<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,390,493,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 28 2026 03:39:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260728T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="28072026-CHN-07" position.sequence="07" ex-ref="28072026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">மரங்களை வெட்டுதல் – மரப்பொருட்களை எடுத்துச் செல்வதற்கான விதிமுறைகளை தளர்த்திட</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">மாநில – யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு வழிகாட்டுதல் – அறிவுரைகள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மக்களவையில் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மகள் – பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் துணைவியார்</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">திருமதி கருணாம்பாள் வானவராயர் மறைவு!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="jagathratchagan_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerarkal2_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">புது­டெல்லி, ஜூலை. 28–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழக, அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர், டாக்­டர் எஸ். ஜெகத்­ரட்­ச­கன் மக்­க­ள­வை­யில், வேளாண் வன­வி­யல் மரங்­களை வெட்­டு­தல், மரப் பொருட்­களை எடுத்­துச் செல்­வ­தற்­கான அனு­மதி நடை­மு­றை­கள், மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான விதி­முறை வேறு­பா­டு­கள், வேளாண் வன­வி­யல் வளர்ச்சி, விவ­சா­யி­க­ளின் பங்­கேற்பு மற்­றும் தமிழ்­நாட்­டு­டன் மேற்­கொள்­ளப்­ப­டும் ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஒன்­றிய அர­சின் சுற்­றுச்­சூ­ழல், வனம் மற்­றும் கால­நிலை மாற்­றத் துறை இணை அமைச்­சர் கீர்த்தி வர்­தன் சிங்அளித்த பதில் பின்­வ­ரு­மாறு:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">வேளாண் வன­வி­யல் முறை­யில் வளர்க்­கப்­ப­டும் மரங்­களை வெட்­டு­தல் மற்­றும் மரப் பொருட்­களை எடுத்­துச் செல்­வ­தற்­கான அனு­ம­தி­கள், இந்­திய வனச் சட்­டம், 1927, மாநி­லங்­க­ளின் வனச் சட்­டங்­கள், மாநி­லங்­க­ளுக்கேஉரிய மர மேலாண்­மைச் சட்­டங்­கள், அவற்­றின் கீழ் இயற்­றப்­பட்ட விதி­கள் மற்­றும் நீதி­மன்­றங்­க­ளின் உத்­த­ர­வு­க­ளின்­படி சம்­பந்­தப்­பட்ட மாநில அர­சு­க­ளால் ஒழுங்­கு­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார். அனு­மதி விலக்கு அளிக்­கப்­பட்­டுள்ள மர இனங்­கள், மரங்­களை வெட்­டு­தல் மற்­றும் எடுத்­துச் செல்­வ­தற்­கான நடை­மு­றை­கள், தேவை­யான ஆவ­ணங்­கள் ஆகி­யவை ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் நடை­மு­றை­யில் உள்ள சட்­டங்­கள், விதி­கள் மற்­றும் நீதி­மன்ற உத்­த­ர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் மாறு­ப­டு­வ­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">வேளாண் வன­வி­யலை ஊக்­கு­விக்­கும் வகை­யில், மரங்­களை வெட்­டு­தல் மற்­றும் மரப் பொருட்­களை எடுத்­துச் செல்­வ­தற்­கான விதி­மு­றை­களை தளர்த்­து­மாறு மாநி­லங்­க­ளுக்­கும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்­கும் ஒன்­றிய அரசு பல்­வேறு வழி­காட்­டு­தல்­கள் மற்­றும் அறி­வு­ரை­களை வழங்­கி­யுள்­ள­தா­க­வும், 2022 ஆம் ஆண்­டில் மர அடிப்­ப­டை­யி­லான தொழிற்­சா­லை­கள் அமைத்­தல் மற்­றும் ஒழுங்­கு­முறை தொடர்­பான வழி­காட்­டு­தல்­கள் திருத்­தப்­பட்டு, வேளாண் வன­வி­ய­லில் வளர்க்­கப்­ப­டும் மர இனங்­களை பயன்­ப­டுத்­தும் தொழிற்­சா­லை­ க­ளுக்­கான விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்­திய வன­வி­யல் ஆராய்ச்சி மற்­றும் கல்­விக் கழ­கம் வேளாண் வன­வி­யலை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் மர மேம்­பாட்­டுத் திட்­டங்­களை தொடர்ந்து செயல்­ப­டுத்தி வரு­வ­தா­க­வும், இது­வரை 69 மேம்­ப­டுத்­தப்­பட்ட மர ரகங்­கள் மற்­றும் ஒரே மர­பி­யல் பண்­பு­க­ளைக் கொண்ட பெருக்­கு­கள் வெளி ­யி­டப்­பட்டு, அவை விவ­சா­யி­கள், வனத்­து­றை­கள், வன மேம்­பாட்­டுக் கழ­கங்­கள் மற்­றும் மர அடிப்­ப­டை­யி­லான தொழிற்­சா­லை­க­ளால் பர­வ­லாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­வித்­தார். மேலும், 2022 மே மாதத்­தில் மூங்­கி­லில் தயா­ரிக்­கப்­ப­டும் கரி­யின் ஏற்­று­மதி தடை­யின்றி அனு­ம­திக்­கப்­பட்டு, அதன் மூலம் மூங்­கில் தொழில்­து­றை­யில் மதிப்­புக்­கூட்­டல் அதி­க­ரிப்­ப­தற்­கும், இலா­பம் மற்­றும் வாழ்­வா­தார வாய்ப்­பு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">2023 மார்ச் மாதத்­தில் வேளாண் வன­வி­யல் தொடர்­பான அடிக்­கடி கேட்­கப்­ப­டும் கேள்­வி­க­ளுக்­கான கையேடு வெளி­யி­டப்­பட்டு, வேளாண் வன­வி­யல் முறை­கள் மற்­றும் வீட்­டுத் தோட்­டங்­க­ளுக்கு ஏற்ற 36 தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மர இனங்­க­ளின் சாகு­படி முறை­கள் விவ­சா­யி­கள் மற்­றும் களப் பணி­யா­ளர்­க­ளுக்­காக விளக்­கப்­பட்­டு ள்­ள­தா­க­வும், மேலும் அகில், சந்­த­னம், செஞ்­சந்­த­னம் மற்­றும் கருங்­காலி ஆகிய வணிக முக்­கி­யத்­து ­வம் வாய்ந்த நான்கு மர இனங்­க­ளின் சாகு­படி முறை­கள் தொடர்­பான தனித்­தனி கையே­டு­க­ளும் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">2023 டிசம்­பர் மாதத்­தில் தேசிய போக்­கு­வ­ரத்து அனு­ம­திச் சீட்டு முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு, மரம், மூங்­கில் மற்­றும் பிற வனப் பொருட்­களை எடுத்­துச் செல்­வ­தற்­கான அனு­ம­திச் சீட்­டு­கள் மற்­றும் தடை­யில்­லாச் சான்­றி­தழ்­கள் இணை­ய­வ­ழி­யில் வழங்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும், இதன் மூலம் மாநி­லங்­கள் மற்­றும் ஒன்­றி­யப் பிர­தே­சங்­க­ ளுக்கு இடையே வனப் பொருட்­களை ஒரே மின்­னணு தளத்­தின் மூலம் எளி­தாக எடுத்­துச் செல்­லும் வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும், நடை­முறை தாம­தங்­கள் குறைக்­கப்­பட்டு, தொழில் செய்­வ­தற்­கான எளிமை, வெளிப்­ப­டைத்­தன்மை, செயல்­தி­றன் மற்­றும் கண்­கா­ணிப்­புத் திறன் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார். இது­வரை தமிழ்­நாடு உட்­பட நாடு முழு­வ­தும் 4,36,258 போக்­கு­வ­ரத்து அனு­ம­திச் சீட்­டு­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன என்­றும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">2025 ஜூன் மாதத்­தில் “வேளாண் நிலங்­க­ளில் மரங்­களை வெட்­டு­தல்” தொடர்­பான மாதிரி விதி­மு­றை­கள் மாநி­லங்­கள் பரி­சீ­லித்து ஏற்­றுக்­கொள்­வ­தற்­காக வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இவை விவ­சா­யி­க­ளி­டையே வேளாண் வன­வி­யலை ஊக்­கு­விக்­கும் நோக்­கத்­து­டன் தனி­யார் வேளாண் நிலங்­க­ளில் வளர்க்­கப்­ப­டும் மரங்­களை வெட்­டு­தல் மற்­றும் எடுத்­துச் செல்­வ­தற்­கான நடை­மு­றை­களை எளி­மைப்­ப­டுத்தி, சீரான ஒழுங்­கு­முறை, வெளிப்­ப­டைத்­தன்மை மற்­றும் தொழில் செய்­வ­தற்­கான எளி­மையை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­காட்­டும் கட்­ட­மைப்பை வழங்­கு­வ­தா­க­வும் தெரி­வித்­தார். மேலும், தமிழ்­நாடு உட்­பட அனைத்து மாநி­லங்­கள் மற்­றும் ஒன்­றி­யப் பிர­தே­சங்­க­ளு­டன் தொடர்ந்து ஆலோ­ச­னைக் கூட்­டங்­கள், பயி­ல­ரங்­கு­கள் மற்­றும் திறன் மேம்­பாட்டு நிகழ்ச்­சி­கள் மூலம் ஒருங்­கி­ணைந்து வேளாண் வன­வி­யலை ஊக்­கு­வித்து வரு­வ­தாக ஒன்­றிய இணை 
அமைச்­சர் கீர்த்தி வர்­தன் சிங் 
எழுத்­துப்­பூர்­வ­மாக அளித்த பதி­லில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூலை 28–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அருட்­செல்­வர் டாக்­டர் பொள்­ளாச்சி நா.மகா­லிங்­கம் அவர்­க­ளின் மகள் மறை­வுக்கு கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் விடுத்­துள்ள இரங்­கல் செய்தி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">புகழ்­பெற்ற தொழி­ல­தி­பர், கல்­வி­யா­ளர் மற்­றும் காந்­தி­ய­வா­தி­யு­மான  அருட்­செல்­வர் டாக்­டர் பொள்­ளாச்சி நா. மகா­லிங்­கம் அவர்­க­ளின் மக­ளும் – சன்­மார்க்க சபை­யின் தலை­வ­ரும் - கல்­வித் தந்­தை­யு­மான டாக்­டர் பி.கே.கிருஷ்­ண­ராஜ் வான­வ­ ரா­யர் அவர்­க­ளின் துணை­வி­யா­ரு­மான திரு­மதி கரு­ணாம்­பாள் வான­வ­ரா­யர் அவர்­கள் மறை­வெய்­திய செய்­தி­ய­றிந்து மிக­வும் வருந்­தி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவரை இழந்து வாடும் கல்­வித் தந்தை 
டாக்­டர் பி.கே.கிருஷ்­ண­ராஜ் வான­வ­ரா­யர் அவர்­க­ளுக்­கும்  - அவ­ரது குடும்­பத்­தார்க்­கும், உற்­றார் உற­வி­னர்­க­ளுக்­கும், நண்­பர்­க­ளுக்கு எனது  ஆழ்ந்த இரங்­க­லை­யும் ஆறு­த­லை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கழ­கத் தலை­வர் அவர்­கள் மேற்­கண்ட 
இரங்­கல் செய்தி வெளி­யிட்­ட­தோடு, கல்­வித் தந்தை டாக்­டர் பி.கே.கிருஷ்­ண­ராஜ் வான­வ­ரா­யர் அவர்­களை அலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு ஆறு­தல் தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>