<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,474,961,1500" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 20 2026 22:20:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260721T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="21072026-MDU-06" position.sequence="06" ex-ref="21072026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி விவகாரம்:</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21">  </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="38">விழுப்புரம் அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">முக்கிய ஆவணங்கள் சிக்கின; வீட்டுக்கு சீல் வைப்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Theerarkal3_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">விழுப்­பு­ரம், ஜூலை 21 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">பழநி கோயி­லுக்கு சொந்­த­மான ரூ.100 கோடி நில மோசடி தொடர்­பாக விழுப்­பு­ரம் அரசு உதவி பெறும் பள்ளி ஆசி­ரி­யர் வீட்­டில் சி.பி.சி.ஐ.டி. போலீ­சார் பல மணி நேரம் சோதனை நடத்தி முக்­கிய ஆவ­ணங்­களை கைப்­பற்­றி­னர். இதனை தொடர்ந்து அவ­ரது வீட்­டிற்கு சீல் வைக்­கப்­பட்­டது. திண்­டுக்­கல் மாவட்­டம் பழநி தண்­ட­பாணி சுவா­மி­கள் மடத்­திற்­குச் சொந்­த­மான 100 கோடி ரூபாய் மதிப்­புள்ள நிலம், நீதி­மன்ற உத்­த­ர­வு­களை மீறி போலி ஆவ­ணங்­கள் மூலம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு பதிவு செய்­யப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">இது­தொ­டர்­பாக, பழநி கோயில் நிலங்­கள் பிரிவு கண்­கா­ணிப்­பா­ளர் முரு­கா­னந்­தம் அளித்த புகா­ரின் பேரில், சார்­ப­தி­வா­ளர் ஜஸ்­டின் மணி­கண்­டன் உள்­ளிட்ட 4 பேர் மீது கூட்­டுச்­சதி, மோசடி உள்­ளிட்ட பல்­வேறு பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டது. பல கோடி ரூபாய் மதிப்­புள்ள கோயில் சொத்து மற்­றும் அரசு அதி­கா­ரி­கள் தொடர்­பு­டைய விவ­கா­ரம் என்­ப­தால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமி­ழக காவல்­துறை தலை­மை­ய­கம் உத்­த­ர­விட்­டது. இதை­ய­டுத்து, டிஎஸ்பி அஜய்­தங்­கம் தலை­மை­யி­லான சி.பி.சி.ஐ.டி. குழு­வி­னர் பழ­நி­யில் கள ஆய்வு மேற்­கொண்டு, சம்­பந்­தப்­பட்ட ஆவ­ணங்­களை ஆய்வு செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">தொடர்ந்து, பழநி அற­நி­லை­யத்­து­றை­யைச் சேர்ந்த முரு­கா­னந்­தம், செயல் அலு­வ­லர் கண­பதி, ஆய்­வா­ளர் சிவ­னே­சன் உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளி­டம் சி.பி.சி.ஐ.டி. மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் சஜிதா நேரில் விசா­ரணை நடத்­தி­னார். இத­னி­டையே நில­மோ­சடி தொடர்­பாக யார் விற்­ப­னை­யில் ஈடு­பட்­டது. அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் யார் என்­பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீ­சார் விசா­ரணை நடத்­தி­னர். அதில் விழுப்­பு­ரம் என்.ஜி.ஜி.ஓ. காலனி காம­ரா­ஜர் நகர் பகு­தி­யில் வசிக்­கும் முரு­க­தாஸ் என்­ப­வர் திரு­வெ ண்­ணை­நல்­லூர் அரசு நிதி உதவி பெறும் பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ராக பணி­யாற்றி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">பழநி கோயில் நில மோசடி தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டின் அடிப்­ப­டை­யில் சி.பி.சி.ஐ.டி. போலீ­சார் நேற்று முன்­தி­னம் இரவு இவ­ரது வீட்­டிற்கு சென்­ற­னர். அப்­போது வீட்­டின் முன்­பக்க கதவு பூட்­டப்­பட்டி­ ருந்­த­தால், பூட்டை உடைத்து போலீ­சார் விடிய விடிய சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர். பல மணி நேர சோத­னைக்கு பிறகு அவ­ரது வீட்­டில் இருந்து முக்­கிய ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. இதனை தொடர்ந்து அவ­ரது வீட்­டிற்கு நேற்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீ­சார் சீல் வைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">பின்­னர் வீட்­டில் ஆள் இல்­லாத நிலை­யில் முரு­க­தா­சுக்கு சம்­மன் அனுப்பி காவல் நிலை­யத்­தில் நேரில் அழைத்து விசா­ரணை நடத்த போலீ­சார் திட்­ட­மிட்­டுள்­ள­னர். பழனி கோயில் நில மோசடி தொடர்­பாக விழுப்­பு­ரம் ஆசி­ரி­யர் வீட்­டில் சோதனை நடத்தி, வீட்­டுக்கு சீல் வைக்­கப்­பட்ட சம்­ப­வம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. நெல்­லை­யில் 2வது நாளாக விசா­ரணை: பழநி முரு­கன் கோயி­லுக்கு சொந்­த­மான நிலம் மோசடி விற்­ப­னை­யில் நெல்­லை­யைச் சேர்ந்த சில­ருக்கு தொடர்பு இருப்­பது உறு­தி­யா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">இதை­ய­டுத்து பாளை­யங்­கோட்டை வி.எம். சத்­தி­ரத்­தைச் சேர்ந்த கும­ர­கு­ரு­ப­ரன் (46), நெல்லை டவுன் சாலி­யர் தெரு­வைச் சேர்ந்த டெக்­க­ரே­ஷன் தொழில் செய்து வரும் சண்­மு­க­சுந்­த­ரம் (43) மற்­றும் நெல்லை டவுன் சம்­பந்­தர் தெரு­வைச் சேர்ந்த சிவ­கு­மார் (41) ஆகி­யோ­ரது வீடு­க­ளில் அதி­ரடி சோதனை நடத்­திய சிபி­சி­ஐடி போலீ­சார் மூன்று குழுக்­க­ளாக பிரிந்து அவர்­க­ளி­டம் நேற்று முன்­தி­னம் தீவிர விசா­ரணை நடத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">அப்­போது சில ஆ­வ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. இந்த விசா­ரணை முழு­வ­தும் வீடி­யோ­வில் பதிவு செய்­யப்­பட்­டது. இதனை தொடர்ந்து சம்­பந்­ தப்­பட்ட மூன்று பேரின் குடும்­பத்­தி­னர் மற்­றும் உற­வி­னர்­க­ளின் அசை­யும், அசையா சொத்­துக்­கள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீ­சார் நேற்று 2வது நாளாக தீவிர விசா­ரணை நடத்­தி­னர். மேலும் அவர்­க­ளு­டைய வங்கி கையி­ருப்பு, லாக்­கர்­களை திறந்து சோதனை நடத்­த வுள்­ள­தாக போலீ­சார் தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.1">சமூக வலை­த­ளங்­க­ளில் உலா வரும் பத்­திர ஆவ­ணம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">பழநி தண்­ட­பாணி சுவா­மி­கள் அறக்­கட்­டளை சார்­பில் ரூ.2 கோடிக்கு 1.40 ஏக்­கர் நிலத்தை சேது­பதி மற்­றும் வெள்­ளத்­துரை ஆகி­யோ­ருக்கு பதிவு செய்து கொடுத்த பத்­தி­ரம் தற்­போது சமூக வலை­த­ளங்­க­ளில் வைர­லாகி வரு­கி­றது. இந்த பத்­தி­ரம் ஒட்­டன்­சத்­தி­ரத்­தைச் சேர்ந்த முத்­தி­ரைத்­தாள் விற்­ப­னை­யா­ளர் ராஜேஸ்­வரி என்­ப­வ­ரி­ட­ மி­ருந்து கடந்த மார்ச் 27ம் தேதி வாங்­கப்­பட்­டுள்­ளது. பாப்­பன்­கு­ளத்­தைச் சேர்ந்த வெள்­ளத்­துரை வாங்கி உள்­ளார். 72 தாள்­களை கொண்ட பத்­தி­ர­மாக தயா­ரிக்­ கப்­பட்­டுள்­ளது. ஆனால், முதல் 5 பக்­கங்­கள் மட்­டுமே சமூக வலை­த­ளங்­க­ளில் பரவி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">பொது­வாக, பத்­தி­ரப்­ப­தி­விற்­கான அரசு கட்­ட­ணம் அதன் அரசு மதிப்­பீட்­டில் 11 சத­வீ­தம் ஆகும். சம்­பந்­தப்­பட்ட இடம் பழநி நகர எல்­லைக்­குள் உள்­ளது. தற்­போது அரசு மதிப்­பீடு இப்­ப­கு­தி­யில் சதுர அடிக்கு சுமார் ரூ.1,750 ஆக உள்­ளது. இதன்­படி 1.40 ஏக்­க­ருக்கு சுமார் ரூ.11 கோடிக்கு மேல் அரசு மதிப்­பீடு இருக்­கும். ஆனால், இடத்தை விவ­சாய நில­மாக குறிப்­பிட்டு ரூ.2 கோடி மதிப்­பீட்­டில் பத்­தி­ரப்­ப­திவு செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">இதன்­மூ­லம் நிலத்தை பத்­தி­ரப்­ப­திவு செய்ய மதிப்­பீடு செய்­த­தி­லும் முறை­கேடு நடந்­துள்­ளது தெரி­ய­வந்­துள்­ளது. பத்­தி­ரம் கிரை­யம் செய்ய வழங்­கப்­பட்ட காசோ­லை­கள் செல்­லு­ப­டி­யா­க­வில்லை. அதி­கா­ரி­கள் இவ்­வி­ஷ­யங்­க­ளில் எந்த கவ­ன­மும் கொள்­ள­வில்லை. இதன்­மூ­லம் பத்­தி­ரப்­ப­திவு விவ­கா­ரத்­தில் அதி­கா­ரி­கள் உடந்தை என்­பது உறு­தி­யா­கி­றது. சி.பி.சி.ஐ.டி. போலீ­சார் சார்­ப­தி­ வா­ளர் மற்­றும் மாவட்ட பதி­வா­ளரை காவ­லில் எடுத்து விசா­ரித்­தால் மட்­டுமே முறை­கேடு பத்­தி­ரப்­ப­தி­விற்கு கார­ண­மான வி.வி.ஜ.பி.க்களின் அடை­யா­ளம் தெரி­யு­மென பக்­தர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.1">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.1">நிலத்­தின் ஆவ­ணங்­கள் சேக­ரிப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.1">ரூ.100 கோடி நில முறை­கேடு தொடர்­பாக, 4வது நாளான நேற்று சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்­பெக்­டர் சந்­தா­ன­லட்­சுமி தலை­மை­யில் 5க்கும் மேற்­பட்ட போலீ­சார் பழநி தாலுகா அலு­வ­ல­கத்­தில் விசா­ரணை மேற்­கொண்­ட­ னர். வரு­வாய்த்­துறை மற்­றும் சர்­வே­யர் பிரிவு அதி­கா­ரி­க­ளி­டம் பிரச்­னைக்­கு­ரிய இடத்­தின் அரசு வரை­ப­டம் உள்­ளிட்ட ஆவ­ணங்­களை சேக­ரித்­த­னர். தொடர்ந்து இடத்­தின் மீதான வரி வசூ­லிப்­பு­கள், ஆவ­ணங்­க­ளில் பெயர் மாற்­றம் செய்ய யாரும் விண்­ண ப்­பத்­தி­ருந்­த­னரா, இடத்­தின் ஆவ­ணங்­களை வேறு யாரும் பெற்­றுச் சென்­ற­னரா என்­பது குறித்­தும் விசா­ரித்­த­னர். சுமார் 2 மணி நேர விசா­ர­ணைக்­கு ப்­பின், சில ஆவ­ணங்­க­ளு­டன் அவர்­கள் திரும்­பிச் சென்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>