<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,641,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 06 2026 00:01:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260806T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06082026-VLR-08" position.sequence="08" ex-ref="06082026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">மழைநீர் சேகரிப்பு, நிலத்தடிநீர் நீர் நிரப்புதல் போன்ற </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">இயற்கை வளங்களின் மேலாண்மைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">மக்களவையில்  – எஸ். ஜெகத்ரட்சகன் கேள்வி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="jagathratchaga_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புது­டெல்லி, ஆக.6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழக, அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர், டாக்­டர் எஸ். ஜெகத்­ரட்­ச­கன் அவர்­கள்,   மக்­க­ள­வை­யில், நாட்­டின் தற்­போ­தைய சாகு­படி முறை­கள் மற்­றும் நீர்­வள நிலை­மை­க­ளுக்கு இடை­யி­லான பொருந்­தாமை, குறிப்­பாக நீர்ப் பற்­றாக்­குறை, வறட்சி மற்­றும் நிலத்­தடி நீர் குறைந்து வரும் பகு­தி­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­கள், உள்­ளூர் நீர் கிடைப்­புத் தன்மை மற்­றும் வேளாண்-­ப­ரு­வ­நிலை பொருத்­தத்­தின் அடிப்­ப­டை­யில் பயிர் பல்­வ­கைப்­ப­டுத்­தலை ஊக்­கு­விக்­கும் நட­வ­டிக்­கை­கள், நுண்­பா­ச­னம், மண் வள மேலாண்மை, இயற்கை வளங்­க­ளின் திற­மை­யான பயன்­பாடு மற்­றும் நீண்­ட­கால நீர்ப் பாது­காப்­பு­டன் கூடிய நிலை­ யான வேளாண்­மையை மேம்­ப­டுத்த ஒன்­றிய அரசு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்து கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதற்கு ஒன்­றிய அர­சின் வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நலத் துறை   இணை அமைச்­சர்  பகீ­ரத் சவுத்ரி அவர்­கள் அளித்த பதில் பின்­வ­ரு­மாறு:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­திய வேளாண் ஆராய்ச்­சிக் கழ­கம், நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளில் நில­வும் சாகு­படி முறை­கள் மற்­றும் நீர்­வள நிலை­மை­கள் குறித்து ஆய்வு மேற்­கொண்­டுள்­ள­தாக அமைச்­சர் தெரி­வித்­தார். மத்­திய நிலத்­தடி நீர் வாரி­யத்­தின் தர­வு­கள் மற்­றும் மாதாந்­திர அடிப்­ப­டை­யி­லான கிரேஸ் செயற்­கைக்­கோள் தர­வு­க­ளைப் பயன்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில், குறிப்­பாக பஞ்­சாப், ஹரி­யானா, ஆந்­தி­ரப் பிர­தே­சம், தெலங்­கானா, மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா மற்­றும் தமிழ்­நாடு ஆகிய நிலத்­தடி நீர் குறைந்த மாநி­லங்­க­ளில், தற்­போ­தைய சாகு­படி முறை­க­ளின் நீர்த் தேவைக்­கும் கிடைக்­கக்­கூ­டிய நீர்­வ­ளத்­திற்­கும் இடையே பொருந்­தாமை இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பயிர்த்திட்டங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், இந்­திய வேளாண் ஆராய்ச்­சிக் கழ­கம் ‘இந்­தி­யா­வின் சாகு­படி முறை அட்­லஸ்’ தயா­ரித்­துள்­ள­தா­க­வும், நில­வும் வேளாண்-­ப­ரு­வ­நிலை சூழல், நீர் உள்­ளிட்ட வளங்­க­ளின் கிடைப்­புத் தன்மை மற்­றும் சந்தை வாய்ப்­பு­களை கருத்­தில் கொண்டு, தானிய ஆதிக்­கம் கொண்ட சாகு­படி முறை­க­ளுக்கு மாற்­றாக நிலை­யான மாற்­றுச் சாகு­படி முறை­களை அடை­யா­ளம் கண்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், நெல், கோதுமை, மக்­காச்­சோ­ளம், கம்பு, சோளம், துவரை, கொண்­டைக்­க­டலை, சோயா­பீன், கடுகு, நிலக்­க­டலை, பருத்தி, கரும்பு, உரு­ளைக்­கி­ழங்கு மற்­றும் வெங்­கா­யம் ஆகிய 14 முக்­கி­யப் பயிர்­க­ளுக்கு, ஒப்­பீட்டு பர­வல் குறி­யீடு, ஒப்­பீட்டு விளைச்­சல் குறி­யீடு, நிலை­யான விளைச்­சல் குறி­யீடு மற்­றும் மண்-­ப­ரு­வ­நிலை பொருத்­தக் குறி­யீடு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் வேளாண்-­சூ­ழ­லி­யல் மற்­றும் மாவட்ட வாரி­யான பயிர்த் திட்­டங்­கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் அதிக நீர் தேவைப்­ப­டும் முக்­கி­யப் பயிர்­க­ளாக நெல், கரும்பு, பருத்தி மற்­றும் சணல் உள்­ள­தா­க­வும், இவை மொத்­த­மாக 6.27 கோடி ஹெக்­டேர் பரப்­ப­ள­வில்பயி­ரி­டப் ­பட்டு, நாட்­டின் மொத்த பயி­ரி­டப்­பட்ட பரப்­ப­ள­வில் சுமார் மூன்­றில் ஒரு பங்­கைக் கொண்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­திய வேளாண் ஆராய்ச்­சிக் கழ­கம், மழைப்­பொ­ழிவு மற்­றும் நீர் கிடைப்­புத் தன்­மை­யு­டன் தொடர்­பு­ப­டுத்தி மேற்­கொண்ட மதிப்­பீட்­டில், ஆண்­டுக்கு 650 மில்­லி­மீட்­ட­ருக்­கும் குறை­வான மழைப்­பொ­ழிவு பெறும் 68 மாவட்­டங்­க­ளில் சுமார் 28.9 லட்­சம் ஹெக்­டேர் நெல் பயி­ரி­டப்­ப­டு­வ­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக அமைச்­சர் தெரி­ வித்­தார். இது நாட்­டின் மொத்த நெல் சாகு­படி பரப்­ப­ள­வான 5.10 கோடி ஹெக்­டே­ரில் சுமார் 5.67 சத­வீ­தம் ஆகும். அதே­போல், ஆண்­டுக்கு 700 மில்­லி­ மீட்­ட­ருக்­கும் குறை­வான மழைப்­பொ­ழிவு பெறும் 91 மாவட்­டங்­க­ளில் சுமார் 7.21 லட்­சம் ஹெக்­டேர் கரும்பு பயி­ரி­டப்­ப­டு­வ­தா­க­வும், இது நாட்­டின் மொத்த கரும்பு சாகு­படி பரப்­ப­ள­வான 67 லட்­சம் ஹெக்­டே­ரில் சுமார் 10.76 சத­வீ­தம் ஆகும் என்­றும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த மதிப்­பீ­டு­கள், நீர்ப் பற்­றாக்­குறை மற்­றும் தொடர்ந்து குறைந்து வரும் நிலத்­தடி நீர் மட்­டம் உள்ள பகு­தி­க­ளில், நீர் பாது­காப்பு, விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரம் மற்­றும் வேளாண் உற்­பத்­தித்­தி­றனை சம­நி­லைப்­ப­டுத்­தும் வகை­யில், அந்­தந்­தப் பகு­தி­க­ளுக்கு ஏற்ற பயிர் பல்­வ­கைப்­ப­டுத்­தலை ஊக்­கு­விப்­ப­தற்­கான அறி­வி­யல் அடிப்­ப­டை­யாக அமைந்­துள்­ள­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உள்­ளூர் நீர் கிடைப்­புத் தன்மை, மண்­ணின் தன்மை, வேளாண்-­ப­ரு­வ­நிலை பொருத்­தம் மற்­றும் இயற்கை வளங்­க­ளின் நிலை­யான பயன்­பாடு ஆகி­ய­வற்றை கருத்­தில் கொண்டு, அதிக நீர் தேவைப்­ப­டும் பயிர்­க­ளி­லி­ருந்து பருப்பு வகை­கள், எண்­ணெய் வித்­துப் பயிர்­கள், சிறு­தா­னி­யங்­கள் மற்­றும் தோட்­டக்­க­லைப் பயிர்­கள் போன்ற குறைந்த நீர் தேவைப்­ப­டும் பயிர்­க­ளுக்கு பயிர் பல்­வ­கைப்­ப­டுத்­தலை ஒன்­றிய அரசு ஊக்­கு­வித்து வரு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பயிர் பல்­வ­கைப்­ப­டுத்­த­லுக்­கான முன்­னோ­டித் திட்­டத்­தின் கீழ், மேற்­கண்ட அள­வு­கோல்­க­ளின் அடிப்­ப­டை­யில் அடை­யா­ளம் காணப்­பட்ட 47 மாவட்­டங்­க­ளில் இந்­திய வேளாண் ஆராய்ச்­சிக் கழ­கம், அந்­தந்­தப் பகு­தி­க­ளுக்கு ஏற்ற பயிர் பல்­வ­கைப்­ப­டுத்­தல் நட­வ­டிக்­கை­களை செயல்­ப­டுத்தி வரு­வ­தா­க­வும் தெரி­வித்­தார். மேலும், பல்­வ­கைச் சாகு­படி முறை­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில், பல்­வேறு பயிர்­க­ளுக்கு ஏற்ற உகந்த பாசன அட்­ட­வணை மற்­றும் சொட்டு நீர்ப்­பா­சன உரப்­பா­சன முறை ஆகி­யவை தர­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டு, நீர் பயன்­பாட்­டுத் திறன் மற்­றும் உற்­பத்­தித்­தி­றனை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக ஊக்­கு­விக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், 2023-–24 முதல் 2025-–26 வரை, இந்­திய வேளாண் ஆராய்ச்­சிக் கழ­கம் 457 பயிற்சி நிகழ்ச்­சி ­களை நடத்­தி­யுள்­ள­தா­க­வும், இதன் மூலம் 8,749 விவ­சா­யி­கள் மற்­றும் 4,592 வேளாண் விரி­வாக்­கப் பணி­யா­ளர்­கள் பயிற்சி பெற்­றுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார். இப்­ப­யிற்­சி­கள் அறி­வி­யல் அடிப்­ப­டை­யி­லான பயிர் பல்­வ­கைப்­ப­டுத்­தல் மற்­றும் நிலை­யான பயிர் மேலாண்மை நடை­மு­றை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக நடத்­தப்­பட்­ட­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஊட்டச்சத்து மேலாண்மை நடவடிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிலை­யான வேளாண்மை, நுண்­பா­ ச­னம், மண் வள மேலாண்மை மற்­றும் இயற்கை வளங்­க­ளின் திற­மை­யான பயன்­பாட்டை மேம்­ப­டுத்த ஒன்­றிய அரசு பல்­வேறு திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார். பிர­தம மந்­திரி தன்-­தான்யா கிரிஷி யோஜனா திட்­டத்­தின் கீழ், 100 இலட்­சிய வேளாண் மாவட்­டங்­க­ளில், பயிர் பல்­வ­கைப்­ப­டுத்­தல், பாசன மேம்­பாடு, அறு­வ­டைக்­குப் பிந்­தைய கட்­ட­மைப்பு வச­தி­கள், இயற்கை மற்­றும் உயி­ரி­யல் வேளாண்மை, ஒருங்­கி­ணைந்த பூச்சி மேலாண்மை மற்­றும் ஒருங்­கி­ணைந்த ஊட்­டச்­சத்து மேலாண்மை போன்ற நட­வ­டிக்­கை­கள் ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீண்­ட­கால நீர்ப் பாது­காப்பு மற்­றும் பரு­வ­நிலை மாற்­றத்­தைத் தாங்­கும் வேளாண்­மையை மேம்­ப­டுத்­தும் நோக்­கில், இந்­திய வேளாண் ஆராய்ச்­சிக் கழ­கம் மேற்­கொள்­ளும் ஆராய்ச்சி, தொழில்­நுட்ப மேம்­பாடு மற்­றும் கள­நிலை செயல் விளக்­கங்­கள் மூலம் பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளில் மழை­நீர் சேக­ரிப்பு, பண்­ணைக் குட்­டை­கள் மற்­றும் பிற மேற்­ப­ரப்பு நீர் சேமிப்பு அமைப்­பு­கள் உரு­வாக்­கு­தல், நிலத்­தடி நீர் நிரப்­பு­தல், மேற்­ப­ரப்பு மற்­றும் நிலத்­தடி நீரை ஒருங்­கி­ணைத்து பயன்­ப­டுத்­து­தல், சேமிக்­கப்­பட்ட நீரை பல்­வேறு பயன்­பா­டு­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­து­தல், வய­லி­லேயே ஈரப்­
ப­தத்­தைப் பாது­காத்­தல், பாது­காப்பு வேளாண்மை, பாது­காப்­புப் பாச­னம், நுண்­பா­ச­னம் மற்­றும் செயற்கை நுண்­ண­றிவு, உண­ரி­கள் மற்­றும் வானி­லைத் தக­வல்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட பாசன அட்­ட­வணை மற்­றும் ஆலோ­சனை அமைப்­பு­கள் ஆகி­யவை இடம்­பெற்­றுள்­ள­தா­ க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு தேசிய நிலை­யான வேளாண்மை இயக்­கம், பிர­தம மந்­திரி கிரிஷி சிஞ்­சாயீ யோஜனா – ஒரு துளி நீர் அதிக விளைச்­சல், பிர­தம மந்­திரி கிரிஷி சிஞ்­சாயீ யோஜனா – நீர்ப்­பி­டிப்பு பகுதி மேம்­பாட்­டுக் கூறு 2.0 மற்­றும் பிர­தம மந்­திரி தன்-­தான்யா கிரிஷி யோஜனா ஆகிய திட்­டங்­கள் ஆத­ர­வாக உள்­ள­தா­க­வும், இவை பரு­வ­நிலை மாற்­றத்தை எதிர்­கொள்­ளும் திறனை மேம்­ப­டுத்தி, சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த நிலை­யான வேளாண் நடை­மு­றை­களை ஊக்­கு­வித்து வரு­வ­தா­க­வும் ஒன்­றிய அர­சின் வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நலத் துறை இணை அமைச்­சர் பகீ­ரத் சவுத்ரி அவர்­கள், திமுக அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் எஸ். ஜெகத்­ரட்­ச­கன் அவர்­கள் எழுப்­பிய கேள்­விக்கு எழுத்­துப்­பூர்­வ­மாக அளித்த பதி­லில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>