<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,623,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 06 2026 04:04:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260806T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06082026-VLR-03" position.sequence="03" ex-ref="06082026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="83">சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!...   </lang>
	<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="83">முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் அறி­வித்த, செயல்­ப­டுத்­திய திட்­டங்­ க­ளைத்­தான் இன்­றைக்­குப் பெயரை 
மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">அர­சுக்கு நன்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">சொல்ல வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதில் இன்­னொரு சிறப்பு. இந்த அர­சுக்கு நன்றி சொல்ல வேண்­டும். ஏனென்­றால், ஒவ்­வொரு துறை­யைப் பற்­றி­யும், நிதி அமைச்­சர் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டுப் பேசு­கி­றார். பட்­ஜெட்­டில் இடம் பெற்­றி­ருக்­கி­றது. `இந்­தி­யா­வி­லேயே நம் தமிழ்­நாடு முன்­னணி மாநி­ல­மாக இருக்­கி­றது’ என்று மிக­வும் மகிழ்ச்­சி­யாக, பெரு­மை­யோடு சொல்­கி­றார். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சாத­னை­க­ளை­யெல்­லாம் இப்­போ­தா­வது ஒப்­புக்­கொண்­டார் என்­ப­தற்கு, நாங்­கள் எங்­க­ளின் நன்­றியை இந்த அர­சுக்­கும், நிதி அமைச்­ச­ருக்­கும், முத­ல­மைச்­ச­ருக்­கும் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">`அண்­ணல் அம்­பேத்­கர் தொழில் முன்­னோ­டி­கள் திட்­டம்’, `அண்­ணல் அம்­பேத்­கர் அய­ல­கக் கல்வி உத­வித் திட்­டம்’, `அயோத்­தி­தா­சர் ஆதி­தி­ரா­வி­டர் வாழ்­விட மேம்­பாட்­டுத் திட்­டம்’, `ஒலிம்­பிக் சிறப்பு மையங்­கள்’ என எல்­லாமே எங்­க­ளின் `திரா­விட மாடல் அர­சி’ல் செயல்­ப­டுத்­தப்­பட்ட திட்­டங்­கள்­தான். வெறும் பெயரை மட்­டும் அவர்­க­ளின் கட்­சிப் பெயரை `வெற்றி’, `வெற்றி’ என்று அனைத்­துத் திட்­டங்­க­ளின் மீதும் ஸ்டிக்­கர் ஒட்­டி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">பெயரை மட்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">`அன்­புச் சோலை’ என்று நாங்­கள் கொண்டு வந்த திட்­டத்­திற்­குப் பெயரை மாற்றி இன்­றைக்கு `முதி­யோர் பொழு­து­போக்கு மையங்­கள்’ என்று பெயரை மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள். நாங்­கள் எங்­க­ளின் தலை­வர் ஆட்­சி­யில் கொடுத்த மடிக்­க­ணி­னித் திட்­டம் உங்­க­ளுக்­குத் தெரி­யும். `உல­கம் உங்­கள் கையில்’ என்று அந்­தத் திட்­டத்­திற்கு எங்­கள் தலை­வர் பெயர் வைத்து கடந்த ஆண்டு 20 லட்­சம் அறி­வித்­தோம், 10 லட்­சம் மாண­வர்­க­ளுக்­குக் கொடுத்­தோம். அதை இன்­றைக்­குப் பெயரை மாற்றி ‘வெற்றி மடிக்­க­ணினி திட்­டம்’ என்று பெயர் வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">`கலை­ஞர் கனவு இல்­லத் திட்­டம்’ அதன் பெயரை மாற்றி `வெற்றி வீடு திட்­டம்’ என்று வைத்­தி­ருக்­கி­றார்­கள். அதே­போன்று `மாடல் ஸ்கூல்ஸ்’ அவற்றை `தகை­சால் பள்­ளி­கள்’ என பெயரை மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">`முதல்­வர் படைப்­ப­கங்­கள்’ எங்­க­ளின் ஆட்­சி­யில் கொண்டு வந்த திட்­டம், அதை இன்­றைக்கு `டிஜிட்­டல் நூல­கம்’ என்று பெயர் மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள். அதற்­கும் பார்த்­தீர்­கள் என்­றால், வெறும் 10 கோடி ரூபாய்­தான் நிதி ஒதுக்­கீடுசெய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. எங்­க­ளின் ஆட்­சி­யில் கொண்டு வரப்­பட்ட `நன்­னி­லம் திட்­டம்’ அதற்­குப் பெயரை மாற்றி இன்­றைக்கு `மண்­ணின் மகள் திட்­டம்’ என்று பெயரை மட்­டும் மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தேர்­த­லுக்கு முன் எங்­க­ளு­டைய தலை­வர் தலை­மை­யி­லான அரசு தாக்­கல் செய்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் கல்வி, சுகா­தா­ரம், தொழில் வளர்ச்சி எனப் பல்­வேறு சமூக நலத் திட்­டங்­கள் இருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒவ்­வொரு ஆண்­டும் கல்­வித்­து­றைக்­கான ஒதுக்­கீடு எங்­க­ளின் திரா­விட மாடல் ஆட்­சி­யில் பார்த்­தீர்­கள் என்­றால் கடை­சி­ யா­கத் தாக்­கல் செய்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் 48,500 கோடி ரூபாய் கல்­விக்கு எங்­க­ளு­டைய தலை­வர் ஒதுக்­கி­யி­ருந்­தார். இப்­போது அதைக் குறைத்து 44,500 கோடி ரூபாய்­தான் இந்த முறை ஒதுக்­கி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">காவி­ரி­யில் தண்­ணீர் வர­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நாங்­கள் தொடர்ந்து சொல்­லிக்­கொண்­டி­ருப்­ப­தைப் போன்று, காவி­ரி­யில் தண்­ணீர் வர­வில்லை. ஆடி 18 அன்­றைக்­குக்­கூட தண்­ணீர் வராத ஒரு சூழலை, இந்த அரசு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நேற்று `தி இந்து’ ஆங்­கில நாளி­த­ழில் ஒரு செய்தி வந்­தி­ருக்­கி­றது. ‘‘கடந்த 50 ஆண்­டு­க­ளில் இல்­லாத அள­விற்கு, இந்த ஜூலை மாதத்­தில் காவிரி நீர் வரத்­துக் குறை­வாக இருக்­கி­றது’’ என்று அந்­தப் பத்­தி­ரி­கை­யில் செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மேக­தாது அணை கட்­டும் கர்­நா­ட­கா­வைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு இந்த ஆட்­சிக்கு வக்­கில்லை, தைரி­யம் இல்லை. வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். விவ­சா­யி­கள் தொடர்ந்து போராட்­டம் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இந்த ஆட்சி அமைந்­த­தி­லி­ருந்து இந்த மூன்று மாத­மாக யார் அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்று பார்த்­தீர்­கள் என்­றால், விவ­சா­யி­கள்­ தான் அதி­கம் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘‘முழுப் பயிர்க்­க­டன் தள்­ளு­படி’’ என்று தேர்­தல் வாக்­கு­றுதி சொன்­னார்­கள். ஆனால் இப்­போது அதற்கு ஒரு நிபந்­தனை போட்டு அதை­யும் மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள். ஆனால், அதை­யும் செயல்­ப­டுத்­த­வில்லை. முத­லில் 50,000 ரூபாய் என்று சொன்­னார்­கள், எதிர்ப்­புத் தெரி­வித்­த­தும் அதை 75,000 ரூபா­யாக மாற்­றி­னார்­கள். அதை­யும் முழு­மை­யா­கச் செயல்­ப­டுத்­த­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">கவ­னத்­தைத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">திசை திருப்­பும் உத்­தி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தஞ்­சா­வூ­ரில் நேற்று முன்­தி­னம் ஆர்ப்­பாட்­டம் நடந்­தது. அதில் நாங்­க­ளெல்­லாம் கலந்­து­கொண்டு, விவ­சா­யி­கள் சந்­திக்­கக்­­கூடிய பிரச்­சி­னை­க­ளை­யெல்­லாம் பேசி­னோம். அதற்­காக நேற்று என் வீட்­டிற்­குள் புகுந்து கைது செய்­தார்­கள். கைது செய்து எப்­ப­டி­யெல்­லாம் அலைக்­க­ழித்­தார்­கள் என்று ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நா­டும் பார்த்­தது. குறிப்­பாக, சட்­ட­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­வர் என்ற முறை­யில் இந்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தைப் பற்றி நாங்­கள் எது­வும் கேள்வி கேட்­டு­வி­டக் கூடாது என்று 
கவ­னத்­தைத் திசை திருப்­பும் உத்­தி­யாக விவ­சா­யி­க­ளு­டைய சிக்­க­லைத் திசை திருப்ப வேண்­டும் என்று நேற்று அந்த 
நாட­கத்தை நடத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">என்னை மட்­டும் இல்லை, தொடர்ந்து திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் கைது செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அ.தி.மு.க சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­­களைப் பார்த்­துப் பார்த்து பர்­சேஸ் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை மட்­டும் இல்லை, GEN-Z தி.மு.க-வி­ன­ரை­யும் வலை­வீ­சித் தேடி, குறி­வைத்து அவர்­களை எல்­லாம் கைது செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள், வழக்­குத் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஏனென்­றால் இந்த ஆட்­சி­யில் ஒவ்­வொரு நாளும் அவ்­வ­ளவு பிரச்­சி­னை­கள் இருக்­கின்­றன. அதை­யெல்­லாம் திசை­தி­ருப்ப இந்த கைது நட­வ­டிக்­கை­களை இந்த அரசு எடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">சந்தி சிரிக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">சட்­டம் ஒழுங்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கடந்த 100 நாட்­க­ளா­கச் சட்­டம் ஒழுங்கு பிரச்­சினை சந்தி சிரித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. குழந்­தை­கள், பெண்­கள், வய­தான பெண்­கள் இவர்­கள் யாருக்­குமே இந்த அர­சில் பாது­காப்பு இல்லை. ஆட்­சிக்கு வந்த பிறகு கடந்த 5 வாரங்­க­ளில் மட்­டும் நான்கு காவல்­நி­லைய மர­ணங்­கள் நடந்­தி­ருக்­கின்­றன. ஐந்து சாதி ஆண­வப் படு­கொ­லை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. இதை­யெல்­லாம் தின­சரி செய்­தி­க­ளில் நீங்­களே ஒளி­ப­ரப்­பிக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள், மக்­கள் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்த சிலர் குற்­றம் செய்­வ­தற்கு லைசென்ஸ் வாங்­கி­யது போல் அவ்­வ­ளவு குற்­றச்­செ­யல்­க­ளில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். துணிச்­ச­லோடு தைரி­ய­மா­கச் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பழனி கோயில் நில மோச­டி­யைப் பார்த்து இன்­றைக்கு ஒட்­டு­மொத்­தத் 
தமிழ்­நாடே அதிர்ந்து போயி­ருக்­கி­றது. இந்த அரசு ஆட்­சிக்கு வந்­த­தும் மின்­சா­ரம் வரு­வ­தில் முதல் நாளி­லி­ருந்தேபிரச்­சினை. இப்­போது மின்­சா­ரக் கட்­ட­ணம் மிகப்­பெ­ரிய ஒரு பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட மூன்­றரை லட்­சம் குடும்­பங்­க­ளுக்கு வழக்­கத்தை விடப் பல மடங்கு அதி­க­மாக மின்­சா­ரக் கட்­ட­ணம் வந்­தி­ருக்­கி­றது. அமைச்­சர்­கள் அர­சுப் பள்­ளி­க­ளுக்­குச் சென்று அங்கு இருக்­கக்­கூ­டிய மாண­வர்­­களை­யெல்­லாம் வெளியேவரச் சொல்லி, இந்­தக் கட்­சி­யின் பெயரை ‘கோஷம்’ போடச் சொல்லி, மாண­வர்­க­ளை­யெல்­லாம் 
வற்­பு­றுத்தி, அதை ‘ரீல்ஸ்’ எடுத்து, வீடியோ எடுத்து அதை­யெல்­லாம் பதி­விட்­டுக் 
கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">இதற்கு எதற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">முத­ல­மைச்­சர்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்­றைக்கு இந்­தி­யாவே நீட் தேர்வை எதிர்த்­துப் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றது, அதை எதிர்த்து இந்த அரசு எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­கவே இல்லை. அதற்கு மாறாக, போரா­டு­கின்ற மாண­வர்­கள் மீது இந்த அரசு தடி­யடி நடத்­தி­யி­ருக்­கி­றது. விலை­வா­சி­யும் உயர்ந்து கொண்டே போகி­றது. அரிசி விலை பல மடங்கு அதி­க­மா­கி­யி­ருக்­கி­றது. ஆனால், இதை­யெல்­லாம் கேட்­டால் முத­ல­மைச்­சர் பதில் சொல்ல மாட்­டார். முத­ல­மைச்­ச­ருக்­குப் பதி­லா­கப் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் பதில் சொல்ல வேண்­டும் என்று ஒரு முத­ல­மைச்­ச­ருக்கு முன்­ஜா­மீன் வாங்­கு­கி­றார். இந்த மாதிரி ஒரு நகைச்­சு­வையை இந்­திய ஜன­நா­ய­கம் எந்த மாநி­லத்­தி­லும், எந்­தச் சட்­ட­மன்­றத்­தி­லும் பார்த்­தி­ருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நேற்றே பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் பேசி­யி­ருக்­கி­றார். அதா­வது அவை முன்­ன­வர் தீர்­மா­னம் கொண்டு வர வேண்­டு­மாம். எதிர்க்­கட்­சி­கள் ஏதா­வது கேள்வி கேட்­டால் அதற்கு முத­ல­மைச்­சர் பதில் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்­லை­யாம், இவர்­கள்­தான் பதில் சொல்­வார்­க­ளாம். இதற்கு எதற்கு முத­ல­மைச்­சர் அவைக்கு வர வேண்­டும், இதற்கு எதற்கு நாங்­க­ளெல்­லாம் அவைக்கு வர வேண்­டும் என்­கின்ற கேள்­வி­யைப் 
பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளா­கிய நீங்­கள் இந்த 
அர­சைப் பார்த்­துக் கேட்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆட்சி அமைந்த உடனே, ‘‘கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற கால அவ­கா­சம் வேண்­டும்’’ என்று முத­ல­மைச்­சர் கேட்­டார். இந்த பட்­ஜெட்­டில் அதை­யா­வது சொல்­வார்­கள் என்று எதிர்­பார்த்­தேன். ஆனால், அதைச் சொல்­வ­தற்­குக்­கூட அவர்­க­ளுக்கு நேர­மில்லை. இன்­னும் கால அவ­கா­சம் கேட்­கி­றார்­கள். எனவே நடக்­கப்­போ­கும் கூட்­டத்­தொ­டர் முழு­வ­தும் ஆணித்­த­ர­மா­க­வும், உறு­தி­யா­க­வும் மக்­கள் பிரச்­சி­னை­ களை திரா­விட முன்­னேற்­றக் கழக உறுப்­பி­னர்­கள் எங்­க­ளு­டைய தலை­வ­ரு­டைய அறி­வு­றுத்­த­லின் பேரில், கேள்வி கேட்­கத் தயா­ராக இருக்­கி­றோம், பதில் சொல்ல இந்த அரசு தயா­ராக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கேள்வி :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பதில் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொ­கைத் திட்­டத்­தைப் பற்றி அவர்­கள் பேசவே இல்லை.  2,500 ரூபா­யாக உயர்த்தி கொடுப்­போம் என்று சொன்­னார்­கள்.  அது பற்றி இந்த பட்­ஜெட்­டில் அவர்­கள் பேசவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கேள்வி :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு `வெற்றி’ என்று பெயர் மாற்றி இருக்­கி­றார்­கள் அதைப் பற்றி என்ன நினைக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பதில் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எல்­லா­ருக்­கும் `மாற்­றம்’ மாற்­றம் என்று சொன்­னார்­கள்.  அவர்­கள் சொன்ன மாற்­றம் இது­தான்.  எல்லா திட்­டங்­க­ளுக்­கும் பெயரை மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள்.  அவர்­கள் சொன்ன ஒரே மாற்­றம் இது­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் 
செய­லா­ள­ரும் சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் 
அவர்­கள் பேட்டி அளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>