<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1161" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jul 25 2026 03:31:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260725T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="25072026-CBE-03" position.sequence="03" ex-ref="25072026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">25.07.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">‘நீட்’ தனது வாக்குறுதியில் தோற்றுவிட்டது;  மாநிலங்களை நம்பும் காலம் வந்துவிட்டது!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!...   முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup762625_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup794944_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup762524_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup794075_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="UntitledBW7_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திட்­டம் மற்­றும் தாய்­மொழி வழி­யில் கல்வி பயி­லும் மாண­வர்­கள் ஆகி­யோர் கடு­மை­யா­கப் பின்­ன­டை­வைச் சந்­திக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமெ­ரிக்கா, கனடா, ஆஸ்­தி­ரே­லியா, ஜெர்­மனி போன்ற நாடு­கள், மாண­வர்­களைப் பள்­ளிக் கல்­விச் செயல்­தி­றன், மதிப்­பெண்­க­ளைச் சமன்­ப­டுத்­தும் (Standardi sation) முறை­கள் மற்­றும் ஒட்­டு­மொத்­தத் திறனை மதிப்­பி­டும் அணு­கு­மு­றை­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே சேர்க்­கின்­றன; நாடு முழு­வ­தற்­கு­மான ஒரே நுழை­வுத் தேர்­வின் அடிப்­ப­டை­யில் அல்ல. நுழை­வுத் தேர்­வு­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டும் இடங்­க­ளில்­கூட, அவை பல்­வேறு மதிப்­பீட்டு அள­வு­கோல்­க­ளில் ஒன்­றா­கவேஉள்­ள­னவே தவிர, சேர்க்­கை­யைத் தீர்­மா­னிக்­கும் ஒற்­றைக் கார­ணி­யாக அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">வசதி படைத்­த­வர்­க­ளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">ஆதிக்­கத்தை முன்­னி­றுத்­து­வ­தா­கும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் தேர்­வில் இது­வரை நடந்­த­வையே,‘தகுதி’ என்ற பெய­ரில் முன்­வைக்­கப்­ப­டும் வாதத்­தின் மாயையை மேலும் அம்­ப­லப்­ப­டுத்­து­கி­றது. இள­நிலை மருத்­து­வப் படிப்­பு­க­ளுக்­கான தகு­தித் தேர்ச்சி வரம்பு (Qualifying Threshold) மிகவும் குறை­வா­கவே இருந்து வரு­கி­றது. முது­நிலை மற்­றும் உயர் சிறப்­புப் படிப்­பு­க­ளுக்­கான சேர்க்­கை­க­ளில், அதி­கக் கட்­ட­ணம் வசூ­லிக்­கும் தனி­யார் மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் இடங்­களை நிரப்­பு­வ­தற்­காக, தகு­திக்­கானபெர்­சென்­டைல் பல­முறை பூஜ்­ஜி­ய­ மா­கக் குறைக்­கப்­பட்­டுள்­ளது; சில நேரங்­க­ளில் பூஜ்­ஜி­யத்­துக்­கும் குறை­வான மதிப்­பெண்­கள் பெற்­ற­வர்­கள்­கூட தகுதி பெற்­ற­வர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தத்தேர்­வு­மு­றை­யா­னது உண்­மை­யி­லேயே 
தகு­தி­யால் நிர்­வ­கிக்­கப்­பட்­டி­ருந்­தால், 
இத்­த­கைய அசா­தா­ர­ண­மான தளர்­வு­க­ளுக்­கான தேவையே எழுந்­தி­ருக்­காது. உண்மை நிலை இதற்கு முற்­றி­லும் மாறா­னது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">குறைந்த எண்­ணிக்­கை­யி­லான அரசு மருத்­து­வக் கல்­லூரி இடங்­க­ளுக்­காக ஏழை மாண­வர்­கள் மிகக் கடு­மை­யான போட்­டியை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆனால், பொரு­ளா­தார வசதி படைத்­த­வர்­கள் மிக­வும் தளர்­வான தகுதி அள­வு­கோல்­க­ளி­லேயே தனி­யார் மருத்­து­வக் கல்­வி­யைப் பெற முடி­ கி­றது. இது தகு­தியை முன்­னி­றுத்­து­வது அல்ல; வசதி படைத்­த­வர்­க­ளின் ஆதிக்­கத்தை அமைப்­பு­ரீ­தி­யாக நிலை­நி­றுத்­தும் முறை­யா­கும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் மருத்­து­வக் கல்­வி­யின் வணி­க­ம­ய­மாக்­க­லைக்கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பது மற்­று­மொரு தவ­றான நம்­பிக்கை. நீட்டை மைய­மா­கக் கொண்ட ’கோச்­சிங்சென்­டர்’ தொழில், இன்று பல ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள வணி­க­மாக வளர்ந்­துள்­ளது. நீட்­டுக்­குத் தங்­கள் 
பிள்­ளை­க­ளைத் தயார்­ப­டுத்­து­வ­தற்­காக, குடும்­பங்­கள் பல ஆண்­டு­க­ளா­கப் பெரும் தொகை­க­ளைச் செல­விட வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளன. நீட் அகற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்த பொரு­ளா­தா­ரச் சுமை மறைந்­து­வி­ட­வில்லை; அதன்வடி­வம்­தான் மாறி­யுள்­ளது. கேப்­பி­டே­ஷன்கட்­ட­ணத்­துக்கு பதி­லாக, பயிற்சி மையக் கட்­ட­ணம் அந்த இடத்­தைப் பிடித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">ஏழைக் குடும்­பங்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">எட்­டாக்­க­னி­யாக மாறி­யுள்­ளது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­நே­ரத்­தில், நிகர்­நி­லைப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளும் தனி­யார் சுய­நிதி மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளும் மருத்­து­வக் கல்­வியை வணி­க­ம­ய­மாக்­கப் புதிய வழி­க­ளைக் கண்­டு­பி­டித்­துள்­ளன. முன்­பு­போல்கேப்­பி­டே­ஷன் கட்­ட­ணம் மற்­றும் நன்­கொ­டை­களை நேர­டி­யா­கக் கோரு­வ­தற்­குப் பதி­லாக, கல்­விக் கட்­ட­ணம் மற்­றும் பிற நிறு­வ­னக் கட்­ட­ணங்­க­ளைப் பல மடங்கு உயர்த்­தி­யுள்­ளன. இதன் விளை­வாக, ஏழை மற்­றும் நடுத்­த­ரக் குடும்­பங்­க­ளுக்கு மருத்­து­வக் கல்வி மேலும் 
எட்­டாக்­க­னி­யாக மாறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தப் பிரச்­சி­னை­களை தொடக்­கத்­தி­லேயே உணர்ந்த மாநி­லம் தமிழ்­நாடு. அதன் விளை­வாக, ஓய்­வு­பெற்ற நீதி­ய­ர­சர்   ஏ.கே. ராஜன் தலை­மை­யில் குழு ஒன்றை அமைத்­தோம். அந்­தக் குழு, ‘நீட்’ மருத்­து­வக் கல்­வித் தரத்தை மேம்­ப­டுத்­த­வும் இல்லை, சமூ­க­நீ­தியை உறு­திப்­ப­டுத்­த­வும் இல்லை என்ற தெளி­வான 
முடி­வுக்கு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதன் அடிப்­ப­டை­யில், நீட்­டி­லி­ருந்து விலக்கு கோரி தமிழ்­நாடு சட்­டப்­பே­ரவை ஒரு­ம­ன­தாக  மசோ­தாவை நிறை­வேற்­றி­யது. ஆனால், ஆளு­நர் அதற்கு ஒப்­பு­தல் அளிக்­கா­மல் நிறுத்­தி­வைத்­தார். மாநி­லம் முன்­வைத்த கவ­லை­க­ளின் சாரத்­தைப் புரிந்­து­கொண்டு ஆக்­கப்­பூர்­வ­மாக அணுக ஒன்­றிய அர­சும் முன்­வ­ர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மாநி­லங்­க­ளைத்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நம்ப வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கல்வி நிறு­வ­னங்­களை நிறு­வ­வும், ஆசி­ரி­யர்­களை நிய­மிக்­க­வும், கல்­வித் தரத்­தைப் பரா­ம­ரிக்­க­வும்,மருத்­து­வக்  கல்­விக்கு  நிதி­ய­ளிக்­    க­வும் மாநி­லங்­களை நம்­பும்­போது, அவற்­றின் கல்வி முறை­க­ளுக்­கும் சமூ­க­நீ­திக் கொள்­கை­க­ளுக்­கும் ஏற்ப மாண­வர் சேர்க்­கை­யைத்          தீர்­மா­னிக்­கும் அதி­கா­ரத்­தி­லும் மாநி­லங்­க­ளைத்­தான் நம்ப வேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பள்­ளிக் கல்­வியை வலுப்­ப­டுத்­து­தல்,  பள்­ளிக்  கல்வி    வாரி­யங்­க­ளின் மதிப்­பீ­டு­கள் மீதான நம்­பிக்­கையை மீட்­டெ­டுத்­தல், மாநி­லங் ­கள் தங்­க­ளின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டப் பொறுப்­பு­க­ளுக்­கும் உள்­ளூர்ச்  சூழல்­க­ளுக்­கும் ஏற்ற மாண­வர் சேர்க்­கைக் கொள்­கை­களை வகுக்க அனு­ம­தித்­தல்ஆகி­ய­வற்­றில்­தான் தீர்வு உள்­ளது. வெவ்­வேறு கல்வி வாரி­யங்­கள் வழங்­கும் மதிப்­பெண்­க­ளைப்       புள்­ளி­யி­யல் சம­நி­லைப்­ப­டுத்­தல் முறை­யின் மூலம் நியா­ய­மாக      ஒப்­பிட முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட்­டி­லி­ருந்து விலக்கு கோரும் மாநி­லங்­க­ளுக்கு அந்த உரிமை வழங்­கப்­பட வேண்­டும். மாண­வர் சேர்க்கை முறை­க­ளில்     நில­வும் பன்­மு­கத்­தன்­மை­யால் கல்­வித் தரம் பாதிப்­ப­டை­யாது. மாறாக, அது சமத்­து­வத்­தை­யும் சிறப்­பான வெளிப்­பாட்­டை­யும் மேலும் வலுப்­ப­டுத்­தக்­கூ­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மத்­திய தொகுப்­புக்கு மாற்­று­வது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சமூக நீதி­யைப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அவ­ச­ர­மாக  மீளாய்­வுக்கு  உட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய மற்­றொரு முக்­கிய அம்­சம் அகில இந்­திய ஒதுக்­கீடு (AIQ) முறை­யா­கும். நீதி­மன்­றத் தீர்ப்­பின் மூலம் உரு­வான இந்த முறை, மாநி­லங்­க­ளின் நிதி­யில் உரு­வாக்­கப்­பட்ட மருத்­து­வக் கல்­லூரி இடங்­க­ளில் ஒரு பகு­தியை மத்­தி­யத் தொகுப்­பிற்கு மாற்­று­கி­றது. இதன் மூலம் கூட்­டாட்­சித் தத்­து­வம் மற்­றும் சமூ­க­நீதி ஆகி­யவை பல­வீ­னப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, முது­நிலை மருத்­து­வப்படிப்­புக்­காக வேறு மாநி­லங்­க­ளுக்­குச் செல்ல பெண்­கள் பெரும்­பா­லும் தயங்­கும் சூழ­லில், இந்த முறை அவர்­களை அள­வுக்கு மீறிப் பாதிக்­கி­றது. பிராந்­திய ஏற்­றத்­தாழ்­வு­க­ளைச் சரி­செய்­வ­தி­லும் இது பய­ன­ளிக்­க­வில்லை. மேலும், தாங்­கள் செய்த முத­லீட்­டின் முழுப் பல­னை­யும் மாநி­லங்­கள் பெற முடி­யாத நிலையை உரு­வாக்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">எச்­ச­ரிக்கை மணி­யாக அமைய வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடு முழு­வ­தும் நடை­பெற்று வரும் மாண­வர் போராட்­டங்­கள், தேர்வு நடத்­தும் முறை­களை மட்­டும் மேம்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யத்தை உணர்த்­தும் எச்­ச­ரிக்கை அல்ல. பெரும் தொகை­யை­யும் காலத்­தை­யும் பண­ய­மாக கோரும் தேசிய நுழை­வுத் தேர்­வு­கள் என்ற ஒட்­டு­மொத்­தக் கட்­ட­மைப்­பையே அடிப்­ப­டை­யில் மீளாய்வு செய்ய வேண்­டிய நேரம் வந்­து­விட்­டது என்­ப­தற்­கான எச்­ச­ரிக்கை மணி­யாக அவை அமைய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநி­லங்­கள், கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­கள், மருத்­து­வத் துறை­யி­னர் மற்­றும் இதில் தொடர்­பு­டைய அனை­வ­ரோ­டும் திறந்த மன­து­டன் ஒன்­றிய அரசு கலந்­தா­லோ­சிக்க வேண்­டும். ஒற்­றைத்­து­வத்­தையே இறுதி இலக்­கா­கக்      கரு­தும் மனப்­போக்கை அது கைவிட வேண்­டும். இந்­தி­யா­வுக்­குத் தேவை அதி­கா­ரக்­கு­விப்பு அல்ல. மாநி­லங்­கள் மீதும், மாநில அர­சுப் பள்­ளி­கள் மீதும், மாண­வர்­கள் மீதும் அதிக நம்­பிக்கை வைப்­பதே நாட்­டின் இன்­றைய தேவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மருத்­து­வக் கல்­வி­யின் எதிர்­கா­லம் இன்­னும் நியா­ய­மான, கூட்­டாட்­சித் தத்­து­வத்தை மேலும்  மதிக்­கும் அணு­கு­மு­றை­யைக் கோரு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தனதுகட்­டு­ரை­யில் வலி­யு­றுத்தி உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூலை 25 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீட் தேர்வை ரத்­துச் செய்­யக் கோரி, தமிழ்­நாட்­டில்    வகுப்­பு­களை   புறக்­­கணித்து மாண­வர்­கள் நேற்று போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.         ஒன்­றிய அமைச்­சர் பதவி வில­கக் கோரி, மாணவ அமைப்­பி­னர் ஆளு­நர் மாளிகை நோக்கி பேர­ணி­யாக 
சென்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">டெல்­லி­யில், மாண­வர்­கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலை கண்­டித்­தும், ஒன்­றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­த­மர் பதவி விலக கோரி­யும், SFI மற்­றும் DYFI மாணவ அமைப்­பு­கள் சென்னை கிண்­டி­யில் உள்ள ஆளு­நர் மாளிகை நோக்கி பேரணிமேற்­கொண்­ட­னர். அவர்­களை போலீ­சார் தடுத்து நிறுத்­தி­ய­தால் இரு­த­ரப்­பி­ன­ரி­டையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. போராட்­டம் நடத்­து­வது ஜன­நா­யக கடமை, ஆனால் அதை தடுத்­து­விட்டு, ஜன­நா­ய­கன் படத்­திற்கு காவல்­துறை பாது­காப்­பது அளிப்­பது வேத­னை­ய­ளிப்­ப­தாக மாண­வர்­கள் தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மதுரை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத­னி­டையே, நீட் தேர்வை ரத்து செய்ய வலி­யு­றுத்தி டெல்­லி­யில்போரா­டிய மாண­வர்­கள் மீதான       தாக்­கு­தலை கண்­டித்­தும் மதுரை அரசு சட்­டக் கல்­லூரி மாண­வர்­கள் வகுப்பை புறக்­க­ணித்து போராட்­டம் மேற்­கொண்­ட­னர். மதுரை அரசு      சட்­டக் கல்­லூரி வளா­கத்­தில் 300க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு எதி­ராக முழக்­கங்­களை எழுப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">திருப்­ப­ரங்­குன்­றத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ரயில் மறி­யல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">டெல்­லி­யில் நடை­பெற்று வரும் மாண­வர்­க­ளின் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்து திருப்­ப­ரங்­குன்­றத்      ­தில் மாண­வர் அமைப்­பி­னர் ரயில் மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.  பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்­பீடு வழங்க வலி­யு­றுத்தி இந்­திய ஜன­நா­யக மாண­வர் சங்­கத்­தி­னர் இந்­தியா ஜன­நா­யக வாலி­பர் சங்­கத்­தி­னர், விவ­சாய சங்­கத்­தி­னர் உள்­ளிட்ட சில அமைப்­பு­கள் திருப்­ப­ரங்­குன்­றம் ரயில் நிலை­யத்­தில் மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அலு­வ­ல­கத்­தில் ஆர்ப்­பாட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீட் தேர்வை கண்­டித்­தும், ஒன்­றிய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் பதவி விலக வலி­யு­றுத்­தி­யும் சென்­னை­யில் 3-வது நாளாக நடை­பெற்று வரும் மாண­வர்­க­ளின் போராட்­டத்­துக்கு தி.மு.க. Gen Z குழு நேரில் ஆத­ரவு தெரி­வித்­தது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீட் தேர்வை கண்­டித்­தும், ஒன்­றிய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் பதவி விலக வலி­யு­றுத்­தி­யும் சென்னை தியா­க­ரா­ய­ந­க­ரில் உள்ள இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி அலு­வ­ல­கத்­தில் மாண­வர் அமைப்­பி­னர் 3வது நாளாக போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில், திமுக Gen Z குழு­வி­னர் இவர்­களை நேரில் சந்­தித்து போராட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்­த­னர். அப்­போது மாண­வர்­கள் மீதான ஒன்­றிய, மாநில அர­சு­க­ளின் அடக்­கு­மு­றை­க­ளுக்கு கண்­ட­னம் தெரி­வித்து முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அனி­தா­வின் சகோ­த­ரர் ஆத­ரவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதே­போல், இப்­போ­ராட்­டத்­துக்கு அனி­தா­வின்  சகோ­த­ரர் மணி­ரத்­தி­ன­மும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளார். அனை­வ­ரும் ஒன்று சேர்ந்து போரா­டி­னால் பாசிச பா.ஜ.க., அரசை வீழ்த்­த­லாம் என்­றும், நீட்­டில் இருந்து விலக்கு பெற­லாம் என்­றும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஆளூர் ஷாந­வாஸ்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஆத­ரவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்­னை­யில் உள்ள இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி அலு­வ­ல­க­மான பாலன் இல்­லத்­தில், நீட் தேர்­வுக்கு எதி­ராக போராடி வரும் மாண­வர்­களை விசிக நிர்­வாகி ஆளூர் ஷாந­வாஸ் சந்­தித்து ஆத­ரவு தெரி­வித்­தார். மாண­வர்­கள் மத்­தி­யில் பேசிய அவர், நீட் தேர்­வுக்கு எதி­ரான டெல்லி போராட்­டம் நாடு முழு­வ­தும் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்தி உள்­ள­ தா­கத் தெரி­வித்­தார். நீட் தேர்­வுக்கு எதி­ரான விதை தமிழ்­நாட்­டில்­தான் முதன்­மு­த­லில் போடப்­பட்­டது என்­றும், இதற்­கான முக்­கிய கார­ணம் தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ­தான் என்­றும் ஷாந­வாஸ் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இயக்­கு­நர் சீனு ராம­சாமி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">வலி­யு­றுத்­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றிய அரசு நீட் தேர்வை       உட­ன­டி­யாக திரும்­பப் பெற வேண்­டும் என்று இயக்­கு­நர் சீனு ராம­சாமி வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது தொடர்­பாக இயக்­கு­நர் சீனு ராம­சாமி வெளி­யீட்­டுள்ள சமூக வலை­தள பதி­வில்., நீட் தேர்வு முறை வந்த நாள் முதல் கல்­வி­யா­ளர்­கள்  மத்­தி­யில் கடும் எதிர்ப்பு நிலவி வரு­வ­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.  நீட் தேர்­வில் ஊழல்­க­ளும் முறை­கே­டு­க­ளும் மாண­வர்­க­ளின்  எதிர்­கா­லத்­தைக் கேள்­விக்­கு­றி­யாக்கி, இந்­தியா முழுக்க உயி­ரி­ழப்­பு­க­ளும்,  டெல்­லி­யில் மாண­வர்­க­ளின் போராட்­ட­மும் நடை­பெ­று­வ­தாக கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தன் இயக்­கத்­தில் உரு­வான ‘கண்ணே கலை­மானே’ திரைப்­ப­டத்­   தில் இந்த நீட் தேர்­வின் கொடூர முகத்­தை­யும், அத­னால் மாண­வர்­கள் எதிர்­கொள்­ளும்வலி­க­ளை­யும்       அப்­போதே        ஆழ­மா­கப் பதிவு செய்­துள்­ள­தாக இயக்­கு­நர் சீனு ராம­சாமி குறிப்­பிட்­டுள்­ளார். ஒன்­றிய அரசு இதை அர­சி­ய­லா­கப் பார்க்­கா­மல், மாண­வர்­க­ளின் உயி­ரை­யும் நல­னை­யும் கருத்­தில் கொண்டு உட­ன­டி­யாக நீட்­டைத் திரும்­பப் பெற வேண்­டும் என­வும் சீனு ராம­சாமி வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>