<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,65,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 01 2026 22:57:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260802T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="02082026-MDU-05" position.sequence="05" ex-ref="02082026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="32">தகுதி குறித்துப் பேசும் தற்குறிகளே... தங்கள் தகுதிகளைக் கூறத் தயாரா? </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup816114_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="18">“நா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">டு முழுவதும் நடைபெறும் பெண்களுக்கு எதிரானபாலி யல் வன்புணர்ச்சி,போதைப்பொருள் விற்பனை பற்றியோ, கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு எனச் சட்ட ஒழுங்குக் சீர்கேடுகள் பற்றியோ, மின் வெட்டால் வீடுகள், தொழிற்சாலைகள், கல்விக்கூடங்கள் என இருண்டு போனதைப் பற்றியோ,தட்டுப்பாடு ஏற்பட்டு வரும்அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் விலைவாசி ஏற்றத்தைப் பற்றியோ, காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை, முல்லைப் பெரியாறு, பாலாறு அணை போன்ற நதிநீர் பிரச்சினைகளால் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதைப் பற்றியோ, மூடப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை இன்றித் தவிக்கும் இலட்சக்கணக்கானதொழிலாளர்கள் பற்றியோ ஜோசப்விஜய் அரசுக்குஅக்கறையில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒன்றிய அரசால் நீட் தேர்வு ஒழிப்பு குறித்துப் பேசாதது; மதுரை, கோவை நகர்களுக்கு மெட்ரோ இரயில் திட்டத்திற்குநிதி ஒதுக்காதது; தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் கடைசி இடத்துக்குத் தள்ளி இழிவுப் படுத்தியது போன்ற மாநில உரிமைகள் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாத தற்குறி அமைச்சர்கள்; தான்தோன்றித்தனமாகக் கடுமையான வார்த்தைகளால் எதிர்க்கட்சிகளையும், அதன் தலைவர்களையும் பற்றித் தேவையற்ற விமர்சனம் செய்து வருகிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">*"உங்கள் குடும்பத்தில் கடைசி முதல்வர் நீங்கதான் மு.க. ஸ்டாலின்?இதுதான் கடைசி; கிளம்புங்க இலண்டன் போய்க் கொள்ளையடித்த பணத்துடன் செட்டில் ஆகுங்க; குடும்பத்துடன் கிளம்புங்க!" என்று நாவடக்கம் இல்லாமல் ஆதவ் அர்ஜுனா என்ற "மக்கள் விரோதகோயபல்ஸ்" ஆபாச வார்த்தைகளால் மாமல்ல புரம் கூட்டத்தில் பேசினார். மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பியுள்ளார். சுரண்டல் இலாட்டரி பரிசுச்சீட்டுக் கொள்கைக் கும்பல் எனவும், போதைப் பொருள் கடத்தலில் சிக்கியுள்ள குடும்பத்தின் உறவினர் எனவும், வெகுஜன விரோதியாகப் மக்களால் பேசப்படும்ஒருவரானவர்; தேர்தல் புழுதிப் புயற் காற்றில் கோட்டைக் கொத்தளத்தில் ஒட்டிக்கொண்டுஅமைச்சரானவர்; அரசியல் அரிப்பெடுத்தவராய்க் கொத்தளக் கொழுப்பேறிப் பேசி வருகிறார்!.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">*அதைப்போல, அரசியல் வெள்ளத்தில் மலக்குப்பையாய் மிதந்து பல கரைகளைக் கண்ட தூய அரசியல்வாதி நிர்மல் குமார் என்னும் அடிக்கடி நினைவிழக்கும் மந்திரி ஒருவர்; தி.மு.க. தலைவர் தளபதி பற்றியும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பற்றியும் பேசித் துர்நாற்ற வார்த்தைகளால் வாந்தி எடுத்திருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">"நீட்" தேர்வு விவகாரத்தில் தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தில் பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்து குழப்பம் விளைவிக்க முயன்றனர்; த.வெ.க.வினர் கொடி, பேனரின்றிப் பங்கேற்றனர். ஆனால், தி.மு.க.வினர் ரூபாய் 200, 300 கொடுத்து ஆட்களை அழைத்து வந்து அங்கே குழப்பத்தை ஏற்படுத்தினர்" என்று தற்குறித்தனத்தோடு தாண்டவம் ஆடி இருக்கிறார். அத்துடன், "Gen-Zஎன்றால், என்னவென்று உதயநிதி ஸ்டாலினுக்குத் தெரியாது; இனியாவது அவர், "கோமாளித்த னமான" வேலைகளை விட்டுவிட்டு, சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" எனத் தமிழ்நாட்டுத் துக்ளக் சாம்ராஜ்யத் தலைமை அறிவாளிகளில் ஒரு வரான நிர்மல் குமார் உளறிக் கொட்டியிருக்கிறார்.மேலும், அவர் தகுதி பற்றிப் பேசிச் தன் தரத்தை இழந்திருக்கிறார். அவரே தனது மார்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு, தனக்குத் தானே எச்சில் துப்பி   கொண்டு இருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">*ஆர்.எஸ்.எஸ். இன் கைக் கூலிகளாக விளங்கும் சிலர் த.வெ.க.வில் ஐக்கியமாகி, ஆடிக் காற்றில் பறந்த எச்சில் இலைகள் போல்,அமைச்சர்களாகி உள்ளனர்.அவர்கள் கோட்டையில் அமர்ந்து "பொண்ணு ஊருக்குப் புதிது" என்பது போலப் புலம்பல் கச்சேரி நடத்திக் கொண்டு இருக்கின்றனர். தொகுதியில் நின்றவர் யார் வேட்பாளர்? அல்லது தொகுதி வாக்காளர் பெரு மக்கள் எவர்? என்று இருதரப்புக்குமே தெரியாமல் ஒரு மாய வலையில் கிடைத்த வெற்றியைப் பெற்று வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியி லிருந்தும் வேலி தாண்டிய வெள்ளாடுகளாக மாறிக் கடைசியில் தற்குறி கட்சியில் சேர்ந்து கரைந்து, அட்டைப் புலிக்கு ரெட்டை வாலாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அமைச்சரவையில் பொறுப்பேற்று இருக்கும் நிர்மல் குமார்கள் இப்பொழுது புலம்பல் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை நடத்துவது, கட்சியின் தலைவர் முதல்வர்ஜோசப் விஜய்யா? அல்லது ஆதவ் அர்ஜுனா? அல்லது நிர்மல் குமார் போன்ற நிழல் தோற்றங்களா? என்பது குறித்து மக்கள் மத்தியில், அவ்வப்போது அவர்கள் தரும் பேட்டி, செய்திகள் மூலம் அய்யப்பாடுஎழ ஆரம்பித்துஇருக்கிறது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">*தகுதியைப் பற்றிப் பேசும் இவர்; தான் நின்ற திருப்பரங்குன்றம் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் கூறியிருக்கிற தனது கல்வித் தகுதி போன்றவை உண்மைதானா?என்பதைச் சொல்லத் தலைப்பட வேண்டும். காரணம், அச்சு, காட்சிஊடகங்களில் அவரது சுயசரிதை பற்றிய சர்ச்சைகள் அவ்வப்போது கேள்விகளாக எழுந்து வருகின்றன . எனவே, இன்று அமைச்சராகி இருக்கும் அவரைப்பற்றிய சாதாரண குடிமக்கள் எழுப்பும் வினாக்களுக்கு உரிய விடைகளை தர வேண்டிய பொறுப்பும், மரியாதையும், கடமையும் அவருக்கு உண்டு. ஆதாயப் பதவி (Office of profit)எனும் அமைச்சராகிமக்களுடைய வரிப்பணத்தில் பொறுப்பில் இருந்து வருகிறார் . வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது கல்வித் தகுதி பற்றித் தந்திருக்கிற தகவல்கள் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்; தேர்தல் ஆணையத்திற்குத் தந்திருக்கிற தகுதி பற்றி உண்மையான விவரம் என்ன என்று ஆதாரங்களைக் காட்டிப் பொதுவெளியில் சொல்ல முன்வர வேண்டும்* .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">த.வெ.க. கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் கல்வித் தகுதியைத் தவறான முறையில் தேர்தல் உறுதிமொழி ப் பத்திரத்தில் (Affidavit) கொடுத்து முறைகேடுகள் செய்துள்ளனர். 6 பேர் பி.ஹெச்.டி, 22 பேர் முதுநிலைப் பட்டம், 5-பேர் ஐ.டி,8 பேர் எம்.பி.பி.எஸ் டாக்டர், 40 பேர் வழக்கறிஞர் பட்டம்படித்திருப்பதாக வும், பொறியாளர்களாகவும் இருக்கிறார்கள் என்றெல்லாம் 
த.வெ.க.முதலில் பொதுவெளியில் வெளியிட்டது. ஆனால், இவர்க ளில் ஒன்பது பேருக்கு மேல் தங்கள் கல்வித் தகுதியைத் தவறான முறையில் உயர்த்தி மோசடி செய்து வெளியிட்டுள்ளதாக அச்சு, காட்சி ஊடகங்கள் வாயிலாகக் கடுமையான விமர்சனங்கள் செய்யப்பட்டுள்ளது. காலாந்தக ஜெகதீஸ்வரி, ஜெ. முகமது பர்வேஸ் தங்களுடைய பெயருக்கு முன்னால் டாக்டர் என்று பயன்படுத்தினார்கள் என்றும், இவர்கள் பி. எச் .டி. தகுதியில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது போல் இராஜ்மோகன் தற்போது மந்திரி. உண்மைக்கு புறம்பான கல்வித் தகுதியைத் தங்கள் உறுதிமொழிப் பத்திரத்தில் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் விமர்சனங்கள் எழுகின்றன. மேலும், தஞ்சை தொகுதிவிஜய சரவணன், விருதுநகர் எஸ்.பி செல்வம், தாம்பரம் டி. சரத்குமார், குமாரபாளையம் ஜி. விஜயலட்சுமி,கவுண்டம்பாளையம் கனிமொழி சந்தோஷ், ஆவடி ஆர்.இரமேஷ் குமார், அம்பத்தூர் பாலமுருகன், போளூர் அபிஷேக், இப்படியான நபர்கள் த.வெ.க.வின் சமூக வலைதளம் பதிவுகளில் உள்ள கல்வித் தகுதிக்கும், அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள உண்மையான உறுதிமொழிப் பத்திரத்திற்கும் (Affidavit) இடையே பெரிய முரண்பாடுகள் இருப்பதாக விமர்சன, சர்ச்சைகள்எழுந்து உள்ளன. இவர்களது கல்வித் தகுதி குறித்துத் தேர்தல் ஆணையம் ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா? த.வெ.க தலைமை அல்லது அதன் தலைவர் ஜோசப் விஜய் இந்தச் சர்ச்சை குறித்து விளக்கம் கேட்டாரா? இந்த மோசடி அனைத்தும் உண்மையா? அல்லது பொய்யா? என்பது குறித்து இதற்குப் பதில் அளிக்க முன் வருவாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">*இதைப்போலத் தான் சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிற சி.டி. ஆர். நிர்மல் குமார் தனது கல்வித் தகுதியைத் தேர்தல் ஆணையத்தில் உறுதிமொழிப் பத்திரத்தில் (Affidavit)தாக்கல் செய்துள்ள பதிவுகளில் மோசடி என்றும் அது குறித்து உண்மையா? இல்லையா? என்றுபதில் சொல்ல முன்வருவாரா? என்று அச்சு, காட்சிஊடகங்களில் போன்றவற்றில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன* .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">*மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பரங் குன்றம் தொகுதியில் நின்ற போது, வேட்பு மனுவில் கல்வித் தகுதி குறித்து அளித்ததகவலின் படி, அவர் கணினி அறிவியல் (B.E.)ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2003 -லும்; எல்.எல்.பி (L.L.B) சட்டப்படிப்பு விவேகானந்தா சட்டக் கல்லூரி பெங்களூரு பல்கலைக்கழகம் - 2011 லும்; எம்.ஏ (குற்றவியல் மற்றும் போலீஸ் நிர்வாகம்) மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்- 2012 லும் படித்து முடித்ததாகக் கூறப்பட்டுள்ளது*.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர் படித்த L.L.Bபட்டம் முழு நேர படிப்பு குறித்த சர்ச்சையாகி உள்ளது. காரணம், அவர் முழு நேர படிப்பைத் கல்லூரி சென்று படிக்கவில்லை என்றும், தேர்வுகள் செமஸ்டர் காலங்களில் மட்டுமே கலந்து கொண்டு சட்டப்படிப்பு முடித்ததாகவும், முழு நேர சட்டப் படிப்புக்கான வருகை பதிவேடு (Attedance)அவரிடம் இல்லை என்றும்,பல தரப்பில் இருந்து விமர்சனங்கள்முன்வைக்கப் படுகின்றன. அவரது அதிகாரப்பூர்வ சுயவிவரங்களின்படி (profile)அவர் சட்டப் பட்டம் பெற்றுள்ளார் எனினும், அவர் வழக்கமான முழு நேர (Regular full time)மாணவராக கல்லூரிக்கு சென்று படித்தார் என்பதற்கான பதிவுகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆகவே, எந்தக் கல்லூரியில் என்ன பெயரோடு படித்தார்? முழு நேரமா? பகுதி நேரமா? பகுதி நேரம் என்றால் வழக்கறிஞர் பட்டம் பெற முடியாது. பகுதி நேரம் என்றால்வழக்கறிஞர்கள் ஆயம்(Bar Council of India-B.C.I)அங்கீகாரம் உண்டா? பல்கலைக்கழகம் மான்யக் குழு அங்கீகாரம் உண்டா? மாநில ஒன்றிய அரசுகள் அனுமதி உண்டா? கொரோனா காலத்தில் இலண்டனில் வேலையெனில், அதே நேரத்தில் இந்தியாவில் சட்டம் படித்தது எப்படி? ஐ.டி கம்பெனியில் வேலை செய்து கொண்டே பெங்களூரில் எப்படிச் சட்டப் படிப்புப் படித்திருக்க முடியும்? இவற்றுக்கெல்லாம் நிர்மல் குமார் பொது மக்களுக்கு விளக்கம் தர கடமைப்பட்டவர். காரணம் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அவர் அமைச்சர் பொறுப்பை வைத்து வருகிறார். அவர் வகித்து வரும் பதவி என்பது ஆதாயப் பதவியாகும் (Office of profit)அரசியலமைப்புச் சட்டப்படி தேர்தல் ஆணையத்தில் தந்த விவரங்கள் உண்மையா? இல்லையா? என்று அவர் தகுந்த ஆவணங்களோடு உண்மைக் தகவல்களை வெளியிட முன்வர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வெளிநாட்டில் வேலை செய்துகொண்டே இந்திய படிப்பு சாத்தியமாகுமா? தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்த தகவல்கள் உண்மையா?அபிடவிட்டில் மறைத்த தவறான தகவலா? இவர் பெற்ற பட்டம் படித்த கல்லூரி பொதுவாகவே ரெகுலர் கல்லூரி என்றால் B.C.Iஅங்கீகாரம் பெற்றதாகவும், மானிய குழு அனுமதி பெற்றதாகவும் இருந்தால் மட்டுமே எல்.எல்.பி ரெகுலர் கோர்ஸ் ஏற்கத்தக்கதாகும்.தவிரப் பகுதி நேரப் பரப்பு - Distance Educationக்கு அங்கீகாரம் இல்லை. அவர் தந்துள்ள ஆண்டுகள் முரணாக உள்ளன. கொரோனா காலத்தில் இலண்டன் வளைகுடா வேலை.அதே நேரம் பெங்களூரில் என்றால், பிசிஐயின் 75 விழுக்காடு வருகை பதிவு என்பது சாத்தியமில்லை. இதற்கு ஆதாரம் வேண்டும் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இலண்டனில் ஐ.டி அலு வலகத்தில் பணி செய்து, சம்ப ளம் வாங்கியபடியே அதுவும் பெங்களூருவில் எப்படிச் சட்டம் படித்து இருக்க முடியும்? ஒரு சாமானியக் குடிமகனாக உள்ள என் போன்ற மக்களுக்கு எங்கள் சட்ட அமைச்சர் என்ற முறையில் அவரது உண்மை யான கல்வித் தகுதியான சட்டப் படிப்பு பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது என்பது இந்திய குடி மக்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களின் அவசியமும் கடமையுமாகும். அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டாமா? நீங்கள் அரசாங்கத்திற்கு மற்றும் தேர்தல் ஆணை யத்திற்கும் வழங்கிய தகவல் அனைத்தும் உண்மையா? கல்வி தகுதியில் ஏதேனும் மாற்றம், மறைவு தவறாக உள்ளதா? மக்களை ஏமாற்றும் நோக்கம் இருந்ததாக இருந்தால், அதன் பின்னணி என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீங்கள் தவறு செய்ததாகக் கருதினால், மோசடி குறித்துத் தேர்தல் ஆணையம் மனு- Election petitionமக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் RP- Act 1951 section 100 (1) (D) and section125 Aஎன்றும், வேட்பு மனு 26இல் தாங்கள் பொய்த் தகவல் கொடுத்ததாக தங்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியும். அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அவர் மீதுவழக்கு தாக்கல் செய்ய முடியும். அத்துடன் தலைமை தேர்தல் ஆணையம் தந்த அபிடவிட்டில் தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஐபிசி 420 ஏமாற்றுதல், ஐ.பி.சி 199 பொய் சத்திய பிரமாணம் போன்ற பிரிவுகளில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க முடியும் என்பது அவருக்குத் தெரியுமா? தெரியாதா?அவர் தரும் விளக்கங் கள் ஆவணங்களோடு தரும் விளக்கங்கள் சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ள முடியும். இல்லையெனில்,அவர் மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர் என்று பொருள் அல்லவா? இதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு ஆளுநர், நீதிமன்றங்கள் தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திருப்பரங்குன்றம் கோயிலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர் நிர்மல் குமார் வருகைக்காக, கோயில் நடைதாமதமாக அடைக்கப்பட்டது. அது தொடர்பான வீடியோ வெளியாகி உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அமர்வு கண்டனம் தெரிவித்து, "எம்.எல்.ஏ. அமைச்சர்களுக்காகக் கடவுள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி இந்து சமய அறநிலையத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர் வகிக்கும் சட்டத்துறையில் அரசு *வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கப்பட்டதாக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் அதை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போவதாகவும் உயர், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இராஜா ராமன் என்பவர் கூறியுள்ளார். அதைப்போலஅமைச்சரின் பரிந்துரையின் பேரில் ரூபாய் 30 இலட்சம் வரை இலஞ்சம் கேட்கப்படுவதாகக் குற்றம் சாற்றி த.வெ.க வின் விழுப்புரம் வழக்கறிஞர் எம். ஞானசவுந்தரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் கொடுத்துள்ளார். அண்மையில் இதே அரசு வழக்கறிஞர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி அவருடைய கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி மாவட்ட த.வெ.க செயற்குழு உறுப்பினர் அனீஸ் என்பவர் ரூபாய் 15 இலட்சம் இலஞ்சப் பேரம் நடத்தியதாகக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவருடைய துணைவியார் பல்லாவரம் மறைமலை அடிகள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்துவந்த கணித ஆசிரியர். கவுன்சிலிங் இல்லாத நேரத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி விதிகள் மீறித் திருவல்லிக்கேணியிலுள்ள லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குப் பணியிடம் மாற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்படி விமர்சனங்கள் உள்ள நிர்மல் குமார் மீதும் அவரது கல்வித் தகுதி பற்றி அச்சு காட்சி ஊடகங்கள் சமூக வலைதளங்கள் மூலம் விமர்சனம் கலந்தகேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு எந்தவித பதிலும் இதுவரை நிர்மல் குமார் சொன்னதாகத் தகவல் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தொடக்கத்தில் பா.ஜ.க.வில் (2009-–2023)ஊடகப் பிரிவில் இருந்து வந்த அவர்; பின்பு எடப்பாடி முன்னிலையில் 
அ.தி.மு.க.வில் சேர்ந்து ஊடகப் பிரிவில் இருந்து வந்தார் (2023 –-2025). அதன் பின் த.வெ.க.வில் சேர்ந்து ஊடகப் பிரிவில் பணியாற்றி வந்த அவர், இன்றுஅமைச்சராகிப் பா.ஜ.க.வின் ஊன்றுகோலாகி ஊர்வலம் வருகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">"ஒரு திறமையற்றவன் ஜொலித்தால்.. இப்படி எண்ணிக்கொள்.(பேரும் புகழும் வரும் போது). “அடிக்கடி காற்றில் பறவையும் பறக்கும்; பேப்பரும் பறக்கும்!காற்று நின்றால் தான்... பறவை எது? பேப்பர் எது என்று தெரியும்?...." என்று கலைஞர் சொன்ன வைர மொழியை நாம் நினைவு கூர வேண்டி இருக்கிறது.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>