<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,423,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 15 2026 14:40:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260716T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="16072026-TRY-06" position.sequence="06" ex-ref="16072026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">வர­லாறு திரும்­பும்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">மக்­க­ளாட்­சி­யின் மர­பு­கள் – மாண்­பு­கள் மதிக்­கப்­பட வேண்­டும் !</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup767796_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ங்­கி­லே­ய­ரின் ஆதிக்­கத்­தி­லி­ருந்து ஜன­நா­ய­கம் 
என்­பது இரு­பு­றம் கூர்­தீட்­டிய வாளாக சுழன்­றுள்­ளதை சரித்­தி­ரம் குறித்து வைத்­துள்­ளது. இந்­திய ஒன்­றிய நிலப்­ப­ரப்பு விடு­த­லைப் பெற்­ற­பின்­னர், ஆட்சி - அர­சி­யல் - அதி­கா­ரம் இவற்றை நிர்­வ­கிக்­கும் கட்­ட­மைப்பை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்­காக, இந்­திய அர­சி­யல் சட்­டம் டாக்­டர்.பாபா­சா­கிப் அம்­பேத்­கா­ரால் உரு­வாக்­கப்­பட்டு 1949 ஆம் ஆண்டு நவம்­பர் 
திங்­கள் 26 ஆம் நாள், விடு­த­லைப் பெற்ற இந்­திய ஒன்­றிய நிலப்­ப­ரப்­பில் வாழும் மக்­கள் தங்­க­ளுக்­கா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­திய அர­சி­யல் சட்­டம் (CONSTITUTION OF INDIA) 1950 ஆம் ஆண்டு ஜன­வரி திங்­கள் 26 ஆம் நாள் நடை­மு­றைக்கு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய அர­சி­யல் சட்­டம் வரை­ய­றுத்­தி­ருக்­கின்ற ஜன­நா­யக் குடி­ய­ரசு ஆட்­சிக்­கான நாடா­ளு­மன்ற - சட்­ட­மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்­கள் 1952 ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக நடை­பெற்­றது. அத­னைத் தொடர்ந்து மொழி­வா­ரி­மா­நி­லங்­கள் பிரிக்­கப்­பட்டு, சென்னை மாகா­ணம் தமிழ்­மொ­ழியை தாய்­மொ­ழி­யாய்க் கொண்ட மக்­களை உள்­ள­டக்­கிய 
பகு­தியை தனி­மா­நி­ல­மாக அறி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத­னைத் தொடர்ந்து ஒன்­றிய அர­சின் சார்­பாக எல்லா மாநி­லங்­க­ளும் பய­ன­டை­யத்­தக்க வகை­யில், ஐந்­தாண்டு திட்­டங்­கள் மூல­மாக இந்­திய ஒன்­றி­யத்­தின் வளர்ச்­சிப் பணி­கள் முடக்­கி­வி­டப்­பட்டு மாநி­லங்­கள் ஓர­ள­விற்கு வளர்ச்­சி­யினை அடைய முடிந்­தது. ஆனால், மாநி­லங்­கள் எல்­லாத்­து­றை­க­ளி­லும் முழு­மை­யான வளர்ச்­சி­யினை எட்­டிட இய­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இத்­த­கைய சமூக - அர­சி­யல் - பொரு­ளா­தா­ரச் சூழ்­நி­லை­யில்­தான் 1967 ஆம் ஆண்டு பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யில்  திரா­விட முன்­னேற்ற கழ­கம் ஆட்­சி­ய­மைத்­தது. தமிழ்­நாட்­டின் முதல்­வர் பொறுப்­பில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் குறு­கிய­ காலம் பொறுப்­பி­லி­ருந்­தா­லும் மூன்று வர­லாற்று சிறப்­பு­மிக்க தீர்­மா­னங்­க­ளைச் சட்­ட­மன்­றத்­தில் நிறை­வேற்றி தமிழ்­மக்­க­ளின் ஒட்­டு­மொத்த வர­வேற்­பிற்­கும், மகிழ்ச்­சிக்­கும் முழு­மு­தற்­கா­ர­ண­மாக திகழ்ந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­றி­ஞர் அண்­ணா­வைத் தொடர்ந்து, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், எம்.ஜி.ஆர்., ஜெ.ஜெய­ல­லிதா, தள­பதி முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் ஆகிய திரா­விட இயக்­கத்­தின் தலை­வர்­கள் பொறுப்­பேற்று இன்­றைய இந்­தி­யத் துணைக்­ 
கண்­டத்­தி­லேயே நவீன வளர்ச்­சிப் பெற்ற மாநி­ல­மாக தமிழ்­நாட்டை அனைத்து துறை­க­ளி­லும் உரு­வாக்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளு­டைய “திரா­விட மாடல்” ஆட்­சி­யில் “எல்­லோ­ருக்­கும் எல்­லாம்” என்ற அடிப்­ப­டைக் கோட்­பாட்டை மையப்­ப­டுத்தி கல்வி, சுகா­தா­ரம், பெண்­ணு­ரிமை மீட்­டு­தல் மற்­றும் பெண்­கள் முன்­னேற்­றம் என்­கின்ற புரட்­சி­க­ர­மான சட்­டங்­க­ளை­யும், 
திட்­டங்­க­ளை­யும் தன்­னு­டைய ஆட்­சிக்­கா­லத்­தில் உரு­வாக்கி இந்­திய அர­சி­யல் அரங்­கத்­தில் உயர்ந்து நின்­றார் என்­பது 
சமீ­பத்­திய தமிழ்­நாட்­டின் வர­லாற்று பதி­வு­க­ளா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பா­க­வும், ஆனால் சுருக்­க­மா­க­வும் குறிப்­பிட வேண்­டு­மெ­னில், இன்­றைய நவீன தமி­ழ­கத்தை உரு­வாக்­கிக்­காட்­டிய சித்­தாந்த பேரி­யக்­கம் “திரா­விட இயக்­கம்­தான்” என்­ப­தை­யும், “திரா­விட இயக்­கத் தலை­வர்­கள்­தான்” என்­பதை­ யும் வர­லாற்­றில் மறைக்­கவோ, மறுக்­கவோ எந்த சக்­தி­யா­லும், எந்த காலத்­தி­லும் இய­லாது என்­பதை அறு­தி­யிட்டு உறு­தி­யாக இந்­தக் கட்­டு­ரை­யின் மூலம் பிர­க­ட­னம் செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­க­ளாட்சி முறை­யில் ஜன­நா­ய­கத்தை ஏற்­றுக்­கொண்ட அர­சி­யல் கட்­சி­கள் தேர்­தல்­களை எதிர்­கொள்­வ­தும், வெற்றி தோல்­வி­களை சந்­திப்­ப­தும் இயல்­பான ஜன­நா­யக நடை­மு­றை­யா­கும். இதில் கலந்­து­கொண்ட அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு வெற்­றியோ தோல்­வியோ நிரந்­த­ர­மா­ன­தல்ல, மாறாக ஐந்­தாண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடை­பெ­றும் பொதுத்­தேர்­தல்­க­ளில் மக்­கள் கடந்­த­முறை எடுத்த முடி­வு­க­ளுக்கு முற்­றி­லும் முரண்­பட்டு புதிய முடி­வு­களை மேற்­கொள்­ள­லாம், அதன்­மூ­லம் கடந்த தேர்­த­லில் வெற்றி பெற்­ற­வர்­கள் தோல்வி அடை­வ­தும், தோல்வி அடைந்­த­வர்­கள் வெற்றி பெறு­வ­தும் இயல்­பான ஜன­நா­யக நடை­மு­றை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதில், அர­சி­யல் கட்­சி­க­ளில் வெற்­றி­பெற்று ஆட்சி அமைக்­கும் வாய்ப்­பி­னைப் பெற்ற அர­சி­யல் கட்­சித்­த­லை­வர்­கள், பெரும்­பான்மை மக்­க­ளின் முடி­வு­க­ளுக்­கேற்ப தேர்­தல் மூலம் வழங்­கப்­பட்ட அர­சி­யல் அதி­கா­ரத்தை மாநி­லத்­தின் முன்­னேற்­றத்­திற்­கும், அந்த மாநில வாழ்­மக்­க­ளின் வளர்ச்­சிக்­கும் முழு­மை­யாக பயன்­ப­டுத்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், தேர்­தல்­க­ளத்­தில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை அடுத்த பொதுத்­தேர்­தல் வரு­வ­தற்கு முன்­னர் நிறை­வேற்­று­வ­தில் அக்­க­றை­யும் கவ­ன­மும் செலுத்த வேண்­டும். இது­மட்­டு­மல்ல, எதிர்க்­கட்சி என்­பது ஆட்­சி­யின் ஓர் அங்­கம். அர­சி­யல் அதி­கா­ரத்தை செயல்­ப­டும் விதத்­தில் உரு­வா­கும் குறை நிறை­க­ளை­யும், ஆளுங்­கட்­சி­யின் தவ­று­க­ளை­யும் சுட்­டிக்­காட்­டும் கடமை எதிர்க்­கட்­சி­க­ளுக்கு உண்டு என்­பதை ஆளு­கின்ற வாய்ப்­பி­னைப் பெற்ற கட்சி தெளி­வாக உணர்ந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றத்­தில் எண்­ணிக்­கை­யின் பலத்­தால் ஆளு­கின்ற வாய்ப்­பி­னைப் பெற்ற அந்த அர­சி­யல் கட்­சி­யின் தலை­வர் எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளின் விமர்­ச­னங்­களை­ யும், கருத்­துக்­க­ளை­யும் உன்­னிப்­பாக கேட்டு அவர்­க­ளின் கருத்­துக்­க­ளில் உண்மை இருக்­கு­மா­யின் அதனை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய மனப்­பக்­கு­வத்தை பெற்­றாக வேண்­டும். சட்­ட­மன்­றத்­தில் எண்­ணிக்­கை­யின் பலத்­தை­விட எண்­ணங்­க­ளின் பலம்­தான் மதிக்­கப்­பட வேண்­டும், ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் அடிக்­கடி கூறு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, அந்த உயர்ந்த ஜன­நா­ய­கக் கோட்­பாட்டை இன்­றைய தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தி­னு­டைய தலை­வர் முதல்­வர் ஜோசப் விஜய் அவர்­கள் பின்­பற்­று­கி­றார்­களா(?)  என்­பது ஒரு மிகப்­பெ­ரிய கேள்­விக்­கு­றி­யாக உரு­வா­கி­யுள்­ளது என்­பதை இன்­றைய முதல்­வ­ரின் சட்­ட­மன்ற - பொதுக்­கூட்ட உரை­க­ளும் நட­வ­டிக்­கை­க­ளும் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் 1962 ஆம் ஆண்டு நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தன்­னு­டைய சொந்த தொகு­தி­யான காஞ்­சி­பு­ரம் தொகு­தி­யில் தோற்­க­டிக்­கப்­பட்­டார். எதிர்­பா­ராத கார­ணங்­கள், சந்­தர்ப்­பச் சூழ்­நி­லை­கள், ஜன­நா­யக விரோத சக்­தி­க­ளின் ஆதிக்­கம் ஆகி­யவை கார­ண­மா­க­வும் நாடு போற்­றும் மக்­கள் என்ற நிகழ்­வு­கள் தலை­வர்­கள்­கூட சில­நே­ரங்­க­ளில் தோல்­வியை சந்­திக்க நேரி­டு­கி­றது என்­பது வர­லாற்­றில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, ஒரு தேர்­த­லில் ஒரு தலை­வர் தோல்வி அடைந்­தார் என்­ப­தற்­காக  உயர்ந்த ஜன­நா­ய­கப் பண்­பாட்­டின் வழி­காட்­டி­யாக இருக்க வேண்­டிய தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­சர், சட்­ட­மன்­றத்­தில் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை ஜன­நா­யக மர­பு­க­ளுக்­கும், மாண்­பு­க­ளுக்­கும் முரண்­பட்டு “எங்கே உங்க அப்­பாவை காணோம்?” எனத் தனது இட்­டுக்­கட்­டிய கதை­மூ­லம், நகைப்­பிற்­கு­ரிய உடல்­மொ­ழி­யால் முந்­தைய முதல்­வ­ரைச் சுட்­டிக்­காட்ட முயன்­றது, ஜன­நா­யக மர­பு­களை அறிந்த மக்­க­ளால் சகித்­துக்­கொள்ள இய­லாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த உடல்­மொழி நகைச்­சுவை இத்­தோடு முடி­ய­வில்லை. தமி­ழக முதல்­வர் கரூர் பொதுக்­கூட்­டத்­திலே உரை நிகழ்த்­தும்­போ­து­கூட, முந்­தைய முதல்­வர் அவர்­க­ளு­டைய கொளத்­தூர் தொகுதி தேர்­தல் பற்­றிய தோல்வி பற்றி குறிப்­பி­டும்­பொ­ழுது, “கொளத்­தூர் தொகுதி மக்­கள் கொத்து பரோட்டா போட்­டு­விட்­டார்­கள்” என்று உடல்­மொ­ழி­மூ­லம் “நையாண்டி” செய்­வது ஒரு முத­ல­மைச்­ச­ருக்கு அழ­கல்ல, என்­பது ஜன­நா­ய­கத்­தில் நம்­பிக்கை கொண்ட அனை­வ­ரின் உள்­ளக் குமு­ற­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­ச­ரின் இத்­த­கைய பேச்­சுக்­க­ளும், நட­வ­டிக்­கை­க­ளும் அவ­ரின் பொறுப்­புக்கோ அல்­லது அவர் வகிக்­கும் முத­ல­மைச்­சர் பத­விக்கோ, அவர் ஆளும் தமிழ்­நாட்­டிற்கோ பெருமை சேர்க்­காது என்­ப­தில் அந்த அவை­யில் கடந்த காலத்­தில் மக்­க­ளின் பிர­தி­நி­தி­யா­க­வும், அமைச்­ச­ரா­க­வும் இருந்­த­வர் என்ற அடிப்­ப­டை­யில் ஜன­நா­ய­கத்­தில் நம்­பிக்கை உள்­ள­வர்­க­ளின் சார்­பாக  சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத்­த­கைய அநா­க­ரிக அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து முதல்­வர் திருந்­தி­னால் நல்­லது.  திருந்­தா­விட்­டால், தமிழ்­நாட்டு மக்­கள் திருத்­து­வ­தற்கு தீர்க்­க­மான முடி­வெ­டுப்­பார்­கள். இது­தான் கடந்த காலங்­க­ளில் நடந்த வர­லாறு. அது 
மீண்­டும் திரும்­பும்! (History Will Repeat). அப்­பொ­ழுது 
இன்­றைய முதல்­வர் ஜோசப் விஜய் எங்கே இருக்­கி­றார் என்று தேட­வேண்­டிய நிலை­யும் உரு­வா­க­லாம் என்­பதை தெரி­விக்க விரும்­பு­கி­றேன். இதுவே மக்­க­ளாட்­சி­யின் மர­பும் - மாண்­பு­க­ளும் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆம்!  ஜன­நா­ய­கம் என்­பது இரு­பு­றம் கூர்­தீட்­டிய வாள்­தான்!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>