<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,493,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 22 2026 03:46:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260722T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="22072026-TRY-06" position.sequence="06" ex-ref="22072026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">சர்வாதிகாரம் காட்டுத் தீ! ஜனநாயகம் வீட்டு விளக்கு!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup784066_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ஜோ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சப் விஜய் ஆட்­சிப் பொறுப்பு ஏற்ற 60 நாட்­க­ளில், சமூக நீதி போற்றி வரும் தமிழ்­நாட்­டில் 9 ஆண­வப் படு­கொ­லை­கள், 4 விசா­ர­ணைக் கைதி­கள் காவல் நிலை­யச் சாவு, நடை­பெற்­றுள்­ள­தா­கத் தமிழ்­நாடு தீண்­டாமை ஒழிப்பு முன்­ன­ணித் தலை­வர் பி.சுகந்தி குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தற்­கு­றி­கள் நிரம்­பிய த.வெ.க. கட்­சித் தேர்­தல் அறிக்­கை­யில் 
‘‘ஒவ்­வொரு காவல் படு­கொ­லை­யும் அர­சின் தோல்வி” என்று சொல்லி இருந்­தது என்­பது நினை­வி­ருக்­க­லாம். ஆனால், அர­சி­ய­லில் அரிச்­சு­வடி தெரி­யாத கோமாளி ஒரு­வ­ரின் பல போலி வாக்­கு­று­தி­களை நம்பி, மாரி­சன் மான் கண்டு மாயை­யில் மயங்­கிய சீதை­யைப் போல, மக்­கள் வாக்­க­ளித்­த­னர். அத­னால், தமிழ்­நாடு செயின்ட் சார்ஜ் கோட்­டை­யில் ஆட்சி நிர்­வா­கம் குறட்டை விட்டு தூங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது. இன்று ஜோசப் விஜய் தலை­மை­யி­லான காவல் துறை, விசா­ரணை என்ற பெய­ரால் அழைத்து வரப்­பட்ட கைதி­கள்; காவல் நிலை­யங்­க­ளில், சிறை­க­ளில் காவ­லர்­க­ளின் காட்­டு­மி­ராண்­டித்­த­னத் தாக்­கு­தல்­க­ளால் உயி­ரி­ழந்­துள்­ள­னர். ஒரே வாரத்­தில் மூன்று காவல் மர­ணங்­கள் நடந்­தி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் தென் தாம­ரைக் குளம் அருகே, ஈத்­தங்­காடு, நாரா­ய­ணன் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சசி­த­ரன். அவ­ரது மகன் சபரி வர்­மன் (34) எனும் மாற்­றுத்­தி­ற­னாளி ஈத்­தங்­காட்­டில் மளி­கைக் கடை நடத்தி வந்­தார். கடந்த 9-.7.-26 அன்று, கடை­யில் தடை செய்­யப்­பட்ட குட்கா புகை­யிலை விற்­ற­தா­கக் கூறித் தென் தாம­ரைக் குளம் உதவி ஆய்­வா­ளர் உட்­பட போலீ­சார் சிலர், சபரி வர்­ம­னி­டம் இலஞ்­சம் ரூபாய் 25,000 கேட்­ட­து­டன், பணம் தரா­மலே பத்து பாக்­கெட் சிக­ரெட் வாங்­கி­யும், அத்­து­டன் காவல் நிலை­யத்­திற்கு அழைத்­துச் சென்று, மேல் அதி­கா­ரி­யின் நிர்­பந்­தத்­தின் பேரில் செல்­பே­சியை பிடுங்கி வைத்­துக் கொண்­டும் அவரை அடித்­துத் துன்­பு­றுத்­திக் கைது செய்து இரவு 11 மணி அள­வில் நாகர்­கோ­வில் கிளைச் சிறை­யில் அடைத்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அங்­கும் சிறைக் காவ­லர்­கள், தண்­டனை கைதி­கள் அவரை விலங்­கிட்­டுக் கட்டி வைத்­துச் சித்­தி­ர­வதை செய்து கடு­மை­யா­கத் தாக்­கி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வத்­தில் சிறைக் காவ­லர்­கள் சிறை­யில் இருந்த பயங்­கர கொலை குற்­ற­வா­ளி­கள் உள்­ளிட்ட பல­ரும் தாக்­கு­தல் நடத்­திய உள்­ள­தாக செய்­தி­கள் வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">யாரையோ காப்­பாற்ற வழக்­கைத் திசை திருப்ப முயற்சி நடக்­கி­றது. உடற்­கூ­ராய்வு அறிக்­கை­யில் அவ­ரது உடல் பத்­தொன்­பது இடங்­க­ளில் காயங்­கள் இருந்­த­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் காயங்­க­ளி­னால் அவர் மர­ணம் ஏற்­ப­ட­வில்லை என்று பொய்­யான அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு இருக்­கி­றது. எனவே, கணி­னிப் பட்­ட­தா­ரி­யான அவ­ரது மனைவி ஆனந்­த­வல்லி உட்­பட உற­வி­னர்­கள் மற்­றும் வட்­டார மக்­கள் உடலை வாங்க மறுத்து தொடர் மறி­யல் போராட்­டம் செய்து வரு­கின்­ற­னர். சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு மாற்ற உற­வி­னர்­கள் கோரிக்கை வைத்­துப் போராடி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சிறைக்­குள் இருந்த கண்­கா­ணிப்பு கேமரா பதி­வு­கள் மற்­றும் உடற்­கூராய்வு மருத்­து­வப் பதி­வுக் காட்­சி­கள் இவை அனைத்­தும் ஏன் வழங்­கப்­ப­ட­வில்லை என்று தி.மு.க. வலி­யு­றுத்­திக் கேள்­வி­கள் பல எழுப்­பி­யுள்­ளது? மாவட்ட ஆட்­சி­யர் இதில் நேர­டி­யா­கத் தலை­யிட வேண்­டும்; மீண்­டும் முறை­யாக உடற்­கூ­ராய்வு செய்­யப்­பட வேண்­டும்; தென் தாம­ரைக் குளம் காவல் நிலை­யம் மற்­றும் கன்­னி­யா­கு­மரி கிளைச் சிறைக் குள்­ளும் நடந்த தாக்­கு­தல்­கள், இக்­கொ­லைச் சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய அனை­வ­ரும் கைது செய்­யப்­பட வேண்­டும்; சி.பி.ஐ. விசா­ரணை வேண்­டும்; என்று அவ­ரு­டைய உற­வி­னர்­கள், பொது­மக்­கள் போராட்­டம் நடத்தி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­நி­லை­யில் சபரி வர்­மனை அடித்­துக் கொன்­ற­தாக 3 போலீ­சார் மற்­றும் 8 கைதி­கள் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல் கிடைத்­துள்­ளது. அதன்­படி 103 (1) பி.என்.எஸ். (கொலை), 61 (2) 
பி.என்.எஸ். (குற்­றச்­சதி), 115 (2) மற்­றும் 118 (1) பி.என்.எஸ். (காயம் மற்­றும் கொடுங்­கா­யத்தை ஏற்­ப­டுத்­து­தல்), 191 (2) பி.என்.எஸ். (கல­கம் விளை­வித்­தல்), 296 பி.என்.எஸ். ஆபா­ச­மான செயல்­கள், 238 பி.என்.எஸ். சாட்­சி­யங்­களை மறைத்­தல் (அல்­லது) அழித்­தல் ஆகிய ஏழு பிரி­வு­க­ளில் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. ஆட்­சி­யில் சிவ­கங்கை மாவட்­டம், மடப்­பு­ரம் கோயில் காவ­லாளி அஜித் குமார் காவல் விசா­ர­ணை­யில் தாக்­கப்­பட்டு மர­ணம் அடைந்­தார் எனத் துய­ரச் செய்தி கேட்­ட­தும் முதல்­வ­ராக இருந்த மு.க. ஸ்டாலின், பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­தி­ன­ரி­டம் தொலைப்­பே­சி­யில் தொடர்பு கொண்டு மன்­னிப்பு கேட்­ட­து­டன், ஆறு­தல் கூறி அப்­ப­குதி அமைச்­சர் பெரிய கருப்­பனை நேரில் அனுப்பி சந்­தித்து ஆறு­தல் கூறிட வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இதில் சரி­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று உறு­தி­ய­ளித்­தார்; அது மட்­டும் இல்­லா­மல் சி.பி.ஐ. விசா­ர­ணைக்­கும் உத்­த­ர­விட்­டார் முதல்­வ­ராக இருந்த தள­பதி ஸ்டாலின். அதற்கு மாறாக, நடி­கர் ஜோசப் விஜய் சினிமா பாணி அர­சி­யல் செய்­தார். 2025 ஜூலை-2 இல் பாதிக்­கப்­பட்ட அஜித்­கு­மா­ரின் குடும்­பத்­தைத் சந்­தித்து மடப்­பு­ரத்­தில் அர­சி­யல் 
செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அத்­து­டன் சென்னை சிவா­னந்த சாலை­யில் அவ­ரது தலை­மை­யில் ஊர்­வ­லம் பேரணி எனக் கூட்­டிச் “சட்ட ஒழுங்கு சரி­யில்லை என்­றும், அப்­ப­டிச் சரி செய்ய வேண்­டு­மென்­றால் மக்­க­ளு­டன் சேர்ந்து அதனை 
சரி செய்­வோம்” என்­றும் அன்று பேசி­ய­வர்­தான் இன்­றைய முதல்­வர் ஜோசப் விஜய். ஆனால், இன்று கன்­னி­யா­கு­மரி நாகர்­கோ­வில் மாற்­றுத்­தி­ற­னாளி சபரி வர்­மன் சாவு குறித்து எந்த விதத்­தி­லும், வாய் திறக்­கா­மல் ஜோசப் விஜய் இருந்து வரு­கி­றார். பத்­தி­ரிகை போன்ற ஊட­கங்­க­ளுக்கு எந்­தப் பதி­லும் அளிக்­கா­மல் கல்­லுளி மங்­க­னாக இருந்து வரு­கி­றார். அது­போல அவ­ரு­டைய. அமைச்­சர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் 
எவ­ரும் பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­தி­ன­ரைக் கண்டு ஆறு­தல் இது­வரை கூறிட முன் வர­வில்லை; ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">“கைது செய்­யப்­பட்­ட­போது ஆரோக்­கி­யத்­து­டன் இருந்த சபரி வர்­மன், சிறைக்­குள்ளே பிணம் ஆகி வெளி­யில் வந்த போது, உடல்­ந­லம் இல்­லா­மல் இறந்­தார் என்று ஜோசப் விஜய் காவல்­துறை சொல்­லு­வது உண்­மைக்கு மாறா­னது. இப் படு­கொ­லை­யைத் தகுந்த முறை­யில் விஜய் அரசு விசா­ரித்து பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­திற்­குத் தகுந்த நட­வ­டிக்கை எடுக்­கா­மல் விட்­டால்; சி.பி.ஐ.க்கு மாற்­றக் கோரி தி.மு.க. சட்­டப் போராட்­டம் நடத்­தும் என்று கடு­மை­யான முறை­யில் தன் கண்­ட­னத்தை எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் தி.மு.க. சார்­பில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதைப் போல தி.மு.க.வின் நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் 
கனி­மொழி எம்.பி., பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­தி­னரை நேரில் சந்­தித்து ஆறு­தல் கூறி உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும், தவ­றும் 
பட்­சத்­தில் தி.மு.க. சட்­டப் போராட்­டம் நடத்­தும் என்­றும் கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பொது­வாக ஒரு­வ­ரைக் கைது செய்­தல் தொடர்­பான சட்­ட­வகை முறை­ க­ளைப் பின்­பற்­றா­த­தால் தான் இது­போன்ற விளை­வு­கள் நடை­பெ­று­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">(consequences of non compliance with provisions relating to arrest)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">. சட்­டத்­திற்கு முர­ணான வகை­யில் கைது செய்­தால் கைது செய்­யப்­பட்ட நபர் இந்­தி­யத் தண்­ட­னைச் சட்­டத்­தின் (I.P.C) 96 முதல் 106 வரை உள்ள பிரி­வு­க­ளில் (புதிய பி.என்.எஸ். சட்­டம் பிரிவு 35 முதல் 44 வரை) வாயி­லா­கக் கூறப்­பட்­டுள்ள தற்­காப்பு உரி­மை­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதி­கா­ரத்­தைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­திக் கைது செய்­தால், அவர் மீது இந்­தி­யத் தண்­ட­னைச் சட்­டம் பிரிவு 220 (பி.என்.எஸ். சட்­டப் பிரிவு 258) இன் கீழ் வழக்­குத் தொடர முடி­யும். மேலும், எவ­ரே­னும் ஒரு நபர் பிறி­தொரு நபரை சட்­டத்­துக்கு முர­ணான வகை­யில் கைது செய்­தால், அவர் மீது இந்­தி­யத் தண்­ட­னைச் சட்­டப் பிரிவு ஐ.பி.சி. 342 (பி.என்.எஸ். சட்­டப் பிரிவு மற்­றும் 127 (2)) கீழ் முறை­யற்ற தடுப்­பிற்­காக வழக்­குத் தொடர முடி­யும். இப்­படி தனி­ந­ப­ருக்கு உள்ள பாது­காப்­பை­யும் சட்­டப் பிரி­வு­கள் சொல்­லு­கின்­றன. ஆனால், காவல்­துறை ஆட்­சி­யா­ள­ரின் ஏவல் துறை­யா­கச் செயல்­பட்டு வரு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">காவல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்ட நப­ரா­ன­வர் கொடூ­ர­மாக 
மனி­தா­பி­மா­ன­மற்ற முறை­யில் அல்­லது கேவ­ல­மான முறை­யில் நடத்­தப்­பட்­டாலோ, விசா­ரணை எனும் புலன் விசா­ரணை நடக்­கின்ற போது 
சித்­தி­ர­வதை நடந்­தி­ருந்­தாலோ அது அர­சி­யல் அமைப்­புச் சட்­டம் உறுப்பு 21, 22 வழங்­கு­கின்ற தனி­ந­பர் சுதந்­திர உரி­மையை மீறு­வ­தா­கும். அவை மிகக் கடு­மை­யா­கக் காவல்­து­றை­யி­ன­ரால் பின்­பற்­றப்­ப­டு­தல் வேண்­டும் என்­பது குறித்து உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் குல்­தீப் சிங், ஏ.எஸ். ஆனந்த் ஆகி­யோர் வழங்­கிய தீர்ப்­பா­னது (18.12.1996) குற்­ற­வி­யல் நடை­
மு­றைச் சட்ட வர­லாற்­றில் ஒரு மைல் கல்­லாக விளங்கி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">டி.கே. பாசு என்­ப­வர் மேற்கு வங்­கத்­தில் அர­சி­யல் சாராச் சட்ட உதவி சேவை­கள் நடத்தி வந்­தார். அவர் சட்ட விரோத காவல் வைப்பு, மர­ணம் குறித்து ஆங்­கில இதழ்­க­ளான ‘டெலி­கி­ராப்’ ‘ஸ்டேட்ஸ்­மேன்’ ‘இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’ போன்ற ஏடு­க­ளில் எழுதி வந்­ததை; உச்ச நீதி­மன்­றத்­தின் கவ­னத்தை ஈர்த்­தது. இதனை ஒரு பொது நல வழக்­குக்­கான ஒரு நீதிப்­பே­ராணை (Writ) மனு­வாக உச்­ச­நீ­தி­மன்­றம் கரு­திப் பரி­சீ­ல­னைக்கு 
ஏற்­றுக் கொண்டு விசா­ரித்­தது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">‘கைது மற்­றும் காவ­லில் வைக்­கும் அனைத்து நேர்­வு­க­ளி­லும் தகுந்த பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் அந்­ந­ப­ருக்கு ஏற்­ப­டுத்­தித்­த­ரப்­பட வேண்­டும்’ என்று 11 கட்­ட­ளை­க­ளைப் பிறப்­பித்து உச்ச நீதி­மன்­றம் டி. கே. பாசு எதிர் மேற்கு வங்­கம் (Dilip K. Basu versus State of West Bengal) 
வழக்­கில் கூறி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">‘அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட உறுப்பு 21 ஆல் உத்­த­ர­வா­தம் அளிக்­கப்­பட்­டுள்ள முக்­கி­ய­மான உரி­மை­யா­னது, தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு, விசா­ர­ணைக் கைதி­க­ளுக்கு, சிறை­யில் உள்­ள­வர்­க­ளுக்கு அல்­லது பாது­காப்­பில் உள்ள மற்ற கைதி­க­ளுக்கு, சட்­டத்­தால் நிறு­வப்­பட்ட நடை­மு­றை­க­ளின்­ப­டி­யல்­லா­மல், வேறு வகை­யில் மறுக்­கப்­ப­ட­லா­காது’ என்று அந்த வழக்­கில் கூறப்­பட்­டது. எனவே, கீழ்க்­கண்ட இந்த வழி­காட்டு நெறி­மு­றை­கள் பின்­பற்­றப்­பட வேண்­டும் என்று அவ் வழக்­கில் ஆணித்­த­ர­மா­கக் கூறி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">(1) கைது செய்­கின்ற விசா­ரணை காவல்­துறை அதி­காரி தங்­க­ளது சரி­யான தெளி­வான கண்­க­ளுக்கு தெரி­கின்ற அடை­யா­ளத்­தை­யும் 
தங்­கள் பெய­ரை­யும் கொண்ட சீட்டு பத­வி­யு­டன் பொருத்­திக் கொண்­டி­ருக்க வேண்­டும். (should bear accurate visible and clear identification and name-tags with their designation) அல்­லது 
விசா­ரணை கையா­ளும் அவ­ரு­டைய முழு விவ­ரம் பற்­றிப் பதி­வே­டு­
க­ளில் பதிவு செய்­யப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">(2) கைது செய்­கின்ற அதி­காரி, கைது செய்­யும் சம­யத்­தில் கைது குறிப்பு (Memo of arrest) ஒன்­றைத் தயா­ரித்­தல் வேண்­டும். அதில் குறைந்­தது ஒரு சாட்­சி­யா­வது கையெ­ழுத்­திட வேண்­டும். அச்­சாட்­சி­யா­ன­வர் கைது செய்­யப்­பட்­ட­வ­ரின் குடும்ப உறுப்­பி­ன­ராக இருக்­க­லாம் அல்­லது அந்த வட்­டா­ரத்­தில் வசிக்­கின்ற மதிப்­பிற்­கு­ரிய ஒரு நப­ராக இருக்­க­லாம் . கைது செய்த நேர­மும் தேதி­யும் குறிக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">(3)கைது குறிப்­பில் கையெ­ழுத்­தி­டு­கின்ற சாட்­சி­யா­ன­வர், கைதா­ன­வ­ரின் நண்­ப­ரா­கவோ, உற­வி­ன­ரா­கவோ இல்­லை­யெ­னில், கைது செய்­யப்­பட்டு அல்­லது சிறை­யில் விசா­ரணை மையம் அல்­லது வேறு வகை­யான அடைப்­புக்­குள் வைக்­கப்­பட்டு இருக்­கும் நபர், தான் கைது செய்­யப்­பட்­டுக் குறிப்­பிட்­ட­தொரு இடத்­தில் வைக்­கப்­பட்­டி­ருக்­கும் விவ­ரத்­தைக் கூடிய விரை­வில் தனது உற­வி­னர், நண்­பர், அறிந்­த­வர் அல்­லது தனது நல­னில் 
அக்­கறை கொண்ட ஒரு­வ­ருக்­குத் தெரி­விக்க உரி­மை­யு­டை­ய­வர் ஆவார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">(4) கைது செய்­யப்­பட்­ட­வ­ரின் உற­வி­னர் அல்­லது நண்­பர் வேறு மாவட்­டத்­தில் அல்­லது நகர ஊர்­க­ளில் இருந்­தால்; அங்­குள்ள சட்ட உதவி மையத்­தின் மூல­மா­க­வும், அங்­குள்ள காவல் நிலை­யத்­திற்­குத் தொலை­வ­ரிச் செய்தி கொடுப்­ப­தன் மூல­மா­க­வும், கைது செய்­த­தி­
லி­ருந்து 8 அல்­லது 12 மணி நேரம் வாய்ப்­பிற்­குள் கைது செய்­யப்­பட்ட நேரம், இடம், காவ­லில் உள்ள வைக்­கப்­பட்­டுள்ள இடம் பற்­றிய விவ­ரங்­
களைத் தெரி­விக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">(5) கைது செய்­யும் ஒரு­வ­ரைக் காவ­லில் வைக்­கும் பொழுது, அது குறித்த தக­வ­லைத் தான் விரும்­பும் ஒரு­வ­ருக்­குத் தெரி­விக்க உரிமை உண்டு என்ற விவ­ரத்­தைக் கைது செய்­யப்­பட்­ட­வ­ருக்­குத் தெரி­விக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">(6) காவ­லில் வைக்­கப்­பட்­டுள்ள இடத்­தில் அங்­குள்ள பதி­வேட்­டில், அவர் கைதான விவ­ர­மும், கைது குறித்து யாருக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது என்­ப­தை­யும், கைது செய்­யப்­பட்­ட­வர் எந்த அதி­கா­ரி­யு­டைய பொறுப்­பில் இருக்­கி­றார் என்­ப­தான விவ­ரங்­க­ளை­யும் குறிக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">(7) கைது செய்­யப்­ப­டும் ஒரு­வர் தான் வேண்­டிக் கொண்­டால்; அவ­ரைப் பரி­சோ­தித்­துக் கைது செய்­யப்­பட்ட சம­யத்­தில் அவர் உடம்­பில் சிறிய காயங்­களோ, பெரிய காயங்­களோ இருந்­தால், அவற்­றைப்­பற்றி அப்­பொ­ழுதே பதிவு செய்ய வேண்­டும். சோதனை குறிப்பு (Inspection memo) கைது செய்­யப்­பட்­ட­வர் மற்­றும் கைது செய்த அதி­காரி இரு­வ­ரா­லும் கையெ­ழுத்­தி­டப்­பட வேண்­டும். கைது செய்­யப்­பட்­ட­வ­ருக்கு அதன் நகல் வழங்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">(8) கைது செய்­யப்­பட்­ட­வர் காவ­லில் உள்ள போது, 48 மணி நேரத்­திற்கு ஒரு­முறை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மருத்­து­வ­ரால் பரி­சோ­திக்­கப்­பட வேண்­டும். மாநில சுகா­தா­ரப் பணி இயக்­கு­நர் அவ்­வாறு அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மருத்­து­வர்­கள் குழுவை (Penel of approved doctors) வட்ட, மாவட்ட அள­வில் நிய­மிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">(9) கைது குறிப்பு உட்­பட மேலே குறிப்­பிட்டு ஆவ­ணங்­க­ளின் நகல்­கள் அனைத்­தை­யும் கோப்­பிற்­காக நிர்­வா­கத்­துறை குற்­ற­வி­யல் 
நடு­வ­ருக்கு அனுப்பி வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">(10) கைது செய்­யப்­பட்­ட­வரை காவல்­துறை அதி­காரி கேள்­வி­கள் கேட்டு விசா­ரிக்­கின்ற போது, விசா­ர­ணை­யின் முழு­வ­தும் இல்­லா­வி­டி­னும் விசா­ர­ணை­யின்­போது, வழக்­க­றி­ஞர் ஒரு­வரை சந்­திக்க வாய்ப்பு தரப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">(11) எல்லா மாவட்ட மற்­றும் மாநில தலைமை இடங்­க­ளில் காவல்­துறை கட்­டுப்­பாட்டு அறை ஒன்று ஏற்­ப­டுத்த வேண்­டும். ஒரு­வ­ரைக் கைது செய்து காவ­லில் வைக்­கின்ற போது; அவ­ரைக் கைது செய்த அதி­காரி, கைது செய்த விவ­ரம் மற்­றும் காவ­லில் வைத்­துள்ள இடம் குறித்­துக் கைது செய்­த­தி­லி­ருந்து 12 மணி நேரத்­திற்­குள் மேற்­படி காவல் துறை கட்­டுப்­பாட்டு அறைக்­குத் தக­வல் தெரி­விக்க வேண்­டும். அவ்­வி­வ­ரங்­கள் எல்­லோ­ருக்­கும் தெரி­யும் வகை­யில் காவல்­துறை கட்­டுப்­பாட்டு அறை­யில் விளம்­ப­ரப் பல­கை­யில் பார்­வைக்கு வைக்­கப்­பட வேண்­டும். இந்த நெறி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்­காத சம்­பந்­தப்­பட்ட அதி­காரி மீது துறை சார்ந்த நட­வ­டிக்­கைக்கு உள்­ளா­வ­தோடு, நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றத்­திற்­கும் உள்­ளா­வார் என அதி­கார வரம்­புள்ள உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுக்­க­லாம். இவ்­வ­ழக்­கின் தீர்ப்­புப் படியே குற்­ற­வி­யல் நடை­மு­றைச் சட்­டத்­தில் பல்­வேறு வகை முறை­கள் இயற்­றப்­பட்­டன என்­பதை நினை­வில் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், ஜோசப் விஜய் அரசு பொறுப்பு ஏற்­ற­வு­டன் தமிழ்­நாடு காவல்­துறை­யைச் சட்ட விதி­மு­றை­களை எல்­லாம் மீறி நடந்து வரு­கி­றது. யூடி­யூப் மதுரை மாரி­தாஸ் கைது, சமூக வலைத்­தள நபர்­கள் மீது தவ­றான பிரி­வு­க­ளில் வழக்­குப் பதிவு, இரா­யக்­கோட்டை அன்­பா­னந்­தம் கைது, முன்­னாள் அமைச்­சர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அனிதா ராதா­கி­ருஷ்­ணன், எ.வ. வேலு மீது வழக்­கு­கள் பாய்ச்­சல், புதிய தலை­முறை தொலைக்­காட்சி ஊட­க­வி­ய­லா­ளர் விஜ­யன் சட்ட விரோத விசா­ரணை மிரட்­டல், விளாத்­திக்­கு­ளம் தொகுதி கழக சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஜி.வி.மார்க்­கண்­டே­யன் கைது என தொடர்­கின்­றன. தன் அமைச்­சர் பெரு­மக்­கள், 
எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க. கட்­சி­யி­னர் செய்து வரும் பாலி­யல், கொலை, கொள்ளை, வழிப்­பறி, திருட்டு எனச் சட்­ட­வி­ரோ­தச் செயல்­கள் மீது, தன் 
கட்­சி­யி­னரே புகார் கொடுத்­தும் எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் இது­வரை எடுக்­க­வில்லை என்­பது Police State என நிரூப்­பிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்­கும் குதிரை பேரம் நடத்தி வரும் ஜோசப் விஜய் அரசு; அர­சி­யல் சட்­டத்­திற்கு விரோ­த­மா­கச் செயல்­பட்டு வரு­கிற அதி­கா­ரி­கள் எல்­லோ­ரும் எதிர்­கா­லத்­தில் சட்­டத்­தின் முன் நின்று பதில் சொல்ல வேண்­டிய பொறுப்பு இருக்­கி­றது என்­பதை மறந்து விடக்­கூ­டாது. கார­ணம் இது சட்­டத்­தின் ஆட்சி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5"> (INDIA IS UNDER THE RULE OF LAW, BUT NOT RULER OF LAW PART 3 OF THE CONSTITUTION (EXAMPLE, ARTICLE 19 ON FREEDOM AND ARTICLE 21 ON THE RIGHT TO LIFE) RESTRICTS THE GOVT. ARBITRARILY INFRINGING ON CITIZENS LIBERTIES. RULE OF LAW IS SUPREME.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சட்­டம் - ஒழுங்கு சீர்­கெட்­டுள்ள நிலை­யில் காவ­லர்­கள் நிய­ம­னத்தை ஓராண்­டுக்­குத் தள்ளி வைத்­துள்­ளது த.வெ.க. அரசு. “இத­னால் காவல்­துறை பணிக்­கா­கக் காத்­தி­ருக்­கும் இலட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­க­ளுக்­குப் பெரும் ஏமாற்­றத்­தைத் தந்­தி­ருக்­கி­றது” என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆம்; இப்­ப­டி­யான தான்­தோன்­றித்­த­ன­மான தற்­குறி ஆட்­சி­கள் பற்றி தான் அண்ணா அப்­போதே சொன்­னார்.... “சர்­வா­தி­கா­ரம் காட்­டுத் தீ! ஜன­நா­ய­கம் வீட்டு விளக்கு!” என்று.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>