிலத்தை தனி­யா­ருக்கு வழங்க கூடாது என 4 முறை பதி­வுத் துறைக்கு கடி­தம் எழு­தி­ய­வர் அவர். என் மீது ஆதா­ரம் இல்­லாத குற்­றச்­சாட்­டு­களை சுமத்­து­வது குறித்து புகார் அளித்­துள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கரூர் வெண்­ணை­ம­லை­யில் கோயில் நிலம் தாரை­வார்க்­கப்­பட்­ட­தாக கூறு­வது தவறு. அந்த நிலம் பற்­றிய எந்த தக­வ­லும் இன்றி நயி­னார் நாகேந்­தி­ரன் போன்­றோர் பேசி வரு­கின்­ற­னர். இனாம் ஒழிப்பு சட்­டம் மூலம் 1963-67 காலத்­தில் அந்த இடத்தை அனு­ப­விக்­கும் உரி­மையை அங்கு வாழ்ந்­த­வர்­க­ளுக்கு வழங்கி உள்­ள­னர். பட்டா வாங்கி 60 ஆண்­டு­க­ளாக அங்கு மக்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர். கரூ­ரில் பட்டா கொடுத்து அந்த உரி­மை­யா­ளர்­க­ளுக்கு அரசு இழப்­பீ­டும் கடந்த காலத்­தில் வழங்கி உள்­ளது. பின்­னர் கரூ­ரில் அர­சி­யல் சூழ­ லுக்­காக 1912 நிலப்­ப­தி­வு­களை எடுத்து வைத்­துக்­கொண்டு அந்த நிலத்தை பொரு­ளா­தார ரீதி­யாக பயன்­ப­டுத்த முடி­யாத நிலையை உரு­வாக்­கு­கின்­ற­னர். அந்த நிலங்­களை மதிப்­பற்ற நிலங்­க­ளாக வகைப்­ப­டுத்தி வைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அத­னால் அந்த மக்­கள் நிலத்தை அவ­சர தேவைக்­காக கூட விற்க முடி­யா­மல் போராட்­டம் நடத்தி வந்­த­னர். கரூர் கோயில் நிலம் தொடர்­பாக கடந்த தேர்­த­லில் அதி­முக - பாஜ தேர்­தல் அறிக்­கை­யில் கூறி இருந்­ததை தான் நாங்­கள் செய்­துள்­ளோம். கரூ­ரில் 3071 இனங்­க­ளில், 2024 சர்வே எண் கொண்ட கோயில் நிலங்­க­ளும், 1167 பட்டா நிலங்­க­ளும் உள்­ளன. இனாம் ஒழிப்பு சட்­டம் மூலம் கொடுக்­கப்­பட்ட நிலங்­கள் தெளி­வான நிலம் என குறிப்­பி­டப்­ப ட்­டுள்­ளன. அந்த நிலம் மீது எந்த கோயில் நிர்­வா­கம் சார்­பி­லும் வழக்கு தொட­ர­வில்லை. கரூ­ரில் கோயில் நிலத்தை புதி­தாக யாருக்­கும் நாங்­கள் பட்டா போட்டு வழங்­க­வில்லை. அந்த நிலங்­களை விற்க உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த தடை­க­ளைத்­தான் தற்­போது நீக்கி உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பதி­வுத்­துறை அமைச்­சர் லோகேஷ் கூறி­ய­தா­வது: பழ­நி­யில் தவறு நடந்­துள்­ளதை ஏற்­றுக் கொள்­கி­றேன். சார்­ப­தி­வா­ளர் தவறு செய்­த­தால்­தான் அவர் மீது நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம். நீதி­மன்ற வழி­காட்­டு­தல் அடிப்­ப­டை­யி­லேயே கிர­யம் செய்­த­தாக சார்­ப­தி­வா­ளர் கூறி­னார். அந்த பதிவை தற்­போது நிறுத்தி வைத்­துள்­ளோம். பழநி நில விவ­கா­ரத்­தில் சார்­ப­தி­வா­ள­ருக்கு மேல் அதி­கா­ரி­கள் யாரும் தவ­றில் ஈடு­பட்­டி­ருந்­தால் அவர்­கள் மீதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். மேலும், முதல்­வ­ரின் அனு­மதி பெற்று தேவைப்­பட்­டால் மேல்­மட்ட விசா­ரணை நடத்­தப்­ப­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ரூ.120 கோடி மதிப்­புள்ள பழநி தண்­டா­யு­த­பாணி கோயில் நிலம், ரூ.2 கோடிக்கு பத்­தி­ரப்­ப­திவு நடந்­தது உண்மை தான் என பத்­தி­ரப்­ப­தி­வுத்­துறை அமைச்­சர் லோகேஷ் தமிழ்­செல்­வ­னும், நிலத்­தின் விவ­ரம் சரி­வரி தெரி­யா­மல் பத்­தி­ரப்­ப­திவு நடத்­துள்­ளது என அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் ரமே­சும் முரண்­பட்ட கருத்­து­களை தெரி­வித்­தது குழப்­பம் ஏற்­ப­டுத்தி உள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>