<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,385,493,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 23 2026 03:31:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260723T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="23072026-CBE-04" position.sequence="04" ex-ref="23072026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலை</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">விவசாயிகளுக்குச் சென்றடைவதை ஒன்றிய அரசு உறுதி செய்கிறதா?</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="40"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">மக்களவையில் – ஈரோடு கே.இ.பிரகாஷ் கேள்வி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="PrakashMP_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="TamilnaduAssem_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="GovaiPhoto3_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">புது­டெல்லி, ஜூலை 23–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை உரி­மைக்கு உறு­தி­யான உத்­த­ர­வா­தம் வழங்­கத் தவ­றிய ஒன்­றிய அர­சுக்கு  கே.இ. பிர­காஷ், எம்.பி. கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஈரோடு மக்­க­ளவை உறுப்­பி­னர் கே.இ.பிர­காஷ் அவர்­கள், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை (MSP) திட்­டம் விவ­சா­யி­க­ளுக்கு முழு­மை­யா­கச் சென்­ற­டை­வதை உறுதி செய்ய ஒன்­றிய அரசு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்து ஒன்­றிய வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நல அமைச்­ச­ரி­டம் விளக்­கம் கோரி­னார். மேலும், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை நிர்­ண­யிக்­கும் போது பின்­பற்­றப்­ப­டும் நடை­முறை, அதற்­காக கருத்­தில் கொள்­ளப்­ப­டும் கார­ணி­கள் மற்­றும் விவ­சா­யி­கள் அமைப்­பு­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரின் கருத்­து­கள் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கி­றதா என்­ப­தை­யும் விளக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அத்­து­டன், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை தொடர்­பான கொள்­மு­தல் நடை­மு­றை­களை வலுப்­ப­டுத்­த­வும், விவ­சா­யி­க­ளி ­டையே விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்­க­வும், கொள்­மு­தல் செயல்­மு­றை­கள் திறம்­பட செயல்­ப­டு­வதை உறுதி செய்­ய­வும் ஒன்­றிய அரசு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் அவர் கேள்வி எழுப்­பி­னார். மேலும், வேளாண் உற்­பத்­தியை ஊக்­கு­விப்­ப­தற்­கும், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை மற்­றும் அத­னு­டன் தொடர்­பு­டைய பயன்­கள் விவ­சா­யி­களை முழு­மை­யா­கச் சென்­ற­டை­வதை உறுதி செய்­வ­தற்­கும் ஒன்­றிய அரசு செயல்­ப­டுத்தி வரும் திட்­டங்­கள் குறித்த விவ­ரங்­க­ளை­யும் கேட்­ட­றிந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நல அமைச்­ச­கம் அளித்த பதில் பின்­வ­ரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">(அ) முதல் (இ) வரை: நாட்­டின் முழு­மைக்­கும் பொருந்­தும் வகை­யில், 22 கட்­டாய அறி­விக்­கப்­பட்ட வேளாண் பயிர்­க­ளுக்கு ஒவ்­வொரு ஆண்­டும் குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை (MSP) ஒன்­றிய அர­சால் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது. இந்த விலையை நிர்­ண­யிக்­கும் போது, வேளாண் செல­வு­கள் மற்­றும் விலை­கள் ஆணை­யத்­தின் (CACP) பரிந்­து­ரை­க­ளு­டன், மாநில அர­சு­கள் மற்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தொடர்­பு­டைய ஒன்­றிய அமைச்­ச­கங்­கள் மற்­றும் துறை­க­ளின் கருத்­து­க­ளும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குறைந்­த­பட்ச ஆத­ரவு விலையை பரிந்­து­ரைக்­கும் போது, உற்­பத்­திச் செலவு, தேவை மற்­றும் வழங்­கல் நிலை, உள்­நாட்டு மற்­றும் சர்­வ­தேச சந்தை விலை­கள், பயிர்­க­ளுக்கு இடை­யே­யான விலை சம­நிலை, வேளாண் மற்­றும் வேளாண்மை அல்­லாத துறை­க­ளுக்­கி­டை­யே­யான வர்த்­தக விகி­தம், நாட்­டின் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தா­ரத்­தின் மீது ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கம் ஆகி­யவை மட்­டு­மின்றி, நிலம், நீர் உள்­ளிட்ட உற்­பத்தி வளங்­கள் சீரான முறை­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறுதி செய்­யும் அம்­சங்­க­ளும் கருத்­தில் கொள்­ளப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலையை பரிந்­து­ரைக்­கும் முன், ஒன்­றிய மற்­றும் மாநில அர­சு­கள், கொள்­மு­தல் முக­மை­கள், தொழில் அமைப்­பு­கள், விவ­சா­யி­கள் பிர­தி­நி­தி­கள், ஆராய்ச்சி நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரு­டன் வேளாண் செல­வு­கள் மற்­றும் விலை­கள் ஆணை­யம் ஆலோ­சனை நடத்­து­கி­றது. அவ்­வாறு பெறப்­ப­டும் கருத்­து­க­ளும் இறுதி பரிந்­து­ரை­களை உரு­வாக்­கும்போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை அறி­விப்பு தொடர்­பாக, விவ­சா­யி­கள் அமைப்­பு­கள் மற்­றும் பிற பங்­கு­தா­ரர்­க­ளி­ட­மி­ருந்து அவ்­வப்­போது பெறப்­ப­டும் கருத்­து­கள் மற்­றும் கோரிக்­கை­க­ளும் அர­சின் கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">(ஈ): குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை­யின் கீழ் மேற்­கொள்­ளப்­ப­டும் கொள்­மு­தல் நடை­மு­றை­கள் தொடர்ந்து மேம்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன என்று ஒன்­றிய அரசு தெரி­வித்­துள்­ளது. கடந்த சில ஆண்­டு­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்ட மாற்­றங்­க­ளின் மூலம், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலைக்­கான தொகை நேர­டி­யாக விவ­சா­யி­க­ளின் வங்­கிக் கணக்­கில் செலுத்­தப்­ப­டு­வ­து­டன், ஆதார் மற்­றும் நிலப் பதி­வு­கள் ஒன்­றிய மற்­றும் மாநில அர­சு­க­ளின் கொள்­மு­தல் இணை­ய­த­ளங்­க­ளு­டன் இணைக்­கப்­பட்­டுள்­ள­தால், அதன் பயன் நேர­டி­யாக விவ­சா­யி­க­ளுக்கு சென்­ற­டை­வது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­திய உண­வுக் கழ­கம் (FCI) சார்­பில், உயிர்­முறை அடை­யாள (Biometric) அடிப்­ப­டை­யி­லான கொள்­மு­தல் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­து­டன், மண்­டி­கள் மற்­றும் கொள்­மு­தல் மையங்­க­ளின் செயல்­பா­டு­க­ளும் முழு­மை­யாக மின்­னணு முறை­யு­டன் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேசிய வேளாண் கூட்­டு­றவு சந்­தைப்­ப­டுத்­தல் கூட்­ட­மைப்பு (NAFED) சார்­பில், கொள்­மு­தல் முதல் இருப்பு அகற்­றம் வரை முழு­மை­யான மின்­னணு (End-to-End Digitization) நடை­முறை செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. e-Samriddhi தளத்­தின் மூலம் கொள்­மு­தல் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­து­டன், Drishti தளத்­தின் மூலம் இருப்பு மேலாண்மை செய்­யப்­ப­டு­கி­றது. இருப்பு விற்­பனை மற்­றும் அகற்­றம் NAFED இணை­ய­த­ளத்­தின் மூலம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. மேலும், பதிவு செயல்­மு­றை­யில் வெளிப்­ப­டைத்­தன் மையை அதி­க­ரிக்­கும் வகை­யில் POS கரு­வி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­து­டன், மாதிரி கொள்­மு­தல் மையங்­கள் அமைக்­கப் பட்­ட­தன் மூலம் கொள்­மு­தல்   நட­வ­டிக்­கை­கள் எளி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, வெளிப்­ப­டைத்­தன்­மை­யும்  விவ­சா­யி­க­ளுக்­கான சேவை­க­ளும் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ­</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“வேளாண் வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நலத் துறை, விரி­வாக்­கத்­திற்­கான மக்­கள் ஊடக ஆத­ரவு” (Mass Media Support to Agriculture Extension) என்ற ஒன்­றி­யத் திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கி­றது. இதன் மூலம் தூர்­தர்­ஷன் பிராந்­திய சேனல்­கள், டிடி கிசான் மற்­றும் அகில இந்­திய வானொலி ஆகி­ய­வற்­றின் வாயி­லாக, குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை அறி­விப்பு மற்­றும் அதன் செயல்­பாடு உள்­ளிட்ட அர­சுத் திட்­டங்­கள் குறித்து நாடு முழு­வ­தும் விவ­சா­யி­க­ளி­ டையே விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும், NAFED மேற்­கொள்­ளும் விவ­சா­யி­கள் தொடர்பு திட்­டங்­க­ளின் கீழ், கொள்­மு­தல் பரு­வம் தொடங்­கு­வ­தற்கு முன்­பாக விழிப்­பு­ணர்வு முகாம்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. பதிவு செய்­யப்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு குறுஞ்­செய்தி (SMS) மூலம் உட­னடி தக­வல்­கள் அனுப்­பப்­ப­டு­கின்­றன. உள்­ளூர் நாளி­தழ்­கள் மற்­றும் வாட்ஸ்­அப் குழுக்­கள் மூலம் தக­வல் பரப்­பப்­ப­டு­வ­து­டன், பதிவு மற்­றும் ஆவ­ணச் சமர்ப்­பிப்பு நடை­மு­றை­கள் எளி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதே­போல், APMC சந்­தை­கள் மற்­றும் கிரா­மங்­க­ளில் ஒலி­பெ­ருக்கி மூலம் கொள்­மு­தல் தொடர்­பான அறி­விப்­பு­க­ளும் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">(உ): பயிர் சாகு­படி காலங்­க­ளில் வேளாண் உற்­பத்­தியை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் ஒன்­றிய அரசு பல்­வேறு திட்­ட ங்­களை செயல்­ப­டுத்தி வரு­கி­றது. அவற்­றில் தேசிய உண­வுப் பாது­காப்பு மற்­றும் ஊட்­டச்­சத்து இயக்­கம் (NFSNM), தேசிய சமை­யல் எண்­ணெய் இயக்­கம் ឈប់ ប (NMEO-Oil Palm), தேசிய சமை­யல் எண்­ணெய் இயக்­கம் - எண்­ணெய் வித்­து­கள் (NMEO-Oilseeds), ஒருங்­கி­ணைந்த தோட்­டக்­கலை மேம்­பாட்டு இயக்­கம் (MIDH), பிர­தம மந்­திரி பயிர் காப்­பீட்­டுத் திட்­டம் (PMFBY) / மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட வானிலை அடிப்­ப­டை­யி­லான பயிர் காப்­பீட்­டுத் திட்­டம் (RWBCIS), பருப்பு வகை­க­ளில் தற்­சார்பு அடை­யும் இயக்­கம் (Mission for Aatmanirbharata in Pulses) மற்­றும் கிசான் கடன் அட்டை (KCC) உள்­ளிட்ட திட்­டங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு ஒன்­றிய அமைச்­சர் பதி­ல­ளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கோவை மாநகர் மாவட்டம், பாப்பனாய்கன்புதூர் பகுதி, 41 மற்றும் 75 வட்டக் கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் பகுதிக் கழக பொறுப்பாளர் பரணி பாக்யராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர் துரை.செந்தமிழ் செல்வன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், வட்டக் கழக பொறுப்பாளர்கள் தம்பி சண்முகம், சுரேஷ், நித்யானந்தம், ஹரி பிரசாத், பகுதி கழக நிர்வாகிகள் சிவகுமார், அபிராமி, முத்தழகு, கோபாலன், ஸ்ரீபிரியா, தம்பு கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>