<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 28 2026 03:44:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260728T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="28072026-MDU-05" position.sequence="05" ex-ref="28072026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="72">ஒன்றியத்தில் பா.ஜ.க.; தமிழ்நாட்டில் த.வெ.க.! செப்புவது கேளாத தேரா மன்னர்கள்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame780409_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup780877_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M2bw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M11bw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="M4bw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="M6bw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="M10bw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="17.5">வ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ட நாட்­டி­ன­ருக்கு ராமா­ய­ணம், மகா­பா­ர­தம் போல திரா­விட தமி­ழ­ருக்கு முக்­கி­ய­மான காவி­யம் சிலப்­ப­தி­கா­ரம்! அதன் மையப்­பொ­ரு­ளும் அரச நீதி குறித்­த­து­தான். வட நாட்­டுக் காவி­யங்­களை விட உயர் விழு­மி­யங்­கள் கொண்­டது. கோவ­ல­னும், கண்­ண­கி­யும் புதிய வாழ்க்கை துவங்க பூம்­பு­கா­ரி­லி­ருந்து மது­ரைக்கு வரு­கி­றார்­கள். கண்­ண­கி­யின் காற்­சி­லம்பை விற்­று­வர கோவ­லன் செல்­கி­றான். பாண்­டிய நாட்டு அர­சி­யின் காற் சிலம்­பும் கண்­ண­கி­யு­டை­யது போலவே இருக்­கும். அந்த நேரத்­தில் அர­சி­யின் காற் சிலம்பு காணா­மல் போயி­ருந்­த­தால், கொல்­லன் கோவ­லனைஅர­ச­னி­டம் பிடித்­துக் கொடுக்­கி­றான். காற்­சி­லம்பு ஒன்­று­ போல இருப்­ப­தால் எந்த விசா­ர­ணை­யும் செய்­யா­மல் கோவ­ல­னுக்கு மரண தண்­டனை விதித்து விடு­கி­றான் மன்­னன். கண்­ணகி அழுது புலம்­பிக் கொண்­டி­ருக்­கா­மல், நீதி கேட்க மன்­ன­னி­டம் வரு­கி­றாள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அர­சி­யின் காற்­சி­லம்­பில் இருப்­பவை முத்­துப் 
பரல்­கள்; கண்­ண­கி­யின் காற்­சி­லம்­பில் இருப்­பவை மாணிக்­கப் பரல்­கள். கண்­ணகி அதனை நிரூ­பித்­த­தும் மன்­னன் குற்ற உணர்ச்­சி­யில் “யானே கள்­வன்!” என்று மனம் வெதும்பி உயிர்­து­றக்­கி­றான். அர­சி­யும் கூடவே உயிர் துறக்­கி­றாள். நீதி வழு­வி­னான் என்ற அவச்­சொல் தனக்கு வந்­த­பின் அர­சன் உட­லில் உயிர் தரிப்­ப­தில்லை. இவ்­வாறு நீதி கேட்ட அர­ச­வைக்கு வரும் கண்­ணகி 
அர­சனை நோக்கி பேசத் தொடங்­கும் போது “தேரா மன்னா! செப்­பு­வ­து­டை­யேன்!” என்­று­தான் தொடங்­கு­கி­றாள். தேராத மன்­னன் என்­பது அறி­வு­பூர்­வ­மாக ஆராய்ந்து முடிவு செய்­யா­த­வன் என்ற பொரு­ளில் வழங்­கப்­ப­டு­கி­றது. வேறு வகை­யில் சொன்­னால் நீதி­ப­ரி­ பா­ல­னத்­தின் தேர்­வில் வெல்­ல­வில்லை என்­றும் கூற­லாம். செப்­பு­வ­து­டை­யேன் என்­றால் எனக்கு கூறு­வ­தற்கு சில சங்­க­தி­கள் உள்­ளன என்று பொருள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இன்று ஒன்­றி­யத்­தில் ஆளும் பிர­த­மர் மோடி­யும் சரி: தமிழ்­நாட்­டின் சரித்­திர விபத்­தாக ஆட்­சிக்கு வந்­து­விட்ட நடி­கர் ஜோசப் விஜ­யும் சரி, தேரா மன்­னர்­க­ளா­கவே உள்­ள­னர் என்­ப­து­டன் குடி­மக்­கள் செப்­பு­வ­தை­யும் கேட்­ப­தில்லை. சென்ற வாரம் டில்­லி­யில் நடந்த மாண­வர்­கள் மீதான தாக்­கு­த­லும், அதைக்­கு­றித்து பேச­வும் மறுக்­கும் ஜோசப் விஜய், தமிழ்­நாட்­டி­லும் போராட்­டங்­களை முடக்­கு­வ­தும் எந்த மக்­க­ளாட்சி மன்­ன­ராட்­சி­யை­விட நெறி­யற்று போயுள்­ளது என்­ப­தையே காட்­டு­கி­றது. சென்ற வார நிகழ்­வு­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை நாம் புரிந்­து­ கொள்­வ­தற்கே இந்த கட்­டுரை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மே 15-ஆம் தேதி உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் ஒரு வழக்கை விசா­ரிக்­கும்­போது தலைமை நீதி­பதி சூர்­ய­காந்த், பொது­வாக வேலை­யற்ற இளை­ஞர்­கள் செயல்­பாட்­டா­ளர்­கள் என்ற பெய­ரில் இணை­யத்­தி­லும், பல்­வேறு அமைப்­பு­க­ளி­லும் ஊடு­று­வு­கி­றார்­கள் என்று குறிப்­பிட கரப்­பான் பூச்­சி­களை உவ­மை­யா­கக் கூறி­னார். இப்­போது அவர் தான் போலி­சான்­றி­தழ்­களை பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளைத்­தான் சொன்­னேன் என்று விளக்­க­ம­ளித்­துள்­ளார். ஆனால் அவர் பேசி­ய­போது பொது­வாக செயல்­பாட்­டா­ளர்­க­ளைக் கூறி­ய­தா­கத்­தான் தோன்­றி­யது. இத­னால் தூண்­டப்­பட்ட அபி­ஜித் தீப்கே என்ற இளை­ஞர் காக்­ரோச் ஜனதா பார்ட்டி (CJP) என்ற அமைப்பை இணை­யத்­தில் துவங்­கி­னார். இது BJP என்­பதை கேலி செய்­வ­தா­க­வும், கரப்­பான் பூச்­சி­கள் என்று கூறப்­பட்ட இளை­ஞர்­க­ளின் கோப­மா­க­வும் அமைந்­தது. எதிர்­பா­ராத வித­மாக அவர் 
துவங்­கிய இணை­ய­த­ளத்­தில் பன்­னி­ரெண்டு இலட்­சம் பேர் இணைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விளை­யாட்­டாக துவங்­கிய இந்த அமைப்பு, அதற்­கான ஆத­ரவு இணை­யத்­தில் பெரு­கி­ய­தால் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளைக் குறித்து கருத்­துக்­களை தெரி­விக்­கத் துவங்­கி­யது. அந்த நேரத்­தில் நீட் தேர்வு வினாத்­தாள்­கள் கசிந்த விவ­கா­ரம் பெரி­தா­னது. அத­னால் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நேர­டி­யாக இந்­தியா வந்த அபி­ஜித் தீப்கே, ஜூன் 6-ஆம் தேதி ஜந்­தர் மந்­த­ரில் ஒரு தர்ணா போராட்ட த்தைத் துவங்­கி­னார். டில்­லி­யில் உள்ள மாண­வர் அமைப்­பு­கள் இணைந்­தன. ஜந்­தர் மந்­த­ரில் நடக்­கும் எத்­த­னையோ போராட்­டங்­க­ளில் ஒன்று எனக்­க­ரு­திய பாஜக அரசு அதனை இலட்­சி­யம் செய்­ய­வில்லை. பாஜக செப்­பு­வது கேளாத அர­சாக இருப்­பது புதி­ய­தல்ல. ஏற்­க­னவே குடி­யு­ரிமை திருத்­தச் சட்ட த்திற்கு எதி­ரான ஷாஹின்­பாக் போராட்­டம், விவ­சாய சட்­டங்­க­ளுக்கு எதி­ரான விவ­சா­யி­கள் போராட்­டம் ஆகி­ய­வற்­றை­யும் உல­கமே கவ­னித்­தா­லும், தான் கவ­னிக்­கா­தது போல­வே­தான் இருக்­கும்.  திடீ­ரென்று யாரா­வது ஒரு சங்க பரி­வார அமைப்பை சேர்ந்­த­வர் அல்­லது அமைச்­சர் அந்­நிய நாட்டு சதி, 
பிரி­வி­னை­வா­தி­கள் ஊடு­று­வல் என்று சொல்லி 
போராட்டத்தைக் கொச்­சைப் படுத்­து­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொது­வா­கவே தேர்­தல் மூல­மாக பிர­தி­நி­தித்­துவ 
மக்­க­ளாட்சி நடப்­ப­தற்­குப் பதி­லாக தேர்­தல் எதேச்­ச­தி­கா­ரமே நடை­பெ­று­கி­றது என­லாம். எப்­ப­டி­யா­வது நாடா­ளு­மன்­றத்­திலோ, சட்­ட­மன்­றத்­திலோ பெரும்­பான்மை கிடைத்து அர­ச­மைத்­து­விட்­டால் அடுத்த தேர்­தல் வரை தாங்­கள் என்ன வேண்­டு­மா­னா­லும் செய்­ய­லாம் என்ற எண்­ணமே ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் மேலோங்­கி­யுள்­ளது. பாஜக எந்த பிரச்­சி­னையை குறித்­தும் நாடா­ளு­மன்­றத்­தி­லும் எதிர்­கட்­சி­களை பேச விடாது. அப்­ப­டியே பேசி­னா­லும் ஆளும் தரப்பு பொறுப்­பாக பதில் சொல்­லாது. அதன் பிறகு வீதி­யில் இறங்கி போரா­டி­னா­லும் அதனை ஒடுக்­கவே முயற்­சிக்­கும். அதி­லும் குறிப்­பாக பிர­த­மர் மோடி எந்த பிரச்­சினை குறித்­தும் வாய் திறந்து பேச மாட்­டார். மணிப்­பூர் பிரச்­சினை கொளுந்­து­விட்டு எரிந்­த­போது அதைக்­கு­றித்து ஒரு வார்த்­தை­யும் சொல்ல பிர­த­மர் மறுத்­து­விட்­டார். மக்­க­ளுக்கு பதில் கூற கட­மைப்­பட்­டுள்­ளோம் என்ற எண்­ணமே பாஜக அர­சி­ன­ருக்கு இருப்­ப­தில்லை. பிர­த­மர் ஊட­கங்­களை சந்­திக்­கும் பழக்­கமே இல்­லா­த­வர். அவரை யார் கேள்வி கேட்­டா­லும் அவ­ருக்­குப் பிடிக்­காது. அவ­ராக நேர­டி­யாக மக்­க­ளு­டன் “மன­தின் பேச்சு” என்ற பெய­ரில் அவர் விரும்­பிய செய்­தி­க­ளைப் பேசு­வார். ஆனால் ஊட­கங்­களை நெருங்க விட­மாட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அதே பாணி­யி­லே­தான் காக்­ரோச் ஜனதா பார்ட்­டி­யின் போராட்­டத்­தை­யும் கையாள பாஜக முடிவு செய்­தது. ஆமாம், நீட் தேரி­வில் முறை­கேடு நடந்­து­விட்­டது. குற்­ற­வா­ளி­களை கைது செய்­துள்­ளோம். விசா­ரணை செய்­கி­றோம். தக்க நட­வ­டிக்கை எடுப்­போம் என்று சொல்லி முடித்­துக்­கொண்­டார்­கள். ஆனால் தாங்­கள் பாடு­பட்டு எழு­திய நீட் தேர்வு ரத்து செய்­யப்­ப­டு­கி­றது, மீண்­டும் தேர்வு எழு­த­வேண்­டும் என்ற செய்திகேட்ட பல மாண­வர்­கள் மன அழுத்­தம் தாளா­மல் தற்­கொலை செய்­து­கொண்­டார்­கள். தேசிய தேர்­வா­ணை­யத்­தில் முறை­கே­டு­கள் நடப்­பது, வினாத்­தாள்­கள் கசி­வது இது முதல் முறை­யல்ல. ஒவ்­வொரு முறை­யும்விசா­ரணை, தக்க நட­வ­டிக்கை என்று கூறப்­ப­டு­கி­றதே தவிர மீண்­டும் அதே தவறு நிக­ழா­மல் இருப்­ப­தில்லை. ஏற்­க­னவே பாஜக கட்சி மத்­திய 
பிர­தே­சத்­தில் வியா­பம் என்ற அரசு தேர்வு நிறு­வ­னத்­தின் முறை­கே­டு­க­ளுக்­காக புகழ்­பெற்­றது. எல்­லாம் சேர்ந்து இந்த முறை மாண­வர்­கள், இளை­ஞர்­க­ளி­டையே பெரும் எழுச்­சியை தோற்­று­
வித்­தது என­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த நேரத்­தில் காக்­ரோச் ஜனதா பார்ட்டி என்ற புதிய அமைப்­பும் தோன்ற தன்­னெ­ழுச்­சி­யாக மாண­வர்­கள் ஜந்­தர் மந்­த­ரில் குழு­மத் துவங்­கி­னர். ஜூன் 28-ஆம் தேதி லடாக் மாநில சூழ­லி­யல் செயல்­பாட்­டா­ள­ரான சோனம் வாங்க்­சுக் மாண­வர்­க­ளு­டன் இணைந்து கால­வ­ரை­யற்ற உண்­ணா­வி­ரதத்தைத் துவங்­கி­னார். அவ­ரு­டன் அகில இந்­திய மாண­வர் சங்­கம் (AISA) என்ற அமைப்­பின் பிர­தி­நி­தி­க­ளும் உண்­ணா­வி­ர­தம் துவங்­கி­னர். ஐசா­வின் தலை­வ­ரான நேகா போரா சிறப்­பான பேச்­சா­ளர்; அவர் போராட்­டத்­தின் முக்­கிய முக­மாக விளங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">போரா­டு­ப­வர்­க­ளின் கோரிக்கை என்­பது நிறை­வேற்­றக் கடி­ன­மா­னது கிடை­யாது. அவர்­கள் ஒன்­றிய அரசு பொறுப்­பேற்க வேண்­டும் என்­றார்­கள். எப்­படி பொறுப்­பேற்­பது? பாண்­டிய மன்­ன­னைப் போல உயிர் துறக்க வேண்­டி­ய­தில்லை. இந்த தேர்­வு­க­ளுக்­குப் பொறுப்­பா­ள­ரான கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் பதவி வில­க­வேண்­டும் என்­றார்­கள். இதனை யாரும் கோரா­மலே அவ­ரா­கவே செய்­தி­ருக்க வேண்­டும். 
அல்­லதுபிர­த­மர் அவ­ருக்கு அறி­வு­றுத்தி இருக்க வேண்­டும். அவர் பதவி வில­கி­னா­லும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத்­தான் இருப்­பார். என்ன வேலைப்­பளு இல்­லா­மல் 
நிம்­ம­தி­யாக இருப்­பார். மற்­ற­படி அவ­ருக்கு எந்த இழப்­பும் கிடை­யாது. குறி­யீட்டு அள­வில் பொறுப்­பேற்று பதவி வில­கு­கி­றார் என்­ப­து­தானே தவிர அது ஒன்­றும் மிகப் ­பெ­ரிய தண்­டனை கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் தேர்­தல் எதேச்­ச­தி­கார அர­சாக இருப்­ப­தால், அடுத்த தேர்­தல் வரை மக்­கள் என்ன சொன்­னா­லும் கேட்க மாட்­டோம், நாங்­கள் நினைத்­தை­தான் செய்­வோம் என்ற மனப்­போக்கு இருப்­ப­தால், கல்வி அமைச்­சர் பதவி வில­கச் சொல்­வதை கெள­ர­வப் பிரச்­சினை­ யாகவே அரசு கரு­தி­யது. அமைச்­சரை பதவி வில­கச் சொல்ல இவர்­கள்யார் என்­று­தான் நினைத்­தார்­கள். நடந்த தவறு எவ்­வ­ளவு மோச­மா­னது, எப்­படி மாண­வர்­களின் நம்­பிக்­கை­யை­யும், எதிர்­கா­லத்­தை­யும் பாழாக்­கு­கி­றது என்­ப­தைக் குறித்த எந்த நுண்­ணு­ணர்­வும், அக்­க­றை­யும் அற்­ற­வர்­க­ளா­கவே ஆட்­சி­யா­ளர்­கள் இருந்­தார்­கள். இதில் நிதி­ய­மைச்­சர் 
நிர்­மலா சீதா­ர­மன் வெந்த புண்­ணில் வேலைப் ­பாய்ச்­சு­வ­தில் நிபு­ணர். 
எழு­திய தேர்வு ரத்­தா­னால், மீண்­டும் மேலும் சிறப்­பா­கப் படித்து மறு­தேர்வு எழுத வாய்ப்­புக் கிடைக்­கி­றதே என்று மகி­ழும் மாண­வர்­க­ளும் இருப்­பார்­கள் என்று கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சோனம் வாங்­சுக்­கும், மாண­வர்­க­ளும் உண்­ணா­வி­ர­தம் இருக்­கத் துவங்­கி­ய­பி­றகு, போராட்டத்திற்கு 
ஆத­ரவு பெரு­கத் துவங்­கி­யது. பல்­வேறு அர­சி­யல் கட்சி தலை­வர்­க­ளும், பொது­மன்ற ஆளு­மை­க­ளும், கலை­ஞர்­க­ளும் போராட்­டக் களத்­திற்­குச் சென்று போராட்­டத்தை ஆத­ரித்­துப் பேசி­னார்­கள். மாலை நேரங்­க­ளில் பொது­மக்­கள் பெரு­ம­ள­வில் வரத் துவங்­கி­னார்­கள். இரவு முழு­வ­தும் பாடல்­க­ளும், உரை­யா­டல்­க­ளு­மாக போராட்­டக் களம் உணர்­வெ­ழுச்சி பெறத் துவங்­கி­யது. நாளா­வட்ட த்தில் சோனம் வாங்­சுக் உடல்­நிலை சீர்­கெட்ட போது 
நீதி­மன்­றத்­தில் வழக்­கு­கள் போடப்­பட்­டன. ஜூன் 17 இரவு வாங்க்­சுக் வலுக்­கட்­டா­ய­மாக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். அங்­கே­யும் உண்­ணா­ நோன்­பினைத் தொடர்ந்­தார். அரசு தானா­கவே இதனை பெரிய கெள­ர­வப் பிரச்­சி­னை­யாக மாற்­றிக் கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">ஜூலை 20, 2026: இந்­திய மக்­க­ளாட்சி வர­லாற்­றின் திருப்பு முனையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலை­யில்­தான் நாடா­ளு­மன்ற கூட்­டத் தொடர் ஜூலை 20 அன்று துவங்­கி­யது. ஜந்­தர் மந்­த­ரி­லி­ருந்து போராட்­டக்­கார ர்கள் நாடா­ளு­மன்­றம் நோக்கி ஊர்­வ­ல­மா­கச் செல்ல முடி­வெ­டுத்­தார்­கள். எந்த கார­ணத்­திலோ பதட்­ட­ம­டைந்த அரசு, போலீ­ஸை­யும், துணை ராணு­வத்­தை­யும் சீருடை அணிந்த அடை­யா­ளம் தெரி­யாத, பெயர் வில்லை இல்­லாத நபர்­க­ளை­யும் மாண­வர்­க­ளைத் தாக்க அனுப்­பி­யது. மாணவ மாண­வி­யர் தங்­கள் மீது தொடுக்­கப்­பட்ட தாக்­கு­தலை கலங்­கா­மல் எதிர்த்து நின்ற காட்­சி­கள் இணை­யத்­தில் நாடெங்­கும் பர­வி­யது; மிகப்­பெ­ரிய எழுச்­சியை நாடு முழு­வ­தும் தோற்­று­வித்­தது. மும்­பாய், கல்­கத்தா, பாட்னா, பெங்­க­ளூரு என பல்­வேறு நக­ரங்­க­ளி­லும் போராட்­டங்­கள் வெடித்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாண­வர்­கள் மீது நடத்­தப்­பட்ட கொடூ­ரத் தாக்­கு­த­லைக் கண்­டித்து மறு­நாள் ஜூலை 21-ஆம் தேதி ராகுல் காந்தி, பிரி­யங்கா காந்தி உள்­ளிட்ட தலை­வர்­கள் பிர­த­மர் இல்­லத்தை முற்­று­கை­யிட்­டார்­கள். அனை­வ­ரும் கைது செய்­ய­பட்டு அகற்­றப்­பட்­டார்­கள். ராகுல் காந்தி அவர் முகத்­தில் ரத்­தம் வழிய குண்­டு­கட்­டாக தூக்­கிச் செல்­லப்­பட்­டார். மும்­பா­யில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை கொண்டு செல்­லும் காவல்­துறை வாக­னத்தை ரியா அஹிர் என்ற பெண் தனி­யா­ளாக தடுத்து நிறுத்­திய காணொ­லி­யும் நாடெங்­கும் பர­வி­யது. அவ­ரது நேர்­கா­ணலை தொலை­காட்சி அலை­வ­ரி­சை­கள் ஒளி­ப­ரப்­பின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு முக்­கிய நிகழ்­வாக டெல்லி உயர்­நீ­தி­மன்­றத்­தில் மூத்த வழக்­க­றி­ஞர்­கள் ஹரி­ஹ­ரன், விகாஸ் சிங் மற்­றும் கோபால் சங்­க­ர­நா­ரா­ய­ணன் ஆகி­யோர் பொது நல வழக்­கில் ஆஜ­ராகி ஜூலை 20 அன்று மாண­வர்­கள் மீது போலீஸ் நட த்திய கொடூர தாக்­கு­தலை விசா­ரிக்க ஆணை­யி­டச் சொல்லி கோரி­னர். கோபால் சங்­க­ர­நா­ரா­ய­ணன் தான் 130 காணொ­லி­களை பார்த்த தாக க் கூறி எப்­படி தேவை­யற்ற கொடூர வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்ட து என்­பதை விவ­ரித்­தார். ஆணி­கள் பொருத்­திய தடி­கள், மின்­சா­ரம் பாய்ச்­சும் தடி­கள், பெல்­லட் குண்­டு­க­ளைச் சுடும் துப்­பாக்­கி­கள் என்று அனு­ம­திக்­கப் படாத கொடூர ஆயு­தங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன என்று குற்­றம் சாட்­டி­னார். போரா­டிய பெண்­கள் உடல்­ரீ­தி­யாக துன்­பு­றுத்­தப்­பட்­ட­னர், அவர்­கள் பாலு­றுப்­பு­க­ளில் தாக்­கப்­பட்­ட­னர் என்­றார். மேலும் பெயர் வில்லை அணி­யாத அடை­யா­ள­மற்ற நபர்­க­ளும் சீரு­டை­யில் இருந்­ததை சுட்­டிக்­காட்­டி­னார். நீதி­ய­ர­சர்­கள் வழக்கை அனு­ம­தித்து டில்லி காவல்­து­றை­யை­யும், ஒன்­றிய அர­சை­யும் பதில் அளிக்­கச் சொல்­லி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ராகுல் காந்­தி­யும் பெல்­லட் குண்­டால் தாக்­கப்­பட்ட மாண­வர்­களை ஊட­கங்­க­ளுக்­குக் காட்­டி­னார். ஒன்­றிய உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­விற்கு மாண­வர்­கள் எத­னால் அப்­படி தாக்­கப்­பட்­டார்­கள், அதற்கு உத்­த­ர­விட்­டது யார் என்று கேட்டு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இத்­த­னைக்­கும் பிறகு நாடெங்­கும் போராட்­டங்­கள் வெடித்த பிறகு, பாஜ­க­வின் மூத்த தலை­வர் முரளி மனோ­ஹர் ஜோஷியே கண்­ட­னம் தெரி­வித்த பிறகு, வேறு வழி­யில்­லா­மல் 25-ஆம் தேதி தர்­மேந்­திர பிர­தான் பதவி வில­கி­னார். காக்­ரோச் ஜனதா கட்­சி­யு­டன் பேசிய பாஜக பிர­தி­நி­தி­கள் அவர்­க­ளது மற்ற கோரிக்­கை­க­ளான நீட் பிரச்­சி­னை­யால் உயி­ரி­ழந்த மாண­வர் குடும்­பங்­க ­ளுக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு, போரா­டிய மாண­வர்­கள் மீது போடப்­பட்ட வழக்­கு­களை திரும்­பப் பெறு­தல் ஆகி­ய­வற்­றை­யும் ஏற்­றுக் கொள்­வ­தா­கக் கூறி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சின் அடக்­கு­மு­றைக்­குப் பணி­யா­மல் மாண­வர்­கள் போராடி வென்­றது மிக முக்­கி­ய­மான அர­சி­யல் நிகழ்­வா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது. பாஜக அர­சின் மீது நாடு முழு­வ­தும் அதி­ருப்தி பர­வி­யுள்­ளது. போரா­டிய பல மாண­வர்­க­ளின் பெற்­றோர்­கள் பாஜக ஆத­ர­வா­ளர்­கள் என்று கூறப்­ப­டு­கி­றது.இப்­போது அவர்­களே மனம் மாறி­விட்­டார்­கள்; அர­சின் மீது கோபத்­தில் இருக்­கி­றார்­கள் எனப்­ப­டு­கி­றது. நரேந்­திர மோடி அர­சின் முடி­வின் துவக்­கம் என்றே பல­ரும் கூறு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டில் மோடி மாடல் எதேச்­ச­தி­கா­ரி­யாக விளங்­கும்ஜோசப் விஜய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மோடி தலை­மை­யி­லான பாஜக அர­சினை தனது ரோல் மாட­லாக க் கொண்டு எதேச்­ச­தி­கார ஆட்சி செய்­கி­றார் ஜோசப் விஜய். நாட்­டில் எந்த பிரச்­சினை நடந்­தா­லும் வாய் திறக்க மாட்­டேன் என்­கி­றார். தொடர்ந்து லாக் அப் மர­ணங்­கள், பாலி­யல் குற்­றங்­கள் நிகழ்­கின்­றன. அவர் எது குறித்­தும் பேசு­வ­தில்லை. பழனி கோயில் நிலம் மோச­டி­யாக திட்­ட­மிட்டு விற்­கப்­பட்ட து பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. ஆனால் அமைச்­சர்­கள் பொறுப்­பேற்­ப­தில்லை; விசா­ரணை என்ற பெய­ரில் இழுத்­த­டிக்­கின்­ற­னர். விஜய் வழக்­கம்­போல மெள­னம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டில்­லி­யில் இத்­தனை போராட்­டம் நடக்­கும்­போது காங்­கி­ர­ஸிற்கு கூட்­டணி அமைச்­ச­ர­வை­யில் இடம் கொடுத்­துள்ள தவெக அமை­தி­யாக இருக்­கி­றது. முதல்­வ­ரும், ஒட்­டு­மொத்த அமைச்­ச­ர­வை­யும் ஜன நாய­கன் படம் பார்த்து உணர்ச்­சிப் பெருக்­கில் இருக்­கி­றார்­கள். தமிழ்­நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும், சென்­னை­யி­லும் 
ஜந்­தர் மந்­தர் போராட்­டத்தை ஆத­ரித்து மாண­வர் போராட்­டங்­கள் நடப்­ப­தைப் பற்றி தவெக கவ­லையே 
பட­வில்லை. ஜன நாய­கன் சினிமா ரிலீஸ்­தான் அவர்­ களுக்கு முக்­கி­ய­மாக இருந்­தது. ராகுல் காந்­தியே கைது செய்­யப ட்டபோ­து­தான், சற்றே நாசூக்­காக பாஜக பெய­ரையே சொல்­லா­மல் ஒரு மென்­மை­யான கண்­டன அறிக்கை வெளி­யிட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பல இடங்­க­ளில் போரா­டும் மாண­வர்­கள், அர­சி­யல் கட்சி தலை­வர்­களை தவெக அர­சின் காவல்­து­றை­யும் கடு­மை­யா­கத் தாக்­கி­யுள்­ளது. போரா­டு­வதை தடுத்­துள்­ளது. அமைச்­சர் ராஜ­மோ­கன் தெரு­வில் போரா­டக் கூடாது என்ற அபூர்­வ­மான  தத்­து­வத்­தைக் கூறி­யுள்­ளார். போராட்­டம் என்­றாலே தெரு­வில் இறங்கி போரா­டு­வ­து­தானே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முதல்­வ­ரைக் கண்­டித்து பேசிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கைது செய்­யப்­ப­டு­கி­றார். பிணை­யின்றி காவ­லில் வைக்­கப்­ப­டு­கி­றார். முதல்­வரை விமர்­சித்து இணை­யத்­தில்
எழு­து­ப­வர்­கள் கைது செய்­யப்­ப­டு­கி­றார்­கள். எதேச்­ச­தி­கார ஆட்சி தலை­வி­ரித்து ஆடு­கி­றது. ஊட­கங்­களை 
சந்­திக்க திரா­ணி­யும், துணி­வும் இல்­லாத பொம்மை அர­சர் தான்­தோன்­றித்­த­ன­மாக ஆட்சி செய்­கி­றார். அப்­பட்­ட­மான அர­சி­யல் வன்­மத்­தில் சென்ற ஆட்­சி­யில் துவங்­கப் ­பட்ட திட்­டங்­க­ளின் பெயர்­களை தேவை­யில்­லா­மல் மாற்­று­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க ஆட்­சி­யின் தனிப்­பெ­ரும் சாத­னை­யான காலை உண­வுத் திட்­டத்­திற்கு “மு.க.ஸ்டாலின் காலை உண­வுத் திட்­டம்” என்று பெயர் வைத்­தி­ருக்­க­லாம். ஆனால் தி.மு.க அரசு “முதல்­வ­ரின் காலை உண­வுத்­திட்­டம்” என்­று­தான் பெயர் வைத்­தது. அதைக்­கூட சகிக்க முடி­யாத அர­சி­யல் வன்­மத்­தால் அந்த திட்ட த்திற்கு “பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் காலை உண­வுத்­திட்­டம்” என்று பெயர் மாற்­றி­யுள்­ளார்­கள். இது காம­ரா­ஜ­ருக்கே புகழ் சேர்க்­காது என்­ப­து­தான் சோகம். அவர் செய்த சாத­னை­க­ளுக்­காக அவர் என்­றும் போற்­றப்­ப­டு­வார். செய்­யாத சாத­னை­களை அவர் பெய­ரில் கூறு­வது தேவை­யற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘நீட்’ தேர்வு முறை­கே­டு­கள் நாடெங்­கும் கொழுந்­து­விட்டு எரி­யும் பிரச்­சி­னை­யாக இருக்­கும்­போது மெள­ன­மாக இருப்­பது. தன்னை விமர்­சிப்­ப­வர்­கள் மீது அடக்­கு­மு­றையை செலுத்­து­வது, கைது செய்­வது. எந்த சீர்­கே­டு­ க­ளுக்­கும் பொறுப்­பெ­டுக்­கா­மல் இருப்­பது என்று இரண்டே மாத த்தில் மிக மோச­மான எதேச்­ச­தி­கா­ரி­யாக உரு­வா­கி­யுள்­ளார் ஜோசப் விஜய். ஒன்­றி­யத்­தில் மோடியை எதிர்த்­துப் போரா­டும் காங்­கி­ரஸ் தமிழ்­நாட்­டில் விஜய்க்கு முட்­டுக்­கொ­டுப்­பது அவர்­கள் அர­சி­ய­லுக்கு வலுச்­சேர்க்­காது. தி.மு.க மீது வன்­மம் கொண்ட சிறு­ம­தி­யா­ளர்­க­ளின் தூண்­டு­த­லால் ராகுல் காந்தி எடுத்த முடிவு தவ­றா­னது என்­பதைஅவர் விரை­வில் உணர வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>