<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="617,330,958,1179" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 30 2026 05:39:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260730T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="30072026-VLR-04" position.sequence="04" ex-ref="30072026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">சென்னையில்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">அமைச்சரை முற்றுகையிட்ட மீனவப் பெண்கள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கடும் வாக்குவாதம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சென்னை, ஜூலை.30–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">மெரினா லூப் சாலை­யில் உள்ள மீன் அங்­கா­டி­யால் எந்த பய­னும் இல்லை என கூறி உண்­ணா­வி­ரத போராட்­டத்­தில் ஈடு­பட்ட மீனவ பெண்­கள், அமைச்­சர் வெங்­க­ட­ர­ம­ண­னு­டன் கடும் வாக்­கு­வா­தம் செய்­த­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. சென்னை மெரினா கடற்­க­ரை­யை­யொட்­டிய நொச்­சிக்­குப்­பம் லூப் சாலை­யில், முதல்­வர் விஜய்­யின் கவ­னத்தை ஈர்க்­கும் வகை­யில் கங்கா பவானி அம்­மன் கோயில் அருகே மீன­வர்­கள், மீன் வியா­பா­ரி­கள், பெண்­கள், இளை­ஞர்­கள் மற்­றும் பல்­வேறு மீனவ அமைப்­பு­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் என பலர் உண்­ணா­வி­ரத போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இதில், பல தலை­மு­றை­க­ளாக கடலை நம்பி வாழ்ந்து கொண்­டி­ருக்­கும் மீனவ மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை பாதிக்­கும் வகை­யில் எந்­த­வி­த­மான திட்­டங்­க­ளை­யும் தமிழ்­நாடு அரசு செயல்­ப­டுத்­தக்­கூ­டாது என்று மீன­வர்­கள் கோரிக்கை விடுத் 
துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">மேலும், மாந­க­ராட்சி சார்­பில் கடந்த ஆண்டு பிர­மாண்­ட­மாக மீன் அங்­காடி கட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டது. 2 ஏக்­கர் பரப்­ப­ள­வி­லான அந்த இடத்­தில் 50,000 சதுர அடி­யில் 360 கடை­கள் கட்­டப்­பட்­டுள்­ளன. பொது­மக்­கள் வாக­னங்­களை நிறுத்­து­வ­தற்கு தனி இட­மும் ஏற்­ப­டுத்தி கொடுக்­கப்­பட்டு உள்­ளது. மீன்­களை வெட்­டு­வ­தற்கு தனி இடம் மற்­றும் குடி­நீர், கழிப்­பிட வசதி, கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் ஆகி­ய­வை­யும் ஏற்­ப­டுத்தி கொடுக்­கப்­பட்­டுள்­ளன. மெரினா லூப் சாலை­யில் அமைக்­கப்­ப­டுள்ள இந்த மீன் அங்­கா­டி­யால் தங்­க­ளது வியா­பா­ரம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும், அத­னால் எந்த பய­னும் இல்லை என்­றும் மீன­வர்­கள் தற்­போது தெரி­வித்­துள்­ள­னர். மீன் அங்­காடி எங்­க­ளுக்கு வேண்­டாம் என்­றும் நாங்­கள் கடற்­கரை மணற்­ப­ரப்­பி­லேயே மீன் கடை­களை வைக்க அனு­ம­திக்க வேண்­டும் என்­றும் அவர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">நவீன மீன் அங்­கா­டி­யில் விற்­பனை போதிய அள­வில் நடப்­ப­தில்லை. அத­னால் நாங்­கள் சாலை­யோ­ரம் கடை­கள் அமைத்து மீன் வியா­பா­ரம் செய்ய அனு­ம­திக்க வேண்­டும் என்­பதே மீன­வர்­க­ளின் கோரிக்­கை­யாக உள்­ளது. இதை வலி­யு­றுத்தி நேற்று மீன்­வர்­கள் உண்­ணா­வி­ரத போராட்­டத்­தில் ஈடுப்­பட்­ட­னர். மேலும், மீன் அங்­கா­டியை இடித்து விட்டு அங்கு திரு­மண மண்­ட­பம் கட்­டித்­தர வேண்­டும் என்­றும் அவர்­கள் கோரிக்கை விடுத்து போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். மேலும் முறை­யான ஆவ­ணங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டால் குலுக்­கல் முறை­யில் மீன­வர்­க­ளுக்கு மீன் அங்­கா­டி­யில் கடை­கள் ஒதுக்­கப்­ப­டும் என மீன­வ­ளத்­துறை சார்­பில் கணக்­கெ­டுப்பு பட்­டி­யல் எடுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இந்­நி­லை­யில் போராட்­டம் தீவி­ர­மா­கிக் கொண்­டி­ருந்த நேரத்­தில், யாரும் எதிர்­பா­ரா­த­வி­த­மாக உண­வுப்­பொ­ருள் வழங்­கல் துறை அமைச்­ச­ரும், மயி­லாப்­பூர் தொகுதி எம்­எல்­ஏ­வு­மான வெங்­க­ட­ர­ம­ணன் போராட்ட களத்­திற்கு நேரில் வந்­தார். அவ­ரு­டன் திரு­வொற்­றி­யூர் எம்­எல்ஏ செந்­தில்­கு­மார் உட­னி­ருந்­தார். அப்­போது போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்த மீன­வப் பெண்­கள் அமைச்­ச­ரி­ டம் கோரிக்கை மனுவை அளித்­த­னர். மேலும் அங்கு சமு­தாய கூடம் அமைத்து தர­வேண்­டும் என மீன­வர்­கள் கோரிக்கை விடுத்­த­னர். இதற்கு பதி­ல­ளித்த அமைச்­சர், ‘அப்­படி எல்­லாம் செய்து தர முடி­யாது,’ என கூறி­னார். அமைச்­ச­ரின் இந்த பதி­லால் அதி­ருப்­தி­ய­டைந்த மீன­வப் பெண்­கள், அமைச்­ச­ரி­டம் தொடர்ந்து கேள்வி எழுப்­பி­னர். இத­னால், அமைச்­ச­ருக்­கும் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்த மீன­வப் பெண்­க­ளுக்­கும் இடையே கடும் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">ஒரு கட்­டத்­தில் இரு­த­ரப்­பி­ன­ரும் தங்­க­ளது கருத்­து­களை ஆவே­ச­மாக முன்­வைத்­த­தால், போராட்­டக் களத்­தில் பர­ப­ரப்­பான சூழல் நில­வி­யது. நிலைமை மேலும் பதற்­ற­ம­டை­யா­மல் இருக்க, உட­னி­ருந்த காவல்­து­றை­யி­னர் மற்­றும் அதி­கா­ரி­கள் இரு­த­ரப்­பி­ன­ரை­யும் சமா­தா­னப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர். இருப்­பி­னும், மீனவ மக்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்­கும் வரை போராட்­டத்தை தொட­ரப்­போ ­வ­தாக போராட்­டக்­கா­ரர்­கள் தெரி­வித்­த­தால், அப்­ப­கு­தி­யில் தொடர்ந்து பர­ப­ரப்பு நீடித்­தது. பின்­னர் நிரு­பர்­க­ளி­டம் அமைச்­சர் வெங்­க­ட­ர­ம­ணன் கூறி­ய­தா­வது: சமூக நலக்­கூ­டத்தை வேறு இடத்­தில் கட்­டிக்­கொள்­ள­லாம். மீன் அங்­கா­டி­யில் உங்­க­ளுக்கு தேவை­யான அனைத்து அடிப்­படை வச­தி­க­ளும் செய்து தரப்­பட்டு, உங்­க­ளது வரு­வா­யைப் பெருக்­கு­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும், என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சுமார் அரை மணி நேரத்­திற்­கும் மேலாக நீடித்த பேச்­சு­வார்த்­தை­யில் உடன்­பாடு எட்­டப்­ப­டா­த­தால், அமைச்­சர் அங்­கி­ருந்து புறப்­பட்­டுச் சென்­றார். அமைச்­ச­ரு­டன் பேச்­சு­வார்த்தை தோல்­வி­யில் முடிந்­ததை தொடர்ந்து, போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள மீன­வர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் வகை­யில் பாஜ முன்­னாள் மாநில தலை­வர் தமி­ழிசை சவுந்­த­ர­ரா­ஜன், மாநில செய­லா­ளர் சதீஷ்­கு­மார் ஆகி­யோர் நேரில் வந்து மீன­வர்­க­ளைச் சந்­தித்து தங்­க­ளது ஆத­ரவை தெரி­வித்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>