<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 23 2026 04:00:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260723T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="23072026-VLR-06" position.sequence="06" ex-ref="23072026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="77">பிரிக்க  முடியாதது  தி.மு.க-.வும்  தமிழ்நாட்டு  நலனும்; பிரிந்தே  இருப்­பது  இந்­திய  பெருந்­தே­சி­ய­மும்,  தமிழ்­நாட்டு  நல­னும்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame787223_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup787134_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="BWM5_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பார­தீய ஜனதா கட்சி இந்­திய அர­ச­மைப்பை, இந்­திய அர­சி­யலை இந்­துத்­துவ கருத்­தி­ய­லுக்கு ஏற்ப மாற்­றி­ய­மைப்­பதை கடு­மை­யாக எதிர்த்து நிற்­கும் கட்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். பா.ஜ.க.-வை ஒன்­றிய ஆட்­சிப்­பொ­றுப்­பி­லி­ருந்து அகற்ற இந்­தியா கூட்­ட­ணி­யின் தூணாக 2019, 2024 தேர்­தல்­க­ளில் நின்று நூறு சத­வீத வெற்­றியை தமிழ்­நாட்­டில் ஈட்­டிக் கொடுத்­தது தி.மு.க. இன்­றைக்கு “எங்­கள் வாக்­கு­கள் தி.மு.க-.விற்கு சென்­றன, தி.மு.க வாக்­கு­கள் எங்­க­ளுக்கு வந்­தன!” என்று தர்க்­கம் செய்­ப­வர்­கள், தேர்­தல் காலத்­தில் ஒவ்­வொரு தொகு­திக்­கும் சென்­றி­ருந்­தால் தெரி­யும் எப்­படி தி.மு.க தொண்­டர்­கள் கூட்­டணி கட்­சி­களை தங்­கள் உழைப்­பால் தாங்­கிப் பிடித்­தார்­கள் 
என்­பது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">ராகுல் காந்­தியை பிர­த­மர் வேட்­பா­ள­ராக 2019-ஆம் ஆண்டே முன்­மொ­ழிந்­தார் ஸ்டாலின். அவ­ரது பாரத் ஜோடோ யாத்­தி­ரையை கன்­னி­யா­கு­ம­ரி­யில் துவக்கி வைத்­தார். ஏன், 2026 தேர்­த­லுக்கு சில தினங்­கள் முன்­னர் சன் நியூஸ் தொலை­காட்­சிக்கு அளித்த நேர்­கா­ண­லில் ராகுல் காந்­தியை நம்­பிக்கை நட்­சத்­தி­ரம் என்­றார். ஆனால் ராகுல் காந்தி என்ன செய்­தார்? தி.மு.க தீய சக்தி என்ற வெற்­றுக் கூச்­சலை மட்­டுமே தன் அர­சி­யல் முழக்­க­மாக க் கொண்­டி­ருந்த விஜ­யு­டன் இரண்டு மந்­திரி பத­வி­க­ளுக்­கா­கக் கைகோர்த்­தார். அந்த மந்­திரி பத­வி­களை வைத்­துக்­கொண்டு காங்­கி­ரஸ் தமிழ்­நாட்­டில் வளர்ந்­து­வி­டுமா? அல்­லது தவெக அலங்­கோல ஆட்­சிக்கு முட்­டுக்­கொ­டுத்து சீர­ழி­யுமா என்­ப­தற்­குக் காலம் பதில் சொல்­லும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">தொகுதி மறு­சீ­ர­மைப்­புப் பிரச்­சினை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இப்­போது என்ன வேடிக்கை என்­றால் தொகுதி மறு­சீ­ர­மைப்பு சட்­டத்­தி­ருத்­தத்­திற்கு தி.மு.க ஆத­ரவு கொடுக்க க் கூடாது என்று காங்­கி­ர­ஸும், அவர்­க­ளோடு சேர்ந்து தவெக ஆட்­சியை தாங்­கிப் பிடிக்­கச் சென்ற முன்­னாள் தி.மு.க கூட்­டணி கட்­சி­க­ளும் கோரிக்கை விடுக்­கின்­றன.இது­தான் மிகப்­பெ­ரிய நகைச்­சுவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">தொகுதி மறு­சீ­ர­மைப்பு சட்டத்தை பொது­வெ­ளி­யில் வைத்து கொளுத்­தி­ய­வர் ஸ்டாலின். நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டம் நிறை­வே­றா­மல் தடுப்­ப­தில் முன்­னின்­றது தி.மு.க. – ஸ்டாலி­னின் தலை­மை­யில் தமிழ்­நாட்டு அரசு பிற மாநில முதல்­வர்­க­ளை­யும் அழைத்து தொகுதி மறு­சீ­ர­மைப்பு நியா­ய­மாக நடக்க வேண்­டும் என்று கூறி­யது. கூட்டு நட­வ­டிக்­கைக் குழுவை அமைத்­தது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இதில் மூன்று நிலை­பா­டு­கள் சாத்­தி­யம். யாருமே ஏற்­றுக்­கொள்­ளாத நிலை­பாடு, வெறும் மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் தொகுதி மறு­சீ­ர­மைப்பு நடக்க வேண்­டும் என்­பது. அப்­படி நடந்­தால் மக்­கள் தொகைப் பெருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­திய மாநி­லங்­கள், தென் மாநி­லங்­கள் தங்­கள் நாடா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்­தில் பெரும் சரி­வைச் சந்­திக்­கும். மக்­கள் தொகையை கட்­டு­ப­டுத்தி தேசிய நன்­மைக்கு உத­விய செய­லுக்­காக தண்­டிக்­கப்­ப­டும். ஆனால் கட்­டுப்­ப­டுத்­தத் தவ­றிய மாநி­லங்­க­ளுக்கு அதிக பிர­தி­நி­தித்­து­வம் கிடைக்­கும். அதற்­குப் பிறகு சில மாநில முதல்­வர்­கள் ஏற்­க­னவே கூறு­வ­து­படி எல்­லோ­ரும் போட்டி போட்­டுக்­கொண்டு மக்­கள் தொகையை அதி­க­ரிப்­பார்­கள். எனவே இத­னைச் செய்ய முடி­யாது; கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இரண்­டா­வது நிலை­பாடு, இப்­போ­துள்ள அதே எண்­ணிக்­கையை மேலும் பத்­தாண்­டு­க­ளுக்கோ, இரு­பத்­தைந்து ஆண்­டு­க­ளுக்கோ தொடர்­வது. அப்­போது எல்லா மாநி­லங்­க­ளும் மக்­கள் தொகையை கட்­டுப்­ப­டுத்தி 1976 விகி­தா­சா­ரத்­திற்­குக் கொண்­டு­வந்து விட்­டால் பிறகு தொகு­தி­களை அதி­க­ரிக்­க­லாம். இல்­லா­விட்­டால் இப்­போ­துள்ள மாநில வாரி தொகுதி எண்­ணிக் ­கைக்கு ஏற்ப மறு­சீ­ர­மைப்பு செய்­ய­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">மூன்­றா­வது நிலை­பாடு மொத்த தொகு­தி­களை அதி­க­ரிப்­பது; ஆனால் மாநி­லங்­க­ளு­டைய பிர­தி­நி­தித்­துவ விகி­தா­சா­ரம் மாறா­மல் அதி­க­ரிப்­பது. இது ஓர­ளவு நியா­ய­மான அணு­கு­முறை என்­றா­லும், நபர் எண்­ணிக்கை என்ற பரி­மா­ணத்­தில் அர­சி­யல் சமன்­பா­டு­கள் மாற­லாம். உதா­ர­ண­மாக பத்­தில் இரண்டு பேர் என்­பது 20%. அந்த இரண்டு பேர் பெரும்­பான்மை ஆத­ர­வைப் பெற மேலும் நாலு பேர் ஆத­ரித்­தால் போது. அதே 20%, மொத்­தம் நூறு பேரில் இரு­பது பேர் என்­னும்­போது பெரும்­பான்மை பெற முப்­பத்­தோரு பேர் ஆத­ரவு வேண்­டும். அடுத்து ஆயி­ரம் பேரில் 20% என்­றால் பெரும்­பான்மை பெற முன்­னூற்று ஒரு நபர்­க­ளின் ஆத­ரவு வேண்­டும். எனவே மாநில பிர­தி­நி­தித்­து­வத்­தின் சத­வீ­தம் மாறா­மல் இருந்­தால் மட்­டும் அர­சி­யல் வலிமை அப்­ப­டியே இருக்­கும் என்று கூற­மு­டி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ஒன்­றிய அர­ச­மைக்க பெரும்­பான்­மையை எதிர்­நோக்­காத  தி.மு.க உள்­ளிட்ட மாநில கட்­சி­க­ளுக்கு மாநில விகி­தா­சா­ரம் பாது­காக்­கப்­பட்­டால் போதும். ஆனால் பெரும்­பான்­மையை எதிர்­பார்க்­கும் காங்­கி­ர­ஸிற்கு அது­மட்­டும் போதாது. காங்­கி­ரஸ் அப்­ப­டி­யா­னால் தொகுதி மறு­சீ­ர­மைப்பு பிரச்­சி­னைக்கு என்ன தீர்வை முன்­வைக்­கி­றது என்று தெளி­வாக இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ஆனால் காங்­கி­ரஸ் தனக்­காக தி.மு.க-.வும், பிற மாநில கட்­சி­க­ளும் போரா­ட­வேண்­டும் என்று எதிர்­பார்க்­கி­றது. அதா­வது காங்­கி­ரஸ் ஒன்­றி­யத்­தில் ஆட்­சிக்கு வர மாநில கட்­சி­கள் பாடு­பட வேண்­டும். ஆனால் மாநி­லங்­க­ளில் காங்­கி­ரஸ் அவர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­காது. மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், அகி­லேஷ் யாதவ், பின­ராயி விஜ­யன், மு.க.ஸ்டாலின் எல்­லோ­ரை­யும் மாநில அர­சி­ய­லில்  சகட்­டு­மே­னிக்கு எதிர்க்­கும். அவர்­களை தான் என்ன செய்­தா­லும் பா.ஜ.க.-வை எதிர்க்க தங்­க­ளு­டன் வந்­து­தானே தீர­வேண்­டும் என்று மமதை கொள்­ளும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">இதெல்­லாம் தி.மு.க. அறி­யா­தது அல்ல. தி.மு.க நவீன தமிழ்­நாட்­டினை உரு­வாக்­கிய கட்சி. இந்­துத்­துவ எதிர்ப்­பினை விளக்­கும் அண்­ணா­வின் ஆரிய மாயை நூலை தன் கொள்கை விளக்­க­மா­கக் கொண்ட கட்சி. எனவே தமிழ்­நாட்டு நல­னுக்கு எதி­ராக அது ஒரு­போ­தும் செயல்­ப­டாது என்­பது உள்­ளங்கை நெல்­லிக்­கனி. ஏனெ­னில் அது தமிழ்­நாட்­டிற்கு வெளியே எந்த மாநி­லத்­தி­லும் அர­சி­யல் செய்­வ­தில்லை. அதற்கு முக்­கிய கார­ணம் அதன் கொள்­கையே மாநில சுயாட்சி, மத்­தி­யில் கூட்­டாட்சி என்­ப­து­தான்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ஆனால் தி.மு.க-வின் முது­கில் குத்­தி­விட்டு, நடி­கர் விஜய் அரசை தாங்­கிப்­பி­டிக்­கும் காங்­கி­ரஸ், தி.மு.க-விற்கு அறி­வுரை சொல்­வ­தும், கோரிக்கை விடுப்­ப­தும், தி.மு.க பா.ஜ.க.-வை ஆத­ரிக்­கப் போகி­றது என பூச்­சாண்டி காட்­டு­வ­தும் நல்ல வேடிக்கை. காங்­கி­ரஸ் இன்­றைக்­கும் இந்­திய பெருந்­தே­சிய கட்சி. அதன் முடி­வு­கள் எல்­லாமே டில்­லி­யில்­தான் எடுக்­கப்­ப­டும். அதற்கு தமிழ்­நாடு என்­பது மற்­றொரு மாநி­லம் மட்­டும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நடி­கர் விஜய்க்கு உண்­மை­யி­லேயே ஆட்சி செய்­யும் பக்­கு­வமோ, அர­சி­யல் ஈடு­பாடோ இருக்­கி­றதா, அவ­ரால் ஏன் ஊட­கங்­க­ளி­டம் பேச முடி­வ­தில்லை, அவர் திரைக் கதா­நா­யக பிம்­பத்தை முன்­னி­றுத்தி ஆட்­சிக்கு வரு­வது நல்­லதா, அவர் உண்­மை­யி­லேயே பா.ஜ.க. எதிர்ப்­பில் அக்­கறை உள்­ள­வரா என்று எது­வுமே தெரி­யா­மல் கண்­மூ­டித்­த­ன­மாக தி.மு.க எதிர்ப்பை மட்­டுமே செய்த அவ­ரு­டன் இரண்டு மந்­திரி பத­வி­க­ளுக்­காக கூட்­டணி வைப்­ப­து­தான் காங்­கி­ர­ஸின் தேசிய அக்­கறை என்­றால் தமிழ்­நாட்டு மக்­கள் சிரிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ஆனால் காங்­கி­ரஸ் என்ன நினைக்­கி­றது என்­றால், தி.மு.க-.வை மாநில அர­சி­ய­லில் தான் முது­கில் குத்­தி­னா­லும், அகில இந்­திய அர­சி­ய­லில் பா.ஜ.க. எதிர்ப்­பில் தன்­னோடு இணைய வேண்­டும் என்று நினைக்­கி­றது. அப்­படி செய்­யா­விட்­டால் தி,மு.க. – பா.ஜ.க. கூட்­டணி என்று அவ­தூறு பரப்­பு­வோம் என்று பிளாக்­மெ­யில் செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">எதிர்­கட்­சி­யாக இருந்­தா­லும், ஆளும் கட்­சி­யாக இருந்­தா­லும் கடந்த நூறாண்­டு­க­ளாக தமிழ்­நாட்டு வர­லாற்றை வழி நடத்­திச் செல்­லும் திரா­விட இயக்­கத்­தின் தனிப்­பெ­ரும் விளை­பொ­ரு­ளான தி.மு.க எதற்­காக அப்­பட்­ட­மான பெருந்­தே­சிய சக்­தி­யான காங்­கி­ர­ஸின் பிளாக்­மெ­யி­லுக்கு பயப்­பட வேண்­டும் என்­பதே கேள்வி. காங்­கி­ரஸ் டில்­லி­யி­லி­ருந்து அனுப்­பும் கிரீஷ் சோடங்­கர்­க­ளுக்­கும், பிர­வீன் சக்­ர­வர்த்­தி­க­ளுக்­கும் வெண்­சா­ம­ரம் வீசவா தி.மு.க தமிழ்­நாட்டு அர­சி­ய­லில் தடம் பதித்து நிற்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நாடா­ளு­மன்ற தொகுதி மறு­சீ­ர­மைப்­பின் உண்­மை­யான தீர்வு என்ன என்­பது தி.மு.க-விற்கு தெரி­யும். அது­தான் மாநில சுயாட்சி. அதி­கா­ரங்­களை ஒன்­றிய அர­சில் குவித்­து­விட்டு மாநில பிர­தி­நி­தித்­து­வத்தை மட்­டும் வைத்­துக்­கொண்டு ஒரு­போ­தும் மாநில நல­னைக் காக்க முடி­யாது. அதற்­கா­கத்­தான் ஓய்வு பெற்ற நீதி­ய­ர­சர் குரி­யன் ஜோசப் தலை­மை­யில் ஒரு குழு­வினை அமைத்து அதன் அறிக்­கை­யைப் பெற்­றது தி.மு.க அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">மாநில சுயாட்சி குறித்த 
காங்­கி­ரஸ் நிலை­ப்பாடு என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">தி.மு.க. ஜோசப் குரி­யன் குழு அறிக்­கையை நடை­மு­றைப் படுத்­து­வதை தன் தேர்­தல் அறிக்­கை­யின் முதல் அம்­ச­மாக வைத்­தி­ருந்­தது. காங்­கி­ரஸ் கட்சி தன்­னு­டைய முதல் இலட்­சி­ய­மாக கூட்­டாட்­சிக் குடி­ய­ரசு உரு­வாக்­கு­வதை அறி­விக்­குமா என்­பது முக்­கி­ய­மான கேள்வி. அது ஒரு பேச்­சுக்­குச் சொல்­லுமே தவிர அதன் கருத்­தி­யல் அடிப்­படை இந்­திய பெருந்­தே­சி­யம்­தான். பா.ஜ.க.-வை எதிர்ப்­ப­தில் காங்­கி­ரஸ் அடைந்­துள்ள பல­வீ­னத்­திற்­குக் கார­ணமே காங்­கி­ர­சின் பிள­வுண்ட மன­நி­லை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">பா.ஜ.க. இந்­துத்­துவ பெருந்­தே­சி­யத்தை தீவி­ர­மாக முன்­னெ­டுத்து வரு­கி­றது. வக்ஃப் சட்­டத்தை திருத்­தி­யது. இப்­போது புதிய அன்­னிய நிதி (FCRA) தொடர்­பான சட்­டத்­தைக் கொண்­டு­வந்து கிறிஸ்­துவ நிறு­வ­னங்­க­ளின் சொத்­துக்­களை கைய­கப்­ப­டுத்த முயல்­கி­றது. இந்து கட­வு­ளரை தேசத்­தின் உரு­வ­க­மாக வணங்­கும் வந்தே மாத­ரம் பாடலை அனை­வ­ரும் பாட வேண்­டும் என்று கட்­டா­யப்­ப­டுத்­து­கி­றது. இன்­னும் எவ்­வ­ளவோ செயல்­களை தொடர்ந்து செய்து வரு­கின்­ற­னர். வர­லாற்­றைத் திரிக்­கின்­ற­னர். பாட திட்­டங்­களை மாற்­று­
கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">காங்­கி­ரஸ் இந்­துத்­துவ பெருந்­தே­சி­யத்­திற்கு பதி­லாக பன்­மைத்­துவ தேசி­யத்தை முன்­வைக்­கி­றது. ஆனால் காங்­கி­ரஸ் பன்­மைத்­து­வம் மாநில சுயாட்­சிக்கு முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­தில்லை. முத­லில் அந்­தக் கட்­சிக்­குள்­ளேயே மாநில தலை­மைக்கு எந்த முக்­கி­யத்­து­வ­மும் இருப்­ப­தில்லை. ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் யார் தலை­வர் என்­பதை டில்லி மேலி­டம்­தான் தீர்­மா­னிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">காங்­கி­ரஸ் எந்த மாநி­லத்­தில் வெற்­றி­பெற்­றா­லும், யார் முதல்­வர் என்­பதை அந்த மாநில சட்­ட­மன்­றக் குழு தேர்ந்­தெ­டுக்­காது. மேலி­டப் பார்­வை­யா­ளர் வரு­வார். பிறகு எல்லா குழுக்­க­ளும் டில்லி செல்­லும். காங்­கி­ரஸ் மேலி­ட­மும் முரண்­பட்டு நிற்­கும். பலத்த இழு­ப­றிக்­குப் பிறகு ஒரு­வர் முதல்­வ­ரா­வார். இதே நடை­மு­றை­தான் பா.ஜ.க.-விலும். மாநி­லத்­தி­லி­ருந்து எல்லா தலை­வர்­க­ளும் டில்லி செல்­வார்­கள். அங்கே பல பஞ்­சா­யத்­து­கள் பேசித்­தான் கூட்­ட­ணியோ, தலை­மைப்­பொ­றுப்போ முடி­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">காங்­கி­ர­ஸின் இந்த டில்லி மேலா­திக்­கப் போக்­கால் மாநி­லங்­க­ளில் வளர்ச்­சி­ய­டைந்த தலை­வர்­கள் அனை­வ­ரும் அந்­தக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­றி­னார்­கள். சிலர் தனி மாநில கட்­சி­களை உரு­வாக்கி வெற்­றி­பெற்­றார்­கள். மம்தா பானர்ஜி, சரத் பவார், சந்­தி­ர­சே­கர ராவ், ஜெகன் ரெட்டி  ஆகிய பல­ரும் காங்­கி­ர­ஸி­லி­ருந்து சென்­ற­வர்­கள்­தான். வேறு பலர் பா.ஜ.க.-வில் இணைந்­து­விட்­டார்­கள். பல பா.ஜ.க. மாநில முதல்­வர்­கள் முன்­னாள் காங்­கி­ரஸ் கட்­சிக்­கா­ரர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இப்­போது பா.ஜ.க.-விலும் இந்த போக்கு துவங்­கி­யுள்­ளது. ஏற்­க­னவே கர்­நா­ட­கா­வில் எடி­யூ­ரப்பா தனிக்­கட்சி துவங்கி பின்­னர் மீண்­டும் பா.ஜ.க.-வில் இணைக்­கப்­பட்­டார். இப்­போது தமிழ்­நாட்­டில் அண்­ணா­மலை தனிக்­கட்சி துவங்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">பா.ஜ.க.வும் சரி, காங்­கி­ர­ஸும் சரி இந்­திய முர­ண­ர­சி­யல் களம் என்­பது மாநி­லங்­கள்­தான் என்று புரிந்­து­ கொள்ள மறுக்­கின்­றன. அது ஏன் என்று நாம் ஆழ­மாக சிந்­தித்­தால் ஒன்று புரி­யும். ஒன்­றி­யத்­தின் அதி­கா­ரம் என்­பது பார்ப்­ப­னீய சக்­தி­க­ளின் அரண். மாநில அதி­கா­ரம் என்­பது பிற்­ப­டுத்­தப்­
பட்­டோர், தாழ்த்­தப்­பட்­டோர் களம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">மன்­ன­ராட்­சிக் காலத்­தில் சமஸ்­கி­ரு­தம் மூலம் தங்­கள் ஆதிக்­கத்தை தக்­க­வைத்­துக்­கொண்ட பார்ப்­ப­னீய சக்­தி­கள், பின்­னர் சமஸ்­கி­ரு­த­
ம­ய­மான ஹிந்தி மூல­மும், ஆங்­கி­லம் மூல­மும் தங்­கள் அதி­கா­ரத்­தைத் தொடர்­கின்­றன. மாநில மொழி­க­ளில்செயல்­ப­டும் முர­ண­ர­சி­யல் களத்­திற்கு அதிக அதி­கா­ரங்­கள்பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டால், தங்­க­ளது முன்­னு­ரிமை காணா­மல் போய்­வி­டும் என்று அந்­தச் சக்­தி­கள் அஞ்­சு­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இந்­துத்­து­வத்­தால் நேர­டி­யா­கவே பெருந்­தே­சி­யத்­தின் மூலம் பார்ப்­ப­னீய நலனை முன்­வைக்க முடி­யும். காங்­கி­ர­ஸால் அது முடி­யாது என்­றா­லும், அதனை எதிர்த்து போரா­ட­வும் முடி­யாது. அதற்கு சிறந்த உதா­ர­ணம் பொரு­ளா­தா­ரத்­தில் நலி­வுற்­றோ­ருக்­கான இட ஒதுக்­கீடு (EWS – Economically Weaker Section).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">சமூக நீதி­யைக் குழி­தோண்­டிப் புதைத்த சட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">பார்ப்­ப­னர்­கள் மற்­றும் பிற முன்­னே­றிய வகுப்­பு­க­ளைச் சார்ந்த பொரு­ளா­த­ரத்­தில் நலி­வ­டைந்­தோ­ருக்கு 10% இட ஒதுக்­கீடு என்­பது சமூக நீதி கோட்­பாட்­டி­னைக் கொன்று புதைக்­கும் செயல் என்­றால் மிகை­யா­காது. ஏனெ­னில் பொரு­ளா­தார நலிவு என்­பது பல்­வேறு கார­ணங்­க­ளால் நிக­ழ­லாம். ஒரு­வர் ஊதா­ரி­யாக, சோம்­பே­றி­யாக, சூதா­டி­யாக இருந்­தால் சொத்­துக்­களை இழந்து பொரு­ளா­தார நலி­வ­டை­ய­லாம். உடனே அவர் மக­னுக்கோ, மக­ளுக்கோ இட ஒதுக்­கீடு வழங்­கு­வது நியா­யமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இட ஒதுக்­கீடு என்­ப­தன் சமூக நீதி தத்­து­வம் என்ன? வர்ண ஜாதி அமைப்­பால் கல்­வி­யி­லி­ருந்து விலக்கி வைக்­கப்­பட்டு, கலா­சார மூல­த­னம் இல்­லா­த­தால் நவீன கல்­வி­யி­லும், வேலை வாய்ப்­பு­க­ளி­லும் முன்­னே­றிய வகுப்­பி­ன­ரு­டன் சம­மாக பங்­கெ­டுக்க முடி­யாத சமூ­கங்­க­ளுக்கு இட ஒதுக்­கீட்­டின் மூல­மாக சம வாய்ப்­பினை ஏற்­ப­டுத்­தித் தரு­வ­து­தான் சமூக நீதி. இது வர­லாற்­றில் இழைக்­க­பட்ட அநீ­தியை சமன் செய்­யும் முயற்­சி­யா­கும். இதி­லும் கூட தாழ்த்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஒன்­றிய அர­சில் கொடுப்­பட்ட இட ஒதுக்­கீடு, பிற்­ப­டுத்­தப் பட்­ட­வர்­க­ளுக்கு கொடுக்­கப்­ப­ட­வில்லை. மண்­டல் பரிந்­து­ரை­களை 1990-ஆண்டு வி.பி.சிங் நடை­முறை படுத்­திய பிறகே அந்த ஒதுக்­கீடு கிடைத்­தது. காங்­கி­ரஸ் கட்சி அப்­போது அதனை எதிர்த்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">மண்­டல் எதிர்ப்­பி­லும் சரி, EWS என்ற மோச­டி­யி­லும் சரிபா.ஜ.க.-விட­மி­ருந்து காங்­கி­ரஸ் அதி­கம் வேறு­பட்டு நிற்­க­வில்லை என்­ப­தைக் கவ­னிக்க வேண்­டும். இதனைநாம் நுட்­ப­மாக ஆராய்ந்­தால் காங்­கி­ர­ஸை­யும், பா.ஜ.க.-வையும் இந்­திய பெருந்­தே­சிய நோக்­கில் இணைக்­கும் பார்ப்­ப­னீய சக்­தி­களை இனம் காண­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">சுப்­ர­ம­ணிய சுவாமி டீ பார்ட்­டி­யும், பிர­வீன் சக்­ர­வர்த்தி தூதும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">காங்­கி­ரஸ் தி.மு.க-வு­டன் உறவு கொண்­டா­லும் எப்­போ­தும் அதனை பல­வீ­னப்­ப­டுத்த, தனி­மைப்­ப­டுத்த முயற்சி செய்­து­கொண்டே இருக்­கும். எம்.ஜி.ஆர் தி.மு.க.-வை பிளந்து தனிக்­கட்சி துவங்­கி­ய­தன் பின்­ன­ணி­யில் இந்­திரா காங்­கி­ரஸ் தூண்­டு­தல் இருந்­தது என்­பதை பல­ரும் கூறி­யுள்­ளார்­கள். எம்.ஜி.ஆர் மறை­வுக்­குப் பிறகு ஜெய­ல­லி­தாவை ஆத­ரித்­தது காங்­கி­ரஸ். ராஜீவ் காந்தி கொலை­யில் ஏற்­பட்ட அனு­தாப அலை­யில் ஆட்­சிக்கு வந்­தார் ஜெய­ல­லிதா. ஆனால் மோச­மான ஆட்சி தந்து மக்­க­ளின் அதி­ருப்­திக்கு ஆளா­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அப்­போ­தும் நர­சிம்ம ராவ் ஜெய­ல­லி­தா­வு­டன் கூட்­டணி அமைத்­ததை எதிர்த்து மூப்­ப­னா­ரும், சிதம்­ப­ர­ மும் தமிழ் மாநில காங்­கி­ரஸை துவங்­கி­னார்­கள். ஒன்­றி­யத்­தில் மூன்­றா­வது அணி ஆட்­சி­யில் தி.மு.க-வு­டன் பங்­கேற்­றார்­கள். அப்­போது தி.மு.க மீது ஜெயின் கமி­ஷ­னில் ஐயங்­கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன என்ற ஒரு கதை­யா­டலை உரு­வாக்கி தி.மு.க-வை அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து விலக்க வேண்­டும் என்று காங்­கி­ரஸ் கூறி­யது. குஜ்­ரால் மறுத்­த­தால் ஆட்­சி­யைக் கவிழ்த்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ஜெய­ல­லிதா பா.ஜ.க.வுடன் கூட்­டணி வைத்து ஒன்­றி­யத்­தில் பா.ஜ.க. ஆட்­சிக்கு வர உத­வி­னார். ஆனால் தமிழ்­நாட்­டில் தி.மு.க அரசை டிஸ்­மிஸ் செய்­யச்­சொல்லி கட்­டா­யப்­ப­டுத்­தி­னார். வாஜ்­பேயி அதைச் செய்ய மறுத்­தார். அப்­போ­து­தான் சுப்­ர­ம­ணிய சுவாமி டீ பார்ட்டி வைத்து சோனி­யா­வை­யும், ஜெய­ல­லி­தா­வை­யும் சந்­திக்க வைத்­தார். ஜெய­ல­லிதா வாஜ்­பேயி அர­சுக்­கான ஆத­ரவை விலக்­கிக் கொண்­ட­தில் ஆட்சி கவிழ்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">இப்­படி மூன்­றா­வது அணி­யும் வலு­வி­ழந்து, காங்­கி­ர­ஸும், அ.இ.அ.தி.மு.க-வும் இணைந்து தி.மு.க-வை தனி­மைப்ப டுத்­திய நிலை­யில், தி.மு.க பா.ஜ.க.-வுடன் கூட்­டணி வைத்­தது. குறைந்த பட்ச வேலைத்­திட்­டம் ஒன்றை வகுத்து, வாஜ்­பேயி கூட்­டணி அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­றது. இதற்­கான சூழ்­நிலை உரு­வாக க் கார­ணம் காங்­கி­ரஸ் தி.மு.க-வை தனி­மைப்­ப­டுத்தி பல­வீ­னப்­ப­டுத்த முயன்­ற­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">இன்று வரை இந்த பின்­னணி தக­வல்­களை மறைத்­து­விட்டு, தி.மு.க பா.ஜ.க.-வுடன் தானாக விரும்பி கூட்­டணி வைத்த து போன்ற தோற்­றத்தை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர். சுப­ர­ம­ணிய சுவாமி டீ பார்ட்­டி­யால் விளைந்த அழுத்­தம், தி.மு.க மீது சுமத்­தப்­பட்ட அபாண்­ட­மான 
குற்­றச்­சாட்­டு­கள், திணிக்­கப்­பட்ட கதை­யா­டல் ஆகி­ய­வையே அந்த சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யது. காங்­கி­ரஸ் தி.மு.க-வை பா.ஜ.க. நோக்­கித் தள்­ளி­யது என்­றால் மிகை­யா­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ஆனா­லும் சங்கு சுட்­டா­லும் வெண்மை தரும் என்­ப­து­போல, தி.மு.க.-வின் கருத்­தி­யலோ, கொள்­கை­களோ எந்­த­வி­தத்­தி­லும் மாறு­ப­ட­வில்லை. குஜ­ராத் கல­வ­ரத்­திற்­குப் பிறகு பா.ஜ.க.-வின் போக்­கினை புரிந்­து­கொண்ட தி.மு.க, மீண்­டும் காங்­கி­ர­ஸு­டன் இணைந்து ஐக்­கிய முற்­போக்­குக் கூட்­டணி அர­சில் பங்­கேற்­றது. அதி­லி­ருந்து தொடர்ந்து காங்­கி­ர­ஸு­ட­னேயே பய­ணித்து வந்­தது. பா.ஜ.க.-விற்கு எதி­ரான அகில இந்­திய கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தில் முக்­கிய பங்கு வகித்து வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அந்த சூழ்­நி­லை­யில்­தான் திடீ­ரென ஒரு பிர­வீன் சக்­ர­வர்த்தி வரு­கி­றார். இவ­ருக்­கும் சுப்­ர­ம­ணிய சுவா­மிக்­கும் பல பொருத்­தங்­கள். அவர் ராகு­லின் தூத­வ­ராக விஜ­யு­டன் பேசு­கி­றார். தி.மு.க-வு­டன் கூட்­டணி அமைத்த பிற­கும் விஜய் ஆத­ரவு கருத்­துக்­க­ளைப் பேசு­கி­றார். தி.மு.க – காங்­கி­ரஸ் உறவை பிளக்­கி­றார். என்ன கார­ணம்? தவெக கூட்­டணி அமைச்­ச­ர­வை­யில் காங்­கி­ர­ஸிற்கு இடம் கொடுக்­கி­றது என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">எப்­ப­டி­யா­வது தி.மு.க-வை தனி­மைப்­ப­டுத்தி, பல­வீ­னப்­ப­டுத்தி களத்­தி­லி­ருந்து அகற்ற வேண்­டும் என்ற முயற்சி மீண்­டும் தோன்­றி­யுள்­ளது போலத் தெரி­கி­றது. ஆனால் தமிழ்­நாட்டு நல­னு­ட­னும், தமிழ்­நாட்டு வர­லாற்­று­ட­னும் பின்­னிப் பிணைந்த தி.மு.க-வை இந்த சல­ச­லப்­பு­கள் எல்­லாம் ஒன்­றும் செய்­யாது. அதன் வர­லாற்­றுப் பய­ணம் தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">காங்­கி­ரஸ்­தான் பாவம்; பா.ஜ.க.-வையும் எதிர்த்­துக்­கொண்டு, மாநில கட்­சி­க­ளை­யும் பகைத்­துக்­கொண்டு திசை­தெ­ரி­யா­மல் விழிக்­கி­றது. பேச்­சில் மட்­டும் வீர­வ­ச­னங்­க­ளுக்கு குறை­யி­ருக்­காது. களத்­தில்  ­தான் ராகுல் காந்தி பெரு­மை­யா­கக் கூறிய அதன் போர்க்­கு­ணம் எப்­போது வெளிப்­ப­டும் என்று தெரி­ய­வில்லை.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>