<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,461,492,1148" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jul 18 2026 03:42:34 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260718T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="18072026-MDU-05" position.sequence="05" ex-ref="18072026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">புதுச்சேரியில் தொடர் போலி மருந்து தயாரிப்புகளுக்கு</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி அரசே காரணம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">தி.மு.க. அமைப்பாளர் இரா. சிவா பகீர் குற்றச்சாட்டு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="PondySiva–bw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுச்­சேரி, ஜூலை 18 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுச்­சேரி மாநி­லத்­தில் தொடர்ச்­சி­யாக பொது­மக்­க­ளின் உயி­ருக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தி வரும் போலி மருந்து தயா­ரிப்­பு­க­ளுக்கு ஆளும் என்.ஆர். காங்­கி­ரஸ் – பா.ஜ.க. கூட்­டணி அரசே முழு பொறுப்­பேற்க வேண்­டும் என்று தி.மு.க. அமைப்­பா­ளர் இரா. சிவா குற்­றம்­சாட்டி உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது தொடர்­பாக அவர் விடுத்­துள்ள செய்தி அறிக்­கை­யில் கூறி­யி­ருப்­ப­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுச்­சேரி மாநி­லத்­தில் முந்­தைய போலி மருந்து குற்­றச்­சாட்டு தொடர்­பாக சி.பி.ஐ. விசா­ரணை நடந்து வரு­வ­தும், சி.பி.ஐ. அதி­கா­ரி­க­ளுக்கு லஞ்­சம் கொடுத்த குற்­றத்­தில் அரசு அதி­காரி கைதாகி இருப்­ப­தும் நாடே அறிந்­தது. இந்த நிலை­யில், மீண்­டும் புதுச்­சே­ரி­யில் அதே வழி­யில் வேறு ஒரு போலி மருந்து தொழிற்­சாலை இயங்­கு­வ­தும், அங்கே 625 வகை­யான போலி மருந்­து­கள் தயா­ரிக்­கப்­பட்டு இலங்கை உள்­ளிட்ட இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங்­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­யப்­பட்டு வந்­த­தும் அதிர்ச்சி அளிக்­கி­றது. ஒரு குற்­றம் நடந்து அது விசா­ர­ணை­யில் உள்ள போது அதே குற்­றத்தை மீண்­டும் இந்த மண்­ணில் நிகழ்த்­து­வ­தற்கு யார் அவர்­க­ளுக்கு தைரி­யம் கொடுத்­தது. புதுச்­சே­ரி­யில் நடந்து வரும் என்.ஆர்.காங்­கி­ரஸ் – பா.ஜ.க. அர­சின் நிர்­வா­கத் திற­மை­யின்­மை­யும், குற்­ற­வா­ளி­க­ளோடு அவர்­கள் கொண்­டி­ருக்­கும் நெருக் ­க­முமே இதற்கு கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முதல் போலி மருந்து வழக்­கில் நட­வ­டிக்கை தாம­தப்­பட்ட நிலை­யில் தி.மு.க. உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­க­ளின் தொடர் போராட்­டங்­க­ளும், அழுத்­த­முமே இவ்­வ­ழக்கு சி.பி.­ஐ.க்கு மாற்­றப்­பட்டு வேக­மெ­டுத்­தது. அதே பாணி­யில் தான் இன்­றைய குற்­றத்­திற்­கும், குற்­ற­வா­ளி ­க­ளுக்­கும் துணை­யாக இந்த அரசு உள்­ளதோ என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. ஒட்­டு­மொத்த அமைச்­ச­ரவை அதி­கா­ரத்­தை­யும் கையில் வைத்­துள்ள முதல்­வர் ரங்­க­சாமி, இப்­ப­டிப்­பட்ட முக்­கி­யத்­து­ வம் வாய்ந்த மக்­க­ளின் உயி­ரோடு விளை­யா­டும் போலி மருந்து குற்­றம் பற்றி வாய் திறக்­கா­மல் இருப்­பது வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு அவர் செய்­யும் மிகப் பெரிய துரோ­கம் ஆகும். அவ­ரது மவு­னமே குற்­றச்­செ­யல்­க­ ளுக்கு தூண்­டு­கோ­ளாக அமைந்­து­வி­டக்­கூ­டாது. இந்த அர­சுக்­கும், குற்­ற­ வா­ளி­க­ளுக்­கு­மான தொடர்பு முழு­ மை­யாக வெளிக்­கொ­கொண­ரப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது போன்ற குற்­றங் ­களை கட்­டுப்­ப­டுத்­தும் அமைப்­பாக உள்ள புதுச்­சேரி மருந்து தரக்­கட்­டுப்­பாட்­டுத் துறை­யின் அலட்­சி­ய­மும், கண்­கா­ணிப்பு யின்­மைப்­பற்றி முதல்­வர் அக்­கறை கொள்ள வேண்­டும். பல ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இயங்கி வந்த அந்த தொழிற்­சா­லை­யில் என்ன மருந்­து­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை அதி­கா­ரி­கள் ஆய்வு செய்­யா­மல் இருந்­தது அவர்­க­ளின் நிர்­வா­கத் தோல்­வி­யை­யும், சாத்­தி­ய­மான ஊழ­லை­யும் காட்­டு­கி­றது. மேலும் இதில் மருந்து தரக்­கட்­டுப்­பாட்­டுத் துறை அதி­கா­ரிக்­கும், ஆளும் கட்சி பிர­மு­க­ருக்­கும் நேரடி தொடர்பு இருப்­ப­தா­க­வும் செய்தி பர­வு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆகவே, இத்­த­கைய தொடர் குற்­றங்­க­ளுக்­குப் புதுச்­சே­ரியை ஆளும் என்.ஆர். காங்­கி­ரஸ் – பாஜக கூட்­டணி அரசே முழு பொறுப்­பேற்க வேண்­டும். இந்த இரண்­டா­வது போலி மருந்து விவ­கா­ரத்­தை­யும் தற்­போ­தைய சி.பி.ஐ. விசா­ர­ணை­யோடு இணைத்து விரி­வான விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட வேண்­டும். போலி மருந்து தொழிற்­சா­லை­கள் வளர கார­ண­மா­க­வும், அலட்­சி­ய­மா­க­வும் இருந்த சம்­பந்­தப்­பட்ட மருந்து கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­களை உட­ன­டி­யாக பணி நீக்­கம் செய்து, அவர்­கள் மீதும் குற்­ற­வி­யல் வழக்கு பதிவு செய்­யப்­பட வேண்­டும். புதுச்­சே­ரி­யில் மீண்­டும் போலி மருந்து தயா­ரிப்பை முற்­றி­லும் ஒழிப்­ப­தற்கு ஏது­வாக புதுச்­சே­ரி­யில் உள்ள அனைத்து மருந்து தொழிற்­சா­லை­க­ளை­யும், அவற்­றின் மூலப்­பொ­ருட்­கள் கொள்­மு­தல் விவ­ரங்­க­ளை­யும் முழு­மை­யான ஆய்­வுக்கு உட்­ப­டுத்த வேண்­டும். அதற்­காக ஓய்வு பெற்ற நிதி­பதி தலை­மை­யில் சிறப்­புக் குழு ஒன்றை புதுச்­சேரி அரசு நிய­மித்து அவர்­கள் சுதந்­தி­ர­மாக செயல்­பட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். போலி மருந்து விவ­கா­ரத்­தில் தொடர்­பு­டைய அனை­வ­ரை­யும் பார­பட்­ச­மின்றி கைது செய்ய வேண்­டும். தொடர்ந்து புதுச்­சேரி அரசு இந்த விவ­கா­ரத்­தில் அலட்­சி­யம் காட்­டு­மே­யா­னால் பொது­மக்­க­ளைத்திரட்டி மாபெ­ரும் தொடர் போராட்­டத்தை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் முன்­னெ­டுக்க நேரி­டும் என்­பதை எச்­ச­ரிக்­கை­யாக தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>