<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,33,959,1159" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 07 2026 00:23:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260807T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07082026-CHN-03" position.sequence="03" ex-ref="07082026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">07.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="44">பயிர்க்கடன் தள்ளுபடி – வறட்சி நிவாரணம் – இலவச மின்சாரம் இல்லாத வெற்று பட்ஜெட்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="44"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">மாற்றம் என்று சொன்னவர்கள் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளனர்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="53">த.வெ.க. அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து வேளாண்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup812446_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup829317_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup812345_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="mrknewc_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">சென்னை, ஆக.7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">த.வெ.க. அர­சின் வேளாண் பட்­ஜெட் தொடர்­பாக கழக முன்­னாள் வேளாண்­துறை அமைச்­சர் எம்.ஆர்.கே.பன்­னீர்­செல்­வம் அவர்­கள் செய்­தி­யா­ளர்­களை  சந்­தித்­தார். அப்­போது அவர் மாற்­றம் என்று சொன்­ன­வர்­கள் விவ­சா­யி­க­ளுக்கு ஏமாற்­றத்­தையே கொடுத்­துள்­ள­னர் என்­றும், பயிர்க்­க­டன் தள்­ளு­படி, வறட்சி நிவா­ர­ணம், இல­வச மின்­சா­ரம் என எந்­த­வொரு அறி­விப்­பும் இல்­லாத வெற்று பட்­ஜெட் என்­றும், புதிய திட்­டங்­கள் எது­வு­மில்லை, ஏற்­க­னவே ஒதுக்­கிய நிதி­யும் குறைப்பு என்­றும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இது குறித்து முன்­னாள் அமைச்­சர் எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம் அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">த.வெ.க. அர­சின் இன்­றைய வேளாண் பட்­ஜெட்டை சட்­ட­மன்­றத்­தில் உட்­கார்ந்து கேட்­ட­போது, நாங்­கள் எழு­திய புத்­த­கத்­தைப் படிக்­கிற மாதிரி ஒரு உணர்வு ஏற்­பட்­டது. மாற்­றம் வேண்­டும், மாற்­றம் செய்­வோம் என்று சொல்லி ஆட்­சிக்கு வந்­த­வர்­கள் விவ­சா­யி­ க­ளுக்கு ஏமாற்­றத்தை கொடுத்­துள்­ள­னர். மாற்­றம் என்­றால் என்ன? நாங்­கள் ரூ.4,000 கொடுத்­தி­ருந்­தால், நீங்­கள் ரூ.10,000 கொடுக்க வேண்­டும். நாங்­கள் 50 சத­வீத மானி­யம் கொடுத்­தி­ருந்­தால், நீங்­கள் 100 சத­வீத மானி­யம் கொடுக்க வேண்­டும். அது­தான் மாற்­றம். ஆனால், இந்த பட்­ஜெட்­டில் அப்­ப­டிப்­பட்ட புதிய அறி­விப்­பு­கள் எது­வும் இல்லை. அதே திட்­டங்­கள், அதே அறி­விப்­பு­கள், அதே நடை­மு­றை­கள்­தான் தொடர்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தேர்­த­லுக்கு முன்பு திரு­வா­ரூ­ரில் பேசும்­போது, “அடுத்த ஜென்­மம் இருந்­தால், நான் ஒரு விவ­சா­யக் குடும்­பத்­தில் பிறக்க வேண்­டும்” என்று முத­ல­மைச்­சர் விஜய் அவர்­கள் கூறி­னார். அப்­படி வச­னம் பேசி, மக்­க­ளி­டையே மிகப்­பெ­ரிய எதிர்­பார்ப்பை உரு­வாக்­கி­னார்­கள். அந்த எதிர்­பார்ப்­பின் அடிப்­ப­டை­யில்­தான் மக்­கள் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­னார்­கள். இன்று அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்து முதல் வேளாண் பட்­ஜெட்டை தாக்­கல் செய்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால், அந்த பட்­ஜெட்டை பார்த்­தால், நாங்­கள் கடந்த காலத்­தில் அறி­வித்து செயல்­ப­டுத்­திய திட்­டங்­களே இதில் மீண்­டும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இடைக்­கால பட்­ஜெட்­டில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அறி­வித்த திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உதா­ர­ண­மாக, ஆதி­தி­ரா­வி­டர் விவ­சா­யக் குடும்­பங்­க­ளுக்கு மானி­யத்­தில் வேளாண் கரு­வி­கள் வழங்­கும் திட்­டத்தை நாங்­கள் அறி­வித்து செயல்­ப­டுத்­தி­னோம். ஆண் விவ­சாயி என்­றா­லும், பெண் விவ­சாயி என்­றா­லும், 70 சத­வீத மானி­யத்­தில் கரு­வி­கள் வழங்­கி­னோம். 2,125 கரு­வி­கள் அந்­தத் திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்­டன. இப்­போது அதே திட்­டத்­திற்­குப் பெயரை மட்­டும் மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள். திட்­டத்­தின் உள்­ள­டக்­கத்­தில் எந்த மாற்­ற­மும் இல்லை. இது­தான் இந்த பட்­ஜெட்­டின் நிலை. நாங்­கள் தாக்­கல் செய்த இடைக்­கால பட்­ஜெட்­டில் இருந்த திட்­டங்­க­ளையே, வரி கூட மாறா­மல் இந்த பட்­ஜெட்­டில் சேர்த்­தி­ருக்­கி­றார்­கள். இதற்கு இதுவே ஒரு உதா­ர­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே­போல, உண­வுத் தானிய உற்­பத்தி பற்றி இந்த அரசு 125 லட்­சம் மெட்­ரிக் டன் இலக்கு என்று அறி­வித்­தி­ருக்­கி­றது. ஆனால், எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் 130 லட்­சம் மெட்­ரிக் டன் உண­வுத் தானிய உற்­பத்­தியை எட்­டி­யி­ருக்­கி­றோம். விவ­சா­யி ­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் இல­வச மின்­சார மானி­யத்தை எடுத்­துப் பார்த்­தால், எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் ரூ.8,180 கோடி ஒதுக்­கீடு செய்­தி­ருந்­தோம். இப்­போது இந்த அரசு ரூ.7,432 கோடி என்று அறி­வித்­தி­ருக்­கி­றது. இதுவே ஒதுக்­கீடு குறைந்­தி­ருக்­கி­றது என்­ப­தற்­குச் சான்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எங்­க­ளு­டைய தலை­வர், முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள், ஐந்து ஆண்­டு­க­ளில் இரண்டு லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு புதிய மின் இணைப்­பு­கள் வழங்­கப்­ப­டும் என்று அறி­வித்து, அந்த இலக்கை நிறை­வேற்­றி­னார். ஆனால், அந்­தத் திட்­டம் இந்த வேளாண் பட்­ஜெட்­டில் எங்­கும் இடம்­பெ­ற­வில்லை. டெல்டா மற்­றும் டெல்டா அல்­லாத மாவட்ட விவ­சா­யி­க­ளுக்­காக ரூ.160 கோடி மதிப்­பில் குறுவை தொகுப்பு வழங்­கப்­ப­டும் என்று நாங்­கள் அறி­வித்­தி­ருந்­தோம். ஆனால், இந்த அரசு ரூ.134 கோடி மட்­டுமே ஒதுக்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே­போல, மானா­வாரி நில விவ­சா­யி­கள் கோடை உழவு செய்து சாகு­ப­டியை அதி­க­ரிக்க மானி­யத் திட்­டம் எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் செயல்­ப­டுத்­தப்­பட்­டது. அதற்­காக ரூ.246 கோடி வரை ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஆனால், இந்த பட்­ஜெட்­டில் அந்­தத் திட்­டம் குறித்து எந்த அறி­விப்­பும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்­போது “மண் காப்­போம், மண்­வ­ளம் காப்­போம்” என்ற பெய­ரில் ஒரு திட்­டத்தை அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால், எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் அதற்­காக ரூ.142 கோடி ஒதுக்­கீடு செய்­தி­ருந்­தோம். இப்­போது ரூ.122 கோடி மட்­டுமே ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது ரூ.20 கோடி குறை­வாக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பயிர்க் காப்­பீட்டு திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பயிர்க் காப்­பீட்டு திட்­டத்தை எடுத்­துப் பார்த்­தா­லும் அதே நிலை­தான். மாநில அர­சின் பங்­க­ளிப்­பாக எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் ரூ.841 கோடி ஒதுக்­கீடு செய்­தி­ருந்­தோம். ஆனால், இப்­போது அறி­விக்­கப்­பட்­டி­ருப்­பது அதை­வி­டக் குறை­வாக உள்­ளது. விவ­சா­யி­க­ளுக்கு பாது­காப்பு தர வேண்­டிய முக்­கி­ய­மான திட்­டத்­தில்­கூட ஒதுக்­கீடு குறைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மக்­காச்­சோள சாகு­ப­டிக்­காக எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் ரூ.41 கோடி ஒதுக்­கீடு செய்­தி­ருந்­தோம். இப்­போது ரூ.36 கோடி மட்­டுமே அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். இதி­லும் ஒதுக்­கீடு குறைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கிராம வளர்ச்­சித் திட்­டம் பற்­றி­யும் எந்த புதிய அறி­விப்­பும் இல்லை. எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டில் உள்ள 12,525 ஊராட்­சி­க­ளி­லும் ஒருங்­கி­ணைந்த வளர்ச்­சித் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டன. அந்­தத் திட்­டங்­க­ளு க்­காக நூற்­றுக்­க­ணக்­கான கோடி ரூபாய் செல­வி­டப்­பட்­டது. ஆனால், இந்த பட்­ஜெட்­டில் அதைப்­பற்­றிய எந்­தத் திட்­ட­மும் இடம்­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">விதை கொள்­மு­தல் திட்­டத்­தி­லும் அதே நிலை­தான். எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் 12 ஆயி­ரம் மெட்­ரிக் டன் விதை­கள் கொள்­மு­தல் செய்ய இலக்கு நிர்­ண­யித்­தி­ருந்­தோம். ஆனால், இந்த அரசு 7,700 மெட்­ரிக் டன் என்ற அள­வையே நிர்­ண­யித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆக, “மாற்­றம், மாற்­றம்” என்று சொல்லி ஆட்­சிக்கு வந்­த­வர்­கள், இந்த வேளாண் பட்­ஜெட்­டில் மாற்­றத்தை அல்ல; விவ­சா­யி­க­ளுக்கு ஏமாற்­றத்­தையே கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். எந்த புதிய திட்­ட­மும் இந்த பட்­ஜெட்­டில் இடம்­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வேளாண் இயந்­தி­ரங்­கள் வழங்­கும் திட்­டத்தை எடுத்­துக்­கொண்­டா­லும் அதே நிலை­தான். எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் ஐந்து ஆண்­டு­க­ளில் சுமார் 77 ஆயி­ரம் விவ­சா­யி­க­ளுக்கு 50 சத­வீத மானி­யத்­தில் வேளாண் கரு­வி­கள் மற்­றும் இயந்­தி­ரங்­கள் வழங்­கப்­பட்­டன. ஆனால், இந்த பட்­ஜெட்­டில் அதற்­கான ஒதுக்­கீ­டும் குறை­வா­கவே உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே­போல, நம்­மாழ்­வார் அவர்­க­ளின் பெய­ரில் அதிக மக­சூல் பெறும் விவ­சா­யி­ க­ளுக்கு விருது வழங்­கும் திட்­டத்தை எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் செயல்­ப­டுத்­தி­னோம். சிறந்த விளைச்­ச­லைப் பெற்ற விவ­சா­யி­களை ஊக்­கு­விக்­கும் நோக்­கத்­தில்­தான் அந்­தத் திட்­டம் கொண்டு வரப்­பட்­டது. ஆனால், இப்­போது அதே திட்­டத்தை வேறு பெய­ரில் அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். பெயர் மட்­டும் மாறி­யி­ருக்­கி­றது; திட்­டத்­தின் நோக்­க­மும், செயல்­பா­டும் அதே­தான். நான் ஏற்­க­னவே சொன்­னது போல, இது “ஸ்டிக்­கர்” ஒட்­டிய மாற்­றம்­தான்; உண்­மை­யான மாற்­றம் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ரூ.4500 எங்கே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நெல்­லுக்கு திமுக ஆட்­சி­யில் சன்ன ரகத்­திற்கு ரூ.2,545 வரை வழங்­கி­னோம். ஆனால், “நாங்­கள் ஆட்­சிக்கு வந்­தால் ரூ.3,500 கொடுப்­போம்” என்று தேர்­த­லுக்கு முன்பு சொன்­னார்­கள். இப்­போது அந்த அறி­விப்பு எங்கே? பட்­ஜெட்­டில் அதைப்­பற்றி எது­வும் இல்லை. அதே­போல கரும்பு விவ­சா­யி ­க­ளுக்­கும் ரூ.4,500 வழங்­கு­வோம் என்று கூறி­னார்­கள். அது­வும் இந்த பட்­ஜெட்­டில் இடம்­பெ­ற­வில்லை. அறி­விப்பு வரும் என்று எதிர்­பார்த்த விவ­சா­யி­க­ளுக்கு மீண்­டும் ஏமாற்­றம்­தான் கிடைத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கடந்த இரண்டு ஆண்­டு­க­ளில் தஞ்­சா­வூர் உள்­ளிட்ட பல மாவட்­டங்­க­ளில் பாது­காப்­பான நெல் கிடங்­கு­களை எங்­க­ளு­டைய 
ஆட்­சி­யில் கட்­டி­னோம். நெல் பாது­காப்­பாக சேமிக்­கப்­பட வேண்­டும் என்­ப­தற்­காக அந்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் இந்த பட்­ஜெட்­டில் புதிய கிடங்­கு­கள் அமைப்­பது பற்­றியோ, நெல் கொள்­மு­தல் மையங்­களை வலுப்­ப­டுத்­து­வது பற்­றியோ எந்த அறி­விப்­பும் இல்லை. அதே­போல டெல்டா விவ­சா­யி­க­ளுக்­காக ஏதா­வது சிறப்பு நிவா­ர­ணம், குறுவை சாகு­ப­டிக்­கான உத­வித் தொகை அல்­லது வறட்சி நிவா­ர­ணம் அறி­விப்­பார்­கள் என்று விவ­சா­யி­கள் எதிர்­பார்த்­தார்­கள். ஆனால், அது­பற்­றி­யும் எந்த அறி­விப்­பும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்று டெல்டா பகு­தி­க­ளில் குறுவை சாகு­படி கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பல இடங்­க­ளில் சாகு­ப­டியே தொடங்க முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ர­வாக தஞ்­சா­வூ­ரில் போராட்­ட­மும் நடத்­தி­னோம். பாதிக்­கப்­பட்ட டெல்டா விவ­சா­யி­க­ளின் கூட்­டு­றவு வங்­கிக் கடன்­களை முழு­மை­யாக ரத்து செய்ய வேண்­டும் என்ற கோரிக்­கை­யை­யும் முன்­வைத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கலை­ஞர் அவர்­கள் தொடங்­கிய வட்­டி­யில்லா கூட்­டு­ற­வுக் கடன் திட்­டத்தை, எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் மேலும் விரி­வு­ப­டுத்­தி­னோம். ஒன்­பது மாதங்­க­ளுக்­குள் கட­னைத் திருப்­பிச் செலுத்­தி­னால் வட்டி கிடை­யாது என்ற சலுகை வழங்­கப்­பட்­டது. ஆனால், தற்­போது குறுவை சாகு­படி பாதிக்­கப்­பட்­ட­தால், பல விவ­சா­யி­க­ளால் கட­னைத் திருப்­பிச் செலுத்த முடி­ய­வில்லை. காலக்­கெடு தாண்­டி­விட்­டால் முழு வட்­டி­யும் விதிக்­கப்­ப­டும் சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. இது விவ­சா­யி­க­ளுக்கு மேலும் சுமை­யாக மாறி­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்­போது பல இடங்­க­ளில் போர்­பா­ச­னத்­தையே நம்­பி­யி­ருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஆனால், அதற்­குத் தேவை­யான மும்­முனை மின்­சா­ரம் கூட முறை­யாக கிடைப்­ப­தில்லை. எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் விவ­சா­யத்­துக்கு 24 மணி நேர­மும் தடை­யில்லா மும்­முனை மின்­சா­ரம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மின்­சா­ர­மின்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">விவ­சா­யி­கள் தவிப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்­போது நிலைமை என்ன? எப்­போது மின்­சா­ரம் வரும், எப்­போது போகும் என்று விவ­சா­யி­க­ளுக்கே தெரி­யாத சூழல். மோட்­டார் இயக்க முடி­யா­மல் விவ­சா­யி­கள் தவிக்­கி­றார்­கள். குறிப்­பாக காவேரி டெல்டா பகு­தி­க­ளில் இந்­தப் பிரச்­சினை மிக­வும் கடு­மை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காவிரி என்­பது அர­சி­யல் பிரச்­சினை அல்ல; தமிழ்­நாட்டு விவ­சா­யி­க­ளின் உயிர் பிரச்­சினை. கர்­நா­ட­கா­வில் பாருங்­கள். தண்­ணீர் பிரச்­சினை என்­றால், அங்­குள்ள அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளும் ஒன்­றாக நிற்­கி­றார்­கள். ஆளும் கட்­சியா, எதிர்க்­கட்­சியா என்று பார்க்க மாட்­டார்­கள். மாநி­லத்­தின் உரி­மைக்­காக ஒன்­றி­ணைந்து குரல் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில்அந்த ஒற்றுமை இருக்கிறதா? அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டாமா? அனைவரின் கருத்தையும் கேட்டு, ஒருமித்த முடிவை எடுக்கவேண்டாமா? ஆனால் அதை கூட செய்ய மறுக்கிறது இந்த அரசு. “மாற்றம்” என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு “ஏமாற்றம்” கொடுத்திருக்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>