<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="42,68,951,1270" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 15 2026 16:22:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260716T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="16072026-MDU-05" position.sequence="05" ex-ref="16072026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="86">தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளாரின் 150ஆவது பிறந்த நாள் நிறைவுப் பெருவிழா!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup768283_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போ­ராட்­டத்­தின் ஒரு பகு­தி­யா­கத் திருச்­சி­யி­லி­ருந்து சென்னை நோக்­கிக் கிளம்­பிய 
‘தமி­ழர்­படை’  நடைப்­ப­ய­ணம் மேற்­கொண்­டது. 
இப்­ப­டைக்­குப் பட்­டுக்­கோட்டை அழ­கர்­சாமி தலைமை தாங்கி நடத்திவந்­தார். அப்­ப­டை­யில் சுமார் நூறு பேர் இரா­ணுவ உடை தாங்கி வந்­த­னர். இத்­த­மி­ழர் படை­யில், மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார், டாக்­டர் எஸ்.தரு­மாம்­பாள் ஆகி­யோ­ரும் பங்கு கொண்­ட­னர். கரந்தை உமா­ம­கேஸ்­வ­ரம் பிள்ளை தலைமை தாங்­கி­னார். ‘நக­ர­தூ­தன்’ ஆசி­ரி­யர் ரெ.திரு­ம­லை­சாமி படை­யின் செய­லா­ள­ரா­கப் பணி­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத்­த­மி­ழர் படை­யி­னர் சென்­னையை அடைந்து மூலக்­கொத்­த­ளத்­தில் உள்ள அரிசி ஆலை­யொன்­றில் தங்­கி­யி­ருந்­த­னர். அவ்­வீ­ரர்­க­ளுக்கு மறை­ம­லை­ய­டி­கள் வந்து உணவு பரி­மா­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நான், இந்த இந்தி எதிர்ப்­புத் தமி­ழர் படைக்கு உணவு பரி­மா­றக் கொடுத்து வைத்­தி­ருக்க வேண்­டும் எனக் கூறிப் ­ப­டை­யி­னரை மகிழ்ச்சி கொள்­ளச் செய்­தார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்தி மொழி குறித்து ஆய்வு செய்­தும், இந்தி எதிர்ப்பு வீரர்­களை மகிழ்ச்சி கொள்­ளச் செய்­தும் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­திய மறை­ம­லை­ய­டி­கள், 
தம் மகன் வித்­து­வான் மறை. திரு­நா­வுக்­க­ரசு அவர்­களைச் சிறைக்­கோட்­டத்­திற்கு அனுப்­பி­யும் வைத்­தார். இவ்­விந்தி எதிர்ப்­புப் போரி­னால் மற்­றொரு முக்­கி­யமான வர­லாற்று விளை­வும் உண்­டா­யிற்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் ஒட்­டு­மொத்­த­மான இன உணர்வு என்­பது, தமிழ் வேந்­தர்­க­ளான சேர, சோழ, பாண்­டி­யர்­கள் காலத்­தி­லும் இல்லை; அது உரு­வாக்­கப்­ப­ட­வும் இல்லை. சிலப்­ப­தி­கா­ரம் போன்ற அய்ம்­பெ­ரும் காப்­பி­யங்­கள் இயற்­றப்­பட்­ட­போ­தும்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனச்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சங்­க­கா­லப் புல­வர் கணி­யன் பூங்­குன்­ற­ னார்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பாடி­ய­போ­தும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“வேறுள குழு­வை­ யெல்­லாம் 
மானு­டம் வென்­ற­தம்மா”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனக்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கம்­பன்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இராம காதை­யை­ யாத்த போதும், மொழி­வ­ழி­நாடு என ‘ஓரி­ன­மாக’ உணர்ச்­சி­பெற்­றுத் தமி­ழ­கம் இருந்­ததே இல்லை. அப்­ப­டிக் காப்­பி­யங்­கள் ஓரின உணர்­வைத் தோற்­று­வித்­தி­ருந்­தா­லும், மர­பு­வழி தமிழ் அர­சு­கள் தமிழ் இன ஒற்­று­மையை வளர்த்­தெ­டுத்­திருக்­க­மாட்டா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இரு­ப­தாம் நூற்­றாண்­டின் தமி­ழ­கம் அவ்­வா­றாக இல்லை வளர்ந்து கொண்­டி­ருந்த சன­நா­யக உணர்­வு­கள் இன உணர்­வைக் காட்­டிக் கொள்ள வழி­விட்­டன. தமிழ் இன எதி­ரி­க­ளும், இன உணர்வு ஓங்­கு­வ­தற்­கான வழி­களை அவர்­கள் அறி­யா­ம­லேயே செய்­த­னர். இச்­ச­ம­யத்­தில்­தான் மறை­ம­லை­
ய­டி­கள் போராட்­டத்­தி­லும் இன உணர்­வி­லும் பங்கு கொண்டு மேலும் செழு­மையை உண்­டாக்­கி­னார். 04.10.1937இல் சென்னை கோகலே அரங்­கத்­தில் நடந்த இந்தி எதிர்ப்­புக் கூட்­டத்­திற்கு தலை­மை­யேற்­றுத் தனித் தமி­ழில் பேசி­னார். ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக’  என்று முழக்­க­மிட்­டுக் கொண்டு ஏரா­ள­மான மக்­கள் கடற்­க­ரைக் கூட்­டத்­திற்­குச் செல்­வ­த­றிந்து தமது மகிழ்ச்­சியை நாள் குறிப்­பில் குறித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­வல்­லிக்­கே­ணிக் கடற்­க­ரை­யில், அவ­ரது தலை­மை­யில் நடந்த இந்தி எதிர்ப்­புக் கூட்­டத்­தில்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘தமிழ்­நாடு தமி­ழ­ருக்கே’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனும் தீர்­மா­னத்தை முன்­மொ­ழிந்­தார். நாவ­லர் சோம­சுந்­த­ர­பா­ரதி அத்­தீர்­மா­னத்தை வழி மொழிந்­தார். பின்­னா­ளில், இதன் வடி­வம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘திரா­விட நாடு திரா­வி­ட­ருக்கே’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என மாற்­றம் அடைந்­தது. ஆட்­சியாளர்­கள் இந்­தி­யைத் திணித்­த­தன் விளைவு ஒரு நாட்­டின் கோரிக்கை உரு­வா­கக் கார­ண­மா­யி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1938–இல் மூட்­டிய அவ்­விந்தி எதிர்ப்­புப் போராட்­டக் கனல் 1948, 1952,1965,1986 எனத் தொடர்ந்து கனன்று கொண்­டி­ருக்­கும் அவ்­வு­ணர்வு இன்­றும் அப்­ப­டியே தேக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வு­ணர்­வு­க­ளுக்கு  வித்­திட்­ட­வர்­க­ளில் ஒரு­வர்­தான் மறை­ம­லை­ய­டி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அறி­ஞர் அண்ணா அவர்­கள் மலே­சி­யச் சுற்­றுப்­ப­ய­ணத்தை மேற்­கொண்ட நேரத்­தில் அவ­ரி­டம் அங்­குள்ள மக்­கள் அறி­வார்ந்த நூல் ஒன்­றினை அளித்து அவ­ரது கருத்­தி­னைக் கேட்­ட­னர். அப்­போது அறி­ஞர் ­அண்ணா அவர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“இந்­தக் கருத்­து­கள் 
‘புதி­யன அல்ல’ இக் கருத்து எங்­கள் தமிழ்­நாட்­டில் 
எப்­போதோ மறை­ம­லை­ய­டி­கள் போன்­ற­வர்­கள் கூறி­யி­ருக்­கி­றார்­கள்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடி­க­ளா­ரைப் பின்­பற்றி மொழி­யி­யல் துறை­யில் மொழி­ஞா­யிறு ஞா.தேவ­நே­யப் பாவா­ண­ரின் மொழி­யி­யல் ஆய்­வு­க­ளைத் தி.மு.கழ­கம் வர­வேற்­றது மட்­டு­மின்றி, அவ­ரது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செந்­த­மிழ்ச் சொற்­பி­றப்­பி­யல் அகர முத­லி­யைத் தொகுப்­ப­தற்­குக் கழக அரசு 1974–இல் பாவா­ண­ரின் தலை­மை­யில் ஓர் இயக்­க­கத்­தையே நிறு­வி­யது. தமி­ழின் மீதும், அடி­க­ளார் மீதும், பாவா­ண­ரின் ஆய்­வின் மீதும் தி.மு.கழ­கம் கொண்­டுள்ள ஆழ­மான ‘பிடிப்பே’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இதற்­குக் கார­ண­மா­கும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பாவா­ணர் பற்­றிய கட்­டுரை ‘திரா­விட இயக்­கத் தூண்­கள்’ எனும் எமது  நூலில் இடம்­பெற்­றுள்­ளது அங்கே படித்­து­ணர்க!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“பெரி­யார் திரு.ஈ.வெ.ரா., யான் விளக்­கிய கொள்­கை­க­ளையே மேலுந்­தி­ட­மாய் எடுத்து விளக்­கிப் பேச­வும், எழு­த­வுந் தொடங்­கிய காலந்­தொட்டு, ஆரி­யச் சேர்க்­கை­யால் தமிழ்­மொ­ழிக்­கும் தமி­ழர் கோட்­பாட்­டிற்கு தமி­ழ­ரது வாழ்க்­கைக்­கும் நேர்ந்த குறை­பாட்­டைத் தமி­ழர் உணர்­வ­ரா­யி­னர். அவ­ரிற் கற்­ற­வ­ரும் என்­மேற் கொண்ட சீற்­றம் தவிர்ப்­பா­ரா­யி­னர்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என 1948–இல் மறை­ம­லை­ய­டி­கள் எழு­தி­னார். திரா­வி­டர் இயக்­கத்­தோடு அவ­ருக்­குள்ள நெருக்­கத்தை இதன் மூலம் அறி­ய­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட இயக்­கம் மறை­ம­லை­ய­டி­க­ளா­ரைப் பெரி­தும் மதித்­தது போற்­றி­யது. முரண்­க­ளைச் சம­ர­சம் செய்து கொண்டு தமி­ழின மேம்­பாட்­டிற்கு அவ­ரோடு இணைந்து பணி­யாற்­றி­யது திரா­விட இயக்­கம். கலை­ஞர் ஒரு­முறை கவி­ய­ரங்கு ஒன்­றில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘பழந்­த­மிழ் 
வித்­த­கர் பல்­லா­வ­ரத்­தார்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்று சிறப்­பித்­துக் கூறி­னார். மறை­ம­லை­ய­டி­களை காங்­கி­ரஸ் போற்­றி­ய­து­மில்லை, பாராட்­டி­ய­து­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுவாமி வேதா­ச­லம் எனும் அவ­ரது இயற்­பெ­யரை தனித் தமி­ழில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘மறை­ம­லை­அ­டி­கள்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என மாற்­றம் செய்து கொண்ட போது காங்­கி­ர­சார் அத்­த­னித் தமிழ்ப் பெயரை ‘மரஞ்­செ­டிக்­கொ­டி­கள்’ என்று கேலி செய்­த­னர். 1990–களில் தமிழ்­நாடு காங்­கி­ர­சார் மறை­ம­லை­ந­கர் தொடர் வண்டி நிலை­யத்­திற்கு காம­ரா­சர் நகர் என்று பெயர் சூட்­டு­மாறு கிளர்ச்சி செய்­த­னர். காம­ரா­சர் இருந்­தி­ருந்­தால் இதை விரும்பி இருக்க மாட்­டார். இப்­ப­டிப்­பட்ட தேவை­யற்ற கிளர்ச்­சி­களை மேற்­கொண்ட பெரு­ம­தி­யி­னர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எதனை எதிர்ப்­பது என்­கிற அடிப்­படை அறிவே அற்ற காங்­கி­ர­சார், மறை­ம­லை­ய­டி­க­ளின் பெயரை நீக்க ஒரு போராட்­டத்­தினை மேற்­கொண்­ட­னர். காங்­கி­ர­சார் தமது பெய­ருக்கு மேலும் ஓர் இழுக்­கைத் தேடிக்­கொண்­ட­னர். அவர்­கள் அவ்­வாறு போராட்­டம் நடத்த முற்­பட்­ட­போது, மலை­ம­லை­ அ­டி­க­ளா­ரைக் குறித்­துக் கலை­ஞர்  முர­சொ­லி­யில் ஒரு மடல் எழுதி அடி­க­ளா­ரின் பணி பற்­றிக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மறை­ம­லை­ய­டி­க­ளா­ருக்­கும் காங்­கி­ர­சா­ருக்­கும் எவ்­வித உற­வும் எப்­போ­தும்  இருந்­த­தில்லை. 1905–ஆம் ஆண்­டில் யாரோ கேட்­டுக் கொண்­ட­தற்­கி­ணங்க விடு­தலை இயக்­கத்­தைப் பற்­றிச் சில பாடல்­க­ளைப் புனைந்து தந்­தி­ருக்­கி­றார். அவ்­வப்­போது இந்­திய விடு­தலை தொடர்­பான சில முக்­கிய நிகழ்ச்­சி­கள் சில­வற்­றைத் தமது நாள் குறிப்­பில் குறித்­தி­ருக்­கி­றார். இன்­னும் சொல்­வ­தா­னால்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘திரு.காந்­தி­யின் பல கருத்­து­கள் என்­னால் ஏற்­றுக் கொள்ள முடி­யா­தவை’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என அவர் தமது குறிப்­பில் எழு­தி­னார். அவர் தமி­ழும், சைவ­மும் தழைக்க உழைத்­த­வர். தனித்­த­மிழ் இயக்­கங்­கண்ட தந்தை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மறை­மலை அடி­க­ளின் தனிச்­சி­றப்பு அவர் 3.01.1898 முதல் 14.08.1950 வரை நாள் குறிப்பு எழு­தி­யி­ருக்­கி­றார். இந்த நாள் குறிப்பு ஆங்­கி­லத்­தில் எழு­தப்­பட்டு இருக்­கி­றது. இதில் முக்­கி­யச் செய்­தி­கள் எழு­தப்­பட்டு இருக்­கின்­றன. அவ­ரு­டைய 150ஆவது பிறந்த நாள் விழா­வின் போது அக் குறிப்­பு­க­ளி­லி­ருந்து சில­வற்றை நம் நடை­யி­லேயே எடுத்­துக் காட்ட விரும்­பு­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­நாள் குறிப்­பில் பரி­தி­மாற்­க­லை­ஞ­ரி­லி­ருந்து பொது­வு­டை­மைத் தலை­வர் ப.ஜீவா­னந்­தம் வரை அவரை வந்து சந்­தித்த நிகழ்ச்­சி­கள் அல்­லது அவர் போய் சந்­தித்த நிகழ்ச்­சி­கள் இடம் பெற்று இருக்­கின்­றன. இவர் போய் சந்­தித்த நிகழ்ச்­சி­கள் மிகக் குறை­
வா­கவே இடம் பெற்று இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">23.04.1899இல் திரு.ஜே.எம்.நல்­லா­சா­மிப் பிள்ளை அவர்­க­ளு­டன் நீண்­ட­நே­ரம் உரை­யா­டி­யக் குறிப்­பு­கள் காணப்­ப­டு­கின்­றன. ஜி.யு.போப், மாக்ஸ் முல்­லர் போன்­ற­வர்­க­ளுக்­குக் கடி­தம் எழு­தி­யி­ருக்­கிறார். திரா­விட பாஷா சங்­கக் கூட்­டம் ஒன்­றுக்­குத் தலை­மை­யேற்று உரை­யாற்றி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாக்ஸ் முல்­ல­ரின் நூல்­க­ளில் இரா­ம­கி­ருஷ்­ண­ரின் வாழ்க்கை வர­லாற்று நூலி­னை­யும்India; What it can teach us; ‘Three Lectures on the science of Language’, ‘Comparative Philology’எனும் நூல்­க­ளை­யும் மறை­­ம­லை­ய­டி­கள் படித்து இருக்­கிற குறிப்­பு­க­ளைத் தெரிந்து கொள்ள முடி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விக்­டோ­ரியா மகா­ரா­ணி­யார் இறந்த செய்­தியை 21.01.1901ஆம் தேதி நாள்­கு­றிப்­பின்­படி நாளே­டு­க­ளைப் பார்த்து மறை­ம­லை ­அ­டி­கள் அறிந்து கொண்ட செய்­திப் பதி­வாகி இருக்­கி­றது. மாக்ஸ் முல்­ல­ரின்Six system of Hindu Philosophyஎனும் நூலை அவர் விலை கொடுத்து வாங்கி இருக்­கி­றார். ஏரா­ள­மான மேற்­கத்­திய அறி­ஞர்­க­ளின் நூல்­களை வாங்­கிப் படித்து அதன் பதி­வு­களை அவர் தந்து இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடி­கள் சென்னை நக­ரில் குடி­யே­றிய போது ஐந்து இடங்­க­ளில் வாட­கைக்கு குடி­யி­ருந்து இருக்­கி­றார். அதற்­கான முக­வ­ரி­கள் நாள் குறிப்­பில் இடம் பெற்று இருக்­கின்­றன. 1911 முதல் தான் அவர் பல்­லா­வ­ரத்­தில் சொந்த மாளிகை கட்­டிக் குடி­பு­குந்­தார். அதற்­கான வீட்டு மனையை ரூ.90 கொடுத்து வாங்கி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">02.11.1903 ஆம் தேதி சூரிய நாரா­யண சாஸ்­திரியார் எனும் பரி­தி­மாற் கலை­ஞர் மறைந்­தார் எனும் செய்­தியை மிகுந்த ஆழ்ந்த வருத்­தத்­து­டன் அடி­க­ளார் பதிவு செய்து இருக்­கி­றார். உப­நி­ட­தங்­களை அடி­க­ளார் படித்து வரு­கிற செய்­தி­களை நாள் குறிப்­பு­க­ளி­லி­ருந்து தெரிந்து கொள்­கி­றோம். இதனை அடி­க­ளார் மிக ஆழ­மா­கத் தமது ‘வேளா­ளர் நாக­ரி­கம்’ எனும் நூலில் எடுத்­து­ரைப்­பதை நாம் படிக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மதுரை தமிழ்ச்­சங்க  ஆண்டு விழாக் கூட்­டத்­திற்கு அடி­க­ளார் சென்று இருக்­கி­றார். அந்­தக் கூட்­டத்­திற்கு உ.வே.சாமி­நா­தை­யர் தலைமை. இரண்டு மணி நேரம் பேசிய அவர், ஏதேதோ பேசி­னார் என்று  அடி­க­ளார் தமது நாள் குறிப்­பில் குறிப்­பிட்டு இருக்­கி­றார். மாலை 4.30 மணிக்­குத் தொடங்­கிய இந்­தக் கூட்­டம் இரவு 10.00 மணிக்­குத்­தான் முடிந்­தது. இந்­தக் கூட்­டத்­தில் ஒரு­வரை ஒரு­வர் புகழ்ந்து கொண்டே இருந்­தது அடி­க­ளா­ருக்­குப் பிடிக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொரு முக்­கி­ய­மான செய்­தியை அடி­க­ளார் தமது நாள்­கு­றிப்­பில் குறித்து இருக்­கி­றார். நூல்­கள் வாங்­கு­வ­தற்கு ஏரா­ள­மான பணம் அவர் செல­வ­ழிப்­பது அடி­க­ளா­ரின் மனை­வி­யா­ருக்கு மகிழ்ச்­சி­ய­ளிக்­க­வில்லை. இதை அவர் எப்­படி குறிப்­பி­டு­கி­றார் என்­றால், ‘என் மனைவி முகம் கொடுத்து பேச­வில்லை’ என்று எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">01.05.1907–இல் சென்னை திரு­வல்­லிக்­கேணி கடற்­க­ரை­யில் விபின் சந்­திர பாலர் கூட்­டம் நடை­பெ­று­கி­றது. 5000 பேர் திரண்டு இருக்­கின்­ற­னர். அலை­ க­ளின் இரைச்­ச­லோடு அவ­ரது வெண்­க­லக் குரலை அடி­க­ளார் செவி­ம­டுத்த நிகழ்வை பதிவு செய்து இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடி­க­ளார் நாள் குறிப்­பில் அதிர்ச்­சி­யான ஓர் இடத்தை நாம் படித்­தோம்.பெரும்­க­ட­வுள் நம்­பிக்­கை­யா­ளர் இப்­படி எழு­தி­யி­ருக்­கி­றாரே என்­ப­து­தான் நம் அதிர்ச்­சிக்­குக் கார­ணம். இதே­போல வள்­ள­லார்  தமது இறுதி ஆய்­வி­லும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளதை அறி­ஞர் உல­கம் அறி­யும். அடி­க­ளார் தமது 10.08.1909 ஆம் நாளைய குறிப்­பில் பின் வரு­மாறு எழு­தி­யி­ருப்­பதை நாம் அப்­ப­டியே தரு­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“ஈச­னும் உமை­யுமே கட­வுள் என்ற கருத்­தில் நம்­பிக்கை இழந்­து­விட்­டேன். கட­வு­ளி­டம் வேண்­டு­வ­தன் மூலம் மாற்­றப்­ப­டாத நிலை பேறு­டைய விதி, பேரண்­டத்­தில் உள்­ளது. மேன்மை பெற்ற ஆன்­மாக்­க­ளான 
கட­வு­ளால் மனி­த­ருக்கு ஏதே­னும் செய்ய முடி­ய­வில்லை என்று எனக்­குத் தோன்­ற­வில்லை, அனைத்­தும் நம் முயற்­சி­க­ளையே சார்ந்­துள்­ளன”.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதைத்­தான் பகுத்­த­றி­வா­ளர்­க­ளும் நாத்­தி­கர்­க­ளும் சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1911 ஆகஸ்­டில் துற­வி­க­ளுக்­கு­ரிய துவா­ராடை அணி­ய­லா­னார் அடி­கள். டிசம்­பர் 7 ஆம் தேதி மது­ரைத் ­த­மிழ்ச் சங்­கத்தை நிறு­விய பாண்­டித் துரை­யவர்­கள் மறைந்த செய்­தியை மிகத் துய­ரத்­து­டன் 
அடி­கள் பதிவு செய்து இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1912 பிப்.1,2 ஆம் நாள்­க­ளில் வட­லூர் சென்றுஇரா­ம­லிங்­க­ரின் பணி­க­ளைப் பார்த்து வியப்­பும் மலைப்­பும் கொள்­கி­றார். 2-ஆவது நாள் அவ­ரின் சன்­மார்க்க சங்­கத்­தில் சொற்­பொ­ழி­வாற்­று­கி­றார். அச்­சொற் பொழி­வில் வள்­ள­லா­ரின் சீர்­தி­ருத்த முறை­களை மாற்­று­கி­ற­வர்­களை அடி­க­ளார் கடு­மை­யா­கச் சாடு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1912 ஜூலை­யில் ஒரு நிகழ்வு நடக்­கி­றது. அடி­க­ளாரை பிரிட்­டிஷ் போலீ­சார் கண்­கா­ணிக்­கி­றார்­கள். அதனை மடமை என்று பதிவு செய்து இருப்­ப­தோடு, அவர் பிரிட்­டிஷ் ஆட்­சித் தெட­ரு­வ­தையே விரும்­பு­ வ­தாக நாள் குறிப்­பில் எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1913 பிப்­ர­வ­ரி­யில் சென்னை மாகான சபை­யில் திரா­விட நாக­ரி­கம் பற்றி இரண்­டா­வது சொற்­பொழிவை ஆற்­றி­யி­ருக்­கி­றார். சென்னை மகா­சன சபை என்­பது இப்­போதைய அண்­ணா­சாலை எல்.ஐ.சி. கட்­டி­டத்­தின் பக்­கத்­தில் இருந்த பழைய கட்­ட­டம் ஆகும். இப்­போது அந்த இடத்­தில் சபை­யா­ரின் வேறு கட்­ட­டம் இடம் பெற்று இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1913 மார்ச்சில் தனக்கு இலக்­க­ணத்­தில் ஏற்­பட்­டுள்ள அய்­யங்­க­ளைப் போக்­கிக் கொள்­வ­தற்­காக மணி.திரு­நா­வுக்­க­ரசு அடி­க­ளா­ரைச் சந்­தித்­துப் பேசி­னார். 1914 இல் வேதாந்த சூத்­தி­ரங்­க­ளுக்கு நீல­கண்­டர், இரா­மா­நு­ஜர், மாத­வர், பால­தே­வர் ஆகி­யோ­ரின் உரை­களை ஒப்­பு­நோக்கி எழுதி வரு­கிற செய்­தியை அறிந்து கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லாம் உல­கப்­போர் நடந்து வரு­கிற, கால­மா­கை­யால் 23.09.1914 ‘எம்­டன்’ கப்­பல் சென்னை 
நக­ரைத் தாக்­கிய செய்­தியை அடி­க­ளார் எழு­தி­யி­ருக்­ ­கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1915 நவம்­ப­ரில் கீழ்க்­கா­ணும் விதத்­தில் இரண்டு குறிப்­பு­கள் எழு­தப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">(1)கந்­த­சா­மிக் கவி­ரா­ய­ரும் அவர் தம் வக்­கீல் சோ.பார­தி­யா­ரும் சாட்­சி­யங்­க­ளு­டன் வந்­த­னர். மகா­ம­கோ­பாத்­யாய உ.வே.சாமி­நா­தய்­ய­ரும் மு.இரா­க­வைய்­யங்­கா­ரும் எனக்­கெ­தி­ரா­கப் பல சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">(2) என் வக்­கீல் விசு­வ­நாத சாஸ்த்­திரி மு.இரா­க­வைய்­யங்­கா­ரைக் குறுக்கு வினாக்­கள் கேட்­டார். வக்­கீ­லின் திற­மை­யைக் கண்ட உ.வே.சாமி­நா­தய்­யர் சம­ர­சம் செய்ய முன்­வந்­தார். சம­ர­சம் ஆயிற்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது ‘என்ன வழக்கு?’-என்று தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1938-இல் இந்தி எதிர்ப்புக் கூட்­டம் மறை­மலை அடி­க­ளார் தலை­மை­யில் நடை­பெ­று­கி­றது. இக் கூட்­டத்­தில் அடி­க­ளார் முன்­மொ­ழிய</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாடு தமி­ழ­ருக்கே</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது. இதனை நாவ­லர் பார­தி­யார் வழி மொழிந்­தார். இக் கூட்­டத்­திற்கு இலட்­சம் பேர் திரண்­டி­ருந்­த­னர். ஒலி­பெ­ருக்கி ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருந்­தது. இவை அத்­த­னை­யும் அடி­
க­ளா­ரின் நாள் குறிப்­பில் இடம் பெற்று இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">04.08.1950 ஆம் நாளோடு முடி­யும் அடி­க­ளா­ரின் நாள் குறிப்­பில் செய்­தி­கள் மேலே குறிப்­பிட்­டது போலக் குவிந்து கிடக்­கின்­றன. அடி­க­ளார் 15.09.1950 இல் இயற்கை எய்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">19 ஆம் நூற்­றாண்­டும் 20 ஆம் நூற்­றாண்­டும் 
திரா­வி­டத் தமிழ்த் தேசிய புத்­தெ­ழுச்­சிக்­குக் கார­ண­மான நூற்­றாண்­டு­கள் ஆகும். புதுத்­த­மிழ் முன்­னோ­டி­க­ளும் மேலை­நாட்டு ஆய்­வா­ளர்­க­ளும் கிறிஸ்­தவ பாதி­ரி­மார்­க­ளும் அவர்­களை அறி­யா­ம­லேயே திரா­வி­டத் தமிழ்த் தேசிய புத்­தெ­ழுச்­சிக்கு நிரம்ப ஆதா­ரங்­களை வழங்­கிச் சென்று இருக்­கின்­ற­னர். அத்­தே­சிய எழுச்­சிக்கு மொழி, சமய, பண்­பாட்டு, நாக­ரி­கத்­தைத் தனித்த அடை­யா­ள­மாக கொண்ட ஒரு இனத்தை அதன் பழைய மேன்­மை­களை மீட்­டு­ரு­வாக்­கம் செய்து தந்து பணி­யாற்­றி­ய­வர்­க­ளுள் முதல் வரி­சை­யில் இருக்­கிற அறி­ஞர்­க­ளில் அடி­க­ளார் ஒரு­வர். அவ­ரின் 150-ஆவது பிறந்த நாளின் போது அவரை நினை­வு­கூர்ந்து போற்றி, பாராட்டி அவ்­வெ­ழுச்­சி­க­ளைத் திரும்­பிப் பார்ப்­போ­மாக!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>