<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,611,493,1500" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 29 2026 03:44:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260729T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="29072026-MDU-06" position.sequence="06" ex-ref="29072026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">கன்னியாகுமரி மாவட்டத்தில்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27"> செங்கல் தயாரிப்பின் மூலப்பொருளான மண் கிடைத்திட நடவடிக்கை எடுத்திடுவீர்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="BWKanniyakumar_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குமரி, ஜூலை. 29 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கன்­னி­யா­கு­மரி மாவட்ட ஆட்­சி­யர் மு.பிர­தாப் அவர்­களை கன்­னி­யா­கு­மரி கிழக்கு மாவட்ட செய­லா­ளர் வழக்­க­றி­ஞர் ரெ.மகேஷ் 27.07.2026 அன்று மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் வைத்து நேரில் சந்­தித்து முக்­கிய கோரிக்­கை­களை முன்­வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் ஆரல்­வாய்­மொழி, தோவாளை, ஈசாந்­தி­மங்­க­லம், கடுக்­கரை, கோழிக்­கோட்­டு­பொத்தை, செண்­ப­க­ரா­மன்­பு­தூர், அச்­சன்­கு­ளம் போன்ற ஊர்­க­ளில் சுமார் 500-க்கும் மேற்­பட்ட செங்­கல் சூளை­கள் அமைந்து அப்­ப­குதி மக்­க­ளின் பிர­தான தொழி­லாக உள்­ளது.  இந்த பகு­தி­க­ளில் உற்­பத்தி செய்­யப்­ப­டும் செங்­கல் கன்­னி­யா
­கு­மரி மாவட்­டத்­தில் நடை­பெ­றும் வீடு மற்­றும் வணிக கட்­டட வேலை­க­ளுக்கு முக்­கிய மூலப்­பொ­ரு­ளாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. மேலும் செங்­கல் தயா­ரிப்­ப­தற்கு தேவை­யான மூலப்­பொ­ரு­ளான மண் கிடைக்­கா­மல் பல்­வேறு செங்­கல் சூளை­கள் இயங்­கா­ம­லும் உள்­ளது.  இந்த செங்­கல் சூழை­க­ளா­னது சுமார் 60 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக குடி­சைத் தொழி­லாக இயங்கி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த நிலை­யில் தற்­போது கனி­மம் மற்­றும் சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் செங்­கல் சூளை நடத்­து­வ­தற்கு உரிய அனு­மதி பெற வேண்­டும் என்று கூறி ஆய்வு மேற்­கொண்டு உரி­மம் இல்­லாத செங்­கல் சூளை­களை மூடி சீல் வைக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.  அதி­கா­ரி­கள் எந்­த­வித முன் அறி­விப்­பும், உரி­மம் பெறு­வ­தற்­கான வழி­காட்டு நெறி­மு­றை­க­ளு­டன் போதிய அவ­கா­சம் ஏதும் அளிக்­கா­மல் இச்­செ­ய­லில் ஈடு­பட்டு வரு­வது இத்­தொ­ழி­லில் ஈடு­பட்டு வரும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏழை குடும்­பங்­க ­ளின் வாழ்­வா­தா­ரத்தை நசுக்­கும் செய­லா­கும்.  மேலும் கட்­டு­மான தொழி­லுக்கு தேவை­யான செங்­கல் கிடைப்­ப­தில் தட்­டுப்­பாடு ஏற்­பட்டு கட்­டட கட்­டு­மான பணி­கள் பாதிக்­கும் நிலை­யும் ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எனவே, மாவட்ட ஆட்­சி­யர் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏழை குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை கருத்­தில் கொண்டு இந்த பிரச்­ச­னைக்கு தீர்வு காணும் வகை­யில் செங்­கல் சூளை உரி­மை­யா­ளர்­கள் உரி­மம் பெறு­வ­தற்கு வழி­காட்டி நெறி­மு­றை­க­ளு­டன் கூடிய போதிய அவ­கா­சம் வழங்­கிட வேண்­டும் என்­றும், செங்­கல் தயா­ரிப்­பின் மூலப்­பொ­ரு­ளான மண் கிடைப்­ப­தற்­கும் மாவட்ட நிர்­வா­கத்­தின் சார்­பில் தேவை­யான நட­வ­டிக்கை எடுத்­திட வேண்­டும் என கன்­னி­யா­கு­மரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்­பில் அளிக்­கப்­பட்ட மனு­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேலும், கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் செயல்­ப­டுத்த வேண்­டிய பல்­வேறு முக்­கிய கோரிக்­கை­களை மாவட்­டச் செய­லா­ளர் வழக்­க­றி­ஞர் ரெ.மகேஷ் மாவட்ட ஆட்­சி­ய­ரி­டம் முன்­வைத்­தார்.  அதில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">1. மயி­லாடி பேரூ­ராட்­சிக்­குட்­பட்ட மயி­லாடி பகு­தி­யில் உல­கப் புகழ்­பெற்ற கல் சிற்ப தொழில் நடை­பெற்று வரு­கி­றது.  இங்கு தயா­ரிக்­கப்­ப­டும் கல் சிலை­க­ளுக்கு புவி­சார் குறி­யீடு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.  இத்­தொ­ழி­லில் சுமார் 5000-திற்­கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்­கள் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். கல், சிற்ப வேலை­க­ளுக்கு தேவை­யான கற்­கள் தற்­போது வெளி மாவட்­டங்­க­ளில் இருந்து பெறப்­ப­டு­வ­தால், அதிக செல­வி­னம் மற்­றும் கால­தா­ம­தம் ஏற்­ப­டு­கி­றது.  எனவே, இதனை தவிர்க்­கும் வகை­யில் அதை கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தி­லேயே சிற்ப தொழி­லுக்கு தேவை­யான கற்­கள் “மயி­லாடி கல்­சிற்­பம் மற்­றும் கோவில் கட்­டு­மான தொழி­லா­ளர் நலச்­சங்­கம்” மூல­மாக பெறு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.  மேலும், இப்­ப­கு­தி­யில் அடிக்­கடி ஊருக்­குள் புகும் வன­வி­லங்­கு­களை தடுக்க வனத்­துறை சார்­பில் தடுப்பு வேலி அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2.கோவ­ளம் சன்­செட் பாயிண்ட் கடற்­க­ரைப் பகு­தி­யில் தோட்­டக்­க­லைத் துறை சார்­பில் பூங்கா அமைக்க முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.  இப்­ப­கு­தியை மீன­வர்­கள் வலை­களை உலர்த்­த­வும், மீன்­பிடி சார்ந்த பணி­க­ளுக்­கும் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.  மேலும் இந்த இடத்­தில் தான் மீனவ மக்­கள் வழி­ப­டும் சிலுவை பாதை புனித ஸ்தலம் மற்­றும் புனித தெரேசா குடி­ச­டி­யும் அமைந்­துள்­ளது.  எனவே, மீனவ மக்­க­ளின் நல­னை­யும் வாழ்­வா­தா­ரத்­தை­யும் கருத்­தில் கொண்டு அங்கு பூங்கா அமைக்­கும் திட்­டத்தை கைவிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">3. கோவ­ளம் ஊராட்சி டி.சி நக­ரில் புதிய நியா­ய­வி­லைக் கடை அமைக்­க­வும், ரேன்­சம் டவுன் பகு­தி­யில்உள்ள பகுதி நேர நியா­ய­வி­லைக் கடை­யினை முழு­நேர நியா­ய ­வி­லைக் கடை­யாக மாற்ற நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">4.மகா­ரா­ஜ­பு­ரம் ஊராட்­சி­யில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள ஊராட்சி மன்ற அலு­வ­ல­கத்தை உடனே திறந்து செயல்­பாட்­டிற்கு கொண்டு வர வேண்டி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">5.ஞாலம் மற்­றும் சகாய நகர் ஊராட்சி நைனார் பொத்தை பகு­தி­யில் ஆற்று பாலம் அமைக்­க­வும், கல்­லறை தோட்­டம் செல்­வ­தற்­கான சாலை வசதி ஏற்­ப­டுத்­த­வும், விவ­சா­யி­க­ளின் கோரிக்­கை­யான பள்ளி கொண்­டான் கால்­வா­யினை உடனே தூர்­வார வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">6.செண்­ப­க­ரா­மன்­பு­தூர் ஊராட்சி ஆதிச்­சன்­பு­தூர் பகு­தி­யில் இயங்கி வரும் சதீஷ் நவீன அரிசி ஆலை­யி­லி­ருந்து வெளி­யே­ரும் தூசி­யால் அப்­ப­குதி மக்­கள் குறிப்­பாக குழந்­தை­கள் மற்­றும் வய­தான முதி­யோர்­க­ளுக்கு ஆஸ்­துமா உள்­ளிட்ட உடல் நலப்­பி­ரச்­ச­னை­கள் ஏற்­ப­டு­வ­தாக பொது­மக்­கள் புகார் அளித்­த­னர்.  இதற்கு தேவை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">7. பறக்கை ஊராட்சி பகு­தி­யில் வீடு­க­ளி­லும் பொது இடங்­க­ளி­லும் முறை­யாக குப்பை சேக­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை இத­னால் சுகா­தார சீர்­கேடு ஏற்­ப­டும் அவல நிலை உள்­ளது.  எனவே, இதற்கு தேவை­யான நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">8. நாகர்­கோ­வில் மாந­க­ராட்சி, 45 மற்­றும் 33 வது வார்­டுக்­குட்­பட்ட மேல­சூ­ரங்­குடி பகு­தி­யில் சுமார் 500 குடும்ப அட்­டை­தா­ரர்­கள் மாதத்­தில் ஒரு நாள் மட்­டுமே இயங்­கும் நட­மா­டும் நியா­ய­வி­லைக் கடை மூல­மா­க­வும், 1 கி.மீ. தொலை­வில் உள்ள குரு­சடி மற்­றும் கார்த்­தி­கை­வ­டலிபகு­தி­யில் அமைந்­துள்ள நியா­ய­வி­லைக் கடைக்கு சென்று பொருட்­களை வாங்­கு­கின்­ற­னர்.  எனவே, இப்­ப­கு­தி­யில் உள்ள பொது­மக்­க­ளின் சிர­மங்­களை தவிர்க்­கும் பொருட்டு மேல சூரங்­குடி பகு­தி­யில் ஒரு பகுதி நேர நியா­ய­வி­லைக் கடை அமைத்­திட கேட்­டுக் கொள்­கி­றேன்.  இந்த நியா­ய­வி­லைக் கடைக்கு தேவை­யான மின்­சா­ரம் மற்­றும் கழி­வறை வச­தி­க­ளு­டன் கூடிய கட்­டி­ட­மும் ஊர் சார்­பில் அமைத்து தரு­வ­தற்கு தயா­ராக உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நிகழ்­வில் கன்­னி­யா­கு­மரி கிழக்கு மாவட்ட தி.மு.க பொரு­ளா­ளர் ஐ.கேட்­சன், அகஸ்­தீஸ்­வ­ரம் வடக்கு ஒன்­றிய செய­லா­ளர் எம்.மதி­ய­ழ­கன், நாகர்­கோ­வில் மாந­கர வடக்கு மண்­டல தலை­வர் இ.ஜவ­கர், தெற்கு பகுதி செய­லா­ளர் த.ஜீவா, மயி­லாடி பேரூர் செய­லா­ளர் சுதா­கர், முன்­னாள் ஊராட்சி மன்ற தலை­வர்­கள் கல்­யா­ண­சுந்­த­ரம், சதிஷ் 
மற்­றும் செங்­கல் சூளை தொழிலா­ளர்­கள் உட்­பட பலர் இருந்­த­னர்.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>