<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,33,957,944" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 06 2026 04:03:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260806T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06082026-VLR-05" position.sequence="05" ex-ref="06082026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">06.08.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">பெண்­களை தாயாக, தங்­கை­யாக, அக்­கா­வா­கப் பார்ப்­ப­வன் நான்:  யாரை­யும் இழி­வு­ப­டுத்­தும் எண்­ணம் துளி­யும் எனக்­குக் கிடை­யாது!   </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="121">விவசா­யி­க­ளுக்­காக தி.மு.க. போரா­டி­யதை திசைதிருப்­பவே கைது நாட­கம்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="121"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">ரீல்ஸ் அர­சின் பொய் வழக்கு இது! திருச்­சி­யில் –</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உத­ய­நிதி ஸ்டாலின் பேட்டி!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup797043_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="mdpettinew_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திருச்சி,ஆக.6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">விவசாயிகளுக்காக தி.மு.க. போராடியதை திசை திருப்பவே என்னை கைது செய்துள்ளனர் எனவும், பெண்களை நான் அக்காவாக, தாயாக, தங்கையாக பார்க்கிறேன் எனவும், யாரையும் இழிவுபடுத்தும் எண்ணம் எனக்கு இல்லை என்றும், காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டதின்பின் திருச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதுகுறித்து அவர் கூறியதாவது:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“தஞ்­சா­வூ­ரில், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் உத்­த­ர­வின் பேரில், விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ர­வாக ஒரு மிகப்­பெ­ரிய கண்­டன ஆர்ப்­பாட்­டத்தை, நேற்று நடத்­திக் காட்­டி­னோம். அதில் நானும் கலந்­து­கொண்­டேன். என்­னோடு சேர்ந்து, நம்­மு­டைய கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­கள், விவ­சாய சங்க நிர்­வா­கி­கள், விவ­சா­யி­கள், பொது­மக்­கள், நிறைய பேர் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­ யாற்­றி­னார்­கள். நானும் கிட்­டத்­தட்ட ஒரு 25 நிமி­டங்­கள் அதில் பேசி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பொய் வாக்­கு­று­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முழுக்க முழுக்க இந்த ஆட்சி அமைந்த பிறகு, விவ­சா­யி­க­ளுக்கு என்­னென்ன வித­மான துரோ­கங்­க­ளைச் செய்­தி­ருக்­கி­றார்­கள். தேர்­தல் வாக்­கு­றுதி என்று பொய் வாக்­கு­று­தி­க­ளைச் சொல்லி,  இந்த அரசு விவ­சா­யி­களை எப்­படி ஏமாற்றி இருக்­கி­றது. மேக­தாது அணை கட்­டு­வ­தற்கு கர்­நா­டக அரசு மிகத் தீவி­ர­மாக முயற்சி செய்­து­கொண்டு இருக்­கி­றது, அங்கே இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர், அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்டி, மேக­தாது அணை கட்­டு­வோம் என்று தொடர்ந்து சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றார், என்­பது பற்றி விவ­ரித்­துப் பேசி கண்­ட­னங்­க­ளைத் தெரி­வித்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டிற்­குத் தொடர்ந்து விட வேண்­டிய தண்­ணீ­ரை­யும், தொடர்ந்து விட­வில்லை. எங்­க­ளு­டைய தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும்­போது, ஒவ்­வொரு மாத­மும் ஜூன் மாதம், 12-ஆம் தேதி மேட்­டூர் அணை­யில் இருந்து, தொடர்ச்­சி­யாக, இன்­னும் சொல்­லப்­போ­னால், சில ஆண்­டு­கள் ஜூன் 12- ஆம் தேதிக்கு முன்­பா­கவே எங்­க­ளு­டைய தலை­வர், விவ­சா­யி­க­ளுக்­கா­கத் தண்­ணீ­ரைத் திறந்து விட்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால், ஐந்து வரு­டங்­க­ளுக்­குப் பிறகு இந்த வரு­டம் ஜூன் மாதம் போய், ஜூலை மாதம் போய், இப்­போது ஆகஸ்ட் மாத­மும் வந்­து­விட்­டது இது­வ­ரைக்­கும் தண்­ணீர் திறக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தைரி­யம் இல்லை, தெம்பு இல்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதற்­கான வக்­கில்லை இந்த அர­சுக்கு. தண்­ணீ­ரைக் கேட்­டுப் பெறு­வ­தற்­கும் வக்­கில்லை. கர்­நா­ட­காவை எதிர்த்­துப் பேசு­வ­தற்கு வக்­கில்லை, தைரி­யம் இல்லை, தெம்பு இல்லை. எனவே, இந்த முத­ல­மைச்­சர் இதற்­கெல்­லாம் பதில் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சட்­ட­ச­பை­யில் பேசும் போதும் சொன்­னேன். அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்­டுங்­கள். இது ஒரு தனிப்­பட்ட கட்­சி­யின் பிரச்­சினை கிடை­யாது, இது நம் மாநி­லத்­தின் அனைத்து விவ­சா­யி­க­ளின் பிரச்­சினை. நாம் அனை­வ­ரும் ஒன்­றா­கச் சேர்ந்து போரா­டு­வோம், நம் ஒற்­று­மை­யைக் காட்­டு­வோம் என்று தொடர்ந்து நான் சொன்­னேன். அதற்­கும் பதில் சொல்­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவற்­றை­யெல்­லாம் நேற்று வலி­யு­றுத்­திப் பேசி­னேன். அது­மட்­டு­மல்ல, ஒவ்­வொரு அமைச்­ச­ரும் இந்த மூன்று மாதக் காலங்­க­ளில் என்­னென்ன செய்­து­கொண்டு இருக்­கி­றார்­கள் என்று ஆதா­ரத்­து­டன் குறிப்­பிட்­டுப் பேசி­னேன். அதற்­கெல்­லாம் பதில் சொல்­வ­தற்­குத் தெம்பு இல்­லாத, திராணி இல்­லாத, வக்­கில்­லாத ஒரு முத­ல­மைச்­சர், ஒரு டம்மி முத­ல­மைச்­சர் நமக்கு வாய்த்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">திசை திருப்­பும் உத்தி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதை­யெல்­லாம் விட்­டு­விட்டு, நான் பேசாத ஒரு விஷ­யத்தை கட், காப்பி, பேஸ்ட் செய்து, சில விஷ­யங்­க­ளைச் சேர்த்து ச் சொல்­கி­றார்­கள். நான் யாரை­யும் தவ­றா­கப் பேச­வில்லை, முழுக்க முழுக்க விவ­சா­யி­க­ளுக்­கா­கத்­தான் பேசி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நேற்று பேசும்­போ­தும் சொன்­னேன், இந்த அரசு, குறிப்­பாக இந்­தக் கட்சி, இந்த தற்­கு­றிக் கூட்­டம், அவர்­க­ளின் கொள்­கையே கவ­னத்­தைத் திசை  திருப்­பும் உத்­தி­தான் (Diversion Tactics). முழுக்க முழுக்­கப் பொய் செய்தி (Fake News), கவ­னத் திருப்­பு­தல். மாநி­லத்­தில் ஏதா­வது ஒரு பிரச்­சினை எழும் போது, அதைத் திசை திருப்­பு­வ­தற்கு வேறு ஏதா­வது ஒரு பிரச்­சி­னையை எடுக்க வேண்­டி­யது, முத­ல­மைச்­சர் ஒரு போட்டோ சூட் நடத்த வேண்­டி­யது, தி.மு.க-வின் திட்­டங்­களை அப்­ப­டியே சுற்­றிப் பார்க்க வேண்­டி­யது, போஸ் கொடுக்க வேண்­டி­யது, ரீல்ஸ் போடு­வது, அமைச்­சர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லாம் பள்­ளிக்­கூ­டத்­திற்கு சென்று, அங்கே இருக்­கக்­கூ­டிய மாண­வர்­களை எல்­லாம் வரச் சொல்லி, அவர்­கள் கட்­சிப் பெய­ரைச் சொல்லி கோஷம் போடச் சொல்லி, அதை ரீல்­ஸா­கப் போடு­வது - இவற்­றைத்­தான் செய்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர்­க­ளு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மீது அவர்­க­ளு­டைய நிர்­வா­கி­களே இது­வ­ரைக்­கும் பல்­வேறு குற்­றங்­க­ளைச் சொல்லி இருக்­கி­றார்­கள். பாலி­யல் குற்­றங்­கள் சொல்லி இருக்­கி­றார்­கள். அதற்­கெல்­லாம் இது­வ­ரைக்­கும் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. எல்­லா­வற்­றிற்­கும் ஒரு கவ­னத் திருப்பு உத்­தி­யைப் பயன்­ப­டுத்­து­கி­றார் இந்த முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது­மா­திரி  நேற்று நான் பேசிய பிறகு, அது விவ­சா­யி­கள் இடத்­தில் மிகப்­பெ­ரிய ஒரு வர­வேற்­பைப் பெற்ற பிறகு, விவ­சா­யி­கள் இடத்­தில் மிகப்­பெ­ரிய ஒரு எழுச்­சியை ஏற்­ப­டுத்­திய பிறகு, அதை எப்­ப­டி­யா­வது திசை­தி­ருப்ப வேண்­டும், நாளைக்கு சட்­ட­மன்­றம் வேறு ஆரம்­பிக்­கும் போகி­றது, சட்­ட­மன்­றத்­தில் நிச்­ச­யம் இந்­தத் தலைப்­பைப் பேசு­வார்­கள், எதிர்க்­கட்சி இந்­தப் பிரச்­சி­னையை எழுப்­பும் என்று தெரிந்­து­கொண்டு, அதை முடக்க வேண்­டும் என்று, திசை திருப்­பும் உத்­தி­யாக இன்­றைக்கு, காலை­யில் நான் பேசாத ஒரு விஷ­யத்­தைப் பேசி­ய­தாக, கட், காபி, பேஸ்ட் செய்து, அதைத் தேசிய ஊட­கங்­கள் (National Media) வரைக்­கும் கொடுத்­துப் பரவ வைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நான் கலை­ஞ­ரின் பேரன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">காலை­யில் காவல்­துறை என்­னைக் கைது செய்­யப் போவ­தாக வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கைது செய்­யப் போவ­தா­கச் சொன்­னார்­கள், நானும் சரி, என்று  முழு ஒத்­து­ழைப்­பைத் தரு­கி­றேன் என்று சொல்லி அவர்­க­ளோடு சென்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கைது செய்­யப்­ப­டும்­போதே, நான் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் கேட்­கும்­போது சொன்­னேன், இந்த கைதை எப்­ப­டிப் பார்க்­கி­றீர்­கள்? என்று கேட்­ட­தற்கு, நான் சொன்­னேன் மிக­வும் நகைச்­சு­வை­யா­கப் பார்க்­கி­றேன் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் பேசாத ஒரு விஷ­யத்­தைப் பேசி­ய­தா­கக் கதை விட்டு, என்­னைக் கைது செய்­யப் பார்க்­கி­றார்­கள், என்னை முடக்­கப் பார்க்­கி­றார்­கள், என்னை மிரட்­டப் பார்க்­கி­றார்­கள். இதற்­கெல்­லாம் பயப்­ப­டக்­கூ­டிய ஆள் நான் கிடை­யாது. நான் கலை­ஞ­ரின் பேரன், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலி­னின் மகன், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் உடன்­பி­றப்­பு­க­ளில் ஒரு­வன். நாங்­கள் எதற்­கும் பயப்­பட மாட்­டோம். நான் எதிர்­கொள்­வ­தற்­குத் தயா­ராக இருக்­கி­றேன், என்று சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே மாதிரி, நீதி­மன்­றத்­திற்­குச் சென்று, என்ன சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள் அரசு வழக்­க­றி­ஞர்,  அவ­ரைக் கைது செய்­கிற நோக்­கமே எங்­க­ளுக்­குக் கிடை­யாது, சும்மா விசா­ர­ணைக்கு அழைத்­துக்­கொண்டு போகி­றோம் என்று சொல்லி, அரசு செல­வில், மக்­கள் வரிப்­ப­ணத்­தில், கிட்­டத்­தட்ட 3,000 காவ­லர்­கள் பாது­காப்­போடு, ஒரு பயங்­க­ர­வா­தியை அழைத்­துக்­கொண்டு போவது மாதிரி, சென்­னை­யி­லி­ருந்து, சாலை வழி­யாக 400 கி.மீ தஞ்­சா­வூர் வரைக்­கும் அழைத்­துக்­கொண்டு சென்­ற­னர். எங்­களை முறை­யா­க­வும் பார்த்­துக் கொள்­ள­வில்லை. தஞ்­சா­வூர் அழைத்­துக்­கொண்டு செல்ல வேண்­டும், ஆனால் தஞ்­சா­வூர் அழைத்­துக்­கொண்டு போகா­மல், நடு­வில் செங்­கிப்­பட்டி என்று ஒரு காவல் நிலை­யத்­தில் இறக்கி, அங்கே விசா­ரணை என்ற பெய­ரில், பல கேள்­வி­க­ளைக் கேட்டு, இன்­றைக்கு அனுப்பி வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சட்­டப்­படி நாங்­கள் சந்­திப்­போம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதை நாங்­கள் சட்­டப்­ப­டியே நிச்­ச­ய­மாக சந்­திப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் இந்த நேரத்­தில் கூறிக்­கொள்ள விரும்­பு­வது, நான் எந்­த­வி­த­மான ஒரு தவ­றான எண்­ணத்­தி­லும் நேற்று பேசவே இல்லை. யாரை­யும் புண்­ப­டுத்த வேண்­டும், யாரை­யும் தாழ்த்­திப் பேச வேண்­டும், குறிப்­பா­கச் சொன்­னால் பெண்­க­ளைத் தாழ்த்­திப் பேச வேண்­டும் என்று துளி கூட என்­னு­டைய மன­தில் எண்­ணம் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">என்­னு­டைய பெற்­றோர், என்­னு­டைய குடும்­பம் என்னை அப்­படி வளர்க்­க­வில்லை. என் தாய் தந்தை என்னை அப்­படி வளர்க்­க­வில்லை. எனக்­குத் திரு­ம­ண­மாகி ஒரு மனைவி இருக்­கி­றார், அவர்­க­ளோ­டு­தான் நான் வாழ்ந்­து­கொண்டு இருக்­கி­றேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்­கி­றார், எனக்கு ஒரு தங்கை இருக்­கி­றார். எனக்­கென்று ஒரு குடும்­பம் இருக்­கி­றது. தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய ஒவ்­வொரு தாய்­மா­ரை­யும் என் குடும்­ப­மாக, தாயாக, தங்­கை­யாக நான்  நினைத்­துக்­கொண்டு இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­ப­டிப் பொய் வழக்­குப் போட்டு என்னை பய­
மு­றுத்­த­லாம் என்று இந்த அரசு நினைத்­தார்­கள். அதற்­கெல்­லாம் பயப்­ப­டக்­கூ­டிய ஆள் நான் கிடை­யாது. இந்த நேரத்­தில் என் கைதைக் கண்­டித்து, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சேர்ந்த முன்­னோ­டி­கள், கழக உடன்­பி­றப்­பு­கள் பல இடங்­க­ளில் மறி­யல் செய்து, ஆர்ப்­பாட்­டம் செய்து கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் என் மீது வைத்­தி­ருக்­கக்­கூ­டிய அந்த அன்­பிற்­கும் பாசத்­திற்­கும் இந்த நேரத்­தில்  நான் தலை­வ­ணங்­கு­கி­றேன். அவர்­களை எல்­லாம் விரை­வில் விடு­தலை செய்ய வேண்­டும் என்று நான் இந்த அரசை வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எங்­க­ளு­டைய தலை­வர், பொதுச்­செ­ய­லா­ளர், முதன்­மைச் செய­லா­ளர், வழக்­க­றி­ஞர் அணி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அத்­தனை பேரும் என் கூடவே இருந்­தார்­கள். அவர்­க­ளுக்கு இந்த நேரத்­தில் என் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எங்­க­ளு­டைய கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­கள், அவர்­க­ளுக்கு நான் என்ன பேசி­னேன் என்­பது தெரி­யும்.  கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­கள் அனை­வ­ரும் நேற்று அந்­தக் கூட்­டத்­தில் என்­னு­டன் பங்­கேற்று அவர்­க­ளும் சிறப்­பு­ரை­யாற்­றி­னார்­கள். அவர்­கள்­தான் நான் பேசி­ய­தற்கு  சாட்சி. அவர்­க­ளும் இந்த கைது முயற்­சியை வன்­மை­யா­கக் கண்­டித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனக்கு இருக்­கக்­கூ­டிய ஒரே வருத்­தம், சில தலை­வர்­கள் நான் பேசி­யதை முழு­மை­யா­கக் கேட்­கா­மலோ, பார்க்­கா­மலோ, தீர ஆரா­யா­மலோ நான் தவ­றா­கப் பேசி­விட்­டேன் என்று கண்­ட­னத்­தைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். அது எனக்­குக் கொஞ்­சம் வருத்­த­மாக இருக்­கி­றது. நான் எந்த நேரத்­தி­லும் அது மாதிரி தவ­றான எண்­ணத்­தில் பேசவே இல்லை. விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ர­வா­கப் பேசி­ய­தற்­காக இந்த தரங்­கெட்ட அரசு கைது செய்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் மீண்­டும் சொல்­கி­றேன், இந்த கைதுக்­குப் பயப்­பட மாட்­டேன். இன்­னும் 100 முறை பேசு­வேன், மீண்­டும் பேசு­வேன். அதில் சில பேர் நான் இரட்டை அர்த்­தத்­தில் பேசி­விட்­டேன் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். நான் நிச்­ச­ய­மாக இரட்டை அர்த்­தத்­தில் எல்­லாம் பேசவே இல்லை. நான் ஒரே அர்த்­தத்­தில்­தான் பேசி­னேன். மீண்­டும் பேசு­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடந்த காலத்­தில் எங்­க­ளு­டைய தலை­வர் எடுத்த முயற்­சி­யி­னாலே, காவி­ரி­யில் தண்­ணீர் திறந்து விடப்­பட்டு, விவ­சா­யி­க­ளுக்­குத் தண்­ணீர் வந்­தி­ருக்­கி­றது. இந்த முறை தண்­ணீர் வர­வில்லை. காவி­ரிக்­குத் தண்­ணீர் வர வேண்­டும். இதைத்­தான் நான் பேசி­னேன், இதை மீண்­டும் மீண்­டும் நான் பேசு­வேன். எனவே, இந்த மாதிரி பொய் வழக்­கு­க­ளுக்­கெல்­லாம் பயப்­ப­டப் போவ­தில்லை. இதைச் சட்­ட­ரீ­தி­யா­கச் சந்­திக்க நான் தயா­ராக இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கேள்வி:100 நாளில் இருக்­கிற இந்த ஆட்­சியை எப்­ப­டிப் பார்க்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பதில்:இதை நான் ஒரு ஆட்­சி­யா­கவே பார்க்­க­வில்லை. இதை ஒரு சர்க்­கஸ் கூடா­ரம் மாதி­ரி­தான் நான் பார்க்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கேள்வி:உங்­களை கைது செய்­யக் கார­ணம் என்ன சார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பதில்:பய­மு­றுத்த வேண்­டும். திசை­திருப்­பு­தல்­
தான் (Diversion), வேறு ஒன்­றும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கேள்வி:தொடர்ந்து தி.மு.க சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கைது செய்­கி­றார்­களே ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பதில்:தி.மு.க சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பார்த்­தால் அவர்­க­ளைக் கைது செய்­யத் தோன்­றும், அ.தி.மு.க சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பார்த்­தால் எப்­ப­டி­யா­வது அவர்­க­ளுக்கு சோஃபா அனுப்பி வாங்க வேண்­டும் என்று இந்த அரசு முயற்­சிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கேள்வி:பல­ரை­யும் தி.மு.க-வைச் சேர்ந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கட்­டும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரையே கைது செய்­யும் நட­வ­டிக்­கை­யில் இந்த அரசு ஈடு­பட்­டி­ருக்­கி­றது. வரக்­கூ­டிய காலங்­க­ளில் அவர்­களை எப்­படி நீங்­கள் அணு­கப் போகி­றீர்­கள், என்ன செய்­யப் போகி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பதில்:இந்த முத­ல­மைச்­ச­ருக்கு தி.மு.க-வின் வர­லாறு தெரி­ய­வில்லை, தமிழ்­நாட்­டின் வர­லாறு தெரி­ய­வில்லை. தெரி­யா­மல் இதை­யெல்­லாம் செய்­து­கொண்டு இருக்­கி­றார். மக்­கள் இதை­யெல்­லாம் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள். நிச்­ச­யம் மக்­கள் இதற்­கான பதி­லைத் தர­வேண்­டிய நேரத்­தில் நிச்­ச­யம் தரு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கேள்வி:சட்­ட­மன்­றக் கூட்­டத் தொட­ரில் தி.மு.க-வின் வியூ­கம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பதில்:நாங்­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும், முக்­கிய தலை­வர்­கள், மூத்த தலை­வர்­கள் அனை­வ­ரும், எங்­க­ளு­டைய தலை­வ­ரைப் பார்க்க, தலை­வ­ரின் இல்­லத்­திற்­குச் செல்­கி­றோம். தலை­வர் எங்­க­ளுக்­குத் தகுந்த அறி­வு­ரை­யைக் கூறு­வார். அதன்­படி நாங்­கள் நடந்­து­கொள்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும்  சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான 
உத­ய­நிதி ஸ்டாலின் பேட்டி அளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>