<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,62,956,849" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jul 18 2026 23:58:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260719T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="19072026-TRY-07" position.sequence="07" ex-ref="19072026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.9976">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="88">இது பாசிசமா, பாயாசமா முதல்வர் விஜய்?</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup762596_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கருத்­து­ரி­மை­தான் ஜன­நா­ய­கத்­தில் அனைத்து மக்­க­ளுக்­கு­மான ஒரே ஆயு­தம். அந்­தக் கருத்­தா­யு­தத்­தைப் பறித்து, ஜன­நா­ய­கத்­தின் குரல் வளையை நெரிக்­கும் கொடூ­ரத்­த­னம்­தான் பாசி­சம். ஆட்­சிக்கு வந்த இரண்டு மாதங்­க­ளில் விஜய் தலை­மை­யி­லான த.வெ.க அரசு ஜன­நா­ய­கப் படு­கொ­லை­க­ளைத் தொடர்ந்து நடத்தி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய் ஆட்­சி­யின் தவ­று­கள், முறை­கே­டு­கள், ஊழல்­கள் இவற்­றைப் பற்­றிய உண்­மை­கள் வெளி­வந்து விடக்­கூ­டாது என்ற பதற்­றம் நிர்­வா­கத்­தின் மேல் மட்­டத்­தி­லி­ருந்து அடி­மட்­டம் வரை கண்­கூ­டா­கத் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஊழலை ஒழிக்க வந்த உத்­த­மர் போல ஒப்­பனை செய்­துள்ள விஜய், தன் ஆட்­சி­யின் நிர்­வாக சீர்­கே­டு­ க­ளைத் தடுக்­கும் திற­னின்றி, அவற்றை மறைப்­ப­தி­லும் திசை திருப்­பு­வ­தி­லுமே கவ­ன­மாக இருக்­கி­றார். மேடை­யில் ஏறி­னால், “என் ஆட்­சி­யில் ஒரு ரூபாய்­கூட லஞ்­சம் இருக்­காது. யாரா­வது லஞ்­சம் கேட்­டால் இந்த விஜய் பெய­ரைச் சொல்­லுங்க’‘ என்று வீர­வ­ச­னம் பேசு­வார். சட்­ட­மன்­றத்­தில் சொல்ல வேண்­டிய பதில்­க­ளைச் சொல்­லா­மல், “அர­சுப் பணத்­தைத் தொட மாட்­டோம். தொட்டா விட­மாட்­டோம். தொட்­ட­வங்­க­ளை­யும் விட­மாட்­டோம்” என்று பஞ்ச் டய­லாக் பேசு­வார். அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில், “தெரிஞ்­ச­வங்க  தெரி­யா­வ­தங்­கன்னு பார்க்க மாட்­டேன். தப்பு செய்­ப­வர்­கள் யாராக இருந்­தா­லும் அமைச்­சர் பதவி பறிக்­கப்­ப­டும்” என்று அவர் பேசி­ய­தாக செய்­தி­கள் பர­வும். எல்­லா­மும் வாய் வீரம் மட்­டும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">-</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வேலூர் மாவட்­டத்­தில் செங்­கல் சூளை­க­ளில் மாமூல் கேட்ட த.வெ.க நிர்­வாகி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">-கட­லூர் மற்­றும் கிருஷ்­ண­கிரி மாவட்­டங்­க­ளில் வண்­டல் மண் எடுப்­ப­தற்கு விவ­சா­யி­க­ளி­டம் மாமூல் கேட்ட த.வெ.க நிர்­வாகி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">-தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் வாரச்­சந்­தை­யில் மாமூல் கேட்ட த.வெ.க எம்.எல்.ஏ.,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அரசு வழக்­க­றி­ஞர்­கள் நிய­ம­னத்­தில் தலா 30 இலட்­சம்  ரூபாய் வரை  இலஞ்­சம் வாங்­கப்­ப­டு­வ­தாக த.வெ.க. வழக்­க­றி­ஞ­ரா­லேயே குற்­றம்­சாட்­டப் 
­பட்ட த.வெ.க. அமைச்­சர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">-பழநி கோயி­லுக்­குச் சொந்­த­மான 100  கோடி ரூபாய் மதிப்­புள்ள நிலத்­தைத் தனி­யா­ரி­டம் 2 கோடி ரூபாய்க்கு பத்­தி­ரப்­ப­திவு செய்­த­தில் தவறு நடந்­தி­ருக்­கி­றது என்­பதை ஊட­கங்­க­ளி­டமே ஒப்­புக்­கொண்ட த.வெ.க அமைச்­சர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">–எனக் கடந்த இரண்டு மாதங்­க­ளாக வெளிப்­ப­டும் 
லஞ்­ச-­ ஊ­ழல் விவ­கா­ரங்­க­ளில் விஜய் என்ன நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றார்? எத்­தனை பேர் தண்­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்? எவ்­வ­ளவு பணம் அரசு கஜா­னா­வுக்கு வந்­தி­ருக்­கி­றது?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சொந்­தக் கட்­சிக்­கா­ரர்­க­ளின் லஞ்­ச-­ஊ­ழல் நட­வ­டிக்­கை­களை மறைப்­பதை மட்­டுமே விஜய் அரசு கடந்த இரண்டு மாதங்­க­ளா­கச் செய்து வரு­கி­றது. மறைக்­கப்­ப­டும் ஊழல்­க­ளை­யும், உண்மை நில­வ­ரங்­க­ளை­யும் வெளிக் கொண்டு வரும் சமூக வலை­த­ளச் செயல்­பாட்­டா­ளர்­க­ளைக் குறி வைத்து, காவல்­துறை மூல­மாக அச்­சு­றுத்தி,  கைது செய்­யும் நட­வ­டிக்­கையை த.வெ.க. அரசு மேற்­கொண்டு வரு­கி­றது. ஜன­நா­ய­கம் வழங்­கி­யுள்ள கருத்­து­ரி­மைக்கு எதி­ரான பாசிச அடக்­கு­மு­றையை ஏவிக் கொண்­டி­ருக்­கி­றது விஜய் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சினிமா ரசி­கர்­க­ளாக சமூக வலை­த­ளங்­க­ளில் செயல்­பட்டு வந்த தன்­னார்­வ­லர்­க­ளைக்  கொண்டு தனக்கு ஆத­ர­வா­க­வும், தி.மு.க. ஆட்­சிக்கு எதி­ரான பொய்­க­ளை­யும் பரப்பி  ஆட்­சிக்கு வந்­த­வர் விஜய். அவ­ரு­டைய ஒட்­டு­மொத்த கட்சி நிர்­வா­கி­க­ளுமே ‘ரீல்ஸ்’ வகை­ய­றாக்­கள்­தான். எந்­தச் சமூக வலை­த­ளங்­க­ளும், அதில் பதி­வி­டப்­பட்ட ரீல்ஸ்­க­ளும் தங்­களை ஆட்சி வர வைத்­ததோ, அந்­தத் தளங்­க­ளும் ரீல்ஸ்­க­ளும்­தான் இன்று கொள்கை உணர்­வு­மிக்க  GenZ தலை­மு­றை­யி­ன­ரின் மூலம் த.வெ.க அர­சின் மோச­டி­களை அம்­ப­லப்­ப­டுத்­து­கின்­றன. பொய்­க­ளைப் பரப்­பு­வ­தற்கு தங்­க­ளுக்­குப் பயன்­பட்ட சமூக வலை­த­ளங்­கள், இப்­போது உண்­மை­களை வெளிப்­ப­டுத்­தப் பயன்­ப­டு­வ­தால் த.வெ.க பத­று­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஊட­கங்­க­ளின் வாயைத் தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­தி­ருப்­ப­து­போல சமூக வலை­த­ளங்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்த நினைக்­கி­றது விஜய் அரசு. அது எளி­தல்ல என்­ப­தால்­தான், உண்­மை­க­ளைப் பதி­வி­டு­வோரை முடக்கி விட வேண்­டும் என்ற திட்­டத்­து­டன் அவர்­கள் மீது வழக்­கு­க­ளைப் பதிவு செய்து மிரட்­டும் வேலை­க­ளில் இறங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">GenZ தலை­மு­றை­யி­னர் பொது இடங்­க­ளில் நிகழ்ச்­சி­களை நடத்­து­கி­றார்­கள். அதற்கு அனைத்­துத் தரப்­பி­ன­ரும் வருகைதரு­கி­றார்­கள். த.வெ.க ஆட்­சி­யின்அவ­லங்­களை உரை­வீச்­சா­க­வும் கலை­வ­டி­வங்­க­ளி­லும் வெளிப்­ப­டுத்து கின்­ற­னர். அத­னைக் குழந்­தை­கள்முதல் பெரி­ய­வர்­கள் முதல் புரிந்து, உணர்ந்து வர­வேற்­கி­றார்­கள். GenZ நிகழ்­வு­ க­ளின் வீடி­யோக்­கள் சமூக வலை­த­ளங்­க­ளில் பதி­வி­டப்­ப­டு­கின்­றன. அவை பல இலட்­சம் பார்­வை­யா­ளர்­க­ளைச் சென்­ற­டைந்து, விஜய் ஆட்­சி­யின் நிர்­வா­கச் சீர்­கே­டு­களை  அம்­ப­லப்­ப­டுத்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னைப் பொறுத்­துக் கொள்ள முடி­யா­மல், இந்­திய அர­சி­யல் சட்­டம்வழங்­கி­யுள்ள கருத்­துச் சுதந்­தி­ரத்­திற்குசவால் விடும் வகை­யில் த.வெ.க. அரசு பாசி­சத் தன்­மை­யு­டன், சமூக வலை­த­ளப் பதி­வா­ளர்­கள் மீது வழக்­கு­க­ளைப் பதிவு செய்து, கைது நட­வடிக்­கையை மேற்­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தாம்­ப­ரத்­தைச் சேர்ந்த சரண் ஜெய­ரா­மன் என்ற சமூக வலைத்­தள இளம் பதி­வர்  மீது அவ­சர அவ­ர­ச­மாக வழக்­குத் தொட­ரப்­பட்டு, இர­வோடு இர­வாக கைது செய்து, அதி­கா­லை­யில் நீதி­பதி முன் ஆஜர்­ப­டுத்­தி ­யது காவல்­துறை. தி.மு.க.வின் சட்­டத்­து­றை­யைச் சேர்ந்த வழக்­க­றி­ஞர்­கள் கள­மி­றங்கி, அந்­தப் பதி­வ­ருக்கு ஆத­ர­வாக ஆஜ­ராகி, வழக்­கின் தன்­மையை எடுத்­து­ரைத்­த­தன் விளை­வாக, அவ­ரைச் சிறைக்கு அனுப்ப மறுத்து, பிணை­யில் விடு­வித்­தது நீதி­மன்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தைச் சேர்ந்த  அன்­பா­னந்­தம் என்ற GenZ இளை­ஞ­ரைக் கைது செய்­வ­தற்­காக, த.வெ.க அர­சின் காவல்­துறை நள்­ளி­ர­வுக்கு மேல் வீடு புகுந்து, தீவி­ர­வாதி போல தேடு­தல் வேட்டை நடத்­தி­யது. மேடை­க­ளில் ஆதா­ரப்­பூர்­வ­மா­கப் பேசு­வ­து­டன், சமூக வலை­த­ளங்­க­ளில் அதி­க­ள­வி­லான பார்­வை­யா­ளர்­களை ஈர்க்­கும் வகை­யில் ‘ரீல்ஸ்’­க­ளை­யும் அன்­பா­னந்­தம் பதி­விட்­ட­ தால் பதற்­ற­மான த.வெ.க அரசு தனது காவல்­துறை மூலம் இந்த அடா­வ­டிச் செயலை மேற்­கொண்­டது. கழ­கக் குடும்­பத்­த­வ­ரான அன்­பா­னந்­தத்­திற்கு ஆத­ர­வாக மாவட்­டக் கழக நிர்­வா­க­மும் வழக்­க­றி­ஞர்­க­ளும் துணை நின்று, சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­தன் விளை­வாக, அன்­பா­னந்­தம் நீதி­மன்­றத்­தில் நேரில் ஆஜ­ராகி, பிணைபெற்­றார். அவ­ரைச் சிறை­யில் அடைத்துசித்­தி­ர­வதை செய்ய நினைத்த த.வெ.க அர­சின் முயற்சி, நீதி­யின் முன்­னால் முறிந்து போனது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரூர் மாவட்­டம் குளித்­த­லை­யைச் சேர்ந்த மாற்­றுத்­தி­ற­னாளி பரளி தங்­கம் சமூக வலை­த­ளங்­க­ளில் தீவி­ர­மா­கச் செயல்­ப­டு­ப­வர். விஜய்யை விமர்­சித்து பதிவு செய்­தார் என்று சொல்லி காவல்­துறை ஈவு இரக்­க­மின்­றிக் கைது செய்து வாக­னத்­தில் ஏற்றி நீதி­மன்­றத்­தில் கொண்டு போய் நிறுத்­திய போது, அந்­தக் கொடூ­ரத்­தைச் சகிக்க முடி­யா­மல் நீதி­ப­தியே பரளி தங்­கத்­திற்கு ஜாமீன் வழங்­கி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேடை­க­ளில் பொது­மக்­கள் 
முன்­னி­லை­யில் பீப் வார்த்­தை­க­ளில் பேசு­கின்ற முதல்­வர் விஜய்யை விட மோச­மாக தமிழ்­நாட்­டில் இன்­னொ­ரு­வர் பேசவோ பதிவு செய்­யவோ  
முடி­யுமா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்­னை­யைச் சேர்ந்த விநோத் என்ற GenZ இளை­ஞர் தனது சமூக வலை­த­ளப் பக்­கத்­தில், பழநி கோயில் நில மோசடி பற்­றிப் பதி­விட்­டி­ருந்­தார். நிலத்தை தனி­யா­ருக்­குப் பதிவு செய்­தது  பற்றி இரண்டு அமைச்­சர்­கள்அளித்த பேட்­டி­யில், “தவறு நடந்­துள்­ளது’‘என்று தெரி­வித்­த­தைச் சுட்­டிக்­காட்டி,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“தி.மு.க.- அ.தி.மு.க. ஆட்­சிக்­கா­லங்­க­ளில் நடந்­தால் ஊழல், த.வெ.க. ஆட்­சி­யில் நடந்­தால் தவறு”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்­ப­து­தான் அவ­ரது பதிவு. இது ஒரு மிகச் சாதா­ர­ண­மான அர­சி­யல் விமர்­ச­னம். அர­சி­யல் சட்­டம் அனு­ம­தித்­தி­ருக்­கும் கருத்­துச்  சுதந்­தி­ரம். இத­னைக்­கூ­டப் பொறுத்­துக் கொள்ள முடி­யா­மல் காவல்­துறை அவர் மீது வழக்­குப் பதிவு செய்­தது. விசா­ர­ணைக்கு அழைப்­ப­தா­கக் கூறி, காவல்­நி­லை­யத்­திற்கு வர­வைத்து, கைது செய்து, இர­வோடு இர­வாக நீதி­பதி முன் ஆஜர்­ப­டுத்தி சிறைக்கு அனுப்­பி­விட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய் தலை­மை­யி­லான த.வெ.க அர­சின் இந்த ஜன­நா­யக விரோத நட­வ­டிக்­கையை எதிர்த்து</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உயர்­நீ­தி­மன்­றத்­தில் தி.மு.க. சட்­டத்­து­றை­யின் சார்­பில் வழக்­க­றி­ஞர் சர­வ­ணன் அண்­ணா­துரை வழக்குத் தொடர்ந்­தார். வழக்கை விசா­ரித்த நீதி­மன்­றம், “அர­சி­யல்விமர்­ச­னங்­க­ளுக்கு அவ­தூறு வழக்­கு­தானே தொடர முடி­யும்?  குற்ற வழக்­குத் தொடர்ந்­தது ஏன்?இது போல செயல்­ப­டக்­கூ­டாது என்று அர­சி­டம் தெரி­வி­யுங்­கள்’‘ என அரசு வழக்­க­றி­ஞ­ருக்கு அறி­வு­றுத்­தி­யது. எந்­தச் செய­லுக்கு என்ன வகை­யான வழக்­குத் தொடுக்க வேண்­டும் என்­கிற சட்ட அறி­வு­கூட இல்­லா­மல், பழி­வாங்­கும் உணர்ச்­சி­யு­டன் செயல்­ப­டு­கி­றது த.வெ.க அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமூக வலை­த­ளங்­க­ளில் த.வெ.க. அர­சுக்கு ‘ஜால்ரா’ ரீல்ஸ் போடு­ப­வர்­கள் மட்­டுமே செயல்­பட வேண்­டும் என்­றும், விமர்­ச­னங்­களே கூடாது என்­றும் நினைக்­கி­றார்­கள். கருத்­து­ரி­மை­யின் கழுத்­தில் கத்­தியை வைத்­துக் கீறு­கி­றார்­கள். இதன் அடுத்த கட்­ட­மாக, ஊட­க­வி­ய­லா­ளர் விஜ­யனை விஜய் அரசு ‘காவல்­துறை விசா­ரணை’ என்ற பெய­ரில் திரும்­பத் திரும்ப அழைத்து அலைக்­க­ழித்­தது. ஊட­கத்­து­றை­யி­னர் பல தரப்­பி­ன­ரி­ட­மும் தொடர்பு கொண்டு பேசு­வ­தும், செய்­தி­கள் சேக­ரிப்­ப­தும் அவர்­க­ளின் துறை சார்ந்த இயல்­பான செயல்­பா­டு­க­ளா­கும். விஜ­யன் தன் ஊட­கத்­து­றைப் பணி கார­ண­மா­கத் தொடர்பு கொண்டு பேசி­ய­தில் சந்­தே­கம் கொண்டு, அவரை விசா­ர­ணைக்கு அழைத்த காவல்­துறை, அவர் எங்கே இருக்­கி­றார், அவ­ரது நிலை என்ன என்­ப­து­கூ­டத் தெரி­யாத வகை­யில் செயல்­பட்­டது. இது குறித்து ஊட­கத்­து­றை­யி­ன­ரும், சமூக வலை­த­ளச் செயல்­பாட்­டா­ளர்­க­ளும் கேள்வி எழுப்­பிய பிறகே, ஊட­க­வி­ய­லா­ளர் விஜ­யனை வெளியே அனுப்பி, விளக்க அறிக்­கை­யும் வெளி­யிட்­டது காவல்­துறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பாசி­சமா, பாயா­சமா என த.வெ.க மேடை­க­ளில் அரு­வ­ருப்­பான உடல்­மொ­ழி­யு­டன் பேசி­ய­வர் விஜய். தற்­போது அவர் முதல்­வ­ராக இருக்­கி­றார். கருத்­து­ரி­மையை நசுக்கி, ஜன­நா­ய­கத்­தின் குரல்­வ­ளையை நெரிக்­கும் உங்­கள் தலை­மை­யி­லான த.வெ.க அர­சின் கைது நட­வ­டிக்­கை­கள் பாசி­சமா, பாயா­சமா முதல்­வர் விஜய்?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>