<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,398,493,957" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 06 2026 04:06:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260806T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06082026-VLR-10" position.sequence="10" ex-ref="06082026-VLR-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">ஆன்டிபயாடிக் மருந்துகளின் எச்சங்களால்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">இந்திய இறால் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறதா? </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="33"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">மக்களவையில் - தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Thamizhachibla_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">புது­டெல்லி, ஆக. 6 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தென் சென்னை மக்­க­ளவை உறுப்­பி­னர் தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன், தடை செய்­யப்­பட்ட ஆன்­டி­ப­யா­டிக் மருந்­து­க­ளின் எச்­சங்­கள் கார­ண­மாக இந்­திய இறால் ஏற்­று­மதி சரக்­கு­கள் வெளி­நா­டு­க­ளால் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வது, அத­னால் ஏற்­பட்ட நிதி இழப்பு, சட்­ட­வி­ரோத ஆன்­டி­ப­யா­டிக் பயன்­பாட்­டைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­கள் மற்­றும் தமிழ்­நாட்­டில் சிறு அள­வி­லான இறால் வளர்ப்­போ­ருக்கு வழங்­கப்­ப­டும் ஆத­ரவு குறித்து மக்­க­ள­வை­யில் கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதா­வது, 2025 மார்ச் மாதம் முதல் அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றி­யம் உள்­ளிட்ட முக்­கிய சந்­தை­கள் தடை செய்­யப்­பட்ட நைட்­ரோஃப்­யூ­ரான்­கள், குளோ­ராம்­பெ­னி­கால் போன்ற ஆன்­டி­ப­யா­டிக் எச்­சங்­கள் கார­ண­மாக எத்­தனை இந்­திய இறால் ஏற்­று­மதி சரக்­கு­களை நிரா­க­ ரித்­துள்­ளன? அத­னால் ஏற்­பட்ட நிதி இழப்பு எவ்­வ­ளவு? தடை செய்­யப்­பட்ட கால்­நடை மருந்­து­கள் சட்­ட­வி­ரோ­த­மாக விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தால் அவை இறால் வளர்ப்­பில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தைத் தடுக்க அரசு எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­கள் என்ன? மாநில மற்­றும் மாவட்ட வாரி­யாக மேற் ­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­கள், விதிக்­கப்­பட்ட அப­ரா­தங்­கள் மற்­றும் அம­லாக்க நட­வ­டிக் ­கை­கள் என்ன? மேலும், தமிழ்­நாட்­டில் சிறு அள­வி­லான இறால் வளர்ப்­போ­ருக்கு தர­மான ஆன்­டி­ப­யா­டிக் இல்­லாத தீவ­னம், தர­மான குஞ்­சு­கள் மற்­றும் SHAPHARI சான்­றி­தழ் திட்­டத் த்­தின் மூலம் வழங்­கப்­ப­டும் உதவி என்ன? என்று கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இதற்கு மத்­திய மீன்­வ­ளம், கால்­நடை பரா­ம­ரிப்பு மற்­றும் பால்­வ­ளத்­துறை அமைச்­சர் ராஜீவ் ரஞ்­சன் சிங் (லாலன் சிங்) எழுத்­துப்­பூர்­வ­மாக பதில் அளித்­தார். அந்த பதி­லில் :-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">2025 மார்ச் முதல் இது­வரை, தடை செய்­யப்­பட்ட ஆன்­டி­ப­யா­டிக்  எச்­சங்­கள் கண்­ட­றி­யப்­பட்­ட­ தால் மொத்­தம் 35 இந்­திய இறால் ஏற்­று­மதி சரக்­கு­கள் அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றி­யம், ஜப்­பான் மற்­றும் ரஷ்யா ஆகிய நாடு­க­ளால் நிரா­க­ரிக்­கப்­ப ட்­டுள்­ளன. இதில் அமெ­ரிக்கா 22 சரக்­கு­கள் (336.79 மெட்­ரிக் டன்; ரூ.26.01 கோடி), ஐரோப்­பிய ஒன்­றி­யம் 9 சரக்­கு­கள் (145.21 மெட்­ரிக் டன்; ரூ.9.49 கோடி), ஜப்­பான் 3 சரக்­கு­கள் (45.54 மெட்­ரிக் டன்; ரூ.3.06 கோடி), ரஷ்யா 1 சரக்கு (20 மெட்­ரிக் டன்; ரூ.1.341 கோடி) ஆகி­யவை அடங்­கும். மொத்­த­மாக *547.54 மெட்­ரிக் டன் மதிப்­பி­லான ரூ.39.901 கோடி ஏற்­று­மதி சரக்­கு­கள் நிரா­க­ரிக்­க ப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தடை செய்­யப்­பட்ட ஆன்­டி­ப­யா­டிக் மருந்­து­க­ளின் சட்­ட­வி­ரோத விற்­பனை மற்­றும் தவ­றான பயன்­பாட்­டைத் தடுக்கமத்­திய அரசு பல்­வேறு ஒழுங்­கு­முறை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">Coastal Aquaculture Authority (CAA), 2023-ஆம் ஆண்டு திருத்­தப்­பட்ட சட்­டத்­தின் கீழ், கட­லோர மீன்­வள வளர்ப்­பில் பயன்­ப­டுத்­தத் தடை செய்­யப்­பட்ட மருந்­து­கள் மற்­றும் மருந்­தி­யல் செயற் ­பாட்டு பொருட்­க­ளின் பட்­டி­யலை 75 ஆக விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும், குளோ­ராம்­பெ­னி ­கால், நைட்­ரோஃப்­யூ­ரான் உள்­ளிட்ட மருந்­து­க­ளின் இறக்­கு­மதி, உற்­பத்தி, விநி­யோ­கம் மற்­றும் விற்­ப­னைக்கு தடை விதிக்­க ப்­பட்­டுள்­ள­தா­க­வும், மனி­தர்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட 37 வகை நுண்­ணு­யிர் எதிர்ப்பு மருந்­து­களை இறால் மற்­றும் மீன்­வள வளர்ப்­பில் பயன்­ப­டுத்­த­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சட்­ட­வி­ரோத ஆன்­டி­ப­யா­டிக் பயன்­பாட்­டைக் கண்­கா­ணிக்க அனைத்து கட­லோர மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ ளி­லும்  Antibiotic Task Force அமைக்க மத்­திய அரசு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அனைத்து கட­லோர மாநி­லங்­க­ளும் இந்­தப் பணிக்­கு­ழுக்­களை அமைத்­துள்­ளன. இருப்­பி­னும், மாநில அல்­லது மாவட்ட வாரி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­ கள், விதிக்­கப்­பட்ட அப­ரா­தங்­கள் மற்­றும் அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் குறித்த மையப்­ப­டுத்­தப்­பட்ட தர­வுத்­த­ளம் மத்­திய அர­சி­டம் இல்லை என்­றும் பதி­லில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மேலும், ஏற்­று­மதி ஆய்­வுக் கவுன்­சில் (EIC), ஆன்­டி­ப­யா­டிக் தொடர்­பான ஒவ்­வொரு விதி­மீ­றல் சம்­ப­வத்­தை­யும் விசா­ரித்து, கார­ணங்­களை கண்­ட­றிந்து சரி­செய்­யும் நட­வ­டிக்­கை ­களை மேற்­கொண்டு வரு­கி­றது. ஐரோப்­பிய ஒன்­றி­யம் மற்­றும் ஜப்­பான் போன்ற முக்­கிய சந்­தை­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டும் அனைத்து சரக்­கு­க­ளும் 100 சத­வீத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. மீண்­டும் மீண்­டும் விதி­மீ­ற­லில் ஈடு­ப­டும் நிறு­வ­னங்­கள், திருத்த நட­வ­டிக்­கை­கள் நிறை­வே­றும் வரை தற்­கா­லி­க­மாக கட்­டுப்­பா­டு­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் சிறு அள­வி­லான இறால் வளர்ப்­போ­ருக்கு பிர­த­மர் மத்ஸ்ய சம்­பதா யோஜனா (PMMSY) திட்­டத்­தின் கீழ் 37 நர்­சரி/விதை வளர்ப்பு குளங்­கள் (ரூ.2.59 கோடி), ஒரு நோய் கண்­ட­றி­தல் மற்­றும் தரப் பரி­சோ­தனை ஆய்­வ­கம் (ரூ.40 லட்­சம்), 7 மீன் தீவன ஆலை­கள் (ரூ.5.20 கோடி) ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மேலும், ஆன்­டி­ப­யா­டிக் இல்­லாத தர­மான உற்­பத்­தியை ஊக்­கு­விக்­கும் வகை­யில் CAA இது­வரை 10,109 மீன்­வள உற்­பத்­திப் பொருட்­க­ளுக்கு சான்­றி­தழ் வழங்­கி­யுள்­ளது. SHAPHARI திட்­டத்­தின் கீழ் நாடு முழு­வ­தும் 16 இறால் குஞ்சு உற்­பத்தி நிலை­யங்­க­ளும், 392 ஹெக்­டேர் இறால் பண்­ணை­க­ளும் சான்­ற­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இதில் தமிழ்­நாட்­டில் ஒரு இறால் குஞ்சு உற்­பத்தி நிலை­ய­மும், 83.47 ஹெக்­டேர் பரப்­ப­ள­வி­லான இறால் பண்­ணை­க­ளும் சான்­றி­தழ் பெற்­றுள்­ளன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>