<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1001" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 22 2026 03:44:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260722T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="22072026-MDU-05" position.sequence="05" ex-ref="22072026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="73">இந்தியாவுக்கு வழிகாட்டிய திராவிடம்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup786665_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="HNre9d0bIAA9sqq_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="20">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ண்­ணீர்ப் புகை வீசி­யும்­கூட அந்­தக் கூட்­டத் ­தைக் கலைக்க முடி­ய­வில்லை. தடி­யடி  நடத்­தி­னால் இளை­ஞர் கூட்­டம் கலைந்து ஓடி­வி­டும் என நினைத்து லத்­தியை சுழற்­று­கி­றது டெல்லி காவல்­துறை. சித­றிய இளை­ஞர்­க­ளில், ஓர் இளை­ஞர் 
மட்­டும், காவ­லர்­க­ளின் முன்­பா­கக் கம்­பீ­ர­மாக நின்று, உரி­மைக் குரல் எழுப்­பு­கி­றார். சித­றிய இளை­ஞர் பட்­டா­ளம் ஆண்­க­ளும் பெண்­க­ளு­மாக மீண்­டும் திரும்­பு­கி­றது. நியா­யக் குரல் எழுப்­பு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தலை­ந­கர் டெல்­லி­யில் நாடா­ளு­மன்ற வளா­கம் அருகே ஜூலை 20 அன்று கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­னர் நடத்­திய போராட்­டத்­தில் கண்ட காட்சி, 1989ல் சீனா­வின் தியான்­மென் சதுக்­கத்­தில் 
இரா­ணுவ டாங்­கி­களை எதிர்­கொண்டு நின்ற ஒற்றை இளை­ஞ­னின் தோற்­றத்தை நினை­வு­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­னர் டெல்­லி­யில் நடத்­திய போராட்­டம் என்­பது ‘நீட்’ தேர்வு மோச­டி­
க­ளுக்­கும், இந்­தி­யா­வின் கல்­விக் கொள்­கை­க­ளுக்­கும் எதி­ரா­னது. உச்­ச­நீ­தி­மன்ற வழக்கு ஒன்­றின் விசா­ர­ணை­யின்­போது நீதி­பதி அவர்­க­ளால், ‘கரப்­பான்­பூச்­சி­கள்’ என்ற சொல் விமர்­ச­னக் கருத்­தாக வெளிப்­பட்­டது. அந்­தச் சொல்­லையே, தங்­கள் கட்­சிக்­கா­னப் பெய­ராக மாற்­றிய இளை­ஞர்­கள், கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி என்ற பெய­ரில் போராட்­டத்­தைத் தொடங்கி, பார­திய ஜனதா கட்சி அரசை கிடு­கி­டுக்க வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பா.ஜ.க. ஆட்­சி­யில்­தான் ‘நீட்’ தேர்வு 2017ஆம் ஆண்டு முதல் இந்­தியா முழு­வ­தும் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்­டது. மருத்­து­வப் படிப்­புக்­கான தேசிய அள­வி­லான நுழை­வுத் தேர்­வான ‘நீட்’, மாண­வர்­களின் மருத்­து­வக் கனவை சிதைத்து, அவர்­க­ளின் உயி­ரைப் பறித்து, மாநில அர­சின் கல்வி உரி­மை­களை­யும் பறி­போ­கச் செய்­கி­றது என்று எச்­ச­ரித்து அப்­போதே போராட்­டக் களம் கண்ட இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். ஏறத்­தாழ 10 ஆண்­டு­கள் கழித்து, இந்­திய அள­வில் ‘நீட்’ எதிர்ப்­புப் போராட்­டம் விரி­வ­டைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அரி­ய­லூர் மாணவி அனிதா தொடங்கி, தொடர்ச்­சி­யாக பல மாண­வ-­­மா­ண­வி­ய­ரின் மருத்­து­வக் கனவை சிதைத்து, அவர்­க­ளின் உயி­ரைக் குடித்­தக் கொடூர நீட் தேர்வு முறைக்கு எதி­ராக, தி.மு.க.வின் இளை­ஞ­ர­ணி­யும் மாண­வ­ர­ணி­யும் தமிழ்­நாடு முழு­வ­தும் ‘நீட்’ எதிர்ப்­புக் கருத்­த­ரங்­கு­களை நடத்­தின. கழ­கத்­தின் சார்­பில் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. அ.தி.மு.க. ஆட்­சி­யில் கொண்டு வரப்­பட்ட ‘நீட்’ தேர்வு விலக்கு சட்­ட­முன்­வ­ரை­வைக் குப்­பைக் கூடை­யில் போட்­டு­விட்­ட­தாக ஒன்­றிய பா.ஜ.க. அமைச்­சர் கூறி­னார். எதிர்க்­கட்­சி­யான தி.மு.க.தான் அப்­போ­தும் ‘நீட்’ தேர்வை எதிர்த்து உறு­தி­யு­டன் போரா­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">2021ல் கழ­கத் தலை­வர் தலை­மை­யில் திரா­விட மாடல் ஆட்சி அமைந்­தது. தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் அனைத்­துக் கட்­சி­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து, ‘நீட்’ விலக்கு சட்­ட­முன்­வ­ரைவு இரண்டு முறை நிறை­வேற்­றப்­பட்­டது. ஆளு­நர் மாளி­கை­யில் 
அத­னைத் தூங்க வைத்­தது ஒன்­றிய பா.ஜ.க. அரசு. ஆளுங்­கட்­சி­யான பிற­கும், ‘நீட்’ தேர்­வி­லி­ருந்து விலக்கு அளிக்­கக் கோரி உண்­ணா­நி­லைப் போராட்­டம் உள்­பட பல்­வேறு களப் போராட்­டங்­களை தி.மு.க. முன்­னெ­டுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு மட்­டும்­தான் ‘நீட்’ தேர்வை எதிர்க்­கி­றது என்­றும், தி.மு.க.தான் எதிர்ப்­பைத் தூண்­டி­வி­டு­ கி­றது என்­றும், மற்ற மாநி­லங்­கள் அனைத்­தும் ‘நீட்‘ தேர்வை ஆத­ரிக்­கின்­றன என்­றும் சித்­தாந்த எதி­ரி­க­ளும், அவர்­க­ளின் மகு­டிக்கு மயங்­கி­ய­வர்­க­ளும் தி.மு.க. மீது பழி போட்­டார்­கள். தி.மு.க. முன்­னெ­டுத்த ‘நீட்’ எதிர்ப்­புப் போராட்­டத்­தைத்­தான் இந்­தி­யத் தலை­ந­க­ரில் கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி கையில் எடுத்­தது. இதைத்­தான் அன்றே தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன் தி.மு.க. செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி முன்­னெ­டுத்­தப் போராட்­டத்­தில் நாட­றிந்த சமூக செயற்­பாட்­டா­ள­ரான சோனம் வாங்­சுக் 20 நாட்­க­ளுக்கு மேல்  உண்­ணா­வி­ர­தம் இருந்து, கைது செய்­யப்­பட்டு, வலுக்­கட்­டா­ய­மாக மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்கு அனு­ம­திக்­கப்­பட்­டார். பல மாநி­லங்­க­ளி­லி­ருந்­தும் டெல்­லி­யில் திரண்ட இளை­ஞர்­கள்-–­­மா­ண­வர்­கள் ஆகி­யோர் காவல்­து­றை­யின் அடக்­கு­மு­றையை மீறி, நாடா­ளு­மன்ற முற்­று­கைப் பேர­ணியை நடத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒன்­றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் பதவி விலக வேண்­டும் என்­பது டெல்­லி­யில் போரா­டும் இளை­ஞர் பட்­டா­ளத்­தின் முக்­கி­ய­மான கோரிக்­கை­யா­கும். இதே ஒன்­றிய அமைச்­சர்­தான் திரா­விட மாடல் ஆட்­சி­யின் போது, தமிழ்­நாட்­டில் தேசி­யக் கல்­விக் கொள்­கை­யை­யும் மும்­மொ­ழித் திட்­ட த்­தை­யும் ஏற்­கா­விட்­டால் கல்­விக்­கான ஒன்­றிய அர­சின் நிதி­யைத் தர மாட்­டோம் என்று சொல்லி, 2,291 கோடி ரூபாய் நிதி­யைத் தர மறுத்­தார். அப்­போ­தும் திரா­விட மாடல் அரசு மாநில உரி­மை­யை­யும், தமிழ்­நாட்­டின் இரு­மொ­ழிக் கொள்­கை­யை­யும் விட்­டுத் தர மாட்­டோம் என உறு­தி­யாக நின்று, மாநில அரசு நிதி­யி­லி­ருந்தே பள்­ளிக் கல்­விக்­கான 
கட்­ட­மைப்­பு­க­ளை­யும், ஆசி­ரி­யர்­க­ளுக்­கான 
ஊதி­யத்­தை­யும் மேற்­கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில் திரா­விட மாடல் அரசு ஏற்க மறுத்த ஒன்­றிய அர­சின் மும்­மொ­ழிப் பாடத் திட்­டத்­திற்கு இந்­தி­யா­வில் இன்று பல மாநி­லங்­க­ளும் எதிர்ப்பு தெரி­விப்­ப­து­டன், உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தியே சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளில் 9ஆம் வகுப்­பில் மூன்று மொழி­க­ளைத் திணிப்­பது மாண­வர்­க­ளுக்கு பெரும் சுமை­யா­கி­வி­டும் என அறி­வு­றுத்­தி­யி­ருக்­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மூன்­றா­வது மொழி என்ற பெய­ரில் இந்­தி­யை­யும் சமஸ்­கி­ரு­தத்­தை­யும் திணிப்­ப­தி­லேயே ஒன்­றிய பா.ஜ.க. அரசு முனைப்­பாக இருக்­கி­றது. இது இந்­திய அர­சி­யல் சட்­டத்­தின் எட்­டா­வது அட்­ட­வ­ணை­யில் இடம்­பெற்­றுள்ள தமிழ் உள்­ளிட்ட 22 மொழி­க­ளை­யும், அட்­ட­வ­ணை­யில் இடம்­பெ­றாத இன்­னும் பல மொழி­க­ளை­யும் எதிர்­கா­லத்­தில் அழித்­து­வி­டும் ஆபத்து உண்டு என்­பதை வர­லாற்­றுப் பின்­ன­ணி ­யு­டன் நாடா­ளு­மன்­றத்­தி­லும் மக்­கள் மன்­றத்­தி­லும் எடுத்­து­ரைத்து வரு­கி­றது திரா­விட முன்­னேற்­றக் 
கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தாய் மொழி­யைக் காப்­ப­தற்­காக 1937------39ஆம் ஆண்­டு­க­ளில் முதல் இந்தி எதிர்ப்­புப் போர்க்­க­ளத்­தில் திரா­விட இயக்­கம் உறு­தி­யாக நின்­றது. நீதிக்­கட்சி, சுய­ம­ரி­யாதை இயக்­கம், தனித்­த­மிழ் இயக்­கம் இணைந்து நடத்­திய அந்த மொழிப் போராட்­டத்­தில், தந்தை பெரி­யார் பெல்­லாரி சிறைக்கு அனுப்­பப்­பட்­டார். சைதாப்­பேட்டை கிளைச்­சி­றை­யில் பேர­றி­ஞர் அண்ணா அடைக்­கப்­பட்­டார். 14 வயது பள்­ளிச் சிறு­வ­னா­கத் தமிழ்க் கொடி ஏந்­திப் போரா­டி­னார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். அந்­தப் போராட்­டக் களத்­தில் சிறை சென்ற நட­ரா­சன்-–­­தா­ல­முத்து என்ற இரண்டு இளை­ஞர்­கள் தங்­கள் இன்­னு­யிரை ஈந்து, கட்­டாய இந்­தி­யைத் தமிழ்­நாட்­டி­லி­ருந்து விரட்­டி­ய­டித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1964-–65ஆம் ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்­புப் போராட்­டத்­தில் கீழப்­ப­ழு­வூர் 
சின்­ன­சாமி தொடங்கி பல இளை­ஞர்­கள், ‘தமிழ் வாழ்க.. இந்தி ஒழிக’ என்ற முழக்­கத்­து­டன் தீக்­கு­ளித்­த­னர். அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் சிவ­கங்கை இரா­சேந்­தி­ர­னும், கோவை மாவட்ட இளை­ஞர்­க­ளும் போலீஸ் மற்­றும் துணை ராணு­வத்­தின் துப்­பாக்­கித் தோட்­டாக்­க­ளுக்கு பலி­யாகி, தாய்­மொ­ழிக் காக்­கும் போராட்­டத்­தில் தங்­கள் உயிரை ஈந்­த­னர். எண்­ணற்ற இளை­ஞர்­கள் சிறை சென்­ற­னர். தனி­மைச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார் கலை­ஞர். தமிழ்­நாட்­டில் தி.மு.க. முன்­னெ­டுத்த 
அந்­தப் போராட்­டம் இந்­தி­யா­வில் உள்ள இந்தி பேசாத மாநி­லங்­க­ளின் தாய்­மொ­ழியை இன்­ற­ள­வும் காத்து நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இந்­தியா என்­பது மாநி­லங்­க­ளின் ஒன்­றி­யம் என்று வரை­ய­றுக்­கி­றது நமது அர­சி­யல் சட்­டம். 
அத­னால், மாநி­லங்­க­ளுக்கு அதிக உரி­மை­க­ளு­ட­னான சுயாட்சி முறை­யும், மாநி­லங்­க­ளின் ஒருங்­கிணைப்­பில் இந்­திய ஒன்­றி­யத்­தின் கூட்­டாட்சி முறை­யும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டால்­தான் நாடு வலு­வாக இருக்­கும் என்­பதை மாநி­லங்­க­ள­வை­யில் பேர­றி­ஞர் அண்ணா உரக்­கக் கூறி­னார். தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் 1974ஆம் ஆண்டு மாநில சுயாட்­சித் தீர்­மா­னத்தை முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் நிறை­வேற்­றி­ னார். தமிழ்­நாட்­டில் தி.மு.க. முன்­னெ­டுத்த மாநில உரி­மைக் குரல் இன்று இந்­திய அள­வில் பல 
மாநி­லங்­க­ளி­லும் எதி­ரொ­லிக்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆளு­நர்­­களைக் கொண்டு ஒன்­றிய அரசு நடத்த நினைக்­கும் இணை அர­சுக்கு, நீதி­மன்­றம் மூலம் கடி­வா­ளம் போடும் செய­லை­யும் தமிழ்­நாட்­டின் திரா­விட மாடல் அரசு முன்­னெ­டுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சாதிப் படி­நிலை இறு­கிப் போயுள்ள இந்­திய சமூ­கத்­தில் கல்­வி­யும் வேலை­வாய்ப்­பும் அனைத்து சமு­தா­யத்­தி­ன­ருக்­கும் கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­காக 1921ஆம் ஆண்­டில் நீதிக் கட்சி ஆட்­சிக் காலத்­தி­லேயே சென்னை மாகா­ணத்­தில் வகுப்­பு­வாரி இட­ஒ­துக்­கீடு அர­சாணை கொண்டு வரப்­பட்டு, 1928ஆம் ஆண்டு வாக்­கில் அது நடை­மு­றைக்கு வந்­தது. இட­ஒ­துக்­கீட்­டைக் காப்­பாற்­று­வ­தற்­காக இந்­திய அர­சி­யல் சட்­டத்­தில் முதல் திருத்­தத்தை செய்­யக் கார­ண­மா­ன­தும் திரா­விட இயக்­கங்­க­ளின் போராட்­டங் ­கள்­தான். அதன் தொடர்ச்­சி­யாக, தமிழ்­நாட்­டில் இன்று அனைத்து சமு­தா­யத்­தி­ன­ருக்­கு­மான 69% இட­ஒ­துக்­கீடு நடை­மு­றை­யில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றப்­பட்ட இட­ஒ­துக்­கீட்டு முறை­யின் தொடர்ச்­சி­யாக, சமூக நீதிக் காவ­லர் வி.பி.சிங் ஆட்­சிக்­கா­லத்­தில் இந்­திய அள­வில் மண்­டல் கமி­ஷன் பரிந்­து­ரைப்­படி, இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­ன­ருக்கு 27% இட­ஒ­துக்­கீடு கிடைக்­கச் செய்­வ­தற்­குத் துணை நின்­ற­தும் திரா­விட இயக்­கங்­கள்­தான். இன்று இந்­தி­யா­வின் அனைத்து மாநி­லங்­க­ளி­லும் சமூக நீதி பேசப்­ப­டு­வ­தற்கு திரா­விட இயக்­கமே, குறிப்­பாக தி.மு.க.வே அர­சி­யல்­ரீ­தி­யாக அடித்­த­ள­மிட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இட­துக்­கீடு நடை­முறை தொடங்கி ‘நீட்’ எதிர்ப்பு வரை கடந்த ஒரு நூற்­றாண்டு காலத்­தில் திரா­விட இயக்­கம் தமிழ்­நாட்­டில் தொடங்­கிய போராட்­டங்­கள் இன்று இந்­திய அள­வில் எதி­ரொ­லிக்­கின்­றன. இளை­ஞர்­கள் எழுச்­சி­யு­டன் களம் காண்­கி­றார்­கள். திரா­வி­டம் வகுத்த பாதை, இந்­தி­யா­வுக்கே 
வழி­காட்­டு­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>