<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="504,67,955,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 27 2026 16:49:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260728T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="28072026-MDU-06" position.sequence="06" ex-ref="28072026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="5">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">முதலமைச்சரின் அறை மாற்றமும், அமைச்சர்களின் அண்டப் புளுகுகளும்: </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">“கண்ணாடிய திருப்பினா ஆட்டோ எப்படி ஓடும் ஜீவா?’’</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup803077_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் உள்ள முதல்­வ­ரின் அறை காற்­றோட்­ட­மாக இல்லை, குளிர் சாத­னத்­தின் உத­வி­யு­டன்­தான் அறை­கள் குளிர்­விக்­கப்­ப­டு­கின்­றன. தற்­போ­தைய முதல்­வர் விஜய், காற்­றோட்­ட­மான அறையை விரும்­பு­கி­றார். கார்ப்­ப­ரேட் அலு­வ­ல­கம் போல, இயற்­கைச் சூழலை ரசிக்­கும்­படி, தனது அறை கண்­ணாடி மாளிகை போல இருக்க வேண்­டும் என்று நினைக்­கி­றார். மேலும், தற்­போ­துள்ள அறை­யின் வாஸ்து, முதல்­வ­ருக்கு சாத­க­மாக இல்லை. இத­னால், கோட்டை பாரம்­ப­ரிய கட்­ட­டத்­தில் இருந்து, நாமக்­கல் கவி­ஞர் மாளி­கை­யில் உள்ள, 10வது மாடிக்கு, முதல்­வர் அலு­வ­ல­கம் மாற்­றப்­பட உள்­ளது. இந்த மாடி­யில் இருந்து பார்த்­தால், சென்னை துறை­மு­கம் மற்­றும் கடற்­கரை அழகை ரசிக்க முடி­யும்.’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">இது முதல்­வ­ரின் அறை மாற்­றம் தொடர்­பாக தின­ம­லர் நாளி­தழ் வெளி­யிட்­டி­ருக்­கும் செய்தி.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">‘உங்­கள் ஒவ்­வொரு வீட்­டி­லும் விஜய் இருக்­கி­றேன்’ என்று பரப்­புரை செய்து ஆட்­சியை பிடித்த விஜய்­யின் ஆட்­சி­யில் ஒவ்­வொரு வீட்­டி­லும் இருக்­கும் விஜய்­க­ளும் விஜி­க­ளும் பல மணி­நேர மின்­வெட்­டால் தத்­த­ளித்து இரவு பக­லாய் புளுங்­கிக் கொண்­டி­ருக்­கும்­போது முத­ல­மைச்­ச­ருக்கு ஏ.சி. அறை பிடிக்­க­வில்­லை­யாம். கட­லைப் பார்த்து ரசிக்­கும் கண்­ணாடி கார்ப்பரேட் அறை வேண்­டு­மாம். அதோடு உட­ன­டி­யாக.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அந்­தச் செய்தி தொடர்­கி­றது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“இப்­ப­ணியை முடிக்க, பொதுப்­ப­ணித் துறை வாயி­லாக, ஆறு மாதங்­கள் வரை அவ­கா­சம் கேட்­கப்­பட்­டது. அந்­தக் கோரிக்­கையை அரசு நிரா­க­ரித்­து­விட்­டது. பணியை மூன்று மாதங்­க­ளுக்­குள் முடிக்க, பொதுத்­துறை செய­லர் சுந்­த­ர­வல்லி தலை­மை­யில் குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது. இதில், தனி­யார் கட்­டட வடி­வ­மைப்­பா­ளர்­கள், ஜோதி­டர்­கள், வாஸ்து நிபு­ணர்­கள், பாது­காப்பு தொடர்­பான வல்­லு­நர்­கள் உள்­ளிட்­டோர் இடம் பெற்­றுள்­ள­னர்.’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முதல்­வ­ரின் ஆஸ்­தான ஜோதி­ட­ருக்கு அர­சுப்­ப­தவி வழங்­கும் முயற்சி கடும் எதிர்ப்­பி­னால் கைவி­டப்­பட்­டா­லும் அவ­ரது அரண்­ம­னைப் பணி செவ்­வனே தொடர்­கி­றது என்­ப­து­தான் மேற்­படி செய்­தி­யின் சாரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­ச­ரின் அறை மாற்­றத்­தால் குதி­ரை­பேர குற்­றச்­சாட்­டு­கள், சட்­டம் ஒழுங்கு பிரச்­சினை, பழ­னி­யாண்­ட­வர் கோயில் 100 கோடி ரூபாய் நில விற்­பனை, மேக தாட்டு விவ­கா­ரம், கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் குடைச்­சல்­கள் என எல்­லா­வற்­றை­யும் தீர்த்­து­வி­ட­லாம் என நம்­பு­கி­றார்­கள் போலும். அதற்­கா­கத்­தான் இந்த அவ­ச­ரம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதை வெட்­டிச் செலவு என அவர்­கள் கூட்­ட­ணிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரே கண்­டித்­தா­லும் வாஸ்து நிபு­ணர்­கள் குறித்த நேரத்­தில் இந்­தப் பணியை முடிக்­க­வேண்­டும் என மும்­மு­ர­மாக இருக்­கி­றார்­கள் போலும். ‘இந்த ஆட்சி ஆறு­மா­தம்­கூட தாங்­காது’ என வரும் விமர்­ச­னங்­க­ளைக் கண்டு பயந்து இந்த அறை மாற்­றத்­தால் அதை தடுத்து நிறுத்­த­லாம் என ஆலோ­சனை சொல்­ல­ப்பட்­டி­ருக்­க­லாம். அம்­மை­யார் ஜெய­ல­லி­தா­வின் ஆட்­சியை ஜோதி­டர்­கள் எங்­கு­போய் நிறுத்­தி­னார்­கள் என்­பது அனை­வ­ரும் அறிந்­ததே.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­ச­ருக்கு நாம் சொல்ல விரும்­பு­வது இது­தான் ‘’ உங்­கள் ஆட்சி இரண்டு மாதத்­தில் அம்­ப­ல­மாகி எல்லா முனை­க­ளி­லும் தோல்­வி­ய­டைந்து கொண்­டி­ருக்­கி­றது. கண்­ணா­டி­யைத் திருப்­பி­னால் ஆட்டோ எப்­படி ஓடும் ஜீவா?’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நித்­தம் நித்­தம் நிர்­மல் குமா­ரின் பொய்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அமைச்­சர் நிர்­மல்­கு­மா­ருக்­கும் பொய் சொல்­வது ஒரு ‘அடி­க்ஷன்’. அன்­றா­டம் தி.மு.க.வுக்கு எதி­ராக நான்கு பொய்­க­ளா­வது சொல்­லா­விட்­டால் தொண்­டை­யில் சோறு தண்­ணீர் இறங்­காது. ‘நீட்’­டிற்கு எதி­ரான மாண­வர் போராட்­டத்­தில் தி.மு.க.வின் பங்­க­ளிப்­புக் குறித்து அப்­படி ஒரு அவ­தூ­றான பச்­சைப் பொய்யை அவிழ்த்­து­விட்­டுள்­ளார். “ ‘நீட்’ தொடர்­பான மாண­வர் போராட்­டங்­க­ளில், தேவை­யற்ற அர­சி­யலை தி.மு.க., செய்­கி­றது. சில­ருக்கு பணம் கொடுத்து, தி.மு.க., ‘டீ-ஷர்ட்’ அணி­வித்து, போராட்­டத்­தில் அமர வைத்­துள்­ள­னர். இளை­ஞர்­களை, தி.மு.க. தலை­வர் ஸ்டாலி­னும், எதிர்க்­கட்சி தலை­வர் உத­ய­நி­தி­யும் தவ­றாக வழி நடத்­து­கின்­ற­னர். மாண­வர்­க­ளின் உணர்­வுப்­பூர்­வ­மான போராட்­டங்­களை அர­சி­யல் ஆதா­யத்­திற்கு பயன்­ப­டுத்­தக் கூடாது.’’ என்­கி­றார் நிர்­மல் குமார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதை யார் சொல்­கி­றார்­கள் என்­றால் இளைய தலை­மு­றை­யி­ன­ரின் ஒரு பிரி­வி­ன­ருக்கு சினிமா வெறி­யூட்டி அவர்­களை பொய்­க­ளின் மூல­மாக திசை திருப்பி ஆட்­சிக்கு வந்­தது மட்­டு­மல்ல, ‘நீட்’ டிற்கு எதி­ராக போரா­டும் மாண­வர்­களை காவல்­து­றையை ஏவி கைது செய்து, அவர்­கள் போராட வந்­து­வி­டக்­கூ­டாது என மெரீனா கடற்­க­ரையை மூடி அனைத்து அடக்­கு­மு­றை­யை­யும் மேற்­கொண்ட த.வெ.க. அர­சின் பிர­தி­நிதி சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க. திசை திருப்­பு­கி­ற­தாம். மாண­வர்­கள் ‘நீட்’  ஒழிப்­பிற்­காக கடும் போராட்­டத்தை நடத்­திக்­கொண்­டி­ருக்­கும்­போது, அந்­தக் காணொ­ளி­கள் நீட்­டிற்கு எதி­ராக மக்­கள் உணர்­வு­க­ளைத் தட்டி எழுப்­பிக்­கொண்­டி­ருக்­கும்­போது  ‘ஜன­நா­ய­கன்’ படத்தை வெளி­யிட்டு இளை­ஞர்­க­ளில் ஒரு பகு­தி­யி­னர் திரை­ய­ரங்­கு­க­ளில் குத்­தாட்­டம் போடும் காணொ­ளி­களை சமூக வலை­த­ளங்­க­ளில் பரப்பி திசை திருப்­பி­ய­வர்­கள் இவர்­க­ளின் விர்­ஷு­வல் வாரி­யர்ஸ். அது மட்­டுமா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">போராட்­டம் நடந்­து­கொண்­டி­ருக்­கும் பாலன் இல்­லத்­திற்கு ஒரு துணை­ந­டி­கையை அனுப்பி ‘நான் ஜன­நா­ய­கன் முதல் காட்சி பார்த்­து­விட்டு வந்­தி­ருக்­கி­றேன். போரா­டு­கிற நீங்­கள் எல்­லாம் மாண­வர்­களே அல்ல’’ என போரா­டும் இளை­ஞர்­களை கொச்­சைப்­ப­டுத்தி அதை ஊட­கங்­க­ளில் பெரிய செய்­தி­யாக்­கி­ய­தும் யாரென்று எல்­லோ­ருக்­கும் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எல்­லாக் கட்­சி­யைச் சேர்ந்த இளை­ஞர்­க­ளும்­தான் பாலன் இல்ல போராட்ட களத்­திற்கு வந்­தி­ருந்­த­னர். ஒன்­று­பட்டு ஒரு 
மன­தாக போராட்­டத்­திற்கு உறு­து­ணை­யாக இருந்­த­னர். தி.மு.க.விலி­ருந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கனி­மொழி 
கரு­ணா­நிதி, முன்­னாள் அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழி­லன், நான் உட்­பட பல­ரும் சென்று அங்கு போராட்­டத்­திற்கு ஆத­ர­வாக உரை­யாற்­றி­னோம். பல்­வேறு கட்­சி­கள், அமைப்­பு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் போலவே தி.மு.க. மாண­வர் அணி­யி­ன­ரும் அங்கு களத்­தில் இருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தப் போராட்­டம் தொடங்­கிய நாளி­லி­ருந்தே தி.மு.க. தலை­வ­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலி­னும் மாண­வர் போராட்­டத்­திற்கு தங்­கள் உறு­தி­யாக ஆத­ரவை தொடர்ந்து வழங்­கி­னர். டெல்­லி­யில் காவல்­துறை அடக்­கு­முறையை கடு­மை­யாக கண்­டித்­த­னர். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கனி­மொழி கரு­ணா­நிதி ஜந்­தர் மந்­த­ரில் போராட்­டக் காரர்­களை நேரில் சந்­தித்துபோராட்­டத்­திற்கு தங்­கள் ஆத­ரவை உறு­தி­யாக வழங்­கி­னார். நாட­ளு­மன்­றத்­தில் மாண­வர் போராட்­டம் மற்­றும் ‘நீட்’ ஒழிப்பு தொடர்­பாக தி.மு.க. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தொடர் போராட்­டங்­களை நடத்­தி­னர். நாடா­ளு­மன்ற வாயி­லி­லும் அந்­தப் போராட்­டங்­கள் தி.மு.க.வால்  முன்­னெ­டுக்­கப்­பட்­டன. நாடா­ளு­மன்­றத்­தில் ’ நீட்’ ஒழிப்பு குறித்து விவா­திக்க கோரி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">’ நீட்’ குறித்து பேச இந்­தி­யா­வில் எந்­தக் கட்­சிக்­கா­வது 
முழுத் தகுதி இருக்­கி­ற­தென்­றால் அது தி.மு.க. மட்­டும்­தான். ‘நீட்’ அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நாளி­லி­ருந்து அதன் அபா­யங்­க­ளைச் சுட்­டிக்­காட்டி கடந்த பத்­தாண்­டு­க­ளுக்­கும் மேலாக மக்­கள் மன்­றத்­தி­லும் சட்ட மன்­றத்­தி­லும் நாடா­ளு­மன்­றத்­தி­லும் நீதி மன்­றத்­தி­லும் இடை­ய­றாத  போராட்­டங்­களை தி.மு.க. நடத்தி வந்­தி­ருக்­கி­றது. உண்­மை­யில் ‘ நீட் ‘ எதிர்ப்பு போராட்­டம் என்­பது தி.மு.க.வின் போராட்­டம். கரப்­பான் பூச்­சிக் கட்­சி­யி­ன­ரின் போராட்­டம்  ‘நீட்’டை முறை­யாக நடத்­து­வது என்ற குறைந்­த­பட்ச செயல்­திட்­டமே என்­றா­லும் மாண­வர் எழுச்­சிக்கு பக்க பல­மாக நின்­றது தி.மு.க. ஆரம்­பம்­மு­தல் 
தி.மு.க.வின் போராட்­டம் சமூக நீதிக்கு எதி­ரான ‘நீட்; உள்­ளிட்ட அனைத்து நுழை­வுத் தேர்­வு­க­ளும் ஒழிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­பதே. இதில் எல்­லாம் பேசு­வ­தற்கு நிர்­மல் குமார்­க­ளுக்கு ஏதே­னும் அரு­கதை இருக்­கி­றதா? ‘மாண­வர்­க­ளின் செல்லி போராட்ட பற்றி என்ன நினைக்­கி­றீர்­கள்?’ என்று ஒரு த.வெ.க அமைச்­ச­ரி­டம் கேட்­டால்  ‘நம்ம பிரச்­சி­னை­களை முத­லில் பார்ப்­போம்’ என்று சொல்­லி­விட்­டுப் போகி­றார். இது­தான் இவர்­க­ளின் அக்­கறை, புரி­தல்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பாலன் இல்­லத்­தில் ‘ ஜென்ஸீ தி.மு.க.’ லோகோ அணிந்த இளை­ஞர் ஒரு­வர் வெளி­யேற்­றப்­பட்­டது நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக செயல்­பட்­ட­வர் செய்த  கண்­டிக்­கத்­தக்க செயல். பாலன் இல்­லம் என்ற இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி அலு­வ­ல­கத்­தில் போராட்­டம் நடத்­திக்­கொண்டு இந்­தப் போராட்­டத்­திற்கு அர­சி­யல் கட்­சி­கள் வரக்­கூ­டாது என்­பது யாரை ஏமாற்­றும் செயல்?  ‘ஜென் ஸீ’ தி.மு.க. லோகோ அணிந்த டி ஷ்ர்ட்டுடன் ஒரு­வர் பார்­வை­யா­ள­ராக 
வந்­தால் அது போராட்­டத்தை திசை திருப்­பும் செயலா? உண்­மை­யில் அன்று வந்து போராட்­டக்­கா­ரர்­களை  இழி­வு­ப­டுத்­திய துணை நடிகை மாண­வர்­க­ளா­லேயே வெளி­யேற்­றப்­பட்­ட­தும் அதைச் 
சமா­ளித்து சமன் படுத்­தவே போராட்­டத்­திற்கு ஆத­ர­வாக பார்­வை­யா­ள­ராக வந்து அமர்ந்­தி­ருந்த ‘ஜென் ஸீ தி.மு.க.’ இளை­ஞர் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்டு வெளி­யேற்­றப்­பட்ட செயல். போராட்­டத்­திற்கு வந்­த­வர்­கள் எல்­லாம் எந்த கட்­சி­யை­யும் சேரா­த­வர்­கள் என ஏதே­னும் சான்று வாங்­கிக்­கொண்டு அனு­ம­தித்­தீர்­களா? அர­சி­யல் 
கட்­சி­கள் இல்­லாத போராட்­டங்­கள் என்று ஏதே­னும் உண்டா? அன்று அந்த ’ஜென் ஸீ தி.மு.க.’ டீ ஷர்ட் அணிந்த இளை­ஞரை வெளி­யேற்­றிய நபர் இந்­தி­யன் யூனி­யன் முஸ்­லீம் லீக் ஆத­ர­வா­ளர் என்­பது சமூக வலை­த­ளங்­க­ளில் வெளிப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">விஜய் ரசி­கை­யான துணை நடி­கை­யின் போராட்­டத்­தைக் கலைக்­கும் தந்­தி­ரத்­துக்கு துணை போன­தும் போராட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிக்­க­வந்த தி.மு,க. சார்பு இளை­ஞரை வெளி­யேற்­றி­ய­தும் யாரை குளிர்­விக்க என்­பது தெரி­கி­றதா? இந்த அஜெண்­டா­வின் தொடர்ச்­சி­தான் நிர்­மல் குமா­ரின் பேட்டி. போராட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்­தது தி.மு.க. அதை திசை திருப்­பி­யது த.வெ.க. ஆத­ர­வா­ளர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஆதவ் அர்­ஜு­னா­வின் அடுத்த பொய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">த.வெ.க. பித்­த­லாட்­டங்­க­ளின் முன் வரி­சை­யில் நிற்­ப­வர் ஆதவ் அர்­ஜுனா. மேக­தாது அணை விவ­கா­ரம் தொடர்­பாக முதல்­வர் விஜய் கர்­நா­ட­கா­விற்கு பேச்­சு­வார்த்­தைக்­குச் செல்­கி­றார் என்ற செய்­திக்கு தி.மு.க. தலை­வர் ‘ இது சட்ட ரீதி­யான போராட்­டத்­திற்கு கடும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தும்’ என கடும் கண்­ட­னம் தெரி­வித்­தி­ருந்­தார். இதை சமா­ளிக்க ஆதவ் அர்­ஜுனா சொன்ன பொய் இது.  “ஸ்டாலின் தலை­மை­யி­லான தி.மு.க. ஆட்­சி­யின்­போது, மேக­தாட்டு விவ­கா­ரத்­தில் சட்ட ரீதி­யான பின்­ன­டை­வு­கள் ஏற்­பட்­டன. கர்­நா­ட­கா­வின் திட்ட அறிக்­கையை எதிர்த்து தாக்­கல் செய்­யப்­பட்ட மனுக்­கள், சீராய்வு மனுக்­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்­டன.’’ 
என்­ப­து­தான் அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">உண்­மை­யில் நடந்­தது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேக­தாது பகு­தி­யில் சுமார் 9,000 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய அணை அமைக்­கும் முயற்­சி­யைக் கர்­நா­டக அரசு தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கி­றது. இதற்­காக DPR எனப்­ப­டும் திட்ட வரைவு அறிக்­கை­யைத் தயா­ரித்து, மத்­திய ஜல் சக்தி அமைச்­ச­கத்­தின் 
ஒப்­பு­த­லுக்­கா­கக் கர்­நா­டகா சமர்ப்­பித்­தி­ருந்­தது. இதற்கு எக்­கா­ர­ணம் கொண்­டும் மத்­திய அரசு அனு­மதி வழங்­கக் கூடாது என வலி­யு­றுத்­தித் தமி­ழக அர­சும், அதற்கு ஆத­ர­வா­கப் புதுச்­சேரி மற்­றும் கேரள மாநில அர­சு­க­ளும் உச்ச நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­தி­ருந்­தன. மறு­பு­றம், அணை கட்ட அனு­மதி கோரிக்­கை­யோடு கர்­நா­ட­கா­வும் களம் இறங்­கி­யது. இந்த வழக்­கு­களை விசா­ரித்த உச்ச நீதி­மன்­றத்­தின் அப்­போ­தைய நீதி­பதி பி.ஆர். கவாய் தலை­மை­யி­லான அமர்வு, கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்­பர் 13-ஆம் தேதி ஒரு முக்­கி­யத் தீர்ப்பை வழங்­கி­யது. அதில்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">‘மேக­தாது திட்ட வரைவு அறிக்­கை­யின் மீது மத்­திய அரசு இன்­னும் இறுதி முடிவு எடுக்­காத­தால், தமி­ழக அரசு இப்­பொ­ழுதே நீதி­
­மன்­றத்தை நாடி­யி­ருக்­கத் தேவை­யில்லை. 
ஏற்­க­னவே காவிரி மேலாண்மை ஆணை­யம் 
மற்­றும் காவிரி ஒழுங்­காற்று குழு ஆகி­யவை அமைக்­கப்­பட்­டுள்­ள­தால், இந்த இரு அமைப்­பு­க­ளின் பரிந்­து­ரை­யின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே மத்­திய நிர்­வா­கம் முடி­வெ­டுக்க வேண்­டும், தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுக்­கக் கூடாது’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எனக் கூறி தமி­ழக அர­சின் மனுவை அப்­போது தள்­ளு­படி செய்­தது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த 2025 நவம்­பர் தீர்ப்பை எதிர்த்து, தமி­ழக அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் புதிய சீராய்வு மனு­வைத் தாக்­கல் செய்­தது. இந்த மனு­வில் தமி­ழக அர­சுத் தரப்­பில் கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதி­மன்­றம் வழங்­கிய காவிரி இறு­தித் தீர்ப்­பில், மேக­தாது அணை திட்­டத்­திற்கு எந்­த­வொரு அனு­ம­தி­யும் வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டிய தமி­ழக அரசு, 2025 நவம்­பர் 13 உத்­த­ரவு முந்­தைய தீர்ப்­பு­க­ளுக்கு எதி­ரா­னது என்­ப­தால், அதை உட­ன­டி­யாக மறு­ஆய்வு செய்ய வேண்­டும் எனத் தீவி­ர­மாக வாதிட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கர்­நா­ட­கா­வின் மேக­தாது அணை திட்­டத்­திற்கு எதி­ரான தமி­ழக அர­சின் சீராய்வு மனுவை,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">“வழக்கை மறு­ஆய்வு செய்­யத் தேவை­யான புதிய முகாந்­தி­ரங்­கள் ஏது­மில்லை” என்­றும், ஆகி­யவை காவிரி நீர் மேலாண்மை ஆணை­யம் மற்­றும் தொழில்­நுட்­பக் குழுக்­க­ளின் தீவிர பரி­சீ­ல­னை­யில் உள்­ளன. பரி­சீ­ல­னை­யில் உள்ள விவ­கா­ரத்­தில் முன்­கூட்­டியே தலை­யிட முடி­யாது என்­றும் கூறி உச்ச நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதா­வது வரப்­போ­கும் அபா­யத்தை உணர்ந்து நீதி­மன்­றத்­திற்­குச் சென்­றது தி.மு.க. அரசு. ‘பிரச்­சினை இன்­னும் முற்­ற­வில்லை, முற்­றிய பிறகு வாருங்­கள்’ என்று சொன்­னது உச்ச நீதி­மன்­றம். மேக தாட்டு விவ­கா­ரத்­தில் தமிழ்­நாடு அர­சின் அடிப்­ப­டைக் கோரிக்­கையை அது நிரா­க­ரிக்­க­வும் இல்லை. எந்­தப் பின்­ன­டை­வும் ஏற்­ப­ட­வில்லை. தி.மு.க. இந்­தப் பிரச்­சி­னையை 
முன்­கூட்­டியே நீதி­மன்­றத்­திற்கு ஏன் கொண்டு சென்­றது என்­ப­தற்கு இப்­போது நடந்­து­கொண்­டி­ருக்­கும் காட்­சி­களே சாட்சி.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நீதி மன்­றம்­தான் இதில் உரிய கவ­னம் செலுத்­த­வில்லை. அது எல்­லாப் பொறுப்­பை­யும் காவிரி மேலாண்மை ஆணை­யத்­தி­டம் சுமத்­தி­யது. ஆனால் காவேரி மேலாண்மை ஆணை­யம் இதில் எந்த விதத்­தில் நியா­ய­மாக நடந்­து­கொள்­ள­வில்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதெல்­லாம் இந்­தப் பிரச்­சினை என்­ன­வென்றே தெரி­யாத ஆதவ் அர்­ஜு­னா­வின் வழக்­க­மான பொய்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால் காவிரி நீருக்­காக த.வெ.க. அரசு என்ன இலட்­ச­ணத்­தில் போரா­டி­னார்­கள் என்­ப­தற்கு தின­ம­ல­ரில் வந்த இன்­னொரு செய்­தியை பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“காவிரிமேலாண்மை ஆணை­யத்­தின், 53வது கூட்­டம், அதன் தலை­வர் எஸ்.கே.ஹல்­தார் தலை­மை­யில், 23ம் தேதி டில்­லி­யில் நடந்­தது. இதில், தமி­ழ­கத்­தின் சார்­பில், நீர்­வ­ளத்­துறை செய­லர் சத்­ய­பி­ரதா சாஹு, காவிரி தொழில்­நுட்ப குழுத் தலை­வர் சுப்­பி­ர­ம­ணி­யன் உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர். அப்­போது, தமி­ழ­கத்­திற்கு ஜூன் மற்­றும் ஜூலை மாதங்­க­ளில் வழங்க வேண்­டிய நீரில், நிலு­வை­யில் உள்ள, 24.8 டி.எம்.சி., நீரை விடு­விக்க வேண்­டும் என, கேட்­கப்­பட்­டது. ஆனால், கர்­நா­ட­கா­வில் மழைப்­பொ­ழிவு மற்­றும் நீர்­வ­ரத்தை ஒரு வாரம் கண்­கா­ணிக்­க­லாம், அதன்­பின், மாநி­லங்­கள் முன்­வைக்­கும் கருத்­துக்­கள், நீரி­யல், வானிலை, சார்ந்த சூழ்­நி­லை­களை கருத்­தில் வைத்து முடி­வெ­டுக்­க­லாம். காவிரி நீர் முறைப்­ப­டுத்­தும் குழு கூட்­டத்தை கூட்டி, 
மாநி­லங்­க­ளுக்கு வழங்க வேண்­டிய நீரின் அளவை தீர்­மா­னிக்­க­லாம் என்று ஆணை­யம் அறி­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இத­னால்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்­டப்­படி தமி­ழ­கத்­திற்கு கிடைக்­க­வேண்­டிய நீரை, பெற முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு, தமி­ழக அதி­கா­ரி­கள் எந்த எதிர்ப்­பும் தெரி­விக்­கா­தது, சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தமி­ழ­கத்­திற்கு சட்­டப்­படி உரிய நீர் கிடைப்­ப­தி­லும் சிக்­கல் எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">காவிரி மேலாண்மைகூட்­டத்­தில் தமி­ழ­கத்­தின் உரி­மை­களுக்கு எதி­ரான முடி­வு­க­ளுக்கு மெள­ன­மாய் மண்­டையை 
ஆட்­டி­விட்டு இங்கு வந்து மேக­தாதுவிவ­கா­ரத்­தில் தி.மு.க. சரி­யாக செயல்­ப­ட­வில்லை என வெற்­றுச் சவ­டால்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பொய் சொல்­வது ஒரு போதை. அந்­தப் பழக்­கத்­திற்கு அடி­மை­யா­கி­விட்­டார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>