<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,371,958,1110" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 19 2026 00:00:52 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260719T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="19072026-VLR-03" position.sequence="03" ex-ref="19072026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">அறநிலையத்துறை அமைச்சர் – த.வெ.க. அரசின் மிகப் பெரிய சதி!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="29"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">ரூ.100 கோடி நில மோசடி – பழனிக்கே மொட்டை போட்ட விஜய் ஆட்சி! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">கழக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் குற்றச்சாட்டு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="parandhamanbw_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஜூலை 19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பழ­னி­கோ­யில் ரூ.100 கோடி நில மோசடி –- குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­று­கி­றார் அற­நி­லை­யத்­துறை அமைச்­சர். - த.வெ.க. அர­சின் மிகப்­பெ­ரிய சதி இது. முன்­னுக்­குப் பின் முர­ணாக பேசு­கின்­ற­னர் அமைச்­சர்­கள் என்­றும் பழனி கோயில் நில மோச­டி­யில் பினாமி பரி­வர்த்­தனை நடந்­துள்­ளது. - பழ­னிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி என்­றும் கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் குற்­றம் சாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">100 கோடி ரூபாய் பழனி கோவில் நில­மோ­சடி ஊழல் விவ­கா­ரம் தொடர்­பாக சட்­டத்­துறை இணைச் செய­லா­ள­ரும், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வழக்­க­றி­ஞர் இ.பரந்­தா­மன் அவர்­க­ளது பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">•	பழ­னிக்கே மொட்டை போட்ட விஜய் ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">•	பழனி கோவில் நில மோச­டி­யில் மிகப்­பெ­ரிய சதி நடந்­துள்­ளது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">•	குற்­ற­வா­ளி­க­ளைக் காப்­பாற்­றும் அற­நி­லை­யத்­துறை அமைச்­சர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பழனி முரு­கன் கோவி­லுக்­குச் சொந்­த­மான 100 கோடி மதிப்­புள்ள 1.41 ஏக்­கர் நிலத்தை தனி­யார் இரு­வர் பதிவு செய்­துள்­ள­னர். இது­பற்றி இரண்டு அமைச்­சர்­கள் முன்­னுக்­குப் பின் முர­ணா­கப் பேசி வரு­கின்­ற­னர். இந்த நிலம் கோவி­லுக்கு சொந்த மானது, இதை பதிவு செய்­யக் கூடாது என சார்­ப­தி­வா­ளர் அலு­வ­ல­கத்­திற்கு கோவில் தரப்­பில் இருந்து ஏற்­க­னவே கடி­தம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பினா­மிப் பெய­ரில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பத்­தி­ரப் பதிவு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த தி.மு.க. ஆட்­சி­யில் தனி­யார் ஆக்­கி­ர­மிப்­பில் இருந்த நிலத்தை கைப்­பற்றி கோவில் கார் பார்க்­கிங்­கிற்­கா­கப் பயன்­ப­டுத்­தப் பட்­டது. ஆனால் இந்த நிலம் இப்­போது திடீ­ரென தனி­யார் பெய­ரில் பதிவு செய்­யப்­பட்­டது அதிர்ச்­சி­யா­ளிக்­கி­றது. இதன் பின்­னால் சதி நடந்­துள்­ளது. பினாமி பெய­ரில் பத்­தி­ரப்­ப­திவு நடந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த விவ­கா­ரத்­தைப் பற்றி இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் பேசும் போது அறி­யா­மை­யின் கார­ண­மாக அதி­கா­ரி­கள் இதை பதிவு செய்­தி­ருக்­கார்­கள் என கூறு­கி­றார். விசா­ரணை தொடங்­காத போது அமைச்­சரே முன் வந்து இப்­படி சொல்­வது என்­பது குற்­ற­வா­ளி­க­ளைக் காப்­பாற்றி குற்­றத்தை மறைக்க அமைச்­சரே துணை போகி­றார் என்­பது இதன் மூலம் தெளி­வா­கத் தெரி­கி­றது. நாங்­கள் இது­பற்றி விசா­ரிக்­கி­றோம் என கூறி­யி­ருக்க வேண்­டுமே தவிர தானே முன் வந்து இது­போன்று அமைச்­சர் பேசி குற்­ற­வா­ளி­யைக் காப்­பாற்­று­கி­றார் என்­பது தான் எங்­க­ளின் குற்­றச்­சாட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த அரசை பார்த்து நாங்­கள் கேட்­கிற கேள்வி, ஜூலை 2–ஆம் தேதி இந்து சமய அற­நி­லை­யத் துறை­யின் சார்­பாக கடி­தம் கொடுக்­கப்­பட்­டது. ஆனால் 3–ஆம் தேதி இந்த பத்­தி­ரப் பதிவு செய்­யச் சொல்லி அதற்­கான டாக்­கு­மெண்ட் ரெஜிஸ்ட்­ரே­ஷன் அலு­வ­ல­கத்­தில் கொடுக்­கப்­ப­டு­கி­றது. அன்­றைக்கு இருந்த சப்­ரி­ஜிஸ்த்­தார் திரு.பழ­னி­சாமி என்­ப­வர், ‘இவற்றை நான் பதிவு செய்ய மாட்­டேன் ஏனென்­றால் ஏற்­க­னவே கடி­தம் இருக்­கி­றது’ என்று சொல்­லி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதன் பிறகு மூன்­றாம் தேதி பால­சுந்­த­ரம் என்­கின்ற ஒரு பதி­வா­ளர் அன்­றைக்­குப் பணி­ய­மர்த்­தப் படு­கி­றார். அவர் இந்த டாக்­கு­மெண்ட் ரிசீவ் பண்­ணிட்டு ‘நான் ரிஜிஸ்­டர் பண்ண மாட்­டேன்’ என்று சொல்­லிட்டு அவர் விடுப்­பில் சென்று விடு­கி­றார். பிறகு 4 , 5 ஆம் தேதி  சனி, ஞாயிறு. 6 ஆம் தேதி திங்­கட்­கி­ழமை பத்­தி­ரப்­ப­திவு நடந்­துள்­ளது. 6 ஆம் தேதி அன்று பழனி சப் ரிஜிஸ்­டர் ஆபீ­சில் இருக்­கக்­கூ­டிய சார் பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில் உள்­ள­வர்­கள் லீவ் போட்டு போயிட்­டாங்க. அப்ப இன்­சார்ஜ்ஜா யாரைக் கூட்­டிட்டு வராங்­கன்னா பழ­னி­யில் இருந்து 60, 70 கிலோ­மீட்­டர் தள்ளி இருக்­கும் கொடைக்­கா­னல் சப் ரிஜிஸ்­டரை அழைத்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பழ­னிக்கு பக்­கத்­துல சத்­தி­ரப் பட்­டின்னு 10 கிலோ­மீட்­டர்ல இருக்கு, அங்க இருக்­கிற சப்–­ரி­ஜிஸ்­டார் இன்­சார்ஜ் கொடுத்­து­ருக்­க­ணும், அப்­படி இல்­லன்னா கீர­னூர்னு ஒரு சப் ரெஜிஸ்ட்­ரே­ஷன் ஆபீஸ் இருக்கு அங்க அவங்­க­கிட்ட இன்­சார்ஜ் கொடுத்­தி­ருக்­க­ணும். ஆனா கொடைக்­கா­னல் சப் ரிஜிஸ்­டர் ஆபீஸ்க்கு கொடுக்­கப்­பட்­டி­ருக்­குன்னா, ஆள பிக்ஸ் பண்­றாங்க இந்த கவர்­மெண்ட். “அது­வும் கொடைக்­கா­னல் இருக்­கக்­கூ­டிய சப் ரிஜிஸ்­ட­ரார் பத்­தி­ரங்­களை பதிவு செய்­யக்­கூ­டிய சப்­ரி­ஜிஸ்­டர் அல்ல; 
டி.ஆர். சிட்­பண்ட், சிட் பண்­டுக்­குன்னு ஒரு தனியா டிஸ்ட்­ரிக்ட் ரெஜிஸ்­ட­ரார் இருக்­கி­றார், அவர் அழைச்­சிட்டு வந்து இன்­சார்ஜ் கொடுக்­க­றாங்க.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“இன்­னொரு வேடிக்கை என்­னன்னா பத்­தி­ரப்­ப­தி­வுத்­துறை அமைச்­சர் என்ன சொல்­றாரு, ‘கோர்ட்­டோட ஆர்­டர்ல டாக்­கு­மெண்ட் எல்­லாம் சரியா இருந்­த­துன்னா பதிவு செய்­ய­லாம்னு இருந்­த­து­னால அவங்­கள் பதிவு செஞ்­சிட்­டாங்­க’னு சொல்­றார். ‘அறி­யா­மை­யின் காரணமாக செஞ்­சிட்­டாங்­க’னு சொல்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">முன்­னுக்­குப் பின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">முர­ணான பதில்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பத்­தி­ரப் பதி­வுத் துறை அமைச்­சர் என்ன சொல்­றாரு, ‘டாக்­கு­மெண்ட் இஸ் இன் ஆர்­டர்’னு கோர்ட் சொல்­லு­துன்னு சொல்­றாங்க. ஆனால் மேல்­மு­றை­யீட்­டுக்­குப் போன இடத்­தில் அரசு தரப்பு வாதம் என்­ன­வென்று சொன்னா, ‘அற­நி­லை­யத்­துறை மூல­மாக சொல்­லப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய அந்­தக் கடி­தங்­கள் எல்­லாம் மறைக்­கப்­பட்டு அழுத்­தத்­தின் கார­ண­மாக சப் ரிஜிஸ்­டார் இவற்றை பதிவு செய்­தி­ருக்­கி­றார்’ என்று சொல்­றாங்க. எவ்­வ­ளவு ஒரு முன்­னுக்­குப் பின்­னான முரண் பாருங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்து சமய அற­நி­லை­யத்­துறை மினிஸ்­டர் ஒன்னு சொல்­றார், ரெஜிஸ்ட்­ரே­ஷன் டிபார்ட்­மென்ட் மினிஸ்­டர் ஒன்று சொல்­றார், கோர்ட்ல அரசு தரப்பு வழக்­க­றி­ஞர் வேறு ஒரு வாதத்தை வைக்­கி­றார். அப்ப இதுல எது உண்மை? நான் என்ன கேட்­கி­றேன்னா யார் அந்த அழுத்­தத்தை கொடுத்­தது?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“கோர்ட்ல வழக்கு இருக்கு, கோயி­லுக்­குச் சொந்­த­மான நிலம் என்று பதி­வேட்­டில் இருக்­கும்­போது இதை வெரிபை பண்­ண­னும் அந்த சப்­ரி­ஜிஸ்­டார்.” இது எல்­லாம் எது­வுமே செய்­யாம இவங்க பதிவு செய்­கி­றார்­கள் என்று சொன்­னால் இதுல ஒரு சதி இருக்கு, இது ஒரு பினாமி டிரான்­சா­க்ஷன் இருக்கு. 15 லட்­சம் ரூபாய் ஆன்­லைன்ல வந்து ரிஜிஸ்ட்­ரே­ஷன் ஸ்டாம்ப் டியூட்­டியா பணம் கட்­டு­றாங்க.” இந்த நிலம் பதிவு செய்­யப்­பட்­டதா கிர­யம் செய்­தி­ருக்­கக் கூடிய அந்த இரண்டு நபர் இது­வரை யார் என்று போலீஸ் தரப்­பில் காட்­ட­வில்லை. அவங்க ரெண்டு பேருக்­கும் ஒரு சொத்தை வாங்குவதற்­கான பொரு­ளா­தார ரீதி­யில் பலம்­வாய்ந்­த­வர்­கள் இல்லை என்­பது எங்­க­ளு­டைய விசா­ர­ணை­யில் தெரிய வந்­தி­ருக்­கி­றது. அப்­படி இருக்­கும்­போது எப்­படி இரண்டு கோடி ரூபாய்க்கு இவங்க வந்து பண பரி­வர்த்­தனை செய்ய முடி­யும்?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">அமைச்­சர்­க­ளி­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பதற்­றம் தெரி­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது இந்த வழக்கு சம்­பந்­தமா வினோத் சூர்யா என்ற ஒரு தம்பி  சோசி­யல் மீடி­யால ஒரு போஸ்ட் போடு­றார், அந்த சோசி­யல் மீடி­யால போஸ்ட் பண்ண வரை உட­ன­டி­யாக கைது பண்­றாங்க. நீதி­மன்­றம் இன்­றைக்கு கண்­டிச்­சி­ருக்­குது, ‘எதுக்கு நீங்க சோசி­யல் மீடி­யால டிபர்­மே­ஷன் செக்­க்ஷன்ஸ் போடு­ற­தற்கு பதிலா நீங்க ஏன் பயங்­க­ர­வாத கல­வ­ரம் மேற்­கொள்ற இந்த 
செ­க்ஷன்ஸ் எல்­லாம் போடு­றீங்­க’னு கோர்ட் கேடக்­குது. அப்ப இதி­லி­ருந்து பிரஸ்ட்­ரே­ஷன்ல அமைச்­சர்­கள் இருக்­கக்­கூ­டிய பதற்­றம், இந்த அர­சாங்­கத்­தில் இருக்­கக்­கூ­டிய பதற்­றம் தெரி­யுது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">சப் ரிஜிஸ்­டரை ஏன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">கைது செய்­ய­வில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“தூய்மை ஆட்சி யார் தவறு செய்­தா­லும் நட­வ­டிக்கை எடுப்­போம் என சொல்­லக்­கூ­டிய டூப் சீப் மினிஸ்­டர்... இர­வில் சென்று சமூக வலை­த­ளங்­கள்ல போஸ்ட் போட்­ட­வங்­களை எல்­லாம் கைது செய்­யக்­கூ­டிய இந்த அர­சாங்­கம் ஏன் இந்த சப் ரிஜிஸ்­டரை இது­வரை கைது செய்­ய­வில்லை?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“இதுக்கு முன்­னாடி இருந்த சப்­ரி­ஜிஸ்­டார் ஏன் லீவ்ல போனாரு? அவரை ஏன் இன்­னும் இவங்க விசா­ரிக்­க­வில்லை? இதில் எல்­லாமே வந்து ஒரு சீக்­கு­வன்ஸ் இருக்கு, இதுக்­குப் பின்­னாடி மிகப்­பெ­ரிய ஒரு டிரான்­சா­க்ஷன் இருக்கு. இந்­துக் களுக்கு எதிரி என்று எங்­க­ளின் மீது போலி­யாக அவ­தூறு பரப்­பி­னார்­கள். ஆனால் எங்­க­ளின் திரா­விட முன்­னேற்­றக்­க­ழக ஆட்­சி­யில் வந்து இந்த இடம் பாது­காக்­கப்­பட்­டது.” ஆனால் இந்த ஆட்­சி­யில் நிலம் தனி­யா­ருக்கு தாரை­வார்க்­கப்பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பழ­னிக்கு வந்து மொட்டை போடு­வாங்­கன்­னு­தான் நாமெல்­லாம் பார்த்­தோம், பழ­னிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி. இன்­னைக்கு நாட்டு மக்­க­ளு­டைய முகத்­தில் விபூதி அடிச்­சி­ருக்­கி­றாங்க.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“நான் கேட்­கக்­கூ­டிய கேள்வி எல்­லாம், அதி­கா­ரி­களை காப்­பாற்றுவதற்கு இந்த அமைச்­சர்­கள் ஏன் முன்­வந்து வாலண்­ட­ரியா பேட்டி கொடுக்­க­றாங்க. ‘அறி­யா­மை­யின் கார­ண­மாக செஞ்­சிட்­டோம்’னு சொல்ல வேண்­டிய அவ­சி­யம் என்ன? ‘எவ­ரி­திங் இஸ் இன் ஆர்­டர் ரிஜிஸ்­டர் பண்­ண­லாம்’னு சொல்ல வேண்­டிய அவ­சி­யம் என்ன? நீதி­மன்­றத்­தில் அரசு வழக்­க­றி­ஞர்­கள் மாற்றி பேச வேண்­டிய அவ­சி­யம் என்ன? இதற்­குப் பின்­னால் யார் இருக்­க­றாங்க? இந்த சதி செய­லில் யார் ஈடு­பட்­டி­ருக்­க­றாங்க?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">எது­வும் தெரி­யாத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">அமைச்­சர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“ஏன் அவ­சர அவ­ச­ர­மாக இதை ரிஜிஸ்­டர் பண்­றாங்க? இந்த சதி­கள் 
எல்­லாம் மறைப்­ப­தற்­காக முறுக்கை மோந்து பா்க்கிற­வர், புளி­யோதரையை டேஸ்ட் பண்ணி பார்க்­கி­ற­வர் எல்­லாம் இன்­னைக்கு வந்து பெரிய வீரா­வ­ச­னம் பேசு­றார். இன்­னொரு பக்­கம் ஒரு பெரிய முந்­தி­ரிக்­கொட்டை, 420 நிர்­மல் குமார். மாண்­பு­மிகு சட்­டத்­துறை அமைச்­சர் என்­னடா இப்­படி பேசு­றீங்­கன்னு நாட்டு மக்­கள் எங்­கள நீங்க தப்பா நினைக்­கா­தீங்க...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த ஆட்­சி­யில் அமைச்­ச­ராக இருந்த மூர்த்தி அவர்­களை, அது யாரு மூர்த்தி? மூர்த்­தினா யாரு? என்­றெல்­லாம் பேசு­கி­றார். என்ன பேச்சு இது? “என்­னன்னா இந்த பதில் கேள்­விக்­குப் பதில் சொல்­ற­துக்கு பயந்­து­கிட்டு, ‘ராத்­திரி எல்­லாம் ரிஜிஸ்ட்­ரே­ஷன் நடந்­த­து’னு சொல்­றாரே. ராத்­திரி எல்­லாம் ரெஜிஸ்ட்­ரே­ஷன் நடக்­கு­துன்னா முட்­டாள்­ 
க­ளுக்­குத்­தான் இது புரி­யாது. டோக்­கன் போட்ட பிறகு யாரெல்­லாம் என்­னைக்கு டோக்­கன் போட்­டிருக்காங்­களோ, அந்த டோக்­கன் எல்­லாம் அன்­னைக்கு 
ரிஜிஸ்­டர் பண்­ணிட்டு போக­ணும்ன்­றது விதி. இது கூட புரிஞ்­சுக்­காத அமைச்­சர் எல்­லாம் இன்­னைக்கு நாட்­டுல அமைச்­சர்­களா இருக்­கி­றாங்க.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">தி.மு.கழ­கம் நீதி­மன்­றம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">செல்­லத் தயங்­காது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“தூய்­மை­யான ஆட்­சின்னு சொல்­லக்­கூ­டிய விஜய் அர­சாங்­கம் இன்­னைக்கு கோயி­லோட லேண்ட இன்­னொ­ருத்­த­ருக்கு ரிஜிஸ்­டர் பண்ணி கொடுத்­து­ருக்­கும்­போது, நீங்க எப்­படி எங்­க­ளைப் பார்த்து குற்­றம் சுமத்த முடி­யும்? மக்­கள் முன்­னாடி வந்து உண்­மையா பேச­ணுமே தவிர, தேவை­யில்­லாத அர­சி­யல் சர்ச்­சை­களை உரு­வாக்கி பிரச்­சி­னை­களை திசை திருப்­பு­வ­தற்­காக மட்­டுமே அமைச்­சர் பிரஸ் மீட் நடை­பெற்­றி­ருக்கு. ‘‘வழக்கு விசா­ரணை சரி­யாக நடை­பெ­ற­வில்லை என்று சொன்­னால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இது குறித்து நீதி­மன்­றத்­திற்­குச் செல்­வ­தற்­குத் தயங்­காது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">2 கோடி ரூபாய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பணம் யாரு­டை­யது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“ஆட்டை காணம்னு சொல்லி கம்ப்­ளைன்ட் கொடுக்­கி­றோம், அந்த கம்ப்­ளைன்ட் கொடுத்த பிறகு ஆடு வந்­து­ருச்­சுன்னு சொல்­லிட்டு திரு­டனை விட்­டுற கதை­யா­தான் இருக்கு. இவங்க என்ன பண்­றாங்க, ஜஸ்ட் லைக் தட் ‘லேண்ட் வந்து நாங்க மீட்­டோம்’னு சொல்­றாங்க. நீங்­களா மீட்­டிங்க? கோர்ட் ஆர்­டர் மீட்­டுச்சு. இந்த அப்­பீல் ஏன் நீங்க டிலேவா போனீங்க?” “இதி­லி­ருந்து எல்­லாமே ஒரு முரண்­பாடு இருக்கு, இது முறை­கேடு இருக்கு, இதற்­குப் பின்­னால் மிகப்­பெ­ரிய ஒரு சதி இருக்கு. 10 லட்­சம், 15 லட்­சம் பெரு­மா­னம் உள்ள சொத்தை வாங்­கு­வ­தற்கு கூட பொரு­ளா­தார ரீதி­யில் பல­மற்­ற­வர்­கள் என்று சொல்­லப்­ப­டு­கிற அந்த இரு­வர் இன்­றைக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு இந்த சொத்தை வாங்கி இருக்­கி­றார்­கள் என்று சொன்­னால்,அந்த இரண்டு கோடி ரூபாய் பணம் யாரு­டைய பணம்? யார் இதன் பின்­னால் இருக்­கி­றது? ஏன் அமைச்­சர்­கள் முன்­வந்து இவர்­க­ளைக் காப்­பாற்ற வேண்­டும்?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விஜய் அவர்­களே வெறும் கோட்டு சூட்டு போட்­டுட்டு வந்து ‘நான் 50 நாள்ல தமிழ்­நாட்­டில் லஞ்­சத்தை ஒழிச்­சிட்­டேன், நான் வந்து வானத்தை வில்­லாக்­கிட்­டேன்’ என்ற சினிமா டய­லாக் எல்­லாம் தேவை­யில்லை. உங்க முது­குப் பின்­னா­டியே மிகப்­பெ­ரிய அள­வில் ஊழல் புறை­யோடி இருக்­கி­றது. ஊழலை ஒழிக்க வந்த அவ­தார புரு­ஷன்’னு விஜய் சொல்­றாரு. முழு பூச­ணிக்­காயை சோற்­றில் மறைப்­பது அது. பழ­னி­யில் மொட்டை போட போவாங்க ஆனா பழ­னிக்கே மொட்டை போட்­டுள்­ளார் இந்த விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு அவர் பேட்டி அளித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>