<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,724,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 21 2026 15:31:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260722T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="22072026-CBE-03" position.sequence="03" ex-ref="22072026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup783055_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup784719_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சமீ­பத்­தில் ஒரு தொலைக்காட்சி வெளி­யிட்ட ‘நியூஸ் கார்ட்’ முக்­கி­ய­மான ஒரு நிகழ்வை உல­கிற்­குச் சொன்­னது.    ‘‘சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் நடந்த அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்­தில் பங்­கேற்க முத­ல­மைச்­சர் விஜய்  ‘எண்ட்ரி’ ஆன­தும் எழுந்து நின்று அவ­ருக்கு வணக்­கம் தெரி­வித்த அமைச்­சர்­கள். பதி­லுக்கு வணக்­கம் தெரி­வித்த cm விஜய்’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எப்­பேர்­பட்ட வர­லாற்­றுச் சிறப்பு மிக்க சம்­ப­வம். இதற்கு முன் உல­கத்­தில் இது­போல நடந்­ததே இல்லை. அவர்­கள் இதோடு நிற்­க­வில்லை. முத­ல­மைச்­சர் ஆதி­தி­ரா­வி­டர் மாண­வர் விடு­திக்கு ஆய்­வுக்கு போனால் ‘அவர் உட்­கார்ந்­தார், எழுந்­தார், திரும்­பிப் பார்த்­தார்’ என சுமார் 20 நியூஸ் கார்­டு­கள். த.வெ.க.வின் 
விர்­ஷு­வல் வாரி­யர்ஸ் செய்து வந்த பணி­களை இன்­றைக்கு ஊட­கங்­கள் எடுத்­துக்­கொண்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆதி திரா­வி­டர் மாண­வர் விடு­தியை இதற்கு முன் எந்த முத­ல­மைச்­ச­ரும் பார்­வை­யிட்­ட­தில்லை என த.வெ.க. அமைச்­ச­ர­வை­யி­லி­ருக்­கும் ஒரு வி.சி.க. அமைச்­சர் உருட்­டு­கி­றார். உடனே முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் இது­போல ஆதி­தி­ரா­வி­டர் மாண­வர் விடு­தி­களை பார்­வை­யிட்ட காணொ­ளி­கள் வெளி­யி­டப்­பட்டு பதி­லடி தரப்­பட்­டது. வதந்தி பரப்­பு­வ­தில் போட்­டியே இப்­போது  த.வெ.க. விர்­ஷு­வல் வாரி­யர்ஸ்க்­கும் த.வெ.க. அமைச்­சர்­க­ளுக்­கும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் ‘‘எந்த அமைச்­சர் ஊழல் குற்­றச்­சாட்­டிற்கு ஆளா­னா­லும் உடனே பதவி நீக்­கம் செய்­ய­ப­டு­வார்­கள்  என முத­ல­மைச்­சர் எச்­ச­ரித்­த­தாக  ‘தக­வல்’ என ஒரு செய்தி அனைத்து 
ஊட­கங்­க­ளி­லும் தலைப்­புச் செய்­தி­யா­னது. இப்­படி ஒரு தக­வ­லைச்சொன்­னது யார்? அந்த செய்­தி­யின் ‘சோர்ஸ்’ என்ன? 
யாருக்­கும் தெரி­யாது.  அர­சின் சார்­பில் எந்த செய்­திக் குறிப்­பும் கிடை­யாது. வெறும் ‘தக­வல்’. அதா­வது இவர்­கள் 
பரப்­பும் வதந்­திக்கு வைத்­தி­ருக்­கும் நாக­ரீ­க­மான பெயர் ‘தக­வல்’. த.வெ.க.வின் வதந்தி தொழிற்­சா­லை­யி­லி­ருந்து வதந்­தி­கள் தின­மும் வண்டி வண்­டி­யாக இறக்­கப்­ப­டு­கின்­றன. இந்த அர­சின் தோல்­வி­க­ளை­யும் ஊழல்­க­ளை­யும் அரா­ஜ­கங்­க­ளை­யும் மறைக்க, திசை திருப்ப விஜய் மீதான கதா­நா­யக போலி பிம்ப வழி­பா­டும் பொய்த் தக­வல்­க­ளும் இடை­ய­றாது 
உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பழ­னி­யாண்­ட­வர் கோயில் 100 கோடி ரூபாய் மதிப்­புள்ள நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற மாபெ­ரும் ஊழல் விவ­கா­ரத்­தில் வச­மாக சிக்­கி­கொண்ட த.வெ.க. அரசு அதை ஊடக கவ­னத்­தி­லி­ருந்து திசை திருப்ப பல்­வேறு உருட்­டு­க­ளில் ஈடு­பட்­டி­ருக்­கி­றது. கோயில் நிலத்தை யாரும் விற்க முடி­யாது என பத்­தி­ரப் பதி­வுத்­து­றை­யின் கடை நிலை ஊழி­யர்­க­ளுக்­குக்­கூட நன்கு தெரி­யும். மாபெ­ரும் மோச­டி­யின் இந்­தக் கூட்டு சதி­யின் பழியை சார்­ப­தி­வா­ளர் மேல் போட்­டு­விட்டு தப்பி ஓட முயல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சார் பதி­வா­ளர் நீதி மன்­றத்­தில் ‘‘இது தொடர்­பான எண்­பது சத­வி­கித பணி­கள் ஏற்­க­னவே முடித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன. கையெ­ழுத்­துப் போட்­டது மட்­டும்­தான் எனது வேலை’’ என நீதி­மன்­றத்­தில் வாக்­கு­மூ­லம் கொடுத்­தி­ருக்­கி­றார். தூய சக்தி ஆட்­சிக்கு வந்த நாளி­லி­ருந்தே இந்த தீய வேலை தொடங்­கி­விட்­டது என்­பது தெள்­ளத்தெளி­வா­கத் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதி­லி­ருந்து கவ­னத்தை திருப்­பவே இத்­தனைபித்­த­லாட்­டங்­கள். விவா­தத்­தில் தந்தி டிவி  நெறி­யா­ளர் ஹரி­ஹ­ரன்  ‘‘இதுஅர­சின் கையா­லா­கா­த­த­னம் (inefficiency)இல்­லையா?’’ எனக் கேட்­டால் உடனே அவரை ‘அந்த வார்த்­தையை வாபஸ் வாங்­குங்­கள்’ என  மிரட்­டு­கி­றார் 
த.வெ.க. பேச்­சா­ளர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இன்­னொரு புறம் தி.மு.க. மீதான போலி குதி­ரை­பேர குற்­றச்­சாட்­டில் புதிய தலை­முறை நெறி­யா­ளர் விஜ­யன் இணைக்­க­ப்பட்டு காவல்­து­றை­யால்  உள­வி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாக்­க­ப் ப­டு­கி­றார். ஒரு பொய்க்­குற்­ற­சாட்டை நிரூ­பிக்க முடி­யா­மல் யார் மேலேயோ நட­வ­டிக்கை எடுப்­பது போல காவல்­துறை ’பாவ்லா’ காட்டி இந்­தச் செய்­தியை 
உயி­ரோடு வைத்­தி­ருக்க முயற்­சிக்­கி­றது. மேலும் இவர்­கள் செயல்­பா­டு­களை விமர்­சன ரீதி­யாக அணு­கும் அல்­லது இவர்­களை கேள்வி கேட்­கும் ஊட­க­வி­ய­லா­ளர்­களை அச்­சு­றுத்­த­லுக்கு ஆளாக்க வேண்­டும் என்­ப­து­தான் அவர்­கள் நோக்­கம். இதில் பா.ஜ.க.வை­யும் இவர்­கள் விஞ்­சி­ விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">த.வெ,க. அர­சின் கையா­லா­காத தனங்­கள் ஒன்றாஇரண்டா? சட்­டம் ஒழுங்கு சீர் குலை­வும் சொந்த அமைச்­சர்­க­ளை­கூட கட்­டுப்­ப­டுத்த முடி­யாத தலைமை, மாநி­லத்­திற்கு பெரும் நிதிச்­சு­மையை ஏற்­ப­டுத்­தும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்­டத்­திற்கு ஒன்­றிய அர­சி­டம் ஒப்­பு­தல் அளித்­தது, வந்தே மாத­ரம் விவ­கா­ரத்­தில் ஆளு­ந­ருக்கு அடி­ப­ணிந்­த­து­டன் ஆளு­நர் போட்டி அர­சாங்­கம் நடத்த அனு­ம­திப்­பது, விவ­சா­யி­கள் கடன் தள்­ளு­ப­டி­யில் செய்த ஏமாற்று வேலை, தேர்­தல் அறிக்­கை­யில் கொடுத்த எந்த வாக்­கு­று­தி­யை­யும் 
இன்­னும் நிறை­வேற்ற முயற்­சிக்­கா­தது, காவிரி நீர் பங்­கீடு, மேக­தாட்டு அணை விவ­கா­ரங்­க­ளில் எந்த அழுத்­தத்­தை­யும் தரா­தது, இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கான உள் இட ஒதுக்­கீடு குறித்து முத­ல­மைச்­ச­ரின் மெள­னம் என கையாலா­காத தனத்­திற்கு உதா­ர­ணங்­கள் ஒன்றா இரண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">தி.மு.க.விற்­கு ஆலோசனை கூறும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">திடீர் ஆலோ­ச­கர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விஜய்க்கு நாளெல்­லாம் வெண்­சா­ம­ரம் வீசு­வது ஒரு புறம் என்­றால் 
தி.மு.க.விற்கு எதி­ரான பொய்­க­ளைப் பரப்­பு­வ­தில் த.வெ.க. கூட்­டணி கட்­சி ­க­ளும் ஊட­கங்­க­ளும் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றன. ஒரு தேர்­தல் தோல்வி வந்­த­தும் பத­விக்­கும் பரி­சுக்­கும் ஆசைப்­பட்டு ஓடி­போன ஓடு­கா­லி­கள் எந்­தக் 
கூச்­ச­மும் இல்­லா­மல் தி.மு.க இந்­தியா கூட்­ட­ணி­யில் நீடிக்க வேண்­டும் என்­றும் முக்­கிய பிரச்­சி­னை­யில் என்ன நிலைப்­பாடு எடுக்­க­வேண்­டும் என்­றும் ஆலோ­சனை கூறி வரு­கின்­ற­னர். இவர்­க­ளி­டம் ஆலோ­சனை கேட்­க­வேண்­டிய இடத்­தில் தி.மு.கவும் இல்லை, தி.மு.க.விற்கு ஆலோ­சனை வழங்­கும் தகுதி இவர்­­களுக்­கும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மாநில உரிமைசார்ந்து எந்­தப் பிரச்­சி­னை­க­ளுக்­காக தி.மு.க. இடை­ய­றாது போராடி வந்­தி­ருக்­கி­றதோ அவற்றை ஒரு­போ­தும் விட்­டுக் கொடுக்­காது என்­பதை தி.மு.க தலை­வர் அழுத்­தம் திருத்­த­மாக கூறி­யி­ருக்­கி­றார்.காங்­கி­ர­ஸின் சந்­தர்ப்­ப­வாத துரோக நிலைப்­பா­டு­களை எதிர்த்தே தி.மு.க. இந்­தியா கூட்­ட­ணி­யி­லி­ருந்து வெளி­யே­றி­யது. ஆனால் இந்­தியா கூட்­ட­ணிக் கட்­சி­கள் வாக்­கா­ளர் சிறப்பு தீவிர திருத்­தம் குறித்து உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­திக்கு  எழு­திய கடி­தத்­தில் கையெ­ழுத்­திட தி.மு.க. தயங்­க­வில்லை. பாரா­ளு­மன்ற கூட்­டத் தொடர் தொடர்­பான அலு­வல் கூட்­டத்­தில் திரி­ணா­முல் காங்­கி­ர­ஸி­ லி­ருந்து வெளி­யே­றிய அதி­ருப்தி 
எம்.பி.க்­களை பங்­கேற்க அனு­ம­தித்­ததை எதிர்த்து பிற இந்­தியா கூட்­டணி கட்­சி­க­ளோடு இணைந்து வெளி­யே­ற­வும் தி.மு.க. தயங்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தி.மு.க. எதை ஆத­ரிக்­க­வேண்­டும் எதை எதிர்க்­க­வேண்­டும் என்­பது கொள்கை சார்ந்த பிரச்­சி­னை­க­­ளுக்­காக எத்­த­னையோ தியா­கங்­க­ளைச் செய்த தி.மு.க.விற்கு தெரி­யும். ஒட்­டுண்­ணி­கள் அதைப்­பற்றி கவ­லைப்­ப­ட­வேண்­டி­ய­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால் தி.மு.க, பா.ஜ.க.வோடு கூட்­டணி வைக்­கப்­போ­கி­றது என்ற வதந்­தியை ஊட­கங்­க­ளோடு சேர்ந்து த.வெ.க கூட்­ட­ணிக் கட்­சி­கள் பரப்பி வரு­கின்­றன. இதை யார் சொல்­கி­றார்­கள் என்­றால் நேற்­று­வரை தி.மு.க. கூட்­ட­ணி­யி­லி­ருந்து விஜய்யை எதிர்த்­து­விட்டு  பா.ஜ.க.வின் கொள்­கை­கள் அனைத்­தை­யும் சிர­மேற்­கொண்டு செயல்­ப­டுத்து வரும் 
த.வெ.க.வோடு சேர்ந்து ஆட்­சி­ய­மைத்­துக்­கொண்­டி­ருக்­கும் சந்­தர்ப்­ப­வாத 
தலை­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தொகுதி மறு­வ­ரை­யறை மசோ­தாவை பா.ஜ.க. மீண்­டும் கொண்­டு­வ­ரு­கி­றது, தி.மு.க. அது நிறை­வேற உத­வும் என்ற பொய்யை மீண்­டும் மீண்­டும் சொல்லி வரு­கி­றார்­கள். தி.மு.க. அளித்­துள்ள திருத்­தங்­களைஒன்­றிய அரசு ஏற்­றால் மட்­டுமே அதன் அடிப்­ப­டை­யில் முடி­வெ­டுக்­கப்­ப­டும் என்று ஏற்­க­னவே தி.மு.க. தரப்­பில் தெளி­வாக கூறப்­பட்­டும் இந்­தப் பொய் திரும்­பத்திரும்ப சொல்­லப்­ப­டு­கி­றது. இத்­த­னைக்­கும் தொகுதி மறு­வ­ரை­யறை மசோதா நடப்பு பாரா­ளு­
மன்­றக் கூட்­டத்­தொ­ட­ரில் பட்­டி­ய­லி­டப்­ப­ட­க் 
கூட இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அப்­ப­டி­யெ­னில் இந்த கருத்­தியல் உரு­வாக்­கம் எங்­கி­ருந்து வரு­கி­றது? தி.மு.க. மேல் தொடர்ந்து தாக்­கு­தல் நடத்தி 
பல­வீனப்­ப­டுத்­த­வேண்­டும் என்ற தொடர் சதித்­திட்­டத்­தின் ஒரு பகு­தி­தான் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கட்­சி­யின் நல­னுக்­கா­க­வும் தமிழ்­நாட்­டின் நல­னுக்­கா­க­வும்எந்த முடி­வை­யும் எடுக்­கும் அர­சி­யல் பார்­வை­யும் கொள்­கைத் தெளி­வும் தி.மு.க.வுக்கு உண்டு.ஓடு­கா­லி­கள் புதிய ‘சோஃபா’­க­ளில் படுத்து நிம்­ம­தி­யாக உறங்­குங்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>