<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,66,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 01 2026 03:43:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260801T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01082026-MDU-04" position.sequence="04" ex-ref="01082026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="59">‘நீட்’ தேர்­வும் தி.மு.­க.­வின் நிலைப்­பா­டும்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup811837_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Saithaisathic_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் தேர்வு ஆணையை எதிர்த்து தொட­ரப்­பட்ட வழக்­கில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் மூன்று நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு 2013 சூலை­யில் நீட் தேர்வு அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­துக்கு முர­ணா­னது என்று தீர்ப்­ப­ளித்­தது. ஆனால் மோடி ஆட்­சிக்கு வந்­த­பின் இந்­தத் தீர்ப்­பின்­மீது சீராய்வு விண்­ணப்­பம் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் போடப்­பட்­டது. 2013இல் மூன்று நீதி­ப­தி­கள் கொண்ட அமர்­வில் இருந்த நீதி­பதி அனில் தவே நீட் தேர்வு வேண்­டும் என்று மாறு­பட்ட தீர்ப்பை எழு­தி­னார். அந்த அனில்­தவே தலை­மை­யில் அமைக்­கப் பட்ட அய்ந்து நீதி­ப­தி­க­ளைக் கொண்ட உச்­ச­நீ­தி­மன்ற அமர்வு சீராய்வு கோரிக்­கையை விசா­ரித்­தது. 11.4.2016 அன்று அளித்த தீர்ப்­பில் 2013இல் மூன்று நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு நீட் தேர்வு வேண்­டாம் என்று வழங்­கிய தீர்ப்­பைத் திரும்­பப் பெறு­வ­தா­க­வும், வழக்கை மீண்­டும் முத­லி­லி­ருந்து விசா­ரிக்­கப் போவ தாக­வும் கூறி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில்­தான் மோடி அரசு நீட் தேர்வை 2016ஆம் ஆண்டே நடத்த வேண்­டும் என்று உச்­ச­நீதி மன்­றத்­துக்கு அழுத்­தம் கொடுத்­தது. நீட் தேர்வு குறித்த வழக்கை முறை­யாக விசா­ரிக்­கப் போவ­தா­கக் கூறிய 17 நாள்­க­ளுக்­குள்­ளா­கவே, மோடி ஆட்­சி­யின் விருப் பத்தை நிறை­வேற்­றும் வகை­யில் 28.4.2016 அன்று 2016ஆம் ஆண்டு முதலே நீட் தேர்வு நடத்­த­லாம் என்று கூறி­யது. உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் முதன்­மை­யான வழக்­கு­களை விசா­ரிப்­ப­தற்­காக அமைக்­கப்­ப­டும் அமர்வு களில் ஒன்றிய அர­சின் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப தீர்ப்பு வழங்­கக்­கூ­டிய நீதி­ப­தி­க­ளையே தலைமை நீதி­பதி தீபக் மிஸ்ரா நிய­மிப்­ப­தாக உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் செல்ல மேசு­வ­ரர் உள்­ளிட்ட மூத்த நீதி­ப­தி­கள் நால்­வர் 2018 சன­வ­ரி­யில் செய்­தி­யா­ளர்­க­ளைக் கூட்டி அறி­வித்­ததை இவ்­வி­டத்­தில் பொருத்­திப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திடீ­ரென நீட் தேர்வு மூலம்­தான் மருத்­து­வப் படிப்­பில் சேர்க்கை இருக்க வேண்­டும் என்ற அறி­விப்­புக்­குத் தமிழ்­நாட்­டில் கடும் எதிர்ப்பு ஏற்­பட்­டது. வேறு சில மாநி லங்­க­ளும் எதிர்த்­தன. 2016ஆம் ஆண்­டிற்கு மட்­டும் விரும்­பு­கின்ற மாநி­லங்­க­ளுக்கு விதி­வி­லக்கு அளிக்­கப் படும் என்­கிற அவ­ச­ரச் சட்­டத்தைஒன்றியஅரசு பிறப்­பித்­தது. 2016இல் நீட் தேர்வு நடந்­தது. ஆயி­னும் தமிழ்­நாட்­டில் 2007 முதல் பன்­னி­ரண்­டாம் வகுப்­பின் மதிப்­பெண் தர­வ­ரி­சைப்­படி ஒற்­றைச்­சா­ளர முறை­யில் மருத்­து­வப் படிப்­பில் மாண­வர்­க­ளைச் சேர்க்­கின்ற நடை­முறை பின்­பற்­றப்­பட்­டது. ஆனால்ஒன்றியஅரசு அவ­ச­ரச் சட்­டத்­துக்கு நாடா­ளு­மன்­றத்­தின் ஒப்­பு­த­லைப் பெற்ற போது, நீட் தேர்வு வழக்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் விசா­ர­ணை­யில் இருக்­கும் நிலை­யில், வஞ்­ச­க­மாக 2017ஆம் ஆண்டு முதல் எல்லா மாநி­லங்­க­ளி­லும் அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் உள்­ளிட்ட எல்லா மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளி­லும் நீட் மூலமே மாண­வர் சேர்க்­கையை நடத்த வேண்­டும் என்று சட்­டம் இயற்­றி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1.2.2017 அன்று தமிழ்நாடு சட்­ட­மன்­றத்­தில் நீட் தேர்­வி­லி­ருந்து தமிழ்­நாட்­டுக்கு விலக்கு அளிக்க வேண்­டும் என்று சட்­டம் இயற்­றப்­பட்டு, குடி­ய­ர­சுத் தலை­வ­ரின் ஒப்­பு­த­லுக்­காக ஒன்றிய அர­சுக்கு அனுப்­பப்­பட்­டது. அ.தி.மு.க. அரசு நீட் தேர்­வி­லி­ருந்து விலக்கு கிடைத்து விடும் என்று கூறிக்­கொண்­டி­ருந்­தது. மாநி­லப் பாடத் திட்­டத்­தில் படித்த மாண­வர்­கள்தமிழ்நாடுஅர­சின் உறுதி மொழியை நம்பி ஏமாந்­த­னர். இறு­தி­யில் விலக்கு கிடைக்­கா­த­தால் நீட் தேர்வு எழு­தும் நிலைக்­குத் தள்­ளப் பட்­ட­னர். மாநி­லப் பாடத்­திட்­டத்­தில் பன்­னி­ரண்­டாம் வகுப்­புப் பொதுத் தேர்­வில் மருத்­து­வப் படிப்­பில் சேரு வதற்­குத் தேவை­யான மதிப்­பெண்­க­ளைப் பெற்­றி­ருந்த போதி­லும், நீட் தேர்­வில் குறை­வான மதிப்­பெண் பெற்­ற­தால் மருத்­து­வப் படிப்­பில் சேர முடி­யாத கொடுமை நேர்ந்­தது. அரி­ய­லூ­ரைச் சேர்ந்­த–­தாழ்த்­தப்­பட்ட வகுப்­பி­ன­ரான அனிதா 1176 மதிப்­பெண்­ணும் 196.5 கட் ஆப் மதிப்­பெண்­ணும் பெற்­றி­ருந்­தும் மருத்­து­வப் படிப்­பில் சேர முடி­யாத மன­உ­ளைச்­ச­லால் 1.9.17 அன்று தற்­கொலை செய்து கொண்­டார். அனி­தா­வைப் போலவே, பன்­னி­ரண்­டாம் வகுப்­பில் உரிய மதிப்­பெண் பெற்­றும் நீட் எனும் நெடுஞ்­சு­வ­ரைத் தாண்ட முடியாமல் 500க்கும் மேற்­பட்ட பிற்­ப­டுத்­தப்­பட்ட, தாழ்த் தப்­பட்ட வகுப்பு மாண­வர்­க­ளின் மருத்­து­வக் கனவு நொறுங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதன்­பின்தமிழ்நாடுஅரசு நீட் தேர்­வி­லி­ருந்து விலக்கு பெறு­வ­தற்­கான எந்த முயற்­சி­யை­யும் மேற்­கொள்ள வில்லை. ஏழ­ரைக் கோடித் தமி­ழர்­க­ளின் சட்­ட­மன்­றம் நிறை­வேற்றி அனுப்­பிய சட்­டத்தை ஒன்­றிய பாஜக அரசு கால்­தூ­சா­க­வும் மதிக்­கா­மல் கிடப்­பில் போட்­டது ஒன்­றிய மோடி அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில் 03.05.2026 அன்று நடை­பெற்ற நீட் தேர்வு வினாத்­தாள் கசிந்­த­தால் அந்த தேர்வு ரத்து செய்­யப்­பட்டு மறு தேர்வு21.06.2026 அன்று நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் வினாத்­தாள் கசிவு தொடர்­பாக விரி­வான விசா­ரணை நடத்த ஒன்­றிய அரசு உத்­த­ர­விட்­ட­தால் சி.பி.ஐ முதல் தக­வல் அறிக்­கையை பதிவு செய்து விசா­ர­ணை­யைத் தொடங்­கி­யுள்­ளது. இதில் மஹா­ராஷ்­டி­ரா­வின் நாசிக்­கைச் சேர்ந்த சுபம் கைர்­னார், ராஜஸ்­தான் ஜம்வா ராம்­க­ரைச் சேர்ந்த தினேஷ் பிவால், மங்­கி­லால் பிவால், மஹா­ராஷ்­டி­ரா­வின் புனே­வைச் சேர்ந்த முன்­னாள் வேதி­யி­யல் பேரா­சி­ரி­யர் குல்­கர்னி, பேரா­சி­ரியை மனிஷா மாந்­தாரே, மனிஷா வாண்­டாரே, மஹா­ராஷ்­டி­ரா­வின் லத்­துா­ரில் செயல்­பட்டுவரும் ரேணு­காய் பயிற்சி மையத்­தின் உரி­மை­யா­ளர் சிவ­ராஜ் ரகு­நாத் மோடே­கோன்­கர் மற்­றும் சில மருத்­துவ மாண­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் தேர்வு முறை­கே­டு­க­ளுக்­குப் பொறுப்­பேற்று ஒன்றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் பதவி விலக வலி­யு­றுத்தி நடை­பெற்ற மாண­வர்­கள் போராட்­டம், தர்­மேந்­திர பிர­தா­னின் பதவி வில­க­லை­ய­டுத்து வெற்றிபெற்­றுள்­ளது. ஆனால், இப்­போ­ராட்­டத்தை ஒடுக்­கு­வ­தற்­காக பாசிச மோடி அரசு மாண­வர்­கள் மீது கொடூ­ர­மான அடக்­கு­மு­றை­க­ளைக் கட்­ட­விழ்த்­து­விட்­டது. அத­னை­யெல்­லாம் நெஞ்­சு­ரத்­து­டன் எதிர்­கொண்டே மாண­வர்­கள் இவ்வெற்றியைச் சாதித்­துள்­ள­னர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் தேர்வை ரத்து செய்ய வேண்­டும் என்­பதே எங்­க­ளின் நிலைப்­பாடு என்று கூறி, ஆட்­சிப் பொறுப்­பேற்ற த.வெ.க, வினாத்­தாள் கசிவு கார­ண­மாக இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்­யப்­பட்ட பிற­கும் இது குறித்து எந்­த­வொரு கருத்­தை­யும் வெளி­யி­டா­மல் வாய் மூடி மௌனி­யாக இருக்­கி­றது. அத்­து­டன் நீட் தேர்வு வினாத்­தாள் கசி­வைக் கண்­டித்து சென்­னை­யில் ஒன்­றிய அரசு அலு­வ­ல­கங்­கள் அமைந்­துள்ள சாஸ்­திரி பவன் முன்பு போராட்­டம் நடத்­திய இந்­திய மாண­வர் சங்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் மீது காவல்­துறை தடி­யடி நடத்­தி­யுள்­ளது. ஆளும் கட்­சிக்கு ஏற்­பு­டைய கருத்­துக்­காக போரா­டு­ப­வர்­கள் மீது இவ்­வாறு கடும் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டிய அவ­சி­யம் என்ன.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நீட் தேர்­வுக்கு  எதி­ராக தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">களத்­தி­லும், சட்­ட­மன்­றத்­தி­லும், நீதி­மன்­றத்­தி­லும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட்­டுக்கு எதி­ராக தி.மு.க. முன்­னெ­டுத்த போராட்­டங்­கள் 
மற்­றும் நட­வ­டிக்­கை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1.  13.09.2021 – முதல் தீர்­மா­னம் + மசோதா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட் தேர்வு முடிந்த மறு­நாள் “தமிழ்­நாடு மருத்­துவ படிப்பு சேர்கை மசோதா 2021” சட்­டப்­பே­ர­வை­யில் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. நீட்­டில் இருந்து தமிழ்­நாட்­டிற்கு நிரந்­தர விலக்கு கேட்­கப்­பட்­டது. இது குடி­ய­ரசு தலை­வ­ரின் ஒப்­பு­த­லுக்கு அனுப்­பப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2.  28.06.2024 – இரண்­டா­வது தீர்­மா­னம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீட்–UG வினாத்­தாள் கசிவு மற்­றும் முறை­கே­டு­கள் பின்­ன­ணி­யில் மீண்­டும் ஒரு­ம­ன­தாக தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. NMC Act–ஐ திருத்தி நாடு முழு­வ­தும் நீட்டை ரத்து செய்ய கோரிக்கை வைக்­கப்­பட்­டது. முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­களே தீர்­மா­னத்தை முன்­மொ­ழிந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">3.  2017 செப்­டம்­பர் – அனிதா மர­ணத்­திற்கு பின் கூட்டு போராட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­போ­தைய எதிர்­கட்சி தலை­வர் மு.க. ஸ்டாலின் தலை­மை­யில் தாம்­ப­ரம், நுங்­கம்­பாக்­கம் வள்­ளு­வர் கோட்­டம் உட்­பட தமிழ்­நாடு முழு­வ­தும் கண்­டன ஆர்­பாட்­டங்­கள். காங்­கி­ரஸ், CPI–M, VCK உள்­ளிட்ட கூட்­டணி கட்­சி­கள் பங்­கேற்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">4.  2022 ஆகஸ்ட் – மாநி­லம் தழு­விய உண்­ணா­வி­ரத போராட்­டம் 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இளை­ஞர் அணி செய­லா­ளர் அண்­ணன் உத­ய­நிதி ஸ்டாலின் தலை­மை­யில் சென்னை வள்­ளு­வர் கோட்­டத்­தில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">– கோரிக்கை: “நீட்டை முழு­மை­யாக ரத்து செய்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">– முதல்­வர் ஸ்டாலின்: “நீட் விலக்கு கிடைக்­கும் வரை நிறுத்த மாட்­டோம்” என உறுதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">– அனிதா உட்­பட நீட்­டால் உயி­ரி­ழந்த மாண­வர்­க­ளுக்கு மலர் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">5.  23.06.2023 – DMK மாண­வர் அணி போராட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை சைதாப்­பேட்­டை­யில் 1000–க்கும் மேற்­பட்­டோர் பங்­கேற்ற கண்­டன ஆர்­பாட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடா­ளு­மன்­றம் &amp; தில்லி போராட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">6.  தொடர் நாடா­ளு­மன்ற கண்­டன ஆர்ப்­பாட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திமுக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் நீட் ரத்து கோரி தொடர் கண்­டன ஆர்­பாட்­டங்­கள் நடத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">7.  MP கனி­மொழி: “NEET–ல் ஊழல் இல்லை, NEET–தான் ஒரு ஊழல். நீட்டை தடை செய்ய வேண்­டும்” என தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">8.  ஜூலை 2026 – CJP “Sansad Chalo” போராட்­டத்­திற்கு ஆத­ரவு
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">– MP திருச்சி சிவா: ராஜ்­ய­ச­பா­வில் “நீட்டை ரத்து செய்­வதே எங்­கள் ஒரே கோரிக்கை” என வலி­யு­றுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">– MP P. வில்­சன்: மாண­வர்­க­ளின் போராட்­டத்தை பாராட்டி, நீட் முழு­மை­யாக ஒழிக்­கப்­பட வேண்­டும் என கூறி­னார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">9.  ஜூலை 2026 – டெல்லி போராட்­டத்­திற்கு ஆத­ரவு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திமுக தலை­வர் மு.க. ஸ்டாலின், “நீட் ரத்தே நிரந்­தர தீர்வு” என அறிக்கை வெளி­யிட்டு டெல்லி போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">10. “நீட் விலக்கு, நாம் இலக்கு” – 50 லட்­சம் கையெ­ழுத்து இயக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் உத­ய­நிதி ஸ்டாலின் தலை­மை­யில் 50 நாட்­கள் நடை­பெற்­றது. சேக­ரிக்­கப்­பட்ட 
50 லட்­சம் கையெ­ழுத்­து­கள் குடி­ய­ரசு தலை­வ­ரி­டம் 
வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திமு­க–­வின் நிலைப்­பாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திமுக 2010–ல் இருந்தே நீட்டை எதிர்த்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“நீட் சமூக நீதிக்கு எதி­ரா­னது. கிரா­மப்­புற, ஏழை மாண­வர்­க­ளின் மருத்­துவ கனவை சிதைக்­கி­றது” என்­பது திமு­க–­வின் முக்­கிய வாதம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாண­வர்­க­ளின் மூலம் வாக்­கு­களை பெற்று ஆட்­சி­யைப் பிடித்து விட்டு அவர்­க­ளைப் பாதிக்­கும் பிரச்­சி­னை­யில் இவ்­வாறு அக்­க­றை­யின்றி நடந்து கொள்­ளும் முதல்­வர் விஜய் தான் நடத்­து­வது பா.ஜ.கவின் பினாமி ஆட்சி என்­பதை தனது நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். இனி­யா­வது விஜய்­யின் உண்மை முகத்தை தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளும், மாண­வர்­க­ளும் அறிந்து தெளி­வினை பெறட்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>