<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,479,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 07 2026 00:32:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260807T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="07082026-MDU-03" position.sequence="03" ex-ref="07082026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">வெள்ளை அறிக்­கை­யில், தி.மு.க. அரசை குறை சொன்­ன­தெல்­லாம் பொய் என நிரூ­பித்­துள்­ள­னர்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="94">மக்­கள் அனை­வ­ருக்­கும் பெரும் ஏமாற்­றத்தை அளித்­துள்ள பட்ஜெட்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">முன்­னாள் நிதி அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup828294_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="addsekarbabu_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Maral6.8.202_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை,ஆக.7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">வெள்ளை அறிக்­கை­யில் தி.மு.க அர­சைப் பற்றி குறை சொன்­ன­தெல்­லாம் பொய் என நிரு­பித்­துள்­ளார்நிதி­ய­மைச்­சர். த.வெ.க. அர­சின் முதல் பட்­ஜெட் அர­சின்முதல் பட்­ஜெட்டே மக்­க­ளுக்கு பெரும் ஏமாற்­றத்தை அளித்­துள்­ளது என்று சென்னை அறி­வா­ல­யத்­தில் நேற்று 5.8.2026 முன்­னள் நிதி அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மக்­களை ஏமாற்­றத்­தில் தள்­ளிய தவெக அர­சின் நிதி­நிலை அறிக்கை தொடர்­பாக கழக முன்­னாள் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அவர்­க­ளின் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திமுக ஆட்­சி­யில் நிக­ரக் கடன் ரூ.1 லட்­சம் கோடி­யாக இருந்­தது. ஆனால் தற்­போது அது ரூ.1,22,000 கோடி­யாக உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தவெக அர­சில் ரூ.3,000 கோடி அள­வுக்கு மூல­த­னச் செலவு குறைக்­கப்­பட்­டுள்­ளது. ரூ.7,000 கோடி அள­விற்கு வரு­வாய் பற்­றாக்­குறை அதி­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மாநி­லத்­தின் சொந்த வரி வரு­வாய் சுமார்ரூ.3,000 கோடி அள­வுக்கு குறைந்­துள்­ளது. வரு­வாய் செல­வி­னங்­கள் ரூ.3.93 லட்­சம் கோடி­யாக இருந்­தது. தற்­போது ரூ.4.05 லட்­சம் கோடி­யாக உயர்ந்­துள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வெள்ளை அறிக்­கை­யில் திமுக அர­சைப் பற்­றிக் குறை சொன்­ன­தெல்­லாம் பொய் என நிரூ­பிக்­கும் ஆவ­ண­மாக பட்­ஜெட் உள்­ளது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">2026–27 ஆம் ஆண்­டுக்­கான நிதி­நிலை அறிக்­கையை மாண்­பு­மிகு நிதி­ய­மைச்­சர் அவர்­கள் இன்று தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வை­யில் தாக்­கல் செய்­துள்­ளார். இந்த நிதி­நிலை அறிக்கை, தமிழ்­நாட்டு மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களை எந்த அள­விற்கு ஏமாற்­ற­ம­டை­யச் செய்­துள்­ளது என்­பதை அனை­வ­ரும் நன்கு உணர்ந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">முக்­கிய வாக்­கு­று­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">இடம் பெற­வில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மிகுந்த எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த இந்த பட்­ஜெட், மக்­க­ளுக்கு பெரும் ஏமாற்­றத்தை அளித்­துள்­ளது. குறிப்­பாக, தவெக அரசு தேர்­தல் வாக்­கு­று­தி­க­ளாக அறி­வித்­தி­ருந்த பல முக்­கிய வாக்­கு­று­தி­கள் இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் இடம்­பெ­ற­வில்லைஎன்­ப­தை­யும் மக்­கள் தெளி­வாக உணர்ந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த நிதி­நிலை அறிக்­கை­யின் ஒட்­டு­மொத்த சாராம்­சம் குறித்­தும், மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களை எவ்­வாறு இந்த அறிக்கை பூர்த்தி செய்­யத் தவ­றி­யுள்­ளது என்­பது குறித்­தும், இன்று நமது எதிர்க்­கட்­சித் தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்து விரி­வாக விளக்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் இந்த செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் குறிப்­பிட விரும்­பு­வது, நிதி­ய­மைச்­சர் அவர்­கள் வெளி­யிட்ட வெள்ளை அறிக்­கை­யில் இடம்­பெற்ற கருத்­து­க­ளையே ஆகும். வெள்ளை அறிக்­கை­யில் நிதி­ய­மைச்­சர் அவர்­கள் நான்கு முக்­கிய அம்­சங்­களை எடுத்­து­ரைத்­தி­ருந்­தார். அந்த நான்கு அம்­சங்­க­ளுக்­கும் நான் அன்றே விளக்­கம் அளித்­தி­ருந்­தேன். இன்று தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த பட்­ஜெட்­டைப் பார்க்­கும்­போது, அன்­றைய தினம் நாங்­கள் தெரி­வித்த கருத்­து­களே உண்­மை­யா­கி­யுள்­ளன என்­பதை தெளி­வா­கக் காண முடி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு இதற்கு முன் இல்­லாத அள­விற்கு கடன் சுமை­யைச் சந்­தித்து வரு­கி­றது. தற்­போது மாநி­லத்­தின் மொத்­தக் கடன் ரூ.10 லட்­சம் கோடியை எட்­டி­யுள்­ளது. ரூ.5 லட்­சம் கோடி கடன், வெறும் ஐந்து ஆண்­டு­க­ளில் ரூ.10 லட்­சம் கோடி­யாக உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">அடுத்த 5 ஆண்­டு­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">கடன் ரூ. 20 லட்­சம் கோடி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், இந்­தக் கடன் சுமைக்கு முழுக் கார­ண­மும் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­தான் என்ற மாயத் தோற்­றத்தை நிதி­ய­மைச்­சர் அவர்­கள் திட்­ட­மிட்டு உரு­வாக்க முயன்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அப்­போது நான் தெளி­வா­கக் கூறி­யது என்­ன­வென்­றால், மாநில அர­சு­கள் கடன் வாங்­கு­வது ஒன்­றிய அரசு நிர்­ண­யித்­துள்ள வரம்­பு­க­ளுக்­கும், நிதிக்­குழு (Finance Commission) வகுத்­துள்ள விதி­மு­றை­க­ளுக்­கும் உட்­பட்டே நடை­பெ­று­கி­றது. மேலும், ஆண்­டு­தோ­றும் கடன் அதி­க­ரிக்­கும் இயல்­பான சூழ்­நிலை உள்­ளது. இந்த நிலை தொடர்ந்­தால், தற்­போது ரூ.10லட்­சம் கோடி­யாக உள்ள கடன், அடுத்தஐந்து ஆண்­டு­க­ளில் ரூ.20 லட்­சம் கோடியை எட்­டும் என்­ப­தை­யும்அன்றே நான் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்று மதிப்­பிற்­கு­ரிய நிதித்­துறை ­யின் கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போ­தும், “கடன் வாங்­கு­வதை முற்­றி­லும் தவிர்க்க முடி­யாது; ஒன்­றிய அர­சின் அனு­ம­தி­யு­டன்­தான் மாநில அரசு கடன் வாங்­கு­கி­றது; கடன் வாங்­கும் அளவு தொடர்ந்து அதி­க­ரித்­துக்­கொண்டே இருக்­கும்” என்று தெரி­வித்­தார். இது, நாங்­கள் முன்­வைத்த கருத்­துக்கு அவர்­களே அளித்த ஒப்­பு­த­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த ஆண்­டில் மட்­டும் மாநி­லத்­தின் நிக­ரக் கடன் (Net Borrowing) ரூ.1,22,000 கோடி­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இதே நிலை தொட­ரு­மா­னால், அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் மாநி­லத்­தின் கடன் சுமை மேலும் பெரு­ம­ள­வில் அதி­க­ரிக்­கும். நாங்­கள் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்து வில­கி­ய­போது, நிக­ரக் கடன் ரூ.1 லட்­சம் கோடி­யாக இருந்­தது. ஆனால் தற்­போது, அதை­விட ரூ.22,000 கோடி அதி­க­மா­கக் கடன் வாங்­கு­வ­தாக அவர்­களே இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல், வரு­வாய் பற்­றாக்­குறை (Revenue Deficit) குறித்து பேசும்­போது, நாங்­கள் ஆட்­சியை விட்டு வெளி­யே­றி­ய­போது அது ரூ.48,699 கோடி­யாக இருந்­தது. ஆனால் தற்­போ­தைய நிதி­நிலை அறிக்­கை­யில் அது ரூ.55,775 கோடி­யா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதா­வது, சுமார் ரூ.7,000 கோடிஅள­விற்கு வரு­வாய் பற்­றாக்­குறை அதி­க­ரித்­துள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மூல­த­னச் செல­வு­கள் (Capital Expenditure) தொடர்­பாக, “நீண்­ட­கால வளர்ச்­சித் திட்­டங்­களை திமுக அரசு செயல்­ப­டுத்­த­வில்லை; பெரும்­பா­லான நிதி வரு­வாய் செல­வு­க­ளுக்கே பயன்­ப­டுத்­தப்­பட்­டது” என்று அப்­போது நிதி­ய­மைச்­சர் குற்­றம்­சாட்­டி­ னார். மேலும், மூல­த­னச் செல­வு­க­ளுக்கு முந்­தைய அரசு முக்­கி­யத்­து­வம் அளிக்­க­வில்லை என்ற தோற்­றத்­தை­யும் உரு­வாக்க முயன்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">மூல­தனச் செலவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் உண்மை என்­ன­வென்­றால், எங்­கள் ஆட்­சி­யில் மூல­த­னச் செல­வு­க­ளுக்­காக ரூ.59,662 கோடி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போ­தைய பட்­ஜெட்­டில் ரூ.56,985 கோடி மட்­டுமே ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது, சுமார் ரூ.3,000 கோடி அள­வுக்கு மூல­த­னச் செலவு குறைக்­கப்­பட்­டுள்­ளது. இதைத் திருத்­திய மதிப்­பீட்­டு­டன் (Revised Estimate) ஒப்­பிட்­டுப் பார்த்­தா­லும் இதே நிலை­தான் வெளிப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல், மாநில அர­சின் சொந்த வரி வரு­வாய் (State’s Own Tax Revenue – SOTR) பற்­றி­யும் அவர்­கள் பெரி­தும் பேசி­னர். ஆட்­சிக்கு வந்­த­வு­டன், “திற­மை­யான நிர்­வா­கம், சிறந்த நிதி மேலாண்மை மற்­றும் வரி வசூ­லில் உள்ள கசி­வு­க­ளைத் தடுப்­ப­தன் மூலம் மாநி­லத்­தின் சொந்த வரி வரு­வாயை கணி­ச­மாக உயர்த்­து­வோம்” என்று அறி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரங்­க­ளைப் பார்த்­தால், மாநி­லத்­தின் சொந்த வரி வரு­வாய் அவர்­கள் கூறிய அள­விற்கு உய­ர­வில்லை. மாறாக, எதிர்­பார்த்­ததை விட சுமார் ரூ.3,000 கோடி அள­வுக்கு குறை­வா­கவே           உள்­ளது. இதன் மூலம் அவர்­கள் கூறிய நிதி மேலாண்மை குறித்த வாக்­கு­று­தி­கள் நடை­மு­றை­யில் வெற்றி பெற­வில்லை என்­பது தெளி­வா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">எந்த தெளி­வும் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல், வரு­வாய் செல­வி­னங்­களை (Revenue Expenditure) எடுத்­துப் பார்த்­தா­லும், நாங்­கள் ஆட்­சி­யில் இருந்­த­போது அது ரூ.3.93 லட்­சம் கோடி­யாக இருந்­தது. தற்­போது அது ரூ.4.05 லட்­சம் கோடி­யாக உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனவே, வெள்ளை அறிக்­கை­யில் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சியை விமர்­சித்துகூறிய அம்­சங்­க­ளில்­கூட தற்­போ­தைய அரசு வெற்றி பெற­வில்லை என்­ப­தையே, அவர்­க­ளின் முதல் நிதி­நிலை அறிக்­கையே தெளி­வாக நிரூ­பிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் செயல்­ப­டுத்­தப்­பட்ட பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு தற்­போது புதிய பெயர்­கள் சூட்டி மீண்­டும் அறி­விப்­பதே நடை­பெ­று­கி­றது. ஆனால், அந்­தத் திட்­டங்­களை முழு­மை­யா­கச் செயல்­ப­டுத்­து­வ­தற்­கான உரிய நிதி ஒதுக்­கீ­டு­கள் இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் இடம்­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும் கூற வேண்­டு­மென்­றால், தமிழ் வளர்ச்­சித் துறைக்­கான நிதி ஒதுக்­கீடு எவ்­வ­ளவு என்­ப­தைக் கூட இந்த ஆண்டு அரசு தெளி­வாக அறி­விக்­கத் தயா­ராக இல்லை. இதைப் பார்க்­கும்­போது உண்­மை­யி­லேயே வருத்­த­மாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல், தொல்­லி­யல் துறைக்கு வெறும் ரூ.1 கோடி மட்­டுமே ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு கோடி ரூபா­யைக் கொண்டு அந்­தத் துறை­யில் என்ன சாதிக்க முடி­யும்? மாண­வர்­க­ளைச் சுற்­று­லா­விற்கு அழைத்­துச் செல்­ல­லாம்; அதில் எங்­க­ளுக்கு எந்த ஆட்­சே­ப­னை­யும் இல்லை. ஆனால், தொல்­லி­யல் சின்­னங்­க­ளின் பாது­காப்பு (Conservation), அருங்­காட்­சி­ய­கங்­க­ளின் (Museums) மேம்­பாடு, புதிய அக­ழாய்­வு­கள் (Excavations), நடை­பெற்று வரும் ஆய்­வு­க­ளின் தொடர்ச்சி ஆகி­ய­வற்­றிற்கு எவ்­வ­ளவு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்­பது குறித்து இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் எந்­தத் தெளி­வும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல், கொள்­ளி­டம் பகு­தி­யில் பெரிய தடுப்­ப­ணை­கள் அமைக்­கப்­ப­டும் என்­றும், டெல்டா மாவட்­டங்­க­ளின் சுற்­றுச்­சூ­ழல் சீர­மைப்புமேற்­கொள்­ளப்­ப­டும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், இறு­தி­யில் அதற்­கான சாத்­தி­யக்­கூறு  ஆய்­வுக்­காக வெறும் ரூ.10 கோடி மட்­டுமே ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கக்  கூறப்­ப­டு­கி­றது.  திட்­டங்­க­ளைச்  செயல்­ப­டுத்­து­வ­தற்­குப் பதி­லாக, சாத்­தி­யக்­கூறு  ஆய்­வு­க­ளுக்கே நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருப்­பது இந்த       அர­சின் அணு­கு­ மு­றையை வெளிப்­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் வாக்­கு­று­தி­க­ளாக அறி­விக்­கப்­பட்ட பல முக்­கிய திட்­டங்­கள் குறித்­தும் இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் எந்­தக் குறிப்­பும் இல்லை. மக­ளிர் உரி­மைத்­தொகை உயர்த்­தப்­ப­டும் என்ற வாக்­கு­றுதி, ஆண்­டுக்கு ஆறு சமை­யல் எரி­வாயு சிலிண்­டர்­கள் வழங்­கப்­ப­டும் என்ற வாக்­கு­றுதி, வேலை­யில்லா பட்­ட­தா­ரி­க­ளுக்­கான உத­வித்­தொகை உள்­ளிட்ட எந்­தத் திட்­ட­மும் இந்த பட்­ஜெட்­டில் இடம்­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல், கலை­ஞர் வீடு வழங்­கும் திட்­டத்­திற்­கும் பெயர் மாற்­றம் செய்து அறி­வித்­துள்­ள­னர். பெயரை மட்­டும் மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள்; ஆனால், புதிய திட்­டத்­திற்­கான போது­மான நிதி ஒதுக்­கீடு எது­வும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனவே, திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் செயல்­ப­டுத்­தப்­பட்ட திட்­டங்­க­ளுக்கு புதிய பெயர்­க­ளைச் சூட்­டு­வ­தைத் தவிர, புதிய மக்­கள் நலத் திட்­டங்­களோ, தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றும் வகை­யி­லான அறி­விப்­பு­களோ இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் இடம்­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">எதிர்­பார்­ப்பு­களை நிறை­வேற்ற</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">தவ­றிய பட்­ஜெட்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இத­னால், ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கும்­போது, இந்த பட்­ஜெட் தமிழ்­நாட்டு மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­றத் தவ­றிய, ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய நிதி­நிலை அறிக்­கை­யா­கவே அமைந்­துள்­ளது என்­பதை தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் நான் வலி­யு­றுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும், பள்­ளிக்­கல்­வித் துறைக்­கான நிதி ஒதுக்­கீ­டும் குறைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து நிதித்­து­றை­யின் செய­லா­ளர், “ஏற்­கெ­னவே ஒதுக்­கப்­பட்ட நிதி முழு­மை­யா­கச் செல­வி­டப்­ப­ட­வில்லை” என்று விளக்­கம் அளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், அதற்­குப் பல்­வேறு நிர்­வாக மற்­றும்சட்­ட­ரீ­தி­யான கார­ணங்­கள் இருக்­க­லாம். குறிப்­பாக,ஆசி­ரி­யர் தேர்வு வாரி­யம் (TRB) மூலம் ஆசி­ரி­யர்­கள்நிய­ம­னம் செய்­யும் பணி­க­ளில் நீதி­மன்ற வழக்­கு­கள் கார­ண­மாக தாம­தம் ஏற்­பட்­டி­ருக்­க­லாம். இடைக்­கால பட்­ஜெட் கார­ண­மாக முழு நிதி­யாண்­டு  ­குப் பதி­லாக குறு­கிய காலத்­தில் நிதி ஒதுக்கவேண்­டிய சூழ்­நி­லை­யும் ஏற்­பட்­டி­ருக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பொது­வாக, எந்த ஆட்­சி­யும் பள்­ளிக்­கல்­வித் துறைக்­கான நிதியை குறைப்­ப­தில்லை. கல்வி வளர்ச்­சிக்கே எப்­போ­தும் முன்­னு­ரிமை  அளிக்­கப்­ப­டு­கி­றது. அந்த வகை­யில், பள்­ளிக்­கல்­வித் துறைக்­கான நிதி ஒதுக்­கீடு குறைக்­கப்­பட்­டி­ருப்­பது உண்­மை­யி­லேயே வருத்­த­ம­ளிக்­கும் விஷ­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சாதா­ரண மக்­கள், குறிப்­பாக மக­ளிர், மக­ளிர் உரி­மைத்­தொகை ரூ.2,500 ஆக உயர்த்­தப்­ப­டும் என்று மிகுந்த எதிர்­பார்ப்­பு­டன் இருந்­தார்­கள். அந்த நம்­பிக்­கை­யில்­தான் பலர் இந்த அர­சுக்கு ஆத­ர­வாக இருந்­தி­ருக்­கக்­கூ­டும். ஆனால், இந்த பட்­ஜெட் அனை­வ­ருக்­கும் ஏமாற்­றத்­தையே அளித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும், நாட்­டின் பழ­மை­யான நாக­ரி­கங்­க­ளைப் பற்றி அவர்­கள் பேசு­கி­றார்­கள். ஆனால், உல­கப் புகழ்­பெற்ற கீழடி நாக­ரி­கம், பொருநை நாக­ரி­கம், வைப்­பாற்­றங்­கரை நாக­ரி­கம் போன்ற தமி­ழ­ரின் தொன்மை நாக­ரி­கங்­க­ளைப் பற்றி இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் ஒரு வார்த்தை கூட இடம்­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">உரிய முக்­கி­யத்­து­வம் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அண்­மை­யில் பள்­ளிக்­கல்­வித் துறை அமைச்­சர்மலை­ய­டிப்­பட்டி அக­ழாய்­வுத் தளத்தை நேரில் பார்­வை­யிட்­டார். அது­போன்ற அக­ழாய்வு முயற்­சி­ க­ளுக்கோ, தமி­ழர் பண்­பாடு மற்­றும் நாக­ரி­கத்தைஉல­க­ள­வில் எடுத்­துச் செல்­லும் முயற்­சி­க­ளுக்கோ இந்த பட்­ஜெட்­டில் உரிய முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­ப­ட­வில்லை.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டின் வர­லாறு, பண்­பாடு, மொழி, நாக­ரி­கம் ஆகி­ய­வற்றை முன்­னி­றுத்த வேண்­டிய அடிப்­படை உணர்­வு­கூட இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் வெளிப்­ப­ட­வில்லை என்­பது மிக­வும் வருத்­த­ம­ளிக்­கி­றது. முடி­வா­கச் சொல்ல வேண்­டு­மென்­றால், 2026–27 ஆம் ஆண்­டுக்­கான இந்த நிதி­நிலை அறிக்கை, தமிழ்­நாட்டு மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளைப் பூர்த்தி செய்­யாத, தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றத் தவ­றிய, புதிய வளர்ச்­சித் திட்­டங்­க­ளுக்­கான தெளி­வான நிதி ஒதுக்­கீ­டு­களை வழங்­காத ஒரு ஏமாற்­ற­ம­ளிக்­கும் பட்­ஜெட்­டாக அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தப் பட்­ஜெட்­டில் இடம்­பெற்­றுள்ள புள்­ளி ­வி­வ­ரங்­களே, வெள்ளை அறிக்­கை­யில் முந்­தைய திமுக ஆட்­சியை விமர்­சித்து தவெக அர­சால் கூறப்­பட்ட பல கருத்­து­கள் நடை­மு­றை­யில் நிலைக்­க­வில்லை என்­பதை நிரூ­பிக்­கின்­றன. எனவே, இந்த அர­சின் முதல் முழு­மை­யான நிதி­நிலை அறிக்கை, அவர்­க­ளு­டைய தேர்­தல் வாக்­கு­று­தி­க­ளுக்­கும், நிர்­வா­கக் கூற்­று­க­ளுக்­கும் இடையே உள்ள முரண்­பாட்டை வெளிப்­ப­டுத்­தும் ஆவ­ண­மா­கவே அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு அவர் பேட்­டி­ய­ளித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>