<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="386,67,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 20 2026 03:53:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260720T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="20072026-VLR-07" position.sequence="07" ex-ref="20072026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">47 - ஆவது ஆண்டில் இணையில்லா இளைஞர் அணி </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="32">களத்­தி­லும், கணி­னி­யி­லும் சுழன்­ற­டிக்­கும் பாசறை! தமிழ்­நாட்டை மீட்­கும் 
போரில் திரா­வி­டப் பேரா­யு­தம் தி.மு.க. இளை­ஞ­ரணி! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup765514_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="GaqhK9DaUAARl3D_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="17">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு என்பது தேர்தல் வெற்றியை மட்டும் கொண்ட வரலாறு அல்ல.அது சமூகநீதிக்காகவும்,மொழி உரிமைக்காகவும்,மாநில சுயாட்சிக்காகவும், பகுத்தறிவுக்காகவும் இடைவிடாது போராடிய இளைஞர்களின் வரலாறாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உலக அரசியல் இயக்கங்களின் வரலாற்றில், ஒரு துடிப்புமிக்க இளைஞர் பட்டாளம் எப்படி ஒரு மாநிலத்தின் தலையெழுத்தையே மாற்றி யமைக்க முடியும் என்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணியே ஆகச்சிறந்த முன் உதாரணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வரலாற்றின் தழும்புகளும், அண்ணன் தளபதியார் செதுக்கிய பாசறையுமான தி.மு.க. இளைஞரணி என்பது ஏதோ நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல.அது தியாகங்களாலும் வரலாற்றுச் சிறப்புகளாலும் செதுக்கப்பட்ட ஒரு போர்ப்படை. 1980-களில் மதுரையின் ஜான்சி ராணி பூங்காவில் நம் கழகத் தலைவர் நமது தளபதியார் அவர்களால் இந்த அமைப்பு முறைப்படி தொடங்கப்பட்ட போது அது வெறும் ஒரு துணை அமைப்பாகப் பார்க்கப்பட வில்லை. மாறாக, கழகத்தின் எதிர்காலப் பாதுகாப்பு அரணாகவே பார்க்கப்பட்டது.அதுவே இன்று கழகத்தின் இதயமாக இருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவசரநிலைப் பிரகடனத்தின் கொடுமை களைச் சிறையில் அஞ்சாமல் எதிர்கொண்டு, அடி உதை பட்டு, சித்திரவதைகளைத் தாங்கி, தன் உடலையே கழகத்திற்காக அர்ப்பணித்த தியாக வரலாற்றைக் கொண்டவர் நம் தளபதியார். அவர் செதுக்கிய பாசறை என்பதால் தான், இந்த இளைஞரணி 47 ஆண்டுகளாக எத்தனையோ சவால்களைச் சந்தித்தும் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது. காலத்தின் சவால்களை எதிர்கொண்டு,கழகத்தின் கொள்கையை அடுத்த தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் பாலமாக அது திகழ்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிராமங்கள் தோறும், தெருக்கள் தோறும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைகளையும், பேரறிஞர் அண்ணாவின் மாநில உரிமை முழக்கங்க ளையும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சமூக நீதித் திட்டங்களையும் கொண்டு சேர்த்த பெருமை நம் இளைஞரணியைச் சாரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் ‘நீட்’ தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி, 50 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகளைப் பெற்று ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி, டெல்லி சுல்தான்களை அதிர வைத்தது நமது கழக இளைஞரணி செயலாளர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்  தலைமை 
யிலான இளைஞர் படை. அது மட்டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கொரோனா பேரிடர் காலத்தில் ‘இணைவோம் கைகோர்ப்போம்’ திட்டத்தின் மூலம் பசியால் வாடிய லட்சக்கணக்கான மக்களுக்கு உணவும், மருத்துவ உதவிகளும் வழங்கி, அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதநேயப் பாசறையாகத் திகழ்ந்தது நம் இளையோர் படை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திரை கவர்ச்சிக்கு மயங்கி ஒரு மாபெரும் வரலாற்றுத் தவற்றைச் செய்துவிட்டோம் என்று இன்றைய இளைஞர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.விளம்பர வெளிச்சத்தில்,வெற்று ஆரவாரங்களோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த நடிகர் கட்சி,இன்று தமிழ்நாட்டை இருண்ட காலத்திற்குள் தள்ளியுள்ளது.பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் அக்கறையும் அவசரத்தையும் கூட சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின் வெட்டு போன்ற மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகளை சரி செய்ய ஆர்வம் காட்டாத நிர்வாகத் திறனற்றவராக இருக்கிறார் இந்த திடீர் முதலமைச்சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழக சட்டமன்ற வரலாறு என்பது பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும், நம் அன்பு தளபதியார் அவர்களும் விவாதங்களால் அலங்கரித்த புனிதமான களம்.ஆனால், இன்று அந்த சட்டமன்றம் கேலிக் 
கூத்தாக்கப்பட்டு வருகிறது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக கம்பீரமாக வீற்றிருக்கும் நமது கழக இளைஞரணி செயலாளர் இளம்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ,மக்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் சட்டமன்றத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகிறார். புள்ளிவிவரங்களோடு, தரவுகளோடு இளம் தலைவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் திராணியற்ற இந்த நடிகர் கட்சி, சட்டமன்ற மரபுகளை முற்றிலும் மீறி,எதிர்கட்சி யினரின் குரலை நசுக்கப் பார்க்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கத் துணிவில்லாமல், சட்டமன்றத்தை விட்டே ஓடி ஒளிந்து, தன் வீட்டுச் சொகுசு சோபாவில் அமர்ந்துகொண்டு, ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் வெற்றுப் பதிவுகளை போடும் ஒருகோழை முதலமைச்சரைத் தமிழ்நாடு தன் வரலாற்றிலேயே கண்டதில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக டெல்லியிடம் அடகு வைக்கப்படும்போதும்,தனது கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழும் போதும் உதட்டில் விரல் வைத்து கள்ள மௌனி யாக இருக்கும் இந்தசொகுசு முதலமைச்சர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரூரில் கொத்து பரோட்டா போட்டதாக பேசுகிறார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்க விடாமல் இவர் சொற்பொழிவாற்றிய பல மாவட்டங்களில் மக்கள் இவரை கொத்து பரோட்டா போட்டார்களே அதை மறந்து விட்டாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது சரி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">”தொட்ட பேட்டா ரோடு மேல முட்ட பரோட்டா”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்று பாடி ஆடியவரிடம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் இதை தவிர வேறு எதை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதிர்பார்க்க முடியும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரூர் சம்பவத்தின் போது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஓடி வந்தவர் நம் கழகத்தலைவர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஓடி போனவர் அந்த நடிகர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துன்பத்துடன் வீட்டில் இருந்ததாக சொல்லிய அவர்,அதே துன்பத்துடன்தான் மலேசியாவில் தனது திரைப்படவிழாவில் நடனமாடினாரா ? என்று பொது மக்களே இன்று கேள்வி கேட்கின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த தற்குறிதனமான  அவல  ஆட்சிக்கு, தன்னை  காண  வந்த  ரசிகர்களை  அம்போவென  விட்டு  ஓட்டம்  பிடித்த  அந்த  நடிகரின்  முதுகே  சாட்சி.  வரலாற்றுப்  பக்கங்களில்  அதுவே  அரசியல்  பேரிடருக்கான  நினைவுச் சின்னமாக என்றும் நிலைத்திருக்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தன்னை நம்பி காண வந்த ரசிகர்களும் மக்களும் தன் காலடியில் செத்து மடிந்ததை கண்டும் காணாமல் ஓடி ஒளிந்த ஒரு விளம்பர பேயிடம் நாட்டை அடகு வைத்து விட்டு தேர்தல் வரட்டும் என 5 வருடம் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தளபதியாரின் வாக்குப்படி இந்த மக்கள் விரோத ஆட்சி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரும். அந்த அரசியல் மாற்றம் ஏற்படும் போது இளைஞரணி முன்தயாரிப்புடன் இருக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழகம் ஆட்சியில் இருந்தபோது, திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களால் பயன் அடைந்து, தங்களின் அரசியல் பிழைப்பிற்காகக் கழகக் கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருந்த சில சுயநலக் கட்சிகள்,இன்று பதவி சுகத்திற்காகவும், தங்களின் சுயநல நோக்கங்களுக்காகவும் கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் காட்டிய பெருந்தன்மையையும், பாசத்தையும் மறந்து, துரோகத்தின் உச்சகட்டமாக அவர்கள் இன்று நடிகர் கட்சியோடு கைகோர்த்துக்கொண்டு திராவிட இயக்கத்தையே அழிக்கப் பார்ப்பது வேடிக்கையாக உள்ளது.பதவி சுகத்திற்காகக் கொள்கையை அடகு வைத்த இந்தத் துரோகி களுக்கு, காலம் பதில் சொல்லும். துரோகங்களை வென்றே பழகிய இயக்கம் தி.மு.க. என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்று தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆபத்தான சூழல் நிலவுகிறது. அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத, வரலாற்றின் ஒரு பக்கத்தைக் கூடப் படிக்காத தலைமுறை யினர், இன்ஸ்டா மாயையிலும், திரை கவர்ச்சியிலும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த ஆபத்தான சூழலில் இருந்து தமிழ்நாட்டை, தமிழ் இளைய தலைமுறை யையும் மீட்க வேண்டிய மாபெரும் வரலாற்றுப் பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிக்கு உள்ளது. அதனால் தான் நம் இளம்தலைவர் கழகத்தின் இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்பேற்றது முதல்,இந்த டிஜிட்டல் களத்தை கொள்கையை விளக்கும் தளமாக மாற்றியுள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வழியாகப் பொய்களைப் பரப்பும் கூட்டத்திற்கு எதிராக,அதே இன்ஸ்டாகிராமில் திராவிட வரலாற்றையும்,சமூக நீதியையும் தரவுகளோடு விளக்கும் ‘GenZ DMK’ பாசறை உருவாக்கப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வாக்குப் சாவடி முகவர்கள் மட்டத்தில் இருந்து ஒவ்வொரு இளைஞரணி தம்பிமார்களும் கணினி மற்றும் சமூக ஊடகத் திறன்களோடு செயல்பட்டு வருவது கண்டு ஆளும் கட்சியினர் பயந்து போயுள்ளனர் எனபதற்கு தொடர்ந்து காவல் துறையை வைத்து அவர்கள் போடும் பொய் வழக்குகளே சாட்சி.பொய்க்கு ஆயுள் மிகவும் குறைவு என்பதால் தான் நம் கழகத்தினர் அந்த வழக்குகளை தவிடு பொடியாக்கி அவர்கள் முகத்தில் கரியை பூசி உள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெறும் கைதட்டல்களுக்காக அன்றி, சிந்தனையைத் தூண்டும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கொள்கைப் பாசறைக் கூட்டங்களை நடத்தி, திராவிட இயக்கத்தின் அவசியத்தை இளைய தலைமுறைக்கு நம் இளந்தலைவர் புரிய வைத்து வருகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த மண்ணின் உரிமைகள் பறிபோவதைக் கண்டு, மக்கள் படும் துயரைக் கண்டு எழும் மானமிகு தமிழனுக்கு திராவிட மண் என்பது தியாகிகளாலும், அறிஞர்களாலும் பண்படுத்தப் பட்ட மண். இதை வெறும் சோபா விளம்பர தாரர்களிடமும், கூத்தாடிகளிடமும் ஒப்படைத்து விட்டு நாம் வேடிக்கை பார்க்க முடியாது எனபதை இன்று இளைஞர் படையின் மூலம் நம் இளம்தலைவர் நாட்டிற்கு உணர்த்தி வருகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குழந்தைகளிடம் ஓட்டுப் பிச்சை எடுத்து அவர்கள் மூலமாக அவர்கள் பெற்றோர்களின் வாக்குகளை திருடி ஆட்சியை பிடித்தாலும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்றும் அந்த அரசு நமது கழகத்தின் தயவில்தான் நடந்து கொண்டிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இளம்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது அரசியல் பேரிடர். இந்த அரசியல் பேரிடரில் இருந்து தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் மீட்டாக வேண்டிய வரலாற்றுப் பெரும் பொறுப்பு நமது கழகத்திற்குள்ளது.இந்த போரில் முன்னெத்தி ஏராக இருந்து கழகத்தை வழிநடத்தி செல்லும் கடமை நம் இளைஞரணிக்கே உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“அப்பாவை காணோம்” என்று சிறுபிள்ளைத் தனமான பேச்சு பேசும் அந்த  நடிகருக்கு நாட்டில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் நலத்திட்டங் களிலும், அதனால் பயன்பெறும் கோடிக் கணக்கான மக்களின் இதயங்களில்  “அப்பா” இருக்கிறார், அவர் மட்டுமே தொடர்ந்து இருப்பார்  என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“ஆள்வது யாராக இருந்தாலும் நடப்பது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர்களின் ஆட்சி தான்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை எப்பேர்பட்ட கொம்பன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வந்தாலும் மாற்ற முடியாது”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தளபதியாரின் திராவிட மாடல் அரசு கொண்டு வந்த மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன் என அனைத்து மக்கள் நலத்திட்டங்களின் பெயர்களையும் மாற்றி வருகிறது. திட்டங்களின் பெயர்களை மாற்றினாலும் அந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தான்.அப்பாவை தேடும் கோமாளிகளுக்கு,அவர் இந்தத் திட்டங்களிலும் மக்கள் நெஞ்சங்களிலும் அரியாசனம் போட்டு அமர்ந்திருப்பது புரியப் போவதில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில், திராவிட பேரரசர் கழகத் தலைவர் அன்பு அண்ணன் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலில்,போர்க்குணமிக்க நம் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இளைஞரணியின் 47 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் சபத மேற்போம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1.நடிகர் கட்சியின் போலித்தனங் 
களையும்,அவல ஆட்சியையும் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2. சோஃபா மாடல் அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், நிர்வாகத் திறமையின்மை யையும் கிராமங்கள் தோறும் அம்பலப் படுத்துவோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">3. இனி வரும் தேர்தல்களில், துரோகி களையும்,கோமாளிகளையும் விரட்டியடித்து,நம் தளபதியார் அவர்களை  மீண்டும் கோட்டையில் அமர வைத்து, திராவிட மாடல் ஆட்சியை அரியணையில் ஏற்றுவோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரை கவர்ச்சி தற்காலிகமானது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கொள்கை மட்டுமே நிரந்தரமானது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்ஸ்டா மாயையை உடைத்து,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திராவிடப் பேரொளியை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏற்றி வைப்போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாட்டை மீட்போம் !!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்றும் கழகத்தலைவர் வழியில் !</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>