<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title"></title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,164,958,965" />
         <classifier id="numcol" value="4"/>
      <classifier id="ArticleStyle" value=""/>
      <classifier id="Layer" value="Layer 1"/>
         <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 01 2026 03:44:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260801T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01082026-MDU-05" position.sequence="05" ex-ref="01082026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
			</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புது­டெல்லி, ஆக. 1 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழக, அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர், டாக்­டர் எஸ். ஜெகத்­ரட்­ச­கன் அவர்­கள், நேற்று மக்­க­ள­வை­யில், நாட்­டில் கச்சா எண்­ணெய் உற்­பத்தி தொடர்ந்து பதி­னொன்­றா­வது ஆண்­டா­க­வும், இயற்கை எரி­வாயு உற்­பத்தி தொடர்ந்து இரண்­டா­வது ஆண்­டா­க­வும் குறைந்து வரு­வ­தால், நாட்­டின் எரி­சக்தி பாது­காப்பு, இறக்­கு­மதி சார்பு, எரி­சக்தி விலை நிலைத்­தன்மை மற்­றும் சர்­வ­தேச எரி­சக்­திச் சந்­தை­க­ளில் ஏற்­ப­டும் மாற்­றங்­க­ளால் உரு­வா­கும் பாதிப்­பு­களை எதிர்­கொள்ள ஒன்­றிய அரசு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்து கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதற்கு ஒன்­றிய அர­சின் பெட்­ரோ­லி­யம் மற்­றும் இயற்கை எரி­வா­யுத் துறை  இணை அமைச்­சர் சுரேஷ் கோபி அவர்­கள் அளித்த பதில் பின்­வ­ரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாட்­டில் கச்சா எண்­ணெய் மற்­றும் இயற்கை எரி­வா­யு­வின் உள்­நாட்டு உற்­பத்தி தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­வ­து­டன், உள்­நாட்டு உற்­பத்­திக்­கும் தேவைக்­கும் இடை­யி­லான இடை­வெளி மற்­றும் வழங்­கல்–­தேவை நிலை­யும் தொடர்ந்து மதிப்­பாய்வு செய்­யப்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த பத்­தாண்­டு­க­ளில் உள்­நாட்டு கச்சா எண்­ணெய் உற்­பத்­தி­யில் காணப்­ப­டும் சிறிய அள­வி­லான சரிவு, முதிர்ச்­சி­ய­ டைந்த மற்­றும் நீண்­ட­கா­ல­ மாக உற்­பத்­தி­யில் உள்ள எண்­ணெய் மற்­றும் இயற்கை எரி­வாயு வயல்­க­ளில் இயற்­கை­யாக ஏற்­ப­டும் உற்­பத்­திக் குறைவே முக்­கிய கார­ணம் என்­றும் அமைச்­சர் கூறி­னார். இருப்­பி­னும், தேசிய எண்­ணெய் நிறு­வ­னங்­க­ளான ஆயில் அண்ட் நேச்­சு­ரல் கேஸ் கார்ப்­ப­ரே­ஷன் மற்­றும் ஆயில் இந்­தியா லிமி­டெட் ஆகி­யவை தங்­க­ளது உற்­பத்தி அளவை நிலை­நி­றுத்­தி ­யுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆயில் அண்ட் நேச்­சு­ரல் கேஸ் கார்ப்­ப­ரே­ஷன் சரா­ச­ரி­யாக 19.6 மில்­லி­யன் மெட்­ரிக் டன் கச்சா எண்­ணெய் உற்­பத்­தி­யைத் தொடர்ந்து பேணி­யுள்­ள­து­டன், ஆயில் இந்­தியா லிமி­டெட் தனது உற்­பத்­தியை 2.94 மில்­லி­யன் மெட்­ரிக் டனி­லி­ருந்து 3.44 மில்­லி­ யன் மெட்­ரிக் டன்­னாக உயர்த்­தி­யுள்­ள­தா­க­வும் கூறி­னார். மேலும், 2014–15 முதல் முதிர்ச்­சி­ய­டைந்த எண்­ணெய் வயல்­க­ளில் ஆண்­டு­தோ­றும் ஏற்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உற்­பத்­திக் குறைவு 2 சத­வீ­தத்­திற்­குள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது; இது சர்­வ­தேச எரி­சக்தி முக­மை­யின் கணக்­கீட்­டின்­படி உல­க­ளா­விய சரா­ச­ரி­யான 6 சத­வீ­தத்தை விட குறிப்­பி­ டத்­தக்க அள­வில் குறை­வா­கும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2021–22 முதல், கிருஷ்­ணா–­கோ­தா­வரி ஆழ்­க­டல் பகு­தி­யில் புதிய உற்­பத்தி தொடங்­கி­ய­தன் கார­ண­மாக இயற்கை எரி­வாயு உற்­பத்­தி­யில் முன்­னேற்­றம் ஏற்­பட்­ட­தா­க­வும், எனி­னும் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளில் இயற்கை எரி­வாயு உற்­பத்தி மீண்­டும் குறைந்து, 2023–24ஆம் ஆண்­டில் 36.438 பில்­லி­யன் கன மீட்­ட­ராக இருந்த உற்­பத்தி, 2025–26ஆம் ஆண்­டில் 34.776 பில்­லி­யன் கன மீட்­ட­ரா­கக் குறைந்­துள்­ள­ தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சீர்­தி­ருத்­தங்­களை அரசு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">செயல்­ப­டுத்தி வரு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாட்­டின் எரி­சக்தி பாது­காப்பை வலுப்­ப­டுத்­த­வும், கச்சா எண்­ணெய் மற்­றும் இயற்கை எரி­வாயு இறக்­கு­ம­திச் சார்­பைக் குறைக்­க­ வும், உள்­நாட்டு ஆய்வு மற்­றும் உற்­பத்­தியை அதி­க­ரிக்­க­வும், பொதுத்­துறை மற்­றும் தனி­யார் நிறு­வ­னங்­க­ ளின் பங்­க­ளிப்­பு­டன் பல்­வேறு கொள்கை, ஒழுங்­கு­முறை மற்­றும் நிதி­சார் சீர்­தி­ருத்­தங்­களை ஒன்­றிய அரசு செயல்­ப­டுத்தி வரு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எண்­ணெய் வயல்­கள் ஒழுங்­கு­முறை மற்­றும் மேம்­பாடு திருத்­தச் சட்­டம், ஆய்வு மற்­றும் உற்­பத்­திக்­குத் தடை விதிக்­கப்­ பட்­டி­ருந்த கடல்­சார் பகு­தி­கள் மீதான கட்­டுப்­பா­டு­களை நீக்­கு­தல், உற்­பத்தி பகிர்வு ஒப்­பந்த முறை­யி­லி­ருந்து வரு­வாய் பகிர்வு ஒப்­பந்த முறைக்கு மாற்­றம், நில அதிர்வு ஆய்­வுத் தர­வு­க­ளைச் சேக­ரிப்­ப­தி­லும் செய­லாக்­கு­வ­தி­லும் பெரிய அள­வி­லான முத­லீ­டு­கள் ஆய்­வுக் கிண­று­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்­தல் உள்­ளிட்ட பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த பத்­தாண்­டு­க­ளில் 3.5 லட்­சம் சதுர கிலோ­மீட்­ட­ருக்­கும் அதி­க­மான ஆய்­வுப் பகு­தி­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­து­டன், கண்­ட­றி­ யப்­பட்ட சிறிய எண்­ணெய் வயல்­களை விரை­வாக உற்­பத்­திக்­குக் கொண்­டு­வ­ரு­தல், ஹைட்­ரோகார் ­பன் ஆய்வு மற்­றும் உரிம வழங்­கல் கொள்­கையை அறி­மு­கப்­ப­டுத்­து­தல், ஆய்­வுப் பணி­களை விரை­வு­ ப­டுத்­து­தல், சர்­வ­தேச தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ ளு­டன் ஒத்­து­ழைப்பை விரி­வு­ப­டுத்­து­தல், தேசிய புவி­யி­யல் தர­வுக் களஞ்­சி­யத்தை உரு­வாக்­கு­தல் மற்­றும் ஹைட்­ரோ­கார்­பன் வள மதிப்­பீட்டு ஆய்­வு­களை மேற்­கொள்­ளு­தல் உள்­ளிட்ட பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளும் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கச்சா எண்­ணெய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இறக்­கு­ம­தியை 
அதி­க­ரிக்க முடிவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாட்­டின் எரி­சக்தி பாது­காப்பை மேலும் வலுப்­ப­டுத்­த­வும், வழங்­கல் தடை­க­ளின் அபா­யத்தை குறைக்­க ­வும், கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செய்­யப்­ப­டும் நாடு­க­ளின் எண்­ணிக்கை 27 நாடு­க­ளி­லி­ருந்து 41 நாடு­க­ளாக உயர்த்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரவ இயற்கை எரி­வாயு மற்­றும் திரவ பெட்­ரோ­லிய எரி­வாயு இறக்­கு­மதி 15 நாடு­க­ளுக்கு விரி­வு­ ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார். இதன் மூலம் குறிப்­பிட்ட ஒரு நாடு, பிராந்­தி­யம் அல்­லது போக்­கு­வ­ரத்து வழி­யைச் சார்ந்­தி­ருக்­கும் நிலை குறைக்­க ப்­பட்டு, வழங்­கல் தடை­கள் மற்­றும் சந்தை ஏற்ற இறக்­கங்­களை திறம்­பட சமா­ளிக்­கும் திறன் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொதுத்­துறை எண்­ணெய் மற்­றும் இயற்கை எரி­வாயு நிறு­வ­னங்­கள் மற்­றும் பிற தொடர்­பு­டைய அமைப்­பு­க­ளு­டன் இணைந்து உல­க­ளா­விய வழங்­கல் நிலை­மை­களை ஒன்­றிய அரசு தொடர்ந்து மதிப்­பீடு செய்து, கச்சா எண்­ணெய், திரவ இயற்கை எரி­வாயு மற்­றும் பெட்­ரோ­லி­யப் பொருட்­கள் தடை­யின்றி கிடைப்­பதை உறுதி செய்ய தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், இந்­திய வியூக பெட்­ரோ­லி­யக் கையி­ருப்பு நிறு­வ­னம் என்ற சிறப்பு நோக்க நிறு­வ­ னத்­தின் மூலம், குறு­கிய கால வழங்­கல் பாதிப்­பு­களை சமா­ளிப்­ப­தற்­காக வியூக பெட்­ரோ­லி­யக் கையி­ருப்பு வச­தி­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்­சர் தெரி­வித்­தார். முதல்­கட்­ட­ மாக, ஆந்­தி­ரப் பிர­தே­சம் மற்­றும் கர்­நா­ட­கா­வில் மூன்று இடங்­க­ளில் மொத்­தம் 5.33 மில்­லி­யன் மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட கச்சா எண்­ணெய் கையி­ருப்பு வச­தி­கள் அமைக்­கப்­பட்­டு ள்­ளன. இரண்­டாம் கட்­டத் திட்­டத்­தின் கீழ், ஒடிசா மற்­றும் கர்­நா­ட­கா­வில் மொத்­தம் 6.5 மில்­லி­யன் மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட மேலும் இரண்டு வணி­க–­வி­யூக பெட்­ரோ­லி­யக் கையி­ருப்பு வச­தி­களை அமைக்க ஒன்­றிய அரசு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது என்­றும் ஒன்­றிய அர­சின் பெட்­ரோ­லி­யம் மற்­றும் இயற்கை எரி­வா­யுத் துறை இணை அமைச்­சர்  சுரேஷ் கோபி அவர்­கள், தி.மு.க. அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் எஸ். ஜெகத்­ரட்­ச­கன் அவர்­கள் எழுப்­பிய கேள்­விக்கு எழுத் ­துப்­பூர்­வ­மாக அளித்த பதி­லில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>