<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,73,957,916" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 01 2026 15:10:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260802T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="02082026-TRY-05" position.sequence="05" ex-ref="02082026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="27">பாரத மாதா - தமிழ்த் தாய்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="27"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="66">ஏற்றத்தாழ்வு உண்டாக்கிய பா.ஜ.க.! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">எதிர்க்கத் துணிவில்லாத த.வெ.க.!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup813730_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="18">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மிழ்த்­தாய் வாழ்த்­தான ‘நீரா­ருங் 
கட­லு­டுத்த’ பாடலை தன் மனோன்­ம­ணி­யம் காப்­பி­யத்­தில் இடம்­பெ­றச் செய்த சுந்­த­ர­னார் பெய­ரி­லான நெல்­லை­யில் உள்ள  ‘மனோன்
ம­ணி­யம்’ சுந்­த­ர­னார் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 
பட்­ட­ம­ளிப்பு விழா­ வி­லேயே தமிழ்த்­தாய் வாழ்த்து மூன்­றா­வது இடத்­திற்­குத் தள்­ளப்­பட்­டு­விட்­டது. முதல் இடத்தை ‘வந்தே 
மாத­ரம்’ பிடித்­து­விட்­டது. ஆளு­நர் ஆட்சி அமை­யா­மல் தடுக்­கின்ற வியூ­கம் என்றுகூறி­ய­வர்­கள், த.வெ.க.வை ஆட்­சி­யில் உட்­காரவைத்து மூன்று மாதங்­கள் முடி­வ­தற்­குள், ஆளு­ந­ரின் உத்­த­ர­வைக் கார­ணம் காட்டி, ‘வந்தே மாத­ரம்’ பாடலை முத­லா­வ­தா­கப் பாடச் செய்­தி­ருக்­கி­றார், தமிழ்­நாட்டு 
மக்­க­ளின் வரிப்­ப­ணத்­தில் பல்­க­லைக்­க­ழ­கத் துணை வேந்­தர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆளு­நர் ஆட்சி என்­பது மறை­முக பா.ஜ.க. ஆட்சி என்­றும் சொல்­லப்­பட்ட நிலை­யில், பா.ஜ.க நேர­டி­யாக ஆட்சி செய்­யும் இந்­திய ஒன்­றி­யத்­தில், ‘வந்தே மாத­ரம்’ பாட­லைப் பாடு­வது கட்­டா­யம் என்­பது சட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. அர­சின் முக்­கிய நிகழ்­வு­க­ளி­லும், கல்வி நிலை­யங்­க­ளி­லும் ‘வந்தே மாத­ரம்’ பாடலை முழு­மை­யா­கப் பாட­வேண்­டும் என்­றும், வந்தே மாத­ரம் பாடலை அவ­ம­தித்­தால் சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டும் என்­றும் தேசி­யச் சின்­னங்­கள் அவ­ம­திப்பு திருத்­தத் தடைச் சட்­டம் 2026–ன் வாயி­லாக சட்­ட­மி­யற்றி இருக்­கி­றது ஒன்­றிய பா.ஜ.க அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘வந்தே மாத­ரம்’ பாடல் இயற்­றப்­பட்­ட­தன் 150ஆவது ஆண்­டி­னை­யொட்டி, பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க. அரசு, ‘பாரத கலாச்­சா­ர‘த்­தைக் காப்­பாற்­றும் வகை­யில் இந்­தச் சட்­டத் திருத்­தத்தை நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தமே இல்­லா­மல் இரு அவை­க­ளி­லும் நிறை­வேற்றி, ஜன­நா­ய­கத்­தின் தலை­யில் சம்­மட்­டி­யால் அடித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வங்­கா­ளத்­தைச் சேர்ந்த பக்­கிம் சந்­திர சாட்­டர்ஜி என்­ப­வர் 1882ஆம் ஆண்டு வெளி­யிட்ட ‘ஆனந்த மடம்’ என்ற நாவ­லில் ‘வந்தே மாத­ரம்’ என்று தொடங்கி 6 சர­ணங்­க­ளைக்  கொண்ட பாடல் இடம் பெற்­றி­ருந்­தது. சமஸ்­கி­ரு­தச் சொற்­கள் நிறைந்த வங்­கா­ளத்­து­டன் 1876ஆம் ஆண்­டி­லேயே இந்­தப் பாடலை எழு­திய அவர், தன்­னு­டைய நாவ­லில் இடம் பெறச் செய்­தார். ஜது­நாத் பட்­டாச்­சார்யா என்­ப­வர் அதற்கு இசை­ய­மைத்­தார். 1896ஆம் ஆண்டு கொல்­கத்­தா­வில் இந்­திய தேசிய காங்­கி­ரஸ் நிகழ்­வில் கவி ரவீந்­தி­ர­நாத தாகூர் இந்­தப் பாட­லைப் பாடி­னார். அதன்­பின் காங்­கி­ரஸ் மேடை­கள், மாநா­டு­க­ளில் வந்­தே­மா­த­ரத்தை தேச­பக்­திப் பாட­லா­கப் பாடி வந்­த­னர். ரவீந்­தி­ர­நாத தாகூ­ரும் இந்­தப் பாட­லுக்கு மெட்­ட­மைத்­துள்­ளார். வந்தே மாத­ரத்­திற்­குப் பின்­னர் இசை­ய­மைத்­த­வர் ஹேமந்த் குமார் முகர்ஜி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘வந்தே மாத­ரம்’ என்­ப­தற்கு ‘தாயை வணங்­கு­கி­றோம்‘ என்று பொரு­ளா­கும். அதா­வது, பாரத மாதாவை வணங்­கு­கி­றோம் எனத் தொடங்கி, வங்­காள மொழி­யில் சமஸ்­கி­ரு­தத்தை நிறைத்து எழு­தப்­பட்ட இப்­பா­ட­லின் 6 சர­ணங்­க­ளில், முதல் இரண்டு சர­ணங்­க­ளில் இந்­திய நாட்­டின் இயற்­கைச் சிறப்­பு­கள் சித்­த­ரிக்­கப்பட்­டி­ருக்­கும். அடுத்த சர­ணத்­தில் பாரத மாதாவை தெய்­வ­நி­லைக்­குக் கொண்டு சென்று, அந்­தத் தாயின் கால­டி­யில் வாளேந்தி நின்று பகை­வர்­களை அழிக்­கும் ஆற்­றலை வேண்­டு­வ­தாக அமைந்­தி­ ருக்­கும். அடுத்­த­டுத்த சர­ணங்­க­ளில், பாரத மாதாவை கோயில்­க­ளில் உள்ள தெய்­வச்­சி­லை­க­ளு­டன் ஒப்­பிட்­டு­வ­து­டன் துர்­கா­ தேவி, இலட்­சுமி, சரஸ்­வதி ஆகிய இந்து மதப் பெண் தெய்­வங்­க­ளு­டன் ஒப்­பிட்­டும் பாடப்­பட்­டி­ருக்­கும். இந்­தச் சர­ணங்­கள் காங்­கி­ரஸ் கட்­சிக்­குள்­ளேயே விவா­தங்களை உரு­வாக்­கின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இந்­துக்­க­ளு­டன் முஸ்­லிம்­கள், சீக்­கி­யர்­கள் உள்­ளிட்­ட­வர்­க­ளும் இந்­திய விடு­த­லைப் போராட்­டத்­தில் சம­ர­ச­மற்ற பங்­க­ளித்து வந்­த­னர். அனைத்து மதத்­தி­ன­ரும் இணைந்­தி­ருக்­கும் விடு­த­லைப் போரில், ஒரு மதத்­தின் தெய்­வங்­க­ளைப் பாடு­வ­தற்கு எதிர்ப்­பு­க­ளும் எழுந்­தன. முஸ்­லிம்­க­ளின்மார்க்க நெறிப்­படி அவர்­க­ளின் ஏக இறை­வ­னைத் தவிர வேறு யாரை­யும் வணங்­கு­தல் கூடாது. அத­னால், ‘பாரத மாதாவை வணங்­கு­கி­றேன்’ என்று பொருள்­ப­டும்­ப­டி­யான, ‘வந்தே மாத­ரம்’ என்­ப­தைப் பாடு­வ­தில் அவர்­க­ளுக்­குத் தயக்­கம் இருந்­தது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘வந்தே மாத­ரம்’ பாடல் இடம்­பெற்ற ‘ஆனந்த மடம்’ நாவல் என்­பது பிரிட்­டி­ஷா­ரின் காலனி ஆட்­சியை ஆத­ரிக்­கும் கருத்­து­க­ளைக் கொண்­ட­தா­கும். இந்­துக்­க­ளை­யும் பிரிட்­டி­ஷா­ரை­யும் ஒருங்­கி­ணைக்­கும்  தன்­மை­யி­லான அந்த நாவ­லின்கண்­ணோட்­டத்­தின்­படி ‘வந்தே மாத­ரம்’ பாடல், கதைக்­குப் பொருத்­த­மாக இருக்­க­லாம். ஆனால், பிற மதத்­தி­ன­ரின் உணர்­வு­க­ளுக்கு இதில் உள்ள பல வரி­கள் ஏற்­ற­வை­யல்ல என்று தாகூரே காங்­கி­ரஸ் தலை­மை­யி­டம் தெரி­வித்­தி­ருந்­தார்.   இத­னை­ய­டுத்து, 1937ஆம் ஆண்டு நடந்த இந்­திய தேசிய காங்­கி­ரஸ் மாநாட்­டில், ‘வந்தே மாத­ரம்’ பாட­லில் உள்ள  முதல் இரண்டு சர­ணங்­களை மட்­டும் தேச­பக்­திப் பாட­லா­கப் பாடு­வது என காந்தி, நேரு, நேதாஜி உள்­ளிட்ட தலை­வர்­க­ளால் தீர்­மா­னிக்­கப் பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சுதந்­தி­ரப் போராட்­டக் காலத்­தில் காங்­கி­ரஸ் மாநாட்டு மேடை­க­ளில் பல பாடல்­கள் பாடப்­ப­டு­வது வழக்­கம். கவி ரவீந்­தி­ர­நாத் தாகூர் எழு­திய, ‘ஜன கண மன’ பாட­லும் 1911ஆம் ஆண்டு முதல் முக்­கி­யத்­து­வம் பெற்று வந்­தது. வங்­காள மொழி­யில் தாகூர் எழு­திய முழுப் பாடல் 5 சர­ணங்­க­ளைக் கொண்­ட­தா­கும். முழுப்­பா­டலை பிரம்ம ஞான சபை­யி­னர் பாடி வந்­த­னர். காங்­கி­ரஸ் கட்சி மேடை­க­ளில் இந்­தி­யா­வின் வலி­மை­யை­யும், பன்­மு­கத்­தன்­மை­யை­யும் இயற்கை வள­மான மலை­கள் ஆறு­க­ளை­யும் போற்­றிப்­பாடி, ‘வெற்றி வெற்றி வெற்றி‘ என முழங்­கும் முதல் இரண்டு சர­ணங்­க­ளைப் பாடி­னர். பாடலை எழு­திய தாகூரே இதற்கு மெட்­ட­மைத்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">காங்­கி­ர­சி­லி­ருந்து விலகி, இந்­திய தேசிய ராணு­வத்­தைத் தொடங்கி பிரிட்­டி­ஷா­ரு­டன் போர் நடத்­திய நேதாஜி சுபாஷ் சந்­தி­ர­போஸ், 1942ஆம் ஆண்டு ஜெர்­ம­னி­யில் தங்­கி­யி­ருந்­த­போது, ‘ஜன கண மன‘ பாடலைமுதன் முறை­யாக இந்­தி­யா­வின் தேசிய கீத­மாகஅறி­விக்க, அது ஜெர்­ம­னி­யின் ‘ஹாம்­பர்க்’ வானொலி மூலம் ஒலி­ப­ரப்­பப்­பட்­டது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தி­யா­வுக்கு விடு­தலை கிடைத்­த­பி­றகு அர­சி­யல் நிர்­ணய சபை உரு­வாக்­கப்­பட்­டது. அதில் நாட்­டின் தேசிய கீத­மாக எந்­தப் பாடலை வைப்­பது என்­ப­தில் ‘வந்தே மாத­ர­மும் ஜன கண மன­வும்’ போட்டி போட்­டன. டாக்­டர் ராஜேந்­திர பிர­சாத் போன்ற வல­து­சாரி சிந்­தனை கொண்­ட­வர்­கள் ‘வந்தே மாத­ரம்’ பாட­லுக்கு ஆத­ரவு தெரி­வித்­த­னர். அவர்­க­ளும்­கூட சர்ச்­சைக்­கு­ரிய சர­ணங்­க­ளைத் தவிர்த்து, முதல் இரண்டு சர­ணங்­களை மட்­டுமே வலி­யு­றுத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இந்­திய அர­சி­யல் நிர்­ணய சபை­யின் ஆலோ­ச­னை­யின் இறு­தி­யில், தேசிய கீத­மாக(National Anthem) தாகூ­ரின் ‘ஜன கண மன‘–­வை­யும், தேசி­யப் பாட­லாக(National Song) ‘வந்தே மாத­ர‘த்­தை­யும் முடிவு செய்­த­னர். இரண்­டிற்­கும் சம மதிப்பு உண்டு. எனி­னும், தேசிய கீதம் என்­பது வெளி­நா­டு­க­ளில் இந்­தி­யப் பிர­தி­நி­தி­கள் பங்­கேற்­கும் நிகழ்­வி­லும் இசைக்­கப்­ப­டும். ‘வந்தே மாத­ரம்’ கட்­டா­ய­மா­கப் பாட­வேண்­டிய பாட­லாக இல்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முப்­ப­டை­கள் அணி­வ­குப்பு, வானொலி, தொலைக்­காட்சி போன்­ற­வற்­றில் வந்தே மாத­ரத்­தின் முதல் இரண்டு சர­ணங்­கள் பாடப்­ப­டு­வது வழக்­க­மாக இருந்­தது. இதற்கு மாறாக, ‘வந்தே மாத­ரம்’ பாட­லில் சர்ச்­சைக்­கு­ரிய பகு­தி­க­ளை­யும் சேர்த்து, 6 சர­ணங்­க­ளை­யும் கட்­டா­யம் எல்லா நிகழ்­வு­க­ளி­லும் பாட வேண்­டும் என சட்­டத்­தி­ருத்­தம் செய்­துள்­ளது பா.ஜ.க அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வின் பன்­மு­கத்­தன்­மைக்கு எதி­ரான மத­வா­தத் தன்­மை­யு­ட­னும்,  ஜன­நா­ய­கத்­திற்கு மாறாக எதேச்­ச­தி­கார முறை­யி­லும் வந்தே மாத­ரத்­தின் 6 சர­ணங்­க­ளை­யும் திணிப்­பதை எதிர்த்து தி.மு.க.வின் பொதுச்­செ­ய­லா­ள­ரும், நாடா­ளு­மன்­றத் தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி எம்.பி. தன் கண்­ட­னக் குரலை எழுப்­பி­னார். சுதந்­தி­ரத்­தின் போது இந்­தி­யாவை இரண்­டா­கப் பிள­வு­ப­டுத்­தி­ய­தற்கு சாவர்க்­க­ரும், ‘வந்தே மாத­ரம்’ பாட­லும்­தான் கார­ணம் என்­கிற வர­லாற்­றுத் தக­வலை தி.மு.க துணைப் பொதுச் செய­லா­ளர் ஆ.ராசா எம்.பி. நாடா­ளு­மன்­றத்­தில் முழங்­கி­னார். ஜன­நா­ய­கத் தன்­மை­யற்ற முறை­யில், அவ­ரது மைக்கை அணைக்­கச் செய்­து­விட்டு, விவா­த­மே­யின்றி சட்­டத் திருத்த மசோ­தாவை நிறை­வேற்­றி­யது பா.ஜ.க. அரசு.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எனும் பேரி­யக்­கம் இந்­திய இறை­யாண்­மைக்­குட்­பட்டு செயல்­ப­டக்­கூ­டிய அர­சி­யல் கட்­சி­யா­கும். இந்­தி­யா­வின் வலிமை என்­பது பன்­மு­கத்­தன்மை கொண்ட அதன் மாநி­லங்­க­ளின் தனித்­து­வ­மான தன்­மை­யில்­தான் உள்­ளது என்­பதை உணர்ந்து செயல்­ப­டும் இயக்­கம். அத­னால்­தான், மாநில சுயாட்­சிக்­கான குரலை முன்­னெ­டுக்­கி­றது. இந்­தி­யா­வுக்­கென தேசிய கீதம் இருப்­பது போல, தமிழ்­நாட்­டிற்­கென ஒரு அதி­கா­ரப்­பூர்வ பாடல் இருக்க வேண்­டும் என்று முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் முதல்­வ­ராக இருந்­த­போது, ‘தமிழ்த்­தாய்’ வாழ்த்­தாக மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் எழு­திய ‘நீரா­ருங் கட­லு­டுத்த’ என்ற பாட­லைத் தேர்வு செய்­தார். அதற்கு மெல்­லிசை மன்­னர் எம்.எஸ்.விஸ்­வ­நா­தன் இசை­ய­மைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தேசிய கீத­மான ‘ஜன கண மன‘ பாடும்­போது எப்­படி அதன் மொழி–­பொ­ருள் புரி­யா­விட்­டா­லும் நாட்­டுப் பற்­று­ட­னும், இந்­தி­யர்­கள் என்ற உணர்­வு­ட­னும் நாம் அனை­வ­ரும் எழுந்து நின்று மரி­யாதை தரு­கி­றோமோ, அது­போல தமிழ்­நாடு அர­சின் சார்­பில் நடை­பெ­றும் நிகழ்­வில் பங்­கேற்­கும் ஆளு­நர் உள்­ளிட்ட முக்­கி­யப் பத­வி­க­ளில் உள்­ள­வர்­கள், எந்த மொழிக்­கா­ரர்­க­ளாக இருந்­தா­லும் அவர்­க­ளுக்­குப் பொருள் புரி­யா­விட்­டா­லும் தமிழ்த் தாய் வாழ்த்­துப் பாட­லுக்கு எழுந்து நிற்க வேண்­டும் என்ற நிலையை உரு­வாக்கி, மாநில உரி­மையை நிலை­ நாட்­டி­ய­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘நீரா­ருங் கட­லு­டுத்த..‘ எனத் தொடங்­கும் அந்­தப் பாட­லில் இடம்­பெற்­றி­ருந்த, ‘ஆரி­யம் போல உலகு வழக்கு அழிந்­தொ­ழிந்து சிதை­யா­மல்..’ என்ற பிற மொழி­கள் குறித்த முர­ணா­னக் கருத்­து­க­ளை­யும், வாழ்த்­துப் பாட­லுக்­குப் பொருத்­த­மில்­லாத பகு­தி­க­ளை­யும் பயன்­ப­டுத்­தா­மல் தமி­ழை­யும் தமிழ்­நாட்­டை­யும் இந்­திய நிலப்­ப­ரப்­பை­யும் போற்­று­கின்ற வரி­களை மட்­டும் பயன்­ப­டுத்­தி­டச் செய்­தார் கலை­ஞர். இது­தான் பன்­மு­கத்­தன்­மையை மதிக்­கின்ற செய­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்த்­தாய் வாழ்த்து நம் தாய்­மொ­ழி­யைப் போற்­று­வ­து­டன், மற்­ற­வர்­க­ளின் உணர்­வை­யும் மதிக்­கி­றது. இந்­தப் பாடல் தமிழை வாழ்த்­து­கி­றது. வணங்­கச் சொல்­ல­வில்லை. வணங்­கு­வ­தும் வணங்­கா­த­தும் அவ­ர­வர் நம்­பிக்­கை­யைப் பொறுத்­தது. ‘தாயை வணங்­கு­கி­றேன்‘ என்ற பொருள் கொண்ட, வந்தே மாத­ரம் பாட­லில் பல மதத்­தி­ன­ரின் உணர்­வு­க­ளுக்கு மாறா­க–­எ­தி­ராக உள்ள வரி­க­ளைப் பாடியே ஆக வேண்­டும் எனக் கட்­டா­யப்­ப­டுத்தி சட்­டம் இயற்­றி­யுள்­ளது ஒன்­றிய பா.ஜ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாநில உரி­மை­க­ளைப் பறிக்­கின்ற வகை­யில், தமிழ்­நாட்­டில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கப் பட்­ட­ம­ளிப்பு விழாக்­க­ளி­லும், ஆளு­நர் பங்­கேற்­கும் பிற நிகழ்­வு­க­ளி­லும், ஏனைய நிகழ்­வு­க­ளி­லும் ‘வந்தே மாத­ரம்’ பாட­லுக்கு 
முத­லி­டம் தரப்­பட்டு, தமிழ்த்­தாய் வாழ்த்து பின்­தள்­ளப்­பட்­டுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்டை ஆள்­கின்ற விஜய் அரசு வெற்­றுச் சவ­டால் விடு­கி­றதே தவிர, நேர்­மை­யா­ன–­து­ணிச்­ச­லான எதிர்ப்­பைக் காட்­டு­வ­தற்­குப் பயந்து நடுங்­கு­கி­றது. ‘வாடி..வாடி.வாடி..கைப்­ப­டாத சி.டி’ போன்ற பாடல்­க­ளில் மயங்­கிக் கிடக்­கும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு தமிழ்த்­தாய் வாழ்த்து பற்றி என்ன கவலை?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>