<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,611,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 23 2026 03:59:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260723T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="23072026-VLR-07" position.sequence="07" ex-ref="23072026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலை</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">விவசாயிகளுக்குச் சென்றடைவதை ஒன்றிய அரசு உறுதி செய்கிறதா?</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="40"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">மக்களவையில் – ஈரோடு கே.இ.பிரகாஷ் கேள்வி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="PrakashMP_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">புது­டெல்லி, ஜூலை 23–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை உரி­மைக்கு உறு­தி­யான உத்­த­ர­வா­தம் வழங்­கத் தவ­றிய ஒன்­றிய அர­சுக்கு  கே.இ. பிர­காஷ், எம்.பி. கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஈரோடு மக்­க­ளவை உறுப்­பி­னர் கே.இ.பிர­காஷ் அவர்­கள், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை (MSP) திட்­டம் விவ­சா­யி­க­ளுக்கு முழு­மை­யா­கச் சென்­ற­டை­வதை உறுதி செய்ய ஒன்­றிய அரசு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்து ஒன்­றிய வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நல அமைச்­ச­ரி­டம் விளக்­கம் கோரி­னார். மேலும், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை நிர்­ண­யிக்­கும் போது பின்­பற்­றப்­ப­டும் நடை­முறை, அதற்­காக கருத்­தில் கொள்­ளப்­ப­டும் கார­ணி­கள் மற்­றும் விவ­சா­யி­கள் அமைப்­பு­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரின் கருத்­து­கள் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கி­றதா என்­ப­தை­யும் விளக்­கு­ மாறு கேட்­டுக்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அத்­து­டன், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை தொடர்­பான கொள்­மு­தல் நடை­மு­றை­களை வலுப்­ப­டுத்­த­வும், விவ­சா­யி­களி ­டையே விழிப்­பு ­ணர்வை அதி­க­ரிக்­க­வும், கொள்­மு­தல் செயல்­மு­றை­கள் திறம்­பட செயல்­ப­டு­வதை உறுதி செய்­ய­வும் ஒன்­றிய அரசு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் அவர் கேள்வி எழுப்­பி­னார். மேலும், வேளாண் உற்­பத்­தியை ஊக்­கு­விப்­ப­தற்­கும், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை மற்­றும் அத­னு­டன் தொடர்­பு­டைய பயன்­கள் விவ­சா­யி­களை முழு­மை­ யா­கச் சென்­ற­டை­வதை உறுதி செய்­வ­தற்­கும் ஒன்­றிய அரசு செயல்­ப­டுத்தி வரும் திட்­டங்­கள் குறித்த விவ­ரங்­க­ளை­யும் கேட்­ட­றிந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நல அமைச்­ச­கம் அளித்த பதில் பின்­வ­ரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">(அ) முதல் (இ) வரை: நாட்­டின் முழு­மைக்­கும் பொருந்­தும் வகை­யில், 22 கட்­டாய அறி­விக்­கப்­பட்ட வேளாண் பயிர்­க­ளுக்கு ஒவ்­வொரு ஆண்­டும் குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை (MSP) ஒன்­றிய அர­சால் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது. இந்த விலையை நிர்­ண­யி க்­கும் போது, வேளாண் செல­வு­கள் மற்­றும் விலை­கள் ஆணை­யத்­தின் (CACP) பரிந்­து­ரை­க­ளு­டன், மாநில அர­சு­கள் மற்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தொடர்­பு­டைய ஒன்­றிய அமைச்­ச­கங்­கள் மற்­றும் துறை­க­ளின் கருத்­து­க­ளும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குறைந்­த­பட்ச ஆத­ரவு விலையை பரிந்­து­ரைக்­கும் போது, உற்­பத்­திச் செலவு, தேவை மற்­றும் வழங்­கல் நிலை, உள்­நாட்டு மற்­றும் சர்­வ­தேச சந்தை விலை­கள், பயிர்­க­ளுக்கு இடை­யே­யான விலை சம­நிலை, வேளாண் மற்­றும் வேளாண்மை அல்­லாத துறை­க­ளுக்­கி­டை­யே­ யான வர்த்­தக விகி­தம், நாட்­டின் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தா­ரத்­தின் மீது ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கம் ஆகி­யவை மட்­டு­மின்றி, நிலம், நீர் உள்­ளிட்ட உற்­பத்தி வளங்­கள் சீரான முறை­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறுதி செய்­யும் அம்­சங்­க­ளும் கருத்­தில் கொள்­ளப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலையை பரிந்­து­ரைக்­கும் முன், ஒன்­றிய மற்­றும் மாநில அர­சு­கள், கொள்­மு­தல் முக­மை­கள், தொழில் அமைப்­பு­கள், விவ­சா­யி­கள் பிர­தி­நி­தி­ கள், ஆராய்ச்சி நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரு­டன் வேளாண் செல­வு­கள் மற்­றும் விலை­கள் ஆணை­யம் ஆலோ­சனை நடத்­து­கி­றது. அவ்­வாறு பெறப்­ப­டும் கருத்­து­க­ளும் இறுதி பரிந்­து­ரை­களை உரு­வாக்­கும்போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை அறி­விப்பு தொடர்­பாக, விவ­சா­யி­கள் அமைப்­பு­கள் மற்­றும் பிற பங்­கு­தா­ரர்­க­ளி­ட­மி­ருந்து அவ்­வப்­போது பெறப்­ப­டும் கருத்­து­கள் மற்­றும் கோரிக்­கை­க­ளும் அர­சின் கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">(ஈ): குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை­யின் கீழ் மேற்­கொள்­ளப்­ப­டும் கொள்­மு­தல் நடை­மு­றை­கள் தொடர்ந்து மேம்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன என்று ஒன்­றிய அரசு தெரி­வித்­துள்­ளது. கடந்த சில ஆண்­டு­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்ட மாற்­றங்­க­ளின் மூலம், குறைந்­த­பட்ச ஆத­ரவு விலைக்­கான தொகை நேர­டி­யாக விவ­சா­யி­க­ளின் வங்­கிக் கணக்­கில் செலுத்­தப்­ப­டு­வ­து­டன், ஆதார் மற்­றும் நிலப் பதி­வு­கள் ஒன்­றிய மற்­றும் மாநில அர­சு­க­ளின் கொள்­மு­தல் இணை­ய­ த­ளங்­க­ளு­டன் இணைக்­கப்­பட்­டுள்­ள­ தால், அதன் பயன் நேர­டி­யாக விவ­சா­யி­க­ளுக்கு சென்­ற­டை­வது உறுதி செய்­யப்­பட்­ டுள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­திய உண­வுக் கழ­கம் (FCI) சார்­பில், உயிர்­முறை அடை­யாள (Biometric) அடிப்­ப­டை­யி­லான கொள்­மு­தல் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­து­டன், மண்­டி­கள் மற்­றும் கொள்­மு­தல் மையங்­க­ளின் செயல்­பா­டு­க­ளும் முழு­ மை­யாக மின்­னணு முறை­யு­டன் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேசிய வேளாண் கூட்­டு­ றவு சந்­தைப்­ப­டுத்­தல் கூட்­ட­மைப்பு (NAFED) சார்­பில், கொள்­மு­தல் முதல் இருப்பு அகற்­றம் வரை முழு­மை­யான மின்­னணு (End-to-End Digitization) நடை­முறை செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. e-Samriddhi தளத்­தின் மூலம் கொள்­மு­தல் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­து­டன், Drishti தளத்­தின் மூலம் இருப்பு மேலாண்மை செய்­யப்­ப­டு­கி­றது. இருப்பு விற்­பனை மற்­றும் அகற்­றம் NAFED இணை­ய­த­ளத்­தின் மூலம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. மேலும், பதிவு செயல்­மு­றை­யில் வெளிப்­ப­டைத்­தன் மையை அதி­க­ரிக்­கும் வகை­யில் POS கரு­வி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­து­டன், மாதிரி கொள்­மு­தல் மையங்­கள் அமைக்­கப் பட்­ட­தன் மூலம் கொள்­மு­தல்   நட­வ­டிக்­கை­கள் எளி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, வெளிப்­ப­டைத்­தன்­மை­யும்  விவ­சா­யி­க­ளுக்­கான சேவை­க­ளும் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ­</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“வேளாண் வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நலத் துறை, விரி­வாக்­கத்­திற்­கான மக்­கள் ஊடக ஆத­ரவு” (Mass Media Support to Agriculture Extension) என்ற ஒன்­றி­யத் திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கி­றது. இதன் மூலம் தூர்­தர்­ஷன் பிராந்­திய சேனல்­கள், டிடி கிசான் மற்­றும் அகில இந்­திய வானொலி ஆகி­ய­வற்­றின் வாயி­லாக, குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை அறி­விப்பு மற்­றும் அதன் செயல்­பாடு உள்­ளிட்ட அர­சுத் திட்­டங்­கள் குறித்து நாடு முழு­வ­தும் விவ­சா­யி­களி­ டையே விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும், NAFED மேற்­கொள்­ளும் விவ­சா­யி­கள் தொடர்பு திட்­டங்­க­ளின் கீழ், கொள்­மு­தல் பரு­வம் தொடங்­கு­வ­தற்கு முன்­பாக விழிப் 
­பு­ணர்வு முகாம்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. பதிவு செய்­யப்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு குறுஞ்­செய்தி (SMS) மூலம் உட­னடி தக­வல்­கள் அனுப்­பப்­ப­டு­கின்­றன. உள்­ளூர் நாளி­தழ்­கள் மற்­றும் வாட்ஸ்­அப் குழுக்­கள் மூலம் தக­வல் பரப்­பப்­ப­டு­வ­து­டன், பதிவு மற்­றும் ஆவ­ணச் சமர்ப்­பிப்பு நடை­மு­றை­கள் எளி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதே­போல், APMC சந்­தை­கள் மற்­றும் கிரா­மங்­க­ளில் ஒலி­பெ­ருக்கி மூலம் கொள்­மு­தல் தொடர்­பான அறி­விப்­பு­க­ளும் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">(உ): பயிர் சாகு­படி காலங்­க­ளில் வேளாண் உற்­பத்­தியை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் ஒன்­றிய அரசு பல்­வேறு திட்ட ங்களை செயல்­ப­டுத்தி வரு­கி­றது. அவற்­றில் தேசிய உண­வுப் பாது­காப்பு மற்­றும் ஊட்­டச்­சத்து இயக்­கம் (NFSNM), தேசிய சமை­யல் எண்­ணெய் இயக்­கம் ឈប់ ប (NMEO-Oil Palm), தேசிய சமை­யல் எண்­ணெய் இயக்­கம் - எண்­ணெய் வித்­து­கள் (NMEO-Oilseeds), ஒருங்­கி­ணைந்த தோட்­டக்­கலை மேம்­பாட்டு இயக்­கம் (MIDH), பிர­தம மந்­திரி பயிர் காப்­பீட்­டுத் திட்­டம் (PMFBY) / மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட வானிலை அடிப்­ப­டை­யி­லான பயிர் காப்­பீட்­டுத் திட்­டம் (RWBCIS), பருப்பு வகை­க­ளில் தற்­சார்பு அடை­யும் இயக்­கம் (Mission for Aatmanirbharata in Pulses) மற்­றும் கிசான் கடன் அட்டை (KCC) உள்­ளிட்ட திட்­டங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு ஒன்­றிய அமைச்­சர் பதி­ல­ளித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>