<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1041" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 21 2026 15:34:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260722T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="22072026-TRY-07" position.sequence="07" ex-ref="22072026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">22.07.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="35">மா.சுப்பிரமணியன் தலைமையில் இயங்கும் கலைஞர் கணினி கல்வியகம் பட்டமளிப்பு விழா!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="35"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="59">சமூக நீதி கோட்பாட்டை முதன்மையாக கொண்டிருக்கின்ற    தி.மு.கழகம்தான் தமிழ்நாட்டிற்கு எப்போதும் காவல் அரணாக இருக்கும்!   </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="41">விழாவில் - “இனமுரசு” சத்யராஜ் சிறப்புரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup769021_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="SathyarajBWc_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை, ஜூலை 22–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சமூ­க­நீ­திக் கோட்­பாட்டை முதன்­மை­யா­கக் கொண்­டி­ருக்­கின்ற தி.மு.கழ­கம்­தான் தமிழ்­நாட்­டிற்குஎப்­போ­துமே காவ­ல­ர­ணாக இருக்­கும் என்று மேனாள் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்தலை­மை­யில் இயங்­கும் சைதை கலை­ஞர் கணினி கல்­வி­ய­கம் – கலை­ஞர் மக­ளிர் திறன் மேம்­பாட்டு மைய பட்­ட­ம­ளிப்பு விழா­வில்  
“இன­மு­ரசு” சத்­ய­ராஜ் பேசி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை சைதாப்­பேட்டை பஜார் சாலை­யில் சென்னை தெற்கு மாவட்ட கழக செய­லா­ளர் – மேனாள் மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தலை­மை­யின்­கீழ் செயல்­ப­டும் கலை­ஞர் கணினி மையம் – கலை­ஞர் மக­ளிர் திறன்­மேம்­பாட்டு மையம் ஆகி­ய­வற்­றில் பயிற்சி பெற்று பயிற்சி முடித்­த­வர்­க­ளுக்கு பட்­ட­யம் மற்­றும் நினைவு பரி­சு­கள் வழங்­கும் விழா நேற்­று­முன்­தி­னம் (19–7–2026) சைதாப்­பேட்­டை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வி­ழா­வில் நாத்­திக நன்­னெ­றிச் செம்­மல் – இன­மு­ரசு சத்­ய­ராஜ் அவர்­கள் கலந்­து­கொண்டு பட்­ட­யங்­களை வழங்கி விழாப் பேரு­ரை­யாற்­றி­னார். அவ்­வுரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனக்கு ரொம்ப மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது. பட்­டம் பெற்ற அனை­வ­ருக்­கும் எனது வாழ்த்­து­களை முதற்­கண் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். அனை­வ­ருக்­கும் எனது வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">என்­னா­லும் அவர்­தான் அமைச்­சர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்­னு­டைய அன்­புத்­தம்பி மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அவர்­களை முன்­னாள் அமைச்­சர் என்று நான் சொல்­ல­மாட்­டேன். என்­னா­லும் அவர்­தான் அமைச்­சர். ஏனென்­றால் இன்­னாள் அமைச்­ச­ருக்­கும் அவர்­தான் வழி­காட்டி. இன்­னாள் சுகா­தார அமைச்­சர் யாரென்று தெரி­ய­வில்லை எனக்கு. இவர் அமைத்­துக்­கொ­டுத்­தப் படிக்­கட்டு களில்­தான் இன்­றைய அமைச்­சர் மேல்­வந்து நிற்­கி­றார். அத­னால் இன்­றைய அமைச்­சர், மா.சுவை நன்­றி­யோடு நினைத்­துப் பார்த்­துக்­கொண்­டி­ருப்­பார். வெளி­யில் பேச­வில்­லை­யென்­றா­லும்­கூட அவ­ரு­டைய மனச்­சாட்­சிக்­குத் 
தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மா.சு. சமூக வலைத்­த­ளங்­க­ளான பேஸ்­புக், இன்ஸ்டா, ட்விட்­டர் எதி­லே­யும் கணக்கு இல்லை. அத­னால் பார்ப்­ப­தில்லை. மா.சு. 21.1 கி.மீட்­ட­ரில் 169 மாரத்­தான் ஓடி­யுள்­ளார். இது மிகப்­பெ­ரிய சாதனை. இதை வந்து வெளி­யி­லி­ருந்து பார்த்து, உனக்கு எதுக்­குத் தேவை­யில்­லாத வேலை என்று சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளில் விமர்­சிப்­பது மிகப்­பெ­ரிய தவறு. உடற்­ப­யிற்சி என்­பது என்­னைக்­கும் தேவை, எந்த வய­தி­லி­ருந்­தா­லும் அது தேவை­யான ஒன்­று­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளுங்­கட்சி எதிர்க்­கட்சி என்­ப­தைப் பற்­றி­யெல்­லாம் கேட்­டார்­கள். முத­லில் ஒரு விஷ­யத்­தைப் புரிந்­து­கொள்ள வேண்­டும். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தேர்­த­லில் பங்­கேற்­ப­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட கட்­சியே அல்ல. 1949ஆம் ஆண்டு ராபின்­சன் பூங்­கா­வில் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் தலை­மை­யில் ஆரம்­பிக்­கப்­பட்டு கட்சி. உங்­க­ள­னை­வ­ருக்­கும் தெரி­யும். நான் உங்­க­ளுக்கு சொல்­லிக்­கொ­டுக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க.வின் முதல் மாநில மாநாடு 1952இல் நடக்­கி­றது. பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் தலை­மை­யில் நடை­பெற்ற அம்­மா­நாட்­டில் வாக்­கெ­டுப்பு நடக்­கி­றது. 1952 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­ட­லாமா? வேண்­டாமா? என்று கேட்­கி­றார்­கள். பெரும்­பா­லா­ன­வர்­கள் நாம் தேர்­த­லில் நிற்க வேண்­டாம் நாம் பெரி­யார் வழி­யில் சமூ­க­சீர்­தி­ருத்த இயக்­க­மா­கவே நிற்­போம் என்று சொன்ன இயக்­கம்­தான் தி.மு.க. தி.மு.க.வின் முதல் தொண்டு சமூ­கத்­தொண்­டு­தான். சமூக சேவை­தான். சமூ­க­நீ­திக்­கா­கப் பாடு­ப­டு­வ­து­தானே தவிர, தேர்­த­லில் நிற்­பது இரண்­டா­வ­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தி.மு.கழ­கம் போட்­டுக் 
கொடுத்த பாதை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்­குப் பிறகு 1957இல் நடை­பெற்­றத் தேர்­த­லில் தி.மு.கழ­கம் போட்­டி­யி­டு­கி­றது. அத்­தேர்­த­லில் 15 இடங்­க­ளில்­தான் வெற்­றி­பெற்­றார்­கள். 1962ஆம் ஆண்டு 50 தொகு­தி­க­ளில் தி.மு.கழ­கம் வெற்­றி­பெற்­றது. அந்த 50 தொகு­தி­க­ளி­லும் ஏற்­கெ­னவே இருக்­கிற 15 தொகு­தி­க­ளி­லும் தி.மு.வை தோற்­க­டித்தே ஆக வேண்­டும் என்று அன்­றைக்கு ஆளுங்­கட்­சி­யாக இருந்த காங்­கி­ரஸ் கங்­க­னம் கட்­டிக்­கொண்டு அலைந்து வெற்­றி­       பெ­று­கி­றார்­கள். ஆனால் அந்த 15 இடங்­க­ளில் தோற்­க­டிக்­கப்­ப­டு­கி­றார்­கள் காங்­கி­ரஸ்­கா­ரர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதன்­பி­றகு 1967ஆம் ஆண்டு தி.மு.கழ­கம் ஆட்­சிக்கு வரு­கி­றது. இது­தான் தி.மு.க.வின் வர­லாறு. அத­னால் மக்­க­ளுக்கு செய்­கிற சேவை­தான் தி.மு.கழ­கம் என்­பது தொண்­டர்­க­ளுக்­குத் தெரி­யும். தலை­வர்­க­ளுக்­குத் தெரி­யும். என்­றைக்­குமே முதன்­மை­யாக இருக்­கும் என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். கலை­ஞர் என்­கிற பெய­ராலே நடை­பெ­று­கிற இந்த நிகழ்ச்சி, தி.மு.கழ­கத்­தி­னு­டைய முதல் கொள்­கையே இட­ஒ­துக்­கீ­டும், கல்­வி­யும், சமூ­கத்­தில் கீழி­ருக்­கி­ற­வர்­கள் மேல்­நி­லைக்­குக் கொண்டு வர­வேண்­டும் என்­ப­து­தான் அவர்­க­ளது கொள்கை. அது ஆட்­சி­யில் இருந்­தா­லும் சரி. இல்­லா­விட்­டா­லும் சரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆட்­சி­யில் இருந்­தால் தி.மு.க ஆளும் கட்சி. ஆட்­சி­யில் இல்­லா­விட்­டால் ஆளும் கட்­சியை – ஆளும் கட்சி. யார் ஆளும் கட்­சி­யாக இருந்­தா­லும் தி.மு.கழ­கம் போட்­டுக்­கொ­டுத்­தப் பாதை­யில்­தான் ஆட்சி செய்­தாக வேண்­டும். இங்கே சொன்­னார்­கள். நம் ஆட்­சி­யில் வாங்­கிக்­கொ­டுத்த ஆட்­டோ­வில் வேறு கட்சி கொடிப் பறக்­கி­றது என்று. பார்ப்­போம் அது எவ்­வ­ளவு நாளைக்­குப் பறக்­கி­றது என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமது முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் ஆட்­சி­யில், கிண்டி ரேஸ்­கோர்ஸ் மைதா­னம் இருந்­தால்­தானேநீ குதி­ரைப்­பந்­த­யம் நடத்­து­வாய். மைதா­னமே இல்­லா­மல், அங்கே ஒரு சிறப்­பான பூங்கா அமைப்­ப­தற்கு வேலை­கள் நடை­பெற்­றது. இன்­றும் ஒன்­றரை ஆண்­டு­க­ளில் அந்த                 செம்­மொழி பூங்கா திறக்­கப்­ப­டும்­போது, அப்­ப­டி­யொரு பூங்­காவே இல்லை என்று சொல்­கிற நிலை வரும் என்று மா.சு. அவர்­கள் சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால் அந்த பூங்­காவை எதிர்­கா­லத்­தில் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் மீண்­டும் முதல்­வ­ராகி திறந்து வைப்­ப­தற்­குக்­கூட வாய்ப்­பி­ருக்­கி­றது. அவ­ரால் உரு­வாக்­கப்­பட்ட பூங்­காவை, அவரே தொடங்கி வைக்­கக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கி­றது. ஏனென்­றால் அவ­ச­ரப்­பட்டு மாற்­றம், மாற்­றம் என்று சொல்லி வாக்­க­ளித்­து­விட்­டார்­கள். குழந்­தை­கள், குட்­டீஸ் எல்­லாம் நம் நண்பா, நண்­பி­க­ளைப் போட்டு மடக்கி போட்­டு­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பது அனை­வ­ரும் படிக்க வேண்­டும் என்­ப­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட இயக்­கம். இந்த இயக்­கத்­தின் வர­லாறு 1949ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதற்கு முன்பே ஒருங்­கி­ணைந்த மாகா­ண­மாக, சென்னை மாகா­ணம் இருந்­தது. வெள்­ளைக்­கா­ரர்­கள் காலத்­தி­லேயே இருந்­தது. இரண்டு அர­சு­கள் சேர்ந்து ஆட்சி நடத்­து­வ­தாக இருந்­தது. 1921 முதல் 1926 ஆம் ஆண்டு பன­கல் அர­சர் தலை­மை­யில் கவர்­னர் ஜென­ரல் ஆட்சி ஜஸ்­டிஸ் கட்சி. அந்த ஆட்­சி­யில்­தான் முதன்­மு­த­லில் இட­ஒ­துக்­கீட்­டைக் கொண்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சமஸ்­கி­ரு­தம் படித்­தால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மருத்­து­வம் படிக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">முடி­யும் என்ற நிலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­போ­து­தான் மிகப்­பெ­ரிய ஒரு சூழ்ச்சி இருந்­தது. சமஸ்­கி­ரு­தம் படித்­தால்­தான், மருத்­து­வம் படிக்க முடி­யும் என்­கிற ஒரு நிலை இருந்­தது. சமஸ்­கி­ரு­தத்­திற்­கும், மெடிக்­கல் காலே­ஜிக்­கும் ஏதா­வது ஒரு சம்­பந்­தம் இருக்­கி­றதா? சமஸ்­கி­ரு­தம் தெரிந்­தால்­தான் மருத்­து­வம் படிக்க முடி­யும் என்­கிற நிலைமை இருந்­தால்­தான், ஒரு குறிப்­பிட்ட பிரி­வி­னர் மட்­டும் மருத்­து­வம் படிக்க முடி­யும் என்­ப­தற்­கா­க­தான். அதை ஒழித்­த­தும் நீதிக்­கட்­சி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சில கிரா­மங்­க­ளில் பிற்­ப­டுத்­தப்­ பட்­டோர் மட்­டும் பய­ணம் செய்­கிற பேருந்­து­க­ளில் பட்­டி­ய­லின மக்­கள் பய­ணம் செய்­யக்­கூ­டாது என்­கிற ஒரு நிலை இருந்­தது. அதை ஒழித்­துக்­கட்­டி­ய­தும் நீதிக்­கட்­சி­தான். இனி­மேல் இந்த நிலை நீடித்­தால் லைசென்ஸை ரத்­து­செய்­து­வி­டு­வோம் என்று நீதிக்­கட்சி எச்­ச­ரித்­தது. இப்­ப­டிப்­பட்ட ஆட்­சி­தான் தி.மு.க.வின் நீட்சி. அத­னால் இன்­றைக்கு யார் ஆட்­சிக்கு வந்­தா­லும், எங்­கள் கொள்­கைத் தலை­வர்­கள் பெரி­யார், அண்ணா, அம்­பேத்­கர் என்று சொல்­லி­தான் ஆக­ணும். எங்­கள் இரண்டு கண்­கள் திரா­வி­ட­மும் – தமிழ்­தே­சி­ய­மும் என்று சொல்­லித்­தான் ஆக­ணும். அந்­தக் கட்­டத்­திற்கு, கட்­டா­யத்­திற்­குத் தள்­ளப்­பட்­ட­து­தான் திரா­வி­டர் இயக்­கத்­தின் மிகப்­பெ­ரிய சாதனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரு­டைய சாத­னை­களை நினைத்­துப் பார்க்­கும்­போது எண்­ணற்ற சாத­னை­கள். 1967 ஆட்­சிக்கு வந்­த­பி­றகு அண்ணா ஓர் ஆண்­டில் மறைந்­து­வி­டு­கி­றார்­கள். அதன்­பி­றகு கலை­ஞர் ஆட்­சிக்கு வரு­கி­றார். 1977 வரை­யி­லும் கலை­ஞர் 9 ஆண்­டு­கள் ஆட்­சி­யில் இருக்­கி­றார். ஆட்­சி­யில் இருக்­கும்­போது கலை­ஞர் விதைத்த விதை­கள், ஒரு சட்­டம் இயற்­றும்­போது அது பய­ன­ளிப்­ப­தற்கு, ஏனென்­றால் முதல் தலை­மு­றைப் பட்­ட­தா­ரி­கள்  அப்­போ­து­தான் உரு­வா­கி­றார்­கள். அப்­போது விதைத்த விதை­கள் இன்று வளர்ந்து மர­மாக, காய்­க­ளாக, கனி ­க­ளாக பூத்­துக்­கு­லுங்கி, இந்­தி­யா­ வி­லேயே தமிழ்­நா­டு­மு­தல் மாநி­ல­மாக திகழ்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">ஆட்­சி­யில் இல்­லா­விட்­டா­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தொடர்ந்து மக்­கள் பணி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.கழ­கம் திரா­வி­டர் இயக்­கம் ஆட்­சிக்கு வந்­த­பி­ற­கு­தான் படிப்­ப­டி­யாக தமிழ்­நாடு முன்­னே­றிக்­கொண்டு வரு­கி­றது. நமது திரா­விட மாடல் முதல்­வர் காலத்­தில் இந்­தி­யா­வில் தமிழ்­நாடு முத­லா­வது மாநி­ல­மாக இருக்­கி­றது. கல்­வி­யி­லும், வேலை­வாய்ப்­பி­லும், வளர்ச்­சித்­திட்­டங்­க­ளி­லும், நலத் திட்­டங்­க­ளி­லும் முதன்மை மாநி­ல­மாக தமிழ்­நாடு வளர்ந்து வரு­கி­றது. அதை தக்­க­வைத்­துக்­கொண்­டாலே போதும். அதை பெரி­துப்­ப­டுத்­துங்­கள். நீங்­கள் பேரை வேண்­டு­மா­னா­லும் மாத்­திக்­கொண்­டு­போங்­கள், ஆனால் திட்­டத்தை கைவிட்­டு­வி­டா­தீர்­கள். மக்­கள் நலன்­தான் முக்­கி­யம். ஆகவே இன்­றைக்கு ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள்­கூட தி.மு.கழ­கம் அமைத்­துத்­தந்த பாதை­யில் பய­ணம் செய்­யுங்­கள் என்­பது என்­னு­டைய தாழ்­மை­யான வேண்­டு­கோள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் வளர்ச்சி என்­பது இன்­றைக்கு முன்­னு­தா­ர­ண­மான வளர்ச்­சி­யாக இருக்­கி­றது. தம்பி மா.சு. அவர்­கள் சொன்­னார்­களே. ஆட்டோ ஓட்­டு­கிற பெண்­கள் சைதைத்­தொ­கு­தி­யில் உள்ள அள­வுக்கு வேறு எங்­கே­யும் இல்லை என்று. இதெல்­லாம் மிகப்­பெ­ரிய சாதனை. இந்த சாத­னை ­யெல்­லாம் தி.மு.கழ­கத்­தின் தோழர்­க­ளும், தொண்­டர்­க­ளும், அமைச்­சர்­க­ளும், எம்.எல்.ஏக்­க­ளும், ஆட்­சி­யில் இருந்­தா­லும், இல்­லா­விட்­டா­லும் தொடர்ந்து மக்­கள் பணி­கள் நடந்­து­கொண்­டே­தான் இருக்­கும். அது­தான் இந்த தமிழ்­நாட்­டி­னு­டைய வளர்ச்­சிக்கு மிக முக்­கி­ய­மான கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தந்தை பெரி­யார் காலத்­தில் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த சமூ­க­நீ­திப் போராட்­டம் எந்த நிலை­யி­லும் கைவி­டாது தொடர்ந்து நடந்­து­கொண்­டே­தான் இருந்­தது. பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் காங்­கி­ரஸ் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஆனால் காம­ரா­ஜ­ருக்கு தந்தை பெரி­யார் மீது மிகப்­பெ­ரிய பற்­றும், மரி­யா­தை­யும் இருந்­தது. பெரி­யார் நிறை­வேற்­றித்­தந்த பல திட்­டங்­களை சட்­டங்­க­ளாக பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் நிறை­வேற்­றி ­னார்­கள். குழந்­தை­க­ளைப் படிக்க வைத்­தார். பள்­ளி­க­ளைத் திறந்­தார். இவை­யெல்­லாம் திரா­விட இயக்க சிந்­த­னைக்­கொண்ட தலை­வர்­க­ளால்­தான் வந்­தது. ஆகவே இந்த இயக்­கம் ஆட்­சி­யில் இருந்­தா­லும், இல்­லா­விட்­டா­லும், தமிழ்­நாட்­டின் நல­னுக்­கா­கவே பாடு­பட்­டுக்­கொண்டே இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நான் பெரி­யா­ரின் தொண்­டன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்னை இந்த நிகழ்ச்­சிக்கு அழைத்­தப்­போது தி.மு.க ஆளும்­கட்சி என்­றால்­கூட வர­வில்லை என்று தப்­பித்­துக்­கொள்­ள­லாம். இப்­போது எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும்­போது தி.மு.க.விற்கு கண்­டிப்­பாக துணை­யாக நிற்­பேன். ஆளுங்­கட்சி என்­றால் அட்­டை­போல் ஒட்­டிக்­கொள்­வது, எதிர்க்­கட்­சி­யாக இருந்­தால் பம்மி போகும் கட்­டப்பா நானல்ல. திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கட்­டப்­பா­வா­கக் கூட நீங்­கள் என்னை எடுத்­துக்­கொள்­ளுங்­கள். நான் பொது­வான மனி­தன். நான் பெரி­யா­ரு­டை­யத் தொண்­டன். அது­தான் என்­னு­டைய நிலைப்­பாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெரி­யா­ரு­டைய தொண்­டன் மிக­வும் இணக்­க­மாக இருக்­கும் இயக்­கம் தி.மு.கழ­கம்­தான். அத­னால் தி.மு.கழ­கத்­திற்கு துணை­யாக, பக்­க­ப­ல­மாக அப்­ப­டி­யெல்­லாம் சொல்­வ­தற்கு நான் விரும்­ப­வில்லை. ஏனென்­றால் அது ஒரு பெரிய ஆல­ம­ரம். அந்த ஆல­ம­ரத்­தில் எத்­த­னையோ விழு­து­கள் இருக்­கி­றது. அந்த ஆல­ம­ரத்­தின் நிழ­லில் இளைப்­பா­ரு­கி­ற­வன். ஏனென்­றால் நாங்­கள் நடிப்­ப­தற்கு இன்­றைக்கு வரு­மா­னம் வரு­கி­ற­தென்­றால், தமிழ்­நாடு நன்­றாக இருப்­ப­தால்­தான். அத­னால் எந்­த­வ­கை­யில் பார்த்­தா­லும், இந்த சமூ­க­நீதி கோட்­பாட்டை முதன்­மை­யா­கக் கொண்­டி­ருக்­கின்ற கழக இயக்­கம்­தான் தமிழ்­நாட்­டிற்கு எப்­போ­துமே காவ­ல­ர­ணாக இருக்­கும் என்­றுக்­கூறி உங்­க­ளி­ட­மி­ருந்து விடை­பெ­று­கி­றேன். நன்றி வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு ‘இன­மு­ரசு’ சத்­ய­ராஜ் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>