<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,64,611,966" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 05 2026 23:52:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260806T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06082026-VLR-04" position.sequence="04" ex-ref="06082026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="74">உதயநிதியைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள்?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup797391_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="UdhayasirBW_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">.மு.க. எப்­போ­தெல்­லாம் தேர்­த­லில் வெற்றி வாய்ப்பை இழக்­கி­றதோ, அப்போதெல்­லாம் அத்­தோடு அந்த இயக்­கத்தை அழித்­தொ­ழித்­து­விட வேண்­டும் என்று ஆண­வத்­தின் உச்­சத்­தில் நின்று ஆடு­ப­வர்களைத் தமிழ்­நாட்டு வர­லாறு பல­முறை பார்த்­தி­ருக்­கி­றது. எம்.ஜி.ஆரும், ஜெய 
லலி­தா­வும் இதை பல­முறை செய்­தி­ருக்கிறார்­கள். ஆனால், அப்­போ­தெல்­லாம் அவர்­கள் விரும்­பி­ய­தற்கு நேர்­மா­றா­கத் தி.மு.க. புதிய வலி­மை­யு­டன் வீறு­கொண்டு எழுந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. போராட்­டங்­க­ளின் வழியே உரு­வாகி வளர்ந்த இயக்­கம். தனி­ந­பர் பிம்ப வழி­பாட்­டிலோ அர­சி­யல் விபத்­து­கள் மூல­மா­கவோ உரு­வான இயக்­கம் அல்ல. ஆட்­சி­யில்இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் அது ஜன­நா­ய­கத்­திற்­கா­க­வும் தமிழ்­நாட்­டின் உரி­மை­க­ளுக்­கா­க­வும் களத்­தில் நின்று போரா­டிக்­கொண்டே இருந்­தி­ருக்­கி­றது. மக்­க­ளோடு தொடர்பே இல்­லா­மல் பதுங்கு குழி­க­ளுக்­குள் வாழ்ந்து அதி­கா­ரத்தை மட்­டுமே ருசிக்­கும் தலை­வர்­கள் அல்ல தி.மு.க. தலை­வர்­கள். அவர்­கள் அச்­ச­மற்று எப்­போ­தும் களத்­தில் நின்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அண்­ணா­வும், கலை­ஞ­ரும், கழ­கத் தலை­வ­ரும் காட்­டிய அந்­தப் போர்க்­கு­ணப் பாதை­தான் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித்  தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலி­னு­டை­யது. தன் சொந்­தத் தொண்­டர் க­ளைச் சாக­விட்டுவிட்­டுத் தப்­பி­யோ­டிய கோழை­க­ளால்  உத­ய­நிதி ஸ்டாலின் போன்ற ஒரு 
தலை­வ­ரைப் புரிந்­து­கொள்ள முடி­யாது. மாறாக, அவ­ரைக் கண்டு அஞ்­சு­கி­றார்­கள் என்­ப­து­தான் உண்மை. ஏனெ­னில்,  த.வெ.க.வின் அர­சி­ய­லுக்கு அவர்­தான் இறுதி மணி அடிக்­கப்­போ­கி­றார் என்று அவர்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காவிரி உரி­மை­க­ளுக்­கா­கத் தஞ்சை விவ­சா­யி­கள் நடத்­திய போராட்­டத்­தில் உத­ய­நிதி பேசாத ஒன்றை பேசி­ய­தாக நேற்று முன் தினம் ஒரு பொய்ச்­செய்தி பரப்­பப்­பட்­டது. அன்­றி­ரவே தேசிய ஊட­கங்­க­ளில் இது ஒரு விவா­தப் பொரு­ளாக மாற்­றப்­பட்­டது. அப்­போதே யூகித்­தேன்–­அ­டுத்த நாள் மிகப்­பெ­ரிய ஒரு நாட­கத்­திற்­குத் தயா­ரா­கி­றார்­கள் என்று. அன்­றி­ரவு ‘ரூட் மாஃபி­யா’­வின் ‘வல்­கர் வாரி­யர்ஸ்’ தங்­கள் வேலையை ஆரம்­பித்­தார்­கள். ஏரா­ள­மான பதி­வு­கள் உத­ய­நி­திக்கு எதி­ரா­கப் பரப்­பப்பட்­டன. இது உத­ய­நி­தி­யின் கைதை நியா­யப்­ப­டுத்­தும் ஒரு உள­வி­யலை உரு­வாக்­கும் வழக்­க­மான கீழ்த்­த­ர­மான உத்தி. ஆனால், தி.மு.க. ஆத­ரவு சமூக வலைத்­த­ளச் செயல்­பாட்­டா­ளர்­கள் இதற்­குக்­க­டு­மை­யான பதி­ல­டியை உட­ன­டி­யா­கக் கொடுக்க ஆரம்­பித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கைது நாட­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நேற்று காலை திட்­ட­மிட்­ட­படி உத­ய­நிதிஸ்டாலின் இல்­லத்­தில் காவல்­துறை அவ­ரைக்கைது செய்து தஞ்­சைக்கு அழைத்­துச் செல்ல முயன்­ற­போது, தி.மு.க. உயர் நீதி­ 
மன்­றத்தை நாடி­யது. குற்­றச்­சாட்­டிற்­குச் சம்­பந்­தமே இல்­லாத 9 பிரி­வு­க­ளில் போடப்­பட்ட இந்த வழக்­கின் முதல் தக­வல் அறிக்­கையே தவ­றா­னது என்­பதை நீதி­மன்­றத்­தி­டம் முன்­வைத்த போது, அவ­சர வழக்­காக நீதி­மன்­றம் அதை ஏற்­றது. பிற்­ப­க­லில் அதை விசா­ரிக்க இருப்­ப­தால், அது­வரை எந்த நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ளக் கூடாது என நீதி­ய­ர­சர் அரசு வழக்­க­றி­ஞ­ருக்கு அறி­வு­றுத்தி, அதைக் காவல்­து­றைக்­குத் தெரி­விக்­கும்­படி கூறி­னார். ஆனால், பழி­வாங்­கும் வெறி­யின் உச்­சத்­தில் இருந்த த.வெ.க. அரசு அதை யெல்­லாம் கேட்­ப­தாக இல்லை. சட்­டத்­திற்கோ அர­சி­யல் மாண்­பு­க­ளுக்கோ எந்­த­வி­தத்­தி­லும் கட்­டுப்­ப­டா­த­வர்­க­ளிடமிருந்து வேறு எதை எதிர்­பார்க்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­வி­ரோ­த­மாக உத­ய­நி­தி­யைக் கைது செய்து அழைத்­துச் சென்­ற­போது ஊட­கங்­க­ளி­டம் அவர், “இது ஒரு நகைச்சுவை  நாட­கம்” என்­றார். அந்த நகைச்­சுவை நாட­கத்­தைத் த.வெ.க. அரசு நீதி மன்­றத்­தி­லும் நடத்­தி­யது. “நாங்­கள் கைது செய்­ய­வில்லை, சும்மா விசா­ர­ணைக்கு அழைத்­துச் செல்­கி­றோம்” என நீதி­பதி முன்பு பல்­டி­ய­டித்­தார்­கள். நீதி­பதி, உத­ய­நிதி மாலைக்­குள் விடு­விக்­கப்­பட வேண்­டும் என்று உத்­த­ர­விட்­டார். இது­போன்ற வழக்­கு­க­ளில் நான்கு முறை அழைப்­பாணை (Summons) அனுப்பி விசா­ர­ணைக்கு ஆஜ­ரா­கா­விட்­டால்­தான் நீதி­மன்ற ஆணை­யின் பேரில் கைது நட­வ­டிக்கை மேற்­கொள்ள முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த வழக்கு எந்த அடிப்­ப­டை­யி­லும் நீதி­மன்­றத்­தில் நிற்­காது என்று தெரிந்­தும், 
உத­ய­நி­திக்கு உடல்­ரீ­தி­யா­க­வும் மன­ரீதியாக­வும் உளைச்­சலை ஏற்­ப­டுத்­த­லாம் என்ற அற்ப ஆசைக்­கா­கத் தஞ்­சா­வூர் வரை அழைத்­துச் சென்­றார்­கள். சென்­னை­யில் ஒரு காவல் நிலை­யத்­தி­லேயே செய்­தி­ருக்க வேண்­டிய ஒரு சாதா­ரண விசா­ர­ணையை இவ்­வ­ளவு பெரிய நாட­க­மாக மாற்­றி­ய­தன் கார­ணம், “பார், நாங்­கள் உத­ய­நி­தி­யையே கைது செய்­து­விட்­டோம்!” என மார்­தட்­ட­லாம் என்­ப­து­தான். ஆனால், அவர்­கள் ஆசைக்கு நேர்­மா­றாக எல்­லாம் நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">உத­ய­நி­தி­யின் வீட்­டின் முன் ஆயி­ரக் க­ணக்­கான தொண்­டர்­கள் சிறிது நேரத்­தில் திரண்­ட­னர். தமிழ்­நாடு முழுக்­கப் போராட்­டங்­க­ளும் சாலை மறி­யல்­க­ளும் வெடித்­தன. தி.மு.க. தொண்­டர்­கள் அலை அலை­யா­கத் தெருக்­க­ளுக்கு வந்­த­னர். “ஒரு தேர்­தல்தோல்­வி­யால் தி.மு.க. பல­வீ­னப்பட்­டு­விட்­டது”என்ற கட்­டுக்­க­தை­யைப் பரப்­பி­ய­வர்­கள் அதிர்ந்­து­போ­னார்­கள். எந்த அறி­விப்போ திட்­ட­மி­டலோ இல்­லா­மல் தமிழ்­நாடு முழுக்க கழ­கத் தொண்­டர்­கள் வீதிக்கு வந்­தார்­கள்;அரா­ஜக அர­சிற்கு எதி­ராக முழக்­க­மிட்­டார்­கள்.தி.மு.க. என்­றால் யார் என்­பதை மீண்­டும் ஒரு­முறை தமிழ்­நாடு மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வும் பார்த்­தது. எமர்­ஜென்­சியை எதிர்த்து நின்ற, அ.தி.மு.க. ஆட்­சிக்­கால ஒடுக்­கு­மு­றை­களை எதிர்த்து நின்ற இயக்­கத்­தின் வலி­மையை அதிர்ஷ்­டத்­தால் அதி­கா­ரத்­திற்கு வந்த கத்­துக்­குட்­டி­கள் காண ஓர் அரிய சந்­தர்ப்­பம் கிடைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உத­ய­நிதி ஸ்டாலின் அர­சி­யல் பொறுப்பு களுக்கு வந்த இந்­தப் பத்­தாண்­டில், கழ­கத் தலை­வ­ரின் வழி­யில் கடும் உழைப்­பி­னால் தன்னை உரு­வாக்­கிக்­கொண்­ட­வர். தமிழ்­நாட்­டில் அவர் செல்­லாத இடம் இல்லை;  சந்­திக்­காத களங்­கள் இல்லை. அவ­ரது இயல்­பான உரை­கள் மக்­க­ளி­டம் அவ­ரைத் தம்­மில் ஒரு­வ­ராக உண­ரச் செய்­தன. ஊட­கங்­களை அச்­ச­மின்றி சந்­தித்து எப்­போ­தும் ஆதா­ரத்­து­டன் கூடிய உரிய பதில்­களை அளித்து வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைச்­ச­ராக, துணை முதல்­வ­ரா­கச் செயல் தி­றன்­மிக்க, தொலை­நோக்­குப் பார்­வை­யுள்ள தலை­வ­ரா­கச் செயல்­பட்­டார். தமிழ்­நாட்டை இந்­தி­யா­வின் ‘ஸ்போர்ட்ஸ் ஹப்’­பாக மாற்­றிக் காட்­டி­னார். சர்­வ­தேச விளை­யாட்­டுப் போட்­டி­கள், தொகு­தி­தோ­றும் ஸ்டேடி­யத்­து­டன் கூடிய விளை­யாட்டு மைதா­னங்­கள், தி.மு.க. இளை­ஞ­ர­ணி­யில் லட்­சக்­க­ணக்­கான புதிய உறுப்­பி­னர்­க­ளைச் சேர்த்­தது, இளை­ஞ­ர­ணிக்­குத் திரா­வி­டக் கொள்கை சார்ந்த தொடர் பயிற்­சி­களை அளித்­தது, இளம் பேச்­சா­ளர்­களை உரு­வாக்­கி­யது, இளை­ஞ­ரணி சார்­பா­கத் தொகு­தி­தோ­றும் நூல­கம், அறி­வுத்­தி­ரு­விழா என அவர் எல்­லாத் தளங்­க­ளி­லும் தனிச்­சி­றப்­பு­மிக்க தலை­வ­ரா­கத் தன்னை நிலை­ நி­றுத்­திக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">எதிர்­கா­லத் தமிழ்நாட்டின் முகம் உத­ய­நிதி ஸ்டாலின் என்­ப­தைத் தெட்­டத்­தெ­ளி­வாக உணர்ந்­து­கொண்ட அர­சி­யல் எதி­ரி­க­ளால் அதை எப்­ப­டிச் சகித்­துக்­கொள்ள முடி­யும்? சட்­ட­மன்­றத்­தில் அவரை எப்­படி எதிர்­கொள்­வது என்று தெரி­யா­மல் முத­ல­மைச்­சர் விஜய்­யும் ஆளுங்­கட்சியின­ரும் திண­றி­ வ­ரு­கின்­ற­னர். அவ­ரது கூர்­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்­கும் ஆட்­சி­யின் அவ­லங்­கள் குறித்த கேலி களுக்­கும் பதில் சொல்ல 
முடி­யா­மல் அவரை முடக்க இது­போன்ற நாட­கங்­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.க.வின­ரும் அவர்­க­ளது தலை­வர்­க­ளும் பேசு­கிற ஆபா­ச­மான, வக்­கி­ர­மான பேச்­சு­களை எந்த அர­சி­யல் கட்­சித் தலை­வ­ரும் பேச­மாட்­டார்­கள். இந்­தப்­போ­லிச் செய்­தி­க­ளின் ஆபா­சத் தாக்­கு­தல்­க­ளின் தொழிற்­சா­லை­யா­கச் செயல்­ப­டும் இவர்­கள், கடந்த காலத்­தில் யாரை­யெல்­லாம் எவ்­வ­ளவு கீழ்த்­த­ர­மாக வசை­பா­டி­யி­ருக்­கி­றார்­கள்என்­பதை நாட­றி­யும். இவர்­கள்­தான் உத­ய­நிதி ஸ்டாலின் பெண்­களை இழி­வு­ப­டுத்­தி­விட்­டார் என்று பொய்­கூறி நீலிக்­கண்­ணீர் வடிக்­கி­றார்­கள். தங்­கள் கட்­சி­யைச் சேர்ந்த பாலி­யல் குற்­ற­வா­ளி­க­ளைப் பாது­காக்­கும் இவர்­க­ளது கேலிக்­கூத்­தைப் பார்த்து மக்­கள் சிரிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உத­ய­நிதி ஸ்டாலின் மீதான இந்­தச் சட்­ட­வி­ரோ­தக் கைதின் மூல­மா­கத் தி.மு.க. பெரும் எழுச்சி கண்­டி­ருக்­கி­றது. உத­ய­நிதி ஸ்டாலின் தன் ஆளு­மைப் பண்­பில் இன்­னொரு உய­ரத்தைஅடைந்­தி­ருக்­கி­றார். காற்­றில் உய­ரப் பறக்­கும் சரு­கு­கள் கோபு­ரங்­களை மோதி உடைக்க இய­லாது!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>