<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,866,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 30 2026 14:40:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260731T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="31072026-TRY-07" position.sequence="07" ex-ref="31072026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டும் போதுமா?</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">‘நீட்’ தேர்வை ஒழிக்கும்வரை திராவிடர் கழகத்தின் போராட்டம் ஓயாது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup810062_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="veeramanibw_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9">சென்னை, ஜூலை 31–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9">ஒன்­றிய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் பதவி வில­கி­னால் மட்­டும் போதுமா? நீட் தேர்வு முற்­றி­லும் ஒழிக்­கப்­ப­ட­வேண்­டாமா? மாண­வர்­கள் போராட்­டத்தை மடை­மாற்­றி­யது நியா­யமா? நீட்டை ஒழிக்­கும்­வரை திரா­வி­டர் கழ­கத்­தின் போராட்­டம் ஓயாது! ஊன்­றிப் படித்து – உண்­மையை  பரப்­புங்­கள்!என்று திரா­வி­டர் கழ­கத் தலை­வர்ஆசி­ரி­யர் கி.வீர­மணி அவர்­கள் விடுத்­துள்ள அறிக்­கை­யில் 
தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இது­கு­றித்து அவ­ரது அறிக்கை வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நீட் தேர்­வில் நடந்­து­வ­ரும் முறை­கே­டு­கள் கார­ண­மா­கக் கொதிப்­ப­டைந்த மாண­வர்­கள் அதற்­கெ­தி­ரா­கப் பல்­வேறு இடங்­க­ளி­லும் போரா­டத் தொடங்­கி­னர். டில்­லி­யி­லும், பல மாநி­லங்­க­ளின் நகர்­பு­றங்­க­ளி­லும் முன்பு எப்­போ­தும் காணாத அள­வுக்கு ‘‘நீட் தேர்வு முறை ஒழிக்­கப்­பட வேண்­டும்’’ என்­ப­தையே இலக்­கா­கக் கொண்டு தொடங்கி, நாளும் பெரி­தாகி வந்­தது – மாண­வர்­க­ளின் நியா­ய­மான போராட்­டம்! இத­னை­ய­டுத்து, ‘கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி’ என்ற அமைப்பு டில்­லி­யில் ஒரு போராட்­டத்தை முன்­னெ­டுத்­தது. அதில் ஏரா­ள­மாக இளை­ஞர்­க­ளும், மாண­வர்­க­ளும் பங்­கெ­டுத்­த­னர்.  அவர்­க­ளுக்கு ஆத­ரவு தந்த அர­சி­யல் கட்­சி­க­ளும், தலை­வர்­க­ளும் (நாடா­ளு­மன்­றத்­தையே நடத்த விட முடி­யாத அள­விற்கு) இப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காணு­வது முக்­கி­யம் என்­பதை வலி­யு­றுத்­தி­யும், நாளும் பெரு­கி­யது. தன்­னெ­ழுச்­சி­யா­கத் திரண்ட மாண­வர், மாண­வி­கள் மீது, தடி­யடி, கண்­ணீர்ப் புகை, பெல்­லட் (சிறு குண்­டு­கள்) வீச்சு போன்­ற­வற்­றால், போராட்­டத்தை ஒடுக்க நினைத்­தது ஒன்­றிய அரசு. ஆனா­லும், போராட்­டம் தொடர்ந்­த­து­டன்,  பல மாண­வர்­க­ளின் ரத்­தம் சிந்­திய கோரக் காட்­சி­க­ளுக்­குக் கண்­ட­னம் தெரி­வித்­தும், மாண­வர்­க­ளது நீட் தேர்வு ஒழிப்­புக்கு ஆத­ரவு தெரி­வித்­தும் நாட­ஙெ்­கும் விரி­வ­டைந்த  அறப் போராட்­டத்­தின் விளை­வாக, ஒன்­றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் தனது பத­வியை விட்டு வில­கி­னார் என்ற நிலை­யில், இதன்­மூ­லம் மாண­வர்­கள் போராட்­டம் வெற்றி பெற்று முழுமை அடைந்து விட்­டது என்று கூறி ஆறு­தல் கொள்­ளவோ அல்­லது மகிழ்ந்­தி­டவோ முடி­யுமா என்­றால், பகுத்­த­றி­வுக் கண்­ணோட்­டத்­தோ­டும், சமூ­க­நீ­திக் கண்­ணோட்­டத்­தோ­டும் இலக்கை மறக்­காது, பொது நிலை­யில் நின்று ஆய்வு செய்­தல் மிக­வும் அவ­சி­யம் – அவ­ச­ரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஒன்­றிய அமைச்­சர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நாளும் வலுத்து வந்த ‘நீட்’ தேர்­வுக்கு எதி­ரான போராட்­டத்­தி­னைக் கைவிட இரண்டு அமைச்­சர்­கள், ஜே.பி.நட்டா, ஜிதேந்­திர சிங் ஆகி­யோர் மாண­வர் குழுவை பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்­துப் பேசி­னர். பேச்­சு­வார்த்­தை­யில் போராட்­டக் குழு­வின் சார்­பில் பங்­கெ­டுத்த கரப்­பான் பூச்சி கட்­சி­யின் பிர­தி­நி­தி­கள் சவு­ரவ் தாஸ், அசு­தோஷ் ரங்கா மற்­றும் இளை­ஞர் பிர­தி­நி­தி­கள் ஆகி­யோர் வைத்த கோரிக்­கை­கள், மூன்று என்று செய்­தி­கள் வெளி­வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நீட் வினாத்­தாள் கசிவு மற்­றும் குள­று­ப­டி­க­ளுக்­குப் பொறுப்­பேற்று ஒன்­றிய கல்­வித் துறை அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் தனது பத­வியை விட்டு விலக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நீட் தேர்வுமுறை­கேடு கார­ண­மா­க­வும், மன உளைச்­ச­லா­லும் உயி­ரி­ழந்த/தற்­கொலை செய்­து­கொண்ட மாண­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­குத் தலா ரூ.ஒரு கோடி இழப்­பீடு வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">டில்லி போராட்­டத்­தில் பங்­கேற்ற மாண­வர்­கள் மற்­றும் இளை­ஞர்­கள் மீது காவல்­து­றை­யி­ன­ரால் பதிவு செய்­யப்­பட்ட முதல் தக­வல் அறிக்­கை­களை (FIR) முழு­மை­யாக ரத்து செய்ய வேண்­டும்; மேலும், இப்­போ­ராட்­டம் தொடர்­பாக எதிர்­கா­லத்­தில் எந்­த­வித சட்ட நட­வ­டிக்­கையோ அல்­லது வழக்கோ தொட­ரப்­ப­டாது என்ற எழுத்­துப்­பூர்வ உறு­தி­மொ­ழியை வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்த மூன்­றில், எதற்­காக இந்­தப் போராட்­டம் வெடித்­ததோ அந்த முக்­கிய இலக்­கான நீட் தேர்வு ரத்து – அகில இந்­திய அள­வில் தேர்வு நடத்­தும் NTA தேர்வு முகமை அமைப்பு கூடாது என்­பது என­வும் வற்­பு­றுத்­தப்­பட்­ட­தா­கவே தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">“எங்­க­ளுக்கு சில நாள்­கள் அவ­கா­சம் தாருங்­கள்” என்று மாண­வர் குழு­வி­டம் ஒன்­றிய அமைச்­சர்­கள் கேட்­டுக் கொண்­ட­தாக, சில செய்­தி­கள் தெரி­வித்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பிறகு அடுத்த நாளே, கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் தனது பத­வியை விட்­டு­வி­ல­கி­னார் என்ற செய்தி வந்­தது. புறத் தோற்­றத்­தில் மாண­வர் போராட்­டத்­திற்­குக் கிடைத்த ஒரு மாபெ­ரும் வெற்றி என்­ப­து­போல, உணர்ச்­சி­யால் உந்­தப்­பட்டு, போராட்­டம் நடத்­திய மாண­வர்­க­ளுக்­குத் தோன்­றி­னா­லும், உண்­மை­யில் இந்த  தர்­மேந்­திர பிர­தான் பதவி வில­கி­ய­தால் – எந்த முக்­கிய நோக்­கத்­திற்­காக அவர்­கள் போராட்­டம் நடத்தி, கண்­ணீர்ப்­புகை, கஷ்ட நஷ்­டங்­க­ளைப் பெற்­றார்­களோ, அது நிறை­வே­றி­யுள்­ளதா என்­றால், அந்­தக் கேள்­விக்கு அவர்­கள் உணர்ச்­சி­களை ஒதுக்கி வைத்து அறி­வு­பூர்­வ­மா­கச்  சிந்­தித்­தால்,  பதில் என்­ன­வாக இருக்­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">‘நீட்’ தேர்வு முறை அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­திற்கு முற்­றி­லும் விரோ­த­மான ஓர் அநி­யா­யம். கூட்­டாட்­சித் தத்­து­வத்­திற்கே குழி­ப­றித்த திணிப்பு. இதை நாம் பல­முறை விளக்­கி­யுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் ஏழாம் அட்­ட­வ­ணை­யில், அதி­கா­ரப் பகிர்­வில் உள்­ள­படி மாநி­லப் பட்­டி­ய­லில் உள்ள அதி­கா­ரங்­க­ளில் தேர்வு நடத்­தும் அதி­கா­ரம், பல்­க­லைக் கழ­கங்­க­ளின் பறிக்­கப்­பட முடி­யாத ஒன்று. அதை அப்­பட்­ட­மாக மீறி­யது ஒன்­றிய அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">முத­லில் ‘நீட்’­டில் ஆரம்­பித்து, பல படிப்­பு­க­ளுக்கு நெக்ஸ்ட், கியூட் என்ற அக்­கப்­போர் கொடு­மை­கள் நீளு­வ­தைப் போல, இந்த அகில இந்­திய தேர்வு முகமை (NTA) தனக்கு இல்­லாத அதி­கா­ரங்­களை விரித்­துக்­கொண்டே போனது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இதற்­குக் கார­ணம், ‘தகுதி, திறமை, ஊழலை ஒழிப்­பது’ என்று தொடக்­கத்­தில் கூறப்­பட்­டு­தான் இப்­படி ஒரு சட்ட விரோத, நியாய விரோத – தேர்வு முகமை, உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் ஒத்­து­ழைப்­பு­டன் தொடங்­கப்­பட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இது­வ­ரை­யில் நடை­பெற்ற நீட் தேர்­வா­னது ஊழ­லற்ற முறை­யில் நடை­பெற்­றி­ருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அது தொடங்­கிய கடந்த 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேலான காலத்­தில் எந்த ஒரு தேர்­வா­வது ஊழ­லற்ற முறை­யில் நடை­பெற்­றது என்று ஆட்­சி­யா­ளரோ, தேர்வு முக­மையோ விரலை மடக்க முடி­யுமா என்­பது ‘நீட்’ தேர்வு எதிர்ப்­பா­ளர்­க­ளின் நியா­ய­மான கேள்வி அல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மாநி­லங்­கள் – பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் தனி உரி­மை­யைப் பறித்து, ஊழல் மயம், கார்ப்­ப­ரேட் கன­வான்­க­ளின் கொள்ளை, பள்­ளி­க­ளுக்­குப் பதில் கோச்­சிங் சென்­டர், அவர்­க­ளுக்­கும் கேள்­வித் தாள் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்­கும் ஏற்­பட்ட விசித்­திர உற­வு­க­ளும் – லஞ்­சம் பெற்ற கதை­க­ளும் வழக்­கு­க­ளாக வந்­துள்ள நிலை­தானே இன்று யதார்த்­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நீட் தேர்வு சமூக நீதிக்­கும், மாநில உரி­மை­க­ளுக்­கும் ஏழை எளிய மாண­வர்­க­ளுக்­கும், கிரா­மப்­புற மாண­வர்­க­ளுக்­கும் எதி­ரா­னது என்­ப­தைத் தொடர்ந்து நாம் எச்­ச­ரித்து வரு­கி­றோம். நாடு முழு­வ­தும் மாணவ, மாண­வி­க­ளின் தற்­கொ­லை­கள் நம்மை ரத்­தக் கண்­ணீர் வடிக்­கச் செய்­தன. தமிழ்­நாட்டு அனி­தாக்­கள் தொடங்கி, பல மாநி­லங்­க­ளி­லும் தொடர்­க­தை­யாகி வரு­கிற கொடுமை, நீட் தேர்வு மாநில உரி­மைக்கு மட்­டு­மல்ல, மாண­வர்­க­ளின் நலத்­திற்­கும், எதிர்­கா­லத்­திற்­கும் எதி­ரா­னது என்­பதை நாளும் நிரூ­பித்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரா­வி­டர் கழ­க­மும், திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், சமூ­க­நீ­தி­யில் அக்­கறை கொண்ட தமிழ்­நாட்­டுக் கட்­சி­க­ளும்­தான் இதனை முதன்­மு­த­லில் அடை­யா­ளம் கண்டு, எதிர்த்­தன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யில், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யில், தி.மு.க. ஆட்­சி­யில் நீட் தேர்­வின் விளை­வு­க­ளைக் குறித்து ஆராய்ந்­திட உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி (ஓய்வு) டாக்­டர் ஏ.கே.ராஜன் தலை­மை­யில் ஒரு குழு அமைத்து, விரி­வான அறிக்கை பெற்று, அதை­யொட்டி இரண்டு முறை மசோ­தாக்­கள் நிறை­வேற்றி அனுப்­பப்­பட்­டது. ஆளு­நர்­கள் மூல­மும், உள்­துறை அமைச்­ச­கம் மூல­மும் அத­னைக் கிடப்­பில் போட்­டும் மற்­றும் இறு­தி­யில் முடி­யாது என்­றும் ஒன்­றிய அர­சால் கூறப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வுக்கே, தமிழ்­நா­டு­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முதன்­மு­த­லில் வழி­காட்­டி­யது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் பி.ஜே.பி. தவிர மற்ற அத்­த­னைக் கட்­சி­க­ளும் ‘நீட் தேர்வை’ எதிர்த்த நிலைப்­பா­டு­தான் முதன் முத­லில் இந்­தி­யா­வுக்கே வழி­காட்­டி­யது. வழ­மை­போல, பெரி­யா­ரின் சமூ­க­நீ­திக் கொள்­கை­கள்­தான் இந்­தி­யா­விற்கே வழி­காட்­டும் கலங்­கரை வெளிச்­சம் என்­பது இப்­போது விளங்­காத அறிவு சூன்­யங்­க­ளுக்­கும் விளங்­கி­டக் கூடும். இந்த நிலை­யில் மாண­வர்­க­ளின் டில்லி அறப் போராட்­டம் – வெற்றி என்று கூறு­வ­தை­விட, திசை திருப்­பப்­பட்டு விட்­டதா என்ற கவ­லை­தான் நம்­மைப் போன்ற தொடக்­கம் முதலே இத­னைச் சரி­யான அடை­யா­ளம் கண்­ட­வர்­க­ளுக்கு ஏற்­ப­டு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் நுழை­வுத் தேர்வை எம்.ஜி.ஆர் ஆட்சி கொண்டு வந்­த­போதே அதனைஎதிர்த்து தொடர்ந்து 21 ஆண்­டு­கள் போராடி வெற்றிகண்டு, மாநி­லங்­க­ளின் கல்வி உரி­மை­யைக் காத்த, காத்து வரு­கின்ற இயக்­கங்­கள்திரா­வி­டர் கழ­க­மும், தி.மு.க.வும்­தான்! இன்­றும் இந்த இரட்­டைக்­கு­ழல்­க­ளும் ‘நீட் தேர்வு’ என்ற சூழ்ச்­சிப் பொறி மூலம் ஒடுக்­கப்­பட்ட ஏழை, எளிய மாண­வர்­கள் டாக்­டர்­கள் கனவு பறிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்­க­வும், உயிர்ப் பலி­க­ளைத் தடுக்­க­வும் களம் கண்டு போரா­ட­வும் என்­றும் தயா­ராக இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">முன்பு, தி.மு.க. ஆட்­சியை இதற்­கா­கக் கடு­மை­யா­கக் குறை கூறி, ஆட்­சிக்கு வந்­துள்ள புதிய முத­ல­மைச்­சர், ‘‘த.வெ.க. ஆட்சி, நீட் தேர்வை எதிர்க்­கி­றது’’ என்று சொன்­னால் மட்­டும் போதாது; மாநில ஆட்சி – நீட் தேர்வை ரத்து செய்­வ­தற்கு என்ன நிலைப்­பாட்டை எடுக்­கப் போகி­றது என்­ப­தும் முக்­கி­யக் கேள்­வி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஒன்­றிய அர­சின் சட்­டப்­பூர்­வ­மான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கேள்­வித் தாள் ‘லீக்’ ஆனால், தண்­டனை என்ற சட்­டமே, ‘ஊழ­லுக்கு அப்­பாற்­பட்­ட­தல்ல நீட் தேர்வு’ என்­பதை ஒன்­றிய அரசே சட்­டப்­பூர்­வ­மாக ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை உல­கத்­திற்கே தெரி­யப்­ப­டுத்­தும் ஒன்­றா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நீட் தேர்­வின் சூழ்ச்­சி­யைத் தொடக்­கத்­தி­லேயே புரிந்­து­கொண்டு தமிழ்­நாடு போராடி வந்­தா­லும், பிற மாநி­லங்­கள் மிகத் தாம­த­மா­கவே புரிந்­து­கொண்­டன. அத­னால்­தான் கடந்த ஆண்­டு­மு­தலே எதிர்ப்­பு­கள் போராட்ட வடி­வம் எடுத்­தன. முழு­மை­யான நீட் ஒழிப்பு என்ற நோக்­கத்­து­டன்­தான் இப்­போ­ராட்­டம் தொடங்­கி­யி­ருக்­க­வேண்­டும். ஆனால், அதை ஓர் அமைச்­ச­ரின் பதவி வில­க­லோடு சுருக்­கி­யது யார்? அவ­ரது பதவி வில­க­லையே பெரிய வெற்­றி­யா­கக்காட்டி, போராட்­டத்­தின் நோக்­கத்­தைத் திசை திருப்­பி­யது யார்? இதன் பின்­ன­ணி­யில் இருப்­பது யார்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தர்­மேந்­திர பிர­தான் பதவி வில­க­லை­ய­டுத்து, ஓர் அசல் ஆர்.எஸ்.எஸ். பார்ப்­ப­னர்­தானே கல்வி அமைச்­ச­ரா­கி­யி­ருக்­கி­றார்? ‘நீட்’ தேர்வு ஒழிப்பு என்ற கோரிக்­கைக்கு இத­னால் ஏதா­வது பயன் உண்டா? மாண­வர்­களே, பெற்­றோர்­களே, உங்­கள் கல்வி உரிமை இப்­படி திசை திருப்­பல்­க­ளுக்­கும், மடை மாற்­றத்­திற்­கும் ஆளா­வது நியா­யமா? சிந்­தி­யுங்­கள்! வெற்றி பெறும் வரை போரா­டு­வோம் என்­பதே திரா­வி­டர் கழ­கத்­தின் நிலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தொடர்ந்து அற­வ­ழி­யில் போரா­டு­வோம் – வெற்றி பெறும் வரை போரா­டு­வோம் என்­பதே திரா­வி­டர் கழ­கத்­தின் நிலை! அதை மக்­க­ளி­டம் விளக்­கும் வகை­யில், வரும் ஜூலை 30, 31, ஆகஸ்ட் 1, 2 ஆகிய நான்கு நாள்­கள், ஆறு முனை­க­ளி­லி­ருந்து தொடங்கி நடை­பெ­றும் இரு சக்­க­ர­வா­ன­கப் பரப்­பு­ரை­மூ­லம் மாண­வர்­க­ளுக்கு, இளை­ஞர்­க­ளுக்கு, பொது­மக்­க­ளுக்கு விளங்க வைப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இறுதி வெற்றி நமக்கே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>