<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,689,607,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 15 2026 16:24:52 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260716T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="16072026-VLR-06" position.sequence="06" ex-ref="16072026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">3 போலீசார் கைது!</lang>
	</hl3>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">த.வெ.க. ஆட்சியில் கொடூரம்:</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="28"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="59">நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாகர்­கோ­வில், ஜூலை 15 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாகர்­கோ­வி­லில் உள்ள மாவட்ட சிறை­யில் விசா­ரணை கைதி­யான மாற்­றுத்­தி­ற­னாளி வியா­பாரி சப­ரி­வர்­மன் கட்டி வைத்து சித்­ர­வதை செய்து அடித்து கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். அவ­ரது உட­லில் கை முறிவு உட்­பட 19 இடங்­க­ளில் காயங்­கள் இருந்­தது பிரேத பரி­சோ­த­னை­யில் அம்­ப­லாகி உள்­ளது. இது­தொ­டர்­பாக சிறை காவ­லர்­கள் 3 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். குமரி மாவட்­டம் தென்­தா­ம­ரைக்­கு­ளம் அருகே ஈத்­தங்­காடு நாரா­ய­ணன்­பு­தூரை சேர்ந்­த­வர் சசி­த­ரன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ­ரது மகன் சபரிவர்­மன் (34). மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான இவர், ஈத்­தங்­காட்­டில் மளிகை கடை நடத்தி வந்­தார். கடந்த 9ம்தேதி இவ­ரது கடை­யில் சோதனை நடத்­திய தென்­தா­ம­ரைக்கு­ளம் போலீ­சார், தடை செய்­யப்­பட்ட குட்கா, புகை­யிலை பொருட்­கள் இருந்­த­தாக கூறி சப­ரி­வர்­மனை கைது செய்து நாகர்­கோ­வில் சிறை­யில் அடைத்­த­னர். நேற்று முன்­தி­னம் அதி­கா­லை­யில் சப­ரி­வர்­மன் மயக்க நிலை­யில் கிடந்­த­தாக ஆசா­ரிப்­பள்­ளம் அரசு மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ ம­னைக்கு அதி­கா­ரி­கள் கொண்டு வந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அங்கு பரி­சோ­த­னை­யில் சப­ரி­வர்­மன் உயி­ரி­ழந்­தது தெரிய வந்­தது. உட­ன­டி­யாக அவ­ரது உடலை பிரேத பரி­சோ­த­னைக்­காக அனுப்பி வைத்­த­னர். இந்த தக­வல் சப­ரி­வர்­ம­னின் குடும்­பத்­தி­ன­ருக்கு தெரி­விக்­கப்­பட்­டது. அதிர்ச்சி அடைந்த அவர்­கள், சப­ரி­வர்­மனை போலீ­சார் சர­மாரி தாக்கி கொன்­றுள்­ள­னர். இறப்­புக்கு கார­ண­மா­ன­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும். அவ­ரது மனை­விக்கு ரூ.1 கோடி நிவா­ர­ணம் மற்­றும் அரசு வேலை வழங்க வேண்­டும் என கூறி சாலை­ம­றி­ய­லில் ஈடு­பட்­ட­னர். எஸ்பி ஸ்டாலின் தலை­மை­யில் போலீ­சார் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­நி­லை­யில் 2வது ஜூடி­சி­யல் மாஜிஸ்­தி­ரேட் சத்­தி­ய­மூர்த்தி முன்­னி­லை­யில் சப­ரி­வர்­ம­னின் உடலை நேற்று பகல் 12 மணிக்கு தூத்­துக்­குடி, திரு­நெல்­வேலி, 
கன்­னி­யா­கு­மரி ஆகிய அரசு மருத்­து­வ­மனை டாக்­டர்­கள் குழு பிரேத பரி­சோ­தனை செய்­த­னர். அதன்­பின் நீதி­பதி நேற்று சிறைச்­சா­லை­ யி­லும் விசா­ரணை நடத்­தி­னார். எஸ்பி ஸ்டாலின், நெல்லை சிறைத்­துறை எஸ்பி செந்­தா­ம­ரை­கண்­ணன் ஆகி­யோ­ரும் சிறை­யில் கைதி­க­ளி­ட­மும், காவ­லர்­க­ளி­ட­மும் விசா­ரணை நடத்­தி­னர். அங்­குள்ள கண்­கா­ணிப்பு கேம­ராக்­க­ளை­யும் ஆய்வு செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்று காலை 10 மணிக்கு தொடங்­கிய விசா­ரணை சுமார் ஒன்­றரை மணி நேரம் நடந்­தது. அதில், சப­ரி­வர்­மன் பெட்­டிக்­க­டை­யில் 5 புகை­யிலை பாக்­கெட்­டு­களை கைப்­பற்­றிய போலீ­சார் அவர் மீது வழக்­கு­ப­திவு செய்து மாலை நீதி­மன்­றத்­தில் ஜாமீன் பெற­வேண்­டும் எனக்­கூறி 
விடு­விக்­கின்­ற­னர். பின்­னர் சிறு­வர்­க­ளுக்கு புகை­யிலை விற்­ற­தாக கூறி அவர் நாகர்­கோ­வில் கிளைச்  ­சி­றை­யில் அடைக்­கப்­ப­டு­கி­றார். சிறை­யில் இரு நாட்­கள்  
எது­வும் சாப்­பி­டா­மல் இருந்­த­து­டன், 12ம் தேதி இரவு 9 மணிக்கு தனது குழந்­தை­களை பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்னை விடு­வி­யுங்­கள் எனக்­கூறி அல­றி­ய­தாக தெரி­கி­றது. அப்­போது ரவுண்ட்ஸ் வந்த வார்­டன் ஜெகன், சப­ரி­வர்­மனை தாக்கி 
சத்­தம் போடாதே என­கூறி கட்­டி­போட்­டுள்­ளார். பின்­னர் சிறி­து­ நே­ரம் கழித்து சப­ரி­வர்­ம­னின் கட்டை அவிழ்த்து மீண்­டும் தாக்­கி­யுள்­ளார். தாக்­கப்­பட்ட சப­ரி­வர்­மன் இரவே இறந்­த­தாக தெரி­கி­றது. அதி­காலை 5.40 மணிக்கு ரோல்­கா­லின் போது சப­ரி­வர்­மன் மட்­டும் வர­வில்லை. ஜெகன் சென்று பார்த்­த­போது, சப­ரி­வர்­மன் இறந்­தது தெரிய வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து ஷிப்ட் வந்த சிவக்­கு­மார் இதனை கண்டு கொள்­ளா­மல் இருந்­துள்­ள­னர் என்­பது தெரிய வந்­தது. இந்­த­நி­லை­யில் சப­ரி­வர்­ம­னின் 4 பக்க பிரே­தப் பரி­சோ­தனை அறிக்கை நேற்று இரவு அவ­ரது உற­வி­னர்­க­ளி­டம் அளிக்­கப்­பட்­டது. இதில் அவ­ரது உட­லில் 19 இடங்­­களில் கடு­மை­யான காயங்­கள் இருப்­ப­தும், அவர் சித்­ர­வதை செய்­யப்­பட்­ட­தற்­கான ஆதா­ரங்­க­ளும் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அறிக்­கை­யின்­படி, சப­ரி­வர்­ம­னின் வலது முன்­னங்கை மற்­றும் வலது காலின் கீழ்ப்­ப­கு­தி­யில் கட்டி வைக்­கப்­பட்­ட­தற்­கான அடை­யா­ளங்­கள் இருப்­பது தெளி­வா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது அவர் சிறைக்­குள் கட்டி வைத்து தாக்­கப்­பட்­டி­ருப்­பது, வலது கையில் பலத்த ரத்­தக்­கட்டு இருப்­ப­து­டன், அங்கு எலும்பு முறிந்­தி­ருப்­ப­தும், தோலுக்கு அடி­யில் பல இடங்­க­ளில் ரத்­தம் உறைந்து போயி­ருப்­ப­தும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. தலை­யில் பலத்த காயம் ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மண்டை ஓட்­டைப் பிரித்து ஆய்வு செய்­த­போது, சப­ரி­வர்­ம­னின் உச்­சந்­த­லை­யில் தடி­ம­னான ரத்­தக்­கட்­டும், பிடரி பகு­தி­யில் ஆழ­மான காய­மும் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. ஏற்­க­னவே சப­ரி­வர்­ம­னின் உற­வி­னர்­கள், அவ­ரது உட­லில் காயம் இருப்­ப­தாக குற்­றம் சாட்­டி­யி­ருந்­த­னர். தற்­போது வெளி­யா­கி­யுள்ள மருத்­துவ அறிக்­கை­யில் எலும்பு முறிவு உட்­பட 19 காயங்­கள் இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தால், சப­ரி­வர்­மன் அடித்து கொலை செய்­யப்­பட்­டது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அறிக்­கை­யின் அடிப்­­படை­யில், சம்­பந்­தப்­பட்ட சிறைத்­துறை அதி­கா­ரி­கள் மற்­றும் தாக்­கு­த­லில் ஈடு­பட்­ட­வர்­கள் மீது கொலை வழக்­குப் பதிவு செய்ய வேண்­டும், மனை­விக்கு அரசு வேலை வழங்க வேண்­டும், அது­வரை உடலை வாங்­கப்­போ­வது இல்லை என்று கூறி­விட்டு மனைவி மற்­றும் உற­வி­னர்­கள் நேற்று இரவு சொந்த ஊருக்கு புறப்­பட்டு சென்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­நி­லை­யில், போஸ்ட்­மார்ட்­டம் அறிக்கை, மாஜிஸ்­தி­ரேட் அறிக்கை மற்­றும் விசா­ர­ணை­யில் கிடைத்த தக­வல் அடிப்­ப­டை­யி­லும் சப­ரி­வர்­மனை அடித்து கொலை செய்த சிறை வார்­டன் தேங்­காப்­பட்­ட­ணத்தை சேர்ந்த ஜெகன், அதனை கண்டு கொள்­ளாத 2ம் நிலை காவ­லர் சாமி­யார்­ம­டம் சிவ­கு­மார், இரவு சிறை பொறுப்­பா­ள­ராக இருந்த களக்­காட்டை சேர்ந்த தலைமை சிறை காவ­லர் சுரேஷ் என்ற திரு­மலை நம்பி ஆகிய 3 பேரை நேச­மணி நகர் போலீ­சார் கைது செய்து விசா­ரித்து வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில் 3 போலீ­சா­ரும் சஸ்­பெண்ட் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ரூ.25 ஆயி­ரம் லஞ்­சம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கொடுக்­கா­த­தால் கைது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு சிறிய பெட்­டிக்­க­டை­யில் சில பாக்­கெட்­டு­கள் மட்­டும் குட்கா பிடி­பட்­டால்,பொது­வாக உண­வுப் பாது­காப்பு அதி­கா­ரி­கள் அப­ரா­தம் விதித்து விடு­வார்­கள் அல்­லது காவல் நிலை­யத்­தில் ஜாமீன் வழங்­கக்­கூ­டிய பிரி­வு­க­ளில் வழக்­குப்­ப­திவு செய்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், அந்த நபர் மொத்த விற்­ப­னை­யா­ள­ரா­கவோ அல்­லது பெரிய அள­வில் பதுக்கி வைத்­தி­ருப்­ப­வ­ரா­கவோ இருந்­தால், அவர் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்­தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு ரிமாண்ட் செய்­யப்­ப­டு­வார். ஆனால் சப­ரி­வர்­மன் விஷ­யத்­தில் அவரை வழக்­கில் இருந்து விடு­விக்க போலீ­சார் ரூ.25 ஆயி­ரம் லஞ்­சம் கேட்டு பேரம் பேசி­யுள்­ள­னர், அவர் கொடுக்க மறுப்பு தெரி­வித்­த­தால் கைது செய்து கூடு­தல் பிரி­வு­களை சேர்த்து ரிமாண்ட் செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அமைச்­சர் தலை­யீடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தவெக அர­சின் அமைச்­சர் ஒரு­வர் சப­ரி­வர்­மனை தாக்­கி­ய­வர்­களை கைது செய்­யவோ, அவர்­கள் மீது நட­வ­டிக்­கையோ உடனே எடுக்க வேண்­டாம் என்று கூறி­ய­தா­க­வும், அத­னால் காவல்­துறை கையை பிசைந்து கொண்டு இருந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது. என­வே­தான் அர­சி­யல் கட்­சி­கள், ஊர் மக்­கள் உள்­ளிட்­ட­வர்­க­ளி­டம் இருந்து கண­வன் உயி­ரி­ழந்த அதே ஜெயி­லுக்­குள் மனை­வி­யை­யும், அவ­ரது சகோ­த­ரி­யை­யும் மட்­டும் அழைத்து சென்று பேச்­சு­வார்த்தை நடத்த திட்­ட­மிட்­ட­தும் தெரி­ய­வந்­தது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>