<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,340,958,1112" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jul 18 2026 23:44:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260719T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="19072026-TRY-03" position.sequence="03" ex-ref="19072026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">அறநிலையத்துறை அமைச்சர் – த.வெ.க. அரசின் மிகப் பெரிய சதி!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="29"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">ரூ.100 கோடி நில மோசடி – பழனிக்கே மொட்டை போட்ட விஜய் ஆட்சி! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">கழக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் குற்றச்சாட்டு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="parandhamanbw_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஜூலை 19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பழ­னி­கோ­யில் ரூ.100 கோடி நில மோசடி –- குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­று­கி­றார் அற­நி­லை­யத்­துறை அமைச்­சர். - த.வெ.க. அர­சின் மிகப்­பெ­ரிய சதி இது. முன்­னுக்­குப் பின் முர­ணாக பேசு­கின்­ற­னர் அமைச்­சர்­கள் என்­றும் பழனி கோயில் நில மோச­டி­யில் பினாமிபரி­வர்த்­தனை நடந்­துள்­ளது.- பழ­னிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி என்­றும் கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் குற்­றம் சாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">100 கோடி ரூபாய் பழனி கோவில் நிலமோசடி ஊழல் விவகாரம் தொடர்பாக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் 
இ.பரந்தாமன் அவர்களது பேட்டி வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">•	பழனிக்கே மொட்டை போட்ட விஜய் ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">•	பழனி கோவில் நில மோசடியில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">•	குற்றவாளிகளைக் காப்பாற்றும் அறநிலையத்துறை அமைச்சர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 1.41 ஏக்கர் நிலத்தை தனியார் இருவர் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி இரண்டு அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகின்றனர். இந்த நிலம் கோவிலுக்கு சொந்த மானது, இதை பதிவு செய்யக் கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கோவில் தரப்பில் இருந்து ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பினாமிப் பெயரில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பத்திரப் பதிவு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை கைப்பற்றி கோவில் கார் பார்க்கிங்கிற்காகப் பயன்படுத்தப் பட்டது. ஆனால் இந்த நிலம் இப்போது திடீரென தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியாளிக்கிறது. இதன் பின்னால் சதி நடந்துள்ளது. பினாமி பெயரில் பத்திரப்பதிவு நடந்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த விவகாரத்தைப் பற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசும் போது அறியாமையின் காரணமாக அதிகாரிகள் இதை பதிவு செய்திருக்கார்கள் என கூறுகிறார். விசாரணை தொடங்காத போது அமைச்சரே முன் வந்து இப்படி சொல்வது என்பது குற்றவாளிகளைக் காப்பாற்றி குற்றத்தை மறைக்க அமைச்சரே துணை போகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் இதுபற்றி விசாரிக்கிறோம் என கூறியிருக்க வேண்டுமே தவிர தானே முன் வந்து இதுபோன்று அமைச்சர் பேசி குற்றவாளியைக் காப்பாற்றுகிறார் என்பது தான் எங்களின் குற்றச்சாட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த அரசை பார்த்து நாங்கள் கேட்கிற கேள்வி, ஜூலை 2–ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் 3–ஆம் தேதி இந்த பத்திரப் பதிவு செய்யச் சொல்லி அதற்கான டாக்குமெண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் அலுவலகத்தில் கொடுக்கப்படுகிறது. அன்றைக்கு இருந்த சப்ரிஜிஸ்த்தார் திரு.பழனிசாமி என்பவர், ‘இவற்றை நான் பதிவு செய்ய மாட்டேன் ஏனென்றால் ஏற்கனவே கடிதம் இருக்கிறது’ என்று சொல்லிவிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதன் பிறகு மூன்றாம் தேதி பாலசுந்தரம் என்கின்ற ஒரு பதிவாளர் அன்றைக்குப் பணியமர்த்தப் படுகிறார். அவர் இந்த டாக்குமெண்ட் ரிசீவ் பண்ணிட்டு ‘நான் ரிஜிஸ்டர் பண்ண மாட்டேன்’ என்று சொல்லிட்டு அவர் விடுப்பில் சென்று விடுகிறார். பிறகு 4 , 5 ஆம் தேதி  சனி, ஞாயிறு. 6 ஆம் தேதி திங்கட்கிழமை பத்திரப்பதிவு நடந்துள்ளது. 6 ஆம் தேதி அன்று பழனி சப் ரிஜிஸ்டர் ஆபீசில் இருக்கக்கூடிய சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளவர்கள் லீவ் போட்டு போயிட்டாங்க. அப்ப இன்சார்ஜ்ஜா யாரைக் கூட்டிட்டு வராங்கன்னா பழனியில் இருந்து 60, 70 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கொடைக்கானல் சப் ரிஜிஸ்டரை அழைத்து வருகிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பழனிக்கு பக்கத்துல சத்திரப் பட்டின்னு 10 கிலோமீட்டர்ல இருக்கு, அங்க இருக்கிற சப்–ரிஜிஸ்டார் இன்சார்ஜ் கொடுத்துருக்கணும், அப்படி இல்லன்னா கீரனூர்னு ஒரு சப் ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் இருக்கு அங்க அவங்ககிட்ட இன்சார்ஜ் கொடுத்திருக்கணும். ஆனா கொடைக்கானல் சப் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு கொடுக்கப்பட்டிருக்குன்னா, ஆள பிக்ஸ் பண்றாங்க இந்த கவர்மெண்ட். “அதுவும் கொடைக்கானல் இருக்கக்கூடிய சப் ரிஜிஸ்டரார் பத்திரங்களை பதிவு செய்யக்கூடிய சப்ரிஜிஸ்டர் அல்ல; டி.ஆர். சிட்பண்ட், சிட் பண்டுக்குன்னு ஒரு தனியா டிஸ்ட்ரிக்ட் ரெஜிஸ்டரார் இருக்கிறார், அவர் அழைச்சிட்டு வந்து இன்சார்ஜ் கொடுக்கறாங்க.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“இன்னொரு வேடிக்கை என்னன்னா பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் என்ன சொல்றாரு, ‘கோர்ட்டோட ஆர்டர்ல டாக்குமெண்ட் எல்லாம் சரியா இருந்ததுன்னா பதிவு செய்யலாம்னு இருந்ததுனால அவங்கள் பதிவு செஞ்சிட்டாங்க’னு சொல்றார். ‘அறியாமையின் காரண மாக செஞ்சிட்டாங்க’னு சொல்றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">முன்னுக்குப் பின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">முரணான பதில்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் என்ன சொல்றாரு, ‘டாக்குமெண்ட் இஸ் இன் ஆர்டர்’னு கோர்ட் சொல்லுதுன்னு சொல்றாங்க. ஆனால் மேல்முறையீட்டுக்குப் போன இடத்தில் அரசு தரப்பு வாதம் என்னவென்று சொன்னா, ‘அறநிலையத்துறை மூலமாக சொல்லப்பட்டிருக்கக்கூடிய அந்தக் கடிதங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு அழுத்தத்தின் காரணமாக சப் ரிஜிஸ்டார் இவற்றை பதிவு செய்திருக்கிறார்’ என்றுசொல்றாங்க. எவ்வளவு ஒரு முன்னுக்குப் பின்னான முரண் பாருங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்து சமய அறநிலையத்துறை மினிஸ்டர் ஒன்னு சொல்றார், ரெஜிஸ்ட்ரேஷன் டிபார்ட்மென்ட் மினிஸ்டர் ஒன்று சொல்றார், கோர்ட்ல அரசு தரப்பு வழக்கறிஞர் வேறு ஒரு வாதத்தை வைக்கிறார். அப்ப இதுல எது உண்மை? நான் என்ன கேட்கிறேன்னா யார் அந்த அழுத்தத்தை கொடுத்தது?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“கோர்ட்ல வழக்கு இருக்கு, கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்று பதிவேட்டில் இருக்கும்போது இதை வெரிபை பண்ணனும் அந்த சப்ரிஜிஸ்டார்.” இது எல்லாம் எதுவுமே செய்யாம இவங்க பதிவு செய்கிறார்கள் என்று சொன்னால் இதுல ஒரு சதி இருக்கு, இது ஒரு பினாமி டிரான்சாக்ஷன் இருக்கு. 15 லட்சம் ரூபாய் ஆன்லைன்ல வந்து ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டாம்ப் டியூட்டியா பணம் கட்டுறாங்க.” இந்த நிலம் பதிவு செய்யப்பட்டதா கிரயம் செய்திருக்கக் கூடிய அந்த இரண்டு நபர் இதுவரை யார் என்று போலீஸ் தரப்பில் காட்டவில்லை. அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு சொத்தை வாங்கு வதற்கான பொருளாதார ரீதியில் பலம்வாய்ந்தவர்கள் இல்லை என்பது எங்களுடைய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது எப்படி இரண்டு கோடி ரூபாய்க்கு இவங்க வந்து பண பரிவர்த்தனை செய்ய முடியும்?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">அமைச்சர்களிடம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பதற்றம் தெரிகிறது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்போது இந்த வழக்கு சம்பந்தமா வினோத் சூர்யா என்ற ஒரு தம்பி  சோசியல் மீடியால ஒரு போஸ்ட் போடுறார், அந்த சோசியல் மீடியால போஸ்ட் பண்ண வரை உடனடியாக கைது பண்றாங்க. நீதிமன்றம் இன்றைக்கு கண்டிச்சிருக்குது, ‘எதுக்கு நீங்க சோசியல் மீடியால டிபர்மேஷன் செக்க்ஷன்ஸ் போடுறதற்கு பதிலா நீங்க ஏன் பயங்கரவாத கலவரம் மேற்கொள்ற இந்த செக்ஷன்ஸ் எல்லாம் போடுறீங்க’னு கோர்ட் கேடக்குது. அப்ப இதிலிருந்து பிரஸ்ட்ரேஷன்ல அமைச்சர்கள் இருக்கக்கூடிய பதற்றம், இந்த அரசாங்கத்தில் இருக்கக்கூடிய பதற்றம் தெரியுது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">சப் ரிஜிஸ்டரை ஏன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">கைது செய்யவில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“தூய்மை ஆட்சி யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம் என சொல்லக்கூடிய டூப் சீப் மினிஸ்டர்... இரவில் சென்று சமூக வலைதளங்கள்ல போஸ்ட் போட்டவங்களை எல்லாம் கைது செய்யக்கூடிய இந்த அரசாங்கம் ஏன் இந்த சப் ரிஜிஸ்டரை இதுவரை கைது செய்யவில்லை?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“இதுக்கு முன்னாடி இருந்த சப்ரிஜிஸ்டார் ஏன் லீவ்ல போனாரு? அவரை ஏன் இன்னும் இவங்க விசாரிக்கவில்லை? இதில் எல்லாமே வந்து ஒரு சீக்குவன்ஸ் இருக்கு, இதுக்குப் பின்னாடி மிகப்பெரிய ஒரு டிரான்சாக்ஷன் இருக்கு. இந்துக் களுக்கு எதிரி என்று எங்களின் மீது போலியாக அவதூறு பரப்பினார்கள். ஆனால் எங்களின் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் வந்து இந்த இடம் பாதுகாக்கப்பட்டது.” ஆனால் இந்த ஆட்சியில் நிலம் தனியாருக்கு தாரைவார்க்கப் பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பழனிக்கு வந்து மொட்டை போடுவாங்கன்னுதான் நாமெல்லாம் பார்த்தோம், பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி. இன்னைக்கு நாட்டு மக்களுடைய முகத்தில் விபூதி அடிச்சிருக்கிறாங்க.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“நான் கேட்கக்கூடிய கேள்வி எல்லாம், அதிகாரிகளை காப்பாற்று வதற்கு இந்த அமைச்சர்கள் ஏன் முன்வந்து வாலண்டரியா பேட்டி கொடுக்கறாங்க. ‘அறியாமையின் காரணமாக செஞ்சிட்டோம்’னு சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ‘எவரிதிங் இஸ் இன் ஆர்டர் ரிஜிஸ்டர் பண்ணலாம்’னு சொல்ல வேண்டிய அவசியம் என்ன? நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் மாற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? இதற்குப் பின்னால் யார் இருக்கறாங்க? இந்த சதி செயலில் யார் ஈடுபட்டிருக்கறாங்க?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">எதுவும் தெரியாத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">அமைச்சர்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“ஏன் அவசர அவசரமாக இதை ரிஜிஸ்டர் பண்றாங்க? இந்த சதிகள் எல்லாம் மறைப்பதற்காக முறுக்கை மோந்து பா்க்கிறவர், புளியோத ரையை டேஸ்ட் பண்ணி பார்க்கிறவர் எல்லாம் இன்னைக்கு வந்து பெரிய வீராவசனம் பேசுறார். இன்னொரு பக்கம் ஒரு பெரிய முந்திரிக்கொட்டை, 420 நிர்மல் குமார். மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் என்னடா இப்படி பேசுறீங்கன்னு நாட்டு மக்கள் எங்கள நீங்க தப்பா நினைக்காதீங்க...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த மூர்த்தி அவர்களை, அது யாரு மூர்த்தி? மூர்த்தினா யாரு? என்றெல்லாம் பேசுகிறார். என்ன பேச்சு இது? “என்னன்னா இந்த பதில் கேள்விக்குப் பதில் சொல்றதுக்கு பயந்துகிட்டு, ‘ராத்திரி எல்லாம் ரிஜிஸ்ட்ரேஷன் நடந்தது’னு சொல்றாரே. ராத்திரி எல்லாம் ரெஜிஸ்ட்ரேஷன் நடக்குதுன்னா முட்டாள்களுக்குத்தான் இது புரியாது. டோக்கன் போட்ட பிறகு யாரெல்லாம் என்னைக்கு டோக்கன் போட்டிரு க்காங்களோ, அந்த டோக்கன் எல்லாம் அன்னைக்கு ரிஜிஸ்டர் பண்ணிட்டு போகணும்ன்றது விதி. இது கூட புரிஞ்சுக்காத அமைச்சர் எல்லாம் இன்னைக்கு நாட்டுல அமைச்சர்களா இருக்கிறாங்க.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">தி.மு.கழகம் நீதிமன்றம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">செல்லத் தயங்காது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“தூய்மையான ஆட்சின்னு சொல்லக்கூடிய விஜய் அரசாங்கம் இன்னைக்கு கோயிலோட லேண்ட இன்னொருத்தருக்கு ரிஜிஸ்டர் பண்ணி கொடுத்துருக்கும்போது, நீங்க எப்படி எங்களைப் பார்த்து குற்றம் சுமத்த முடியும்? மக்கள் முன்னாடி வந்து உண்மையா பேசணுமே தவிர, தேவையில்லாத அரசியல் சர்ச்சைகளை உருவாக்கி பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக மட்டுமே அமைச்சர் பிரஸ் மீட் நடைபெற்றிருக்கு.”வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகம் இது குறித்து நீதிமன்றத்திற்குச் செல்வதற்குத் தயங்காது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">2 கோடி ரூபாய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பணம் யாருடையது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“ஆட்டை காணம்னு சொல்லி கம்ப்ளைன்ட் கொடுக்கிறோம், அந்த கம்ப்ளைன்ட் கொடுத்த பிறகு ஆடு வந்துருச்சுன்னு சொல்லிட்டு திருடனை விட்டுற கதையாதான் இருக்கு. இவங்க என்ன பண்றாங்க, ஜஸ்ட் லைக் தட் ‘லேண்ட் வந்து நாங்க மீட்டோம்’னு சொல்றாங்க. நீங்களா மீட்டிங்க? கோர்ட் ஆர்டர் மீட்டுச்சு. இந்த அப்பீல் ஏன் நீங்க டிலேவா போனீங்க?” “இதிலிருந்து எல்லாமே ஒரு முரண்பாடு இருக்கு, இது முறைகேடு இருக்கு, இதற்குப் பின்னால் மிகப்பெரிய ஒரு சதி இருக்கு. 10 லட்சம், 15 லட்சம் பெருமானம் உள்ள சொத்தை வாங்குவதற்கு கூட பொருளாதார ரீதியில் பலமற்றவர்கள் என்று சொல்லப்படுகிற அந்த இருவர் இன்றைக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு இந்த சொத்தை வாங்கி இருக்கிறார்கள் என்று சொன்னால், அந்த இரண்டு கோடி ரூபாய் பணம் யாருடைய பணம்? யார் இதன் பின்னால் இருக்கிறது? ஏன் அமைச்சர்கள் முன்வந்து இவர்களைக் காப்பாற்ற வேண்டும்?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விஜய் அவர்களே வெறும் கோட்டு சூட்டு போட்டுட்டு வந்து ‘நான் 50 நாள்ல தமிழ்நாட்டில் லஞ்சத்தை ஒழிச்சிட்டேன், நான் வந்து வானத்தை வில்லாக்கிட்டேன்’ என்ற சினிமா டயலாக் எல்லாம் தேவையில்லை. உங்க முதுகுப் பின்னாடியே மிகப்பெரிய அளவில் ஊழல் புறையோடி இருக்கிறது. ஊழலை ஒழிக்க வந்த அவதார புருஷன்’னு விஜய் சொல்றாரு. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது அது. பழனியில் மொட்டை போட போவாங்க ஆனா பழனிக்கே மொட்டை போட்டுள்ளார் இந்த விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்வாறு அவர் பேட்டி அளித்துள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>