<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,337,958,1159" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 23 2026 19:39:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260724T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="24072026-VLR-01" position.sequence="01" ex-ref="24072026-VLR-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="92">‘நீட்’ முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டிய நேரம் இது !</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="35">‘தி இந்து’ நாளேட்டில் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புக் கட்டுரை   !</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup1279233_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup1279234_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="thalaivarnewf_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, ஜூலை 24–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்­டும் என்று நாடு முழு­வ­தும் மாணவர்­கள் போராட்­டம் நடத்தி வரும் நிலை­யில், ‘நீட்’ முற்­றி­லு­மாக ஒழிக்­கப்­பட வேண்­டிய நேரம் வந்து விட்­டது என்று குறிப்­பிட்டு, கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ‘தி இந்து’ நாளேட்­டில் சிறப்­புக் கட்­டுரை ஒன்றை எழு­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்­றைய (23.7.2026) ‘தி இந்து’ ஆங்­கில நாளேட்­டில் எழு­தி­யுள்ள சிறப்­புக் கட்­டுரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நீட் வினாத்­தாள் கசி­வைத் தொடர்ந்து வர­லாறு காணாத வகை­யில் நாடு முழு­வ­தும் மாண­வர்­கள் முன்­னெ­டுத்­துள்ள போராட்­டங்­கள், வெறும் ஒரு தேர்­வின் நம்­ப­கத்­தன்மை சீர்­கு­லைந்­த­தற்­கான எதிர்­வினை மட்­டு­மல்ல. தகுதி அடிப்­ப­டை­யி­லா­னது என முன்­னி­றுத்­தப்­பட்ட ஓர் அமைப்­பின் மீதான ஆழ­மான நம்­பிக்­கை­யி­ழப்­பையே அவை வெளிப்­ப­டுத்­து­கின்­றன. இலட்­சக்­க­ணக்­கான மாண­வர்­க­ளின் எதிர்­கா­லத்­தைத் தீர்­மா­னிக்­கும் நடை­மு­றை­யின் நேர்மை மீதான நம்­பிக்கை தக­ரும்­போது, அது ஒரு நாட்­டின் மனச்­சாட்­சி­யையே உலுக்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நீட்­டுக்கு எதி­ராக முதன்­மு­த­லில் எச்­ச­ரிக்­கைக் குரல் எழுப்­பிய மாநி­லம் தமிழ்­நா­டு­தான். அதன் கார­ணம், நீட் தேர்வு நடத்­தப்­பட்ட விதத்­தில் முறை­கே­டு­கள் இருந்­தன என்­ப­தல்ல. மருத்­து­வம் படிக்க விரும்­பும் ஒவ்­வொரு மாண­வ­ரின் எதிர்­கா­லத்­தை­யும் ஒரு தேசிய நுழை­வுத் தேர்­வில் பண­யம் வைத்து தீர்­மா­னிக்க வேண்­டும் என்றஅடிப்­ப­டைக் கொள்­கை­யையே நாங்­கள் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­னோம். நடை­மு­றை­யில் பிரச்­சினை என்­ப­தை­விட அதன் அடிப்­ப­டையே பிரச்­சி­ னைக்­கு­ரி­யது. அண்­மைய நிகழ்­வு­கள் எங்­கள் கவலை முற்­றி­லும் நியா­ய­மா­னது என்­ப­தையே உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">மூன்று வாக்­கு­று­தி­க­ளி­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">‘நீட்’ முற்­றி­லு­மாக தோல்வி!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நீட்டை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­போது, ஒன்­றியஅரசு மூன்று முக்­கிய வாக்­கு­று­தி­களை அளித்­தது. முத­லா­வ­தாக, பல்­வேறு நுழை­வுத் தேர்­வு­களை எழுத வேண்­டிய சுமையை அது குறைக்­கும் என்று கூறப்­பட்­டது. இரண்­டா­வ­தாக, மருத்­து­வச் சேர்க்­கை­களில் நிலவி வந்த கேப்­பி­டே­ஷன் கட்­ட­ணம் மற்­றும் வணி­க­ம­ய­மாக்­கலை அது முற்­றி­லும் ஒழிக்­கும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. மூன்­றா­வ­தாக, மிகத் தகு­தி­யான மாண­வர்­கள் மட்­டுமே மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளில் சேர்­வதை உறு­தி­செய்­வ­தன் மூலம் 
மருத்­து­வக் கல்­வித் தரம் உய­ரும், அதன் விளை­வாக சிறந்த மருத்­து­வர்­கள் உரு­வா­வார்­கள் என்­றும் கூறப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஆனால், இந்த மூன்று வாக்­கு­று­தி­
க­ளி­லும் நீட் முற்­றி­லு­மா­கத் தோல்­வி­ய­டைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சமத்­து­வ­மின்­மை­யைக் குறைப்­ப­தற் குப் பதி­லாக, கற்­ற­லின் மையத்தைபள்­ளிக்­கூ­டங்­க­ளி­லி­ருந்து பயிற்சி மையங்களுக்கு நீட் மாற்­றி­விட்­டது. இன்று தகுதி என்­பது தொடர்ச்­சி­யான கல்­விச் செயல்­தி­ற­னின் அடிப்­ப­டை­யில் மதிப்­பி­டப்­ப­டு­வ­தில்லை; பயிற்சி மையங்­கள் கற்­பிக்­கும் தேர்வு எழு­தும் உத்­தி­களை எவ்­வ­ளவு திறம்­பட ஒரு மாண­வர் கற்­றுக்­கொண்­டுள்­ளார் என்­ப­தன் அடிப்­ப­டை­யி­லேயே தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. இதன் பயனை, அதிக கட்­ட­ணம் செலுத்தி பயிற்சி பெறும் வச­தி­யுள்ள மாண­வர்­கள் அதி­க­மாக அனு­ப­விக்­கின்­ற­னர். அதே­வே­ளை­யில், கிரா­மப்­புற மாண­வர்­கள், அர­சுப் பள்ளி மாண­வர்­கள், முதல் தலை­மு­றை­யா­கக் கல்வி கற்க வரும் மாண­வர்­கள், மாநி­லப் பாடத்­திட்­டம் மற்­றும் தாய்­மொழி வழி­யில் கல்வி பயி­லும் மாண­வர்­கள் ஆகி­யோர் கடு­மை­யா­கப் பின்­ன­டை­வைச் சந்­திக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அமெ­ரிக்கா, கனடா, ஆஸ்­தி­ரே­லியா, ஜெர்­மனி போன்ற நாடு­கள், மாண­வர்­களைப் பள்­ளிக் கல்­விச் செயல்­தி­றன், மதிப்­பெண்­க­ளைச் சமன்­ப­டுத்­தும் (Standardi sation) முறை­கள் மற்­றும் ஒட்­டு­மொத்­தத் திறனை மதிப்­பி­டும் அணு­கு­மு­றை­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே சேர்க்­கின்­றன; நாடு முழு­வ­தற்­கு­மானஒரே நுழை­வுத் தேர்­வின் அடிப்­ப­டை­யில் அல்ல. நுழை­வுத் தேர்­வு­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டும் இடங்­க­ளில்­கூட, அவை பல்­வேறு மதிப்­பீட்டு அள­வு­கோல்­க­ளில் ஒன்­றா­கவேஉள்­ள­னவே தவிர, சேர்க்­கை­யைத் தீர்­மா­னிக்­கும் ஒற்­றைக் கார­ணி­யாக அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">வசதி படைத்­த­வர்­க­ளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">ஆதிக்­கத்தை முன்­னி­றுத்­து­வ­தா­கும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நீட் தேர்­வில் இது­வரை நடந்­த­வையே,‘தகுதி’ என்ற பெய­ரில் முன்­வைக்­கப்­ப­டும் வாதத்­தின் மாயையை மேலும் அம்­ப­லப்­ப­டுத்­து­கி­றது. இள­நிலை மருத்­து­வப் படிப்­பு­க­ளுக்­கான தகு­தித் தேர்ச்சி வரம்பு (Qualifying Threshold) மிகவும் குறை­வா­கவே இருந்து வரு­கி­றது. முது­நிலை மற்­றும் உயர் சிறப்­புப் படிப்­பு­க­ளுக்­கான சேர்க்­கை­க­ளில், அதி­கக் கட்­ட­ணம் வசூ­லிக்­கும் தனி­யார் மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் இடங்­களை நிரப்­பு­வ­தற்­காக, தகு­திக்­கானபெர்­சென்­டைல் பல­முறை பூஜ்­ஜி­ய­ மா­கக் குறைக்­கப்­பட்­டுள்­ளது; சில நேரங்­க­ளில் பூஜ்­ஜி­யத்­துக்­கும் குறை­வான மதிப்­பெண்­கள் பெற்­ற­வர்­கள்­கூட தகுதி பெற்­ற­வர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தத்தேர்­வு­மு­றை­யா­னது உண்­மை­யி­லேயே தகு­தி­யால் நிர்­வ­கிக்­கப்­பட்­டி­ருந்­தால், இத்­த­கைய அசா­தா­ர­ண­மான தளர்­வு­க­ளுக்­கான தேவையே எழுந்­தி­ருக்­காது. உண்மை நிலை இதற்கு முற்­றி­லும் மாறா­னது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">குறைந்த எண்­ணிக்­கை­யி­லான அரசு மருத்­து­வக் கல்­லூரி இடங்­க­ளுக்­காக ஏழை மாண­வர்­கள் மிகக் கடு­மை­யான போட்­டியை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆனால், பொரு­ளா­தார வசதி படைத்­த­வர்­கள் மிக­வும் தளர்­வான தகுதி அள­வு­கோல்­க­ளி­லேயே தனி­யார் மருத்­து­வக் கல்­வி­யைப் பெற முடி­கி­றது. இது 
தகு­தியை முன்­னி­றுத்­து­வது அல்ல; வசதி படைத்­த­வர்­க­ளின் ஆதிக்­கத்தை அமைப்­பு­ரீ­தி­யாக நிலை­நி­றுத்­தும் முறை­யா­கும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நீட் மருத்­து­வக் கல்­வி­யின் வணி­க­ம­ய­மாக்­க­லைக்கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பது மற்­று­மொரு தவ­றான நம்­பிக்கை. நீட்டை மைய­மா­கக் கொண்ட ’கோச்­சிங் சென்­டர்’ தொழில், இன்று பல ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள வணி­க­மாக வளர்ந்­துள்­ளது. நீட்­டுக்­குத் தங்­கள் 
பிள்­ளை­க­ளைத் தயார்­ப­டுத்­து­வ­தற்­காக, குடும்­பங்­கள் பல ஆண்­டு­க­ளா­கப் பெரும் தொகை­க­ளைச்செல­விட வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளன. நீட் அகற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்த பொரு­ளா­தா­ரச் சுமை மறைந்­து­வி­ட­வில்லை; அதன்வடி­வம்­தான் மாறி­யுள்­ளது. கேப்­பி­டே­ஷன்கட்­ட­ணத்­துக்கு பதி­லாக, பயிற்சி மையக் கட்­ட­ணம் அந்த இடத்­தைப் பிடித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">ஏழைக் குடும்­பங்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">எட்­டாக்­க­னி­யாக மாறி­யுள்­ளது!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதே­நே­ரத்­தில், நிகர்­நி­லைப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளும் தனி­யார் சுய­நிதி மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளும் மருத்­து­வக் கல்­வியை வணி­க­ம­ய­மாக்­கப் புதிய வழி­க­ளைக் கண்­டு­பி­டித்­துள்­ளன. முன்­பு­போல்கேப்­பி­டே­ஷன் கட்­ட­ணம் மற்­றும் நன்­கொ­டை­களை நேர­டி­யா­கக்கோரு­வ­தற்­குப் பதி­லாக, கல்­விக் கட்­ட­ணம் மற்­றும் பிற நிறு­வ­னக் கட்­ட­ணங்­க­ளைப் பல மடங்கு உயர்த்­தி­யுள்­ளன. இதன் விளை­வாக, ஏழை மற்­றும் நடுத்­த­ரக் குடும்­பங்­க­ளுக்கு மருத்­து­வக் கல்வி மேலும் 
எட்­டாக்­க­னி­யாக மாறி­யுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>