<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="500,64,956,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 04 2026 03:59:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260804T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="04082026-VLR-08" position.sequence="08" ex-ref="04082026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="49">மாணவர்களின் எழுச்சி நேற்று! இன்று! நாளை!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="49">கார்ப்பரேட்டுகளின் கைகளில் கடைத் தேங்காயாகிவிட்ட “நீட்”!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup793952_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">  </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.7">C</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">JP (காக்­ரோச் ஜனதா கட்சி) சார்ந்த மாண­வர்­க­ளும் இளை­ஞர்­க­ளும் “நீட்” தேர்வு வினாத்­தாள் கசிவு பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு உரிய இழப்­பீடு வழங்க வேண்­டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து மேலும் இந்த வேண்­டாத விளை­வு­க­ளுக்­குக் கார­ண­மான ஒன்­றிய அரசு கல்­வித்­துறை அமைச்­சர் “தர்­மேந்­திர பிர­தான்” பொறுப்­பேற்று ராஜி­னாமா செய்ய வேண்­டு­மென்ற கோரிக்­கை­யை­யும் வலி­யு­றுத்தி டெல்லி “ஜந்­தர் மந்­தர்” பகு­தி­யில் தொடர்ந்து நடை­பெற்று முடிந்­துள்ள மாண­வர்­க­ளின் வீறு­கொண்ட தன்­னெ­ழுச்­சி­யான போராட்­டத்தை அடக்கி ஒடுக்க ஒன்­றிய அரசு கையாண்ட முறை­யா­னது எந்த வகை­யி­லும் ஏற்­பு­டை­ய­தல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">காக்­ரோச் ஜனதா கட்சி (CJP) மாண­வர்­கள் நடத்தி வரும் “நீட்” தேர்வு முறை - கேடு­க­ளுக்கு எதி­ரான போராட்­டம் எத்­த­கைய விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்­பதை ஒன்­றிய அரசு உரிய உள­வுத்­து­றை­யின் மூல­மாக ஆய்ந்­த­றிந்து, அதற்­கான முன்­னேற்­பாடு­ களை முன்­கூட்­டியே செய்­தி­ருக்க வேண்­டும். “நீட்” எதிர்ப்­புப் போராட்­டத்­தில் தொடர்­பு­டைய மாண­வர் அமைப்­பின் கோரிக்­கை­களை பரி­சீ­லனை செய்து அதற்­கான தீர்­வு­களை முன்­கூட்­டியே அந்த அமைப்­பின் இரு­பால் மாண­வர்­கள் பிர­தி­நி­தி­கள் பேசி கலந்­தா­லோ­சித்து, உரிய முடி­வு­களை மேற்­கொண்­டி­ருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">ஆனால், அதற்கு மாறாக ஒன்­றிய அரசு எத்­த­கைய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்­ளா­மல் மாண­வர்­க­ளின் மிகப்­பெ­ரிய தன்­னெ­ழுச்­சி­யான உணர்ச்­சிப்­பூர்­வ­மான அடர்த்­தி­யான தொடர் போராட்­டத்தை காவல்­து­றை­யின் அடக்­கு­மு­றை­கள் மூலம் கட்­டுக்­குள் கொண்­டு­வர பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டது, எந்த வகை­யி­லும் அமை­தியை ஏற்­ப­டுத்­த­வில்லை என்­ப­தோடு அனைத்து தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து எதிர்­வி­னையை ஏற்­ப­டுத்­தி­யது ஒன்­றிய அர­சின் இந்த விப­ரீ­த­மான காவல்­து­றை­யின் அடக்­கு­மு­றை­கள் கார­ண­மாக மாண­வர்­க­ளின் போராட்­டம் நாளுக்­கு­நாள் அதி­க­ரித்து தீவி­ர­மா­னதே தவிர, கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வர பத்­தி­ரிக்கை மற்­றும் காட்சி ஊட­கங்­கள் மூலம் நாடும், நாமும் தெளி­வா­கவே பார்க்க முடிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">மாண­வர்­க­ளின் இந்­தப் போராட்­டத்­தின் வலி­மை­யான கோரிக்கை இரு­பால் மாண­வர்­கள் மத்­தி­யில் தானா­கவே உரு­வான பேரெ­ழுச்­சி­யின் அடிப்­படை உண்­மையை ஒன்­றிய அரசு புரிந்து கொள்ள மறுப்­பது நியா­ய­மற்­ற­தும், இயற்கை நீதிக்கு மாறா­ன­து­மா­கும். இந்­தப் போராட்­டத்­தின் மூலம் மாண­வர்­கள் முன்­வைக்­கும் கோரிக்கை என்­பது முற்­றி­லும் மாண­வர்­க­ளின் எதிர்­கால நலன் மற்­றும் உரிமை சார்ந்­தவை என்­பதை இந்­தக் கட்­டு­ரை­யில் படிப்­ப­வர்­கள் நன்கு புரிந்து கொள்ள முடி­யும் என்­ப­தற்­காக அவர்­க­ளின் அந்த கோரிக்­கை­கள் கீழ்­வ­ரு­மாறு பட்­டி­ய­லி­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">1.	“நீட்” வினாத்­தாள்­கள் தேர்வு தேதிக்கு முன்­கூட்­டியே கசிந்­தது எப்­படி?  என்­ப­தற்­கான நியா­ய­மான விளக்­கத்தை போரா­டிய மாண­வர்­கள் கேட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">2.	“நீட்” வினாத்­தாள்­கள் முன்­கூட்­டியே கசிந்து வெளி­வந்­த­மை­யால், பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்­கு­ரிய இழப்­பீடு வேண்­டும் என்ற கோரிக்­கையை முன்­வைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">3.	“நீட்” தேர்வு வினாத்­தாள் பற்­றிய இந்த தவ­று­க­ளுக்­கெல்­லாம் தார்­மீ­கப் பொறுப்­பேற்று ஒன்­றிய அர­சின் கல்­வித்­துறை அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் ராஜி­னாமா செய்ய வேண்­டும் என்ற வலு­வான கோரிக்­கையை எழுப்­பி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">மேற்­கண்ட கோரிக்­கை­களை முன்­வைத்து நடை­பெற்ற போராட்­டத்­தின் விளை­வாக மத்­திய அர­சின் காவல்­துறை கட்­டுப்­பாட்­டை­மீறி, தலை­ந­கர் டெல்­லி­யில் பெரி­தாக சட்­டம்­ஒ­ழுங்கு பிரச்­ச­னை­யில் எதிர்­கொள்ள வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­ட­தால், விழித்­துக் கொண்ட ஒன்­றிய அர­சின் காக்­ரோச் ஜனதா கட்சி மாண­வர்­க­ளின் பிர­தி­நி­தி­களை பேச்சு வார்த்­தைக்கு அழைத்து ஒரு வழி­யாக ஒன்­றிய கல்­வித்­துறை அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் ராஜி­னாமா செய்­வதை ஒப்­புக்­கொண்டு ராஜி­னாமா செய்­த­தால் தொடர்ந்து உண்ணா நோன்பு மேற்­கொண்­டி­ருந்த சோனம் வாங்­சுக் உண்­ணா­வி­ர­தத்தை முடித்­துக் கொண்­டார் என்­றா­லும் போரா­டிய மாண­வர்­க­ளின் எதிர்­கால வாழ்க்கை நலன்­களை ஒன்­றிய அரசு உணர மறுத்து ஆட்­சி­அ­தி­கா­ரத்தை தவ­றா­கப் பயன்­ப­டுத்தி மாண­வர்­க­ளின் தன்­னெ­ழுச்­சி­யான போராட்­டத்தை தடுக்க நினைத்­தது தவ­றா­னது என்­பதே இந்­திய ஒன்­றிய மக்­க­ளின் ஒரு­மித்த கருத்­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">ஏனெ­னில், 21 ஆம் நூற்­றாண்டு இளை­ஞர்­க­ளின் சிந்­த­னை­யெல்­லாம் அனை­வ­ருக்­கும் சம­மான வாய்ப்பு என்ற சம­தர்­மக் கோட்­பாட்டை நோக்­கியே நகர்­கி­றது. இளை­ஞர்­க­ளின் இத்­த­கைய சிந்­த­னை­க­ளுக்கு ஆட்­சி­அ­தி­கா­ரத்­தி­லுள்ள ஆதிக்­க­வர்க்­கம் தடை­செய்­யு­மா­யின், அதை தகர்ப்­ப­தற்கு தடந்­தோள் தட்­டு­வதே தற்­போ­தைய மாண­வர்­க­ளின் மன­நி­லை­யாக உள்­ளது. அதற்­கான பரி­சோ­தனை களம்­தான் தலை­ந­கர் டெல்­லி­யில் ஜந்­தர் மந்­த­ரில் நடை­பெற்ற “நீட்” எதிர்ப்பு மாண­வர்­கள் போராட்­ட­மா­கும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">மேலும், நடந்­து­மு­டிந்த அந்­தப் போராட்­டத்­தின்­போது போரா­டிய மாண­வர்­கள்­மீது போடப்­பட்ட வழக்­கு­களை திரும்­பப்­பெற வேண்­டு­மென்று உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் தொடுக்­கப்­பட்ட வழக்­கில் குற்­றப்­பின்­னணி உள்­ள­வர்­க­ளைத்­த­விர, மற்ற மாண­வர்­கள் விடு­விக்­கப்­பட வேண்­டு­மென்ற தீர்ப்பு வந்­தி­ருப்­பது போரா­டிய மாண­வர்­க­ளுக்கு கிடைத்த வெற்­றி­யா­கும். மேலும், “நீட்” தேர்வு குறித்த மாண­வர்­கள் போராட்­டம் இத்­து­டன் இப்­போது முடித்து வைக்­கப்­பட்­டா­லும், எதிர்­கா­லத்­தில் இத்­த­கை­யப் போராட்­டம் உரு­வா­காது என அறு­தி­யிட்டு உறு­தி­யாக கூற­வி­ய­லாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">“நீட் வினாத்­தாள் கசிவு” என்ற குற்­றச்­செ­யல் யாருக்­காக, யாரால் திட்­ட­மிட்டு அரங்­கேற்­றப்­ப­டு­கி­றது என்­பதை ஒன்­றிய அர­சும் இந்­திய ஒன்­றி­யத்­தில் வாழும் சாதா­ரண - சாமா­னிய அடித்­தட்டு மக்­க­ளும், மக்­கள் பிர­தி­நி­தி­க­ளும் ஆழ்ந்து சிந்­திக்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றோம். ஏனெ­னில், “நீட் வினாத்­தாள் கசிவு” என்ற குற்­றச்­செ­யல்­களை சாதா­ரண - சாமா­னிய மக்­க­ளால் செய்­து­விட முடி­யாது. வச­தி­வாய்ப்­புள்­ள­வர்­க­ளா­கத்­தான் இருக்க முடி­யும் என்­பதே நிதர்­ச­ன­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">அவர்­க­ளது பிள்­ளை­களை மருத்­து­வ­ராக்­கு­வ­தற்கு எத்­த­கைய முறை­கே­டான செயல்­க­ளைச் செய்­வ­தற்­கும், முயற்சி மேற்­கொள்­வ­தற்­கும் தயா­ராக பெருந்­தொகை செலவு செய்­வ­தற்­கும் தயா­ராக இருப்­பார்­கள் என்­ப­தற்கு கடந்­த­கால “நீட்” தேர்வு ஆள்­மா­றாட்ட வழக்­கு­களே ஆதா­ரங்­க­ளா­கும். இன்­னொரு புறம் சாதா­ரண சாமா­னிய கடை­நிலை மக்­க­ளால் தங்­கள் பிள்­ளை­ க­ளுக்கு இத்­த­கைய தவ­றான முயற்­சி­களை மருத்­து­வ­ராக்க வேண்­டு­மென்ற வாய்ப்பு எட்­டாக்­கனி ஆகி­வி­டு­வ­தால்­தான் அடித்­தட்டு மக்­க­ளின் குழந்­தை­கள் - மாண­வர்­கள் “அனிதா” போன்ற விரும்­பத்­த­காத முடி­வு­களை எடுக்­கி­றார்­கள் என்­பது உள்­ளங்கை நெல்­லிக்
­க­னி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">சில­நே­ரங்­க­ளில், அதீத அறி­வாற்­றல் உள்ள மாண­வர்­க­ளில் சிலர், விதி­வி­லக்­காக “நீட்” தேர்வு தடை­க­ளை­யும் மீறி, வெற்றி பெற்­றி­ருப்­பது பொது­வி­தி­யா­காது. உலகை உள்­ளங்­கை­யில் உருட்டி விளை­யா­டு­கின்ற  இன்­றைய அறி­வி­யல் வளர்ச்­சி­யின் கார­ண­மாக கார்ப்­ப­ரேட்­டு­கள் எனும் பெரும் வணிக நிறு­வ­னங்­கள் நினைத்­தால், தீர்­மா­னித்­தால், திட்­ட­மிட்டு “நீட் வினாத்­தாள் கசி­வினை” வேறு­வேறு வடி­வத்­தில் அரங்­கேற்ற முடி­யும். இதை இன்­றைய கார்ப்­ப­ரேட்­டு­க­ளின் அக­ரா­தி­யில் “முடி­யாது” என்ற ஒரு வார்த்தை இருப்­ப­தற்கு வாய்ப்பே இல்லை. (The word “impossibility” is not in the dictionary of corporates)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">இது­மட்­டு­மல்ல, செயற்கை நுண்­ண­றிவு செயல்­பா­டு­க­ளின் மூலம்   (AI) வியத்­தகு சாத­னை­கள் அரி­தி­லும் அரி­தாக அன்­றா­டம் அரங்­கே­றிக் கொண்­டி­ருக்­கின்ற நவீன நன்கு வளர்ச்­சி­ய­டைந்த இன்­றைய அறி­வி­யல் யுகத்­தில் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை ­வேற்­றப்­ப­டும் ஒரு சட்­டத்­தின் மூலம் “நீட்” வினாத்­தாள் கசி­வி­னைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும் என்­பது “காட்­டாற்று வெள்­ளத்தை கைக­ளால் கட்­டுப்­ப­டுத்த முடி­யும்” என்ற கற்­ப­னைக் கதை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">எனவே, “நீட்” வினாத்­தாள் கசி­விற்கு 10 லட்­சம் அப­தா­ரம் மற்­றும் 10 ஆண்­டு­கள் சிறை­தண்­டனை என்று ஒன்­றிய அரசு கொண்­டு­வந்­துள்ள புதிய சட்­டம் மட்­டுமே நீட் தேர்வு குழப்­பங்­க­ளுக்கு நிரந்­தர தீர்­வா­காது. அப்­ப­டி­யா­னால் இந்த கட்­டு­ரை­யைப் படிப்­ப­வர்­க­ளுக்கு என்­ன­தான் தீர்வு என்று கேட்­பீர்­க­ளே­யா­னால், அதற்­கான விடை­தான் தி.மு.க தலை­வ­ரும் தமிழ்­நாட்­டின் முன்­னாள் முதல்­வ­ரு­மான “திரா­விட மாடல்” ஆட்­சி­யின் நாய­கன் திரு.முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் தனது ஆட்­சிக்­கா­லத்­தில் ஓய்வு பெற்ற நீதி­பதி எஸ்.ஏ.ராஜன் தலைமை­ யில் அமைத்த குழு ஆய்­வு­செய்து அளித்த அறிக்­கை­யா­கும். அந்த அறிக்­கை­யின் “நீட்” தேர்வு குள­று­ப­டி­க­ளுக்கு “நீட்” தேர்வு முறையை ரத்­து­செய்­வ­து­தான் ஒரே வழி­யா­கும் என்­பதை தெளி­வா­க­வும், திட்­ட­வட்­ட­மா­க­வும் அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">ஆம்! முந்­தைய “திரா­விட மாடல்” அரசு நிய­மித்த நீதி­பதி எஸ்.ஏ.ராஜன் தலை­மை­யி­லான குழு அளித்த அந்த தேர்­வு­தான் “நீட்” தேர்வு முறை­கே­டுக்­கான உண்­மை­யான தீர்­வா­கும். வேறு எந்­தத் தேர்­வும் “நீட்” பிரச்­ச­னைக்கு நிரந்­தர முடி­வா­காது. மேலும், பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான இன்­றைய ஒன்­றிய அரசு ஒன்றை தெளி­வா­கப் புரிந்­து­கொள்ள வேண்­டும். இந்­தியா என்­பது “வேற்­று­மை­யில் ஒற்­றுமை காணும் நாடா­கும்”. பல்­வேறு மொழி, பண்­பாடு, கலாச்­சா­ரத்தை கொண்­டி­ருக்­கிற வெவ்­வேறு வாழ்­வி­ய­லின் நிலைப்­பாட்டை பின்­பற்­று­கிற பரந்­து­பட்ட இந்­திய ஒன்­றி­யத்­தில் பல மாநில அர­சு­கள் உள்­ள­போது இந்­திய ஒன்­றிய முழு­மைக்­கு­மான மருத்­துவ கல்­விக்கு “நீட்” தேர்வு நடத்­து­வது என்­பது “ஒரே நாடு - ஒரே தேர்­தல்” என்ற நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மில்லா தத்­து­வம் போன்­ற­
­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.7">எனவே, “வேற்­று­மை­யில் ஒற்­றுமை” (Unity of Diversity) என்ற நடை­மு­றை­யின் கீழ் வெவ்­வேறு மாநில மக்­க­ளின் உரிமை காப்­பாற்­றப்­பட வேண்­டு­மென்­றால், கல்வி நலன்­கள் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்­றால் “நீட்” தேர்வை அடி­யோடு ஒழிப்­ப­து­தான் இந்­திய ஒரு­மைப்­பாட்­டுக்கு உகந்­த­தா­கும். இல்­லை­யேல், இந்­திய தேசிய ஒற்­று­மைக்கு (National Integrative)  எதிர்­கா­லத்­தில் விப­ரீத விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தற்­கான எச்­ச­ரிக்கை மணி­தான் இன்­றைய “டெல்லி - ஜந்­தர் மந்­தர்” பகு­தி­க­ளின் போராட்­ட­மா­கும்!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>