<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 23 2026 19:25:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260724T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="24072026-TRY-02" position.sequence="02" ex-ref="24072026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">கீழ்வெண்மணியும் கீழ்த்தரமான விமர்சனமும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup766917_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கித்ய அகா­டமி விருது பெற்ற எழுத்­தா­ள­ரும், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சார்ந்­த­வ­ரு­மான ச.தமிழ்ச்­செல்­வன், கீழ்­வெண்­ம­ணிக் கொடூ­ரம் குறித்து ஆற்­றிய உரை­யில் தந்தை பெரி­யா­ரை­யும், தலை­வர் கலை­ஞ­ரை­யும் மிகக் கீழ்த்­த­ர­மான விமர்­ச­னத்­தைச் செய்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1968 ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 25 ஆம் நாளன்று கீழ்­வெண்­ம­ணி­யில் 44 உயிர்­கள் கொடூ­ர­மா­கக் கொல்­லப்­பட்­டன. கூலி உயர்வு கேட்­டார்­கள் என்ற கார­ணத்­துக்­காக பண்­ணை­யார்­க­ளால் பூட்­டிய வீட்­டுக்­குள் தீ வைத்து கொளுத்­தப்­பட்­டன அந்த உயிர்­கள். இதே­போல் தஞ்சை மாவட்­டத்­தில் நடை­பெற்ற விவ­சா­யப் போராட்­டங்­க­ளைத் தொகுத்து ‘திருப்பி அடித்த வர­லாறு’ என்ற பெய­ரில் புத்­த­க­மாக எழுதி இருக்­கி­றார் ச.தமிழ்ச்­செல்­வன். அந்த நூல் குறித்த நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றும் போது ஆய்வு நோக்­கமோ, ஆராய்ச்­சிக் கருத்­துக்­களோ இல்­லா­மல் கிண்­டல், நக்­கல் தொனி­யில் பெரி­யா­ரைப் பற்­றிச் சொல்லி இருக்­கி­றார் ச.தமிழ்ச்­செல்­வன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கீழ்­வெண்­மணி கொடூ­ரம் தொடர்­பாக பெரி­யார் வெளி­யிட்ட அறிக்­கையை முழு­மை­யாக உள்­வாங்­கா­மல் மேலோட்­ட­மாகப் படித்து விட்டுப் பேசி இருக்­கி­றார் ச.தமிழ்ச்­செல்­வன். அப்­போது பெரி­யா­ருக்கு 90 வயது. அன்­றைய தேதி­யில் உடல்­ந­லக் குறைவு கார­ண­மாக சென்னை பொது மருத்­து­வ­ம­னை­யில் இருந்­தார். ஐந்து நாட்­கள் கழித்­து­தான் மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வந்­தார். மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­ப­டியே தான் அந்த 
அறிக்­கையை எழு­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காந்தி கொலை, காம­ரா­சரை வீட்­டுக்­குள் வைத்து கொளுத்த முயற்­சித்­தது போன்ற வன்­மு­றைக்கு இணை­யா­னது கீழ்­வெண்­மணி சம்­ப­வம் என்று பெரி­யார் சொல்­கி­றார். இது­போன்ற சட்­ட­வி­ரோத, பலாத்­கார நாச வேலை­களை  இன்­றைய சட்­டங்­கள், நீதி­மன்­றங்­கள், ஜன­நா­யக அமைப்பு முறை­கள் மூல­மா­கத் தீர்க்க முடி­யாது என்­கி­றார் பெரி­யார். அர­சும், போலீ­சும், சட்­ட­மும், நீதி­மன்­றங்­க­ளும் யாருக்கு சார்­பாக இருக்­கும் என்­பது தான் பெரி­யார் எழுப்­பும் கேள்வி ஆகும். குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­களை நீதி­மன்­றம் விடு­தலை செய்­ததை வைத்துப் பார்த்­தால் பெரி­யார் அறிக்­கை­யின் உண்­மை­யான பொருள் புரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கீழ்­வெண்­மணி கொடூ­ரம் குறித்து ‘விடு­தலை’ நாளி­த­ழில்  தொடர்ச்­சி­யாக செய்தி வெளி­யிட்டு வந்­தார் பெரி­யார். அதைத் தெரிந்து கொள்­ளா­மல் 
பெரி­யாரை ‘மடத்­த­னம்’ என்­ப­து­தான் மடத்­த­னம் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘திரா­விட இயக்­கம் குறித்த ஓர் ஆவ­ணம்’ என்ற தலைப்­பில் 1951 இல் கம்­யூ­னிஸ்ட் கட்­சிக்­குள் ஒரு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டது. இதை தமிழ்ச்­செல்­வன் போன்­ற­வர்­கள் பார்க்­க­வும். சமூக சீர்­தி­ருத்­தக் கொள்­கைக்­குள் நிலப்­பி­ர­புத்­துவ எதிர்ப்­பும் ஜன­நா­யக உள்­ள­டக்­க­மும் உண்டு என்­கி­றது அந்த அறிக்கை. இதனை ஆத­ரித்து பி.ஆர்.பர­மேஸ்­வ­ர­னும், நல்­ல­சி­வ­மும் பிற்­கா­லத்­தில் எழுதி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“நான் பெரி­யா­ரை­யும் அண்­ணா­வை­யும் சந்­திக்­கா­மல் போயி­ருந்­தால் கம்­யூ­னிஸ்ட்  ஆகி­யி­ருப்­பேன்  என்று சொன்­ன­வர் கலை­ஞர்.  அந்­தக்  கம்­யூ­னிஸ்ட் (கலை­ஞர்) ஆட்­சிக்கு  வந்­து­விட்­டார். அவர் தான் பக்­கி­ரி­சா­மியை சுட்­டுக் கொன்­றார்’’ என்­கி­றார் ச.தமிழ்ச்­செல்­வன். கீழ்­வெண்­மணி சம்­ப­வம் நடந்­த­போது 
முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வர் பேர­றி­ஞர் அண்ணா. இது கூடத் தெரி­ய­வில்லை அவ­ருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">புற்­று­நோ­யால் தனது வாழ்க்­கை­யின் இறு­திப்­ப­கு­தி­யில் இருந்­தார் முத­ல­மைச்­சர் அண்ணா. இரண்டு மாதத்­தில் மறைந்­தார் அண்ணா. எத்­த­கைய சூழ்­நி­லை­யில் அண்ணா இருந்­தார் என்­ப­தும் முக்­கி­ய­மா­னது.  கீழ்­வெண்­ம­ணிக்கு  பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் கலை­ஞரை அனுப்பி வைத்­தார். அவர் வரும் வரை காத்­தி­ருந்­தார். இரவு 12 மணிக்கு கலை­ஞர் உள்­ளிட்ட அமைச்­சர்­கள் வந்­தார்­கள். அவர்­க­ளி­டம் பேசி­விட்டு நள்­ளி­ரவு 1.30 மணிக்கு நிரு­பர்­க­ளைச் சந்­தித்­தார் அண்ணா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இது தொடர்­பான விவா­தம் நாடா­ளு­மன்­றத்­தில் வந்த போது உரை­யாற்­றிய மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சித் தலை­வர் பி.ராம­மூர்த்தி அவர்­கள்,  ‘‘அந்த நிமி­டமே அண்ணா கண்­ணீர் விட்­டார். மறு­நி­மி­டமே அந்தச் சம்­ப­வத்­தைக் கடு­மை­யா­கக் கண்­டித்­தார். அதற்­குப் பொறுப்­பா­ன­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என அறிக்­கை­விட்­டார். அவர் உடல் நல­மற்று இருந்­த­தால் அமைச்­சர்­களை உடனே வெண்­ம­ணிக்கு அனுப்பி நிலை­மை­களை அறிந்து வரச் செய்­தார்’’ என்று  பேசி இருக்­கி­றார். விசா­ரணை ஆணை­யம் வேண்­டாம், கொலை வழக்­கா­கப் பதிவு செய்­யுங்­கள் என்று முதல்­வர் அண்­ணா­வி­டம் சொன்­ன­தும் பி.ராம­மூர்த்தி அவர்­கள் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">1969 பிப்­ர­வரி 3 அன்று முத­ல­மைச்­சர் அண்ணா அவர்­கள் மறைந்­தார்­கள். முத­ல­மைச்­ச­ராக கலை­ஞர் அவர்­கள் பொறுப்­பேற்­றார். 1969 ஜன­வரி 27, 
பிப்­ர­வரி 25, 28 ஆகிய நாட்­க­ளில் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் கீழ்­வெண்­மணி தொடர்­பான விவா­தம் நடை­பெற்­றது. 28.2.1969 அன்று விவா­தங்­க­ளுக்கு 
பதி­ல­ளித்து முத­ல­மைச்­சர் கலை­ஞர் பேசி­னார். மிரா­சு­தார் கோபா­ல­கி­ருஷ்­ணனை ‘கொடும்­பாவி’ என்று குறிப்­பிட்­டார் முத­ல­மைச்­சர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">1969 சன­வரி 10 அரசு, விவ­சா­யி­கள், பண்­ணை­யார்­கள் பங்­கேற்­கும் 
முத்­த­ரப்­புப் பேச்­சு­வார்த்­தை­களை தி.மு.க. அரசு ஏற்­பாடு செய்­தது. 17 
உடன்­பாடு ஏற்­பட்­டது. இத­ன­டிப்­ப­டை­யில் கூலி நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது. 
கண­ப­தியா பிள்ளை ஆணை­யத்­தின் அறிக்­கை­யும் 1969 செப்­டம்­ப­ரில் வெளி­ 
யா­னது. இதனை முழு­மை­யாக தி.மு.க. அரசு ஏற்­றுக் கொண்­டது. ஆணை­யம்  
நிர்­ண­யித்த கூலி­யை­யும் விவ­சாய அமைப்­பு­கள் ஏற்­றுக் கொண்­டன.  இந்­தப் பரிந்­து­ரை­க­ளின் அடிப்­ப­டை­யில் தமிழ்­நாடு அரசு நியா­ய­மான கூலிக்­கான 
சட்­டத்தை இயற்­றி­யது. தொடக்­கத்­தில் இந்தச் சட்­டம் கீழ்த்­தஞ்சை மாவட்­டத்­துக்கு மட்­டுமே உரு­வாக்­கப்­பட்­டது. 1998 ஆம் ஆண்டு தி.மு.க. அரசு, இதனை மாநி­லம் முழு­மைக்­கும் அமல்­ப­டுத்­தி­யது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1971 ஆம் ஆண்டு நில உச்­ச­வரம்­புச் சட்­டத்தைத் திருத்த முத­ல­மைச்­சர் 
கலை­ஞர் எடுத்த முயற்­சிக்­கும் இந்தச் சம்­ப­வம்தான் முக்­கி­ய­மான  கார­ணம் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கோபா­ல­கி­ருஷ்­ணன் உள்­ளிட்ட ஏழு பேருக்கு தலா பத்­தாண்­டு­கள் சிறைத்­தண்­டனை தரப்­பட்­டது. ஆனால் சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட மேல்­மு­றை­யீட்டு மனு­வின் விசா­ர­ணை­யில் இவர்­கள் 
விடு­தலை செய்­யப்­பட்­டார்­கள். பிற்­கா­லத்­தில் கோபா­ல­கி­ருஷ்­ணன், கொலை செய்­யப்­பட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இது­பற்றி கலை­ஞர் தனது ‘நெஞ்­சுக்கு நீதி’­யில் எழுதி இருக்­கி­றார்...  
‘‘கோபா­ல­கி­ருஷ்­ணன் என்ற நிலப்­பி­ரபு வெண்­மணி நிகழ்ச்சி நடை­பெற்ற பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு கொலை­யுண்­டார் என்­ப­தி­லி­ருந்து வெண்­ம­ணி­யின் வெங்­கொ­டு­மைக்கு எப்­படி பதில் கூறப்­பட்­டது என்­ப­தை­யும் புரிந்து கொள்­ள­லாம்” என்று எழுதி இருக்­கும் கலை­ஞ­ரைத்தான் கிண்­டல் அடிக்­கிறார் 
ச.தமிழ்ச்­செல்­வன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“இந்­தி­யா­வில் கம்­யூ­னி­சம் பர­வா­மல் கம்­யூ­னிஸ்ட்­டு­களே பார்த்­துக் கொள்­வார்­கள்’’ என்று பெரி­யார் சொன்­னார். அதைத்தான் இன்று நாம் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>