<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,957,600" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 28 2026 22:59:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260729T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="29072026-VLR-06" position.sequence="06" ex-ref="29072026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">த.வெ.க. பாசிச கோமா­ளிக் கூட்­டத்­திற்கு</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">எங்­கள் தலை­வர்­க­ளைப் பற்­றிப் பேச தகு­தியோ அரு­க­தையோ இல்லை! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">அமைச்­சர் நிர்­மல்­கு­மா­ரின் தரம் தாழ்ந்த பேச்­சுக்கு – கழக செய்­தித் தொடர்புக்குழு துணைச் செய­லா­ளர் சூர்யா கிருஷ்­ண­மூர்த்தி பதி­லடி! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="SooryaKrishnam_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூலை 29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அமைச்­சர் நிர்­மல் குமா­ரின் தரம் தாழ்ந்த பேச்­சிற்கு கழக செய்­தித் தொடர்புக் குழுத் துணைச் செய­லா­ளர்  சூர்யா கிருஷ்­ண ­மூர்த்தி பதி­லடி கொடுத்­துள்­ளார். வதந்தி பரப்­பு­வ­தும், கட்சி மாறு­வ­தும் தான் அமைச்­சர் நிர்­மல் குமா­ரின் தகுதி என்­றும் – த.வெ.க. பாசிச கோமா­ளிக் கூட்­டத்­திற்கு எங்­கள் தலை­வர்­க­ளைப் பற்றி பேசத் தகு­தியோ 
அரு­க­தையோ இல்லை என்­றும் அவர், தனது பேட்­டி­யில் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் அவர் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அமைச்­சர் நிர்­மல் குமார் எங்­க­ளு­டைய தலை­வர்­கள் குறித்து வாய்க்கு வந்­ததை எல்­லாம் தரந்­தாழ்ந்து பேசி இருக்­கி­றார். தமிழ்­நாடு சட்­ட­மன்ற உறுப்­பி­னர், இந்த அர­சி­னு­டைய அமைச்­சர் என்­கிற தகு­தி­யெல்­லாம் மறந்து, ஃபேக் நியூஸ் பரப்­பக்­கூ­டிய, வதந்தி பரப்­பக்­கூ­டிய அந்த நிலை­யி­லி­ருந்து எங்­க­ளு­டைய தலை­வர்­கள் குறித்து அவர் பேசி­யி­ருக்­கி­றார். அவ­ரு­டைய தலை­வர் எப்­படி அநா­க­ரி­க­மாக பேசு­வாரோ, அதே பாணி­யில், அதே வகை­யில், அதே வளர்ப்­பின் அடிப்­ப­டை­யில் அவர் பேசி­யி­ருக்­கி­றார். ஆனால் எங்­கள் தலை­வர்­கள் எங்­களை அப்­படி வளர்க்­க­வில்லை. அதே சம­யம் திமுக தலை­வர்­கள் குறித்து தொடர்ந்து இது­போல அவர் பேசி வரு­வதுவன்­மை­யாக கண்­டிக்­கத்­தக்­கது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தகுதி இருக்கா என்று எங்­கள் தலை­வர்­கள் குறித்து கேட்­டி­ருக்­கி­றார். எது தகுதி? ஒரு டெக் ஸ்­டைல் கடைக்கு போனீங்­கன்னா அங்க இருக்­கக்­கூ­டிய கட்சி வேட்­டி­யெல்­லாம் எண்­ணீங்­கன்னா, அதை­விட அதி­க­மான எண்­ணிக்­கை­ யில் பல கட்­சி­க­ளு­டைய கட்சி வேட்­டியை வீட்டு அல­மா­ரி­யில் வச்­சி­ருக்­கக்­கூ­டிய சி.டி.ஆர். நிர்­மல் குமா­ருக்கு இருப்­ப­துக்கு பேர்­தான் தகு­தியா? அவர் பரப்­பின வதந்­தி­கள் எத்­தனை என ஒரு சென்­செக்ஸ் எடுக்­க­லாம். அவர் போயிட்டு வந்த கட்சி எத்­தனைஅப்­ப­டிங்­கி­றதை கையால எண்ண முடி­யாது, அந்த அள­விற்கு வதந்தி பரப்­பு­வ­தை­யும் கட்சி மாறு­வ­தை­யும் மட்­டுமே தொழி­லாக வைத்­தி­ருக்­கக்­கூ­டியசி.டி.ஆர். நிர்­மல் குமா­ருக்கு இருக்­க­ற­துக்கு பேர்­தான் தகு­தியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஆயி­ரக்கணக்­கில்  கரண்ட் பில்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவ­ரு­டைய கட்­டுப்­பாட்­டில் இரண்டு துறை இருக்­கி­றது. ஒன்று மின்­சா­ரத் துறை, இன்­னொன்று சட்­டத்­துறை. மின்­சா­ரத் துறை­யில் தின­சரி மின்­வெட்டு என்று தமிழ்­நாடு முழுக்க போராட்­டங்­கள் நடக்­காத நாளே இல்லை என்­கிற அள­விற்கு இர­வில் மக்­கள் வீதி­யில் வந்து “எங்­க­ளுக்கு கரண்ட் கொடுங்க” என்று நடு­ரோட்­டில் நின்று கத­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஒரு அம்மா, “நான் குடிசை வீட்­டில் இருக்­கேன், வீட்­டில் பிரிட்ஜ் கிடை­யாது, ஏசி கிடை­யாது, ஒன்­னும் கிடை­யாது, ஆயி­ரக்­க­ணக்­கில் கரண்ட் பில் வந்­தி­ருக்கு” என்று ஈபி ஆபீஸ் வாச­லில் நின்று கத­று­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு ஒரு அம்மா, “என்­னு­டைய வேலையே கம்ப்­யூட்­ட­ரை­யும் கரண்­டை­யும் நம்­பி­தான் இருக்கு. ஈபி பிரச்­ச­னை ­யி­னால என் வேலை போயி­டும் போல இருக்கு, நான் கரண்­டுக்­காக பிச்சை எடுக்­கி­றேன். என்ன வேலைக்­கா­க­வும் சோத்­துக்­கா­க­வும் பிச்சை எடுக்க விட்­டுறா­ தீங்க” என்று கத­றக்­கூ­டிய காட்சி பார்க்­கி­றோம்.தமிழ்­நாடு முழுக்க மின்­வெட்­டால் மக்­கள் அவ­திப்­ப­டு­கி­றார்­கள். மின்­சா­ரக் கட்­ட­ணத்­தின் விலை உயர்வு நெஞ்­சில் கை வச்­சுட்டு உட்­கா­ரும் அள­வுக்கு ஷாக் அடிக்­கக் கூ­டிய அள­விற்கு உயர்ந்­தி­ருக்­கி­றது. அறி­விக்­கப்­ப­டாத கட்­டண உயர்­வாக அது இருக்­கி­றது. இது குறித்­தெல்­லாம் எந்த பதி­லும் இல்­லாத, எந்த அக்­க­றை­யும் இல்­லாத, எந்த அறி­வும் இல்­லாத சி.டி.ஆர். நிர்­மல் குமார் அவர்­கள் எங்­கள் தலை­வர்­க­ளு­டைய தகுதி குறித்து கேள்வி எழுப்­பு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவ­ரு­டைய இன்­னொரு துறை சட்­டத்­துறை. அதில் என்ன நடக்­கி­றது என்­றால், இன்­றைக்கு காலை­யில் எல்­லா­ரும் பார்த்­தி­ருப்­பீர்­கள் – ­ஒரு ஆடியோ வைரல் ஆயிற்று. அரசு வழக்­க­றி­ஞர் பத­விக்கு மற்­ற­வர்­க­ளுக்கு 15 லட்­சம், உனக்கு 12 லட்­சம் ரூபாய் என்று ஏதோ ஆடி ஆஃபர் கொடுப்­பது மாதிரி அரசு வழக்­க­றி­ஞர் பத­வியை ஆஃப­ரில் விற்­பது போல் விற்­றுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கோமா­ளித்­த­ன­மான பேச்சு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளு­டைய துறை­யில் நடக்­கக்­கூ­டிய இவ்­வ­ளவு பெரிய ஊழல் குறித்து இது­வ­ரைக்­கும் சி.டி.ஆர். நிர்­மல் குமார் வாய் திறந்­தி­ருப்­பாரா? இது குறித்து கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு எந்த நட­வ­டிக்­கை­யா­வது எடுத்­தி­ருப்­பாரா? இதை­யெல்­லாம் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அவர் எங்­க­ளு­டைய தலை­வர்­க­ளின் தகுதி பற்றி பேசு­வது எவ்­வ­ளவு நகைச்­சுவை. அது ஒரு கோமா­ளித்­த­ன­மான பேச்­சா­கத்­தான் பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னொரு பக்­கம், பாலி­யல் புகார் கொடுக்­கப்­பட்ட ஒரு பெண் தவெக எம்.எல்.ஏ “என்னை மிரட்­டு­கி­றார்” என்று குற்­றச் சாட்டு வைக்­கி­றார். அந்த எம்.எல்.ஏவுக்கு துப்­பாக்கி ஏந்­திய போலீஸ் பாது­காப்பு கொடுக்­கி­றது இந்த அரசு. ஒரு மந்­திரி ஸ்டேடி­யத்­துக்­குள் உட்­கார்ந்து கொண்டு மாத்­திரை நுணுக்கு­ கிறார். அவர் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுப்­ப­தில்லை. இன்­றைக்கு ஒரு அமைச்­ச­ரின் ஆடியோ ரிலீஸ் ஆகி­யி­ருப்­ப­தாக தக­வல் வரு­கி­றது. அதில் “கொன்னு வெளியே எடுத்­து­ரு­வேன்”, “என் பார்­டரை தாண்­டாதே” என்­றெல்­லாம் டய­லாக் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதெல்­லாம் ஒரு பக்­கம் நடந்து கொண்­டி­ருக்­கும் போது, ஊர் எக்­கேடு கெட்­டால் என்ன, என்­னு­டைய படை பரி­வா­ரங்­கள் எவ்­வ­ளவு அயோக்­கி­யத்­த­னங்­களை பண்­ணி­னால் என்ன, எனக்கு பத்­தா­வது மாடி­யில் ஃபுல் சி வியூ­வோட ஆபீஸ் இருந்­தால் போதும் என்று சொகுசை என்­ஜாய் பண்­ணக்­கூ­டிய அந்த தன்­மைக்கு பெயர் கோமா­ளித்­த­னமா இல்­லையா? என்று மக்­கள் கேட்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு இந்­திய நாடு முழுக்க நீட் தேர்­வுக்கு எதி­ராக, பாஜ­க­வுக்கு எதி­ராக மக்­கள் போராடி வரு­கி­றார்­கள். மாண­வர்­கள் ரோட்­டில் வந்து உட்­கார்ந்­தி­ருக்­கி­றார்­கள். மாண­வர் சமு­தா­யம் ஒன்று திரண்டு ஒரு மந்­தி­ரி­யையே பத­வி­யி­லி­ருந்து இறக்­கி­யி­ருக்­கி­றது. அது குறித்துவாயே திறக்­காத ஒரு­வர் இருக்­கி­றார் என்­றால், அவர் இந்த தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கோவைக்­கும் மது­ரைக்­கும் மெட்ரோ கிடை­யாது என்று இரண்­டா­வது முறை­யாக ரிஜெக்ட் பண்­ணி­யி­ருக்­கி­றார்­கள். அதை எதிர்த்து இப்­போது வரை முத­ல­மைச்­சர் வாயே திறக்­க­வில்லை. நிதி­யாண்­டின் முதல் குவாட்­ட­ரில் போன ஆண்டை விட இந்த ஆண்டு ஒன்­றிய அர­சாங்­கத்­தின் நிதி 2,500 கோடி ரூபாய் குறைந் 
­தி­ருப்­ப­தாக செய்தி வரு­கி­றது. அதை எதிர்த்து கேள்வி கேட்­ப­தற்கு இந்த முத­ல­ மைச்­ச­ருக்கு திராணி கிடை­யாது. தமிழ்த்­தாய் வாழ்த்தை மூன்­றா­வ­ தா­கத்­தான் பாடு­வோம் என்று தமிழ்­நாட்­டில்இருக்­கக்­கூ­டிய ஒரு பல்­க­லைக் க­ழ­கத்­தின் துணை­வேந்­தர் பப்­ளிக்­காக செய்தி கொடுக்­கி­றார். அந்த துணை­வேந்­தரை கண்­டிப்
­­ப­தற்கு வக்கு கிடை­யாது. முடிஞ்சா பா.ஜ­.க­.வைக் கண்­டிக்­கி­றேன், பாஜ­கவை எதிர்க்­கி­றேன் என்று உங்க தலை­வர் ஒரே ஒரு வார்த்தை பேசச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தலை­மைச் செய­ல­கத்­தில் முத­ல­மைச்­சர் ஆபீ­ஸுக்கு புகார் கொடுக்க வரு­ப­வர்­கள் தீக் குளிக்க முயல்­கி­றார்­கள். இந்த லட்­ச­ணத்­தில்­தான் ஆட்சி இருக்­கி­றது. நாக­ரீ­கம் இல்­லா­மல் பேசு­வதை முத­லில் நிறுத்­தி­னீர்­கள் என்­றால் நல்­லது. நிறுத்த­ வில்லை என்­றால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அதை எப்­படி எதிர்­கொள்­ளுமோ அப்­படி எதிர்­கொள்­ளும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">களத்­தில் நின்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">போரா­டியதி.மு.க.!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அமைச்­சர் நிர்­மல் குமார் அவ­ருக்கு அந்த கட்­சி­யில் எந்த மதிப்­பும் இல்லை, மரி­யா­தை­யும் இல்லை. மது­ரை­யைச் சேர்ந்த அமைச்­சர் அவர்; ஒரு நிகழ்ச்­சிக்கு போகி­றார், மது­ரை­யைச் சேர்ந்த எம்.எல்.ஏக்­கள் அந்த நிகழ்ச்­சிக்கு வர­வில்லை என்று ஸ்டேஜை விட்டு இறங்கி ஓடு­கி­றார். அவ்­வ­ளவு தான் அவ­ருக்கு அக்­கட்­சிக்­குள் மரி­யாதை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒட்­டு­மொத்த ‘Gen Z’ எங்­க­ளுக்­குத்­தான் ஓட்டு போட்­டார்­கள் என்று அவர் கிரி­யேட் பண்ணி வைத்­தி­ருந்த அந்த நரேட்­டி­வுக்கு எதி­ராக, ‘Gen Z’ என்ற பெய­ரில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் பக்­கம் பெரு­ம­ளவு இளை­ஞர்­கள் வரு­கி­றார்­கள் என்­பதை பொறுத்­துக் கொள்ள முடி­யா­மல் பேசு­கி­றார். நீட் எதிர்ப்பு போராட்­டத்தை ‘Gen Z’ மூலம் ஹைஜாக் பண்ண அட்­டெம்ப்ட் பண்­றாங்க என்­கி­றார்­கள். அந்த போராட்­டத்தை திமுக, நாம் தமி­ழர் என அனைத்து கட்­சி­க­ளும் போய் ஆத­ரித்­தன. உங்­களை எது தடுத்­தது? பாஜக கோவிச்­சுக்­கும் என்­கிற பயம்­தான் உங்­க­ளைத் தடுத்­தது. மது­ரை­யில் காலேஜ் கிளாஸ்­ரூ­மில் உட்­கார்ந்­தி­ருந்த ஒரு ஸ்டூடண்டை தடுப்­புக் காவ­லில் வைத்­தீர்­கள். தமிழ்­நாட்­டின் வர­லாற்­றி­லேயே இதெல்­லாம் நடந்­ததே இல்­லையே! நீட்­டுக்­காக என்ன பண்­ணி­ னோம்? ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை கொடுத்­தது தி.மு.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் இரண்டு முறை தீர்­மா­னம் நிறை­வேற்றி அனுப்­பி­னோம். நீதி­மன்­றத்­தில் வழக்கு நடத்­தி­னோம், நாடா­ளு­மன்­றத்­தில் பேசி­னோம். கட்சி ரீதி­யா­க­வும் தமிழ்­நாடு முழுக்க போராட்­டங்­கள், ஆர்ப்­பாட்­டங்­கள், உண்­ணா­வி­ர­தங்­கள் நடத்­தி­னோம். ஆனால் தவெக என்ன செய்­தது.? எல்­லாம் முடிந்த பிறகு ஒன்­றிய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் ராஜி­னாமா செய்த பிறகு மாண­வர்­களை சந்­திக்க அமைச்­சர் ராஜ் மோகன் செல்­கி­றார். பாஜக என்ற வார்த்­தையை கூட உச்­ச­ரிக்க பயம். அன்று நீங்­கள் வரு­மான வரி வழக்கை எப்­படி எதிர்­கொள்­ள­லாம் என யோசித்து கொண்­டி­ருந்த போது நீட் தேர்­விற்கு எதி­ராக களத்­தில் நின்று போரா­டி­ யது திமுக. அமைச்­சர் பதவி போனா­லும் பர­வா­யில்லை என உண்­ணா­ வி­ரத போராட்­டத்­தில் காலந்­து­கொண்­ட­வர் எங்­கள் இளம் தலை­வர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீட் தேர்­விற்கு எதி­ராக திமுக தான் சட்­ட­மன்­றத்­தி­லும், நாடா­ளு­மன்­றத்­தி­லும், ரோட்­டி­லும் போரா­டி­யது. ஆனால் இவர்­கள் என்ன சொல்­கி­றார்­கள் நாளை ஒரு வாய்ப்பு வரு­மா­னால் நீட் விலக்கு பெறு­வோம் என்­கி­றார், அப்­படி என்­றால் வாய்ப்பை இவர்­கள் உரு­வாக்க வக்­கில்லை. அது­வாக நடந்­தால் அதன் மீது ஸ்டிக்­கர் ஒட்டி கிரெ­டிட்டை திருடி கொள்­வார்­கள் அவ்­வ­ளவு தான். கல்வி அமைச்­சர் ராஜ் மோகன் கூறு­கி­றார் 
­கல்­வியை ஒத்­தி­சை­வுப் பட்­டி­ய­லுக்­கா­க­வது மாற்­று­வோம் என்­கி­றார். ஏற்­க­னவே கல்­வி­யா­னது ஒத்­தி­சை­வுப் பட்­டி­ய­லில் தான் உள்­ளது. இந்த மாதி­ரி­யான கேலிக்­கூத்தை எல்­லாம் செய்­யும் த.வெ.க. பாசிச கோமா­ளிக் கூட்­டத்­திற்கு எங்­கள் தலை­வர்­க­ளைப் பற்­றிப் பேச தகு­தியோ அரு­க­தையோ இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்­டி­யின்­போது குறிப்­பிட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>