<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,957,916" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jul 25 2026 16:14:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260726T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="26072026-VLR-03" position.sequence="03" ex-ref="26072026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="48">   </lang>
	</hl3>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">சட்­டத்­தின் ஆட்­சி­யும் இல்லை   ! சட்­ட­மன்ற மாண்­பும் இல்லை   !</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup796703_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="30">வா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ய் இருக்­கி­றது என்­ப­தற்­காக “சாரி வேண்­டாம், நீதி வேண்­டும்” என்ற குர­லு­டன் திரா­விட மாடல் ஆட்­சி­யின்­போது ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­வர் விஜய். சிவ­கங்கை மாவட்­டத்­தில் அஜித்­கு­மார் என்ற இளை­ஞர் காவல் மர­ணத்­திற்­குள்­ளான நிலை­யில், அப்­போ­தைய முத­ல­மைச்­ச­ரான நம் கழ­கத் தலை­வர் அவர்­கள், அஜித்­கு­மார் குடும்­பத்­தி­ ன­ரைத் தொடர்­பு­கொண்டு அவர்­க­ளி­டம் தன் வருத்­தத்­தைத் தெரி­வித்­த­து­டன், பொறுப்­பு­மிக்க முத­ல­மைச்­ச­ரா­கத் தனது துறை­யில் நடந்த காவல் மர­ணம் தொடர்­பாக சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு அனு­ம­தித்து, அஜித்­கு­மா­ரின் சகோ­த­ர­ருக்கு அர­சுப் பணிக்­கான ஆணை­யை­யும் வழங்­கி­டச் செய்­தார். இதைத்­தான், “சாரி வேண்­டாம்.. நீதி வேண்­டும்” என்று ஆர்ப்­பாட்ட முழக்­க­மாக்­கி­னார்­கள் விஜய்­யும் அவ­ரது கட்­சி­யி­ன­ரும். இப்­போது விஜய்­தான் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இரண்டு மாதங்­க­ளைக் கடந்­துள்ள 
த.வெ.க ஆட்­சி­யில், கடந்த 5 வாரங்­­களில் 4 காவல் மர­ணங்­கள் நடந்­துள்­ளன. இதில் நாகர்­கோ­வில் சப­ரி­வர்­மன், தூத்­துக்­குடி அரு­ணா­ச­லம் ஆகி­யோ­ரின்  காவல் மர­ணங்­கள் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி, அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரும் பொது­மக்­க­ளும் சாலை மறி­யல் போராட்­டம் நடத்­தும் நிலை உரு­வா­னது. காவல்­து­றைக்­குப் பொறுப்பு வகிப்­ப­வர் விஜய். அவர், சாரி­யும் சொல்­ல­வில்லை. நீதி­யும் வழங்­க­வில்லை. தனது 
ஆட்­சி­யில் நடந்­துள்ள மனித உரிமை மீறல் குறித்து வாயே திறக்­க­வில்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் ஏன் வாய் திறக்க மறுக்
­கி­றார் எனக் கேட்டு எதிர்க்­கட்­சித்­த­லை­வர் 
உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் தனது சமூக வலை­த­ளப் பக்­கத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.  முத­ல­மைச்­சர் விஜய்­யும், அவ­ரது அமைச்­ச­ர­வை­யி­ன­ரும் தலை­மைச் செய­ல­கத்­திற்கு விடு­முறை கொடுத்­து­விட்டு, ‘ஜன­நா­ய­கன்’ படம் ஓடும் திரை­ய­ரங்­கு­க­ளில் உட்­கார்ந்­தி­ருந்­தார்­கள். காவல் மர­ணங்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வில்லை. தியேட்­டர்­க­ளில் அமைச்­சர்­கள் கண்­ணீர் விடும் ‘ரீல்’­கள்­தான் தொலைக்­காட்­சி­க­ளி­லும் சமூக வலை­த­ளங்­க­ளி­லும் தென்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­டத்­தின் ஆட்சி என்­பது எளிய மக்­க­ளுக்­குப் பாது­காப்பு அளித்து, சட்­ட­ 
மீ­றல்­க­ளில் ஈடு­ப­டும் அதி­கா­ர­வர்க்­கத்தை அடக்கி வைப்­ப­தா­கும். மாறாக, த.வெ.க. ஆட்­சி­யில் எளிய மக்­க­ளின் குர­லாக ஒலிக்­கின்­ற­வர்­க­ளைப் பொய் வழக்­குப் போட்டு ஒடுக்­கு­கின்ற நட­வ­டிக்­கை­கள் மட்­டும்­தான் மேற்­கொள்­ளப்­ப­டு­ கின்­றன. சமூக வலை­த­ளங்­க­ளில் உண்­மை­யைப் பதி­வி­டு­ப­வர்­களை த.வெ.க. வின் இணைய அடி­யாள்­படை மிரட்­டு­ கி­றது. ஆபாச வார்த்­தை­க­ க­ளால் திட்­டு­கி­றது. விஜய் கட்­சி­யி­ன­ரின் கேவ­ல­மான செயல்­பா­டு­க­ளைப் புறந்­தள்ளி சமூக அக்­க­றை­யு­டன் மக்­கள் பக்­கம் நின்று உண்­மையை உரக்­கப் பேசு­ப­வர்­க­ளை­யும், சமூக வலை­த­ளங்­க­ளில் பதி­வி­டு­கிற இளை­ஞர்­க­ளை­யும் கைது நட­வ­டிக்­கை­க­ளால் முடக்­கப் பார்க்­கி­றது விஜய் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஊழ­லற்­ற-­இ­லஞ்­சம் வாங்­காத ஆட்சி கொடுப்­போம் என அடிக்­கடி வாய் கிழி­யப் பேசு­கி­றார்­கள் முதல்­வர் விஜய்­யும் அவ­ரது கட்­சி­யி­ன­ரும். அவர்­க­ளின் சொல்­லும் செய­லும் நேர் எதி­ராக இருக்­கின்­றன என்­ப­தற்கு சாட்­சி­ய­மாக பழநி கோயி­லுக்­குச் சொந்­த­மான 100 கோடி மதிப்­புள்ள சொத்­தினை 
2 கோடி ரூபாய்க்கு தனி­யா­ருக்­குப் பத்­தி­ரப் பதிவு செய்த விவ­கா­ரம் சந்தி சிரிக்­கி­றது. 
பத்­தி­ரப்­ப­தி­வில் தவறு நடந்­தி­ருப்­பதை 
த.வெ.க.வின் பத்­தி­ரப்­ப­தி­வுத் துறை அமைச்­ச­ரும், அற­நி­லை­யத்­துறை அமைச்­ச­ரும் ஊட­கங்­கள் முன்­பா­கவே ஒப்­புக்
­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த மோசடி குறித்து சமூக வலை 
­த­ளத்­தில் விநோத் சூர்யா என்­ப­வர் தன்­னு­டைய பதி­வில், “அ.தி.மு.க. – -தி.மு.க. ஆட்சிக்­கா­லங்­க­ளில் நடந்­தால் ஊழல். த.வெ.க ஆட்­சி­யில் நடந்­தால் அதற்­குப் பெயர் தவறு” என்று பதி­விட்­டி­ருந்­தார். இந்­தப் பதி­வில் என்ன குற்­றம் இருக்­கி­றது? ஆபாச வார்த்­தை­கள் கிடை­யாது. அடா­வ­டிச் சொற்­கள் கிடை­யாது. சமூக வலை­த­ளங்­க­ளின் விதி­மு­றை­க­ளுக்­குட்­பட்ட பதி­வு­தான் இது. இந்­திய அர­சி­யல் சட்­டம் வழங்­கி­யுள்ளகருத்­து­ரி­மை­யின் அடிப்­ப­டை­யில் இந்த நாட்­டின் குடி­ம­க­னா­கப் பதிவு செய்த கருத்­துக்கு விநோத் சூர்யா மீது வழக்­குப் பதிவு செய்து, இர­வோடு இர­வாக அவ­ரைக் கைது செய்து சிறைக்கு அனுப்­பி­யது, ‘ஜன­நா­ய­கன்’ என வேடம் போடும் விஜய் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அநீ­தியை எதிர்த்து தி.மு.க 
வழக்­க­றி­ஞர் சர­வ­ணன் உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்­தார். விநோத் சூர்­யா­வுக்கு பிணை கேட்­கும் மனு­வும் தாக்­கல் செய்­யப்­பட்­டது. சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் தொட­ரப்­பட்ட வழக்­கில், “ஒரு­வர் வெளிப்­ப­டுத்­தும் கருத்­து­கள் தொடர்­பாக அவ­தூறு வழக்­கு­தானே தொடர முடி­யும்? குற்ற நட­வ­டிக்கை எடுக்­கும் வழக்­கா­கப் பதிவு செய்­தது ஏன்?” என்று  கேட்­டது நீதி­மன்­றம்.  பிணை மனுவை விசா­ரித்த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முதன்மை செஷன்ஸ் நீதி­மன்­றம், “அர­சையோ அமைச்­சர்­க­ளையோ விமர்­சிப்­பது பொது அமை­திக்கு எதி­ரான 
குற்­ற­மா­காது” என அழுத்­த­மா­கச் சொல்லி, த.வெ.க. அர­சின் காவல்­துறை மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளைக் கடு­மை­யாக விமர்­சித்து, விநோத் சூர்­யாவை பிணை­யில் விடு­விக்க உத்­த­ர­விட்­டது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அரசை நோக்­கிய விமர்­ச­னங்­க­ளை­விட அர­சுத் தரப்­பில் உள்­ள­வர்­க­ளின் பேச்­சு­கள்­தான் மிகக் கடு­மை­யா­ன­வை­யா­க­வும், காது கூசும்­ப­டி­யா­ன­தா­க­வும், வன்­மு­றை­யைத் தூண்­டும் வகை­யி­லும் இருக்­கின்­றன. அ.தி.மு.க.வின் முன்­னாள் அமைச்­சர்­கள் த.வெ.க.வில் இணைந்த விழா­வில் பேசிய அமைச்­சர் ஆதவ் அர்­ஜுனா, கரூ­ரில் விஜய்­யைப் பார்ப்­ப­தற்­காக கூட்ட நெரி­ச­லில் 41 பேர் இறந்­த­தற்கு காவல்­துறை மீது அபாண்­ட­மா­கக் குற்­றம்­சாட்­டிப் பேசி­னார். அது மட்­டு­மின்றி, தி.மு.க. குறித்­தும் கடு­மை­யான விமர்­ச­னங்­களை வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சி.பி.ஐ.யின் விசா­ர­ணை­யில் உள்ள வழக்­கின் போக்­கைத் திசை திருப்­பும் வகை­யில் அமைச்­சர் பொறுப்­பில் இருப்­ப­வரே  அவ­தூ­றா­கப் பேசு­வது குறித்து தடை கோரி, தி.மு.க.வின் அமைப்­புச் செய­லா­ளர் 
ஆர்.எஸ்.பாரதி அவர்­கள் சார்­பில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்­டது. வழக்கை விசா­ரித்த உச்­ச­நீ­தி­மன்ற நீதி­பதி விஸ்­வ­நா­தன், “அவர்­கள் பேசி­னால் 
நீங்­க­ளும் உங்­கள் பேச்­சால் எதிர்­கொள்­ளுங்­கள்” என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கருத்­து­ரிமை என்­பது அனை­வ­ருக்­கும் உரி­யது என்­ப­து­தான் உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் கருத்து. த.வெ.க. அமைச்­சர் ஆதவ் அர்­ஜு­னா­வுக்­கு­ரிய அதே கருத்­து­ரி­மை­யின் அள­வு­கோல் தி.மு.க.வின் விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மார்க்­கண்­டே­ய­னுக்­கும் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், மார்க்­கண்­டே­யன் அவர்­கள் பேசி­ய­தற்­காக அவ­ரைக் கைது செய்து சிறை­யில் அடைத்­தி­ருக்­கி­றது த.வெ.க. அரசு. அப்­படி என்ன அவ­தூ­றா­கப் பேசி­
விட்­டார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மார்க்கண்டே­யன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­தில் ஆளு­நர் உரை மீதான விவா­தத்­திற்­குப் பதி­ல­ளித்த  முத­ல­மைச்­சர் விஜய், ஆதா­ரங்­கள் எது­வு­மின்றி எதிர்க்­கட்­சி­யின் மீது குற்­றம்­சாட்­டி­ய­தை­யும், அதனை சபா­நா­ய­கர் அனு­ம­தித்­த­தை­யும் கண்­டித்து வெளி­ந­டப்பு செய்­த­னர் தி.மு.க. உறுப்­பி­னர்­கள். இது குறித்து கரூ­ரில் நடந்த த.வெ.க பொதுக்­கூட்­டத்­தில் பேசிய விஜய், “நான் பேசும்­போது கேட்­கா­மல் எதிர்க்­கட்­சி­யி­னர் ஓடி­விட்­டார்­கள். சபா­நா­ய­க­ரி­டம் சொல்லி 
சட்­ட­மன்­றக் கத­வு­க­ளைப் பூட்ட வேண்­டும்” என்­ப­தா­கக் கூறி­னார். இதற்­குப் பதில் தரும் வகை­யில் ஒரு கூட்­டத்­தில் பேசிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்மார்க்கண்டே­யன், “சட்­ட­
மன்­றக் கத­வு­க­ளைப் பூட்­டி­னால் எலும்­பு­களை உடைத்து வெளியே வரு­வோம்” என்­ப­தா­கப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரூ­ரில் பேசிய விஜய், “இடைத்­தேர்­த­லில் தி.மு.க.வை நங்கு..நங்கு..நங்கு என்று சம்­மட்­டி­யால் அடிக்­க­வேண்­டும்” என்­றும் பேசி­னார். இதில் விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மீது மட்­டும் வன்­மு­றை­யைத் தூண்­டு­வ­தாக வழக்­குப் பதிவு செய்து, சிறை­யில் அடைப்­பது எந்த வகை­யில் நியா­யம்? சட்­ட­மன்­றத்­தில் வெளி­ந­டப்­புச் செய்­வது என்­பது ஜன­நா­யக உரிமை. வெளி­யில் வந்து, ஊட­கத்­தி­ன­ரி­டம் தங்­க­ளின் கருத்­து­க­ளைத் தெரி­வித்­து­விட்டு, மீண்­டும் சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­ட­ரில் பங்­கேற்­பது சட்­ட­மன்­றத்­தி­லும் நாடா­ளு­மன்­றத்­தி­லும் தொடர்ந்து நடை­பெ­றும் ஜன­நா­யக நடை­மு­றை 
­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்ற விதி­க­ளைக் கூட 
அறி­யாத ஒரு­வர் முத­ல­மைச்­ச­ரா­னது தமிழ்­நாட்­டின் அவ­லம். வெளி­ந­டப்பு 
என்­கிற நடை­மு­றை­யின் ஜன­நா­ய­கத் 
­தன்­மையை அறி­யா­மல், “கத­வு­களை பூட்­டச் சொல்­வேன்” என்று முத­ல­மைச்­சர் பேசு­வது ஜன­நா­ய­கத்­தின் குரல்
­வ­ளையை நெரிக்­கின்ற கொடூர 
வார்த்­தை­க­ளா­கும். குரல்­வளை நெரிக்­கப்­ப­டும் கொடூ­ரத்தை எதிர்த்­துப் பேசு­வ­தற்­குப் பெயர்­தான் உரி­மைக்­கு­ரல். தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர் 
மார்க்­கண்­டே­யன் அத்­த­கைய குர­லைத்­தான் எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“கதவை மூடச் சொன்­ன­தாக விஜய் பேசி­யது என்­பது, அவ­ரது பதிலை எதிர்க்­கட்­சி­கள் கேட்க வேண்­டும் என்ற அர்த்­தத்­தில்­தான் எடுத்­துக் கொள்ள வேண்­டுமே தவிர, literalஆக கத­வைப் பூட்­டச் சொன்­னார் என்று எடுத்­துக் கொள்­ளக்­கூ­டாது” என சபா­நா­ய­கர் விளக்­கம் கொடுத்­தி­ருக்­கி­றார்.  அப்­ப­டிப் பார்த்­தால், எலும்­பு­கள் உடை­யும் என்று சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சொன்ன வார்த்­தை­க­ளை­யும் literalஆக எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது அல்­லவா? ஏன் இந்த இரட்டை அள­வு­கோல்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘‘சட்­ட­மன்­றத்­தில் சபா­நா­ய­க­ரி­டம் அனு­மதி கேட்டு சைகை செய்­தார் முத­ல­மைச்­சர். எதிர்க்­கட்­சி­யி­ன­ரும் சைகை செய்­வ­தற்கு அனு­ம­திப்­பீர்­க­ளாக?’’ என சபா­நா­ய­க­ரி­டம் நிரு­பர்­கள் கேட்­ட­தற்கு, “அவர்­கள் என்ன சைகை செய்­யப் போகி­றார்­கள் என முன்­கூட்­டியே தெரி­வித்­தால் அதற்­கேற்ப அனு­மதி தரு­வேன்” என்று பதில் சொன்­னார் சபா­நா­ய­கர். நிரு­பர்­கள் தொடர்ந்து, “முத­ல­மைச் ­சர் தனது சைகை பற்றி உங்­க­ளி­டம் தெரி­வித்­தாரா?” எனக் கேட்க, “அவர் கை அசைவை வைத்தே அறிந்­து­கொண்­டேன்” என்­றார் சபா­நா­ய­கர். அடடா.. எப்­ப­டிப்­பட்ட வார்த்­தை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆளு­நர் உரை மீதான முத­ல­மைச்­ சரின் பதி­லு­ரை­யின்­போது வெளி­ந­டப்பு செய்­த­பின் எதிர்க்­கட்­சித் தலை­வர் 
உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் செய்­தி­ 
யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது, “சட்­ட­மன்­றத்­தி­லேயே ஆ­க்ஷன் செய்­கி­றார் 
முத­ல­மைச்­சர். இங்­கேயே நடிக்க ஆரம்­பித்­து­விட்­டார். சட்­ட­மன்­றத்தை ஒரு 
ஷூட்­டிங் ஸ்பாட்­டாக மாற்­றி­விட்­டார்” என்று தெரி­வித்­தார். அது­தான் உண்மை என்­ப­து­போல, சட்­ட­மன்­றத்­தில் செய்த சைகை­யைத் தனது ‘ஜன­நா­ய­கன்’ படத்­தின் டைட்­டில் கார்­டா­கச் சேர்த்து வெளி­யிட்­டி­ருக்­கி­றார் விஜய். த.வெ.க.விடம் சட்­டத்­தின் ஆட்­சி­யு­மில்லை. சட்­ட­மன்­றத்­திற்­கான மாண்­பு­மில்லை.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>