<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,72,957,918" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 05 2026 03:55:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260805T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="05082026-VLR-10" position.sequence="10" ex-ref="05082026-VLR-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="48">   </lang>
	</hl3>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70"> காவி­ரிக்­காக களத்­தில் நிற்­கும் கழ­கம்! உரி­மை­க­ளைக் கைவிட்ட போலி ஜன­நா­ய­கன்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup823448_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="30">ஆ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">்டி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ப் பெருக்கு நாளில் காவி­ரிப் படுகை இப்­ப­டி­யொரு வறட்­சி­யைப் பார்த்­த­தில்லை. நீர் நிறைந்­தோ­டும் பொன்னி நதி  கண்­ணுக்­கெட்­டிய தூரம் வரை மணல் விரிப்­பான பாலை­வ­னம் போல காட்­சி­ய­ளித்­தது. ஒவ்­வொரு ஆண்­டும் ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழ்­நா­டெங்­கும் ஆற்­றங்­க­ரை­க­ளில் மக்­கள் குவிந்து வழி­பாடு நடத்­து­வது வழக்­கம். 5 ஆண்­டு­கால திரா­விட மாடல் நாய­கர் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் ஆட்­சி­யில் ஆறு­க­ளில் புது வெள்­ளம் பாய்ந்­தது. விஜய் தலை­மை­யி­லான த.வெ.க. ஆட்­சி­யின் முதல் ஆடிப் பெருக்­கில் குடத்­தில் நீரைக் கொண்டு வந்து ஆற்­றில் வைத்து வழி­பட வேண்­டிய அவல நிலை­யைத் தமிழ்­நாடு கண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அகண்ட காவிரி ஓடும் திருச்சி அம்மா மண்­ட­பத்­தில்  தண்­ணீர் இல்­லா­மல் குழாய் அமைத்து, அதில் ஷவர் போலத் தண்­ணீ­ரைக் கொட்­டச் செய்து, மக்­கள் வழி­பாடு செய்ய வேண்­டி­யி­ருந்­தது. தஞ்சை மண்­ட­லம் முழு­வ­தும் இதே நிலை­தான். மயி­லா­டு­துறை காவிரி புஷ்­க­ரத்­தில் தொட்­டி­யில் நீரைக் கொட்டி வைத்து ஆடிப்­பெ­ருக்கு கொண்­டாட வேண்­டிய நிலை. திரு­வா­ரூ­ரில் ஆற்­றில் தண்­ணீர் இல்­லா­த­தால் கம­லா­ல­யம் குளத்­தில் ஆடிப்­பெ­ருக்­கைக் கொண்­டா­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போதிய மழை இல்­லா­மல் இயற்கை வஞ்­சிப்­பது புதி­தல்ல. முந்­தைய ஆட்­சிக்­கா­லங்­க­ளி­லும் இத்­த­கைய நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் இதற்கு முந்­தைய தமிழ்­நாட்­டின் ஆட்­சி­யா­ளர்­கள் யாரும் இவ்­வ­ளவு மோச­மான முறை­யில் பொறுப்­பற்­றத்­த­ன­மாக நடந்து கொண்­ட­தில்லை. விஜய் கர்­நா­ட­கா­வுக்கு செல்­கி­றார் என்ற செய்தி கேட்டு இயற்­கையே கருணை கொண்டு மழையை அள்­ளிப் பொழி­வ­தா­க­வும், கர்­நா­ட­கத்­தின் கபினி அணை திறக்­கப்­பட்­ட­தால் தமிழ்­நாட்­டிற்­குள் தண்­ணீர் வெள்­ள­மா­கப் பாய்­வ­தா­க­வும் அமைச்­சர்­கள் முதல் ரசி­கர்­கள் வரை பல­ரும் ரீல்ஸ் போட்டு இமேஜ் பில்­டப்­பில்­தான் கவ­ன­மாக இருந்­தார்­களே தவிர, காவிரி விவ­கா­ரத்­தில் தமிழ்­நாடு சந்­திக்­கும் பிரச்­சி­னை­கள் குறித்து கவ­னம் செலுத்­த­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஜூன் 12ஆம் நாள் திறக்­கப்­பட வேண்­டிய மேட்­டூர் அணை த.வெ.க ஆட்­சி­யில் ஆகஸ்ட் முதல் வாரம் வரை­யி­லும் திறக்­கப்­ப­ட­வில்லை. ஜூன் மாதம் கர்­நா­ட­கம் நமக்­குத் தர­வேண்­டிய 9.9 டி.எம்.சி. தண்­ணீ­ரைத் தர­வில்லை. ஜூலை­யில் தர­வேண்­டிய 32 டி.எம்.சிதண்­ணீ­ரை­யும் தர­வில்லை. இந்த நிலை­யில், கர்­நா­டக முத­ல­மைச்­சர் டி.கே.சிவ­கு­மாரை காவிரி விவ­கா­ரம் தொடர்­பாக சந்­திப்­ப­தற்கு விஜய் அனு­மதி கேட்­டி­ருக்­கி­றார் என்ற செய்தி கசி­ய­வி­டப்­பட்­டது. பய­ணம் உண்­மையா என்ற கேள்­விக்கு அமைச்­சர்­கள் ஆளுக்­கொரு பதி­லைச் சொன்­னார்­கள். நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­ராக இருக்­கும் ஆனந்த் எந்­தப் பதி­லும் சொல்­லா­மல் சிரித்து மழுப்பி தலை­யாட்­டி­விட்­டுப் போனார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">காவிரி விவ­கா­ரத்­தில் மேலாண்மை வாரி­யம், ஒழுங்­காற்­றுக் குழு ஆகி­ய­வற்­றில் முறை­யி­டு­வ­தும், உச்­ச­நீ­தி­மன்­றத்தை நாடு­வ­துமே தமிழ்­நாட்­டிற்­குப் பயன்­த­ரும் அணு­கு­மு­றை­யாக இருக்­கும் என்­பதை தி.மு.க தலை­வர் வலி­யு­றுத்­தி­னார். கர்­நா­டக முதல்­வரை தமிழ்­நாட்­டின் முதல்­வர் நேர­டி­யாக சந்­திப்­பது நமது உரி­மை­களை விட்­டுத் தரும் செய­லா­கும் என்று கண்­டித்­தார். தமிழ்­நாட்­டின் அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் விவ­சா­யி­கள் சங்­கத்­தி­ன­ரும் இதே கருத்தை வலி­யு­றுத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கர்­நா­டகா தரப்­பி­லி­ருந்து தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் வருகை குறித்த செய்தி வெளி­யா­ன­து­டன், விஜய்­தான் கர்­நா­டக முதல்­வ­ரைச் சந்­திக்க அனு­மதி கோரி­யி­ருந்­தார் என்­ப­தை­யும் தெரி­வித்­த­னர். அத்­து­டன், தமிழ்­நாட்­டுக்­குத் தண்­ணீர் தரும் வாய்ப்­பில்லை என்­றும்,  கர்­நா­ட­கத்­தில் போராட்­டச் சூழல் நில­வு­வ­த­தால் விஜய் வரு­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்­றும் அம்­மா­நில அரசு அறி­வித்­தது. ரீல்ஸ் போட­லாம் என நினைத்து விஜய் போட்ட பய­ணத் திட்­டம் நொறுங்­கி­ய­தால் அவ­ரது இமேஜை காப்­பாற்­று­வ­தற்­காக, “மழை கொட்­டு­கி­றது. கபினி அணை திறக்­கப்­பட்­டு­விட்­டது. தமிழ்­நாட்­டில் தண்­ணீர் பாய்­கி­றது” என ரசி­கக்­குஞ்­சு­கள் ரீல்ஸ் போடத் தொடங்­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தென்­மேற்கு பருவ மழை­தான் கர்­நா­ட­கத்­தின் நீர்ப்­பி­டிப்பு பகு­தி­க­ளுக்கு ஆதா­ர­மா­கும். இந்த முறை பருவ மழை போதிய அள­விலோ உரிய நேரத்­திலோ பெய்­ய­வில்லை. தாம­த­மா­கப் பெய்­யத் தொடங்­கி­ய­தன் விளை­வாக, கபினி அணை­யின் உபரி நீரைத்­தான் கர்­நா­டக அரசு திறந்­து­விட்­டது. உரிய காலத்­தில் தர வேண்­டிய உரிமை நீரை வழங்­க­வில்லை. அப்­ப­டித் திறந்து விடப்­பட்ட நீரும் வந்­தே­பா­ரத் எக்ஸ்­பி­ரஸ் வேகத்­தில் தமிழ்­நாட்­டிற்கு வந்­து­வி­டாது. கபினி அணை நீர் மேட்­டூர் அணைக்கு வரு­வ­தற்கே இரண்டு நாட்­க­ளா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேட்­டூர் அணை­யின் முழு­மை­யான கொள்­ள­ளவு 120 அடி. குறைந்­த­பட்­சம் 80 அடி­யைத் தாண்­டி­னால்­தான் பாச­னத்­திற்கு தண்­ணீர் திறந்து விடப்­ப­டும். 100 அடிக்கு மேல் இருந்­தால்­தான் கடை­ம­டைப் பகு­தி­வரை தண்­ணீர் பாயும். மேட்­டூ­ரி­லி­ருந்து கல்­ல­ணைக்­குத் தண்­ணீர் வந்து, அதன்­பி­றகு டெல்டா மாவட்­டங்­க­ளில் உள்ள காவிரி மற்­றும் அதன் கிளை ஆறு­க­ளில் தண்­ணீர் பாய்ந்து, வாய்க்­கால்­கள் வழி­யாக வயல்­க­ளுக்­குச் செல்ல வேண்­டும். இதற்கு ஏறத்­தாழ ஒரு வாரத்­திற்கு மேல் ஆகி­வி­டும். அமைச்­சர்­க­ளாக பொறுப்­பில் இருக்­கும் த.வெ.க.வின­ருக்கே இந்த விவ­ரம் எது­வும் தெரி­யாது. அத­னால்­தான்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விஜய்க்­காக இயற்­கையே கருணை காட்­டு­கி­றது என்­றும், தமிழ்­நாட்­டுக்கு தண்­ணீர் பாய்ந்து வரு­கி­றது என்­றும் ஆகஸ்ட் 1 (ஆடி 16) அன்று ரீல்ஸ் போட்­டார்­கள். த.வெ.க.வின­ரின் ரீல்ஸ்க்­கும் உண்­மைக்­கும் சம்­பந்­த­மே­யில்லை என்­பதை ஆகஸ்ட் 3 (ஆடி 18) அன்று ஆடிப்­பெ­ருக்குநாளில் காய்ந்து கிடந்த ஆறு­கள் காட்­டி­விட்­டன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வறண்ட ஆறு­கள் மட்­டு­மல்ல, பயி­ரி­டப்­ப­டா­மல் தரி­சா­கக் கிடக்­கும் டெல்டா மாவட்ட வயல்­க­ளும் கண்­ணீர்க் கதை­க­ளைப் பேசு­கின்­றன. தஞ்­சா­வூர் மாவட்­டத்­தில் கடந்த 2025ஆம் ஆண்டு 1,64,744 ஏக்­கர் பரப்­ப­ள­வில் குறு­வைப் பயி­ரி­டப்­பட்­டி­ருந்­தது. இந்த 2026இல் ஆண்டு 1,28,692 ஏக்­க­ரில் மட்­டுமே பயி­ரி­டப்­பட்­டுள்­ளது. நாகை மாவட்­டத்­தில் 2025இல் 47,398 ஏக்­க­ரில் பயி­ரி­டப்­பட்­டி­ருந்த குறுவை நெல் 2026இல் வெறும் 2,781 ஏக்­க­ரில் மட்­டுமே பயி­ரி­டப்­பட்­டுள்­ளது. திரு­வா­ரூர் மாவட்­டத்­தில் 2025இல் 1,55,155 ஏக்­கர். 2026ல் 88,678 ஏக்­கர் மட்­டுமே.  மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் மட்­டுமே சரி­யான அள­வில் குறுவை சாகு­படி பரப்­ப­ளவு பாது­காக்­கப்­பட்­டுள்­ளது. (ஆதா­ரம்- தி இந்து ஆங்­கில நாளி­தழ் 31-.7.-2026) காவி­ரி­யில் தமிழ்­நாட்­டிற்­கான உரி­மை­களை த.வெ.க. அரசு விட்­டுக்­கொ­டுக்க முன்­வந்­த­தன் விளை­வு­தான் ஏறத்­தாழ ஒன்­றரை இலட்­சம் ஏக்­கர் அள­வி­லான சாகு­படி பரப்பு குறைந்­த­தற்கு கார­ண­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. எப்­போ­துமே காவிரி விவ­கா­ரத்­தில் உரி­மைக் குரலை விட்­டுக் கொடுத்­த­தில்லை. 1968இல் கர்­நா­டக முத­ல­மைச்­ச­ராக இருந்த வீரேந்­தி­ர­பாட்­டீல் முதல், 2006-2021 காலத்­தில் எடி­யூ­ரப்பா முத­ல­மைச்­ச­ராக இருந்த காலம் வரை முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் எழுப்­பிய உரி­மைக் குர­லும் சட்­டப்­போ­ராட்­டங்­க­ளும் காவி­ரி­யில் தமிழ்­நாட்­டிற்­கு­ரிய பங்கை நிலை­நாட்­டின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">காவிரி விவ­கா­ரத்­தில் நியா­ய­மா­னத் தீர்வு கிடைப்­ப­தற்கு நடு­வர் மன்­றம் அமைக்க வேண்­டும் என்று கோரி 1971இல் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­தது கலை­ஞர் தலை­மை­யி­லான தி.மு.க. அரசு. 1990இல் வி.பி.சிங் அரசு அமைந்­த­போது அவ­ரி­டம் வலி­யு­றுத்தி நடு­வர் மன்­றத்தை அமைக்­கக் கார­ண­மா­ன­வ­ரும் முதல்­வர் கலை­ஞர் அவர்­கள்­தான். 2007ஆம் ஆண்டு நடு­வர் மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்பு வெளி­யா­ன­போ­தும் கலை­ஞர் தலை­மை­யி­லான தி.மு.க அர­சு­தான். இதற்­கி­டையே, காவிரி விவ­கா­ரத்­தில் தொடர்­பு­டைய மாநி­லங்­க­ளான தமிழ்­நாடு, கர்­நா­டகா, கேரளா, புதுச்­சேரி ஆகிய மாநில முதல்­வர்­க­ளைக்கொண்ட காவிரி ஆணை­யத்தை பிர­த­மர் வாஜ்­பாய் அமைத்­த­போது, தமிழ்­நாட்­டின் உரி­மை­களை நிலை­நாட்­டும் வகை­யில் அதில் பங்­காற்­றி­னார் முதல்­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நடு­வர் மன்­றத்­தின் இடைக்­கா­லத் தீர்ப்­பில் தெரி­வித்த 205 டி.எம்.சி. தண்­ணீ­ரைக் கர்­நா­ட­கம் மறுத்த போதெல்­லாம் ஆட்­சி­யில் இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் தமிழ்­நாட்­டிற்­கு­ரி­யத் தண்­ணீ­ரைப் பெறு­வ­தற்கு அனைத்து முயற்­சி­க­ளை­யும் எடுத்­த­வர் கலை­ஞர். பிர­த­மர் இந்­தி­ரா­காந்தி முதல் பிர­த­மர் நரேந்­திர மோடி வரை அதி­கா­ரத்­தில் வலி­மைப் பெற்­றி­ருந்­த­வர்­க­ளி­டம் தமிழ்­நாட்­டின் உரி­மை­களை வலி­யு­றுத்தி, டெல்டா மாவட்ட விவ­சா­யத்­திற்­கா­னப் போதிய தண்­ணீ­ரைப் பெற்­றுத் தந்­த­வர் காவிரி மைந்­த­ரான கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீண்­ட­கால அனு­ப­வம், முதிர்ச்­சி­யான அணு­கு­முறை, நியா­யத்தை எடுத்­து­ரைக்­கும் சொல்­லாற்­றல் எல்­லா­வற்­றுக்­கும் மேலாக தமிழ்­நாட்­டின் நலனை மட்­டுமே கலை­ஞர் முன்­னி­றுத்­தி­ய­தால்­தான் தேவை­யான அளவு தண்­ணீர் கிடைத்து வந்­தது. திரா­விட மாடல் ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் ஆட்­சி­யின் 5 ஆண்­டு­க­ளி­லும் உரிய காலத்­தில் மேட்­டூர் அணை திறக்­கப்­பட்டு டெல்டா மாவட்­டங்­க­ளில் சாதனை அள­வாக குறு­வைப் பயிர் சாகு­படி செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய் ஆட்­சி­யில் முதிர்ச்­சி­யா­ன­வர்­க­ளும் இல்லை. தமிழ்­நாட்­டின் மீதான அக்­க­றை­யும் எவ­ருக்­கு­மில்லை. ஜன­நா­ய­கன் படம் கர்­நா­ட­கா­வில் வசூல் பார்க்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே தமிழ்­நாட்­டின் அடிப்­படை உரி­மையை விட்­டுக் கொடுத்­தி­ருக்­கி­றது த.வெ.க. அரசு. கர்­நா­டக அரசு காவிரி மேலாண்மை வாரி­யத்­தின் உத்­த­ரவை மதிக்­கா­மல் இருந்த நிலை­யில், தி.மு.க. சார்­பில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­தார் மூத்த வழக்­க­றி­ஞ­ரும் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரு­மான வில்­சன் அவர்­கள். இரண்டு நாட்­கள் கழித்து, ஆகஸ்ட் 3 திங்­கட்­கி­ழ­மை­யன்­று­தான் தமிழ்­நாடு அரசு சார்­பில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் மனு போடப்­பட்­டது. அதற்கு கார­ணம், சனி-­ஞா­யிறு இரண்டு நாட்­க­ளும் கர்­நா­ட­கா­வில் ஜன­நா­ய­கன்படத்­தின் வசூல் பாதிக்­கக்­கூ­டாது என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க உள்­ளிட்ட தமிழ்­நாட்­டின் அனைத்­துக் கட்­சி­க­ளும் வலி­யு­றுத்­தி­யும் அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்தை விஜய் அரசு கூட்ட மறுக்­கி­றது. விவ­சா­யி­க­ளின் கருத்­து­க­ளைக் கேட்க மறுக்­கி­றது. டெல்­லி­யில் கோரிக்­கையை வலி­யு­றுத்தபய­ணம் மேற்­கொண்ட தமிழ்­நாட்­டின் விவ­சா­யி­கள் மகா­ராஷ்ட்ரா மாநி­லம் நாக்­பூ­ரில் கைது செய்­யப்­பட்­ட­தற்கு விஜய் அர­சி­ட­மி­ருந்து ஒரு கண்­ட­னம் கூட வெளிப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கர்­நா­டக அரசு உபரி நீரைத் திறந்து விடா­மல் தமிழ்­நாட்­டிற்கு உரி­மை­யான நீரைத் திறந்து விட வேண்­டும் எனப் போராடி வரு­கி­றது எதிர்க்­கட்­சி­யான திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். கழ­கத்­தின் இளந்­த­லை­வர்- சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில் ஆகஸ்ட் 3 அன்று தஞ்­சை­யில் தோழ­மைக் கட்­சி­யி­னர் பங்­கேற்­பு­டன் மாபெ­ரும் ஆர்ப்­பாட்­டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. போலி ஜன­நா­ய­கன் ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டின் உரி­மை­கள் பறி­போ­கின்­றன. காவி­ரி­யில் நம்­மு­டைய உரி­மை­கள் ஒரு­போ­தும் பறி­போ­கக்­கூ­டாது எனக் களத்­தில் உறு­தி­யாக நிற்­கி­றது தி.மு.க.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>