<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,957,928" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 28 2026 22:56:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260729T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="29072026-MDU-05" position.sequence="05" ex-ref="29072026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="48">   </lang>
	</hl3>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="79">காலம்தோறும் கரப்பான்பூச்சிகள்   !</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup804906_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு மாமாங்க கால­மாக இந்­திய ஒன்­றி­யத்தை ஆட்சி செய்து வரும் பா.ஜ.க. அர­சின் திசைத்­தி­ருப்­பல் முயற்­சி­களை முழு­மை­யாக முறி­ய­டித்து, தங்­கள் கோரிக்­கைக்­குப் பணிய வைத்­தி­ருக்­கி­றார்­கள் கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­னர். ‘நீட்’ தேர்வு மோச­டி­களுக்கு எதி­ரான அவர்­க­ளின் போராட்­டத்­திற்கு தி.மு.க. உள்­ளிட்ட பல கட்­சி­க­ளின் ஆத­ர­வும், பல்­வேறு அமைப்­பு­க­ளின் உறு­துணை­யும் கிடைத்­த­து­டன், இந்­தி­யா­வின் இளை­ஞர்­க­ளும் மாண­வர்­க­ளும் எவ்­வித பேத­மு­மின்­றிப் போராட்­டத்தை ஆத­ரித்­த­தன் விளைவே, ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் கல்வி அமைச்­ச­ராக இருந்த தர்­மேந்­திர 
பிர­தான் பதவி விலக நேரிட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பா.ஜ.க அரசு தனக்கு எதி­ரான எந்த நட­வ­டிக்­கை­யாக இருந்­தா­லும் அதை எந்­தெந்த வகை­யில் எல்­லாம் திசைத் திருப்ப முயற்­சிக்­கும் என்­பதை டெல்லி ஜந்­தர்­மந்­த­ரில் கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­னர் முன்­னெ­டுத்த இளைய தலை­மு­றை­யின் போராட்­டத்­தில் பங்­கு­கொண்டு உரை­யாற்­றிய தி.மு.க.வின் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர்- தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் கனி­மொழி 
கரு­ணா­நிதி விளக்­க­மாக எடுத்­து­ரைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மக்­க­ளின் பக்­கம் நின்று அர­சுக்கு எதி­ரா­கப் போரா­டு­ப­வர்­க­ளைத் ‘தேச விரோ­தி­கள்’, ‘அர்­பன் நக்­சல்­கள்’, ‘வெளி­நாட்­டுக் கைக்­கூலி­கள்’ என்று பழி போட்டு திசைத் திருப்­பு­வது ஒன்­றிய பா.ஜ.க அர­சின் வழக்­க­மாக இருப்­பதை கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அந்­தக் கூட்­டத்­தில் தெரி­வித்­தார். டெல்­லி­யில் நடந்த போராட்­டத்­தை­யும் இப்­ப­டித்­தான் பா.ஜ.க. 
வர்­ணித்­தது. ஏற்­க­னவே, இதே டெல்­லி­யில் விவ­சா­யி­கள் மாதக் கணக்­கில் போரா­டி­ய­போது,அவர்­களை ‘காலிஸ்­தான் தீவி­ர­வா­தி­கள்’ என்றுமுத்­திரை குத்­தி­யது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாநி­லங்­க­ளின் தொகு­தி­க­ளின் எண்­ணிக்­கை­யைப் பறிக்­கும், தொகுதி மறு­வ­ரை­யரைசட்­ட­முன்­வ­டிவை தி.மு.க. உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­ கள் ஒருங்­கி­ணைந்து நாடா­ளு­மன்­றத்­தில் தோற்­க­டித்­த­போது, “பெண்­க­ளுக்­கான நாடா­ளு­மன்ற- – சட்­ட­மன்ற தொகுதி ஒதுக்­கீட்­டைத் தடுக்­கி­றார்­கள்” என்று ஒன்­றிய பா.ஜ.க. அரசு திசை திருப்­பி­யது. ஜந்­தர் மந்­த­ரில் நடந்த போராட்­டத்­தின் வலி­மை­யால் பதவி வில­கிய தர்­மேந்­திர பிர­தா­னும்­கூட, “போராட்­டத்தை தேச­வி­ரோ­தி­கள் பயன்­ப­டுத்­திக் கொள்­ளக் கூடாது” என்று தனது ராஜி­னா­மா­வுக்­கான கார­ணத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத்­த­கைய பழித்­தூற்­றல்­கள், திசைத் திருப்­பல்­கள் எல்­லா­வற்­றை­யும் மீறித்­தான் கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­ன­ரும் அவர்­களை ஆத­ரித்து உறு­தி­யாக நின்­ற­வர்­க­ளும் ஒன்­றிய பா.ஜ.க அர­சைப் பணி­யச் செய்­தி­ருக்­கி­றார்­கள். இணை­ய­த­ளம் முடக்­கம், காவல்­து­றை­யும் துணை ராணு­வ­மும் இணைந்து நடத்­திய கொடூ­ரத் தாக்­கு­தல், தேசிய பாது­காப்­புச் சட்­டம் பாயும் என்ற பா.ஜ.க. அர­சின் மிரட்­டல்­கள் எது­வும் ஜந்­தர் மந்­தர் ஜன­நா­ய­கப் போரா­ளி­க­ளி­டம் எடு­ப­ட­வில்லை.  ‘நீட்’ தேர்வு மோச­டி­க­ளுக்­குக் கார­ண­மான அமைச்­சர் பதவி விலக வேண்­டும் என்­ப­தில் சம­ர­சம் காட்­டா­மல் நின்று, நினைத்­ததை சாதித்­தி­ருக்­கி­றார்­கள். இது ஜன­நா­ய­கக் களத்­தில் மோடி அர­சுக்­கான முதல் வெளிப்­ப­டை­யான வீழ்ச்சி என்று அர­சி­யல் நோக்­கர்­கள் சுட்­டிக்­காட்­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இளை­ஞர்­கள் மற்­றும் மாண­வர்­க­ளின் போராட்­டத்­தில் வெளிப்­பட்ட கோபம், பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான அர­சின் மீது மட்­டு­மல்ல, அந்த அர­சின் ஊது­கு­ழல்­களா­கவே செயல்­ப­டும் ஊட­கத்­தி­னர் மீதும்­தான்.இந்­தி­யா­வில் பிர­ப­ல­மாக உள்ள பெரும்­பா­லான ஊட­கங்­கள் பா.ஜ.க.வின் குர­லா­கவே ஒலிப்­பதை இளை­ஞர்­கள் மிகச் சரி­யா­கவே கவ­னித்து வந்­துள்­ள­னர். பிர­ப­ல­மான தொலைக்­காட்சி ஊட­கத்­தி­னரை நோக்கி சர­மா­ரி­யான கேள்­வி­களை எழுப்­பி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">12 ஆண்­டு­க­ளாக ஒன்­றிய அர­சுக்கு சாத­க­மான கேள்­வி­க­ளைக் கேட்டே பழக்­கப்­பட்­டி­ருந்த ‘கோடி மீடியா’ எனப்­ப­டும் இந்­தி­யா­வின் தொலைக்­காட்சி சேனல்­க­ளின் செய்­தி­யா­ளர்­கள், டெல்­லி­யில் திரண்ட ஜென்ஸி தலை­மு­றை­யி­ன­ரின் கூர்­மை­யா­னக் கேள்­வி­களை எதிர்­கொள்ள முடி­யா­மல் திண­றி­னர். ஊடக ஆட்­க­ளுக்கு எதி­ரான கண்­டன முழக்­கங்­களை இளை­ய­த­லை­மு­றை­யி­னர் தொடர்ந்து எழுப்­பி­னர். பார­பட்­ச­மாக செயல்­ப­டும் ஊட­கத்தை நோக்­கிய விமர்­ச­னங்­கள் சுவர் எழுத்­து­க­ளி­லும், சுவ­ரொட்­டி­க­ளி­லும் வெளிப்­பட்­டன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­னர் முன்­னெ­டுத்த போராட்­டத்­தில் மட்­டு­மல்ல, பல்­வேறு கால­கட்­டங்­க­ளில் இந்­தி­யா­வில் நடை­பெற்ற போராட்­டங்­க­ளி­லும் ஊட­கத்­தி­ன­ரின் பார­பட்­ச­மான அணு­கு­முறை தொடர்ந்­தது என்­ப­து­தான் ஊடக வர­லாறு. அர­சி­யல்­க­ளத்­திற்கு கரப்­பான்­பூச்­சி­கள் என்­பவை புதி­தல்ல. காலந்­தோ­றும் கரப்­பான்­பூச்­சி­கள் வேறு­வேறு வடி­வங்­க­ளில் வெளிப்­பட்டே வந்­தி­ருக்­கின்­றன. வேலை­யற்ற இளை­ஞர்­களை கரப்­பான்­பூச்­சி­க­ளு­டன் ஒப்­பிட்டு உச்­ச­நீ­தி­மன்­றம் விமர்­ச­னக் கருத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­தால்­தான், கரப்­பான்­பூச்சி பெய­ரி­லேயே கட்சி உரு­வா­கும் நிலை தற்­போது உரு­வா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இளை­ஞர்­கள் வேலை­யற்­ற­வர்­க­ளாக இருப்­ப­தற்கு அவர்­கள் மீது பழி­போ­டா­மல் அர­சும் சமூ­க­முமே முதன்மை பொறுப்­பேற்­றுக் கொள்ள வேண்­டும். அத­னால்­தான்,   ‘சாலை­யோ­ரத்­திலே வேலை­யற்­ற­து­கள்..வேலை­யற்­ற­து­க­ளின் உள்­ளத்­திலே விப­ரீத எண்­ணங்­கள். அது­தான் காலத்­தின் குறி’ என்று எழு­தி­னார் பேர­றி­ஞர் அண்ணா. காலம் காட்­டிய குறி­யைக் கண்­டு­ணர்ந்த அண்ணா, வேலை­யற்­ற­வர்­க­ளாய் இருந்த இளை­ஞர்­களை இழித்­துப் பேச­வில்லை. இலட்­சிய வர­லாறு படைத்­திட அவர்­களை ஒருங்­கி­ணைத்­தார். இயக்­கத்­தைக் கட்­ட­மைத்­தார். தி.மு.க. தொடங்­கி­ய­போது உரு­வான இளை­ஞர் பட்­டா­ளமே 
அன்­றைய கரப்­பான்­பூச்­சி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.க. மாண­வர்- இளை­ஞர் பட்­டா­ளம் கரப்­பான்­பூச்­சி­க­ளா­கக் கள­மி­றங்­கி­யது. இந்தி ஆதிக்­கத்தை எதிர்த்­துப் போரா­டி­யது. உயிர்த்­தி­யா­கம் செய்­தது. சிறை­வா­சம் கண்­டது. உறு­தி­யாக நின்­றது. அதன் விளை­வா­கத்­தான், இந்தி மட்­டுமே இந்­தி­யா­வின் ஆட்­சி­மொழிஎன்­கிற ஆதிக்­கம் தகர்ந்து, ஆங்­கி­ல­மும் இணைஆட்­சி­மொ­ழி­யாக நீடிக்­கும் என்­கிற நிலை உரு­வா­னது. இந்­தி­யா­வில் உள்ள அனைத்து மாநில மொழி­க­ளுக்­கும் பாது­காப்பு அர­ணாக நின்ற தி.மு.க.வுக்­கும் திரா­விட இயக்­கத்­திற்­கும்  அப்­போ­தும் டெல்லி சூட்­டிய பட்­டங்­கள், ‘தேச­வி­ரோ­தி­கள்’, ‘பிரி­வி­னை­வா­தி­கள்’, 
‘இந்­தி­யா­வின் எதி­ரி­கள்’ என்­ப­வை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்­றும் அர­சாங்­கத்­தின் பார்­வை­யின்­ப­டியே ஊட­கங்­க­ளான பத்­தி­ரி­கை­க­ளின் குரல்­கள் ஒலித்­தன. தமிழ்­நாட்­டில் பிழைப்பு நடத்­திய ஆரிய ஏடு­கள் ஆங்­கி­லத்­தி­லும் 
தமி­ழி­லும் தி.மு.க.வுக்கு எதி­ரா­னக் கருத்­து­களை விதைப்­ப­தையே முழு­நே­ரத் தொழி­லா­கக் கொண்­டி­ருந்­தன. அன்­றைய கரப்­பான்பூச்­சி­க­ளின் தலை­வ­ரான நம் பேர­றி­ஞர் அண்ணா, தமிழ்­நாட்­டுப் பத்­தி­ரி­கை­க­ளின் உண்மை முகத்தை தன் சொல்­லா­லும் எழுத்­தா­லும் அம்­ப­லப்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“பத்­தி­ரி­கை­கள் நினைத்­தால் எதை­யும் சாதிக்­க­லாம். திடீ­ரென்று ஒரு­நாள் ‘அண்­ணா­துரை செத்­து­விட்­டான்’ என்று பத்­தி­ரி­கை­யிலே செய்தி போட்­டு­வி­ட­லாம். பிறகு, நான் ஒவ்­வோர் ஊரா­கச் சென்று ‘நான் சாக­வில்லை. இதோ இருக்­கி­றேன்’ என்று காட்ட வேண்­டும். அப்­படி காட்­டிய பிற­கும், பத்­தி­ரி­கை­கள்,, ‘அண்­ணா­துரை செத்­து­விட்­டது உண்­மை­தான். செத்­த­பி­றகு பிசா­சாக மாறி வந்­தி­ருக்­கி­றான் எனப் பேசப்­ப­டு­கி­றது’ என்று எழு­தும். இந்த வித்தை எனக்­குத் தெரி­யா­த­தல்ல. நானும் அந்­தப் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் இனத்­தில் வந்­த­வன்­தான். இந்த முறை,பழைய முறை­யா­கும். எனவே இந்த வித்தைசெய்­வது சுல­பம். வேறு வேலை எனக்கு இருப்­ப­தால் இன்று சிலர் தப்­பிப் பிழைத்­தி­ ருக்­கி­றார்­கள். அவர்­கள் வாழட்­டும்” -என்று ஊட­கத்­தி­னரை அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார் ­</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதே கருத்தை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தந்தை பெரி­யார், “பத்­தி­ரி­கை­கா­ரர்­கள் மனது வைத்­தால் நாட்­டைத் திருத்­த­லாம். மேல்­நி­லைக்­கும் கொண்டு வர­லாம். ஆனால், இந்த நாட்­டுப் பத்­தி­ரி­கை­கள் எல்­லாம் வயிற்­றுப் பிழைப்­புக்­கா­கப் பிற­ரால்நடத்­தப்­ப­டு­கி­றது” என்று சொன்­ன­து­டன், தனதுஇயக்­கத்­தின் கருத்­தைப் பரப்­பு­வ­தற்­காக குடி­அ­ரசு இத­ழைத் தொடங்­கி­னார். பேர­றி­ஞர் அண்ணா, ‘திரா­விட நாடு’ பத்­தி­ரி­கையை நடத்­தி­னார். அவர்­கள் வழி­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் முர­சொ­லி­யாக முழங்­கி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1991ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லின்­போது தி.மு.கழ­கம் வெளி­யிட்ட தேர்­தல் அறிக்கை குறித்து, தின­மணி நாளேடு எழு­திய தலை­யங்­கத்­தின் தலைப்பு, “சிரிப்­பதா? அழு­வதா?’’ என்­ப­தா­கும். கலை­ஞர் தனது தலை­மை­யில் கட்­டிக்­காத்த தி.மு.க.வையும் ஜெய­ல­லிதா அவர்­க­ளின் அ.தி.மு.க.வையும் ஒரே மாதி­ரி­யான இயக்­கங்­கள் போல சித்­த­ரித்த தின­ம­ணி­யின் எள்­ளல் மிகுந்த தலை­யங்­கத்­திற்கு எதி­ராக கலை­ஞ­ரின் முர­சொலி சீறி எழுந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முர­சொ­லி­யில் 29-4-1991 அன்று கலை­ஞர் எழு­தி­னார், “தின­ம­ணி­யார் ஏள­ன­மும் ஏக­டி­ய­மும் புரி­வது போல இது எளி­யோர் இயக்­க­மா­கக்­கூட இருக்­க­லாம். நாம் எலி­க­ளா­கக் கூட இருக்­கட்­டுமே? எலி­கள் இயக்­கத்­திற்கு இங்கே ஒரு எலி­தானே தலைமை. அங்கே பூனை­யின் தலை­மை­யில் அல்­லவா எலி­க­ளின் இயக்­கம் இருக்­கி­றது”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிர­பல ஏடு­கள் எப்­ப­டி­யெல்­லாம் தி.மு.க. வுக்கு எதி­ரான வேலை­க­ளைச் செய்­கின்­றன என்­ப­தை­யும், மண்­டல் கமி­ஷன் அறிக்­கை­யின்­படி, இதர பிற்­ப­டுத்­தப்­பட்­டோ ­ருக்­கான 27% இட­ஒ­துக்­கீட்டை நடை­மு­றைப்­ப­டுத்த தி.மு.க. எடுத்த முயற்­சி­க­ளால் ஆரிய ஏடு­கள் எப்­ப­டி­யெல்­லாம் செய்­தி­க­ளைத் திரித்து வெளி­யிட்டு, தி.மு.க.வுக்கு எதி­ரா­கச் செயல்­ப­டு­கின்­றன என்­ப­தை­யும் ‘முர­சொ­லி’­­யில் கலை­ஞர் விளக்­கி­யி­ருந்­தார். நம் கழ­கத் தலை­வர் -– திரா­விட நாய­கர் அவர்­கள் ஆட்­சிக்­கா­லத்­தி­லும், ‘மற்­ற­வர்­க­ளுக்­குக் கிடைக்­கும் ஊடக சொகுசு தி.மு.க.வுக்கு ஒரு­போ­தும் கிடை­யாது” என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­ 
யி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய அள­வில் ஊடக சொகுசு பா.ஜ.க அர­சுக்கு இருக்­கி­றது. மக்­க­ளுக்­கான இயக்­கங்­க­ளுக்கு அந்த சொகுசு கிடை­யாது. இதை கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­னர் வெளிப்­ப­டை­யான விமர்­ச­னங்­க­ளால் ஊட­கத்­தி­ன­ருக்கு உணர்த்­தி­யி­ருக்­கின்­ற­னர். பிர­பல ஊட­கங்­க­ளின் தயவை நாடா­மல், சமூக வலை­தள ஊட­கங்­களை முன்­னெ­டுத்து, போராட்­டக் களத்தை ஒருங்­கி­ணைத்து, தங்­கள் கோரிக்­கை­யில் வெற்றி பெற்­றுள்­ள­னர். நீட் தேர்வு அறவே ஒழிக்­கப்­ப­டும்­போ­து­தான் முழு­மை­யான நன்மை கிடைக்­கும் என்­பதை இளை­ய­த­லை­முறை உணர்ந்து கொள்­ளும் காலம் விரை­வில் வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஊடக சொகுசு இல்­லாத திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கருத்­து­களை மக்­க­ளி­டம் கொண்டு சேர்ப்­ப­தற்கு அன்­றைய கரப்­பான்­பூச்­சி­க­ளான நம் இயக்க முன்­னோ­டி­கள் பல­ரும் சொந்த செல­வில் ஆளுக்­கொரு பத்­தி­ரிகை நடத்தி அவற்றை தமிழ்­நா­டெங்­கும் கொண்டு சேர்த்­த­னர். இன்­றைய தக­வல் தொழில்­நுட்ப வளர்ச்­சி­யில் கழ­கத்­தின் இளை­ய­த­லை­முறை கையி­லெ­டுக்க வேண்­டிய கருத்­தா­யு­தம் சமூக வலை­த­ளங்­கள்­தான். இன்ஸ்­டா­கி­ராம், ஷேர்­சாட், யூ-டி­யூப், எக்ஸ், ஃபேஸ்­புக் உள்­ளிட்ட அனைத்து தளங்­க­ளி­லும் ஒவ்­வொ­ரு­வ­ரும் கள­மாட வேண்­டிய அவ­சி­யத்தை காலம் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க.வின் இளம் தலை­முறை அதை உணர்ந்­தி­ருப்­பதை அவர்­க­ளின் செயல்­களின் மூல­மா­கக் காண முடி­கி­றது. நம்­பிக்கை மலர்­கள் பூத்­துக் குலுங்­கு­கின்­றன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>