<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,281,958,989" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jul 24 2026 16:30:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260725T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="25072026-VLR-07" position.sequence="07" ex-ref="25072026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">கடல்சார் காற்றாலைத் திட்டம் மற்றும்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">மக்களவையில் – எஸ்.ஜெகத்ரட்சகன் கேள்வி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="jagathratchaga_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புது­டெல்லி, ஜூலை 25 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழக, அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர், டாக்­டர் எஸ். ஜெகத்­ரட்­ச­கன் அவர்­கள், நேற்று மக்­க­ள­வை­யில், கோடைக்­கா­லத்­தில் அதி­க­ரித்து வரும் மின்­சா­ரத் தேவை, எல் நினோ உள்­ளிட்ட வானிலை மாற்­றங்­க­ளால் உரு­வா­கும் சவால்­கள், நிலக்­கரி கிடைப்­புத் தன்மை, மின்­சார விநி­யோ­கப் பாது­காப்பு, புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி ஒருங்­கி­ணைப்பு மற்­றும் நாட்­டின் நீண்­ட­கால எரி­சக்தி பாது­காப்­புத் திட்­டங்­கள் குறித்து நட்­சத்­திர அந்­தஸ்து பெற்ற கேள்வி எழுப்­பி­னார். அதற்கு, ஒன்­றிய அர­சின் மின்­துறை மாண்­பு­மிகு அமைச்­சர்   மனோ­கர் லால் அவர்­கள் பதி­ல­ளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்கு ஒன்­றிய அர­சின் மின்­துறை  அமைச்­சர்  மனோ­கர் லால் அவர்­கள் அளித்த பதில்  வரு­மாறு:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாட்­டில் போது­மான அள­வில் மின்­சா­ரம் கிடைப்­ப­ தா­க­வும், 2026 ஜூன் நில­வ­ரப்­படி நாட்­டின் மொத்த நிறு­வப்­பட்ட மின் உற்­பத்­தித் திறன் 548.86 ஜிகா­வாட் ஆக உயர்ந்­துள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார். 2014 ஏப்­ரல் முதல் 324.7 ஜிகா­வாட் புதிய மின் உற்­பத்­தித் திறன் சேர்க்­கப்­பட்­ட­தன் மூலம் மின் பற்­றாக்­குறை நிலை நீக்­கப்­பட்­டுள்­ள­தா­க­ வும் கூறி­னார். இதே காலத்­தில் 2,18,267 சுற்று கிலோ­மீட்­டர் மின் பரி­மாற்­றக் கோடு­கள், 9,47,405 எம்.வி.ஏ. மின்­மாற்­றுத் திறன் மற்­றும் 84,390 மெகா­வாட் இடை­மா­நில மின் பரி­மாற்­றத் திறன் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தால், மொத்த இடை­மா­நில மின் பரி­மாற்­றத் திறன் 1,20,340 மெகா­வாட் ஆக உயர்ந்­துள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல் நினோ தாக்­கத்­தால் மின்­சா­ரத் தேவை குறிப்­பி­ டத்­தக்க அள­வில் அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும், 2026 ஏப்­ரல் முதல் ஜூன் வரை உச்­ச­பட்ச மின் தேவை கடந்த ஆண்­டை­விட சுமார் 12 சத­வீ­தம் உயர்ந்­துள்­ள­தா­க­வும், 2026 மே மாதத்­தில் 270.8 ஜிகா­வாட் என்ற நாட்­டின் வர­லாற்­றி­லேயே அதி­க­பட்ச உச்ச மின் தேவை வெற்­றி­க­ர­மாக பூர்த்தி செய்­யப்­பட்­ட­து­டன், 2026 ஜூலை மாதத்­தில் அகில இந்­திய உச்ச மின் தேவை 270 ஜிகா­வாட்டை இரண்டு முறை கடந்த போதி­லும் அவை­யும் வெற்­றி­க­ர­மாக பூர்த்தி செய்­யப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்­தார். மேலும், 2026 ஜூலை மாதத்­தில் 103.7 ஜிகா­வாட் (சூரிய மின்­சா­ரம் – 75 ஜிகா­வாட்; காற்­றாலை – 28.7 ஜிகா­வாட்) என்ற சாதனை அள­வி­லான புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி உற்­பத்தி பதி­வா­கி­யுள்­ள­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நிலக்­கரி போது­மான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">இருப்பு உள்­ளது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2026 ஜூலை 18 நில­வ­ரப்­படி அனல்­மின் நிலை­யங் ­க­ளில் 41.4 மில்­லி­யன் டன் நிலக்­கரி கையி­ருப்பு இருப்­ப­தால், 85 சத­வீத நிலைய சுமை காரணி அடிப்­ப­டை­யில் 13 நாட்­க­ளுக்கு போது­மான இருப்பு உள்­ள­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தீன்­த­யாள் உபாத்­யாய கிராம் ஜோதி யோஜனா, ஒருங்­கி­ணைந்த மின் மேம்­பாட்­டுத் திட்­டம் மற்­றும் பிர­தம மந்­திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா (சௌபாக்யா) ஆகிய திட்­டங்­க­ளின் கீழ் ₹1.85 லட்­சம் கோடி மதிப்­பி­லான பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும், 18,374 கிரா­மங்க ­ளுக்கு மின்­சா­ரம் வழங்­கப்­பட்­ட­து­டன், 2.86 கோடி குடும்­பங்­க­ளுக்கு மின் இணைப்பு அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார். கிரா­மப்­பு­றங் ­களில் சரா­சரி மின்­விநி­ யோக நேரம் 12.5 மணி நேரத்­தி­லி­ருந்து 22.6 மணி நேர­மா­க­வும், நகர்ப்­பு­றங்­க­ளில் 22.1 மணி நேரத்­தி­லி­ருந்து 23.4 மணி நேர­மா­க­வும் உயர்ந்­துள்­ள­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேசிய அள­வில் மின் விநி­யோக நிறு­வ­னங்­க­ளின் தொழில்­நுட்ப மற்­றும் வணிக இழப்பு 22.62 சத­வீ­தத்­தி­லி­ருந்து 15.04 சத­வீ­த­மாக குறைந்­துள்­ள­தா­க­வும், ஒரு யூனிட் மின்­சா­ரத்­தின் சரா­சரி வழங்­கல் செலவு மற்­றும் வரு­வாய் இடை­வெளி ₹0.78 இலி­ருந்து ₹0.06 ஆக குறைந்­துள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார். மேலும், 2025 ஜூலை 29 அன்று நாட்­டின் மொத்த மின்­சா­ரத் தேவை­யில் 51.5 சத­வீ­தம் புதுப்­பி க்­கத்­தக்க எரி­சக்தி மூலம் பூர்த்தி செய்­யப்­பட்­ட­து­டன், 2025-–26ஆம் ஆண்­டில் 64,695 மெகா­வாட் புதிய மின் உற்­பத்­தித் திறன், அதில் 50,905 மெகா­வாட் புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி மூலம் சேர்க்­கப்­பட்­ட­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2026 ஜன­வரி 14 அன்று உல­கின் மிகப்­பெ­ரிய ஒத்­தி­சைவு தேசிய மின் வலை­ய­மைப்­பாக நாடு உரு­வெ­டுத்­த­து­டன், நாட்­டின் மின் பரி­ மாற்ற வலை­ய­மைப்பு 5.08 லட்­சம் சுற்று கிலோ­மீட்­டர் பரி­மாற்­றக் கோடு­க­ளை­யும், 1,469 ஜிகா வோல்ட் ஆம்­பி­யர் மொத்த மின்­மாற்­றுத் திற­னை­யும் எட்­டி­யுள்­ள­தா­க­வும், 2025-–26ஆம் ஆண்­டில் மின்­சா­ரப் பற்­றாக்­குறை பூஜ்­ஜி­ய­மாக குறைந்­துள்ள­ தாக­வும், கோப்-26 மாநாட்­டில் அளித்த உறு­திப்­பாட்­டின்­படி, 2030ஆம் ஆண்­டிற்­கான தேசிய அள­வில் நிர்­ண­யிக் ­கப்­பட்ட இலக்­கான நிறு­வப் ­பட்ட மின் உற்­பத்­தித் திற­னில் 50 சத­வீ­தத்தை புதை­ப­டிவ எரி­பொ­ருள் அல்­லாத மூலங்­க­ளி­லி­ருந்து பெறும் இலக்கை 2025ஆம் ஆண்­டி­லேயே, ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­பாக நாடு எட்­டி­யுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீண்­ட­கால எரி­சக்தி பாது­காப்பை உறுதி செய்ய 2030ஆம் ஆண்­டுக்­குள் 500 ஜிகா­வாட் புதை­ப­டிவ எரி­பொ­ருள் அல்­லாத மின் உற்­பத்­தித் திறன், 2035-–36ஆம் ஆண்­டில் 786 ஜிகா­வாட் புதை­ப­டிவ எரி­பொ­ருள் அல்­லாத மின் உற்­பத்­தித் திறன் மற்­றும் 315 ஜிகா­வாட் நிலக்­கரி மின் உற்­பத்­தித் திறன், 2047ஆம் ஆண்­டுக்­குள் 100 ஜிகா­வாட் அணு­மின் திறன், 100 ஜிகா­வாட் நீரேற்று மின் சேமிப்­புத் திட்­டங்­கள், 80 ஜிகா­வாட் பேட்­டரி மின் சேமிப்பு அமைப்­பு­கள் மற்­றும் 94 ஜிகா­வாட் நீரேற்று மின் சேமிப்­புத் திறன் ஆகிய இலக்­கு­கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், பசுமை ஆற்­றல் வழித்­த­டத் திட்­டம், கடல்­சார் காற்­றா­லைத் திட்­டம், உயர் திறன் சூரிய ஒளி­மின்­ன­ழுத்த தொகு­தி­க­ளுக்­கான உற்­பத்தி ஊக்­கத் திட்­டம், மேம்­பட்ட வேதி­யி­யல் மின்­கல சேமிப்பு, மின்­சார வாகன சார்­ஜிங் கட்­ட­மைப்பு, பேட்­டரி மின் சேமிப்பு அமைப்­பு­க­ளுக்­கான நிதி இடை­வெளி நிரப்­பும் திட்­டம், நீரேற்று மின் சேமிப்­புத் திட்­டங்­கள் மற்­றும் எரி­சக்தி சேமிப்பு அமைப்­பு­க­ளுக்­கான புதிய வழி­காட்­டு­தல்­கள் மூலம் நாட்­டின் எரி­சக்தி பாது­காப்­பை­யும், புதுப்­பிக்­கத்­தக்கஎரி­சக்தி மாற்­றத்­தை­யும் வலுப்­ப­டுத்த ஒன்­றிய அரசு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக ஒன்­றிய அர­சின் மின்­துறை   அமைச்­சர் மனோ­கர் லால் அவர்­கள் பதி­ல­ளித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>