<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,840,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 27 2026 03:53:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260727T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="27072026-VLR-07" position.sequence="07" ex-ref="27072026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">எந்த அச்சுறுத்தல் வந்தாலும் தி.மு.கழகம் உங்களோடு துணை நிற்கும்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="31"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">நீட்டை எதிர்த்துப் போராடும் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">பாலன் இல்லத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanimozhiphoto_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Kanimozhiphoto1_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">சென்னை, ஜூலை 27–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">சென்­னை – தியாகராயர் நகர் பாலன் இல்­லத்­தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நடை பெற்ற மாண­வர்­கள் போராட்­டத்­தில் கலந்து கொண்டு ஆத­ரவு தெரி­வித்த கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மருத்­து­வக் கல்வி சேர்க்­கைக்­கான நீட் தேர்வு வினாத்­தாள் கசிவு விவ­கா­ரம் நாடு முழு­வ­தும் மாண­வர்­கள் மத்­தி­யில் கடும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யது. இதற்கு பொறுப்­பேற்று மத்­திய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் பதவி விலக வேண்­டும் என வலி­யு­றுத்தி, டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் மாண­வர்­கள் மற்­றும் இளை­ஞர்­கள் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">இளை­ஞர்­கள் மத்­தி­யில் பெரும் ஆத­ரவு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கடந்த ஜூன் 6-ம் தேதி தொடங்­கிய இந்­தப் போராட்­டத்­திற்கு நாளுக்கு நாள் மாண­வர்­கள் மற்­றும் இளை­ஞர்­கள் மத்­தி­யில் ஆத­ரவு பெருகி வரு­கி­றது. இதில் பல்­வேறு மாண­வர் அமைப்­பு­க­ளும் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்­துள்ள நிலை­யில், போராட்­டக் களம் மேலும் வலுப்­பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்­நி­லை­யில், சென்னை பாலன் இல்­லத்­தில்  நீட் தேர்­வுக்கு எதி­ரா­கப் போராடி வரும் மாண­வர்­களை திமுக துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற திமுக குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. நேரில் சந்­தித்து தனது ஆத­ர­வைத் தெரி­வித்­தார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்­போது பேசிய அவர் : ஒன்­றிய அர­சாங்­கத்தை யாருமே எதிர்க்க முடி­யாது என்று நம்­பிய ஒரு ஆட்­சியை எதிர்த்­துப் போரா­டிக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய அத்­தனை இளை­ஞர்­க­ளுக்­கும் என்­னு­டைய வாழ்த்­துக்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்­தப் போராட்­டத்­தின் மிகப்­பெ­ரிய வெற்றி, இந்த நாட்­டுக்கே நீங்­கள் அனை­வ­ரும் வழி­காட்­டி­யாக மாறி உள்­ளீர்­கள். எந்த இடத்­தில் போராட்­டம் நடந்­தா­லும், அவர்­களை ஒன்­னும் பண்ண முடி­யாது, அவர்­களை யாரும் அசைக்க முடி­யாது, அவர்­களை எதிர்த்து கேள்வி கேட்க முடி­யாது. நாங்­களே நாடா­ளு­மன்­றத்­தில் பல நாட்­கள் வெளி­யில் தூக்கி எறி­யப்­பட்­டி­ருப்­போம், சஸ்­பெண்ட் செய்­யப்­பட்டு வாச­லில்  உட்­கார்ந்து இருக்க வேண்­டிய நிலைமை எல்­லாம் சந்­தித்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">மிகப்­பெ­ரிய வெற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எல்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், எதிர்க்­கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய அத்­தனை பேரை­யும் சஸ்­பெண்ட் செய்­தி­ருக்­கக்­கூ­டிய ஒரு ஆட்சி இருக்­கும் என்­றால், அது  ஒன்­றி­யத்­தில் இருக்­கக்­கூ­டிய பா.ஜ.க.வின் ஆட்­சி­தான். நாங்­கள் எல்­லோ­ரும் கேட்க முடி­யா­தது, நாங்­கள் எல்­லோ­ரும் செய்ய முடி­யா­தது, அவர்­க­ளின் இடத்­துக்கு போய் பார்க்க முடி­யாத சூழல் இருந்­தது. ஆனால் நேற்று டெல்­லி­யிலே ஜந்­தர் மந்­த­ரில் போரா­டிய மாண­வர்­க­ளைப் பார்ப்­ப­தற்­காக பா.ஜ.க. அரசு முன்­வந்து பார்த்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கி­றது. அது உங்­க­ளு­டைய மிகப்­பெ­ரிய வெற்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">நீட்­டிற்கு எதி­ரான முதல் குரல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தமி­ழ­கத்­தி­லி­ருந்து வந்­த­து­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">உங்­கள்அத்­தனை பேருக்­கும் நன்­றா­கத் தெரி­யும், நீட் வேண்­டாம் என்று முதன் முத­லில் வந்த எதிர்ப்பு குரல் தமி­ழ­கத்­தி­லி­ருந்து வந்த குரல்­தான். நீட் இருக்­கக் கூடாது என நீதி­மன்­றத்­திற்­குப் போன­வர் நமது சகோ­தரி அனிதா என்ற மாணவி. அதன்­படி நாம் ஆரம்­பித்த போராட்­டம், இன்­றைக்கு நாடு முழு­வ­தும் எதி­ரொ­லிக்­கத் துவங்கி இருக்­கி­றது. மாண­வர்­கள் டெல்­லி­யில் மட்­டு­மின்றி, நாடு முழு­வ­தும் ஒவ்­வொரு பகு­தி­யி­லே­யும் நீட்­டுக்கு எதி­ராக போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தலை­சி­றந்த டாக்­டர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">நீட் படித்­த­வர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நாங்­கள் படித்­து­விட்டு செல்­கி­றோம், ஆனால் வினாத்­தாள் வெளி­யா­கி­றது என்­றால் நீட் தேர்வு நேர்­மை­யாக நடக்­க­வில்லை. இந்­தத் தேர்வு அப்­ப­டின்னு போரா­டிக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய சூழ­லைத் தாண்டி, இங்கே பேசிய மாண­வர் சொன்­னது போல, நம்ம படிக்­கிற பாடம் வேற. நம்ம பள்­ளி­யில படிக்­கக்­கூ­டிய விஷ­யங்­கள் வேற. நீங்க பரீட்சை வெச்சு எங்­களை கேட்­கிற கேள்­வி­கள் வேற­யாக உள்­ளது. ஆனால் இது­வ­ரைக்­கும் உல­கம் முழு­வ­தும் இருக்­கக்­கூ­டிய பல நாடு­க­ளில், பல பெரிய மருத்­து­வ­ம­னை­க­ளில்  தமிழ்­நாட்­டி­லி­ருந்து பயின்று சென்ற மருத்­து­வர்­கள் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அந்த மருத்­து­வர்­கள் எல்­லா­ரும் கொண்­டா­டக்­கூ­டிய இடத்­தில் இருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அவர்­கள் எந்த நீட் தேர்­வை­யும் எழுதி பாஸ் செய்து மருத்­து­வ­ரா­க­வில்லை. இன்­றைக்கு நாடு முழு­வ­தும் இருக்­கக்­கூ­டிய மிகச்­சி­றந்த, தலை­சி­றந்த மருத்­து­வர்­கள் வந்து தமிழ்­நாட்­டி­லி­ருந்து கல்விபயின்­ற­வர்­கள். அவர்­கள் யாரும் நீட்­டெல்­லாம் தாண்டி வர­வேண்­டிய அவ­சி­யமே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஏனென்­றால் அப்­போது மருத்­து­வத்­துறை மீது ஆர்­வம் இருந்­த­வர்­கள் படித்­தார்­கள். நீட் வரு­வ­தற்கு முன்பு யாருக்­கெல்­லாம் மருத்­து­வர்­கள் ஆக வேண்­டுமோ, மக்­க­ளைச் சந்­திக்க வேண்­டுமோ, உதவிசெய்ய வேண்­டுமோ, அவர்­கள் ஆர்­வத்­து­டன் படித்­தார்­கள். ஆனால் இப்­போது யாருக்­கெல்­லாம் வசதி வாய்ப்பு இருக்­கி­றதோ, யாரெல்­லாம்கோச்­சிங் சென்­ட­ருக்­குப் போக முடி­யுமோ, அவர்­கள்­மட்­டும் இன்­னைக்கு நீட் தேர்­வில் தேர்ச்சி பெற்று மருத்­து­வ­ராக போகக்­கூ­டிய ஒரு சூழலை இந்தநீட் தேர்வு முறை உரு­வாக்­கி­யுள்­ளது. அத­னா­ல­தான் தொடர்ந்து, நீட்டை தடை செய்­யுங்­கள், நீட் வேண்­டாம் என்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">டெல்­லி­யில் நடக்­கக்­கூ­டிய போராட்­டத்­துக்­கும், நமக்­கும் இருக்­கக்­கூ­டிய ஒரு சின்ன இடை­வெளி அது­தான். நாம் நீட் தேர்வே வேண்­டாம் என்­கி­றோம், அவர்­கள் நீட் தேர்வை ஒழுங்கா நடத்­துங்­கள் என்­கி­றார்­கள். நீட்டை நடத்­தக்­கூ­டிய அமைச்­சரை வீட்­டுக்கு அனுப்ப வேண்­டும் என கோரிக்கை வைக்­கி­றார்­கள். நேற்று வரைக்­கும் ஆட்சி அதி­கா­ரத்­தில் இருக்­கக்­கூ­டிய ஒன்­றிய அர­சாங்­கம் அதற்கு ஒத்­துக்­கொள்­ள­வில்லை, இன்­றைக்கு மறு­ப­டி­யும் வந்து பேச்­சு­வார்த்தை நடத்­து­கி­றார்­கள். நிச்­ச­ய­மாக வழிக்கு வரு­வார்­கள் என்­கிற நம்­பிக்கை இங்கே இருக்­கக்­கூ­டிய அத்­தனை பேருக்­கும் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தொடர்ந்து நீட்டை எதிர்த்­துப் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம். எப்­பொ­ழு­துமே தமிழ்­நாடு ஹிந்­தியை திணிக்­கா­தீர்­கள் என சொல்ல நினைத்­தால் யாரும் காது கொடுத்து கேட்க மாட்­டார்­கள். தமிழ்­நாடு ஏதோ தனி­யாக பேசு­வ­தாக எண்­ணு­வார்­கள்.  சிறிது காலத்­தில், தன்­னு­டைய மொழி தன்­னி­டம் இருந்து பறிக்­கப்­ப­டும் பொழுது அதை உணர்ந்து கொண்டு ஹிந்தி வேண்­டாம் என நாடு முழு­வ­தும் நமதுகருத்தை எதி­ரொ­லிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதே­போல தமிழ்­நாட்­டில் ஆட்­சிப் பொறுப்­பிலே இருந்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், இன்­றைக்கு வரைக்­கும் நீட் வேண்­டாம் என்று நீதி­மன்­றத்­தில் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம். தமிழ்­நாட்­டில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்­த­பொ­ழுது சட்­ட­மன்­றத்­தில் இதற்­காக சட்­டம் இயற்­றப்­பட்­டது. ஆனால் அதனை ஏற்று ஆளு­நர் கையெ­ழுத்­துப் போட­வில்லை. நம் மாநி­லத்­தின் நலம் சார்ந்து எதை அனுப்­பி­னா­லும் கையெ­ழுத்­துப் போட மாட்­டார்­கள். அதன் பின் பெரிய போராட்­டத்­திற்­குப் பிறகு கையெ­ழுத்து போட்டு இப்­போது டெல்­லி­யில் தூங்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">காவல் துறை­யால் பெண்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">பாது­காப்­பற்ற சூழ்­நிலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்­தப் போராட்­டத்­திற்­குப் பிற­கா­வது அங்கே இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள், மாண­வர்­க­ளு­டைய உணர்­வு­க­ளைப் புரிந்துகொண்டு நீட் வேண்­டாம் என்­பதை உணர்ந்து கொள்­வார்­கள்.  அவ்­வாறு உண­ர­வில்லை என்­றால் தமிழ்­நாடு அதை உணர வைக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">டெல்­லி­யில் போரா­டக்­கூ­டிய மாண­வர்­கள் தடி­ய­டியை எதிர்­கொள்­கி­றார்­கள்.   பெண்­கள் பல­பேர் இன்­றைக்கு சோசி­யல் மீடி­யா­வில்பேசும்­போது பார்க்­கி­றோம். நாங்­கள் சக போராட்­டக்­கா­ரர்­க­ளு­டன் இருக்­கும்­போது தான் பாது­காப்­பாக உணர்­கி­றோம். அங்கே இருக்­கக்­கூ­டிய காவல்­து­றை­யைப் பார்த்­தால் பய­மாக இருக்­கி­றது. எங்­க­ளி­டம் தவ­றாக நடந்து கொள்­ளக்­கூ­டிய ஒரு சூழல் உள்­ளது என கூறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மேலும்,எங்­க­ளைப் பாது­காக்க வேண்­டி­ய­வர்­க­ளைப் பார்த்­தால் எங்­க­ளுக்­குப் பய­மாக இருக்­கி­றது என்று அங்கே போரா­டக்­கூ­டிய பெண்­கள் சொல்­லக்­கூ­டிய ஒரு நிலை மிக­வும் கவலை அளிக்­கி­றது. மாண­வர்­கள் எந்த அள­வுக்­குத் தாக்­கப்­பட்­டார்­கள் என்­பதை நம்ம பார்த்­தோம். ஆனால் அதை­யும் அசால்ட்­டாக டீல் செய்­யக்­கூ­டிய மாண­வர்­களை நாம் அங்கு தான் சந்­தித்­தோம். நீங்­கள் மாண­வர்­களை விரட்ட தண்­ணீரை பாய்ச்­சி­னால், அதில் நட­னம் ஆடு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அத­னால் இந்த இளை­ஞர்­கள் கூட்­டத்தை யாரா­லும் வெற்றி பெற முடி­யாது.   அதை இன்று ஒன்­றிய அர­சாங்­கம் உணர்ந்து இருக்­கும். யாருக்­கா­க­வும் இறங்கி வர­மாட்­டோம், யாரு­டைய கோரிக்­கைக்­கும் செவி சாய்க்க மாட்­டோம் என்ற மம­தை­யில் இருந்த பா.ஜ.க.வை இறங்கி வர வைத்­ததே உங்­க­ளு­டைய பெரிய வெற்றி எங்­க­ளுக்­குக் காது கிடை­யாது என கூறிய ஒன்­றிய அர­சாங்­கம்,  உங்­க­ளோடு பேச்­சு­வார்த்தை நடத்­தக்­கூ­டிய நிலைக்­குக் கொண்டு வந்­தி­ருக்­கக்­கூ­டி­யதே பெரிய வெற்றி. அதற்கு என்­னு­டைய மன­மார்ந்த வாழ்த்­துக்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">மாண­வர்­கள் மீது கடும் தாக்­கு­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இங்கே நிறைய கோரிக்­கை­கள் தற்­போது இருக்­கக்­கூ­டிய ஆட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மெரி­னா­வைத் திறந்து விடுங்­கள், போராட விடுங்­கள். தமிழ்­நாட்­டி­லும் நீட் வேண்­டாம் என்று தொடர்ந்து போரா­டக்­கூ­டிய சூழ­லில் மாண­வர்­கள் போராட்­டத்­திற்கு எதிர்ப்பு இருக்­கி­றது. குறிப்­பாக மாண­வர்­கள், மது­ரை­யில் போரா­டிய மாண­வர்­கள் மிக மோச­மாக தாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். டெல்­லி­யில் இருக்­கி­றோமா தமிழ்­நாட்­டில் இருக்­கி­றோமா என தெரி­யாத அள­விற்கு மாண­வர்­கள் தாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். இங்கே கைது­கள், அச்­சு­றுத்­தல்­கள், போரா­டு­ற­துக்கு இடம் இல்­லாம இந்த இடத்­துல எவ்­வ­ளவு கூட்­ட­மாக இருந்­தா­லும் இங்­கேயே போராட வேண்­டும் என்ற நிலை­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அத­னால் மாண­வர்­க­ளு­டைய நியா­ய­மான போராட்­டம், தமிழ்­நாட்­டின் ஒட்­டு­மொத்த குரலை எதி­ரொ­லிக்­கக்­கூ­டிய இந்­தப் போராட்­டத்­திற்கு,  அரசு துணை நிற்க வேண்­டும். அதை இங்கே இருக்­கக்­கூ­டிய ஆட்­சி­யா­ளர்­கள் உணர்ந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">யார் உங்­க­ளோடு இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும், நாங்­கள் உங்­க­ளோடு நிற்­போம். நீங்­கள் இங்கே போரா­டி­னா­லும் நிற்­போம், வேறு எந்த இடத்­தில் போரா­டி­னா­லும் உடன் நிற்­போம். எந்தஅச்­சு­றுத்­தல் வந்­தா­லும் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், நானும் உங்­க­ளோடு எப்­பொ­ழு­தும் நிற்­போம் என்­பதை நான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். மீண்­டும் இங்கே போரா­டிக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய அத்­தனை இளை­ஞர்­க­ளுக்கு,இளம் பெண்­க­ளுக்­கும் என்­னு­டைய வாழ்த்­துக்­கள். உங்­க­ளு­டைய போராட்­டம் நிச்­ச­ய­மாக வெற்றி பெறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>