<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,607,982" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 07 2026 00:35:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260807T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="07082026-MDU-06" position.sequence="06" ex-ref="07082026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="74">கம்பீரத்தலைவர் கலைஞரின்  பெரும்புகழ் ஓங்குக!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup795501_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Pic224.8.21_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">ந</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மது உள்­ளத்­தில் அழியா ஓவி­ய­மாய், உயர்­த­னிக் காவி­ய­மாய் நிலைத்­தி­ருக்­கும் உல­கத் தமி­ழி­னத்­தின் ஒப்­பற்ற தலை­வர் – உயி­ர­னைய தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் 8ஆவது ஆண்டு நினைவு தினம்  ஆகஸ்ட்7.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­போது தான், “எழுந்து வா! எங்­கள் தலைவா! எங்­கள் உயிரே! உணர்வே! என காவேரி மருத்­து­வ­ம­னைக்­க­ரு­கி­லி­ருந்து கட்­டுக்­க­டங்­காத உடன்­பி­றப்­பு­கள் எழுப்­பிய ஒலி, கடல் கடந்து வாழும் தமி­ழர் உள்­ளத்­தில்கவ­லை­யை­யும், கண்­ணீ­ரை­யும், சிந்த வைத்­தது போன்­ற­தொரு படக்­காட்சி நமது நெஞ்­சில் நிழ­லா­டு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அறி­வில் அண்­ணா­வை­யும், ஆயு­ளில் பெரி­யா­ரை­யும் பிர­தி­ப­லித்த தலை­வர் கலை­ஞர் அவர்­கள் தனக்­கும் மறைவு உண்டு என்று தமி­ழர் மன­மெல்­லாம் துடி­து­டிக்­கச் செய்து, சாவில்லா சரித்­தி­ரப் பொன்­னேட்­டில் இடம் பெற்ற நாள் இந்த ஆகஸ்ட் 7.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடந்த இரு­ப­தாம் நூற்­றாண்­டின் இடைப்­ப­கு­தி­யில் தொடங்கி, இரு­பத்­தி­யோ­ராம் நூற்­றாண்­டின் முற்­ப­குதி வரை­யென இரு­பெ­ரும் நூற்­றாண்டு­ களின் அறு­தாண்­டிற்­கும் மேலான இந்­திய - தமி­ழக அர­சி­யல் வர­லாற்­றில் மையப் புள்­ளி­யாக, வர­லாற்று நிகழ்­வாக தனது ஒவ்­வொரு இயக்­கத்­தி­லும், நகர்­வி­லும்  நிறைந்­தி­ருந்த தலை­வர், தன்னை ஆளாக்கி, அர­சி­யல் சொல்­லித்­தந்த அண்­ண­னது இத­யத்தை அவ­ரி­டம் ஒப்­ப­டைத்து ஒய்­வெ­டுக்­கச் சென்­ற­நாள் இந்த ஆகஸ்ட் 7.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சுதந்­தி­ரத்­திற்கு பிறகு இந்­தி­யா­வில் தங்­க­ளது ஆளு­மை­களை நிலை­நி­றுத்­திய தலை­வர்­க­ளில் பெரும்­பா­லும் ராஜா­வீட்­டுப் பிள்­ளை­கள், சமஸ்­தா­னா­தி­ப­தி­க­ளின் வாரி­சு­கள், குட்­டிக் குபே­ரர்­கள், மேலை­நா­டு­க­ளில் ஆக்ஸ்­போர்­டி­லும், ஹாரோ­வி­லும், கேம்­பி­ரிட்ஜ்­ஜி­லும் படித்­த­வர்­கள் என்­று­தான் பட்­டி­யல் நீண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">விரல்­விட்டு சொல்­லக்­கூ­டிய அள­வில் தான் சாமான்­யர்­கள், அடித்­தட்டு மக்­க­ளின் நிலை­ 
யுணர்ந்த நடுத்­தர வர்­க்கத்­தி­னர்   அர­சி­ய­லில் அரங்­கேற்­ற­மா­யி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அந்த வரி­சை­யில் பஞ்­சா­யத்து அள­வில் கூட அன்­றைக்கு இல்­லாத திருக்­கு­வ­ளை­யில் நடுத்­தர இசை­வே­ளா­ளர் குடும்­பத்­தில் பிறந்து, நாடா­ளு­மன்­றத்­தின் தலை­வர்­களை, பிர­த­மர்­களை 
பல­முறை உரு­வாக்­கிய ராஜ­தந்­தி­ர­மும், சாணக்­கி­யத் தன­மும் மிகுந்­தி­ருந்த தலை­வர் தான் நமது உயி­ரி­னும் மேலான தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">80 –களில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்­தில், திருச்­செந்­தூர் முரு­கன் கோயில் அறங்­கா­வ­லர் சுப்­பி­ர­ம­ணிய பிள்ளை கொலை­யுண்ட போது, அது­பற்றி தி.மு.க.வின்  பெரும் கண்­ட­னம், எதிர்ப்பு, விவா­தங்­கள் எழுந்­த­போது பணிந்­து­போன முத­ல­மைச்­சர் எம்.ஜி.ஆர். ஓய்வு பெற்ற நீதி­பதி பால் அவர்­க­ளின் தலை­மை­யில் ஒரு 
கமி­ஷனை அமைத்து, அதன் தீர்ப்­பை­யும் பெற்­றி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தீர்ப்பு ஆளுங்­கட்­சிக்கு அவ­லம் ஏற்­ப­டுத்­தும் வகை­யில் இருந்­த­தால், அதை வெளி­யி­டா­ம­லும் வைத்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வெகுண்­டெ­ழுந்த தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஆயி­ரக்­க­ணக்­கான திமுக தொண்­டர்­க­ளு­டன் மது­ரை­யி­லி­ருந்துதிருச்­செந்­தூர் வரை 200 கிலோ மீட்­டர் நீதி கேட்டு, நெடும்­ப­ய­ணத்தை தனது கடும் உடல்­ந­லி­வை­யும் பொருட்­ப­டுத்­தா­மல்  மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அப்­போ­தும் தனது இயல்­பான மந்­தத்­தை­யும், மௌனத்­தை­யுமே தொடர்ந்­தார் எம். ஜி. ஆர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே நிலை­யில் சட்­டப்­பே­ரவை கூடி­யது. பேர­வை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ரைப் பார்த்து, திருச்­செந்­தூர் முரு­கன் கோயில் அறங்­கா­வ­லர் சுப்­பி­ர­ம­ணி­ய­சு­வாமி கொலை­யுண்ட வழக்­கிற்­காக அமைக்­கப்­பட்ட நீதி­பதி பால் கமி­ஷன் அறிக்கை எங்கே? எனக்­கேட்க, எம்.ஜி.ஆர். மௌனம் சாதிக்க, சற்­றும் நிதா­னிக் ­காமல் தலை­வர் கலை­ஞர் பேர­வைத்­த­லை­வர் அவர்­களே, நீதி­பதி பால் கமி­ஷன் அறிக்­கையை முத­ல­மைச்­சர் வெளி­யிட மறுப்­ப­தால், நான் வெளி­யி­டு­கி­றேன். என்று தனது கோப்­பி­லி­ருந்த பால் கமி­ஷன் அறிக்கை நகலைபேர­வை­யில் வெளி­யிட்டு, பெரும் பர­ப­ரப்பை, எம்.ஜி.ஆர். உள்­ளிட்ட அமைச்­ச­ர­வைக்கு, பதற்­றத்தை உண்­டாக்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வெகு­நே­ரம் கழித்து, ஆசு­வா­ச­ம­டைந்த முத­ல­மைச்­சர் எம் ஜி. ஆர். வசந்த மண்­ட­பத்­தில் சுற்றி­ யிருந்த அமைச்­சர்­க­ளி­டம் அமை­தி­யாய் கேட்­டா­ராம், “ இந்த அர­சாங்­கத்தை நாம்­தான் நடத்­து­கி­றோமா? அல்­லது கலை­ஞர் நடத்­து­கி­றாரா? “ என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அர­சாங்­கத்­தின் மிக­மிக முக்­கி­ய­மான ஆவ­ணம் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் கைக­ளுக்கு கிடைக்­கிற­ தென்­றால், எம். ஜி. ஆர் எத்­தனை ஏமா­ளித்­த­ன­மாய் இருந்­தா­ரென்­ப­தை­விட, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் எவ்­வ­ளவு சாதுர்­யம் மிக்­க­வ­ராக  இருந்­தா­ரென்­பது அவ­ரது தொண்­டர்­க­ளான நமக்கு பெருமை தரும் செய­லல்­லவா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே போல் சற்­றொப்ப இதே கால­கட்­டத்­தில்  நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ளவை தேர்­தல் வரு­கி­றது. தி.மு.க. வசம் 24 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் 
மட்­டுமே இருந்­த­னர். வெற்றி இலக்­கை­ய­டைய 36 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு தேவை என்ற நிலை­யில் தயங்­கா­மல் துணி­வு­டன் தனது வேட்­பா­ள­ராக இன்­றைய கழ­கப் பொரு­ளா­ளர் டி. ஆர். பாலு அவர்­களை தலை­வர் கலை­ஞர் அவர்­கள் அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எம். ஜி. ஆர் தனது உறுப்­பி­னர்­களை உற்­றுப் பார்த்­தார். உறு­போட்­டுப் பார்த்­தார். சத்­தி­யம் வாங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">36 வாக்­கு­கள் பெற்று தி.மு.க. வேட்­பா­ளர் 
டி ஆர். பாலு வெற்றி பெற்­றார். இது­வ­ரைக்­கும் தெரி­யாது எப்­ப­டித்­தான் இந்த எண்­ணிக்கை வந்­த­தென்று!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் அர­சி­யல் சது­ரங்­கம். அதில் அவர் எப்­போ­தும் வெற்­றி­வீ­ர­னா­க­வேத் திகழ்ந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­ப­டி­யெல்­லாம் அர­சி­யல் வானில் அரை நூற்­றாண்டு கால­மாக தலைப்­புச் செய்­தி­யாக நின்று, அதிர்­வேட்டு, வாண­வே­டிக்­கை­களை நிகழ்த்­திய அசாத்­திய திற­மை­மிக்க தலை­வர் கலை­ஞர் அவர்­கள் இன்று நம்­மு­டன் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவ­ரது வளர்ப்­பாய், வார்ப்­பாய் ஐந்­தாண்டு காலம், அள­வி­ட­மு­டி­யாத மக்­கள் நல திட்­டங்­களை செயல்­ப­டுத்­திய திரா­வி­டப் பேர­ர­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் எனும் மகத்­தான தலை­வர் நம்மை இன்று வழி­ந­டத்­து­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமி­ழி­னத்தை சூழ்ந்­து­விட்ட இரு­ள­கல இன்­னும், இன்­னும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் பணி நாளுக்கு, நாள் தேவை­யெ­னும் நிலை­யில் கோட்­டை­யில் அரங்­கே­றும் கோமா­ளிக் கூத்­துக்­க­ளுக்கு, தற்­குறி தர்­பா­ரின் தரம் தாழ்ந்த பேச்­சுக்­க­ளுக்கு தடை­போட, விடை­யெ­ழுத புறப்­பட்டு விட்­டார் தென்­ன­வர் போற்­றும் மன்­ன­வர்! நமது சின்­ன­வர்! உத­ய­நிதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திரா­விட இயக்­கங்­க­ளின் பெரும் பணி உத­ய­நிதி அவர்­கள் மூலம் சீனப் பெருஞ்­சு­வர் போல திரா­வி­டப் பெருஞ்­சு­வ­ராக நீள்­கி­றதே, என்ற வன்­மம், பொறாமை, பொச்­ச­ரிப்பு, திடீர் கைது, என பகல் பொழுது முழு­வ­தும் அலை­க­ழிப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­ப­டித்­தான் தலை­வர் கலை­ஞர் அவர்­களை 1965–ல் மொழிப்­போ­ரில் பாளை­யங்­கோட்டை சிறைக்கு கொண்டு செல்ல பெரும் அலை­க­ழிப்பை நடத்­தி­யது அன்­றைய காங்­கி­ரஸ் அரசு. அதைப்­போ­லவே இந்­தக் காமெடி அர­சும் உத­ய­நிதி அவர்­களை வதைப்­ப­தாக எண்ணி, தேர்­தல் தோல்­வி­யில் துவண்­டி­ருந்த தொண்­டர்­க­ளை­யெல்­லாம் ஒற்­று­மை­யாய் திரா­வி­டத்­தேரை வடம்­பி­டித்து இழுக்­கும் வழியை, வச­தியை ஆக.4ந்தேதி­யன்று செய்து 
தந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சென்­னை­யி­லி­ருந்து தஞ்சை செல்­லும் சாலை­யெங்­கும் தி.மு.க.வின் தின­வெ­டுத்­தப் பெரும்­படை கட்­டுக்­க­டங்­கா­மல், காட்டு தர்­பார் காவல் துறை­யின் அடக்­கு­மு­றை­க­ளுக்கு அஞ்­சா­மல், எதிர்­கா­லத்­தில் இந்த இயக்­கத்தை, இனத்தை வழி­ந­டத்­தும் இளம்­த­லை­வ­னுக்கு தங்­கள் ஆத­ர­வைத் தெரி­விக்க காத்­துக்­கி­டந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதற்கு இணை­யான கூட்­டம் தமி­ழ­க­மெங்­கும் காவல்­து­றை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்டு, கல்­யாண மண்­ட­பங்­க­ளில் அடை­பட்டு கிடந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மொத்­தத்­தில் தேர்­தல் தோல்­வி­கள் தி.மு.க. தொண்­டர்­களை கவ­லை­கொள்­ளச் செய்­யு­மே­யன்றி, கட­மை­யி­லி­ருந்து ஒரு­போ­தும் தள்ளி நிற்­க­வைக் ­காது என்­பதை தமிழ்­நாடு மீண்­டும், மீண்­டும் உணர்ந்­திட்ட நாளா­கவே நமது சின்­ன­வர் கைதான நாள் அமைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு­முறை நமது அறி­வி­யக்­கப் பெருந்­த­லை­வர் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள், “ தேர்­த­லில் வெற்றி பெற்று, அமைச்­சர்­க­ளாக, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக கோட்­டைக்­குள் நுழை­யும் போது, அடக்­கத்­தின் கார­ண­மாக தலையை தாழ்த்தி, உள்ளே சென்­றோம். ஆனால் தமி­ழிற்­காக, தமி­ழி­னத்­திற்­காக சிறைக்­கோட்­டம் சென்­ற­போது, தலை நிமிர்ந்­த­படி தான் சென்­றோம்!“ என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதைப்­போ­லத்­தான் கிளம்­பிற்­றுக்­காண் தமிழ் சிங்­கக்­கூட்­ட­மென தமிழ்­நாடு முழு­வ­தும் அலை அலை­யாக பெருங்­கூட்­டம் சின்­ன­வர்க்­காய் சிறை­யே­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இத்­தகு தீர­மிகு வர­லாற்­றுப் பேரி­யக்­க­மாம் நமது கழ­கத்தை கண்­ணின் இமை­போல் காத்து வளர்த்த பெரு­வீ­ரர்! முத்­த­மி­ழ­றி­ஞர்! சங்­கத்­த­மிழ் பொங்­கும் தங்­கத் தலை­வர்! தமி­ழ­வேள் தலை­வர் கலை­ஞ­ரின் பெரும்­பு­கழ் உரைத்து , அமை­திப் பேர­ணி­யால் கடற்­க­ரை­யில் அறி­வா­சான் அண்­ணா­விற்கு அரு­கில் துயில்­கொள்­ளும் தனது தலை­வ­ருக்கு மல­ஞ­ரஞ்­சலி செலுத்­து­கி­றார் நமது திரா­வி­டப் பேர­ர­சர் தள­ப­தி­ய­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமி­ழின விடி­ய­லுக்­காக விரல் தேய எழு­தி­ய­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குரல் தேயப்பேசி­ய­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கால் தேய நடந்து கட­மை­யாற்­றிய கம்­பீ­ரத்­த­லை­வர் கலை­ஞ­ரின் பெரும்­பு­கழ் உரைத்து, அலை­க­ட­லோ­ரம் அமை­திப் பேர­ணி­யில் சங்­க­மிப்­போம்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>